بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
கிறித்தவ மிசனரிகள் இஸ்லாமியர்களின் அல்குர்ஆனின் பாதுகாப்பு குறித்து விமர்சனம் செய்கையில் கண்டிப்பாக குர்ஆனின் ஹஃப்ஸ் வர்ஸ் போன்ற மாறுப்பட்ட ஓதல் முறைகள் குறித்து விமர்சனம் செய்து அதன் காரணத்தினால் குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்று முடிவிற்கு வருவார்கள். இதற்கு பதிலளிக்கும் விதமாக, இந்த மாறுபட்ட ஓதல் முறை என்பது அல்லாஹ்வால் அங்கிகரிக்கப்பட்டு நபி(ஸல்) அவர்களால் ஓதிக்காண்பிக்கப்பட்ட மாறுபட்ட ஓதல் முறை என்பதையும், அது இன்றுவரை முத்தவாதிரான ஓதல் முறைகளாக இன்றும் இருப்பது குறித்தும், அதன் சங்கிலி தொடர் குறித்தும் தெளிவாக விளக்கி பதிலளித்தும் உள்ளோம்.(1)(2) ஹதீஸ்களில் காணப்படும் மாறுபட்ட ஓதல் முறைகள் குறித்த விமர்சனத்தில் அவை முத்தவாதிரான கிராத்துடன் ஒத்தமையாமல் இருக்கும் பட்சத்தில் அந்த ஹதீஸ்களை பலவீனமானது என்பதையும் விளக்கியும் இருக்கிறோம். இன்றும் அல்குர்ஆன் கல்லூரிகள், பயிலும் மாணவரான காரீ, யாரிடம் இருந்து இந்த ஓதலை பெற்றார் என்பதை நபி(ஸல்) அவர்கள் வரை செல்லும் முறியாத அறிவிப்பாளர் தொடரை தாங்கி நிற்கும் சான்றிதழ்களாக வழங்கி வருகின்றன. வாழையடி வாழையாக யார் யாரிடம் இருந்து இந்த ஓதலை கற்றார் என்பதை முழு விவரமாக குறிப்பிட்டு இன்றும் இஸ்லாமிய கல்லூரிகள் சான்றிதழ்களை வழங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய கல்லூரிகளால் வழங்கப்பட்ட சில இஜாஸாக்களை கீழே இணைக்கிறோம்.
ஒரு சாதரண கூகுள் தேடல் கூட இந்த இஜாஸாக்கள் குறித்த விக்கிபீடியா போன்ற தளங்களில் பட்டியலிடப்பட்டுள்ளதை காட்டுகிறது. இஸ்லாமியர்களாகிய நாம் குர்ஆனின் மாறுபட்ட ஓதல்களில் எது சரியானது என்பதை உறுதி படுத்திக்கொள்ள தீர்க்கமான அளவீடுகளை கொண்டிருக்கிறோம் என்பதையும், அல்லாஹ் தனது வேதத்தை எவ்வாறு பாதுகாத்துள்ளான் இந்த சமூகத்தின் அளப்பரிய அக்கறையின் மூலம் என்பதையும் மேலே உள்ள இஜாஸாக்கள்(சான்றிதழ்கள்) படம் பிடித்து காட்டுகிறது. அல்லாஹு அக்பர்.
இவ்வளவு தெளிவான சான்றுகள் கொண்டு விளக்கிய பிறகும், குர்ஆன் பாதுகாக்கப்பட வில்லை என்று கூறித்திரியும் கிறித்தவ மிசனரிகள் எப்படி மாறுபட்ட புதிய ஏற்பாட்டின் வாசிப்புக்களில் சரியானதை உறுதி படுத்தினார்கள், படுத்துகிறார்கள் என்பதை இந்த கட்டுரையில் இன் ஷா அல்லாஹ் பார்ப்போம். அல் குர்ஆனில் இடம்பெறும் குத்தீபு, குஃத்தீபு மாறுபட்ட ஓதல் முறைபற்றி மணிக்கணக்கில் விமர்சனம் செய்தவர்கள், இவர்களின் புதிய ஏற்பாட்டின் மாறுபட்ட வாசிப்பிற்கு என்ன விளக்கம் கொடுப்பார்கள் என்பதை பார்ப்போம். என்ன மாறுபாடு ஏற்பட்டாலும் மைய கருத்து மாறாது என்ற வாதம் குர்ஆனின் மாறுபட்ட கிராத்திற்கும் பொருந்தும் எனும் போதிலும் இன்றும் குர்ஆன் பாதுக்காக்கப்படவில்லை என்று கூறித்திரியும் கிறித்தவ மிசனரிகளின் புதிய ஏற்பாட்டை அதே அளவீட்டை கொண்டு அளக்கப்போகிறோம்., குர்ஆனைவிட மிக தீர்க்கமான வாத்தையை கொண்டு புதிய ஏற்பாடு வேத்தின் பாதுகாப்பு குறித்த விசயத்தில் பேசுகிறது என்பதை நாம் முன்பே கண்டிருக்கிறோம். மாறுபட்ட குர்ஆன் ஓதலை நிர்ணயிக்க எப்படி அறிவிப்பாளர் தொடருடன் கூடிய தீர்க்கமான அளவீடுகளை நாம் முன்வைக்கிறோமோ அதே போன்று எதாவது அளவீடுகளை இவர்களின் முன்னோர்களும் இவர்களும் கொண்டிருக்கிறார்களா என்பதை இந்த கட்டுரையில் விளக்க உள்ளோம்.
