🎯யார் இந்த லூக்கா?
மகா கனம்பொருந்திய தெயோப்பிலுவே, நாங்கள் முழுநிச்சயமாய் நம்புகிற சங்கதிகளை, ஆரம்பமுதல் கண்ணாரக்கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தபடியே அவைகளைக்குறித்துச் சரித்திரம் எழுத அநேகம்பேர் ஏற்பட்டபடியினால், ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட விசேஷங்களின் நிச்சயத்தை நீர் அறியவேண்டுமென்று, அவைகளை ஒழுங்காய் உமக்கு எழுதுவது எனக்கு நலமாய்த் தோன்றிற்று. (லூக்கா 1:1-4)
மேலும் இந்த ஆசிரியர் குறித்து கிறித்த உலகம் இன்னொரு நம்பிக்கையையும் கொண்டுள்ளது. அதாவது இந்த லூக்காதான், அப்போஸ்தல நடபடிகள் என்ற நூலையும் இயற்றியதாக கூறிவருகிறது. அதற்கு ஆதாரமாய் பின்வரும் வசனம் முன்வைக்கப்படுகிறது
தெயோப்பிலுவே, இயேசுவானவர் தாம் தெரிந்துகொண்ட அப்போஸ்தலருக்குப் பரிசுத்தஆவியினாலே கட்டளையிட்ட பின்பு, அவர் எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரைக்கும் செய்யவும் உபதேசிக்கவும் தொடங்கின எல்லாவற்றையுங்குறித்து, முதலாம் பிரபந்தத்தை உண்டுபண்ணினேன். (அப்போஸ்தல் நடபடிகள் 1:1-2)
எனவே இவ்விரு நூல்கள் குறித்து ஒன்றாக இந்த கட்டுரையில் கண்டுவிடுவோம். “இந்த சுவிஷேசத்தை எழுதிய லூக்கா, பவுலிற்கு நெருக்கமான துணைவர் ஆவார்” என்பது இந்த சுவிஷேசத்தின் ஆசிரியர் குறித்து கிறித்தவ உலகம் கூறிவருவதாகும். லூக்கா என்ற பெயரானது Loukanos (=Latin Lucanus)-லூக்கன், Loukianos (=Lucianus)-லூக்கியான், Loukios or Leukios(=Lucius)- லூகி, Loukillios (=Lucilius)- லூகிலி போன்ற இலத்தின் பெயரின் கிரேக்க சுருக்கமாகும்.( P.No. 42, The Gospel According to LUKE, Introduction, Translation, and Notes by JOSEPH A. FITZMYER, SJ. ). உதாரணமாக அப்போஸ்தல நடபடிகள் 15:40ல் பவுலின் கூட்டாளிகளில் ஒருவராக “σιλαν- சிலா” என்பவர் அறியப்படுகிறார். அவரே பவுலின் கடிதங்களில் ஒன்றான 1 தெசலோனிக்கேயர் 1:1ல் “σιλουανος – சில்வான்” என்று அறியப்படுகிறார். பின்வரும் வசனங்ககளில் குறிப்பிடப்படும் கிரேக்க பெயர் சுருக்கம் கொண்ட லூக்கா என்பவர்தான் இந்த சுவிஷேசத்தின் எழுத்தாளர் என்று கிறித்தவ உலகம் கூறி வருகிறது.
