பக்கங்கள் செல்ல

Monday, August 19, 2024

கிறித்தவ திருச்சபை பிதாக்களும் மாறுபட்ட புதிய ஏற்பாடும்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

கிறித்தவ திருச்சபை பிதாக்களும் மாறுபட்ட புதிய ஏற்பாடும்

        கிறித்தவ மிசனரிகள் இஸ்லாமியர்களின் அல்குர்ஆனின் பாதுகாப்பு குறித்து விமர்சனம் செய்கையில் கண்டிப்பாக குர்ஆனின் ஹஃப்ஸ் வர்ஸ் போன்ற மாறுப்பட்ட ஓதல் முறைகள் குறித்து விமர்சனம் செய்து அதன் காரணத்தினால் குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்று முடிவிற்கு வருவார்கள். இதற்கு பதிலளிக்கும் விதமாக, இந்த மாறுபட்ட ஓதல் முறை என்பது அல்லாஹ்வால் அங்கிகரிக்கப்பட்டு நபி(ஸல்) அவர்களால் ஓதிக்காண்பிக்கப்பட்ட மாறுபட்ட ஓதல் முறை என்பதையும், அது இன்றுவரை முத்தவாதிரான ஓதல் முறைகளாக இன்றும் இருப்பது குறித்தும், அதன் சங்கிலி தொடர் குறித்தும் தெளிவாக விளக்கி பதிலளித்தும் உள்ளோம்.(1)(2) ஹதீஸ்களில் காணப்படும் மாறுபட்ட ஓதல் முறைகள் குறித்த விமர்சனத்தில் அவை முத்தவாதிரான கிராத்துடன் ஒத்தமையாமல் இருக்கும் பட்சத்தில் அந்த ஹதீஸ்களை பலவீனமானது என்பதையும் விளக்கியும் இருக்கிறோம். இன்றும் அல்குர்ஆன் கல்லூரிகள், பயிலும் மாணவரான காரீ, யாரிடம் இருந்து இந்த ஓதலை பெற்றார் என்பதை நபி(ஸல்) அவர்கள் வரை செல்லும் முறியாத அறிவிப்பாளர் தொடரை தாங்கி நிற்கும் சான்றிதழ்களாக வழங்கி வருகின்றன. வாழையடி வாழையாக யார் யாரிடம் இருந்து இந்த ஓதலை கற்றார் என்பதை முழு விவரமாக குறிப்பிட்டு இன்றும் இஸ்லாமிய கல்லூரிகள் சான்றிதழ்களை வழங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய கல்லூரிகளால் வழங்கப்பட்ட சில இஜாஸாக்களை கீழே இணைக்கிறோம்.

    ஒரு சாதரண கூகுள் தேடல் கூட இந்த இஜாஸாக்கள் குறித்த விக்கிபீடியா போன்ற தளங்களில் பட்டியலிடப்பட்டுள்ளதை காட்டுகிறது. இஸ்லாமியர்களாகிய நாம் குர்ஆனின் மாறுபட்ட ஓதல்களில் எது சரியானது என்பதை உறுதி படுத்திக்கொள்ள தீர்க்கமான அளவீடுகளை கொண்டிருக்கிறோம் என்பதையும், அல்லாஹ் தனது வேதத்தை எவ்வாறு பாதுகாத்துள்ளான் இந்த சமூகத்தின் அளப்பரிய அக்கறையின் மூலம் என்பதையும் மேலே உள்ள இஜாஸாக்கள்(சான்றிதழ்கள்) படம் பிடித்து காட்டுகிறது. அல்லாஹு அக்பர்.

