பக்கங்கள் செல்ல

Wednesday, September 4, 2024

திருச்சபை பிதாக்களின் மேற்கோல்களும் காணாமல் போன தேவ வாக்குகளும்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم



    கிறித்தவர்களின் வேதமான புதிய ஏற்பாட்டில், கிறித்தவ திருச்சபை பிதாக்களின் ஆக்கங்களில் காணப்படும் மாறுபட்ட வாசிப்புக்களை சென்ற கட்டுரையில் கண்டிருந்தோம்.(1) இந்த கட்டுரை அதன் தொடர்ச்சி என்று கொள்ளலாம். ஏனென்றால் இந்த தொடரில் திருச்சபை பிதாக்களின் ஆக்கங்களில் காணப்படும், புதிய ஏற்பாட்டில் இல்லாத இயேசுவால் கூறப்பட்ட வசனங்களை காணவிருக்கிறோம், இன் ஷா அல்லாஹ்.

    இஸ்லாமிய கிரந்தங்களில் காணப்படும் மாறுபட்ட குர்ஆன் ஓதல்களை கொண்டுவந்து குர்ஆனின் பகுதிகள் காணாமல் போனதாக உளறிய வாதங்களுக்கு ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக நாம் விளக்கம் கொடுத்திருக்கிறோம்.(2)அந்த வசனங்கள் ஒரு சில அறிவிப்புக்களில் காணப்படுபவை, முஸ்லீம் சமூகத்தினால், பெரும்திரள் மக்களினால் ஓதல் கேட்டல் மூலமாக வாழையடி வாழையாக கடத்தப்பட்ட முத்தவாதீரான கிராத்களில் அவை காணப்படாததினால் அவை நிராகரிக்கப்படுகிறது என்ற தெளிவான, பகுத்தறிவான அளவுகோலை கொண்டு இஸ்லாமிய சமூகம் அதனை நிராகரிக்கிறது என்பதையும் ஒவ்வொரு கட்டுரையிலும் விளக்கி கூறியிருக்கிறோம். இப்படி அறிவார்ந்த விளக்கத்தை புறம் தள்ளும் கிறித்தவ மிசனரிகளின், திருச்சபை பிதாக்களின் ஆக்கங்களில் காணப்படும், புதிய ஏற்பாட்டில் இல்லாத இயேசுவால் கூறப்பட்ட வசனங்களுக்கு அவர்களால் கூறப்படும் அறிவார்ந்த???? விளக்கத்தை எதிர் நோக்கி இந்த கட்டுரையும், இதற்கு முந்தைய கட்டுரையும் உருவாக்கப்பட்டுள்ளது.

    நற்செய்தி நூல்களின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகும் போதெல்லாம், இந்த கிறித்தவ திருச்சபை பிதாக்களின் நற்செய்தி நூல்களின் மேற்கோள்கள் அதனை எதிர்கொள்ள மிசனரிகள் பயன்படுத்துவதுண்டு. உதாரணமாக நார்மன் கீஸ்லரின் தனது Baker encyclopedia of christian apologetics பின்வருமாறு கூறுகிறார்
"Of the four gospels alone there are 19,368 citations by the church fathers from the late first century on. This includes 268 by Justin Martyr (100-165), 1038 by Ireneaus (active in the late second century), 1017 by Clement of Alexandria (ca. 155-ca. 220), 9231 by Origen (ca. 185-ca. 254), 3822 by Tertullian (ca. 160s-ca. 220), 734 by Hippolytus (d. ca. 236) and 3258 by Eusebius (ca. 265-ca. 339)
நான்கு சுவிசேஷங்களில் மட்டும் முதல் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து சர்ச் பிதாக்களால் 19,368 மேற்கோள்கள் காட்டப்பட்டுள்ளன. இதில் தியாகி ஜஸ்டின்-268 (சுமார் 100-165 காலப்பகுதி), ஐரேனியஸ்- 1038 (இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் செயல்பாட்டில் இருந்தவர்), அலெக்ஸாண்ட்ரியாவின் கிளெமென்ட்- 1017 (சுமார் 155-. 220 காலப்பகுதி), ஓரிகன்- 9231 (சுமார் 185- 254 காலப்பகுதி) டெர்டுல்லியன்- 3822 (சுமார் 160களில் இருந்து 220 வரையிலான காலப்பகுதி), ஹிப்போலிட்டஸ்-734 (d. ca. 236) மற்றும் யூசிபியஸ் 3258 (சுமார் 265- 339 காலப்பகுதி) ஆகியவை அடங்கும். (Baker-encyclopedia-of-christian-apologetics by Norman L. Geisler Nn, P.No. 18).
        இப்படி நற்செய்தி நூலின் ஆதாரமாக சிலாகித்து காட்டப்படும் திருச்சபை பிதாக்களின் ஆக்கங்களில் இந்த கட்டுரையில் நாம் பட்டியலிட்டுள்ள பின்வரும் இயேசுவின் வார்த்தைகளை இன்றிருக்கும் புதிய ஏற்பாட்டில் இருந்து கிறித்தவ மிசனரிகள் காட்டுமாறு அழைக்கப்படுகிறார்கள்.

        For it is written, "Cling to those who are holy; for those who cling to them will themselves be made holy."
    “பரிசுத்தமானவர்களை பற்றிக்கொள்ளுங்கள்; ஏனென்றால், அவர்களை பற்றிக்கொள்பவர்கள் தாங்களும் பரிசுத்தமாக்கப்படுவார்கள்” என்று எழுதப்பட்டுள்ளது (I Clement 46.2)

        For this reason, when you do these things, the Lord has said, "Even if you were nestled close to my breast but did not do what I have commanded, I would cast you away and say to you, 'Leave me! I do not know where you are from, you who do what is lawless.'"

