بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم
கிறித்தவ வேதமான புதிய ஏற்பாட்டின் நம்பகத்தன்மை குறித்தும் அதன் பாதுகாப்பு குறித்தும், வரலாற்று தரவுகளை அடிப்படையாக கொண்டு தொடர் கட்டுரையின் வாயிலாக விமர்சனங்களை முன்வைத்து வருகிறோம். புதிய ஏற்பாட்டின் நம்பகத்தன்மையின் அவல நிலையை தோழுரித்து வருகிறோம். அல்லாஹு அக்பர். அந்த வரிசையில் அடுத்ததாக பவுலின் கடிதங்கள் குறித்து காண இருக்கிறோம். கிறித்தவ மிசனரிகள் தங்களது புதிய ஏற்பாட்டில் பவுல் என்ற மனிதரின் பல கடிதங்களை சேர்த்து வைத்துக்கொண்டு, புதிய ஏற்பாட்டை தங்களது வேதம் என்று கூறியும் வருகின்றனர். உண்மையில் இவர்கள் கூறுவதுபோல் இந்த கடிதங்கள் அனைத்தும் பவுலால் எழுதப்பட்டதா என்பதையும் அது எவ்வாறு தொகுக்கப்பட்டது என்பதையும், அதற்கு கிறித்தவ அறிஞர்கள் முன்வைக்கும் அனுமானக் கோட்பாடுகள் குறித்தும் இனி ஆராய இருக்கிறோம் இன் ஷா அல்லாஹ்.
✅பவுலிய கடிதங்கள் கூறும் அதன் எழுத்தர்கள்
✅வரலாற்று ஆவணங்களில் பவுலின் கடிதங்கள்(Explicit References to Pauline Epistles)
✅பவுலிய கடித தொகுப்பின் அனுமானக் கோட்பாடுகள்
✅பவுலின் கடிதங்கள்:
கிறித்தவ உலகம், புதிய ஏற்பாட்டின் பின்வரும் நூல்களை பவுலின் கடிதங்களாக கூறிவருகிறது.
1) ரோமர், 2) 1 கொரிந்தியர் 3) 2 கொரிந்தியர் 4) கலாத்தியர் 5) எபேசியர் 6) பிலிப்பியர் 7) கொலோசெயர் 8) 1 தெசலோனிக்கேயர் 9) 2 தெசலோனிக்கேயர் 10) 1 தீமோத்தேயு 11) 2 தீமோத்தேயு 12) தீத்து 13) பிலேமோன்
மேலே கூறப்படும் கடிதங்கள் அல்லாமல் எபிரேயரும் பவுலின் கடிதமே என்று சில கிறித்தவ அறிஞர்கள் கூறிவருகின்றனர்.
✅பவுலிய கடிதங்கள் கூறும் அதன் எழுத்தர்கள்:
1)ரோமர்:
இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும், அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்பட்டவனும், தேவனுடைய சுவிசேஷத்திற்காகப் பிரித்தெடுக்கப்பட்டவனுமாகிய பவுல், ரோமாபுரியிலுள்ள தேவப்பிரியரும் பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களுமாகிய அனைவருக்கும் எழுதுகிறதாவது; (ரோமர் 1:1-2)
இந்த நிருபத்தை எழுதின தெர்தியுவாகிய நான் கர்த்தருக்குள் உங்களை வாழ்த்துகிறேன். (ரோமர் 16:22)
2)1 கொரிந்தியர்:
தேவனுடைய சித்தத்தினாலே இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்பட்டவனாகிய பவுலும், சகோதரனாகிய சொஸ்தெனேயும், கொரிந்துவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களாயுமிருக்கிற தேவனுடைய சபைக்கும், எங்களுக்கும் தங்களுக்கும் ஆண்டவராயிருக்கிற நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை எங்கும் தொழுதுகொள்ளுகிற அனைவருக்கும் எழுதுகிறதாவது: (1 கொரிந்தியர் 1:1-2)
3)2 கொரிந்தியர்
தேவனுடைய சித்தத்தினாலே இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுலும், சகோதரனாகிய தீமோத்தேயும், கொரிந்துபட்டணத்திலுள்ள தேவனுடைய சபைக்கும், அகாயாநாடெங்குமுள்ள எல்லாப் பரிசுத்தவான்களுக்கும் எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. (2 கொரிந்தியர் 1:1-2)
4)கலாத்தியர்
மனுஷராலுமல்ல, மனுஷன் மூலமாயுமல்ல, இயேசுகிறிஸ்துவினாலும், அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின பிதாவாகிய தேவனாலும், அப்போஸ்தலனாயிருக்கிற பவுலாகிய நானும், என்னுடனேகூட இருக்கிற சகோதரரெல்லாரும், கலாத்தியா நாட்டிலுள்ள சபைகளுக்கு எழுதுகிறதாவது: (கலாத்தியர் 1:1-2)
5) எபேசியர்
தேவனுடைய சித்தத்தினாலே இயேசுகிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனாகிய பவுல், எபேசுவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் விசுவாசிகளாயிருக்கிற பரிசுத்தவான்களுக்கு எழுதுகிறதாவது (எபேசியர் 1:1)
6)பிலிப்பியர்
இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரராகிய பவுலும் தீமோத்தேயும், பிலிப்பி பட்டணத்தில் கிறிஸ்து இயேசுவுக்குள்ளான பரிசுத்தவான்கள் அனைவருக்கும், கண்காணிகளுக்கும், உதவிக்காரருக்கும் எழுதுகிறதாவது: (பிலிப்பியர் 1:1)
7)கொலோசெயர்
தேவனுடைய சித்தத்தினாலே இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுலும், சகோதரனாகிய தீமோத்தேயும், கொலோசெ பட்டணத்தில் கிறிஸ்துவுக்குள் பரிசுத்தவான்களும் விசுவாசிகளுமாயிருக்கிற சகோதரர்களுக்கு எழுதுகிறதாவது: (கொலோசெயர் 1:1-2)
8)1 தெசலோனிக்கேயர்
பவுலும், சில்வானும், தீமோத்தேயும், பிதாவாகிய தேவனுக்குள்ளும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள்ளும் இருக்கிற தெசலோனிக்கேயர் சபைக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.( 1 தெசலோனிக்கேயர் 1:1)
9)2 தெசலோனிக்கேயர்
பவுலும், சில்வானும், தீமோத்தேயும், நம்முடைய பிதாவாகிய தேவனுக்குள்ளும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள்ளும் இருக்கிற தெசலோனிக்கேயர் சபைக்கு எழுதுகிறதாவது: (2 தெசலோனிக்கேயர் 1:1)
10)1 தீமோத்தேயு
