பக்கங்கள் செல்ல

Friday, December 13, 2024

பவுலிய கடிதங்களும் இடைச்செருகல்களும்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم

பவுலிய கடிதங்களும் இடைச்செருகல்களும்

    நாம் சென்ற கட்டுரையில் பவுலிய கடிதங்களின் அனுமானங்கள் குறித்தும் அது எப்படி பவுலையே எழுத்தராக ஏற்க மறுக்கிறது என்பதையும் கண்டோம். மேலும் எப்படி பவுலிய கடிதங்கள் இட்டுக்கட்டபட்டவை என்று  உறுதிபடுத்தும்படியான வரலாற்று தரவுகளையே கிறித்தவ வரலாறு தாங்கி நிற்கிறது என்பதையும் சென்ற இரு கட்டுரைகளிலும் விளக்கியிருக்கிறோம். இந்த கட்டுரையில் ஆதாரப்பூர்வமான கடிதங்களாக பெரும்பாலான புதிய ஏற்பாட்டு அறிஞர்களால் ஏற்கப்பட்ட 7 பவுலிய கடிதங்களில் காணப்படும் இடைச்செருகல்கள் குறித்து காணயிருக்கிறோம் இன் ஷா அல்லாஹ்…..

பவுலிய கடிதங்களில் இடைச்செருகல்கள் இருப்பதை உறுதி படுத்தும் காரணிகள்


    பின்வரும் காரணங்களினால் பவுலிய கடிதங்களில் இடைச்செருகல் இருப்பதற்கான வாய்ப்புகளை நாம் உறுதிபடுத்துகிறோம்.
👉புதிய ஏற்பாட்டு மொத்த ஆதிகாரபூர்வ வடிவம் ஏற்படுவதற்கு கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டுகள் தேவை பட்டுள்ளது. பவுலிய கடிதங்கள் அதிகாரப்பூர்வமானவையாக திருச்சபையினால் அறிவிக்கப்பட கிட்டத்தட்ட குறைந்த பட்சம் 100 ஆண்டுகள் ஆகியுள்ளதை கிறித்தவ வரலாறு தெளிவாக காட்டுகிறது. இருக்கும் ஆதாரங்களில் பழமையான, புதிய ஏற்பாட்டின் அதிகாரபூர்வ நூல் வரிசையை கொண்டிருப்பதாக கருதப்படுவது மூயூரோடேரியன் துண்டுகள்தான். ஆனால் அதுவும் எழுதப்பட்டதாக கருதப்படுவது இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான். இந்த 100 ஆண்டுகள் எந்த நூலிலும் இடைச்செருகல் ஏற்பட போதுமானது. பவுலின் நேரடி மாணவர்கள் மறைந்திருப்பார்கள், அதனை சாரிபார்ப்பதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போயிருக்கும். ஆதாரப்பூர்வ கடிதங்கள் எப்படி திருச்சபையின் கைகளுக்கு வந்து சேர்ந்தது, யாரால் பாதுக்காக்கப்பட்டது போன்ற எந்த தரவுகளும் கி.பி. 150 வரை கிறித்தவ வரலாற்றில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதை தீர்ப்பதற்கே கிறித்தவ உலகிற்கு பல அனுமான கோட்பாடுகள் தேவைபடுகிறது என்பதை சென்ற கட்டுரைகளில் கண்டிருந்தோம்.
கி.பி.இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை பவுலிய கடிதங்களின் நிலை குறித்த தெளிவான தரவுகள் இல்லாமல் இருப்பது. மார்சியோனின் சுருக்க பவுலிய கடிதங்களின் தொகுப்பிற்கு முந்தைய விரிவான கடிதங்களை உடைய தொகுப்புக்கள் ஏதும் கிடைக்கவில்லை.

👉திருச்சபை தனித்த கடிதங்களை பாதுகாத்து வந்ததற்கான எந்த வரலாற்று தரவுகளும் கி.பி.இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை இல்லாமல் இருப்பது, திருச்சபைகள் கடிதங்களை பாதுகாக்கவில்லை என்பதை காட்டுகிறது. இதன் மூலம் திருச்சபைகள் பவுலின் பெயரால் புலக்கத்தில் இருந்த சில கடிதங்களை தொகுத்திருக்கிறது என்பது உறுதியாகிறது. இந்த கடிதங்கள் எப்படி தொகுக்கப்பட்ட நிலைக்கு வந்தது என்பதற்கு எந்த வரலாற்று தரவுகளும் இல்லை.

👉திருச்சபைகளினால் கி.பி.இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொகுக்கப்பட்ட பவுலிய கடிதங்கள் மார்சியோன், ஞானவாதக்காரர்களுக்கு எதிராக கடுமையான எதிர்ப்பு கிளம்பி இருந்த நேரம். அந்த நேரத்தில் மார்சியோன், கிறித்தவ திருச்சபைகள் பழைய ஏற்பாட்டின் யூத கூருகளை ஏடுகளில் நுழைப்பதாக குற்றம் சாட்டினார்.(1) கிறித்தவ திருச்சபையோ மார்சியோன் ஏடுகளில் இருந்து நீக்கம் செய்வதாக குற்றம் சாட்டின. இது குறித்த மங்கலான நிலையே கிறித்தவ வரலாற்றில் காணப்படுகிறது. எனவே அவர் அவர் சார்ந்த சபைகளுக்கு ஏற்ப பவுலிய கடிதங்களில் கூட்டல் கழித்தல் செய்திருக்கின்றனர் என்பதை உறுதிபடுத்த முடிகிறது.