    இவ்வளவு தெளிவான சான்றுகள் கொண்டு விளக்கிய பிறகும், குர்ஆன் பாதுகாக்கப்பட வில்லை என்று கூறித்திரியும் கிறித்தவ மிசனரிகள் எப்படி மாறுபட்ட புதிய ஏற்பாட்டின் வாசிப்புக்களில் சரியானதை உறுதி படுத்தினார்கள், படுத்துகிறார்கள் என்பதை இந்த கட்டுரையில் இன் ஷா அல்லாஹ் பார்ப்போம். அல் குர்ஆனில் இடம்பெறும் குத்தீபு, குஃத்தீபு மாறுபட்ட ஓதல் முறைபற்றி மணிக்கணக்கில் விமர்சனம் செய்தவர்கள், இவர்களின் புதிய ஏற்பாட்டின் மாறுபட்ட வாசிப்பிற்கு என்ன விளக்கம் கொடுப்பார்கள் என்பதை பார்ப்போம். என்ன மாறுபாடு ஏற்பட்டாலும் மைய கருத்து மாறாது என்ற வாதம் குர்ஆனின் மாறுபட்ட கிராத்திற்கும் பொருந்தும் எனும் போதிலும் இன்றும் குர்ஆன் பாதுக்காக்கப்படவில்லை என்று கூறித்திரியும் கிறித்தவ மிசனரிகளின் புதிய ஏற்பாட்டை அதே அளவீட்டை கொண்டு அளக்கப்போகிறோம்., குர்ஆனைவிட மிக தீர்க்கமான வாத்தையை கொண்டு புதிய ஏற்பாடு வேத்தின் பாதுகாப்பு குறித்த விசயத்தில் பேசுகிறது என்பதை நாம் முன்பே கண்டிருக்கிறோம். மாறுபட்ட குர்ஆன் ஓதலை நிர்ணயிக்க எப்படி அறிவிப்பாளர் தொடருடன் கூடிய தீர்க்கமான அளவீடுகளை நாம் முன்வைக்கிறோமோ அதே போன்று எதாவது அளவீடுகளை இவர்களின் முன்னோர்களும் இவர்களும் கொண்டிருக்கிறார்களா என்பதை இந்த கட்டுரையில் விளக்க உள்ளோம். 

சபைப்பிதாக்களை சாட்சிக்கு அழைக்கும் கிறித்தவர்கள்:

    முன்சென்ற கட்டுரைகளில் புதிய ஏற்பாட்டு நூலின் பாதுகாப்பு குறித்து காணும்போது சபைபிதாக்களின் ஆதாரங்களின் அவல நிலையை படம் பிடித்து காட்டி இருந்தோம். வரலாற்று ஆதாரங்களின் அவல நிலையும், நற்செய்தி நூல்களின் அரைகுறை தகவல்களும் நற்செய்தி நூல்களின் நிலையை கேள்விக்கு உள்ளாக்குவதால் கிறித்தவ உலகம் அதனை எதிர் கொள்ள, இந்த சபை பிதாக்களின் எழுத்துக்களில் இருக்கும் நற்செய்தி நூல்களின் மேற்கோள்களை காட்டி நற்செய்தி நூல்கள் ஆதி காலம் தொட்டே புலக்கத்தில் இருப்பவை என்று நிறுவுவதற்கு முயல்கின்றனர். இந்த முயற்சி எவ்வளவு பலவீனமானது என்பதையும் சேர்த்து இந்த கட்டுரையில் காண இருக்கிறோம். அதாவது இவர்கள் கூறும் சபைப்பிதாக்கள் இன்றிருக்கும் நற்செய்தி நூல்களின் வசன்ங்களை மட்டும் மேற்கோள் காட்டவில்லை, மாறாக இன்னும் இன்றைய புதிய ஏற்பாட்டில் இல்லாத பல வசனங்களையும், இன்றிருக்கும் நற்செய்தி நூல்களின் வசனங்களின் மாறுபட்டவைகளையும் மேற்கோள்காட்டியுள்ளனர். இந்த கட்டுரையில் மாறுபட்ட வாசிப்புக்கள் குறித்து காணவிருக்கிறோம். இந்த மாறுபட்ட வாசிப்பு குறித்த தொகுப்பினை Dr. J. A. Moorman அவர்களது Early Manuscripts, Church Fathers, & the Authorized Version என்ற நூலில் இருந்து காட்டவிருக்கிறோம். CHAPTER FIVE: THE DIGEST: 149 DOCTRINAL PASSAGES “DISTINCTLY BYZANTINE” என்ற பகுதியில் கிட்டதட்ட KJVல் இருந்து NIVல் மாறுபடும் 149 வசனங்களை சபைப்பிதாக்களின் மேற்கோள்களுடன் தொகுத்து வழங்கியுள்ளார். அதில் சிலவற்றை மட்டும் கீழே தருகிறோம்.