     இந்தக் காரணத்தினாலேயே, நீங்கள் இவற்றைச் செய்யும்போது,. “நீ என் மார்புக்கு அருகில் கூடு கட்டி இருந்தாலும், நான் கட்டளையிட்டதைச் செய்யாமல் இருந்தால், நான் உன்னைத் தூக்கி எறிந்துவிட்டு, 'என்னை விட்டுவிடு! அக்கிரமத்தைச் செய்கிற நீ எங்கிருந்து வருகிறாய் என்று எனக்குத் தெரியாது” என்று கர்த்தர் கூறுகிறார்(II Clement 4.5)

Jesus said to Peter, "After they are dead, the sheep should fear the wolves no longer. So too you: do not fear those who kill you and then can do nothing more to you; but fear the one who, after you die, has the power to cast your body and soul into the hell of fire. (II Clement 6.4)

    இயேசு பேதுருவிடம், "ஆடுகள் இறந்த பிறகு, அவை ஓநாய்களுக்கு அஞ்சப்போவதில்லை அதுபோல்தான் நீங்களும்: உங்களைக் கொல்பவர்களுக்கு அஞ்சாதீர்கள், பிறகு உங்களை ஒன்றும் செய்ய முடியாது; ஆனால் நீங்கள் இறந்த பிறகு, உங்கள் உடலையும் ஆன்மாவையும் அக்கினி நரகத்தில் தள்ளும் ஆற்றலைப் பெற்றவனுக்கு அஞ்சுங்கள்.” என்று கூறினார் (II Clement 6.4)

For the Lord says, "My name is constantly blasphemed among all the Gentiles And again he says, "Woe to the one who causes my name to be blasphemed."And again he says, "Woe to the one who causes my name to be blasphemed."( II Clement 13.2)

        கர்த்தர் கூறுகிறார்: “எல்லாப் புறஜாதிகளிடத்திலும் என் பெயர் தொடர்ந்து நிந்திக்கப்படுகிறது”. மேலும் அவர் மீண்டும் கூறுகிறார்: "என் பெயரை நிந்திக்கச் செய்கிறவனுக்கு கேடுதான்.” மேலும் அவர் மீண்டும் கூறுகிறார், "என் பெயரை நிந்திக்கச் செய்கிறவனுக்கு கேடுதான்.” ( II Clement 13.2)

He says this: "Protect the flesh that you may receive the Spirit (II Clement 14.3)

    "நீங்கள் ஆவியைப் பெறுவதற்கு மாம்சத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்” என்று கூறுகிறார்

the Lord hath said, “Even though ye were gathered together to Me in My very bosom, yet if ye were not to keep My commandments, I would cast you off, and say unto you, Depart from Me; I know you not whence ye are, ye workers of iniquity.”( II Clement, The Homily, Chap. iv.—true confession of christ.)

    கர்த்தர் “நீங்கள் என் மடியிலே என்னிடத்தில் கூடிவந்தாலும், நீங்கள் என் கட்டளைகளைக் கடைப்பிடிக்காவிட்டால், நான் உங்களைத் தள்ளிவிட்டு, “என்னைவிட்டுப் போங்கள்; நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்று எனக்குத் தெரியாது. நீங்கள் அக்கிரமத்தின் வேலையாட்கள் என்று சொல்வேன்." என்று கூறினார். .”( II Clement, The Homily, Chap. iv.—true confession of christ.)

Ἐπερωτηθεὶς γὰρ ὑπό τινος πότε ἤξει αὐτοῦ ἡ βασιλεία εἶπεν Ὅταν ἔσται τὰ δύο ἓν καὶ τὸ ἔξω ὡς τὸ ἔσω καὶ τὸ ἄρσεν μετὰ τῆς θηλείας οὔτε ἄρσεν οὔτε θήλυ.

The Lord Himself, on being asked by someone when His Kingdom should come, said, When the two shall be one, and the outward as the inward, and the male with the female, neither male nor female. (Clem. Rom. Ep. II. 12.)

    அவரது ராஜ்யம் எப்போது வரும் என்று ஒருவரால் கேட்கப்பட்டதற்கு, “நீங்கள் இரண்டை ஒன்றாக்கும் போது, அகமும் புறமும் ஒன்றாகும் போது, ஆணை பெண்ணாக்கும் போது, ஆணாகவும் இல்லாமல் பெண்ணாகவும் இல்லாமல் ஆக்கும் போது” என்று கர்த்தர் தாமே சொன்னார். (Clem. Rom. Ep. II. 12.)
✔தியாகி ஜஸ்டீன் (கி.பி. 100–165)
Wherefore also our Lord Jesus Christ said, ‘In whatsoever things I shall take you, in these I shall judge you. (Justin Martyr , Dialogue of Justin, Philosopher and Martyr, with Trypho, a Jew,Chapter XLVII.—Justin communicates with Christians who observe the law.)

    ஆகையால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும், ‘நான் உன்னை எந்தக் காரியங்களில் ஆட்கொண்டேனோ, அவைகளிலே உன்னை நியாயந்தீர்ப்பேன்’ என்றார்(Justin Martyr , Dialogue of Justin, Philosopher and Martyr, with Trypho, a Jew,Chapter XLVII.—Justin communicates with Christians who observe the law.)

