பக்கங்கள் செல்ல

குர்ஆன் எவ்வாறு பாதுகாக்கப்பட்டுள்ளது


1.உள்ளத்தில் பாதுக்காக்கப்பட்ட அல் குர்ஆன்


குர்ஆனின் பாதுகாப்பு குறித்தும் அது எவ்வாறு பாதுக்காக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் இந்த இஸ்லாமிய சமூகம் நன்கு அறியும். ஆயினும் இன்று முளைத்திருக்கும் சில மிசனரிகளும் தங்களை முன்னாள் முஸ்லீம்கள் என்று கூறித்திரியும் சிலரும் இஸ்லாம் மீது கொண்ட காழ்ப்புணர்சியாலும் , ஃபோபியாவினாலும் குர்ஆன் எந்த வழியிலும் பாதுக்காக்கப்பட வில்லை என்று அவதூறு பரப்பி திரிகின்றன. எழுத்து வடிவிலும் ஓசை வடிவிலும் பாதுகாக்கப்படாத ஒரு ஏடு எப்படி பல கோடி முஸ்லீம்களிடம் அதுவும் உலகின் பல பகுதியில் வாழும் முஸ்லீம்களிடம் ஒரே மாதிரி இருக்கிறது என்பதை இவர்கள் பகுத்தறிவு ரீதியாக விளக்க வேண்டும். எந்த வழியிலும் பாதுகாக்கப்படாத ஒரு ஏடு பல கோடி மக்களின் கையில் ஒரே மாதிரி இருக்கிறது என்பது ஒரே இரவில் அனைவரிடமும் வந்துவிட வில்லை என்பதற்கு போதிய சான்று. மேலும் வாசிக்க.......

குர்ஆன் எப்படி மக்கள் உள்ளங்களில் மனனம் செய்யப்பட்டு தலைமுறை தலைமுறையாக கடத்தப்பட்டது என்பதை இஸ்லாமியர்கள் ஆதாரப்பூர்வமாக நிரூவும் போது, இங்கிருக்கும் கிறித்தவ மிசனரிகளும், இஸ்லாமோஃபோபுகளும் , ஹதீஸ்களில் காணப்படும் குர்ஆன் தொகுக்கப்பட்டது குறித்த வரலாற்று குறிப்புகளை முன்வைத்து சில மூடத்தனமான விமர்சனங்களை முன்வைத்த ஆர்தர் ஜெஃப்ரி போன்ற ஓரியண்டலிஸ்டுகளின் புத்தகங்களில் இருந்தும், தற்காலத்தில் சில இஸ்லாமிய எதிர்ப்பு ஆங்கில வளைத்தளத்தில் பதியப்பட்டவைகளையும் அடிப்படையாக கொண்டு தாங்களே தேடி கண்டறிந்தது போன்று விமர்சனங்களை செய்து வருகின்றனர்.  இந்த விசயங்களில் ஆர்தர் ஜெஃரியின் தந்தையாக கருத்தப்பட்ட இஸ்லாமிய அறிஞர்களின் நூல்கள் எல்லாம் கிபி 10ம் நூற்றாண்டுகளில் இருந்து இஸ்லாமிய சமூகத்தால் பார்க்கப்பட்டு , அதற்கான தெளிவுரைகளையும் இஸ்லாமிய அறிஞர்களே வழங்கியும் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதையும் இந்த கட்டுரையின் இறுதியில் காணவுள்ளோம். 
மேலும் வாசிக்க.......



3.குர்ஆன் தொகுப்பு குழுவில் ஸைத் பின் ஸாபித்(ரலி)

 
நபி(சல்) அவர்களின் மரணத்திற்கு பிறகு குர்ஆனை தொகுக்கும் குழுக்கள் இரண்டு முறை இஸ்லாமிய கலிஃபாக்களால் நியமிக்கப்பட்டுள்ளது. முதல் முறை அபூபக்ர்(ரலி) அவர்களால், இரண்டாவது முறை உஸ்மான்(ரலி) அவர்களால். இரண்டிலுமே ஸைத் பின் ஸாபித்(ரலி) பங்குபெற்றுள்ளார்கள். குர் ஆன் பாதுகாப்பு குறித்த விமர்சனங்களிற்கான விளக்கங்களை புரிந்து கொள்ள முதலில் மேற்குறிப்பிட்ட ஸைத பின் ஸாபித்(ரலி) அவர்களின் நியமனத்தின் நியாயங்கள அறிந்து கொள்வது அவசியமாகும். அது குறித்த ஹதீஸ்களை முதலில் பார்ப்போம். மேலும் வாசிக்க




4.ஸைத் இப்னு ஸாபித்(ரலி) குர்ஆனை தொகுக்க தகுதியற்றவரா?


