பக்கங்கள் செல்ல

Saturday, March 2, 2024

புதிய ஏற்பாட்டின் மொழி குழப்பமும் அது ஏற்படுத்தும் சிக்கலும்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ


        நாம் சென்ற கட்டுரையில் இஸ்லாம் கூறும் இன்ஜீல் எத்தகைய நூல் என்பதையும், அது இன்றைய கிறித்தவம் காட்டும் புதிய ஏற்பாட்டின் நற்செய்தி நூல்கள் அல்ல என்பதனையும் ஆதாரங்களின் அடிப்படையில் நிறுவியிருந்தோம். சரி இன்று இவர்கள் வைத்திருக்கும் புதிய ஏற்பாடாவது இறைவேதத்தின் அளவுகோல்களை கொண்டிருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. வேதத்திற்கான அளவுகோலை நாம் அல் குர்ஆனில் இருந்து எடுத்து காண்பித்தோம் என்றால், இஸ்லாமியர்களாகிய நாம் காழ்புணர்ச்சியினால் கூறுவதாக கூறப்பட வாய்ப்பு உண்டு. எனவே இவர்களது வேத்தில் இருந்தே அந்த அளவுகோலை இங்கு முன்வைப்போம்.

    வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜன முள்ளவைகளாயிருக்கிறது.(2 திமோத்தியூ 3:16-17)

    வேதத்தில் ஒரு எழுத்தின் உறுப்பு அவமாய்ப் போவதைப்பார்க்கிலும், வானமும் பூமியும் ஒழிந்துபோவது எளிதாயிருக்கும். (லூக்கா 16:17)

இவர்களது வேதத்தின் அளவுகோலை இவர்களது புதிய ஏற்பாடு நிறைவு செய்கிறதா இனி வரும் தொடர்களில் காணவிருக்கிறோம் இன் ஷா அல்லாஹ். இவர்களது வேதம் எழுத்தினை தெளிவாக்குவதற்கு முன்பு அது எந்த மொழியின் எழுத்து என்பதை தெளிவு படுத்தியதா??? எப்படி தெளிவு படுத்தியுள்ளது??? என்பதை இக்கட்டுரையில் காணவுள்ளோம்.

    ✅புதிய ஏற்பாட்டின் மூல மொழியும் அதன் குழப்பமும்
    உறைகளின் வகைப்பாடு - ஓர் அறிமுகம்
    வாதம் 1: புதிய ஏற்பாட்டின் மொழி கிரேக்கமே!!!!
              ✔உதாரணங்களும் சுருக்கமான விளக்கமும்
    வாதம் 2: புதிய ஏற்பாட்டின் மொழி அரமேயமே!!!!
              1.இரட்டை அர்த்த வார்த்தைகள்- முரண்பட்ட கிரேக்க எழுத்துப்பிரதிகளும்
              2.கிரேக்க புதிய ஏற்பாட்டில் பல அரமேய வார்த்தைகள் ஒலிபெயர்ப்பு (transliterate) செய்து பயன்படுத்தப்பட்டிருப்பது
              3.இயேசுவின் பேச்சு வழக்கு மொழி புனிதமான ஹீப்ரூவின் மருவலான அரமேயமே.
              4.மூலமொழி கிரேக்கம் என்பதை மறுக்கும் சில வசனங்கள்
    புதிய ஏற்பாட்டின் மூல மொழி எது என்பதில் குழம்பி நிற்கும் கிறித்தவசபைகள்
    புதிய ஏற்பாட்டின் மொழி குறித்த குழப்பமும் காற்றில பரந்த வேத பாதுகாப்பும்          