And then, when Jesus had gone to the river Jordan, where John was baptizing, and when He had stepped into the water, a fire was kindled in the Jordan;( Justin Martyr, Dialogue of Justin, Philosopher and Martyr, with Trypho, a Jew,,Chapter LXXXVIII.—Christ has not received the Holy Spirit on account of poverty)

    பின்னர், இயேசு யோர்தான் ஆற்றுக்குச் சென்றபோது, அங்கு யோவான் ஞானஸ்நானம் கொடுத்து, அவர் தண்ணீரில் இறங்கியபோது, யோர்தானில் நெருப்பு மூண்டது; (Justin Martyr , Dialogue of Justin, Philosopher and Martyr, with Trypho, a Jew,,Chapter LXXXVIII.—Christ has not received the Holy Spirit on account of poverty)
✔ஐரீனியஸ்(கி.பி.130 – 200)
Moreover, when He said, “I have often desired to hear one of these words, and I had no one who could utter it,( Irenaeus, Against Heresies: Book I Chapter XX.—The apocryphal and spurious Scriptures of the Marcosians, with passages of the Gospels which they pervert.)

    மேலும், அவர் கூறியபோது, “இந்த வார்த்தைகளில் ஒன்றை நான் அடிக்கடி கேட்க விரும்பினேன், அதை உச்சரிக்க யாரும் இல்லை.

Lord would teach about those times and would say: The days will come in which vines will grow, each having ten thousand shoots, and on each shoot ten thousand branches, and on each branch ten thousand twigs, and on each twig ten thousand clusters, and in each cluster ten thousand grapes, and each grape, when pressed, will give twenty-five measures of wine. And, when one of those saints takes hold of a cluster, another cluster will clamor: I am better, take me, bless the Lord through me! Similarly a grain of wheat also will generate ten-thousand heads, and each head will have ten thousand grains, and each grain five double pounds of clear and clean flour. And the remaining fruits and seeds and herbiage will follow through in congruence with these, and all the animals using these foods which are taken from the earth will in turn become peaceful and consenting, subject to men with every subjection.( Irenaeus, Against Heresies 5.33.3-4)

    கர்த்தர் அந்தக் காலங்களைப் பற்றிக் கற்பித்து பின்வருமாறு கூறுவார்: திராட்சை கொடிகள் ஒவ்வொன்றும் பத்தாயிரம் தளிர்களும், ஒவ்வொரு தளிரிலும் பதினாயிரம் கிளைகளும், ஒவ்வொரு கிளையிலும் பத்தாயிரம் சிறுகிளைகளும், ஒவ்வொரு சிறுகிளையிலும் பதினாயிரம் கொத்துகளும், ஒவ்வொரு கொத்தும் பத்தாயிரம் திராட்சைகளை கொண்டு வளரும் நாட்கள் வரும். ஒவ்வொரு திராட்சை, பிழியப்படும் போது, இருபத்தைந்து மடங்கு மதுவைக் கொடுக்கும். மேலும், அந்த துறவிகளில் ஒருவர் ஒரு கொத்தை பிடிக்கும்போது, மற்றொரு கொத்து “நான் நன்றாக இருக்கிறேன், என்னை எடுத்துக் கொள்ளுங்கள், என் மூலம் இறைவனை ஆசீர்வதியுங்கள்!” என்று கூச்சலிடும். அதேபோல் ஒவ்வொரு கோதுமை மணியும் பத்தாயிரம் கதிர்களை உருவாக்கும், ஒவ்வொரு கதிரிலும் பத்தாயிரம் மணிகள் இருக்கும், மேலும் ஒவ்வொரு மணியிலும் ஐந்து இரட்டை பவுண்டுகள் தெளிவான மற்றும் சுத்தமான மாவு இருக்கும். மீதமுள்ள பழங்கள் மற்றும் விதைகள் மற்றும் மூலிகைகள் இவற்றுடன் ஒத்துப்போகும், பூமியில் இருந்து எடுக்கப்படும் இந்த உணவுகளைப் பயன்படுத்தும் அனைத்து விலங்குகளும் அமைதியானதாகவும், சம்மதத்துடனும், ஒவ்வொரு கீழ்ப்படிதலுடனும் மனிதர்களுக்கு உட்பட்டு மாறும்.( Irenaeus, Against Heresies 5.33.3-4)

The Lord declared to those who showed themselves ungrateful towards Him: “If ye have not been faithful in that which is little, who will give you that which is great?”( Irenaeus ,Against Heresies: Book II Chapter XXXIV.—Souls can be recognised in the separate state, and are immortal although they once had a beginning.)

    தமக்கு நன்றியில்லாதவர்களாகக் காட்டிக்கொண்டவர்களிடம் கர்த்தர் “சிறியவற்றில் நீங்கள் உண்மையாக இருக்கவில்லையென்றால், பெரியவற்றை யார் உங்களுக்குத் தருவார்?” என்று அறிவித்தார்?” ( Irenaeus ,Against Heresies: Book II Chapter XXXIV.—Souls can be recognised in the separate state, and are immortal although they once had a beginning.)

He elsewhere declares: “The sacrifice to God is an afflicted heart: a sweet savour to God is a heart glorifying Him who formed it.”( Irenaeus , Against Heresies: Book IV, Chapter XVII.—Proof that God did not appoint the Levitical dispensation for His own sake, or as requiring such service; for He does, in fact, need nothing from men.)