நம்முடைய இரட்சகராயிருக்கிற தேவனும், நம்முடைய நம்பிக்கையாயிருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் கட்டளையிட்டபடியே, இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாயிருக்கிற பவுல், விசுவாசத்தில் உத்தம குமாரனாகிய தீமோத்தேயுவுக்கு எழுதுகிறதாவது: (1தீமோத்தேயு 1:1-2)
11)2 தீமோத்தேயு
கிறிஸ்து இயேசுவினால் உண்டாயிருக்கிற ஜீவனைப்பற்றிய வாக்குத்தத்தத்தின்படி, தேவனுடைய சித்தத்தினாலே, இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாயிருக்கிற பவுல், பிரியமுள்ள குமாரனாகிய தீமோத்தேயுவுக்கு எழுதுகிறதாவது: (2தீமோத்தேயு 1:1-2)
12) தீத்து
தேவனுடைய ஊழியக்காரனும், இயேசுகிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனுமாகிய பவுல், பொதுவான விசுவாசத்தின்படி உத்தம குமாரனாகிய தீத்துவுக்கு எழுதுகிறதாவது: (தீத்து 1:1)
13)பிலேமோன்
கிறிஸ்து இயேசுவினிமித்தம் கட்டப்பட்டவனாயிருக்கிற பவுலும், சகோதரனாகிய தீமோத்தேயும், எங்களுக்குப் பிரியமுள்ளவனும் உடன்வேலையாளுமாயிருக்கிற பிலேமோனுக்கும், பிரியமுள்ள அப்பியாளுக்கும், எங்கள் உடன் போர்ச்சேவகனாகிய அர்க்கிப்புவுக்கும், உம்முடைய வீட்டிலே கூடிவருகிற சபைக்கும் எழுதுகிறதாவது: (பிலேமோன் 1:1-2)
14)எபிரேயர்:
எந்த குறிப்பும் இல்லை.
மேலே கூறப்பட்ட சுயசாட்சியங்கள் ஒரு விஷயத்தை தெளிவாக கூறுகின்றன. அதாவது பவுலின் கடிதங்கள் என்று கூறப்படும் 14ல், 9 கடிதங்கள் பவுலால் மட்டும் எழுதப்படவில்லை. மாறாக பவுலோடு சிலரும் சேர்ந்து எழுதிய கடிதங்கள்தான் இவை எல்லாம் என்பதை காட்டுகிறது. 1 யாரால் எழுதப்பட்டது என்று கூறவில்லை.
வ. எண் |
கடிதம் | எழுத்தர்கள் |
---|---|---|
1. | ரோமர் | பவுல் மற்றும் தெர்தியு |
2. | 1 கொரிந்தியர் | பவுல் மற்றும் சொஸ்தெனேயு |
3. | 2 கொரிந்தியர் | பவுல் மற்றும் தீமோத்தேயு |
4. | கலாத்தியர் | பவுல் மற்றும் சகோதரர்கள் |
5. | எபேசியர் | பவுல் |
6. | பிலிப்பியர் | பவுல் மற்றும் தீமோத்தேயு |
7. | கொலோசெயர் | பவுல் மற்றும் தீமோத்தேயு |
8. | 1 தெசலோனிக்கேயர் | பவுல் சில்வான், மற்றும் தீமோத்தேயு |
9. | 2 தெசலோனிக்கேயர் | பவுல் சில்வான், மற்றும் தீமோத்தேயு |
10. | 1 தீமோத்தேயு | பவுல் |
11. | 2 தீமோத்தேயு | பவுல் |
12. | தீத்து | பவுல் |
13. | பிலேமோன் | பவுல் மற்றும் தீமோத்தேயு |
14. | எபிரேயர் | அறியப்படவில்லை |
பவுலின் கடிதங்களாக மேலே கூறப்படும் 14ல், தற்கால கிறித்தவ அறிஞர்களில் பெரும்பான்மையினர் பின்வரும் 7 கடிதங்களை மட்டுமே எந்த சர்ச்சையும் இல்லாமல் பவுலின் கடிதங்கள் என்று ஏற்கின்றனர். அது குறித்து The Pauline Canon Edited by Stanley E. Porter பின்வருமாறு கூறுகிறது:
1. There are 'undisputed' letters—the homologoumena. All of these are found in the New Testament. Modern scholars are agreed that the following seven letters were written by Paul—Romans, 1 and 2 Corinthians, Galatians, Philippians, 1 Thessalonians and Philemon.2. There are 'disputed' Pauline letters—the antilegomena. A majority of modern scholars argue that all or some of the remaining six letters of the New Testament Pauline corpus—Ephesians, Colossians, 2 Thessalonians, the Pastorals—are not genuine Pauline letters, and that they are pseudonymous. These might be termed New Testament Pauline antilegomena. A minority of modern scholars contend that all thirteen New Testament letters ascribed to Paul are genuine.3. There are 'spurious' letters, nötha- All Pauline letters outside the New Testament canon belong to this category. No modern scholar argues that one or more of these letters are genuine. (The Pauline Canon Edited by Stanley E. Porter P.No.137)
இப்படி பவுல் மட்டுமே எழுதிய கடிதங்களான எபேசியர், 1 மற்றும் 2 தீமோத்தேயு, தீத்து ஆகியவை சர்ச்சைக்கு உரிய கடிதங்களாக கிறித்தவ அறிஞர்களில் பெரும்பான்மையினர் கூறுகின்றனர். சர்ச்சை இல்லாத அந்த 7 கடிதங்களான ரோமர், 1 மற்றும் 2 கொரிந்தியர், கலாத்தியர், பிலிப்பியர், 1 தெசலோனிக்கேயர், பிலேமோன் ஆகிய கடிதங்களின் எழுத்தர்களான பவுல் அல்லாத மற்றவர்கள் அனைவரும் பவுலின் எழுத்தர்கள் என்பது கிறித்தவ உலகின் அனுமானம். அதாவது பவுல் சொல்ல சொல்ல, அவரது கூட்டாளிகளால் எழுதப்பட்டது என்பது கிறித்தவ உலகின் வாதம். எந்த கடித பரிமாற்ற வழக்கிலும் இல்லாத ஒரு நடைமுறையை கிறித்தவ உலகம் கூறுகிறது. இன்றும் சரி, முற்காலங்களிலும் சரி முன்னவர் சொல்ல சொல்ல எழுத்தர்கள் எழுதினாலும், அந்த கடிதம் முன்னவரின் பெயரால் அழைக்கப்படுவதுதான் வழக்கம். அதற்கு மாறாக எழுத்தர் பெயரை உள்ளே சொருகினால், எழுத்தரின் கருத்துக்களும் அதில் உள்ளது என்பதுதான் பொருள். இப்படி கிறித்தவர்களின் நம்பிக்கைக்கு எதிரான தகவல்களைத்தான் இந்த கடிதங்களின் உள்ளடக்கம் நமக்கு தருகிறது. பவுலின் கடிதங்கள் குறித்து கிறித்தவ திருச்சபை பிதாக்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை முதலில் பார்ப்போம்.