📜பவுலின் கடிதங்களில் லூக்கா
என்னோடேகூடக் காவலிலிருக்கிற அரிஸ்தர்க்கு உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறான்; பர்னபாவுக்கு இனத்தானாகிய மாற்கும் வாழ்த்துதல் சொல்லுகிறான், இவனைக்குறித்துக் கட்டளைபெற்றீர்களே; இவன் உங்களிடத்தில் வந்தால் இவனை அங்கிகரித்துக்கொள்ளுங்கள். யுஸ்து என்னப்பட்ட இயேசுவும் வாழ்த்துதல் சொல்லுகிறான். விருத்தசேதனமுள்ளவர்களில் இவர்கள்மாத்திரம் தேவனுடைய ராஜ்யத்தின்பொருட்டு என் உடன்வேலையாட்களாயிருந்து, எனக்கு ஆறுதல் செய்துவந்தவர்கள். எப்பாப்பிராவும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறான்; உங்களைச் சேர்ந்தவனும் கிறிஸ்துவின் ஊழியக்காரனுமாகிய இவன், நீங்கள் தேவனுக்குச் சித்தமானவைகளெல்லாவற்றிலும் தேறினவர்களாயும் பூரண நிச்சயமுள்ளவர்களாயும் நிலைநிற்கவேண்டுமென்று, தன் ஜெபங்களில் உங்களுக்காக எப்பொழுதும் போராடுகிறான். இவன் உங்களுக்காகவும், லவோதிக்கேயருக்காகவும், எராப்போலியருக்காகவும், மிகுந்த ஜாக்கிரதையுள்ளவனாயிருக்கிறானென்பதற்கு நான் சாட்சியாயிருக்கிறேன்.பிரியமான வைத்தியனாகிய லூக்காவும், தேமாவும், உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். (கொலோசெயர் 4:10-14)
ஏனென்றால், தேமா இப்பிரபஞ்சத்தின்மேல் ஆசைவைத்து, என்னைவிட்டுப் பிரிந்து, தெசலோனிக்கே பட்டணத்துக்குப் போய்விட்டான்; கிரெஸ்கே கலாத்தியா நாட்டிற்கும், தீத்து தல்மாத்தியா நாட்டிற்கும் போய்விட்டார்கள். லூக்காமாத்திரம் என்னோடே இருக்கிறான். மாற்குவை உன்னோடே கூட்டிக்கொண்டுவா; ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனமுள்ளவன். (2 தீமோத்தேயு 4:10-11)
கிறிஸ்து இயேசுவினிமித்தம் என்னோடேகூடக் காவலில் வைக்கப்பட்டிருக்கிற எப்பாப்பிராவும், என் உடன்வேலையாட்களாகிய மாற்குவும், அரிஸ்தர்க்கும், தேமாவும், லூக்காவும் உமக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். (பிலேமோன் 1:23-24)
📜அப்போஸ்தல நடபடிகளில் பவுலின் துணைவராக லூக்காவின் ஆசிரியர்- "நாம் பத்திகள்"
துரோவாவில் கப்பல் ஏறி, சாமோத்திராக்கே தீவுக்கும், மறுநாளிலே நெயாப்போலி பட்டணத்துக்கும் நேராய் ஓடி, அங்கேயிருந்து மக்கெதோனியா தேசத்து நாடுகளில் ஒன்றிற்குத் தலைமையானதும் ரோமர் குடியேறினதுமான பிலிப்பி பட்டணத்துக்கு வந்து, அந்தப் பட்டணத்திலே சிலநாள் தங்கியிருந்தோம். ஓய்வுநாளில் நாங்கள் பட்டணத்துக்கு வெளியே போய், ஆற்றினருகே வழக்கமாய் ஜெபம்பண்ணுகிற இடத்தில் உட்கார்ந்து, அங்கே கூடிவந்த ஸ்திரீகளுக்கு உபதேசித்தோம். அப்பொழுது தியத்தீரா ஊராளும் இரத்தாம்பரம் விற்கிறவளும் தேவனை வணங்குகிறவளுமாகிய லீதியாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீ கேட்டுக்கொண்டிருந்தாள்; பவுல் சொல்லியவைகளைக் கவனிக்கும்படி கர்த்தர் அவள் இருதயத்தைத் திறந்தருளினார்.(அப்போஸ்தல நடபடிகள் 16:11-14)