வ.
எண்
வசனம் மாறுபட்ட வாசிப்பு -1  மற்றும் ஆதாரம் மாறுபட்ட வாசிப்பு -2  மற்றும் ஆதாரம்
1. மத்தேயு 5.22
That whosoever is angry with his brother without a cause shall be in danger of the Judgment.

நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்து கொள்பவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்

ஆதாரம்:

TATIAN Diatessaron (I 10:57), IRENAEUS Against Heresies (I 1:482), Apostolic Constitutions (I 7:419,460)

That anyone who is angry with his brother will be subject to judgment

நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை கோபித்து கொள்பவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்;

ஆதாரம்:

ORIGEN De Principiis (I 4:305,368) ATHANASIUS Letter XI (III 4:535)

2. மத்தேயு 5.27
Ye have heard that it was said by them of old time, thou shalt not commit adultery

விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.


ஆதாரம்:

IRENAEUS Against Heresies (I 1:477)

you have heard that it was said, Do not commit adultery

விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.


ஆதாரம்: 

TATIAN, Diatessaron (I 10:57)

3. மத்தேயு 5.44
Love your enemies, bless them that curse you: do good to them that hate you and pray for them which despitefully use you, and persecute you

நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களைச் ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்.


ஆதாரம்:

POLYCARP Epistle (I 1:36)

JUSTIN MARTYR First Apology (I 1:167)

TATIAN Diatessaron (I 10:58)

ATHENAGORAS Pleas for Christians. (I 2:134)

IRENAEUS Against Heresies (I 1:447)

TERTULLIAN On Idolatry (I 3:74)

TERTULLIAN On Patience (I 3:711) GREGORY OF NYSSA Baptism of Christ (III 5:524)

Love your enemies and pray for those who persecute you



நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களைச் ஆசீர்வதியுங்கள்;


ஆதாரம்:

ORIGEN Against Celsus (I 4:652)

CYPRIAN Treatises (I 5:546)

AMBROSE Duties of Clergy (III 10:39)

4. மத்தேயு 6.13
but deliver us from evil: for thine is the kingdom, and the Dower and the glory, forever. Amen

தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே.

ஆதாரம்:

TATIAN Diatessaron (I 10:58)
Apostolic Constitutions (I 7:379)
but deliver us from the evil one

தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்,

ஆதாரம்:

Clementine Homilies (I 8:331)

5. மத்தேயு 6.33
But seek ye first the kingdom of God and his righteousness

முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்,

ஆதாரம்:

TATIAN Diatessaron (I 10:59) CYPRIAN Treatises (I 5:478,535)
But seek first his kingdom and his righteousness

முதலாவது அவரது ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்,

ஆதாரம்:


TERTULLIAN On Prayer (I 3:683)

6. மத்தேயு 13:51
Jesus saith unto them. Have ye understood all these things? They say unto him, Yea, Lord

பின்பு, இயேசு அவர்களை நோக்கி: இவைகளையெல்லாம் அறிந்து கொண்டீர்களா என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ஆம், ஆண்டவரே, என்றார்கள்.