✅வரலாற்று ஆவணங்களில் பவுலின் கடிதங்கள் (Explicit References to Pauline Epistles):
வரலாற்று ஆவணங்களை பொருத்தவரை கி.பி. 140 வரை பவுலின் கடிதங்களில் இன்னது இடம்பெறுகிறது என்பது யாரது எழுத்துக்களிலும் பெரிதாக இடம் பெறவில்லை. தியாகி ஜஸ்டின் அவர்களது எழுத்துக்களில், இப்படி ஏதும் இடம் பெறவில்லை. அந்த கால கட்டத்தின் குறிப்பிடத்தக்க ஆக்கங்களான டிடக்கே, பார்னபாவின் மடல் ஆகியவற்றிலும் ஏதும் இடம் பெறவில்லை. கி.பி. 140க்கு முற்பட்ட கிறித்தவ பிதாக்களின் எழுத்துக்களில் பவுலின் கடிதங்களில் இருக்கும் வசனங்கள் என்று குறிப்பிடப்பட்டு கூறப்படும் செய்திகள் இங்கொன்றும் அங்கொன்றுமாக மிகச்சொர்ப்பமாகவே காணப்படுகிறது. நாம் தேடியவரை கீழ்காணப்படும் இடங்களில் மட்டுமே குறிபிட்ட வசனங்கள் பவுலின் பெயர் குறிப்பிடப்பட்ட கடிதங்களில் முறையே இடம்பெறுவதாக குறிப்பிடப்படுகிறது.
Clement of Rome:Take up the epistle of the blessed Apostle Paul. What did he write to you at the time when the Gospel first began to be preached? Truly, under the inspiration of the Spirit, he wrote to you concerning himself, and Cephas, and Apollos, because even then parties had been formed among you. (Clement of Rome The First Epistle of Clement to the Corinthians, Chapter XLVII.—Your recent discord is worse than the former which took place in the times of Paul, Refer Pauline Epistle: 1 Cor. iii. 13, )Polycarp:Chapter III.—Expressions of personal unworthiness .among you, accurately and sted fastly taught the word of truth in the presence of those who were then alive. And when absent from you, he wrote you a letter, which, if you carefully study, you will find to be the means of building you up in that faith which has been given you, and which, being followed by hope, and preceded by love towards God, and Christ, and our neighbour, “is the mother of us all.”( Epistle to Philipians, Chapter III.—Expressions of personal unworthiness, Refer: Pauline Epistle: Galatians 4:26)Ignatius:And ye are, as Paul wrote to you, “one body and one spirit, because ye have also been called in one hope of the faith. Since also “there is one Lord, one faith, one baptism, one God and Father of all, who is over all, and through all, and in all.” Such, then, are ye, having been taught by such instructors, Paul the Christ bearer, and Timothy the most faithful. .” (The Epistle of Ignatius to the Ephesians, Chapter VI.—Have respect to the bishop as to Christ Himself.. Refer Pauline Epistle: 1 Eph. iv. 4-6)
“That ye all speak the same thing, being of one mind, thinking the same thing, and walking by the same rule of faith,” as Paul admonished you. (The Epistle of Ignatius to the Philippians , Chapter I.—Reason for writing the epistle, Refer Pauline Epistle: 1 Cor. i. 10; Phil. ii. 2, Phil. iii. 16.)
மேலே காட்டப்பட்ட முற்கால சபைபிதாக்களின் நிருபத்தில், பாலிகார்ப்பின் மேற்குறிபிட்ட கடித பகுதியில் இருக்கும் சிக்கல் என்னவென்றால், பாலிகார்ப் பிலிப்பியர்களுக்கு எழுதும் நிருபத்தில், உங்களுக்கு பவுல் எழுதுகிறார் என்று கூறி கலாத்தியருக்கு பவுல் எழுதிய நிருபத்தின் வசனத்தை மேற்கோள் காட்டுகிறார். அதேபோல் இக்னேஷியஸ் எழுதிய நிருபங்களின் உண்மை வடிவமான Shorter versionல் மேற்குறிப்பிட்ட பவுலிய கடிதத்தின் மேற்கோள் இடம்பெறவில்லை. மேலும் இக்னேஷியஸின் கடிதங்கள் உண்மையா? இட்டுகட்டப்பட்ட கைசரக்கா என்பதில் கிறித்தவ அறிஞர்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது.