👉பவுலிய கடித தொகுப்பாளர்களுக்கு எந்த கடிந்தங்கள் கிடைத்தன என்பதற்கு எந்த தரவுகளும் இல்லை. பவுலின் பெயரால் புனையப்பட்டதாக பெரும்பான்மை கிறித்தவ அறிஞர்களால் ஏற்கப்படும், 1 மற்றும் 2 தீமோத்தேயு, தீத்து ஆகிய கடிதங்கள் பவுலினது என்று தவறாக சேர்க்கப்பட்டுள்ளது. உதாரணமாக கொலோசெயர் 4:16 லவோதிக்கேயாவில் இருந்து வரும் பவுலிய நிருபம் விடப்பட்டுள்ளது. என்ன அளவுகோலை கொண்டு பவுலிய கடிதங்கள் தொகுப்பில் சேர்க்கப்பட்டன என்பதற்கு எந்த வரலாற்று தரவுகளும் இல்லை. மேலும் 2 கொரிந்தியர், பல கடிதங்கள் ஒன்றினைத்து உருவாக்கப்பட்ட ஒரு கடிதம் என்று பெரும்பான்மை கிறித்தவ அறிஞர்களால் இன்று கூறப்படுகிறது. இவை அனைத்தும் முன்சென்ற 3ம் காரணியின் முடிவை உறுதி படுத்துவதாய் உள்ளது.
        நாம் முன்சென்ற கட்டுரைகளில் மேற்குறிபிட்ட காரணிகள் குறித்தும், அந்த காரணிகள் தோற்றுவித்த அனுமான்ங்கள் குறித்தும், அந்த அனுமானங்கள் தோற்றுவிக்கும் சிக்கல்கள் குறித்தும் விளக்கமாக கண்டிருந்தோம். நமக்கு ஏற்படும் சந்தேகங்கள் புதிய ஏற்பாட்டினை ஆய்வு செய்யும் யாருக்கும் ஏற்படும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாய் புதிய ஏற்பாடு உருவாகி கொண்டிருந்த காலத்திலேயே இடைச்செருகல்களும், திரிபுவாதங்கள் பவுலிய கடிதங்களில் நுழையத்துவங்கி விட்டது என்பதை உறுதி படுத்தும் விதமாக பின்வரும் வசனங்கள் புதிய ஏற்பாட்டில் இடம்பெறுவதை நாம் காணமுடிகிறது.

        பவுலின் போதனைகளிலும், கடிதங்களிலும் இடைச்செருகல்கள் ஏற்பட துவங்கியது என்பது பவுலின் காலத்திலேயே என்பதை அந்த கடிதங்களே கூறிகின்றன.
    மேலும் நம்முடைய கர்த்தரின் நீடிய பொறுமையை இரட்சிப்பென்று எண்ணுங்கள்; நமக்குப் பிரியமான சகோதரனாகிய பவுலும் தனக்கு அருளப்பட்ட ஞானத்தினாலே இப்படியே உங்களுக்கு எழுதியிருக்கிறான்; எல்லா நிருபங்களிலும் இவைகளைக்குறித்துப் பேசியிருக்கிறான்; அவன் சொன்னவைகளில் சில காரியங்கள் அறிகிறதற்கு அரிதாயிருக்கிறது; கல்லாதவர்களும் உறுதியில்லாதவர்களும் மற்ற வேதவாக்கியங்களைப் புரட்டுகிறதுபோலத் தங்களுக்குக் கேடுவரத்தக்கதாக இவைகளையும் புரட்டுகிறார்கள். (2 பேதுரு 3:15-16)
    நன்மை வரும்படிக்குத் தீமைசெய்வோமாக என்றும் சொல்லலாமல்லவா? நாங்கள் அப்படிப் போதிக்கிறவர்களென்றும் சிலர் எங்களைத் தூஷித்துச் சொல்லுகிறார்களே; அப்படிப் போதிக்கிறவர்கள்மேல் வரும் ஆக்கினை நீதியாயிருக்கும். (ரோமர் 3:8)
    ரோமருக்கு எழுதிய கடிதம் பவுலின் மூன்றாவது மிஷனரி பயணத்தின் போது எழுதப்பட்டதாக தற்கால அறிஞர்கள் கூறுகின்றனர். பவுலின் வாழ்நாளிலேயே இந்தமாதிரியான திரிவு வாதங்கள் பவுலிய போதனைகளில் உள் நுழைந்துவிட்டன என்பதை காட்டுகிறது. இப்படி பவுலின் போதனைகள் பவுலின் காலத்திலேயும், அதன் சமீபத்திலுமேயே சிதைய துவங்கியது என்பதை மேற்குறிப்பிட்ட புதிய ஏற்பாட்டின் வசனங்கள் கூறுகின்றன. அதவாது பவுலின் போதனைகளிலும், கடிதங்களிலும் இடைச்செருகல்கள்களும் கூட்டலும் குறைத்தலும் வர துவங்கிவிட்டது என்பதை மேற்குறிபிட்ட வசனங்கள் பட்ட வர்த்தனமாய் ஒப்புக்கொள்கின்றன. எனவேதான் Harry Y. Gamble பின்வருமாறு கூறுகிறார்.
The larger collections of Paul's letters that come into view in the second century, consisting variously of ten, thirteen, and fourteen letters, were outgrowths of these earlier small and perhaps regional collections.  
இரண்டாம் நூற்றாண்டில் கவனத்திற்கு வந்த பவுலிய கடிதங்களின் பெரிய தொகுப்புகள், பத்து, பதின்மூன்று மற்றும் பதினான்கு கடிதங்களை கொண்டவை, இவை முந்தைய சிறிய மற்றும் சிலவேலைகளில் பிராந்திய சேகரிப்புகளின் வெளிவளர்ச்சிகளாக இருந்தன.(Harry Y. Gamble., Books and Readers in the Early Church P.No.100)