சபைப்பிதாக்களை சாட்சிக்கு அழைக்கும் கிறித்தவர்கள்:
முன்சென்ற கட்டுரைகளில் புதிய ஏற்பாட்டு நூலின் பாதுகாப்பு குறித்து காணும்போது சபைபிதாக்களின் ஆதாரங்களின் அவல நிலையை படம் பிடித்து காட்டி இருந்தோம். வரலாற்று ஆதாரங்களின் அவல நிலையும், நற்செய்தி நூல்களின் அரைகுறை தகவல்களும் நற்செய்தி நூல்களின் நிலையை கேள்விக்கு உள்ளாக்குவதால் கிறித்தவ உலகம் அதனை எதிர் கொள்ள, இந்த சபை பிதாக்களின் எழுத்துக்களில் இருக்கும் நற்செய்தி நூல்களின் மேற்கோள்களை காட்டி நற்செய்தி நூல்கள் ஆதி காலம் தொட்டே புலக்கத்தில் இருப்பவை என்று நிறுவுவதற்கு முயல்கின்றனர். இந்த முயற்சி எவ்வளவு பலவீனமானது என்பதையும் சேர்த்து இந்த கட்டுரையில் காண இருக்கிறோம். அதாவது இவர்கள் கூறும் சபைப்பிதாக்கள் இன்றிருக்கும் நற்செய்தி நூல்களின் வசன்ங்களை மட்டும் மேற்கோள் காட்டவில்லை, மாறாக இன்னும் இன்றைய புதிய ஏற்பாட்டில் இல்லாத பல வசனங்களையும், இன்றிருக்கும் நற்செய்தி நூல்களின் வசனங்களின் மாறுபட்டவைகளையும் மேற்கோள்காட்டியுள்ளனர். இந்த கட்டுரையில் மாறுபட்ட வாசிப்புக்கள் குறித்து காணவிருக்கிறோம். இந்த மாறுபட்ட வாசிப்பு குறித்த தொகுப்பினை Dr. J. A. Moorman அவர்களது Early Manuscripts, Church Fathers, & the Authorized Version என்ற நூலில் இருந்து காட்டவிருக்கிறோம். CHAPTER FIVE: THE DIGEST: 149 DOCTRINAL PASSAGES “DISTINCTLY BYZANTINE” என்ற பகுதியில் கிட்டதட்ட KJVல் இருந்து NIVல் மாறுபடும் 149 வசனங்களை சபைப்பிதாக்களின் மேற்கோள்களுடன் தொகுத்து வழங்கியுள்ளார். அதில் சிலவற்றை மட்டும் கீழே தருகிறோம்.
நாம் கொடுத்திருக்கும் சிறு அட்டவணை, நற்செய்தி நூல்களில் இடம்பெறும் மாறுபட்ட வாசிப்பு குறித்த சிறிய தொகுப்பே. இதில் பல வசனங்களில் பல வார்த்தைகளையும், வாசகங்களையுமே காணவில்லை என்பது தெளிவாக இருக்கிறது. மேலும் ஐரீனியஸ், அதனேஸியஸ் போன்றவர்கள் ஓரே வசனத்தின் மாறுபட்ட இரு வடிவங்களையுமேயே தங்களது ஆக்கங்களில் சில இடங்களில் கையாண்டிருக்கின்றனர் என்பதை மேலே இருக்கும் அட்டவணை காட்டுகிறது. கையெழுத்துப் பிரதிகளிலும் இரண்டு மாறுபாடுகளுமே காணாப்படுகிறது, அவற்றை அடிப்படையாக கொண்டு இந்த வேறுபாட்டுடன் பல மொழியாக்கங்களும் வெளிவந்துள்ளன என்பது மேலதிக தகவல். இன் ஷா அல்லாஹ் கையெழுத்துப்பிரதிகளின் அடிப்படையில் இனிவரும் கட்டுரைகளில் இன்னும் பல மாறுபட்ட வசனங்களை காணவிருக்கிறோம். வேதத்தில் அள்ளியும் புள்ளியும் மாறாது என்று கூறிய புதிய ஏற்பாட்டின் அவல நிலையைத்தான் மேலே காட்டியுள்ளோம். மைய கருத்து மாறாது என்ற சப்பைகெட்டு வாதங்களுக்கு எந்த அடிப்படையும் இல்லை என்பதை இங்கு நினைவுகூறுகிறோம் தாய் ஏட்டில் பாதுகாக்கப்பட்ட குர்ஆன் எது என்று கேட்கும் கிறித்தவ மிசனரிகள், மேலே நாம் குறிபிட்டிருக்கும் மாறுபட்ட வாசிப்பில் எது பரிசுத்த ஆவி உந்தியதால் நேரடியாக நற்செய்தி நூல் ஆசிரியர்களால் எழுதப்பட்டது என்ற கேள்விக்கு விடை தருவார்களா????......இன் ஷா அல்லாஹ் அடுத்த கட்டுரையில் புதிய ஏற்பாட்டில் காணாமல் போன இயேசுவின் வார்த்தைகள் குறித்து காண்போம்……
No comments:
Post a Comment