ஆதாரம்: 

TATIAN Diatessaron (I 10:70)
Have you understood all these things? Jesus asked. Yes, they replied

பின்பு, இயேசு அவர்களை நோக்கி: இவைகளையெல்லாம் அறிந்து கொண்டீர்களா என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ஆம், என்றார்கள்

ஆதாரம்:

VICTORINUS Apocalypse (I 7:345)

7. மத்தேயு 17:20
Because of your unbelief: for... if ye had faith as a grain of mustard seed

அதற்கு இயேசு: உங்கள் அவிசுவாசத்தினாலேதான்;……….. கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால்

ஆதாரம்:

TATIAN Diatessaron (I 10:81)
Because you have so little faith...if you have faith as a mustard seed

அதற்கு இயேசு: நீங்கள் ஆக சிறு நம்பிக்கையே கொண்டிருப்பதானலேதான்;……. கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால்

ஆதாரம்:

ORIGEN Matthew (I 10:426)

8. மத்தேயு 23:8
But be not ye called Rabbi: for one is your Master, even Christ

நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார்,

ஆதாரம்:


NOVATIAN Trinity (I 5:643) GREGORY OF NYSSA Against Euromius (III 5:226)
But you are not to be called Rabbi, for you have only one Master

நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார்,

ஆதாரம்:


TATIAN Diatessaron (I 10:105) CYPRIAN Treatises (I 5:534)
9. மத்தேயு 24:48
But and if that evil servant shall say in his heart, My lord delayeth his coming;

அந்த ஊழியக்காரனோ தீங்கானவனாயிருந்து: என் ஆண்டவன் வர நாள் செல்லும் என்று தன் உள்ளத்திலே சொல்லிக்கொண்டு,

ஆதாரம்:


TATIAN Diatessaron (I 10:109)
IRENAEUS Against Heresies (I 1:497)
Clementine Homilies (I 8:249)
But if that wicked servant says to himself, ‘My master is delayed,’

அந்த ஊழியக்காரனோ பொல்லாதவனாயிருந்து: என் ஆண்டவன் தாமதமாகிவிட்டார் என்று தன் உள்ளத்திலே சொல்லிக்கொண்டு,

ஆதாரம்:


IRENAEUS Against Heresies (I 1:519)
10. மாற்கு 1:2
As it is written in the prophets. Behold. I send my messenger before thy face

இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன், அவன் உமக்கு முன்னே போய், உமக்கு வழியை ஆயத்தம்பண்ணுவான் என்று தீர்க்கதரிசன ஆகமங்களில் எழுதியிருக்கிற பிரகாரமாய்;

ஆதாரம்:

IRENAEUS Against Heresies (I 1:431) TERTULLIAN Ans. to the Jews (I 3:163)
It is written in Isaiah the prophet. I will send my messenger ahead of you

இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன், அவன் உமக்கு முன்னே போய், உமக்கு வழியை ஆயத்தம்பண்ணுவான் என்று ஏசாயா தீர்க்கதரிசன ஆகமத்தில் எழுதியிருக்கிற பிரகாரமாய்;

ஆதாரம்:

ORIGEN Against Celsus (I 4:431)
11. மாற்கு 3:29
hath never forgiveness, but is in danger of eternal damnation

அவன் என்றென்றைக்கும் மன்னிப்படையாமல் நித்திய ஆக்கினைக்குள்ளாயிருப்பான் என்றார் .

ஆதாரம்:

TATIAN Diatessaron (I 10:65)
will never be forgiven; he is guilty of an eternal sin

அவன் என்றென்றைக்கும் மன்னிப்படையாமல் இருப்பான். அவன் நித்திய பாவத்தின் குற்றவாளி ஆவான்.

ஆதாரம்:

CYPRIAN Epistles (I 5:290,542)
12. லூக்கா 2:14
Glory to God in the highest and on earth peace, goodwill toward men

உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்.