Paul's copies would have been a valuable resource to his associates, who eventually collated and revised them. Ultimately, they would have transcribed them, together with some pseudonymous letters, in a comprehensive format. 
பவுலின் பிரதிகள் அவரது கூட்டாளிகளுக்கு மதிப்புமிக்க ஆதாரமாக இருந்திருக்கும், அவர்கள் இறுதியில் அவற்றைத் தொகுத்து திருத்தினார்கள். இறுதியில், அவர்கள் சில புனைவு கடிதங்களுடன், விரிவான வடிவத்தில் அவற்றைப் படியெடுத்திருப்பார்கள்.(Harry Y. Gamble., Books and Readers in the Early Church P.No.101)
    யார் இப்படி புனைவுகளை உள்ளே திணித்து தொகுப்புக்களை உருவாக்கியிருப்பார்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை. இது குறித்த தரவுகள் எதுவும் இல்லை. இப்படி புனைவுகளை இடைச்செருகல்கள் செய்து பவுலிய கடிதங்கள் திருத்தப்பட்டுள்ளது என்பதுமட்டும் வரலாற்று தரவுகள், வரலாற்றில் ஏற்பட்ட வாத பிரதி வாதங்களின் மூலம் அறிய முடிகிறது. இவ்வாறு இடைச்செருகள் செய்யப்பட்டதாக தற்கால புதிய ஏற்பாட்டு அறிஞர்களால் கருத்தப்படும் பவுலிய கடிதங்களின் பகுதியை சிறு பட்டியலாக BeDuhn J.D., டெக்ஸாசின் டிரினிட்டி பல்கலைகழகத்தின் பேராசிரியர் வில்லியம் O. வாக்கர், கிறித்தவ மதகுரு மற்றும் கயஸ் கல்லூரியின் கல்வி தலைவரான J.V.M. ஸ்டர்டி  ஆகியோர் தங்களது நூல்களில் தொகுத்து வழங்கியுள்ளனர், இம்மூவரின் ஆக்கங்களில் காணப்படும் சிறு பட்டியலை இங்கு நாம் தொகுத்து தருகிறோம்.