    அவர் வேறொரு இடத்தில் கூறுகிறார்: "கடவுளுக்கான தியாகம் துன்புறுத்தப்பட்ட இதயம் ஆகும்: கடவுளுக்கு இனிமையான சுவை அதை உருவாக்கியவரை மகிமைப்படுத்தும் இதயம்.”( Irenaeus , Against Heresies: Book IV, Chapter XVII.—Proof that God did not appoint the Levitical dispensation for His own sake, or as requiring such service; for He does, in fact, need nothing from men.)

✔அலெக்ஸாண்டிரியாவின் கிளமண்ட் (கி.பி. 150 – 215)

When Salome asked, “How long  will death prevail?” the Lord replied, “For as long as you women bear children.” But he did not say this because life is evil or creation wicked; instead he was teaching the natural succession of  things; for everything degenerates after coming into being. (Clement of Alexandria, Miscellanies, 3, 45, 3)

    “எவ்வளவு காலம் மரணம் நிலவும்?” என்று சலோமி கேட்டபோது,  ஆண்டவர், "பெண்களாகிய நீங்கள் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் வரை" என்றார். ஆனால் வாழ்க்கை பொல்லாதது அல்லது சிருஷ்டி பொல்லாதது என்பதற்காக அவர் இதைச் சொல்லவில்லை; அதற்குப் பதிலாக அவர் விஷயங்களின் இயற்கையான தொடர்ச்சியைக் கற்பித்தார்; உருவான பிறகு எல்லாமே சீரழிந்து விடுகிறது. (Clement of Alexandria, Miscellanies, 3, 45, 3)

Ειδες, γαρ φησι, τον αδελφον σου; ειδες τον θεον σου.

For he says: Have you seen your brother? You have seen your God. (Clement of Alexandria, Miscellanies 1.19)

    ஏனென்றால் அவர் கூறுகிறார்: நீங்கள் உங்கள் சகோதரனைப் கண்டீர்களா? நீங்கள் உங்கள் கடவுளைப் பார்த்தீர்கள். (Clement of Alexandria, Miscellanies 1.19) 

Αιτεισθε γαρ φησι τα μεγαλα και τα μικρα υμιν προστεθησεται.

For he says: Ask for the great things, and the little things will be added unto you. ( Clement of Alexandria, Miscellanies 1.24)

    “ஏனென்றால், பெரியவைகளைக் கேளுங்கள், சிறியவைகள் உங்களுக்குச் சேர்க்கப்படும்” என்று அவர் கூறுகிறார்.

Και παλιν ο κυριος φησιν• Ο γημας μη εκβαλλετω και ο μη γαμησας μηγαμειτω• ο κατα προθεσιν ευνουχιας ομολογησας μη γημαι, αγαμοςδιαμενετω.

And again the Lord says: Let the one who has married not be cast out, and let the one who has not married not marry. He who has confessed that he will not marry according to his decision of eunuch hood, let him remain unmarried.( Clement of Alexandria, Miscellanies 3.15)

    மீண்டும் ஆண்டவர் கூறுகிறார்: திருமணம் செய்தவர் தூக்கி எறியப்படாமல் இருக்கட்டும், திருமணம் செய்யாதவர் திருமணம் செய்யாமலும் இருக்கட்டும். தன் திருநங்கையாகும் தீர்வின்படி திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று வாக்குமூலம் கொடுத்தவர், திருமணமாகாமல் இருக்கட்டும்.( Clement of Alexandria, Miscellanies 3.15)

Ναι, μην και περι αγαπης• Αγαπη, φησι, καλυπτει πληθος αμαρτιων.

Yes, indeed, concerning love also he says: Love covers a multitude of sins.( Clement of Alexandria, The Instructor 3.12; Miscellanies 4.8)

    ஆம், உண்மையில், அன்பைப் பற்றியும் அவர் கூறுகிறார்: அன்பு பல பாவங்களை மறைக்கிறது. (Clement of Alexandria, The Instructor 3.12; Miscellanies 4.8)

Και ο κυριος• Εξελθετε, ειπεν, εκ των δεσμων οι θελοντες.

And the Lord said: Go out, those who wish to do so, from your bonds.( Clement of Alexandria, Miscellanies 6.44)

    “அப்படிச் செய்ய விரும்புகிறவர்களே, உங்கள் கட்டுகளை விட்டு வெளியே போங்கள்.” என்று கர்த்தர் கூறினார். ( Clement of Alexandria, Miscellanies 6.44)

as the Scripture says, in consequence of being overcome the habits which formerly had sway by over him, the habits must be entirely put a stop to, and the soul trained to oppose them.( The Stromata, or Miscellanies. Book VII. Chapter XVI.—Scripture the Criterion by Which Truth and Heresy are Distinguished)

    வேதம் கூறுவது போல், முன்பு அவர் மீது ஆதிக்கம் செலுத்திய பழக்கவழக்கங்களை முறியடித்ததன் விளைவாக, பழக்கங்களை முற்றிலும் நிறுத்த வேண்டும், மேலும் அவற்றை எதிர்க்க ஆன்மா பயிற்சியளிக்க வேண்டும். ( The Stromata, or Miscellanies. Book VII. Chapter XVI.—Scripture the Criterion by Which Truth and Heresy are Distinguished)

Μυστήριον ἐμὸν ἐμοὶ καὶ τοῖς υἱοῖς τοῦ οἴκου μου. 

"For it was not grudging that the Lord in a certain gospel announced 'my mystery for me and for the sons of my house'"( Clem. Alex. Strom. v. 10. 64. Clement of Alex. l. c.; cf. Clementine Hom. xix. 20.)