இவர்கள் முன்னாகப் போய், துரோவாபட்டணத்திலே எங்களுக்காகக் காத்திருந்தார்கள். புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாட்களுக்குப்பின்பு நாங்கள் கப்பல் ஏறிப் பிலிப்பிபட்டணத்தை விட்டு ஐந்து நாளைக்குள்ளே துரோவாபட்டணத்துக்கு அவர்களிடத்தில் வந்து, அங்கே ஏழுநாள் தங்கியிருந்தோம். வாரத்தின் முதல்நாளிலே, அப்பம் பிட்கும்படி சீஷர்கள் கூடிவந்திருக்கையில், பவுல் மறுநாளிலே புறப்படவேண்டுமென்றிருந்து, அவர்களுடனே சம்பாஷித்து, நடுராத்திரிமட்டும் பிரசங்கித்தான். (அப்போஸ்தல நடபடிகள் 20:5-7)
நாங்கள் ரோமாபுரியில் சேர்ந்தபோது, நூற்றுக்கு அதிபதி தன் காவலிலிருந்தவர்களைச் சேனாபதியினிடத்தில் ஒப்புக்கொடுத்தான்; அப்பொழுது பவுல் தன்னைக் காத்திருக்கிற சேவகனுடனே தனித்துக் குடியிருக்கும்படி உத்தரவு பெற்றுக்கொண்டான். (அப்போஸ்தல நடபடிகள் 28:16)
மேற்குறிபிட்ட வசனங்களில் "நாங்கள்", "எங்கள்" போன்ற வார்த்தை பிரயோகங்கள் அப்போஸ்தல் நடபடிகளை எழுதியவர் பவுலின் கூட்டாளிகளில் ஒருவர் என்பது கிறித்தவர்களின் வாதம்
🎯புதிய ஏற்பாட்டின் தரவுகளும் அதில் இருக்கும் சிக்கல்களும்:
📜லூக்கா என்ற பெயரை கொண்டிருக்கும் இருவர்:
📜யூதரல்லாத லூக்கா:
என்னோடேகூடக் காவலிலிருக்கிற அரிஸ்தர்க்கு உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறான்; பர்னபாவுக்கு இனத்தானாகிய மாற்கும் வாழ்த்துதல் சொல்லுகிறான், இவனைக்குறித்துக் கட்டளைபெற்றீர்களே; இவன் உங்களிடத்தில் வந்தால் இவனை அங்கிகரித்துக்கொள்ளுங்கள். யுஸ்து என்னப்பட்ட இயேசுவும் வாழ்த்துதல் சொல்லுகிறான். விருத்தசேதனமுள்ளவர்களில் இவர்கள்மாத்திரம் தேவனுடைய ராஜ்யத்தின்பொருட்டு என் உடன்வேலையாட்களாயிருந்து, எனக்கு ஆறுதல் செய்துவந்தவர்கள். எப்பாப்பிராவும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறான்; உங்களைச் சேர்ந்தவனும் கிறிஸ்துவின் ஊழியக்காரனுமாகிய இவன், நீங்கள் தேவனுக்குச் சித்தமானவைகளெல்லாவற்றிலும் தேறினவர்களாயும் பூரண நிச்சயமுள்ளவர்களாயும் நிலைநிற்கவேண்டுமென்று, தன் ஜெபங்களில் உங்களுக்காக எப்பொழுதும் போராடுகிறான். இவன் உங்களுக்காகவும், லவோதிக்கேயருக்காகவும், எராப்போலியருக்காகவும், மிகுந்த ஜாக்கிரதையுள்ளவனாயிருக்கிறானென்பதற்கு நான் சாட்சியாயிருக்கிறேன். பிரியமான வைத்தியனாகிய லூக்காவும், தேமாவும், உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். (கொலோசெயர் 4:10-14).
