பக்கங்கள் செல்ல

இஸ்லாமும் பால்யவிவாகமும்


      நபி(ஸல்) - ஆயிஷா(ரலி) அவர்களது திருமணம் மற்றும் இஸ்லாமின் திருமண வயது ஆகிவற்றை குறித்து தொடர்ந்து அவதூறு பரப்பித்திரியும் வலைத்தளங்களின் விமர்சனங்களும் அதற்கான தக்க பதில்களும். 

1.நபி(ஸல்), ஆயிஷா(ரலி) அவர்களது திருமணம்


இஸ்லாத்தின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் மிக முக்கிய பங்குவகிப்பவை பால்ய விவாகம் குறித்ததாகவே இருக்கிறது. இவை அனைத்தும் தனித்த கட்டுரைகளாக, சில நேரங்களில் இஸ்லாமிய அறிஞர்களின் மறுப்புக்கு மறுப்பாக காணப்படுகிறது. இவை அனைத்தையும் தொகுத்து அதன் சாரத்தை விளக்கி விமர்சனத்தை உடைப்பதே நமது இந்த தொடரின் நோக்கம் ஆகும். மேலும் வாசிக்க


நபி(ஸல்) அவர்கள் குறித்த இந்த விமர்சனம் சற்று விளக்கமாக காண வேண்டிய ஒன்று. முதலில் இந்த விமர்சனத்தில் இடம் பெறும் குழந்தை புணர்வாளர்(Pedophile) என்ற மனநிலை பாதிப்பின் விளக்கம் இதுவே.
"குறைந்தது ஒரு ஆறு மாத காலமாக, பூப்பெய்தாத அல்லது குழந்தைகளின் மீதான தொடர்ச்சியான தீவிர பாலியல் தூண்டுதல் கற்பனைகள்,பாலியல் தூண்டுதல்கள் அல்லது பாலியல் செயல்பாடு சம்பந்தப்பட்ட நடத்தைகளில் ஈடுபடுதல்" (P.No: 697 DIAGNOSTIC AND STATISTICAL MANUAL OF MENTAL DISORDERS, FIFTH EDITION) மேற்குறிபிட்ட இந்த குற்றச்சாட்டில் ஒன்றையும் நபி(சல்) அவர்களின் மீது இந்த விடயத்தில் நிறுவ இயலாது. மேலும் வாசிக்க

நபி(ஸல்)- ஆயிஷா(ரலி) திருமணம் குறித்த அடுத்த விமர்சனம் நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா(ரலி) பூப்பெயவதற்கு முன்பே புணர்ந்தார்கள் என்பதுதான். ஆனால் சென்ற தொடரில் ஆயிஷா(ரலி) அவர்களது வயது குறித்தும் அவர்கள் பூப்பெய்திய பிறகுதான் வீடு கூடினார்கள் என்பதும் தெளிவான வரலாற்று அவணங்களை முன்வைத்து விளக்கப்பட்டுவிட்டது. 
இந்த விஷயத்தில் நேரடியான எந்த ஆதாரத்தையும் இதுவரை இந்த அவதூறு பரப்பிகள் எடுத்து வைக்கவில்லை. அவர்கள் தங்களது ஆவணமாக முன்வைப்பது.......மேலும் வாசிக்க 

நபி(ஸல்) அவர்கள் என்னைத் தம் மேல் துண்டால் மறைத்துக்கொண்டிருக்க பள்ளிவாசல் வளாகத்தில் (ஈட்டியெறிந்து) விளையாடிக் கொண்டிருந்த அபிசீனியர்களை நான் (என் வீட்டிலிருந்தபடி) பார்த்துக கொண்டிருந்தேன். நானாகச் சடைந்துவிடும் வரைப் பார்த்துக் கொண்டிருந்தேன். விளையாட்டுகளின் மீது பேராவல் கொண்ட இளம் வயதுப் பெண் எவ்வளவு நேரம் வேடிக்கை பார்ப்பாள் என்பதை நீங்களே மதிப்பிட்டுக்கொள்ளுங்கள். ஆதாவது மேற்குறிபிட்ட செய்தியை பதிவிட்டு ஆயிஷா(ரலி) இளம் பெண்ணாக இருந்தார் என்ற வாதத்தை முன்வைத்து, அவர் பருவம் அடையவில்லை என்று கூறுகிறார்கள். இதுவும் நேரடியான ஆதாரம் அல்ல ஆயிஷா(ரலி) பருவம் அடையவில்லை என்பதற்கு. மேலும் இது சார்ந்த ஏனைய ஹதீஸ்களை சற்று ஆய்வு செய்தால் ஆயிஷா(ரலி) இந்த சம்பவம் நடைபெறும் போது ஏற்குறைய 14 வயது என்பது விளங்கும். .....மேலும் வாசிக்க