       புதிய ஏற்பாடு அதன் அளவுகோலின் படி பாதுக்காக்கப்பட்டுள்ளதா என்பதற்கு அதன் மொழி எது என்று அறிவது மிக அவசியமாகும். எழுத்தின் ஒரு உருபு அவமாவதையே மிகப்பெரும் விஷயமாக நாம் மேற்குறிபிட்ட வசனம் காட்டுகிறது, ஆனால் எதார்த்தம் வேறாக உள்ளது. எந்த பெருமதத்தின் நூலிலும் இல்லாத மொழி சிக்கல் கிறித்தவர்களின் புதிய ஏற்பாட்டில் காணப்படுகிறது. உதாரணமாக அல் குர்ஆனை எடுத்துக்கொண்டால் அது அரபு மொழியில் இறக்கப்பட்டதாக அதுவே சான்று பகர்கிறது. (அல் குர்ஆன் 16:103, 41:3, 41:44). மறுபுறம் புதிய ஏற்பாட்டின் மூல மொழி எது என்பதில் பல ஆண்டு கால குழப்பம் கிறித்தவ உலகில் நிலவி வருவது அனைவரும் அறிந்த ஒன்று. புதிய ஏற்பாட்டின் மூலமொழி கிரேக்கம் என்று வாதிடுவோர் ஒரு சாராரும். புதிய ஏற்பாட்டின் மூல மொழி அரமேயம் என்று மற்றொரு சாராரும் எதிர் எதிராக பலதசாப்தங்களால வாதித்து வருகின்றனர். அவர்களின் வாதம் மற்றும் பிரதி வாதங்கள் குறித்த சிறு கண்ணோட்டத்தை இங்கு தருகிறோம், அதுவே புதிய ஏற்பாட்டின் அள்ளியும் புள்ளியும் அவமாகி, வேதம் சல்லி சல்லியாக ஆகிவிட்டதை படம்பிடித்து காட்டும். இங்கு புதிய ஏற்பாட்டின் மூலமொழி எது? என்று நிறுவுவது நமது நோக்கம் அன்று. மாறாக வேத மொழி குறித்து கிறித்தவ அறிஞர்களே எப்படி முரண்படுகின்றனர் என்பதை இங்கு விளக்குவதே நமது நோக்கம்.

        புதிய ஏற்பாட்டின் மூல மொழி எது என்று வாதிப்போரின் கருத்தினை ஆய்வு செய்வதற்கு முன்பு, புதிய ஏற்பாட்டின் மொழிபெயர்ப்பிற்கு பயன்படுத்தப்படும் அடிப்படை உறைகளின்  வகைப்பாடு குறித்து சிறிது அறிந்து கொள்வது அவசியமாகும். 

  உறைகளின்  வகைப்பாடு - ஓர் அறிமுகம்: 

Textus Receptus: "Textus Receptus" என்ற இலத்தீன் சொல்லின் பொருள் பெறப்பட்ட உறை என்பதாகும். இதுவே கி.பி.15ம் நூற்றாண்டிற்கு பிறகான புதிய ஏற்பாட்டின் வட்டார மொழிபெயர்ப்புகளுக்கு உரை அடிப்படையை வழங்கியது. இது 15-16ம் நூற்றாண்டில், உறை அடிப்படையில் துள்ளிய கிரேக்க புதிய ஏற்பாட்டினை உருவாக்கும் நோக்குடன் அச்சிடப்பட்ட உறையாகும். கிபி 15ம் நூற்றாண்டில் எராஸ்மஸ் எனும் டச்சு இறையியலாளர், 10ம் நூற்றாண்டிற்கு பின்னுள்ள கிரேக்க, இலத்தீன் கையெழுத்து பிரதிகளில் இருந்து தயாரித்ததாகும். எராஸ்மஸ் மேலும் இரு பதிப்புக்களை 1527 மற்றும் 1535 ஆகிய ஆண்டுகளில் வெளியிட்டார். இவருக்கும் பிறகு பல Textus Receptus-கள் வெளிவந்தன. கொலினெஸ் பதிப்பு 1534,ஸ்டீபன்ஸ் பதிப்பு 1546,1549,1550,1551, தியோடர் பீஸாவின் 1565 முதல் 1611 வரையிலான 10 பதிப்புக்கள், எல்ஸீவரின் 1624,1633, 1641 ஆகிய பதிப்புக்கள் குறிப்பிடத்தக்கவை. இந்த Textus Receptus-தான் பின்னாள் வந்த 250 ஆண்டுக்களுக்கு, புதிய ஏற்பாட்டின் மொழியாக்கத்திற்கு அடிப்படையாக அமைந்த கிரேக்க பதிப்பாக கோலோச்சியது. இந்த Textus Receptus-தான் KJV, NKJV பைபிள்களின் அடிப்படையாக அமைந்தது.