மேலே கூறப்படும் ரோமின் கிளமண்ட், இக்னேசியஸ் மற்றும் பாலிகார்ப் ஆகியோரது எழுத்துக்களில் ஏனைய இடங்களில் பொத்தம் பொதுவாக இடம்பெறுகிறது. அதுவும் மிகச்சிறிய அளவிலேயே இடம்பெறுகிறது கி.பி.140 முன்பதாக. கடிதத்தின் பெயர் குறிப்பிடபட்டு அதில் இந்த வசனம் இடம்பெறுகிறது என்று வெளிரங்கமாக இடம்பெறவில்லை. இது குறித்து Stanley E. Porter அவர்களது The Pauline Canon என்ற நூல் பின்வருமாறு கூறுகிறது
Wilhelm Schneemelcher concluded that there are no unambiguous citations of Paul in early Christian writers before Irenaeus. Rather, these writers were more likely citing formulae and echoing traditions which happen to be present in the Pauline letters, not signalling their literary dependence on Paul. In support of Schneemelcher's scepticism, it might be noted that no writer before Irenaeus cites any Pauline passage with clear ascription of authorship with the exception of Clement of Rome's citation of 1 Cor 1:11-13 (see 1 Clem 47.1-3). By contrast, Irenaeus, unlike his predecessors, frequently cites Paul. He does so quite intentionally. (The Pauline canon by Stanley Porter P.No. 131)வில்ஹெல்ம் ஷ்னீமெல்ச்சர், ஐரேனியஸுக்கு முன் ஆரம்பகால கிறிஸ்தவ எழுத்தாளர்களில் பவுலைப் பற்றிய தெளிவான மேற்கோள்கள் எதுவும் இல்லை என்ற முடிவிற்கு வந்தார். மாறாக, இந்த எழுத்தாளர்கள், பவுலின் கடிதங்களில் இருக்கும் சூத்திரங்களை மேற்கோள்காட்டவும், மரபுகளை பிரதிபலிக்கவும் செற்கிறார்களே ஒழிய பவுலை இலக்கிய ரீதியாக சார்ந்திருப்பதைக் காட்டவில்லை. ஷ்னீமெல்ச்சரின் சந்தேகத்திற்கு ஆதரவாக, 1 கொரி 1:11-13 என்ற ரோம் கிளெமென்டின் மேற்கோளைத் தவிர, ஐரேனியஸுக்கு முன் எந்த எழுத்தாளரும் எந்த பவுலின் பத்தியையும் எழுத்தாளரின் தெளிவான குறிப்புடன் மேற்கோள் காட்டவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மாறாக, ஐரேனியஸ், அவரது முன்னோடிகளைப் போலல்லாமல், அடிக்கடி பவுலை மேற்கோள் காட்டுகிறார். அவர் வேண்டுமென்றே அவ்வாறு செய்கிறார். (The Pauline canon by Stanley Porter P.No. 131)
இந்த அரிதான மேற்கோள்கள் புதிய ஏற்பாட்டின் பவுலிய கடிதங்களின் தொகுப்பில் மேலும் ஒரு சிக்கலை ஏற்படுத்துகிறது. அதாவது பவுல் மற்றும் அவரது சகாக்கள் சேர்ந்து எழுதி பல்வேறு பகுதிக்கு அனுப்பப்பட்ட இந்த கடிதங்கள் யாரால் சேகரிக்கப்பட்டு எப்போது புதிய ஏற்பாட்டின் நூல்கள் வரிசையில் இணைக்கப்பட்டது என்பதுதான் அந்த சிக்கல். எப்படி ஒத்தமை நற்செய்தி நூல்கள் குறித்து முரண்பட்ட அனுமானங்களை கிறித்தவ அறிஞர்கள் கொண்டிருக்கிறார்களோ, அதே போல பவுலிய கடிதங்களின் தொகுப்பு குறித்தும் தெளிவான வரலாற்று அடித்தளம் எதுவும் இல்லாததால் கிறித்தவ அறிஞர்கள் முரண்பட்ட அனுமானக் கோட்பாடுகளை முன்வைக்கின்றனர். இது குறித்து Stanley E. Porter அவர்களது The Pauline Canon என்ற நூல் இது குறித்த அனுமானக்கோட்பாடுகளை பட்டியலிட்டு கூறுகிறது. அது குறித்த சிறுபார்வையே கீழே தருகிறோம்.
✅பவுலிய கடித தொகுப்பின் அனுமானக் கோட்பாடுகள்:
1. Gradual Collection or Zahn-Harnack Theory:-
பல்வேறு திருச்சபைகளுக்கு எழுதப்பட்ட பவுலிய கடிதங்கள் படிப்படியாக சேகரிக்கப்பட்டு பிறகு மொத்த தொகுப்பாக உருவாக்கப்பட்டு கத்தோலிக்க புதிய ஏற்பாட்டில் இணைக்கப்பட்டது என்பது இந்த அனுமானத்தின் மையகருத்து. இந்த கோட்பாடு கிறித்தவ அறிஞர்கள் பெரும்பான்மையினரால் ஏற்கப்பட்ட ஒன்றாகும். இந்த அனுமானக் கோட்பாட்டை ஜஹ்ன் ஹர்னாக் கோட்பாடு என்றும் கூறுவர். இந்த அனுமானத்தை ஜெமானிய இறையியலாளர்களான தியோடர் ஜஹ்ன் , அடோல்ஃப் வான் ஹர்னாக் ஆங்கில இறையியலாளர்களான B.H.ஸ்டிரீட்டர், கிர்ஸோப் லேக் ஆகியோர் முன்மொழிகின்றனர். ஆனால் இவர்கள் இந்த அனுமானத்திற்கு உள்ளும் தனித்தனியே முரண்படவும் செய்கின்றனர்.
💥தியோடர் ஜஹ்ன் அவர்களை பொறுதவரையில் பவுலிய கடிதத்தின் தொகுப்பு என்பது பவுலினாலேயே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. இதில் 1 தீமோத்தேயு, 2 தீமோத்தேயு, தீத்து ஆகியவற்றை தவிர்த்து 10 கடிதங்களும் அப்போஸ்தலர் நடபடிகளுக்கு பின்பாகவும், 1 கிளமண்ட் முன்பதாகவும் முழுமையாக தொகுக்கப்பட்டது. அப்போஸ்தலர் நடபடிகளின் எந்த இடத்திலும் பவுலிய கடிதங்கள் குறித்த குறிப்பு இடம்பெறவில்லை. அதாவது அப்போஸ்தலர் நடபடிகள் கி.பி.80-85 இடைபட்ட காலத்தில் எழுதப்பட்டவை. இந்த பவுலிய கடிதங்கள் திருச்சபைகளின் வாசிக்கப்பட்டும் வந்தது. அது வாசிக்கப்பட்டு வந்ததாலேயே அது அங்கிகரிக்கப்பட்ட ஒன்றாக தியோடர் ஜஹ்ன் குறிப்பிடுகிறார். அதன் காரணத்தினாலேயே இரண்டாம் நூற்றாண்டில் மார்சியோன் (கி.பி.85-160) இதனை மறுக்க அவரது தனிதொகுப்பினை வழங்கியதாக கூறுகிறார்.