ஆதாரம் 3.: இது ஆயிஷா(ரலி) குறித்த அவதூறு சம்பவம் தொடர்பான ஹதீஸ்கள்இந்த ஹதீஸில் இருந்து அவதூறு பரப்பிகள் இரண்டு வாதங்களை முன்வைக்கின்றனர்.
1. பரீரா(ரலி) அவர்களது கூற்றை எடுத்துக்கொண்டோமேயானால் அதில் ஆயிஷா(ரலி) அவர்களது கவனக்குறைவுதான் சுட்டப்படுகிறது. அது ஆயிஷா(ரலி) பருவம் எய்தாதவர் என்பதை உணர்த்தாது 2.ஆயிஷா(ரலி) கூறும் ஜாரியா என்ற சொல் சிறு பெண் என்ற பொருளை மட்டும் கொண்டது அல்ல. ஜாரியா என்பது இளம் பெண்ணையும் குறிக்கும் சொல். அது அடிமைகள் குறித்து பேசும் போது வயதானவர், சிறுமியர் இரண்டுக்குமான சொல். ஆக இந்த பொதுச்சொல்லை கொண்டு ஆயிஷா(ரலி) பருவம் எய்தவில்லை என்று வாதிக்க இயலாது.     ....... மேலும் வாசிக்க

விமர்சனம்: நபி(சல்) அவர்களுக்கும் ஆயிஷா(ரலி) அவர்களுக்கும் வயது வித்தியாசம் அதிகம்: நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா(ரலி) அவர்களை திருமணம் செய்த போது வயது முதிர்ந்தவர்களாய் இருந்தார்கள். 


நமது பதில்:
                முதலில் இந்த விமர்சனமே தவறானது. இத்தகைய விமர்சனம் இன்றும் நாம் முழுமையாக ஏற்காத ஒன்று. இன்றும் இந்த வயதுடையவர் இந்த வயதுடையவரைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற எந்த அளவுகோலும் இல்லை. உள்ளங்கள் ஒத்துப்போனால் எந்த வயது வேறுபாட்டிலும் திருமணம் செய்யலாம் . உடலால், மனத்தால் தகுதியுடன் இருந்தால் போதுமானது. ஆயிஷா(ரலி) அத்தகைய தகுதியுடன் இருந்தார்கள் என்பதற்கு போதிய சான்றுகள் உள்ளன.    ........  மேலும் வாசிக்க
நபி(சல்) - ஆயிஷா(ரலி) திருமணம் குறித்த அனைத்து வாதங்களும் திருமணம் தொடர்பான ஹதீஸ்களை சுற்றியே இருந்தாலும் அவை அனைத்தும் சென்ற தொடர்களில் மறுக்கப்பட்டுள்ளது. இதே போன்று இஸ்லாமிய அறிஞர்கள் மறுத்ததை ஒட்டி அவதூறு பரப்பிகள் தங்களது வாதங்களுக்கு முட்டு கொடுக்க சில உப செய்திகளை தூக்கி வருகின்றனர். அவற்றை இங்கு பதிவிட்டு அதன் விளக்கத்தை காண்போம் இன் ஷா அல்லாஹ் .......
மேலும் வாசிக்க



நாம் சென்ற தொடர்களில் நபி(ஸல்)- ஆயிஷா(ரலி) அவர்களது திருமணம் தொடர்பாகவும், அதன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்தும், அதன் தெளிவான மறுப்பையும் கண்டோம். வரும் தொடர்களில் பால்ய விவாகம் குறித்து இஸ்லாமின் நிலைபாட்டினை விளக்கவுள்ளோம். நாம் இஸ்லாமின் திருமண வயது குறித்த நிலையினை விளக்கும் முன்னர், ஏனைய சமூகங்கள், மதங்கள், கலாச்சாரங்களில் காணப்படும் திருமண வயது குறித்த விவரங்களை முதலில் பார்ப்போம். இதன் மூலம் இஸ்லாத்தின் திருமண வயது குறித்த நிலைபாடு எவ்வளவு தெளிவாக நேர்த்தியாக அல்லாஹ்வால் வழங்கப்பட்டுள்ளது என்பதை நாம் அறிய முடியும் இன் ஷா அல்லாஹ்......
மேலும் வாசிக்க