1.ரோமர்


 வ.  எண் இடைச்செருகல் என்று கூறப்படும் வசனம் இடைச்செருகல் என்று கூறும் புதிய ஏற்பாட்டு அறிஞர்
1. 1:3-4 Loisy (1935: 9)
2. 1:18-32 Michelsen (1876); Couchoud (1926); Harrison (1936: 298f); Carrington (1939); Hawkins (1941); O'Neill (1975: 40-45)
3. 1:18-32- 2:29 O'Neill (1975: 40-45)
4. 1:19-2:1 P. N. Harrison
5. 2:1 Bultmann (1947); Schmithals (1975, marginal note).
6. 2:13 Schmithals (1975, marginal note)
7. 2: 14f. Weisse
8. 2:15b-16 Sahlin (1953)
9. 2:16 Bultmann (1947); Schmithals (1975, marginal note)
10. 3:9-20 Hawkins (1941)
11. 3:10-18 Weisse (1833); Pierson and Naber (1886); Michelsen (1887);  Van Manen (1880); Schenke and Fischer (1978: 142f.);
12. 3:12-18 O'Neill (1975)
13. 3:23-26 Hawkins (1941)
14. 3:24/25-26 Talbert (1966)
15. 4:1 & 4:17b Schenke and Fischer (1978: 144)
16. 4:1 Weisse
17. 5:1 Schmithals (1975)
18. 5:5-10 Schenke and Fischer (1978: 144)
19. 5:6-7 Keck (1979: 237-38); Schmithals (1975, marginal note)
20. 5:7 Semler (1810)
21. 5:12-21 Barnes (1947: 239); O'Neill (1975: 96-107)
22. 6:17b Bultmann (1947); Schmithals (1975, marginal note)
23. 7:25b Bultmann; Schmithals (1975, marginal note). 
24. 8:1 Weisse, Bultmann (1947); Schmithals (1975, marginal note)
25. 8: 9-11 François Refoulé(1987)
26. 10:17 Bultmann (1947); Schmithals (1975, marginal note).
27. 13:1-7 Pallis (1920); Loisy (1922: 104, 128; 1935: 30-31; 1936: 287);  Windisch (1931); d. Barnikol (1931b); Eggenberger (1945); Barnes (1947: 302, possibly); Kallas (1964-65); Munro (1983: 56f., 65-67); Sahlin (1953); Bultmann (1947). 
28. Ch15,16 முழுவதும் Baur (1836b; 1849; 1845); Schwegler (1846: I, 296); Zeller (1854: 488); Volkmar (1856; 1875: xvff., 129ff.); Lucht (1871); Ryder (1898); Smith (1901); Scholten (1876); Davidson (1882: 125-28; 1894: 12631)
29. 16:17-20 Volkmar (1875); Pfleiderer (1887: 145).
30. 16:17-18 Loisy (1935: 29)
31. 16:24 Cranfield; Mangold (1884)
32. Ch16 முழுவதும் Weiss (1872); Hawkins (1941); Knox (1954); Friedrich (1961).
33. 16:25-27 Reiche (1833); Krehl (1845); Delitzsch (1849); Davidson (1868: 134-37; 1882: 118-21; 1894: 120-23); Lucht (1871); Hilgenfeld (1872: 469ff.; 1875: 326f.); Pfleiderer (1873: 314); Seyerien (1874); Volkmar (1875); Schultz (1876); Mangold (1884: 44-81); Bruckner; Lipsius; von Weizsacker (1886: 334); Jiilicher (1894: 71); Corssen (1909: 1-45); Lake (1914: 359f.); Wendland (1912: 351); Weiss (1917: 534); Burton (1921: 509); Loisy(1922: 106, 134); Harnack (1931); Barnikol (1931a; 1933: 116-48); Dodd (1932: 245); Manson (1948); Gaugler (1945); Zuntz (1953); Michel (1955: 19f.); Barrett (1958: 10-13,286); Friedrich in RGG3, V, 1138; Beare (1962b: 112f.); Marxsen (1964); Fuller (1966: 56); Fitzmyer in Brown, Fitzmyer and Murphy (eds) (1990: 292); Bornkamm (1969); Lohse (1972); Kasemann (1973); Cranfield (1975: 6-9); Schmithals (1975); Vielhauer (1975: 187f.); Gamble (1977: 10710, 123f.); Schenke and Fischer (1978: I, 136f.); Elliot (1981); Dunn (1988: 912f.); Ziesler (1989: 25); Donfried (1970); Kamiah (1956)


வ.  எண் இடைச்செருகல் என்று கூறப்படும் வசனம் இடைச்செருகல் என்று கூறும் புதிய ஏற்பாட்டு அறிஞர்
1. 1 கொரிந்தியர் முழுவதும் Bauer; Pierson; Loman
2. 1:2 Weiss (1917: 534); Gilmour (1962: 688).
3. 1:2b Weiss (1910: xli, 3f.); Dinkler ; Schmithals (1965: 188f;  197~258);Schenke(1978:92f).
4. 1:12 Weiss; Heinrici (1880); Pearce in Bowyer (1812); Goguel (1926: IV,  2); Michaelis.
5. 1:16 Holsten (1880: 461 n.9, not asserted absolutely)
6. 2:6-16 Widmann (1979), E. Earle Ellis(1974)
7. 4:6 Straatman; van de Sande Bakhuyzen (1880)
8. 4:17 Weiss (1910: xli, 120); Gilmour; Dinkler
9. 6:3 Holsten
10. 7:8 Holsten
11. 7:11ab Holsten
12. 7:14 Holsten
13. 7:17 Weiss (1910: xli); Gilmour; Dinkler. 
14. 7:17-24 Munro (1983: 80f.)
15. 7:36-38 Holsten; Barnes (1947: 229)
16. 8 ch. முழுவதும் Munro (1983)
17. 10 ch. முழுவதும் Barnes (1947)
18. 10:1-22 Lamar Cope(1990)
19. 10:4bHolsten
20. 10:13 Clemen; Pierson and Naber (1886: 81f.).
21. 10:17 Clemen.
22. 10:23-11:1 Munro 1983: 75-79
23.10:29b-30 Hitzig; Zuntz. 
24. 11:2-16 Loisy (1935: 60f., 73f.,); Walker (1975; 1983; 1989); Cope (1978); Trompf (1980); Munro (1983: 69-75).
25. 11:5b-6 Holsten
26. 11:10 Holsten; Lang; Wassenbergh (1815: 66); Straatman; Baljon; Owen; Lotze; Neander; Baur (1845: 636).
27. 11:11Straatman
28. 11:11f Weiss (1910: xli).
29. 11:13-15 Holsten
30. 11:16 Straatman; Prins; Baljon; Weiss (1910: xli, 276f.); Gilmour; Dinkler
31. 11:23-28 Straatman; Bruins; Lehman and Fridrichsen (1922); Loisy (1922: 43,67; 1935: 69-74). J. Magne (1 Corinthians 11:23-25)
32. 11:30 Prins.
33. 13 ch. முழுவதும் Lehmann and Fridrichsen; Loisy (1922: 43,67); (1935: 69-74); Barnes(1947: 230); Titus (1959); Schenke (1978).
34. 14:33-38, 14:33-38,
35. 14:33 Weiss (1910: xli); Gilmour; Dinkier; Loisy (1935: 73).
36. 14:33b-35 Kummel; Straatman; van de Sande Bakhuyzen (1880); Holsten (1880: 495-97); van Manen (1880: 284-85); Genootsch (1880: 259f.); Schmiedel (1891); Weinel; Weiss (1910: 342); Allworthy (1917: 9597); Dinkier; Loisy (1922: 43; 1933: 20 n.6; 1948: 363; 1961: 287); Leipoldt (1952); Zuntz (1953); Wendland (1954); Conzelmann (1969: 289f.); Ruef (1971: 154£.); Scroggs (1972); Munro (1973; 1983: 15f.); Jewett (1978); Perrin and Duling (1982: 180)
37. 14:34-35 Heinrici; Pfleiderer (1887: 169n); Easton (1947); Fascher  (1953); Leipoldt (1954); Schweizer (1959: 152); Fitzer (1963); Bittlinger  (1967); Barrett (1987: 699-708); Murphy-O'Connor (1979: 81-84). Cf. also  Clemen (1894: 49f.)
38. 15 ch. முழுவதும் Barnes (1947: 228)
39. 15:3-11 Straatman, van Manen, Teylers
40. 15:5b Holsten
41. 15:21f.,42-49 O'Neill (1975: 96)
42. 15:56 Friedrich Wilhelm Horn
43. 16:22Schmiedel; Baljon (1884); Holsten (1880: 450f.); Rovers; Bruins