Majority Text: "Majority Text" என்பது பெரும்பான்மை உறை என்பதாகும். இதனை பைஸாந்திய உறை அல்லது திருச்சபையின் உறை என்றும் கூறுவார்கள். இது வேதத்தின் அசலான வாசிப்பு எது என்பதை எந்த மாறுபட்ட வாசிப்பு கையெழுத்து பிரதிகளில் அதிகமுறை இடம் பெறுகிறது என்ற அளவுகோலின் படி நிர்ணயிக்கும் முறையாகும். இந்த முறையை ஜனநாயக முறை என்றும் அழைப்பார்கள். இந்த முறைமை அடிப்படையாக கொண்டு டல்லாஸ் இறையியல் செமினரியின் இரு அறிஞர்களான ஜேன் ஹாட்ஜ்ஸ் மற்றும் ஆர்தர் ஃபர்ஸ்டட் 1982ல் The Greek New Testament According to the Majority Text என்ற புதிய ஏற்பாட்டின் மொழிபெயர்ப்பிற்கு பயன்படுத்தப்படும் அடிப்படை உறையை வெளியிட்டார்கள். இந்த அடிப்படை உறையை பயன்படுத்தி Berean Standard Bible பதிப்பிக்கப்பட்டது.

Critical Text: "Critical Text" என்பது புதிய ஏற்பாட்டின் கிரேக்க உரையாகும், இது பண்டைய கிரேக்க கையெழுத்துப் பிரதிகள் மற்றும் அவற்றின் மாறுபாடுகளின் தொகுப்பில் இருந்து முடிந்த அளவிற்கான மிகவும் துல்லியமான வார்த்தைகளைப் பெறுவதற்கான முயற்சியினால் உண்டான உரையாகும். Textus Receptus-ஐ பிழைகள் நிறைந்த ஒரு தரம் குறைந்த உரை என்று நிராகரித்து, வெஸ்ட்காட் மற்றும் ஹார்ட் ஆகிய அறிஞர்கள், இரண்டு 4ம் நூற்றாண்டு கையெழுத்துப் பிரதிகளான கோடெக்ஸ் வாடிகனஸ் மற்றும் கோடெக்ஸ் சினைட்டிகஸ் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி புதிய கிரேக்க உரையைத் தொகுத்தனர். வெஸ்ட்காட் மற்றும் ஹார்ட்டின் பணியின் விளைவாக, அவர்களின் விமர்சன உரையானது கிட்டத்தட்ட இரண்டு தலைமுறைகளாக நவீன விளக்கம் மற்றும் மொழிபெயர்ப்பிற்காக பயன்படுத்தப்படும் நிலையான கிரேக்க உரையாக மாறியது. Novum Testamentum Graece, UBS5 ஆகியவை தற்காலத்தில் பிரசித்திபெற்ற கிரேக்க Critical Edition-களாக விளங்குகிறது. New International Version, the New American Standard Bible, the English Standard Version, மற்றும் தற்காலத்தில் வெளிவரும் பல புதிய ஏற்பாட்டின் மொழியாக்கத்தின் அடிப்படை உறையாக இவை அமைந்துள்ளன.


    புதிய ஏற்பாட்டின் மூல மொழி கிரேக்கம் என்போர் பல தரப்பட்ட ஆதாரங்களை முன்வைத்தாலும், அவர்களது வாதங்களில் மிக முக்கியமான கோணமாக நாம் கருதுவது புதிய ஏற்பாட்டின் உள்ளடக்கத்தின் அடிப்படையாக கொண்ட வாதத்தைதான். அதாவது புதிய ஏற்பாட்டின் உள்ளடக்கமே அதன் மூல மொழி அரமேயம் அல்ல என்பதை காட்டுவதாய் உள்ளது. உதாரணமாக பின்வரும் வசனங்களை நாம் எடுத்துக்கொள்வோம்.
    அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.( மத்தேயூ 1:23) 
        ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு: ஏலி! ஏலி! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.(மத்தேயூ 27:46)

    அவர் தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு, எபிரெயு பாஷையிலே கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்குப் புறப்பட்டுப்போனார்கள்.(யோவான் 19:17)

     இயேசு திரும்பி, அவர்கள் பின்செல்லுகிறதைக் கண்டு: என்ன தேடுகிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: ரபீ, நீர் எங்கே தங்கியிருக்கிறீர் என்று கேட்டார்கள்; ரபீ என்பதற்குப் போதகரே என்று அர்த்தமாம்.(யோவான் 1:38)

    அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு: மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான்; மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம்.(யோவான் 1:41)

    பிள்ளையின் கையைப் பிடித்து: தலீத்தாகூமி என்றார்; அதற்கு, சிறுபெண்ணே எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்று அர்த்தமாம்.(மாற்கு 5:41)

    வானத்தை அண்ணார்ந்துபார்த்து, பெருமூச்சுவிட்டு: எப்பத்தா என்றார்; அதற்குத் திறக்கப்படுவாயாக என்று அர்த்தமாம்.(மாற்கு 7:34)
    ஒன்பதாம்மணி நேரத்திலே, இயேசு: எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.(மாற்கு 15:34)

        மேற்குறிபிட்ட வசனங்களில் இடம்பெறும் “இம்மானுவேல்”, “ஏலி! ஏலி! லாமா சபக்தானி”, “கொல்கொதா”, “மேசியா”, “ரபீ”, “தலீத்தாகூமி”, “எப்பத்தா”, “எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி”, ஆகிய சொற்கள் அனைத்தும் எபிரேய சொற்கள் ஆனால் அவற்றை எல்லாம் மொழியாக்கம் செய்துள்ளனர். புதிய ஏற்பாடு உண்மையில் எபிரேயம் பேசும் மக்களுக்காக எழுதப்பட்டிருந்தால் அவற்றை மொழியாக்கம் செய்யும் அவசியம் ஏற்பட்டிருக்காது. எனவே புதிய ஏற்பாட்டின் நூல்கள் எபிரேயம்/அரமேய பேசாத மக்களுக்கு அல்லது கிரேக்கம் பேசும் மக்களுக்காக எழுதப்பட்டது. என்பது கிரேக்கம்தான் புதிய ஏற்பாட்டின் மூல மொழி என்போரின் பிரதான வாதம். இதுவல்லாமல், இன்றிருக்கும் புதிய ஏற்பாட்டின் கிரேக்க பிரதிகளே காலத்தால் முந்தியவை, எனவே கிரேக்கம்தான் புதிய ஏற்பாட்டின் மூல மொழி என்பது இவர்களின் வாதம்.     


புதிய ஏற்பாட்டின் மூலமொழி அரமேயமே என்போரது வாதங்கள் பின்வரும் ஆதாரங்களை அடிப்படையாக கொண்டது.


        புதிய ஏற்பாட்டின் கிரேக்க பிரதிகளில் அநேக இடங்களில் ஒரே வசனத்தில் வெறுபட்ட பொருளை தரும் இரு கிரேக்க வார்த்தைகள் வேறு வேறு பிரதிகளில் இடம் பெறுகிறது. ஆனால் அரமேய பிரதிகளில் இருக்கும் அதே வசனத்திற்கான சொற்கள் இவ்விரு கிரேக்க வார்த்தைகளின் பொருளையும் தருவதாய் இருப்பதால், கிரேக்க பிரதிகள் அரமேய புதிய ஏற்பாட்டின் பிரதிகளை அடிப்படையாக கொண்டு மொழிபெயர்க்கப்பட்டவை என்று வாதிக்கின்றனர். அவர்கள் தரும் சில உதாரணங்களை கீழே காண்போம்.

மத்தேயு 11.19 :- 

உரை வகை வசனம் உரை சார் மொழியாக்கங்கள்
Textus Receptus

ηλθεν ο υιος του ανθρωπου εσθιων και πινων και λεγουσιν ιδου ανθρωπος φαγος και οινοποτης τελωνων φιλος και αμαρτωλων και εδικαιωθη η σοφια απο των τεκνων αυτης



The Son of man came eating and drinking, and they say, Behold a man gluttonous, and a winebibber, a friend of publicans and sinners. But wisdom is justified of her children.
Darby, Douay-Rheims, Geneva, ISV, KJ21, KJV, LITV, MKJV, NKJV, Webster, Wycliffe, YLT.
Majority Text

Ἦλθεν ὁ Υἱὸς τοῦ ἀνθρώπου ἐσθίων καὶ πίνων, καὶ λέγουσιν· ἰδοὺ ἄνθρωπος φάγος καὶ οἰνοπότης, τελωνῶν φίλος καὶ ἁμαρτωλῶν. καὶ ἐδικαιώθη ἡ σοφία ἀπὸ τῶν τέκνων αὐτῆς.