ஆதாரம்:


TATIAN Diatessaron (I 10:46)
GREGORY-THAUMATURGUS, Twelve Topics (I 6:52),
METHODIUS Simeon and Anna (I 6:386)
Apostolic Constitutions (I 7:478)
GREGORY OF NAZIANZEN Ovations (III 7:423)
Glory to God in the highest, and on earth peace to men on whom his favour rests

உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், அவருடைய தயவு இருக்கும் மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்

ஆதாரம்:


CYRIL OF JERUSALEM. Cat. Lectures (III 7:81),
13. லூக்கா 2:33
And Joseph and his mother marvelled of those things which were spoken of him

அவரைக்குறித்துச் சொல்லப்பட்டவைகளுக்காக யோசேப்பும் அவருடைய தாயாரும் ஆச்சரியப்பட்டார்கள்.

ஆதாரம்:


TATIAN Diatessaron (I 10:46)
The child’s father and mother marvelled at what was said about him

அவரைக்குறித்துச் சொல்லப்பட்டவைகளுக்காக குழந்தையின் தந்தையும் தாயாரும் ஆச்சரியப்பட்டார்கள்.

ஆதாரம்:

CYRIL OF JER. Cat. Lectures (III 7:46)
14. லூக்கா 17:3
If thy brother trespass against thee, rebuke him

உன் சகோதரன் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தால், அவனைக் கடிந்துகொள்;

ஆதாரம்:


CLEMENT OF ALEX. The Instructor (I 2:293)
If your brother sins, rebuke him

உன் சகோதரன் பாவஞ்செய்தால், அவனைக் கடிந்துகொள்;

ஆதாரம்:


TATIAN Diatessaron (I 10:85)
15. யோவான் 1:18
the only begotten Son, which is in the bosom of the Father, he hath declared him.

பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.

ஆதாரம்:


IRENAEUS Against Heresies (I 1:427)
IRENAEUS Against Heresies (I 1:489)
TERTULLIAN Against Praxeas (I 3:611)
HIPPOLYTUS Against Noetus (I 5:225)
ORIGEN Against Celsus (I 4:460)
ARCHELAUS Disputations with Manes (1 6:205)
ALEX. OF ALEXANDRIA Arian Heresy (I 6:292,297)
HILARY OF POTIERS Trinity (III 9:73,84,95,113)
ATHANASIUS De Decretis (III 4:158,164)
ATHANASIUS Against Arians (III 4:382,439,443)
ATHANASIUS De Synodius (III 4:461)
BASIL THE GREAT Letters (III 8:274)
CYRIL OF JER. Cat. Lectures (III 7:46)
GREGORY OF NAZIANZEN Orations (III 7:307)
AMBROSE Christian Faith (III 10:246)
AMBROSE Letters (III 10:437)
the only begotten God...has explained Him

ஒரேபேறான ஆண்டவரே அவரை வெளிப்படுத்தினார்.

ஆதாரம்:


IRENAEUS Against Heresies (I 1:491),
CLEMENT OF ALEX. Stromata (I 2:463)
ORIGEN John (I 10:343)
ATHANASIUS Against the Heathen (III 4:26)
BASIL THE GREAT The Spirit (III 5:9,11,18)
GREGORY OF NYSSA Against Eunomius (III 5:102,104,125,140)
16. யோவான் 1:27
He it is, who coming after me is preferred before me

அவர் எனக்குப் பின்வந்தும் என்னிலும் மேன்மையுள்ளவர்;

ஆதாரம்:


TATIAN Diatessaron (I 10:49)
HIPPOLYTUS Theophany (I 5:235)
CYPRIAN Treatises (I 5:524),
He is the one who comes after me

அவர் எனக்குப் பின்பு வருபவர்


ஆதாரம்:


ORIGEN Against Celsus (I 4:548).
17. யோவான் 1:51
Hereafter ye shall see heaven open

வானம் திறந்திருக்கிறதையும், நீங்கள் இதுமுதல் காண்பீர்கள்

ஆதாரம்:


TATIAN Diatessaron (I 10:51)
you shall see heaven open

வானம் திறந்திருக்கிறதையும், நீங்கள் காண்பீர்கள்

ஆதாரம்:


ORIGEN Against Celsus (I 4:417)
18. யோவான் 3:15
That whosoever believeth in him should not perish but have eternal life

தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும்.