3.2 கொரிந்தியர்:

வ.  எண் இடைச்செருகல் என்று கூறப்படும் வசனம் இடைச்செருகல் என்று கூறும் புதிய ஏற்பாட்டு அறிஞர்
1. 1.1b Schmithals; Schenke and Fischer (1978: 112).
2. 3:12-18  Halmel (1904).
3. 4:3, 4,6, Halmel (1904)
4. 4:4, Baljon; Wassenbergh
5. 5:16 Schmithals; Giittgemanns (1966: 290ff.).
6. 6:14-7:1 Schrader (1835: IV, 300f.); Ewald (1857: 12, 282f.); Straatman (1863: I, 138-46); Baljon; Holsten (1868: 386); Michelsen (1873); Rovers (1874: I, 137); van de Sande Bakhuyzen (1880: 266f.); Davidson (1882: 60; 1894: 63); Krenkel (1890: 332); Halmel (1904: 115-29); Jiilicher and Fascher (1931: 87f.); Groussow (1951a, 1951b); Dinkier in RGG3 IV, 18,22; Fitzmyer (1961); Gnilka (1968); Georgi (1986/7: 21-22); Marxsen (1964); Braun (1966: 201-204); Fuller (1966: 41-42); Wendland (1968); Rissi (1969: 7980); Klinzing (1971: 172-82); Dahl (1972: 62-69); Betz (1973); Gunther (1973: 308-13); Perrin and Duling (1982: 182); Vielhauer (1975: 153); Bultmann (1976: 169); Schenke and Fischer (1978: 110f., 117f.); Lang; Findeis (1983: 66); Klauck (1988: 60-61); Wiirzburg (1988: 60-61); Kuhn (1951-52; 1954); Jewett (1978: 433 n.4).
7. 11:32-12:1 Michelsen (1873).
8. 12:2 Matthes; Rovers (1870); Scholten (1876).
9. 13:13 Burton (1921: 509); Goodspeed (1945; 57); Furnish (1984: 587); Barrett

4.கலாத்தியர்:

வ.  எண் இடைச்செருகல் என்று கூறப்படும் வசனம் இடைச்செருகல் என்று கூறும் புதிய ஏற்பாட்டு அறிஞர்
1. கலாத்தியர் முழுவதும் Bauer (1850-52); Loman (1882); Pierson (1878); Pierson and Naber (1886: 26f.); Steck (1888); van Manen; Friedrich (1891); Kalthoff (1904); Johnson (1887); and Robertson. O'Neill (1972) பெரும் இடைச்செருகல் இருப்பதாக கூறுகிறார்
2. 2:3-8Warner (1951).
3. 2:7b-8Straatman, van Manen (1890: 513ff.); V6lter (1890: 90); Barnikol (1931a); Schenke and Fischer (1978: 79-81); O'Neill (1972). 
4. 2:18Schmithals (1973)
5. 3:16bBurton (1921: 509f.)
6. 3:19aGaston (1982); Eshbaugh (1979); and Walker (1988)
7. 3:20Burton (1921: 190-92
8. 4:25aSchmithals (1973); Schenke; O'Neill (1975); Bentley (1962); Mace(1729, who omits it from Sinaiticus); Mill; Schott; Prins (1872); Naber (1878, "insertion work of an ass"); Holsten (1880: 171f.); van de Sande Bakhuyzen (1880); Baljon (1889: 185); Thijm (1890); Cramer (1890);  Clemen; Burton (1921: 259f.).
9. 5:7Scott
10. 5:7bSemler; Koppe; Holsten (1880: 175)
11. 5:16-24Sturdy