The Son of man came eating and drinking, and they say, Behold a man gluttonous, and a winebibber, a friend of publicans and sinners. But wisdom is justified of her children.”
Darby, Douay-Rheims, Geneva, ISV, KJ21, KJV, LITV, MKJV, NKJV, Webster, Wycliffe, YLT.
Critical Text

ἦλθεν ὁ υἱὸς τοῦ ἀνθρώπου ἐσθίων καὶ πίνων, καὶ λέγουσιν• ἰδοὺ ἄνθρωπος φάγος καὶ οἰνοπότης, τελωνῶν φίλος καὶ ἁμαρτωλῶν. καὶ ἐδικαιώθη ἡ σοφία ἀπὸ τῶν ἔργων αὐτῆς.


The Son of Man came eating and drinking, and they say, 'Behold, a gluttonous man and a drunkard, a friend of tax collectors and sinners!' Yet wisdom is vindicated by her deeds
ALT, ASV, BBE, CEV, ESV, GodsWord, Holman, NASB, NIV, NIV-UK, NLT, Rotherham, RSV, TEV, WE, Weymouth.
Aramaic Text
ܐܬܐ ܒܪܗ ܕܐܢܫܐ ܐܟܠ ܘܫܬܐ ܘܐܡܪܝܢ ܗܐ ܓܒܪܐ ܐܟܘܠܐ ܘܫܬܐ ܚܡܪܐ ܘܪܚܡܐ ܕܡܟܣܐ ܘܕܚܛܝܐ ܘܐܙܕܕܩܬ ܚܟܡܬܐ ܡܢ ܥܒܕܝܗ

אתא ברה דאנשׁא אכל ושׁתא ואמרין הא גברא אכולא ושׁתא חמרא ורחמא דמכסא ודחטיא ואזדדקת חכמתא מן עבדיה

The Son of Man came eating and drinking, and they say, 'Behold, a gluttonous man and a drunkard, a friend of tax collectors and sinners!' Yet wisdom is vindicated by her deeds/Childrens
The Peshitta Aramaic-English Interlinear Gospels by Rev. Glenn David Bauscher

The Peshitta Aramaic-English New Testament An Interlinear Translation (Volume 1- The Gospels) Translated (with notes and commentary) by Rev. Glenn David Bauscher, மேற்குறிபிட்ட வசனத்தின் அடிக்குறிப்பில் பின்வருமாறு கூறுகிறது
The Greek has two readings: The Majority of mss. have, “Works” and the Critical Text (2 mss.) has Children”. עבדיה - can mean either “Works”or “Servant”. The Greek word “Teknon”(“Child”) can refer to a disciple or pupil as well
அதாவது עבדיה- என்ற சொல்லிற்கு செயல்கள் என்றும், பிள்ளைகள் என்றும் பொருள் உண்டு.

மாற்கு 4:30 :-

உரை வகை வசனம் உரை சார் மொழியாக்கங்கள்
Textus Receptus

και ελεγεν τινι ομοιωσωμεν την βασιλειαν του θεου η εν ποια παραβολη παραβαλωμεν αυτην

And he said, Where unto shall we liken the kingdom of God? or with what comparison shall we compare it?

DARBY, Douay-Rheims, Geneva, Gods Word, KJ21, KJV, LITV, MKJV, NKJV, Webster, Wycliffe, YLT
Majority Text

Καὶ ἔλεγε· πῶς ὁμοιώσωμεν τὴν βασιλείαν τοῦ Θεοῦ; ἢ ἐν τίνι παραβολῇ παραβάλωμεν αὐτὴν;

And he said, Where unto shall we liken the kingdom of God? or with what comparison shall we compare it?

DARBY, Douay-Rheims, Geneva, Gods Word, KJ21, KJV, LITV, MKJV, NKJV, Webster, Wycliffe, YLT
Critical Text

Καὶ ἔλεγεν· πῶς ὁμοιώσωμεν τὴν βασιλείαν τοῦ θεοῦ ἢ ἐν τίνι αὐτὴν παραβολῇ θῶμεν;

Another saying of His was this: "How are we to picture the Kingdom of God? or by what figure of speech shall we represent it?”