💥 ஹர்னாக் அவர்களை பொறுத்தவரையில் 13 கடிதங்களும் கி.பி.100களில் தொகுப்பட்டது. ஆயினும் மார்சியோனிற்கு மறுப்பு அளிக்கும் விதமாக மார்சியோனுக்கு பிறகு அதாவது கி.பி.160 பிறகே அங்கிகாரம் பெற்றது.
💥கிர்ஸோப் லேக் அவர்களை பொறுத்தவரையில் பவுலிய கடிதங்களின் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டார். பவுலிய கடிதங்கள் குறித்த அட்டவணை மற்றும் கிறித்தவ பிதாக்களின் தரவுகளின் அடிப்படையில், ஒவ்வொரு சபையும், தனக்கான வேறுபட்ட பவுலிய கடிதத் தொகுப்பினை கொண்டிருந்தனர். உதாரணமாக மார்சியோன், டெர்டுள்ளியன், ஓரிகன் மற்றும் முரேடோரியன் துண்டுகள் ஆகியவற்றில் பவுலிய கடித வரிசை அட்டவணை மாறுபட்டுள்ளது. அதனால் அவை புதிய ஏற்பாட்டின் அங்கிகரிக்கப்பட்ட நூல் அட்டவனை வரிசையில் இடம்பெற நீண்ட காலத்தை எடுத்துக்கொண்டது என்று கூறினார். படிப்படியான சேகரிப்பு மைய கருத்தியலில் அமைந்த அனுமானங்களில் பலராலும் ஏற்கப்பட்ட அனுமானமாக இது உள்ளது. B.H.ஸ்டிரீட்டர் அவர்களது கருத்தின் படி கி.பி.350ல் தான் முழுமையாக பவுலிய கடிதத் தொகுப்பு புதிய ஏற்பாட்டில் இடம்பெறும் அங்கிகரிக்கப்பட்ட தொகுப்பானது.
மேற்குறிபிட்ட அனுமானத்தில் ஒரு சிக்கல் இருக்கிறது. அதாவது தியோடர் ஜஹ்ன் முதற்கொண்டு அனைவரும் புதிய ஏற்பாட்டில் எந்த கடிதம் இடம்பெற வேண்டும் என்ற தேர்வு முறைமை நடைபெற்றதாக கூறுகின்றனர். இந்த முறைமை எந்த அடிப்படையில் நடைபெற்றது என்பதற்கு எந்த தரவுகளையும் இவர்கள் தரவில்லை. மார்சியோன் தொகுப்பிற்கு எதிர்வினை அல்லது மார்சியோன் தொகுப்பு இதற்கு எதிர்வினை எனும்போது தேர்வு முறைமையின் அடிப்படை என்பது இன்றியமையாத ஒன்று.
2.Lapsed Interest or Goodspeed-Knox Theory:
அப்போஸ்தலர் நடபடிகள் பல திருச்சபைகளின் பரவலான பயன்பாட்டிற்கு பிறகு, அதாவது பவுல் குறித்த தகவல்கள் பரப்பப்பட்ட பிறகு, கண்டுகொள்ளாமல் விடப்பட்டு அல்லது நிராகரிக்கப்பட்டு இருந்த, பல்வேறு திருச்சபைகளுக்கு எழுதப்பட்ட பவுலிய கடிதங்களில் மக்களின் கவனம் திரும்பவே, அந்த கடிதங்கள் தொகுக்கப்பட்டது என்று இந்த அனுமானக் கோட்பாடு கூறுகிறது. இது எட்கர் J. குட்ஸ்பீட் என்ற அமெரிக்க இறையியலாளரால் முன்வைக்கப்பட்டது. அப்போஸ்தலர் நடபடிகளில் பவுலிய கடிதங்கள் குறித்த தகவல்கள் ஏதும் இல்லாமல் இருப்பதும், பின்னால் எழுதப்பட்ட வெளிப்படித்தின விஷேசம், மற்றும அதன் பின்னர் எழுதப்பட்ட கிறித்தவ ஆக்கங்களில் குறிப்பிடப்பட்டிருபதாலும் இவ்வாறு அனுமானிக்கப்பட்டது. அதாவது கி.பி.90களில் தொகுக்கப்பட்டது என்று அனுமானிக்கப்படுகிறது இவரது அனுமானத்தின் படி எபேஸிய திருச்சபையே பவுலிய கடித தொகுப்பின் பிறப்பிடம். எனவே எபேசிய கடிதமே முதன் முதலில் அனைத்து திருச்சபைகளிலும் பரிமாறி கொள்ளப்பட்ட கடிதம். அதானாலேயே எபேஸிய நிருபமே பவுலிய கடித நூல் வரிசையில் முதன்மையானது என்று அனுமானிக்கிறார். இவரது மணவரான நாக்ஸ், ஆங்கிலேயே இறையியலாளரான சார்லஸ் லெஸ்லி மிட்டன் போன்றவர்கள் இந்த அனுமானத்தை முன்னெடுத்தனர்.
💥எட்கர் J. குட்ஸ்பீட் அவர்கள், கொலோசப் பட்டினத்திற்கும், பிலேமோனுக்கும் எழுதிய பவுலிய நிருபங்கள், இது குறித்து அப்போஸ்தலர் நடபடிகளில் எதுவும் இடம்பெறாததால் இவை இரண்டும் லவோதிக்கேயாவில் இருப்பவர்களுக்கு எழுதப்பட்டது என்று அனுமானிக்கிறார்.
💥 அவரது மாணவரான நாக்ஸ், ஒநேசிம்தான் பவுலிய கடிதத்தின் தொகுப்பாளர். எனவே பிலேமோனுக்கு எழுதப்பட்ட நிருபம் சேர்க்கப்பட்டதாக அனுமானிக்கிறார்.