குர்ஆனின் பாதுகாப்பு குறித்து விளக்கங்கள் கொடுக்கப்படும் போது அதற்கு இஸ்லாமிய எதிர்ப்பாளர்களிடம் புறப்படும் விமர்சனங்களில் மிக முக்கிய இடம் வகிப்பது இந்த தலைப்பு ஆகும். இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்களின் ஓதல் குறித்த சிறப்புகளை முன்னிறுத்தி, ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களது தொகுப்பில் குறை இருப்பதாகவும் , நபி(சல்) அவர்களால் புகழப்பட்ட இப்னு மஸ்ஊத்(ரலி) போன்ற நபித்தோழரே இதனை எதிர்த்துள்ளார் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த இஸ்லாமோஃபோபுகள் பெரும் முயற்சியை மேற்கொள்கின்றனர். இந்த நிகழ்வின் உண்மை நிலை என்ன என்பதை இங்கு காண்போம் இன் ஷா அல்லாஹ்.மேலும் வாசிக்க




5.உஸ்மான்(ரலி) அரசாணையும் இப்னு மஸ்ஊத்(ரலி) எதிர்ப்பும் ஏற்பும்

 
உஸ்மான்(ரலி) அவர்கள், அவர்களால் நியமிக்கப்பட்ட குழுவினால் பிரதி எடுக்கப்பட்ட குர்ஆனை இஸ்லாமிய பேரரசின் பகுதிகளுக்கு அனுப்பிவைத்தார்கள். அதனோடு ஒரு கட்டளையும் பிறப்பித்தார்கள். அதாவது ஏனைய குர்ஆன் பிரதிகளை அழிக்க கட்டளை பிறப்பித்தார்கள். குர்ஆனை ஸைத் இப்னு ஸாபித்(ரலி) தொகுத்ததற்கும், ஏனைய குர்ஆன் பிரதிகளை பரிமுதல் செய்து எரிக்கவும் பிறபிக்கப்பட்ட கட்டளையை எதிர்த்தவர் இப்னு மஸ்ஊத்(ரலி) ஆவார்கள். 
வரலாற்று குறிப்புகளின் அடிப்படையிலும் இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்களின் எதிர்ப்பு ஆரம்பத்தில் அறியாமையினால் ஏற்பட்டது என்பதையும், பிற்காலத்தில் அலி(ரலி) அவர்களின் வருகையின் போதும், உஸ்மான்(ரலி) அவர்களின் விளக்க கடிதத்தினாலும் அவர்கள் எதிர்ப்பை கைவிட்டர்கள் என்பதை விளங்க முடிகிறது. குருட்டு இஸ்லாமோஃபோபுகளின் வாதங்கள் அறியாமை மற்றும் காழ்ப்புணர்ச்சியால் தோன்றியது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.  மேலும் வாசிக்க


குர்ஆனின் பாதுகாப்பு குறித்து இஸ்லாமோஃபோபுகள் வைக்கும் அறைவேக்காட்டு வாதங்களுக்கு , ஆதாரப்பூர்வமான வரலாற்று தரவுகளை முன்வைத்து விரிவான பதில்களை கண்டுவருகிறோம். அல்ஹம்துலில்லாஹ். இந்த வரிசையில் குர்ஆன் வரலாறு குறித்த விமர்சனங்களில் ஏழு அஹ்ரூஃப் குறித்த இஸ்லாமோஃபோபுகளின் விமர்சனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதற்கான விளக்கம் எளிமையாக புரிந்து கொள்ளும் படியாக இருந்தாலும், முன் சென்ற அறிஞர்களின் ஆய்வை முன்னிறுத்தி சில வாதங்களை கிறித்துவ மிசனரிகளும், Ex- முஸ்லிம் என்று கூறித்திரிவோரும் முன்வைத்து வருகின்றனர். அதற்கான பதிலை இந்த பாகத்தில் காணவுள்ளோம் இன் ஷா அல்லாஹ்.மேலும் வாசிக்க
 