CEV, NASB, NIV, NIV-UK, NLT, TEV, Weymouth
Aramaic Text

ܘܐܡܪ ܠܡܢܐ ܢܕܡܝܗ ܠܡܠܟܘܬܐ ܕܐܠܗܐ ܘܒܐܝܢܐ ܡܬܠܐ ܢܡܬܠܝܗ

 ואמר למנא נדמיה למלכותא דאלהא ובאינא מתלא

נמתליה


And he said, To what shall we compare the kingdom of God? and with what parable shall we picture/compare it?

Lamsa, Murdock 
        மேற்குறிபிட்ட வசனத்தின் ܡܬܠܐ – என்ற சொல்லிற்கு ஒப்புமையாக்குவது , எடுத்துரைத்தல் என்று இரு பொருள் இருப்பதாக Payne Smith ன் லெக்ஸிகான் ப.எண்: 317 கூறுகிறது. மேற்குறிபிட்ட உதாரணங்களை போல் இன்னும் பல வசனங்கள் இருப்பதால், கிரேக்க பிரதிகளில் இடம்பெறும் இரண்டு சொற்களின் பொருளையும் குறிப்பிடும் ஒரே சொல் அரமேயத்தில் இருப்பதால், அரமேய எழுத்துப்பிரதிகளின் கிரேக்க மொழியாக்க பிரதிகளே நமக்கு கிடைக்கும் கிரேக்க பிரதிகள் என்பது இவர்களின் வாதம்.


    கிரேக்க புதிய ஏற்பாட்டின் பிரதிகள் பல அரமேய வார்த்தைகளை கிரேக்கத்தில் ஒலிபெயர்ப்பு(transliterate) செய்து பல வசனங்களில் பயன்படுத்தியுள்ளதை காணமுடிகிறது.  உதாரணமாக
            
அரமேயச் சொல் ஒலிபெயர்ப்பு செய்யப்பட்ட கிரேக்க சொல் வசனம்
ܪܩܐ – רקא –  ரகா-  முட்டாள்

ῥακά- ரகா

மத்தேயூ 5:22
ܩܢܢܝܐ – קנניא- கனானியா

Καναναῖος- கனனாயோஸ்

 மத்தேயூ 10:4,
 மாற்கு 3:18
ܐܘܫܥܢܐ - אושׁענא  - ஹொசன்னா

ὡσαννὰ- ஹொசன்னா

மத்தேயூ 21:9, 15; மாற்கு 11:9, 
யோவான் 12:13
ܪܰܒ݁ܺܝ – רבי - ரப்பீ
ῥαββουνί- ரப்பூனீ
மாற்கு 10:51,
யோவான் 20:16

       
     மேற்குறிபிட்ட சொற்களுக்கு நிகரான கிரேக்க சொற்கள் இருந்தாலும் இவ்வாறு ஒலிபெயர்ப்பு(transliterate) செய்து பயன்படுத்தப்பட்டுள்ளதால், கிரேக்க புதிய ஏற்பாட்டின் பிரதிகள், அரமேய பிரதிகளின் மொழிபெயர்ப்பே என்பது இவர்களது வாதம்.


            ஏசு வாழ்ந்த காலத்தில், யூதேயாவில் பாலஸ்தீனம் உள்ளிட்ட பகுதிகளில் யூத மக்களின் பேச்சு வழக்கு மொழியாக இருந்தது கிரேக்கம் அல்ல, மாறாக ஹீப்ரூவின் திரிபான அரமேயம். இது குறித்து ஏசுவின் சமகாலத்தவரான ஜோசபஸ் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
                I have also taken a great deal of pains to obtain the learning of the Greeks, and understand the elements of the Greek language, although I have so long accustomed myself to speak our own tongue, that I cannot pronounce Greek with sufficient exactness; for our nation does not encourage those that learn the languages of many nations, and so adorn their discourses with the smoothness of their periods;
         கிரேக்கர்களின் கல்விகளைப் பெறுவதற்கும், கிரேக்க மொழியின் கூறுகளைப் புரிந்துகொள்வதற்கும் நான் மிகுந்த சிரத்தை எடுத்துக்கொண்டேன், ஆனால் நான் நீண்ட காலமாக எனது சொந்த மொழியைப் பேசப் பழகியிருந்தாலும், போதுமான துல்லியத்துடன் என்னால் கிரேக்கத்தை உச்சரிக்க முடியவில்லை;ஏனென்றால், பல தேசங்களின் மொழிகளைக் கற்று, அவர்களின் ஆக்கங்களை அவர்களின் காலகட்டங்களின் சுமூகம் அலங்கரிக்கிறவர்களை நம் தேசம் ஊக்குவிப்பதில்லை; ( Antiquities of Jews XX, chapter XI)

        I have proposed to myself, for the sake of such as live under the government of the Romans, to translate those books into the Greek tongue, which I formerly composed in the language of our country, and sent to the Upper Barbarians; Joseph, the son of Matthias, by birth a Hebrew, a priest also, and one who at first fought against the Romans, myself, and was forced to be present at what was done afterwards, [am the author of this work]. 