ஆனால் இந்த அனுமானத்திலும் சில சிக்கல்கள் உள்ளன. எபேசிய கடிதமே பவுலிய கடித நூல் வரிசையில் முதன்மையானது என்பதற்கு எந்த ஆதாரமும் இருக்கவில்லை. பவுலிய பட்டணங்களான கொரிந்து, அலெக்ஸாண்டிரியா உள்ளிட்டவையும் பவுலிய கடிதத்தொகுப்பின் பிறப்பிடமாக பலரால் ஊகிக்கப்படுகிறது. ஆனால் இதற்கெல்லாம் தேர்ந்த எதிர்வாதங்கள் எதுவும் குட்ஸ்பீட் அவர்களிடம் இல்லை. அப்போஸ்தலர் நடபடிகள் என்ற புதிய ஏற்பாட்டின் நூல் கி.பி.2ம் நூற்றாண்டின் மையப்பகுதிக்கு பிறகே பெரும் பயன்பாட்டிற்கு வந்தது. இது குறித்து Robert M. Grant தனது A Historical Introduction to the New Testament ல் பின்வருமாறு கூறுகிறார்.
The book of Acts, the second of the two volumes written by the evangelist Luke (probably after his gospel), is first certainly utilized by Irenaeus of Lyons, towards the end of the second century. (The Acts of the Apostles, A Historical Introduction to the New Testament by Robert M. Grant)
அதாவது ஐரீனியஸ்தான் முதன் முதலில் அதனை உறுதியாக பயன்படுத்தினார் என்று கூறுகிறார். ஏனென்றால் வேறு எந்த சர்ச் பிதாவும் ஐரினியஸிற்கு முன்பாக இந்த நூலை பெயர் குறிப்பிட்டு மேற்கோளிடவில்லை. எந்த நூலும் பிரபலமான பிறகே மேற்கோளில் இடம் பெறும். இப்படி இருக்கையில் அப்போஸ்தலர் நடபடிகள் எழுதப்பட்டு திருச்சபை பயன்பாட்டிற்கு பரவலாக வந்த பிறகே பவுலிய கடிதத்தொகுப்பு உருவானது என்றால், குட்ஸ்பீட் அவர்களது அனுமானமான கி.பி.90களில் பவுலிய கடித தொகுப்பு உருவானது என்பது தவறாகிறது. பவுலிய கடிதங்கள் குறித்த வரலாற்று ஆவணங்களின் வெளிரங்க மேற்கோள்கள் (Explicit Reference) அனைத்தும் கி.பி.150க்கு பின்னானவை என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
3.Composite Anti-Gnostic or Schmithals Theory:
இந்த அனுமானத்தை ஜெர்மானிய இறையியலாளரான வால்டர் ஸ்மித்தல்ஸ் முன்வைத்தார். பவுலிய கடித தொகுப்பு, ஞானவாதத்திற்கு எதிராக உருவாக்கப்பட்டது என்பது இவரது வாதம். ஜெர்மானிய இறையியலாளரான F.C.பவ்ர் அவர்களது கருத்தான “புதிய ஏற்பாடு என்பது புறஜாதி கிறித்தவர்களுக்கும், யூத கிறித்தவர்களுக்குமான மோதலில் உருவான ஆக்கம்” என்பதற்கு மாற்றமாக ஸ்மித்தல்ஸ் இதனை முன்வைத்தார். இவரது கருத்தின் படி பவுல் எழுதிய பல கடிதங்கள், கலவையாக்கப்பட்டே இன்றைய கடிதத்தொகுப்பு உருவானது. இவரது கருத்தின் படி கொரிதியருக்கு எழுதப்பட்ட கடிதங்கள் ஏழு கடிதங்களின் கலவை, கலாத்தியர் ஒற்றை கடிதம், பிலிப்பியர் மூன்று கடிதங்களின் கலவை, ரோமர் இரண்டு கடிதங்களின் கலவை, தெசலோனிகேயர் நான்கு கடிதங்களின் கலவை ஆகும். இப்படி கடிதங்கள் கலக்கப்பட்டு, 1&2 கொரிந்தியர், கலாத்தியர், பிலிப்பியர், 1&2 தெசலோனிகேயர், ரோமர் என்ற ஏழு அதிகாரப்பூர்வ பவுலிய கடிதத் தொகுப்பு உருவாக்கப்பட்டதாக கூறுகிறார். ஏனைய பவுலிய கடிதங்கள் பின்னாள் இணைக்கப்பட்டது. பவுலிய கடிதங்களில் ஏழு கடிதங்களை ஸ்மித்தல்ஸ் அதிகாரப்பூர்வமானதாக கருதியது ஏழு என்பது சிறப்பிற்குரியது என்ற முற்கால மூடநம்பிக்கையின் அடிப்படையில்தான். எந்த அடிப்படையில் ஏழு என்பதை இவர் விளக்கவில்லை என்பதுதான் இந்த அனுமானத்தின் முதல் சிக்கல். மேலும் இவரது அனுமானமான பல கடிதங்களின் கடிதக்கலவைதான் இன்றைய பவுலிய கடிதத்தொகுப்பு என்பதை அறிஞர்கள் ஏற்க மறுக்கின்றனர்.
4.Personal Involvement or Moule and Guthrie Theories:
பவுலிய கடிதத்தொகுப்பானது தனி நபர்களினால் தொகுக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. இவர்களது பெயர்கள் அறியப்பட்டும் இருக்கலாம, அறியப்படாமலும் இருக்கலாம். நாம் முன்சென்ற பகுதிகளில் இந்த அனுமானத்தை சார்ந்த அறிஞர்களின் முன்மொழிவுகளை கண்டிருக்கிறோம். நாக்ஸ், அவர்களை பொறுத்தவரையில் ஒநேசிம்தான் பவுலிய கடிதத்தொகுப்பின் தொகுப்பாளர். சில அறிஞர்கள் மார்சியோனை முன்மொழிகின்றனர். இவர்களது முன்மொழிவுகள் ஏகபோகமாக அனுமானங்களின் மீதே அமைக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் ஆங்கில இறையியலாளரான C.F.D.முல் லூக்கதான் பவுலிய கடிதத்தின் தொகுப்பாளர் என்று முன்மொழிந்தார். சுவிஷேசத்தையும், அப்போஸ்தலர் நடபடிகளையும் இயற்றிய பிறகு லூக்கா பவுலிய கடிதங்களை தொகுத்து வழங்கினார். ஆனால் லூக்கா பவுலிய கடிதங்கள் குறித்து ஏன் அப்போஸ்தலர் நடபடிகளில் வாய்திறக்கவில்லை என்பதற்கு எந்த உறுதியான பதிலும் இல்லை. டொனால்ட் காஃத்ரீ அவர்கள் தீமோத்தேயு வை முன்மொழிந்தார். தீமோத்தேயு வை முன்மொழிவதற்கு அவரது எழுத்தியல் குறித்த எந்த தரவுகளும் இல்லை. இந்த அனுமானக் கோட்பாடு வேறு ஒரு வாசலையும் திறந்துவிட்டது, அதாவது பவுலின் மீது பேர் அன்பும், மரியாதையும் கொண்டிருந்த அவரது அறியப்பட்ட/அறியப்படாத மாணவர்கள் பலர் இணைந்து கூட்டி, குறைத்து, இட்டுகட்டி உருவாக்கியதுதான் இந்த தொகுப்பு. இங்கு நாம் ஒன்றை கவனிக்க வேண்டியுள்ளது, இன்று பவுலிய கடிதம் என்று கூறப்படுபவை அனைத்தும் பவுலால் மட்டும் எழுதப்பட்டதாக அந்த கடிதங்களே கூறவில்லை. இந்த அனுமானம் இட்டுக்கட்டலுக்கான வாசலை அகலத்திறப்பதே இந்த அனுமானத்தின் பெரிய சிக்கல்.