நாம் சென்ற தொடரில் ஏழு அஃரூஃபும் இன்றிருக்கும் கிராத்களும் தொடர்புடையவை என்பதை விளக்கியிருந்தோம். கிராத்கள் என்பது நபி(சல்) அவர்களால் அங்கிகரிக்கப்பட்ட மாறுபாட்டுடன் குர்ஆனை ஓதுவதாகும். இந்த கிராத்கள் ஒவ்வொன்றும் நபி(சல்) அவர்களிடம், வெகுஜன ஓதலினால் ஒவ்வொரு தலைமுறைகளிலும் கடத்தப்பட்டு இறுதியாக இன்று நம்மிடம் வந்தடைந்திருக்கிறது. அதன் அறிவிப்பாளர் தொடர் குறித்து சிறிய விளக்கத்தை இங்கு காண்போம் இன் ஷா அல்லாஹ்.மேலும் வாசிக்க



குர்ஆனின் கிராத்கள் குறித்தும் அது எப்படி நபி(சல்) அவர்களிடம் தொடர்புடையது என்பதையம் சென்ற தொடரில் கண்டோம். குர் ஆனின் கிராத் பாதுகாப்பு குறித்து நாம் விளக்கும் போது சில ஹதீஸ்களில் காணப்படும் மாறுபட்ட அல்லது இன்றில்லாத ஓதல் முறை குறித்து இன்றைய இஸ்லாமோஃபோபுகள் கேள்வி எழுப்பி இதனால் குர்ஆனின் ஓதல் பாதுகாக்கப்படவில்லை என்று உளறித்திரிகின்றனர். 
அபூ மூஸா(ரலி) மட்டும் தானாக மறந்திருந்தால் ஏனைய நபிதொழர்கள் வழியாக வரும் கிராத்களில் அதிகப்படியான அத்தியாங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். அதற்கு மாற்றமாக அனைத்தும் ஒரே அத்தியாய எண்ணிக்கையை கொண்டிருப்பது குர்ஆனின் எந்த பகுதியும் தொலைய வில்லை. அல்லாஹ் கூறியது போலவே அல்லாஹ்வே குர்ஆனை பாதுகாத்துள்ளான் என்பது நிரூபனமாகிறது. மேலும் வாசிக்க

அபூதர்தா, இப்னு மஸ்வூத்(ரலி) ஆகியோர், மற்றும் ஈராக்வாசிகளும் இன்று குர்ஆனில் இடம் பெற்றிருக்கும் 92 சூராவான அல்லைல் சூராவிற்கு மாற்றமாக ஓதியுள்ளனர். இன்று இருக்கும் குர்ஆனில் அல் லைல் சூராவின் மூன்றாம் ஆயத் வமா ஹலக்க தக்கர வல் உன்ஸா என்று இடம் பெறுகிறது. ஆனால் அபூதர்தா(ரலி) அவர்களும் , இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களும் மற்றும் ஈராக்வாசிகளும் இதற்கு மாற்றமாக "வத்தக்கர வல் உன்ஸா" என்று ஓதியுள்ளனர். நபித்தோழர்களே இப்படி மாறுபட்டு அறிவிப்பதால் குர்ஆனில் பின்னாளில் வார்த்தைகள் சேர்க்கப்பட்டு கறைபடுத்தப்பட்டுள்ளது என்று வாதிக்கின்றனர். ஹதீஸ்களும் முன்னுக்குபின் முரணாக இந்த விசயத்தில் இடம் பெறுவதை காண முடிகிறது. ஆக பெரும்பான்மை ஓதலுடன் எந்த செய்தி பொருந்துகிறதோ அதுவே ஆதாரப்பூர்வமான செய்தி என்பதை விளங்கலாம். ஆக மறுக்கப்படும் ஹதீஸின் மீது எழுப்பப்படும் இஸ்லாமோஃபோபுகளின் வாதங்கள் எந்த மதிப்பும் அற்றவை...மேலும் வாசிக்க