நாம் சென்ற தொடரில் கிறித்தவம் குறிப்பிடும் திருமண வயது குறித்து பார்த்தோம். அதில் நாம் ஈஷாக் ரெபக்காளின் திருமணம் குறித்து சிறிது பார்த்தோம். யூதர்களின் புனித நூல்கள் பெண்ணின் திருமண வயது குறித்து என்ன கூறுகிறது என்பதை பார்ப்போம். அதை ஈஷாக்- ரெபக்காளின் திருமணத்தில் இருந்தே ஆரம்பிப்போம். மேலும் ஏனைய யூத ரப்பிக்களின் கருத்து பெண்ணின் திருமண வயது குறித்து என்னவாக இருந்தது என்பதையும் கண்போம். ....
.மேலும் வாசிக்க

நபி(சல்)- ஆயிஷா(ரலி) அவர்களது திருமணம் குறித்து அவதூறுகளைக்கூறி விமர்சிக்கும் வரிசையில் இப்போது இந்துத்துவாவினரும் சேர்ந்துள்ளனர். இவர்கள் மிசனரிகளின் சரக்கை மொழியாக்கம் செய்து, அவர்களது குற்றச்சாட்டைத்தான் இவர்களும் முன்வைக்கின்றனர். நாம் சென்ற தொடர்களில் இத்தகைய விமர்சனங்களுக்கு தக்க வரலாற்று ஆவணங்களைக் கொண்டு பதிலளித்துள்ளோம். நபி(சல்) அவர்களின் மீது அவதூறுகளை கூறி விமர்சித்ததின் மூலம் இந்த இந்துத்துவா கும்பல், இவர்களது கடவுளர்களின் நிலை என்ன என்பதை நாம் கூறும் நிலைக்கு நம்மை  கொண்டு வந்துள்ளனர். அடுத்ததாக இவர்கள் மேலும் ஒரு குற்றச்சாட்டை இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் மற்றும் இஸ்லாமிய அரசர்கள் மீது வைக்கின்றனர். அதாவது இந்தியாவின் மீது இஸ்லாமிய படை எடுப்பின் பின்பு தான் இந்துக்களிடம் குழந்தை திருமணம் ஏற்பட்டது என்ற அவதூறையும் பரப்பி வருகின்றனர். ஆக இவர்களது இத்தகைய அவதூறுகளுக்கு பதிலளிக்கும் வண்ணம் அவர்களது கடவுளர்களின் வரலாறு மற்றும் புராணங்கள் என்ன கூறுகிறது என்பதையும் பண்டைய கால இந்தியாவில் எத்தகைய திருமண முறைகள் இருந்தது என்பதையும் இந்த கட்டுரையில் இன்ஷா அல்லாஹ் காண்போம். ..........
மேலும் வாசிக்க




11.இஸ்லாம் கூறும் திருமண வயது

நாம் சென்ற மூன்று தொடர்களாக ஏணைய மதங்கள் கூறும் திருமண வயது குறித்து கண்டோம். கிறித்தவ யூத மதங்கள் திருமண வயது குறித்து எந்த தெளிவான அறநெறிகளியும் வகுக்கவில்லை, அதனால் யூத கிறித்தவ வரலாற்றில் மூன்று வயதில் இருந்து திருமணம் செய்வித்தற்கான போதிய ஆதாரங்கள் சென்ற தொடர்களில் பதிந்துள்ளோம். மனித வாழ்வின் மிக முக்கியமான நிகழ்வான திருமணம் அதன் வயது குறித்த வழிகாட்டல்களே ஒரு இறை வேதத்தில் இல்லை என்பதை விளக்கியுள்ளோம். அடுத்ததாக இந்து மதத்தில் திருமண வயதிற்கான நெறிகள் காணப்பட்டாலும் பாலுறவுக்கான வயதாக சிறு வயதை கூறுவதை தெளிவு படுத்தியுள்ளோம். இன் ஷா அல்லாஹ் இந்த தொடரில் இஸ்லாம் கூறும் திருமண வயதும் அதன் குறிகாட்டிகள் எவை என்பதையும் விளக்குவோம்.
மேலும் வாசிக்க
நாம் சென்ற தொடரில் இஸ்லாம் வாலிப வயதைத்தான் திருமண வயதாக கொள்கிறது என்பதை தக்க தரவுகளுடன் விளக்கிவுள்ளோம். இஸ்லாமின் இந்த நிலைப்பாட்டை முன்வைக்கும் போது அவதூறு பரப்பிகள் சில குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். அவர்களது இந்த வாதத்திற்கு ஆதாரமாக அல் குர்ஆன் அத்தலாக் சூராவின் 4 வது வசனம் குறித்த  சில தஃப்ஸீர்களையும், விளக்கவுரைகளையும் முன்வைக்கின்றனர். உண்மையில் அந்த வசனம் என்ன கூறுகிறது என்பதையும் அதன் விளக்கத்தையும்  பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்.

மேலும் வாசிக்க



No comments:

Post a Comment