5.பவுலிய நூல்வரிசை குறித்த TROBISCH'S THEORY OF THE ORIGIN OF THE PAULINE CANON அனுமானமும் அது பதம் பார்த்த பாதுகாப்பும்
இந்த அனுமானம் ஜெர்மானிய இறையியலாளரான டேவிட் ட்ரோபிஸ் என்பவரால் முன்வைக்கப்பட்டது. இவரது அனுமானம் பவுலிய கடிதத்தொகுப்பு மற்றும் நூல்வரிசை உருவாக்கத்தின் படிநிலைகளை பின்வருமாறு கூறுகிறது. இவரது நூலான “Paul’s Letter Collection: Tracing the Origins” இருந்து இந்த கருத்துக்கள் முன்வைக்கப்படுகிறது. இவரது கருத்தின் படி புதிய ஏற்பாட்டின் எழுத்துச்சுவடிகளில்(Codex) இடம்பெறும் கடித வரிசை, எந்த கால வரிசையில் கடிதங்கள் அந்த எழுத்துச்சுவடியில் சேர்க்கப்பட்டது என்பதை காட்டுவதாய் இருக்கும். அதன் அடிப்படையில் கடித தொகுப்பின் காலவரிசையை பின்வருமாறு விளக்குகிறார்.
படிநிலை 1: பவுல் பல திருச்சபைகளுக்கு கடிதங்களை எழுதுதல் மற்றும் தானே தொகுத்தல்:.
இன்றிருக்கும் கடிதத் தொகுப்பில் ரோமர், 1 மற்றும் 2 கொரிந்தியர், மற்றும் கலாத்தியர் ஆகிய நான்கு கடிதங்கள் மட்டுமே பவுலின் அசல் கடிதங்கள். இவருக்கு முன்பாக ஜெர்மானிய இறையியலாளரான F.C.பவ்ர் அவர்கள் இதே நான்கு கடிதங்கள்தாம் அதிகாரப்பூர்வமானது என்று கூறினார். பவுலின் மேற்குறிபிட்ட இந்த நான்கு கடிதங்களையும் உள்ளடக்கிய ஒரு தொகுப்பு பவுலின் வாழ்நாட்களின் இறுதி பகுதியில் பவுலினாலேயே உருவானது. இதில் 2 கொரிந்தியர் என்பது பவுல் கொரிந்திய திருச்சபைக்கு எழுதிய பல கடிதங்களின் கலவை.
படிநிலை 2: ஏனைய கடிதங்கள் இணைக்கப்படுதல்- தொகுப்பு விரிவாக்கப்படுதல்
இந்த படிநிலை பவுலின் மரணத்திற்கு பிறகு உருவாகும் தொகுப்பு. இந்த கடிதங்கள் பவுலினுடையதாகவும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். இது பல உள்படிநிலைகளை கொண்டதாகவும் இருக்கலாம்.
சபைகளுக்கு எழுதப்பட்ட கூடுதல் நிருபங்களின் தொகுப்பு: எபேசியர், பிலிப்பியர், கொலோசெயர், 1மற்றும்2 தெசலோனிக்கேயர், ஆகிய கடிதங்கள் இந்த படிநிலையில்தான் இணைக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் தான் ஞானவாத கிறித்தவம், மார்சியோன் கிறித்தவத்தில் இருந்து பிரிந்தது.
தனிநபருக்கு எழுதப்பட்ட நிருபங்களின் தொகுப்பு: ஆயர் நிருபங்கள் என்று அழைக்கப்படும் 1மற்றும் 2 தீமோத்தேயு மற்றும் தீத்து, மற்றும் பிலெமோன் ஆகிய கடிதங்களை மட்டும் உள்ளடக்கிய தனித்தொகுப்பு உருவாகுதல்.
எழுத்துச்சுவடிகளில் சிலவற்றில் 2 தெசலோனிக்கேயருக்கு பிறகும், சிலவற்றில் பிலெமோனுக்கு பிறகும் எபிரேயர் நிருபம் இடம்பெறுவதால் எபிரேயர் நிருபம் பவுலிய கடிதம் இல்லை என்ற போதிலும், இறுதியாக இணைக்கப்படிருக்க வேண்டும் என்பது இவரது கருத்து. 3 கொரிந்தியர், செனேக்காவிற்கு பவுலின் கடிதம், லவோதிக்கேயருக்கான கடிதம் போன்ற இட்டுக்கட்டபட்ட நிருபங்களின் தொகுப்பு உருவாகுதல்.
படிநிலை 3: ஒன்றினைத்து தொகுத்தல்:
அனைத்து மேற்குறிபிட்ட கடிதத் தொகுப்புக்களும் ஒன்றினைக்கப்பட்டு முழு கடிதத் தொகுப்பாக உருவாகுதல்.
ஆனால் இந்த அனுமானக் கோட்பாடும் சில சிக்கல்களை கொண்டுள்ளது. இந்த அனுமானத்தின் சிக்கல் குறித்து Stanley E. Porter அவர்களது The Pauline Canon நூலில் இருந்து தகுகிறோம்.