📜யூத லூக்கா:
ασπαζονται υμας τιμοθεος ο συνεργος μου και λουκιος και ιασων και σωσιπατρος οι συγγενεις μουTimothy, my fellow worker, greets you, as do Lucius, Jason, and Sosipater, my fellow Jews.என் உடன்வேலையாளாகிய தீமோத்தேயும், என் இனத்தாராகிய லூகியும், யாசோனும், சொசிபத்தரும் உங்களை வாழ்த்துகிறார்கள்.(ரோமர் 16:21)
6. Moreover, some maintain that this very Lucius is Luke, who wrote the Gospel, since it is customary for names to be given sometimes in accordance with the native declensions, sometimes even according to the Greek or Roman declension.6.மேலும், இந்த லூசியஸ் நற்செய்தியை எழுதிய லூக்கா என்று சிலர் நம்புகிறார்கள், ஏனெனில் சில சமயங்களில் பூர்வீக உச்சரிப்புகளுக்கு ஏற்பவும் ,சில சமயங்களில் கிரேக்க அல்லது ரோமானிய உச்சரிப்புகளுக்கு ஏற்பவும் கூட பெயர்கள் வழங்கப்படுவது வழக்கம்,. .(ORIGEN COMMENTARY ON THE EPISTLE TO THE ROMANS BOOKS 6–10, Commentary on verse 16:21, P.NO.304)
🎯லூக்காவின் படியான சுவிஷேசத்தை எழுதியவர் மருத்துவரா????
The purpose of this work is to show, from an examination of the language employed in the third Gospel and the Acts of the Apostles, that both are the works of a person well acquainted with the language of the Greek Medical Schools a fact which, if established, will strongly confirm the belief that the writer of both was the same person, and was the person to whom they have been traditionally assigned by the Church , who is mentioned by St. Paul (Coloss. iv. 14) as “Luke, the beloved Physician”— an identity which some have doubted or denied.
இந்த உருவாக்கத்தின் நோக்கம், மூன்றாம் நற்செய்தி மற்றும் அப்போஸ்தலர்களின் நடபடிகளில் பயன்படுத்தப்பட்டுள்ள மொழியைப் பரிசோதிப்பதன் மூலம், இரண்டும் கிரேக்க மருத்துவப் பள்ளிகளின் மொழியை நன்கு அறிந்த ஒரு நபரின் படைப்புகள் என்பதைக் காட்டுவதாகும். அது நிறுவப்பட்டால், இரண்டையும் எழுதியவர் ஒருவரே என்றும், சிலரால் மறுக்கப்பட்ட அல்ல சந்தேகிக்கப்பட்ட அடையாளமான, புனித பவுலால் பிரியமான வைத்தியனாகிய லூக்கா என்று கொலோசெயர் 4:14ல் கூறப்பட்டு, திருச்சபையால் பாரம்பரியமாக அவற்றிற்கு சூட்டப்பட்டவர் என்ற நம்பிக்கையை வலுவாக உறுதிப்படுத்தும், (“P.No.XXIX , The Medical Language of St. Luke: A Proof from Internal Evidence that “The Gospel According To St. Luke” And The Acts of The Apostles” - Were Written By The Same Person, And That The Writer Was A Medical Man.” )
Plummer has pointed out that of Hobart’s long list of words: “More than eighty per cent are found in LXX, mostly in books known to St. Luke, and sometimes occurring very frequently in them. In all such cases it is more reasonable to suppose that Luke’s use of the word is due to his knowledge of LXX, rather than to his professional training. . . . If the expression is also found in pro-fane authors, the chances that medical training had anything to do with Luke’s use of it become very remote. It is unreasonable to class as in any sense medical such words as ἀθροίζειν, ἀκοή, ἀναιρεῖν, ἀναλαμβάνειν, ἀνορθοῦν, ἀπαιτεῖν, ἀπαλλάσσειν, ἀπολύειν, ἀπορεῖν, ἀσφάλεια, ἄφεσις, etc., etc. All of these are frequent in LXX, and some of them in profane authors also.”