    "ஏனென்றால், கர்த்தர் ஒரு குறிப்பிட்ட நற்செய்தியில் 'எனக்கும் என் வீட்டுக் குழந்தைகளுக்கும் என் மறைபொருளை' அறிவித்தது வெறுப்புக்காக அல்ல."( Clem. Alex. Strom. v. 10. 64. Clement of Alex. l. c.; cf. Clementine Hom. xix. 20.)

ὁ θαυμάσας βασιλεύσει καὶ ὁ βασιλεύσας ἀναπαυθήσεται

He that wonders shall reign, and he that reigns shall be made to rest.( Clement of Alexandria, Strom. II. ix. 45. Cf. Strom. V. xiv. 96.)

    ஆச்சரியப்படுபவன் ஆட்சி செய்வான், ஆட்சி செய்பவன் ஓய்வெடுக்க வைக்கப்படுவான். .( Clement of Alexandria, Strom. II. ix. 45. Cf. Strom. V. xiv. 96.)

Rightly, therefore, the Scripture in its desire to make us such dialecticians, exhorts us: "Be ye skilful moneychangers," rejecting some things, but retaining what is good. (Clem. Alex., Stromata, I. 28)

    எனவே, வேதம் நம்மை இத்தகைய இயங்கியல்வாதியாக ஆக்க விரும்புகிறது: "நீங்கள் திறமையான பணம் மாற்றுபவர்களாக இருங்கள்," சில விஷயங்களை நிராகரித்துவிட்டு ஆனால் நல்லதைத் தக்கவைத்துக்கொள்ளுங்கள். (Clem. Alex., Stromata, I. 28)

"These are they who ply their looms and weave nothing," saith the Scripture(Clemens Alex., Strom., I, 8, 41)

    "இவர்கள் தங்கள் தறிகளை நெசவு செய்து ஒன்றும் நெய்யாதவர்கள்" என்று வேதம் கூறுகிறது. (Clemens Alex., Strom., I, 8, 41)

✔ஓரிகன் (கி.பி.185 – 253)

Και Ιησους γουν φησιν• Δια τους ασθενουντας ησθενουν και δια τουςπεινωντας επεινων και δια τους δειψωντας εδιψων.

And Jesus indeed says: On account of the sick I was sick and on account of the hungry I was hungry and on account of the thirsty I was thirsty.( Origen, On Matthew13.2)

    மேலும் இயேசு உண்மையில் கூறுகிறார்: நோயுற்றவர்களுக்காக நான் நோயுற்றேன், பசியுள்ளவர்களுக்காக நான் பசித்தேன், தாகித்திருந்தவர்களுக்காக நான் தாகமாயிருந்தேன்.( Origen, On Matthew13.2)

εἶπε γὰρ ὁ Ἰησοῦς τοῖς μαθηταῖς αὐτοῦ• Αἰτεῖτε τὰ μεγάλα καὶ τὰ μικρὰ . ὑμῖν προστεθήσεται, καὶ αἰτεῖτε τὰ ἐπουράνια καὶ τὰ ἐπίγεια προστεθή- σεται ὑμῖν. – 

Ask the great things and the small shall be added unto you ask the heavenly things and the earthly shall be added unto you. (Origen de Orat. § 2.)

    பெரியவைகளைக் கேளுங்கள், சிறியவை உங்களோடு சேர்க்கப்படும், பரலோகத்தைக் கேளுங்கள், பூமிக்குரியவை உங்களுக்குச் சேர்க்கப்படும். (Origen de Orat. § 2.)

Αὐτὸς ὁ Σωτήρ φησιν "Αρτι ἔλαβέ με ἡ μήτηρ μου τὸ ἅγιον πνεῦμα ἐν μιᾷ τῶν τριχῶν μου καὶ ἀπήνεγκέ με εἰς τὸ ὄρος τὸ μέγα Θαβώρ. 

The Saviour Himself says, Now took me by one of my hairs my mother the Holy Spirit, and carried me off to the great mountain Tabor.( Origen on John ii. 6.)

    இரட்சகர் தாமே கூறுகிறார், இப்போது என் தாயாகிய பரிசுத்த ஆவியானவர் என் தலைமுடிகளில் ஒன்றை பற்றிக்கொண்டு, பெரிய மலையான தாபோருக்கு என்னை அழைத்துச் சென்றார். ( Origen on John ii. 6.)

[Cf. Matt. 25:14–30] For the Gospel that has come down to us in Hebrew letters makes the threat not against the one who hid the (master’s) money but against the one who engaged in riotous living. For [the master] had three slaves, one who used up his fortune with whores and flute-players, one who invested the money and increased its value, and one who hid it. The first was welcomed with open arms, the second was blamed, and only the third was locked up in prison. (Eusebius, Theophania, 4, 22)

    எபிரேய எழுத்துக்களில் நமக்கு வந்துள்ள நற்செய்தி (எஜமானின்) பணத்தை மறைத்தவருக்கு எதிராக அல்ல, மாறாக கலகத்தனமான வாழ்க்கையில் ஈடுபட்டவருக்கு எதிராக அச்சுறுத்தல் விடுக்கிறது. அதாவது, [எஜமானுக்கு] மூன்று அடிமைகள் இருந்தனர், ஒருவர் தனது செல்வத்தை வேசிகள் மற்றும் புல்லாங்குழல் வாசிப்பவர்களுடன் செலவிட்டார், ஒருவர் பணத்தை முதலீடு செய்து அதன் மதிப்பை அதிகரித்தார், மற்றொருவர் அதை மறைத்து வைத்தவர். முதலாமவர் இருகரம் விரித்து வரவேற்கப்பட்டார், இரண்டாமவர் குற்றம் சுமத்தப்பட்டார், மூன்றாமவர் மட்டுமே சிறையில் அடைக்கப்பட்டார். (Eusebius, Theophania, 4, 22)