💥இதே வழியில் நின்று பவுலிய கடிதத்தொகுப்பை விளக்க முற்படும் மர்ஃபி ஓ கொன்னார் என்ற ஐரிய கிறித்தவ பாதிரியார் இந்த தொகுப்பை தோற்றுவித்தவர் பவுல் அல்ல மாறாக தீமோத்தேயு என்று கூறுகிறார். E.ருடோல்ஃப் ரிச்சர்ட்ஸ் என்ற புதிய ஏற்பாட்டு அறிஞர் லூக்காவை முன்னிறுத்துகிறார்.💥F.C.பவ்ர் அவர்களது அதிகாரப்பூர்வ நான்கு கடிதங்கள் என்ற கருத்தை ட்ரோபிஸ் சரிகாண்பதற்கு எந்த வாதங்களையும் முன்வைக்கவில்லை. பவுல்தான் தொகுப்பின் தோற்றுவிப்பாளர் என்றாலும், சர்ச்சை இல்லாத பவுலிய கடிதங்களாக 7 இன்று பெரும்பான்மை கிறித்தவ அறிஞர்களால் ஏற்கப்படும் நிலையில், ஏன் அந்த நான்கு கடிதங்கள் மட்டும் என்ற கேள்விக்கு பதில் இல்லை.💥பவுல்தான் தொகுத்தலுக்கான மூலகர்த்தா என்பதும் விளக்கப்படவில்லை. மாறாக பவுல்தான் இந்த தொகுப்பின் தோற்றுவிப்பாளராய் இருக்க வேண்டும் என்று எந்த தேவையும் இல்லை என்று மர்ஃபி ஓ கொன்னார் குறிப்பிட்டு விளக்கியும் உள்ளார். மேலும் ட்ரோபிஸ் தனது வாதத்திற்கு ஆதாரமாய் சிசரோ தனது கடித தொகுப்பை தானே பிறரிடம் இருந்து கேட்டு பெற்றார்,
So far there is no collection of my letters. But Tiro has about seventy now. And some more will have to be taken from you. But I still will have to go over them and correct them. Then they might be published. -AdAtt 16:5:5(“Paul’s Letter Collection: Tracing the Origins” P.No.55)
இதுவரை எனது கடிதங்களின் தொகுப்பு எதுவும் இல்லை. ஆனால் டிரோவுக்கு இப்போது எழுபது வயது. மேலும் சிலவற்றை உங்களிடமிருந்து எடுக்க வேண்டும். ஆனால் நான் இன்னும் அவற்றைச் சென்று திருத்த வேண்டும். பின்னர் அவை வெளியிடப்படலாம். (“Paul’s Letter Collection: Tracing the Origins” P.No.55) என்று கூறி அதுபோல் பவுலும் செய்திருப்பார் என்று அனுமானிக்கிறார். அதற்கு ஆதாரமாய் பின்வரும் வசனத்தை முன்வைக்கிறார்.
துரோவா பட்டணத்திலிருக்கிற கார்ப்பு என்பவன் வசத்தில் நான் வைத்துவந்த மேலங்கியையும், புஸ்தகங்களையும், விசேஷமாய்த் தோற்சுருள்களையும், நீ வருகிறபோது எடுத்துக்கொண்டுவா. (2Tim 4:13)
ஆனால் மேற்குறிபிட்ட வசனத்தில் சிசரோ போன்ற தெளிவான எந்த கூற்றும் இல்லை. மேலும் இந்த 2தீம்மோதேயு ஆதாரப்பூர்வமான பவுலிய கடிதமும் அல்ல.
💥ட்ரோபிஸ் கூறுகையில் பவுலிய கடிதங்களில் சிலவற்றை மட்டுமே கொண்டிருக்கும் கையெழுத்து சுவடிகள் இல்லை என்று கூறுகிறார், ஆனால் பவுலிய கடிதத்தொகுப்பின் மிக பழமையான கையெழுத்து பிரதி என்று ட்ரோபிஸ் ஏற்கும் இரண்டாம் நூற்றாண்டின் இறுதி கால்பகுதியை சார்ந்த P46 கையெழுத்து பிரதி ரோமர், எபிரேயர், 1மற்றும் 2 கொரிந்தியர், எபேசியர், கலாத்தியர், கொலோசெயர், பிலிப்பியர், 1ம் தெசலோனிக்கேயரின் முதல் இரு அதிகாரத்தை மட்டும் கொண்டிருக்கிறது. இன்னும் பல கடிதத்தொகுப்பு பிரதிகள் ஒரீரு கடிதங்களை மட்டுமே கொண்டும் உள்ளது. எனவே கையெழுத்து பிரதிகளில் இருக்கும் வரிசைப்படுத்துதலை அடிப்படையாக கொண்ட அனுமான அடிப்படை ஆட்டம் காண்கிறது.
💥மேலும் எபேசிய நிருபத்தை கடிதங்களின் முன்னுரை என்ற அனுமானத்தையும் பலர் மறுக்கின்றனர். உண்மையில் எபேசிய நிருபம் கடிதங்களின் முன்னுரையாக இருக்குமானால் ஏதாவது ஒருகையெழுத்து பிரதியிலாவது முதல் கடிதமாக இடம் பெற்றிருக்க வேண்டும் என்பது எதிர்தரப்பினரின் வாதம்.
மேற்குறிபிட்ட அனுமான கோட்பாடு குறித்த சிறு பார்வை ஒர் செய்தியை தெள்ளத்தெளிவாக கூறுகிறது. கிறித்தவ உலகில் பவுலிய கடிதத்தொகுப்பு குறித்த வரலாற்று ஆவணங்கள் ஏதும் இல்லை. இந்த தொகுப்பு யாரால் உருவாக்கப்பட்டது??? எப்போது உருவாக்கப்பட்டது??? இதை தொகுத்தவர் நம்பகமானவர்களா??? போன்ற எந்த கேள்விக்கும் ஆதாரப்பூர்வமான பதில்கள் ஏதும் கிறித்தவ வரலாற்றில் இல்லை. எனவே பெருவெடிப்பு போல, திடிரென கி.பி.இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் யாராலோ தொகுக்கப்பட்டு, அது பல சபைகளுக்கு கி.பி.350க்குள் பரப்பப்பட்டு, பிறகு அதிகாரப்பூர்வ நூலாக புதிய ஏற்பாட்டில் இணைக்கப்பட்டுள்ளது. இன் ஷா அல்லாஹ் அடுத்த கட்டுரையில் பவுலிய கடிதங்கள் குறித்து பேசும் ஏனைய கோட்பாடுகளை காண்போம்