   ரோமானியர்களின் அரசாங்கத்தின் கீழ் வசிப்பவர்களுக்காக, அந்த புத்தகங்களை கிரேக்க மொழியில் மொழிபெயர்க்க நான் முன்மொழிந்தேன், அதை நான் முன்பு நம் நாட்டின் மொழியில் இயற்றி, மேலிருக்கும் (கிரேட்ட ரோம) நாகரிகத்தை சாராதவர்களிடம் அனுப்பினேன்; மத்தியாஸின் மகனான ஜோசப், பிறப்பால் எபிரேயன், பாதிரியும் கூட, முதலில் ரோமானியர்களுக்கு எதிராக போராடியவனும் நானே , பின்னர் நானே நடந்தவற்றில் கலந்துகொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, [இந்த படைப்பின் ஆசிரியர் நான்]. (Jewish Wars (Book 1, Preface, Paragraph 1) 

        மேற்குறிபிட்ட ஜோசபஸின் குறிப்புகள் ஊடாக நாம் தெரிந்து கொள்வது இதைத்தான். அதாவது கிரேக்கம் ஏசுவின் காலத்தில் பேச்சுவழக்கு மொழியல்ல. அதாவது பெரும்பகுதி யூத மக்களால் பேசப்படும் மொழியல்ல. ஜோசபஸின் கூற்றின் படி மிக சிரத்தை எடுத்து கற்றவர்கள் மட்டுமே கைகொள்ளும் மொழியாக கிரேக்கம் இருந்துள்ளது. ஏசுவை முதலில் ஏற்று கொண்டவர்கள் யார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. பேதுரு போன்ற மக்கள்தான் முதலில் ஏற்றவர்கள் என்று புதிய ஏற்பாடு பதிவு செய்கிறது. எனவே ஏசுவின் பேசுமொழி கிரேக்கம் அல்ல. 

4.மூலமொழி கிரேக்கம் என்பதை மறுக்கும் சில வசனங்கள்

        எப்படி புதிய ஏற்பாட்டில் பல அரமேய சொற்கள் விளக்கப்ப்பட்டுள்ளதோ, அதே போல் புதிய ஏற்பாட்டின் சில வசனங்களில் கிரேக்க சொற்களும் விளக்கப்பட்டுள்ளது. 

Acts 9:36 யோப்பா பட்டணத்தில் கிரேக்குப்பாஷையிலே தொற்காள் என்று அர்த்தங்கொள்ளும் தபீத்தாள் என்னும் பேருடைய ஒரு சீஷி இருந்தாள்; அவள் நற்கிரியைகளையும் தருமங்களையும் மிகுதியாய்ச் செய்துகொண்டுவந்தாள்.

Rev 9:11 அவைகளுக்கு ஒரு ராஜன் உண்டு, அவன் பாதாளத்தின் தூதன்; எபிரெயு பாஷையிலே அபெத்தோன் என்றும், கிரேக்கு பாஷையிலே அப்பொல்லியோன் என்றும் அவனுக்குப் பெயர்.

இன்னும் இதுபோல் பல தரப்பட்ட வாதங்களை அரமேயத்தை முன்னிறுத்துவோர் வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையிலும், புதிய ஏற்பாட்டின் உள்ளடக்கத்தின் அடிப்படையிலும் முன்வைக்கின்றனர். அவை குறித்து எல்லாம் பின்வரும் கட்டுரைகளில் இன் ஷா அல்லாஹ் காண்போம். இங்கு பிரதான சில வாதங்களையே நாம் குறிப்பிட்டு காட்டியுள்ளோம். அதுவே சிந்திக்கும் மக்களுக்கு போதுமானது.