The figures for Josephus are no lower. From Krenkel’s lists ” it appears that of the 400 words in Hobart’s index about 300 occur in both LXX and Josephus, 27 in LXX but not in Josephus, while 67 are in Josephus but not in LXX.* So that Josephus, who as a single author makes a fair parallel to Luke, uses ninety per cent of the ‘medical words” listed by Hobart. A comparison of Hobart’s list with the lexica of two profane authors of the same period, Plutarch and Lucian,” shows that over ninety per cent of the list is found in one or both of these two authors. Of the remaining thirty or forty words few seem to have any strikingly medical signification in Luke. It is clear, therefore, that Hobart’s list contains very much that is without significance, many of his words being common words with-out any special medical use. While he shows most diligently that the words he catalogues are employed by the medical writers, he, does not show that they are not employed by other writers with no professional training. Even those who accept his argument realize this. ‘He has proved only too much,” says Harnack
ஹோபர்ட்டின் நீண்ட சொற்களின் பட்டியலை பிளம்மர் சுட்டிக்காட்டி “LXXல் எண்பது சதவீதத்திற்கும் அதிகமானவை காணப்படுகின்றன, அவை பெரும்பாலும் புனித லூக்காவிற்கு தெரிந்த புத்தகங்களில், சில சமயங்களில் அடிக்கடி இடம்பெறுபவை. இதுபோன்ற எல்லா நிகழ்வுகளிலும், லூக்காவின் இந்த வார்த்தையின் பயன்பாடு அவரது தொழில்முறை பயிற்சிக்கு பதிலாக, LXX பற்றிய அவரது அறிவின் காரணமாகும் என்று கருதுவது மிகவும் நியாயமானது……. இந்த வரிவடிவங்கள் சாதரண எழுத்தர்களிடமும் காணப்படுமானால், மருத்துவப் பயிற்சிக்கும், லூக்கா அதைப் பயன்படுத்தியதற்கும் ஏதேனும் தொடர்பு இருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. ἀθροίζειν, ἀκοή, ἀναιρεῖν, ἀναλαμβάνειν, ἀνορθοῦν, ἀπαιτεῖν, ἀπαλλάσσειν, ἀπολύειν, ἀπορεῖν, ἀσφάλεια, ἄφεσις இன்னும் பலசொற்களை, எந்த வகையிலும் மருத்துவத்திற்கு உரியது என வகுப்பது நியாயமற்றது. இவை அனைத்தும் LXXலும் சாதாரண எழுத்தர்களி (ஆக்கங்களி)லும் அடிக்கடி இடம்பெறுகின்றன,” என்று கூறுகிறார்.
ஜோசஃபஸ்ஸிற்கான புள்ளிவிவரங்களும் குறைவாக இல்லை. கிரென்கெலின் பட்டியல்களிலிருந்து ஹோபார்ட்டின் அட்டவணையில் உள்ள 400 சொற்களில் 300 LXX மற்றும் ஜொசிஃபஸ் இரண்டிலும் இடம்பெறுகின்றன, 27, LXX இல் உள்ளன ஆனால் ஜோசபஸில் இடம்பெறவில்லை, 67, ஜோசஃபஸில் உள்ளன ஆனால் LXX இல் இடம்பெறவில்லை என்பது தெரிகிறது. லூக்கிற்கு இணையாக, தனித்த எழுத்தராக ஜோசபஸ், ஹோபர்ட் பட்டியலிட்டதில் தொண்ணூறு சதவீத ‘மருத்துவ வார்த்தைகளை’ பயன்படுத்துகிறார். ஹோபர்ட் பட்டியலை, அதே காலகட்டத்தைச் சேர்ந்த புளூடார்ச் மற்றும் லூசியன் ஆகிய இரு சாதாரண எழுத்தர்களின் லெக்சிகாவுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், தொண்ணூறு சதவிகிதத்திற்கும் அதிகமானது, இந்த இரண்டு ஆசிரியர்களில் ஒருவரிடமோ அல்லது இருவரிடமோ காணப்படுவதாகக் தெரிகிறது. மீதமுள்ள முப்பது அல்லது நாற்பது வார்த்தைகளில் சில சொற்கள் லூக்காவில் குறிப்பிடத்தக்க மருத்துவக் முக்கியத்துவம் கொண்டதாகத் தெரிகிறது. எனவே, ஹோபர்ட்டின் பட்டியல் எந்த ஒரு சிறப்பு மருத்துவப் பயன்பாடும், முக்கியத்துவம் இல்லாத பொதுவான சொற்கள், பலவற்றைக் கொண்டுள்ளது என்பது தெளிவாகிறது. அவர் பட்டியலிடும் வார்த்தைகள் மருத்துவ எழுத்தாளர்களால் பயன்படுத்தப்பட்டவை என்பதை அவர் மிகவும் விடாமுயற்சியுடன் காட்டினாலும், தொழில்முறை பயிற்சி இல்லாத மற்ற எழுத்தாளர்களால் அவை பயன்படுத்தப்படவில்லை என்பதைக் காட்டவில்லை. அவருடைய வாதத்தை ஏற்றுக்கொள்பவர்களும் இதை உணர்ந்திருக்கிறார்கள். ஹர்னாக் ‘அவர் மிகைப்படுத்தலையே நிரூபித்திருக்கிறார்’ என்று கூறுகிறார். ( THE STYLE AND LITERARY METHOD OF LUKE P.No.41)
The style of Luke bears no more evidence of medical training and interest than does the language of other writers who were not physicians. This result, it must be confessed, is a purely negative one.