But [the Lord] taught about the reason for the division of the souls in the houses, as we have found somewhere in the Gospel used by the Jews and written in Hebrew, where he says “I will choose for myself those who are good— those given to me by my Father in heaven.”( Eusebius, Theophania 4, 12)

ஆனால் [கர்த்தர்] வீடுகளில் உள்ள ஆன்மாக்கள் பிரிவதற்கான காரணத்தைப் பற்றி கற்பித்தார், எபிரேய மொழியில் எழுதப்பட்ட யூதர்கள் பயன்படுத்திய நற்செய்தியில் “அங்கு அவர் "நல்லவர்களை நானே தேர்ந்தெடுப்பேன். அவர்கள் பரலோகத்தில் உள்ள என் தந்தையால் எனக்குக் கொடுக்கப்பட்டவர்கள்." என்று எழுதப்பட்டிருப்பதைக் கண்டோம், ( Eusebius, Theophania 4, 12)

✔ஜெரோம் (கி.பி.342 – 420)

In the Gospel that the Nazareans  and Ebionites use, which I recently translated from Hebrew into Greek, and which most people consider the authentic version of Matthew, the man with a withered hand is described as a mason, who sought for help in words like these: “I was a mason who made a living with my hands; I beseech you, Jesus, restore my health so I do not have to beg for food shamefully.” (Jerome, Commentary on Matthew, 12, 13)

நான் சமீபத்தில் எபிரேய மொழியிலிருந்து கிரேக்க மொழியில் மொழிபெயர்த்த, நசரேயர்களும் எபியோனியர்களும் பயன்படுத்தப்படும், பெரும்பாலான மக்களால் உண்மையான மத்தேயுவின் பதிப்பாக கருதப்படும் சுவிஷேசத்தில், கொத்தனார் என்று விவரிக்கப்படுகிற விழுந்துபோன கையை உடைய மனிதர், இது போன்ற வார்த்தைகளில் உதவி தேடினார். அவை: ‘நான் என் கைகளால் வாழ்க்கை நடத்தும் கொத்தனாராக இருந்தேன். இயேசுவே, என் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க நான் உங்களை மன்றாடுகிறேன், அதனால் நான் அவமானகரமான முறையில் உணவுக்காக பிச்சை எடுக்க வேண்டியதில்லை.’ என்பதாகும். (Jerome, Commentary on Matthew, 12, 13)

In the Gospel we have often referred to, we read that “the enormous lintel of the temple was broken and split apart.”( Jerome, Commentary on Matthew 27, 51)

நாம் அடிக்கடி குறிப்பிடும் நற்செய்தியில், "கோயிலின் மகத்தான கதவின் விட்டம் உடைந்து பிளவுபட்டது" என்று வாசிக்கிறோம். ( Jerome, Commentary on Matthew 27, 51)

As we read in the Hebrew Gospel, the Lord said to his disciples: “You should never rejoice except when you look upon your brother in love.” (Jerome, Commentary on Ephesians, 5:4)

    நாம் எபிரேய நற்செய்தியில் வாசிக்கும்போது, கர்த்தர் தம்முடைய சீஷர்களிடம் கூறினார்: “உங்கள் சகோதரனை அன்புடன் பார்க்கும் போது தவிர நீங்கள் ஒருபோதும் சந்தோஷப்படவேண்டாம்”

✅இஸ்லாமியர்களாகிய நமது பார்வை:

    இஸ்லாமிய ஆவணங்கள் கூறும் இன்ஜீல் என்ற தலைப்பிட்ட கட்டுரையில் இஸ்லாமிய ஆவணங்களில் காணப்படும் இன்ஜீல் குறித்த பல குறிப்புக்களை முன்வைத்து குர்ஆனில் கூறப்படும் இன்ஜீல் இன்றிருக்கும் புதிய ஏற்பாட்டில் இருந்து மாறுபட்ட நூல் என்பதை விளக்கியிருந்தோம்.(3) அதனை உறுதி படுத்தும் விதமாக மேற்குறிபிட்ட திருச்சபை பிதாக்களின் குறிப்புக்கள் உள்ளன. நமது சிறிய தேடல் பல வசனங்களை கொண்டுவந்தது. சுருக்கம் கருதி அதில் சிலவற்றை மட்டுமே சென்ற இரு கட்டுரைகளிலும் பதிவிட்டுள்ளோம். கிறித்தவர்கள் தங்களது புதிய ஏற்பாட்டின் நற்செய்தி நூல்களை நிறுவ முன்வைக்கும் திருச்சபை பிதாக்களின் குறிப்புக்களில் இன்றைய புதிய ஏற்பாட்டின் நற்செய்தி நூல் அல்லாத நூல்கள் அன்று திருச்சபைகளிலேயே பயன்பாட்டில் இருந்ததையே காட்டுகிறது. மேலும் இதற்கு முந்தைய கட்டுரையில் ஒத்தமை நற்செய்தி நூல்களின் சிக்கல் குறித்தும், அதனை தீர்க்க கிறித்தவ உலகம் படும்பாடினையும், அதற்காக முன்வைக்கப்படும் பல அனுமானங்களையும் கண்டிருந்தோம். அந்த அனுமானங்களில் பல ஒத்தமை நற்செய்தி நூல்கள் முன்னிருந்த நற்செய்தி நூலில் இருந்து எழுதப்பட்டதாக கூறுவதை விளக்கியும் இருந்தோம்.(4) அவர்களது அனுமானங்கள் கூறுவதை உறுதி படுத்துவதாய் மேலே உள்ள திருச்சபை பிதாக்களின் குறிப்புக்கள் உள்ளன.  