5.பிலிப்பியர்:

வ.  எண் இடைச்செருகல் என்று கூறப்படும் வசனம் இடைச்செருகல் என்று கூறும் புதிய ஏற்பாட்டு அறிஞர்
1. பிலிப்பியர் முழுவதும்Baur and Schwegler ,Volkmar and Hitzig Davidson (1882: 164)
2. 1.1bBruckner; Volter (1892); Schmiedel (1902); Moffatt (1918: 171); Riddle and Hutson (l946: 123); Marxsen (1964: 57); Fischer (1973); Schenke and Fischer (1978: 126). 
3. 2:6-11Loisy (1935: 91f.; 1948: 364); Bruckner (1885; 1890: xix, 219ff.); but cp. Marxsen (l969: 22-37); Holsten (1876); Barnikol (1932b); Barnes (1947: 244), Berlage (l880: 80ff.); Schmiedel
4. 3:1-4.9Schrader apud Davidson (1882: 158).
5. 3:1Clemen.
6. 3:2,5Weisse
7. 3:9Wassenbergh
8. 3:10fSchmiedel
9. 3:18Laurent
10. 3:20Bruckner; Clemen
11. 4:2fEwald
12. 4:3Schenke

6.1 தெசலோனிக்கேயர்:

வ.  எண் இடைச்செருகல் என்று கூறப்படும் வசனம் இடைச்செருகல் என்று கூறும் புதிய ஏற்பாட்டு அறிஞர்
1. 1:2-10Fuchs (1963-64)
2. 1:9-10Friedrich (1965)
3. 2:1-16Loisy (1935: 85)
4. 2:13Wassenbergh
5. 2:14-16Van der Vies; Ritschl (1847); Rodrigues (1876); Pierson and Naber; Spitta (1889: 501; 1901: 190); Schmiedel (1891: 17); Pfleiderer; Teichmann (1896); Mansfield; Drummond; Loisy (1922: 135, 139; 1935: 85); Goguel; Bammel (1959); Eckhart (1961); Schmithals (1965: 89ff.).
6. 2:15fKoster (1980); Schmidt (l983).
7. 3:2b-5aLoisy (l922: 135, 139f.)
8. 3:5Clemen; von Dobschutz; Eckhart
9. 4:1-8, 10b-12Eckhart
10. 4:1-12Munro (1983: 86-88)
11. 4:1Schenke and Fischer (l978: 70); Friedrich (1973; 1976); Harnisch (1973); Eckhart (1961); Hitzig (1856); Schmiedel (l891: 34); Weiss; Schenke and Fischer (1978: 1, 70)
12. 5:1-11Friedrich (1965)
13. 5:12-22 and 5:27Eckhart

7.பிலேமோன்:

வ.  எண் இடைச்செருகல் என்று கூறப்படும் வசனம் இடைச்செருகல் என்று கூறும் புதிய ஏற்பாட்டு அறிஞர்
1. 5-6Bruckner
2. 19aZuntz
    

    மேலே நாம் குறிப்பிட்டுகாட்டிய பட்டியல் பவுலிய கடிதங்களில் ஆதாரப்பூர்வமானவையாக கருதப்படும் 7 கடிதங்களில் எவ்வளவு இடைச்செருகல்கள் உள்ளன என்பதையும், அது குறித்து கிறித்தவ அறிஞர்களே கூறி வருகின்றனர் என்பதையும் இங்கு தோழுரித்து காட்டியுள்ளோம். மேலும் தனது வாதமான, கிறித்தவ நம்பிக்கைக்கு மாற்றமாக புதிய ஏற்பாடு உருவாக்கத்தின் காலத்தை பிற்படுத்தியதாக நிறுவவே  J.V.M. ஸ்டர்டி அவர்கள் இந்த நீண்ட அட்டவனையை தயார் படுத்தி உள்ளார். இந்த ஆக்கத்தை REDRAWING THE BOUNDARIES: The Date of Early Christian Literature by J.V.M.Sturdy என்று தலைப்பிட்டு Jonathan Knight என்ற அறிஞர் வெளியிட்டுள்ளார்.   பவுலிய கடிதத்தில் இடைச்செருகல்கள் மலிந்து இருக்கிறது என்பது நவீன கருத்தல்ல. இது பல கிறித்தவ புதிய ஏற்பாட்டு அறிஞர்கள் அறிந்து ஒத்துக்கொண்ட பரம ரகசியம்????. இந்த இடைச்செருகல்களின் தீவிரத்தன்மை குறித்து கேம்பிட்ஜ் பல்கலைகழகத்தின் ஆர்மண்ட் இறையியல் கல்லூரி பேராசிரியராகிய J. C. O'NEILL பின்வருமாறு கூறுகிறார்:
        These conclusions are painful for us to contemplate for, though they do little to diminish the worth of the great classical detailed commentaries, they shatter the foundation of all the systems built on a rock called Paul. It is painful to have to admit that we cannot know Paul until we set aside the glosses and interpolations, and more painful to have to admit that passages we once regarded as keys to the apostle's thought might be later additions. But we can do nothing else, for that is where the evidence points.  
    இந்த முடிவுகள் நாம் சிந்திக்க மிகவும் வேதனையானவை, ஏனென்றால் அவை சிறந்த தொன்மையான விரிவான வர்ணனைகளின் மதிப்பைக் குறைக்கவில்லை என்றாலும், அவை பவுல் என்ற பாறையின் மீது கட்டப்பட்ட அனைத்து அமைப்புகளின் அடித்தளத்தையும் சிதைத்துவிடும். வியாக்கியானங்களையும் இடைச்செருகல்களையும் ஒதுக்கி வைக்கும் வரை பவுலை அறிய முடியாது என்பதை ஒப்புக்கொள்வது வேதனையானது. மேலும் ஒரு காலத்தில் அந்த அப்போஸ்தலரின் சிந்தனையின் திறவுகோலாக நாம் கருதிய பகுதிகள் பின்னர் சேர்க்கப்படவை என்பதை ஒப்புக்கொள்வது மிகவும் வேதனையானது. ஆனால் நம்மால் வேறு எதுவும் செய்ய முடியாது, ஏனென்றால் அதுதான் ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. (P.No.386, Glosses and Interpolations in the Letters of St Paul by J. C. O'NEILL, STUDIA EVANGELICA VOL. VII, Papers presented to the Fifth International Congress on Biblical Studies held at Oxford, 1973 Edited by ELIZABETH A. LIVINGSTONE)