மருத்துவராக இல்லாத மற்ற எழுத்தாளர்களின் மொழியைக் காட்டிலும், லூக்காவின் பாணி, மருத்துவப் பயிற்சி மற்றும் ஆர்வத்திற்கு எந்த ஆதாரத்தையும் கொண்டிருக்கவில்லை. இந்த முடிவு முற்றிலும் எதிர்மறையானது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். ( THE STYLE AND LITERARY METHOD OF LUKE P.No.51)
🎯வரலாற்று ஆவணங்களில் காணப்படும் குளறுபடிகள்:
🎯எழுதப்பட்ட காலம்:
c.54-56 A.D. | Blass |
c.53-57 A.D. | Kuppers |
c.58-62 A.D. | Alford, Schaff, |
c.61-62 A.D. | Belser |
c.59-63 A.D. | Cornely |
c.63-64 A.D. | Horne, Michaelis, Guericke, Fillion, Resch. |
c.65-70 A.D. | Godet, Hahn, Schanz, Schafer, Batiffol. |
c.60-70 A.D. | Jacquier,Harnack. |
c.70-80 A.D. | Bleek, Beyschlag, Weiss, Adeney, Bartlet, Bovon, Plummer, Sanday, Wright, Zahn, Feine. |
c.75-90 A.D. | Barth |
c.80-90 A.D. | Kostlin, Mangold, Abbott, Carpenter, J. Weiss, Bacon, McGiffert, Julicher , Briggs, |
c.90- 100 A.D. | Keim, Renan, Soltau, Wernle, Knopf, Schmiedel, Burkitt, Loisy, Peake, Montefiore, Buckley. |
c. 100 A.D. | Holsten, Scholten, Pfleid., J. Weiss, O. Schmiedel, W. Haupt. |
c.100-110 A.D. | Volkmar, Rovers, Holtzmann, S. Davidson, Hilgenfeld, Weiss, Hausrath, Schmiedel. |
c. 130 A.D. | Baur |
🎯ஒத்தமை சிக்கலின் ஊற்றுக்கண்:
இப்படியான அரைகுறையான வரலாற்று ஆதாரங்களை உடைய ஒரு நூலை தங்களது வேதமாக கொண்டிருக்கும் கிறத்தவ மிசனரிகள், அல் குர்ஆனின் பாதுகாப்பை கேள்வி கேட்க புறப்பட்டுள்ளனர். ஒரு பொருள் எப்படி உருவானது என்பது அறியாத நிலை ஏற்படும் போதெல்லாம், அதிலிருந்து வந்திருக்கும், இதிலிருந்து வந்திருக்கும் என்ற அனுமானங்களே விடையாக இருக்கும். அதே நிலைதான் ஒத்தமை நற்செய்தி நூல்களுக்கும் அதன் சிக்கல்களுக்கும். நற்செய்தி நூல்களின் எழுத்தர்கள், அவற்றின் வரலாறு, இயற்றப்பட்ட காலம் என்று எதிலும் கிறித்தவ உலகில் எந்த ஒத்த கருத்தும் ஏற்பட வில்லை. எனவே அந்த நற்செய்தியில் இருந்து இது தோன்றியிருக்கும் என்ற அனுமானம் தேவைப்படுகிறது. அல்லாஹு அஃலம். இன் ஷா அல்லாஹ் இனியும் தொடர்வோம்…….