பரிணாம வளர்ச்சியின் மூலம் உருவானவன் தான் மனிதன் என்பது டார்வினின் தத்துவம். கடவுளை மறுப்பதற்கு இந்தத் தத்துவம் உதவுவதால் டார்வினின் கொள்கையைச் சிலர் ஏற்றிப் போற்று கிறார்களே தவிர, அது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப் பட்ட உண்மை அல்ல. வெறும் அனுமானமேயாகும். சில உயிரினங்கள் காலப் போக்கில் வேறு உயிரினமாக வளர்ச்சி பெற்று வந்தன. பல கோடி ஆண்டுகளில் குரங்கு என்ற இனமாக ஆனது. அதன் பின்னர் பல கோடி ஆண்டுகளுக்குப் பின் குரங்கு பரிணாம வளர்ச்சி பெற்று மனிதன் என்ற படைப்பு உருவானது என்பது தான் டார்வினின் கொள்கை! மேலும் வாசிக்க...
செங்கொடியின் கட்டுரைகளில் ஒன்றான மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? என்னும் கட்டுரைக்கு அளிக்கப்பட்ட மறுப்பினை இங்கு தரலாம் என எண்ணியுள்ளேன்.
கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே... எனும் தொடரின் அண்மையில் வெளிவந்த தொடர் இது. இதில் செங்கொடி, பரிணாமம் பற்றிய எமது எதிர்க்கேள்விகளுக்கு பதிலளிக்க முயன்றுள்ளார். அவர் அளிக்கும் பதில்களிலுள்ள அபத்தத்தை சுட்டிக்காட்டியாக வேண்டும். மேலும் வாசிக்க
பரிணாமவியல் என்ற கதை, ஹாரி பாட்டர் கதைகளையெல்லாம் விட மிகச் சிறந்தது. இந்த தொடரின் ஒவ்வொரு பதிவிலும் அதை உணர்ந்து கொள்வீர்கள். இன்ஷா அல்லாஹ்.
பரிணாமம் குறித்த இந்த தொடர் பதிவுகளின் நோக்கம், தலைப்பை நியாயப்படுத்துவது தான்.
"This is one of the worst cases of scientific fraud. It’s shocking to find that somebody one thought was a great scientist was deliberately misleading. It makes me angry"
"மோசமான அறிவியல் பித்தலாட்டங்களில் இதுவும் ஒன்று. மிகச் சிறந்த விஞ்ஞானி என்று கருதப்பட்ட ஒருவர் வேண்டுமென்றே இப்படி செய்தது அதிர்ச்சியை தருகிறது. என்னை இது கோபப்பட வைக்கிறது"
இது, "The Times" நாளிதழில் 11th August, 1997ல் ஒரு பிரபல பரிணாமவியலாளர் குறித்து வெளிவந்த செய்தி. பரிணாமத்திற்கு ஆதரவாக அவர் எடுத்து வைத்த ஆதாரம் மிகப் பெரிய பித்தலாட்டம் என்று தெரிய வந்த போது வெளியானச் செய்தி. மேலும் வாசிக்க..
பரிணாமவியல் என்ற ஆதரமற்ற, அறிவியலுக்கு ஒத்துவராத, Hypothesis (Educated Guess) ஆக கூட இருக்க தகுதியில்லாத ஒரு கொள்கை எப்படி லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்க காரணமாய் இருந்தது என்று சென்ற பதிவுகளில் பார்த்தோம். இன்ஷா அல்லாஹ், இந்த பதிவிலிருந்து, பரிணாமம் என்ற கோட்டை எத்தகைய கற்பனைகளால் கட்டப்பட்டது என்று பார்ப்போம். மேலும் வாசிக்க
குடும்பம் இல்லாமல் இருப்பது கடினமானது. ஊக்கமில்லாமலும், அசௌகர்ய உணர்வோடும், இப்படியான ஆதரவற்றவர்கள், தங்களின் திறமைகளை வெளிப்படுத்த போராட வேண்டியிருக்கின்றது. வெற்றிகரமாக இதிலிருந்து மீண்டவர்களோ, அரிஸ்டாட்டில் முதல் ஸ்டீவ் ஜாப்ஸ் வரை, சில நேரங்களில், உலகை மாற்றியமைத்திருக்கின்றார்கள். யார் தான் நினைத்திருப்பர், நம்முடைய மரபணுக்களும் இப்படியான அநாதைகளை தன்னிடத்தே கொண்டிருக்குமென்று? மரபணு வரிசைமுறை ஆய்வுகளை மேற்கொண்ட உயிரியல் விஞ்ஞானிகள், ஒவ்வொரு உயிரினத்திலும், 30% வரையிலான மரபணுக்களுக்கு பெற்றோரோ அல்லது குடும்பமோ இல்லாததை கண்டுபிடித்தார்கள் - (Extract from the original quote of) All alone: Helen Pilcher, New Scientist, page 41, 19th Jan 2013).... மேலும் வாசிக்க...
பகுத்தறிவாள நாத்தீகர்களிடம் நீங்கள் விவாதத்தில் ஈடுபட்டிருக்கும்போது அவர்கள் பகுத்தறிவிற்கு ஆதரவாக எப்பொழுதும் கீழ் வரும் விசயங்களைத் தவராமல் பட்டியலிடுவார்கள்.
அறிவியல் மனித சமூகம் சந்தித்த கொள்ளை நோய்களை இல்லாமல் ஆக்கிவிட்டது, மனிதர்களின் வாழ்வை எளிமையாக்கிவிட்டது, கடுமையான நோய்களுக்கும் மருந்து கண்டுவிட்டது, மனிதர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திவிட்டது, மனிதர்களின் இறப்பு விகிதத்தை குறைத்துவிட்டது, மனிதனின் ஆயுளை அதிகரித்துவிட்டது. மேலும் வாசிக்க...