    அதாவது J. C. ஓ’நீல் அவர்களது கருத்தின் படி பவுலிய அடித்தளத்தில் அமைக்கப்பட்ட அனைத்தும், இடைச்செருகல்கள் பவுலிய கடிதங்களில் உள்ளன என்பதை ஏற்பதினால் சரிந்துவிழுந்துவிடும் என்று கூறுகிறார். மேலும் இந்த இடைச்செருகல்கள் பவுல் குறித்து உண்மையான புரிதலை நம்மால் எட்டமுடியாமல் தடுக்கிறது என்றும் கூறுகிறார். அந்த அளவிற்கு பவுலிய கடிதங்களில் இடைச்செருகல்கள் உள்ளே நுழைந்துள்ளது என்பதை இதன் மூலம் J. C. ஓ’நீல் சொல்லாமல் சொல்கிறார்.   மேலும் இப்படி உள்ளே நுழைந்த இடைச்செருகல்களை ஏன் களையெடுக்க இயலவில்லை அல்லது கூடாது என்பதை வில்லியம் O. வாக்கர் தனது நூலில் பின்வருமாறு தொகுத்து தருகிறார்.   

     In short, most of the writings comprising the New Testament exhibit non-Pauline ideational features and some even anti-Pauline features, some of these writings are attributed to people other than their actual authors, most are of non-Pauline and indeed unknown origin, and some contain multiple strata of material. Moreover, all of this is well known, not only by New Testament scholars but also by the graduates of reputable theological seminaries. So far as I am aware, however, no responsible scholar or ecclesiastical leader has, for this reason, called for the removal of any of these writings from the New Testament Canon. 

    Indeed, the Church has long since decided, de facto if not de jure, that neither the presence of multiple strata of material, non-Pauline and indeed unknown and even 'false' authorship, nor non-Pauline and even anti-Pauline ideas constitutes a necessary bar to inclusion of a document within the Canon. If this is the case regarding entire documents, why should it not also apply to specific passages within documents? In principle, the recognition that 1 Cor. 14.34-35, for example, is a non- Pauline interpolation is not so different from the acknowledgment that the Gospel according to Luke is composed of various strata of material, that the Gospel according to John is of unknown authorship, that the Letter to the Ephesians is pseudonymous, and that the Letter of James is non-Pauline and even anti-Pauline in flavor.8 If these documents are to be retained in the New Testament Canon, what possible basis could there be for the removal of 1 Cor. 11.34-35 or other non-Pauline interpolations? 

    It should also be noted that when the early Church eventually arrived at a consensus regarding the limits of the Canon, the various documents were included in their final, 'canonical' form, not in some putative earlier or 'original' form and not with the proviso that any parts later judged to be secondary were to be removed. Thus, any non-Pauline interpolations that might then have appeared in the Pauline letters became a part of the Canon of Christian Scripture. (P.No.240-241, Interpolations in the Pauline Letters William O. Walker, Jr)

    சுருக்கமாக, புதிய ஏற்பாட்டை உள்ளடக்கிய பெரும்பாலான எழுத்துக்கள் பவுலின்  சிந்தனை அல்லாத அம்சங்களையும், மேலும் சில பவுலியத்திற்கு எதிரான அம்சங்களையும்   வெளிப்படுத்துகின்றன, இந்த எழுத்துக்களில் சில அவற்றின் உண்மையான ஆசிரியர்களைத் தவிர வேறு நபர்களுக்கு உரியதாக கூறப்படுகிறது, பெரும்பாலானவை பவுலியம்  அல்லாதவை மற்றும் உண்மையில் அறியப்படாத தோற்றம் கொண்டவை, மேலும் சில, பல அடுக்கு மூலங்களைக் கொண்டுள்ளன. மேலும், இவை அனைத்தும் புதிய ஏற்பாட்டு அறிஞர்களால் மட்டுமல்ல, புகழ்பெற்ற இறையியல் செமினரிகளில் பட்டம் பெற்றவர்களாலும் நன்கு அறியப்பட்டவை. எவ்வாறாயினும், நான் அறிந்த வரையில், எந்தவொரு பொறுப்புள்ள அறிஞரும் அல்லது திருச்சபைத் தலைவரும், இந்த காரணத்திற்காக, புதிய ஏற்பாட்டு நியதியிலிருந்து இந்த எழுத்துக்கள் எதையும் அகற்றுமாறு கோரவில்லை. 