ஆதாரம்:


TATIAN Diatessaron (I 10:93)
that everyone who believes in him may have eternal life

தன்னை விசுவாசிக்கிறவன் அனைவரும் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும்.

ஆதாரம்:


CYPRIAN Treatises (I 5:524)
19. யோவான் 5:16
And therefore did the Jews persecute Jesus, and sought to slay him

அதனால் யூதர்கள் அவரைத் துன்பப்படுத்தி, அவரைக் கொலைசெய்ய வகைதேடினார்கள்.

ஆதாரம்:


TATIAN Diatessaron (I 10:78)
so, because Jesus., the Jews persecuted him

அதனால் யூதர்கள் அவரைத் துன்பப்படுத்தினார்கள்.


ஆதாரம்:


ATHANASIUS Against the Arians (III 4:355)
20. யோவான் 10:29
My Father, which gave them me, is greater than all

அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்;

ஆதாரம்:


TATIAN Diatessaron (I 10:100)
What my Father has given me is greater than all.

என் பிதா எனக்குக் கொடுத்தது எல்லாவற்றையும் விட பெரியது.

ஆதாரம்:


AMBROSE The Holy Spirit (III 10:97,151)

        நாம் கொடுத்திருக்கும் சிறு அட்டவணை, நற்செய்தி நூல்களில் இடம்பெறும் மாறுபட்ட வாசிப்பு குறித்த சிறிய தொகுப்பே. இதில் பல வசனங்களில் பல வார்த்தைகளையும், வாசகங்களையுமே காணவில்லை என்பது தெளிவாக இருக்கிறது. மேலும் ஐரீனியஸ், அதனேஸியஸ் போன்றவர்கள் ஓரே வசனத்தின் மாறுபட்ட  இரு வடிவங்களையுமேயே தங்களது ஆக்கங்களில் சில இடங்களில் கையாண்டிருக்கின்றனர் என்பதை மேலே இருக்கும் அட்டவணை காட்டுகிறது. கையெழுத்துப் பிரதிகளிலும் இரண்டு மாறுபாடுகளுமே காணாப்படுகிறது, அவற்றை அடிப்படையாக  கொண்டு இந்த வேறுபாட்டுடன் பல மொழியாக்கங்களும் வெளிவந்துள்ளன என்பது மேலதிக தகவல்.  இன் ஷா அல்லாஹ் கையெழுத்துப்பிரதிகளின் அடிப்படையில் இனிவரும் கட்டுரைகளில் இன்னும் பல மாறுபட்ட வசனங்களை காணவிருக்கிறோம். வேதத்தில் அள்ளியும் புள்ளியும் மாறாது என்று கூறிய புதிய ஏற்பாட்டின் அவல நிலையைத்தான் மேலே காட்டியுள்ளோம். மைய கருத்து மாறாது என்ற சப்பைகெட்டு வாதங்களுக்கு எந்த அடிப்படையும் இல்லை என்பதை இங்கு நினைவுகூறுகிறோம் தாய் ஏட்டில் பாதுகாக்கப்பட்ட குர்ஆன் எது என்று கேட்கும் கிறித்தவ மிசனரிகள், மேலே நாம் குறிபிட்டிருக்கும் மாறுபட்ட வாசிப்பில் எது பரிசுத்த ஆவி உந்தியதால் நேரடியாக நற்செய்தி நூல் ஆசிரியர்களால் எழுதப்பட்டது என்ற கேள்விக்கு விடை தருவார்களா????......இன் ஷா அல்லாஹ் அடுத்த கட்டுரையில் புதிய ஏற்பாட்டில் காணாமல் போன இயேசுவின் வார்த்தைகள் குறித்து காண்போம்……

No comments:

Post a Comment