குர்ஆனின் பாதுகாப்பு குறித்த இஸ்லாமோஃபோபுகளின் கேள்விகளுக்கு தொடர்களாக நாம் பதிலளித்து வருகிறோம். அந்த வரிசையில் இந்த கட்டுரையில் குர்ஆனில் இடம் பெறும் வசனங்கள் சில ஹதீஸ்களில் கூறப்பட்ட அதே வசனங்களுக்கு மாறுபட்டு சில பகுதிகள் நீக்கப்பட்டுள்ளதாக கூறி, அதனால் அல்குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்ற இஸ்லாமோஃபோபுகளின் விமர்சனங்களுக்கு பதிலை காணவுள்ளோம், இன் ஷா அல்லாஹ். மேலும் வாசிக்க

நாம் சென்ற தொடரில் நபித்தோழர்கள் எப்படி அல்குர்ஆனின் ஆயத்துக்களுடன் அதன் பொருளாக்கத்தையும் இணைத்து ஓதுவார்கள் என்பதை இஸ்லாமோஃபோபுகளின் விளங்காத விமர்சனத்தின் வாயிலாகவே விளக்கி இருந்தோம். அதன் தொடர்ச்சியாக இந்த தொடரில் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களது அறிவிப்பு ஒன்றை முன்னிறுத்தி இஸ்லாமோஃபோபுகள் முன்வைக்கும் இந்த செய்தி எப்படி முன் சென்ற தொடரிற்கு மேலதிக விளக்கமாகவும் சான்றாகவும் உள்ளது என்பதை காணவுள்ளோம் இன் ஷா அல்லாஹ். மேலும் வாசிக்க


12.கல்லெறி தண்டனை குர்ஆனில் காணவில்லையா???


குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்ற இஸ்லாமோஃபோபுகளின் குற்றச்சாட்டில் மிக பிரதானமான இடத்தை பிடிக்கும் வாதம் குர்ஆனில் இருந்த கல்லெறி தண்டனை தொடர்பான வசனம் காணவில்லை என்பதாகும். அதாவது திருமணமான ஆணோ பெண்ணோ விபச்சாரம் செய்ததற்காக பிடிக்கப்பட்டால் அவர்களின் மீது கல்லெறிதல் என்ற தண்டனை நிறைவேற்றப்படுதல் குறித்த வசனம் நபி(சல்) அவர்களது காலத்தில் குர்ஆனில் இருந்ததாகவும், அது தற்போதைய குர்ஆனில் காணவில்லை அல்லது உஸ்மான்(ரலி) தொகுத்த குர்ஆனில் காணவில்லை என்ற குற்றச்சாட்டுதான் அது. அதற்கு இஸ்லாமோஃபோபுகள் முன்வைக்கும் ஆதாரம் இதோ. மேலும் வாசிக்க



13.பால்குடி வசனம் குர்ஆனில் காணவில்லையா???

குர்ஆனின் பாதுகாப்பு குறித்த விமர்சனங்களில் அடுத்தாக இஸ்லாமோஃபோபுகள் முன்வைப்பது ஐந்து முறை பால் அருந்துவதால் தாய் சேய் உறவு ஏற்படும் என்ற வசனம் குர்ஆனில் காணவில்லை என்பதாகும். இது சென்ற கட்டுரையின் தொடர்ச்சி எனவும் கூறலாம். இந்த விமர்சனத்திற்கு அவர்கள் முன்வைக்கும் ஆதாரங்கள்...மேலும் வாசிக்க    



14.இப்னு மஸ்வூத்(ரலி)யும் அவர்களது ஓதலும்


குர்ஆனின் பாதுகாப்பு குறித்த இஸ்லாமோஃபோபுகளின் விமர்சனங்களில் அடுத்ததாக முக்கிய இடத்தை வகிப்பது நபித்தோழர் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களை அடிப்படையாக கொண்டதாகும். அதாவது நபி(ஸல்) அவர்களால் குர்ஆன் ஓதிக்கற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்ட நபித்தோழராகிய இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களை ஓரம் கட்டிவிட்டு ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களை குர்ஆன் தொகுப்பு குழுவில் நியமித்தது இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களை ஓரம் கட்டி தங்களது இச்சைபடியான குர்ஆனை உருவாக்கவே என்பது அவர்களது வாதம். அதற்கு அவர்கள் முன்வைக்கும் ஆதாரங்களையும், அதன் ஊடாக அவர்கள் எழுப்பும் வாதத்தையும் பார்த்துவிட்டு அதற்கான நமது விளக்கத்தையும் பார்ப்போம் இன் ஷா அல்லாஹ். மேலும் வாசிக்க    



இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களாலேயே குர்ஆனின் பகுதியல்ல என்று மேற் குறிப்பிடப்பட்ட அல்முஅவ்விததைன் ((113, 114 ஆகிய சூரக்கள்) மற்றும் அல் ஃபாத்திஹா ஆகிய சூராக்கள் இன்றைய குர்ஆனில் உள்ளது. எனவே குர்ஆனில் அதிகப்படுத்துதல் ஏற்பட்டிருப்பதால் குர்ஆன் பாதுக்காக்கப்படவில்லை என்பதே இஸ்லாமோஃபோபுகளின் மேற்குறிபிட்ட ஆதாரங்கள் அடிப்படையிலான வாதம் ஆகும். இன்ஷா அல்லாஹ் இவர்கள் முன்வைக்கும் வாதங்களுக்கான பதிலை காண்போம். மேலும் வாசிக்க




16.உபை இப்னு கஅப்(ரலி)யும் அவர்களது ஓதலும்


நபி(ஸல்) அவர்களால் குர்ஆன் ஓதிக்கற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்ட நபித்தோழராகிய உபை இப்னு கஅப்(ரலி) அவர்களின் ஓதலில் உமர்(ரலி) அவர்கள் சில பகுதிகளை விட்டு விட்டதாக கூறுகிறார்கள். என்வே உபை இப்னு கஅப்(ரலி) அல்லாத நபித்தோழர்கள் சிலரால் உருவாக்கப்பட்ட குர்ஆன்தான் இன்றிருப்பது என்பது இஸ்லாமோஃபோபுகளின் வாதம். அதற்கு அவர்கள் முன்வைக்கும் ஆதாரங்களையும், அதன் ஊடாக அவர்கள் எழுப்பும் வாதத்தையும் பார்த்துவிட்டு அதற்கான நமது விளக்கத்தையும் பார்ப்போம் இன் ஷா அல்லாஹ். மேலும் வாசிக்க



17.உபை இப்னு கஅப்(ரலி) முஸ்ஹஃப்பில் அல்ஹஃப்த் மற்றும் அல்ஃஹலா ஸுராக்கள்


குர்ஆனின் பாதுகாப்பு குறித்து இஸ்லாமோஃபோபுகள் எழுப்பி வரும் விமர்சனங்களின் வரிசையில் அடுத்தாக இடம் பெறும் பகுதி உபை இப்னு கஅப்(ரலி) அவர்கள் அதிகப்படியான இரண்டு சூராக்களை குர்ஆனின் பகுதியாக கொண்டிருந்தார்கள், அது இன்றைய குர்ஆனில் இடம்பெறவில்லை என்பதாகும். அது குறித்த இஸ்லாமோஃபோபுகளின் வாதத்தையும், அதற்கு அடிப்படையாக அமைந்த ஆதாரங்களையும் முதலில் பார்ப்போம். மேலும் வாசிக்க



இஸ்லாமோஃபோபுகள் "இந்த யுத்தத்தில் குர்ஆனின் பகுதிகள் காணாமல் போய்விட்டன.எனவே இன்றைய குர்ஆனில் அந்த பகுதிகள் இல்லை. எனவே குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை" என்று விமர்சனம் செய்துவருகின்றனர். அதற்கு இஸ்லாமோஃபோபுகள் முன்வைக்கும் ஆதாரங்களையும், அவர்களது வாதங்களையும் அதற்கு உரிய தக்க பதில்களையும் காண்போம் இன் ஷா அல்லாஹ்.மேலும் வாசிக்க


குர்ஆனின் பாதுகாப்பு குறித்து இஸ்லாமோஃபோபுகள் எழுப்பும் விமர்சனங்களில் அடுத்ததாக நாம் காணயிருப்பது இப்னு உமர்(ரலி) அவர்களின் கூற்றை அடிப்படியாக கொண்டது. அவர்கள் அதற்கு முன்வைக்கும் ஆதாரத்தையும் அதன் அடிப்படையில் எழுப்பப்படும் விமர்சனத்தை முதலில் பார்ப்போம்.மேலும் வாசிக்க