    உண்மையில், பல அடுக்கு (ஆவணங்களை) கொண்டிருப்பதும், பவுலிய அல்லாத மற்றும் உண்மையில் அறியப்படாத மற்றும் 'பொய்யான' ஆசிரியத்துவம் கொண்டிருப்பதும், அல்லது பவுலிய அல்லாத மற்றும் பவுலிய எதிர்ப்பு கருத்துக்களை கொண்டிருப்பதும் , , திருச்சபை நீண்ட காலமாக முடிவு செய்துள்ளதின் படி நடைமுறையில் இல்லையென்றாலும், நியதிக்குள் ஒரு ஆவணத்தை சேர்ப்பதற்கு அவை தடையாக இருக்கவில்லை. முழு ஆவணங்கள் சம்பந்தமாக இப்படி நிலை இருந்தால், ஆவணங்களில் உள்ள குறிப்பிட்ட பத்திகளுக்கும் ஏன் இது பொருந்தக்கூடாது? கொள்கையளவில், எடுத்துக்காட்டாக, 1 கொரி. 14.34-35, பவுலின் அல்லாத இடைச்செருகலை அங்கீகரித்தல் என்பது, லூக்காவின் சுவிசேஷம் பல்வேறு அடுக்குப் ஆவணங்களால் ஆனது, யோவானின் சுவிசேஷம் அறியப்படாத எழுத்தருடையது, எபேசியர்களுக்கான நிருபம் என்பது புனைவு, யாக்கோபின் நிருபம்  பவுலிய அல்லாத மற்றும் சுவையில் பவுலியத்திற்கு எதிரானது ஆகியவற்றையெல்லாம் ஒப்புக்கொள்வதில் இருந்து வேறுபட்டதல்ல. இந்த ஆவணங்கள் புதிய ஏற்பாட்டு நியதியில் தக்கவைக்கப்பட வேண்டுமென்றால், 1 கொரி. 11.34-35 அல்லது மற்ற பவுலிய அல்லாத இடைச்செருகல்களை அகற்றுவதற்கு என்ன அடிப்படை இருக்க முடியும்?

ஆரம்பகால திருச்சபை இறுதியில் நியதியின் வரம்புகள் குறித்து ஒருமித்த கருத்துக்கு வந்தபோது, பல்வேறு ஆவணங்கள் அவற்றின் இறுதி, 'நியமன' வடிவத்தில் சேர்க்கப்பட்டன, சிலவகையான முந்தைய அல்லது 'அசல்' வடிவத்தில் சேர்க்கப்படவில்லை என்பதையும், பிற்பாடு இரண்டாம் நிலை என்று தீர்மானிக்கப்படும் எந்தப் பகுதியும் அகற்றப்படும் என்ற நிபந்தனையுடனும் சேர்க்கப்படவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, பவுலிய கடிதங்களில் தோன்றிய பவுலிய அல்லாத இடைச்செருகல்கள் கிறிஸ்தவ வேதாகமத்தின் நியதியின் ஒரு பகுதியாக மாறியது. (P.No.240-241, Interpolations in the Pauline Letters William O. Walker, Jr)

    வில்லியம் O. வாக்கர் பொருத்தவரை மொத்த புதிய ஏற்பாடே இடைச்செருகல்களாலும், அட்ரஸ் இல்லாதவர்களாலும் புனையப்பட்டு எழுதப்பட்ட நூல். அதில் ஒன்றை தூக்கினால் அதுவே மொத்த புதிய ஏற்பாட்டிற்கும் சாவு மணி அடிக்க போதுமானதாய் மாறிவிடும். எனவே அதில் எத்துனை புனைவுகளும், இட்டுக்கட்டலும் இருந்தாலும், அதனை அறிஞர்கள் சுட்டிக்காட்டி பிரித்து காட்டினாலும், புதிய ஏற்பாட்டின் நியமத்தை தக்கவைத்தே ஆக வேண்டும் என்ற அவல நிலை கிறித்தவ உலகில் இருப்பதை பட்டவர்த்தனமாக ஒத்துக்கொள்கிறார். மேலும் இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட புதிய ஏற்பாட்டின் நூல்கள் எதுவும் அதன் முந்தைய அசல் வடிவில் கிறித்தவ திருச்சபைக்கு கிடைக்கவில்லை என்பதையும் அவர் சுட்டி காட்டுகிறார். பவுலிய கடிதங்கள் மொத்தம்  13ல் 6 புனைய பட்டவை. மீதம் இருக்கும் 7 இடைச்செருகல்களால் பாழாக்கப்பட்டுள்ளதை நமது கட்டுரை தெளிவாக கூறுகிறது.