  புதிய ஏற்பாட்டின் மூல மொழி எது என்பதில் குழம்பி நிற்கும் கிறித்தவசபைகள்

புதிய ஏற்பாட்டின் மூல மொழி அரமேயம் என்றும் பெஸிட்டாதான் மூல பிரதி என்றும், பின்வரும் சிரியாக் கிறித்தவ திருச்சபைகள் கூறியும் வருகின்றன.

சிரியாக் ஆர்த்தடாக்ஸ் திருச்சபை, ஜேக்கபைட் சர்ச்- தமாஸ்கஸ், சிரியா,

மலங்கரா ஆர்த்தடாக்ஸ் சிரியன் திருச்சபை - கொச்சி, கேரளா, இந்தியா, 

மலபார் சுதந்திர சிரியன் திருச்சபை, தொழியூர், கேரளா, இந்தியா

மரோனைட் கத்தோலிக் திருச்சபை, பிகேர்கேயில், லெபனான்

சிரியாக் கத்தோலிக் திருச்சபை, பெய்ரூத், லெபனான்

மலங்கரா சிரியன் கத்தோலிக்க திருச்சபை, திருவனந்தபுரம், கேரளா, இந்தியா

மார் தோமா சிரியன் திருச்சபை, கேரளா, இந்தியா

செயின்ட் தாமஸ் இவாஞ்சலிகல் சர்ச் ஆஃப் இந்தியா, திருவலகேரளா, இந்தியா

கிழக்கு அசிரியன் திருச்சபை

கல்தேய சிரிய திருச்சபை

கிழக்கின் பண்டைய திருச்சபை

கல்தேய கத்தோலிக்க திருச்சபை

சீரோ மலபார் திருச்சபை…………………….இன்னும் பல


        இஸ்லாமிய மக்களும் பல பிரிவுகளாக உலகில் பிரிந்து கிடந்தாலும், குர்ஆனின் மூலமொழி அரபி என்பதை எந்த இஸ்லாமியரும் இவ்வுலகில் மறுப்பதில்லை. குர்ஆனின் மூல கையெழுத்துப்பிரதிகள் என்று கூறப்படுபவை எல்லாம் அரபியில் இருப்பதை காணமுடிகிறது. கிறித்தவ புதிய ஏற்பாட்டின் நிலை என்ன என்பதை மேலே நாம் விளக்கிவிட்டோம். கிரேக்கம் தான் மூல மொழி என்போரின் வாதமும், அரமேயம்தான் மூல மொழி என்போரின் வாதமும், ஒன்றுக்கு ஒன்று சளைத்ததாகவும் இல்லை.
வேதத்தில் ஒரு எழுத்தின் உறுப்பு அவமாய்ப் போவதைப்பார்க்கிலும், வானமும் பூமியும் ஒழிந்துபோவது எளிதாயிருக்கும்.(லூக்கா 16:17)
    மிஸனரிகள் கூறுவது போல கிரேக்க பிரதிகளும், அரமேய பிரதிகளும் ஒரே உட்கருவை கொண்டவைதான் என்ற வாதம், அவர்களது புதிய ஏற்பாட்டின் வசனங்களுக்கு முரணானது. புதிய ஏற்பாடு, வேத பாதுகாப்பின் அளவுகோலாக எழுத்தின் உறுப்பை முன்னிறுத்துகிறது. கிரேக்க எழுத்தின் உறுப்பும், அரமேய எழுத்தின் உறுப்பும் ஒன்றாய் இருக்கிறது என்பதை யாரும் ஏற்க மாட்டார்கள். எது மூல மொழி என்று அறிந்து கொள்ளமுடியாத அளவிற்கு வாத பிரதிவாதங்கள் உள்ளன. மூல மொழி எது என்பதிலேயே கிறித்தவ சபைகள் குழம்பி நிற்கும் போது, எழுத்தின் பாதுகாப்பை எப்படி உறுதிபடுத்த இயலும். மேற்குறிபிட்ட புதிய ஏற்பாட்டின் வசனங்களுக்கு இணங்க, ஒன்று புதிய ஏற்பாடு வேதம் அல்ல என்று கிறித்தவர்கள் ஏற்க வேண்டும் அல்லது ஏசுவின் வார்த்தைகள் பொய்பிக்கப்பட்டது என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும்.

Reference:

No comments:

Post a Comment