குர்ஆனின் பாதுகாப்பு குறித்த இஸ்லாமோஃபோபுகளின் கேள்விகளுக்கு தொடர்களாக நாம் பதிலளித்து வருகிறோம். அந்த வரிசையில் இந்த கட்டுரையில் குர்ஆனின் பகுதிகள் காணவில்லை என்று கூறும் சில ஹதீஸ்களை முன்னிறுத்தி இஸ்லாமோஃபோபுகள் முன்வைக்கும் விமர்சனங்களையும் அதற்கான விளக்கங்களையும் வரிசைப்படுத்தி காணவுள்ளோம் இன்ஷா அல்லாஹ்.மேலும் வாசிக்க



21.சமர்கண்ட் எழுத்துப்பிரதியும் இஸ்லாமோஃபோபுகளும்


குர்ஆன் பாதுகாப்பு குறித்து அடுத்ததாக இஸ்லாமோஃபோபுகளும், கிறித்தவ மிசனரிகளும் முன்வைக்கும் வாதம் குர்ஆன் கையெழுத்து பிரதியான சமர்கண்ட் கையெழுத்து பிரதி அல்லது தாஸ்கண்ட் கையெழுத்து பிரதி குறித்ததாகும். இந்த சமர்கண்ட் மூலபிரதிகள் எப்படி இன்றைய குர்ஆனில் இருந்து மாறுபட்டுள்ளது என்பது குறித்த நீண்ட(???) பட்டியல் ஒன்றை ஆன்சரிங் இஸ்லாம் போன்ற வலைத்தளங்கள் வெளியிட்டு தங்களின் மே(ல்)தாவி தனத்தை காட்டியுள்ளனர். அதற்கான விளக்கத்தை இன் ஷா அல்லாஹ் காணவுள்ளோம். மேலும் வாசிக்க


22.ஆர்தர் ஜெஃப்ரி “ Materials for the History of the Text of the Qur'ān” நூல் ஆய்வு - பாகம் 1


நாம் குர்ஆனின் பாதுகாப்பு குறித்து இஸ்லாமோஃபோபுகள் எழுப்பி வரும் விமர்சனங்களுக்கான விடைகளை ஆதாரப்பூர்வமான செய்திகளில் இருந்து வழங்கிவருகிறோம். அதன் ஊடாக இஸ்லாமோஃபோபுகளுக்கு அரைகுறையாக அறிவை போதிக்கும் வலைதளங்களின் உளறல்களை தோழுரித்து வருகிறோம். அந்த வரிசையில் இந்த கட்டுரையில் மிசனரி ஓரியண்டலிஸ்டான ஆர்தர் ஜெஃப்ரி என்ற அரைவேக்காடு குறித்தும், அவரது உளறல் நிறந்த “ Materials for the History of the Text of the Qur'ān” என்ற அவரது நூல் குறித்தும் காணயிருக்கிறோம், இன் ஷா அல்லாஹ்.மேலும் வாசிக்க


23.முரண்பாட்டின் மொத்த உருவம் ஆர்தர் ஜெஃப்ரி


நாம் சென்ற தொடரில் அர்தர் ஜெஃப்ரி தனது நூலின் தலைப்பிலேயே எவ்வளவு மோசடிகளை கட்டவிழ்துள்ளார் என்று கண்டோம். இந்த கட்டுரையில் அவர் குர்ஆனின் தொகுப்பு குறித்து எவ்வாறு வரலாற்று மோசடிகளை செய்துள்ளார் என்பதையும் எப்படி தனக்குத்தானே முரண்படுகிறார் என்பதையும் காண்போம், இன் ஷா அல்லாஹ்.மேலும் வாசிக்க

குர்ஆனின் பாதுகாப்பு குறித்த இஸ்லாமோஃபோபுகள் மற்றும் கிறித்தவ மிசனர்களின் விமர்சனங்களுக்கான மறுப்பை நாம் தொடராக பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் அல் குர்ஆன் 9:128-129 மற்றும் 33:23 ஆகிய வசனங்கள் குறித்து இஸ்லாமோஃபோபுகள் எழுப்பும் விமர்சனத்திற்கான பதிலை இந்த கட்டுரையில் காணவுள்ளோம் இன் ஷா அல்லாஹ். மேலும் வாசிக்க



No comments:

Post a Comment