    நற்செய்தி நூல்களின் வசனங்கள் பல கிறித்தவ திருச்சபை பிதாக்களின் ஆக்கங்களில் மேற்கோள்களாக காணப்படுவதால் அவர்களது கூற்றுக்கள் நற்செய்தி நூல்களுக்கு ஆதாரமாக முன்வைக்கப்படுகிறது. அதே திருச்சபை பிதாக்களின் ஆக்கங்களில் தான் முன்சென்ற கட்டுரையின் மாறுபட்ட வாசிப்புக்களும், புதிய ஏற்பாட்டிலேயே இல்லாத பல இயேசுவின் வார்த்தைகளும் காணப்படுகிறது. மாறுபட்ட கிராஅத்களில் எது அங்கிகரிக்கப்பட்டது என்பதற்கு இஸ்லாமிய சமூகத்தின் வரலாற்று ஆவணங்கள் தெளிவாக அதனை நிர்ணயித்திருக்கும் போது   மாறுபட்ட  வாசிப்புக்கள் இருப்பதாலேயே குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்று கூறித்திரியும் கிறித்தவ மிசனரிகள், இப்படி மாறுபட்ட பல வசனங்களும், புதிய ஏற்பாட்டில் இல்லாத வசனங்களும் கிறித்தவ திருச்சபை பிதாக்களின் ஆக்கங்களில் காணப்படுவதற்கு கிறித்தவ மிசனரிகளின் பார்வையில் புதிய ஏற்பாடும் பாதுகாக்கப்படவில்லை என்ற முடிவிற்குத்தான் வரவேண்டும். ஆரம்ப கால கி.பி. 4ம் நூற்றாண்டு வரையுள்ள கிறித்தவ திருச்சபை பிதாக்கள் நற்செய்தி நூல்களின்  பல வசனங்களை தங்களது ஆக்கங்களில் மொத்தமாக 19,368 தடவை மேற்கோள்காட்டியுள்ளார்கள் என்று பெருமை பேசுபவர்கள், அதே பிதாக்கள் இப்படி நற்செய்தி நூல்களில் இல்லாத இயேசுவின் வாக்குகளை மேற்கோள் காட்டியுள்ளதற்கு என்ன கூறுவார்கள்.??? மேலும் மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த கயஸ் போன்றவர்களை பொறுத்தவரை வெளிப்படுத்தின விஷேசம் (ஆதாரம்:கத்தோலிக்க என்ஸைக்லோபீடியா)(5) மற்றும் யோவானின் படியான சுவிஷேசம் ஆகியவை செரிந்தஸினால் எழுதப்பட்டது. அது நிராகரிக்கத்தக்கது.(Gaius:The oxford dictionary of the christian church edited by F.L.Cross).  இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது கிறித்தவ ஆரம்பகால திருச்சபைகள் கைகளில் வைத்திருந்த ஏடுகள் இன்றைய புதிய ஏற்பாட்டில் இருந்து மாறுபட்டவை என்பது தெளிவாக தெரிகிறது. மேற்குறிபிட்ட வசனங்கள் மரபுகளின் தொகுப்பு நூல்களில் இருந்து எடுக்கப்பட்டவை அல்ல. திருச்சபை பிதாக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக தங்களது ஆக்கங்களில் மேற்கோள் காட்டியவை. 

    மேலும் மேற்குறிபிட்ட அட்டவணையில், பல இடங்களில் எழுதப்பட்ட ஏடுகளில் இருந்தும், பெரும்பான்மை மக்களால் ஏற்கப்பட்ட பதிப்புகளில் இருந்தும் கூறுவதாக திருச்சபை பிதாக்களால் மேற்கோள் காட்டப்படுகிறது. இன்றிருக்கும் நற்செய்தி நூல்களை இவர்கள் மேற்கோள் காட்டுவதால் அது ஆதாரமாகும் என்று வாதிட்டால், எபியோனைட்டுகள் போன்ற பேதக்காரர்களின் ஏடுகளை ஏற்கத்தயரா???? அல்லது யோவான் நற்செய்தி நூல் கூறுவது போல் நற்செய்தி நூல்கள் அனைத்தும் அரைகுறையான வேதம்தானா?????. இயேசுவின் பல வசனங்கள் மாற்றப்பட்டும், துளைந்தும் போய்விட்டதாக இதன்மூலம் தெரிகிறது . அல்லது இவர்களது மேற்குறிபிட்ட கூற்றுக்கள் அனைத்தும் நிராகரிக்கத்தக்கவை என்று கூறி, பொய்யர்களின் கூற்றுக்கள்தான் எங்களது புதிய ஏற்பாட்டின் இருப்பிற்கான ஆதாரங்களில் ஒன்று என்று மிசனரிகள் கூறுவார்களோ??? அப்படியும் கூறமுடியாது.  கிறித்தவ புதிய ஏற்பாட்டை பொறுத்தவரை சகல சத்தியத்திற்குள்ளும் வழிநடத்தும் ஆவி இயேசுவின் விண்ணேற்றத்திற்கு பிறகு வந்துவிட்டது.

சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார். (யோவான் 16:13-14).
    பல நூற்றாண்டாக இந்த ஆவி திருச்சபை பக்கம் எட்டி கூட பார்க்கவில்லை என்றாகிவிடும். எனவே திருச்சபை பிதாக்களின் கருத்துக்களை ஏற்கமாட்டோம் என்று கூறியெல்லாம் தப்ப இயலாது. (பரிசுத்த ஆவி குறித்து பார்க்கையில் இன்னும் விளக்கமாக கிறித்தவத்தில் இறைசெய்தி வருகை மற்றும் சத்தியத்தை பிரித்துக்காட்டுவது குறித்து காணவிருக்கிறோம் இன் ஷா அல்லாஹ்.) ஜேரோம், ஓரிகன் போன்றவர்கள் எல்லாம் முன்னிருந்த அப்போகிரைப்பாக்களையே ஏற்க மறுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.(6) வேதத்தில் ஒரு எழுத்தின் உறுப்பு அவமாய்ப் போவதைப்பார்க்கிலும், வானமும் பூமியும் ஒழிந்துபோவது எளிதாயிருக்கும். (லூக்கா 16:17) என்று கூறும் புதிய ஏற்பாட்டில், இயேசுவின் வாக்குகள் பல காணவில்லை, பல வசனங்களில் பல வார்த்தைகளை காணவில்லை எனும் போது புதிய ஏற்பாடு எப்படி வேதமாகும். இறைவனின் வேதத்தை பாதுகாக்க தவறிய ஒரு சமூகமாக கிறித்தவ சமூகம் இன்று நிற்கிறது என்பதுதான் நிதர்சனம்… அல்லாஹூ அஃலம். 

Monday, August 19, 2024

கிறித்தவ திருச்சபை பிதாக்களும் மாறுபட்ட புதிய ஏற்பாடும்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ


        கிறித்தவ மிசனரிகள் இஸ்லாமியர்களின் அல்குர்ஆனின் பாதுகாப்பு குறித்து விமர்சனம் செய்கையில் கண்டிப்பாக குர்ஆனின் ஹஃப்ஸ் வர்ஸ் போன்ற மாறுப்பட்ட ஓதல் முறைகள் குறித்து விமர்சனம் செய்து அதன் காரணத்தினால் குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்று முடிவிற்கு வருவார்கள். இதற்கு பதிலளிக்கும் விதமாக, இந்த மாறுபட்ட ஓதல் முறை என்பது அல்லாஹ்வால் அங்கிகரிக்கப்பட்டு நபி(ஸல்) அவர்களால் ஓதிக்காண்பிக்கப்பட்ட மாறுபட்ட ஓதல் முறை என்பதையும், அது இன்றுவரை முத்தவாதிரான ஓதல் முறைகளாக இன்றும் இருப்பது குறித்தும், அதன் சங்கிலி தொடர் குறித்தும் தெளிவாக விளக்கி பதிலளித்தும் உள்ளோம்.(1)(2) ஹதீஸ்களில் காணப்படும் மாறுபட்ட ஓதல் முறைகள் குறித்த விமர்சனத்தில் அவை முத்தவாதிரான கிராத்துடன் ஒத்தமையாமல் இருக்கும் பட்சத்தில் அந்த ஹதீஸ்களை பலவீனமானது என்பதையும் விளக்கியும் இருக்கிறோம். இன்றும் அல்குர்ஆன் கல்லூரிகள், பயிலும் மாணவரான காரீ, யாரிடம் இருந்து இந்த ஓதலை பெற்றார் என்பதை நபி(ஸல்) அவர்கள் வரை செல்லும் முறியாத அறிவிப்பாளர் தொடரை தாங்கி நிற்கும் சான்றிதழ்களாக வழங்கி வருகின்றன. வாழையடி வாழையாக யார் யாரிடம் இருந்து இந்த ஓதலை கற்றார் என்பதை முழு விவரமாக குறிப்பிட்டு இன்றும் இஸ்லாமிய கல்லூரிகள் சான்றிதழ்களை வழங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய கல்லூரிகளால் வழங்கப்பட்ட சில இஜாஸாக்களை கீழே இணைக்கிறோம்.

    ஒரு சாதரண கூகுள் தேடல் கூட இந்த இஜாஸாக்கள் குறித்த விக்கிபீடியா போன்ற தளங்களில் பட்டியலிடப்பட்டுள்ளதை காட்டுகிறது. இஸ்லாமியர்களாகிய நாம் குர்ஆனின் மாறுபட்ட ஓதல்களில் எது சரியானது என்பதை உறுதி படுத்திக்கொள்ள தீர்க்கமான அளவீடுகளை கொண்டிருக்கிறோம் என்பதையும், அல்லாஹ் தனது வேதத்தை எவ்வாறு பாதுகாத்துள்ளான் இந்த சமூகத்தின் அளப்பரிய அக்கறையின் மூலம் என்பதையும் மேலே உள்ள இஜாஸாக்கள்(சான்றிதழ்கள்) படம் பிடித்து காட்டுகிறது. அல்லாஹு அக்பர்.

    இவ்வளவு தெளிவான சான்றுகள் கொண்டு விளக்கிய பிறகும், குர்ஆன் பாதுகாக்கப்பட வில்லை என்று கூறித்திரியும் கிறித்தவ மிசனரிகள் எப்படி மாறுபட்ட புதிய ஏற்பாட்டின் வாசிப்புக்களில் சரியானதை உறுதி படுத்தினார்கள், படுத்துகிறார்கள் என்பதை இந்த கட்டுரையில் இன் ஷா அல்லாஹ் பார்ப்போம். அல் குர்ஆனில் இடம்பெறும் குத்தீபு, குஃத்தீபு மாறுபட்ட ஓதல் முறைபற்றி மணிக்கணக்கில் விமர்சனம் செய்தவர்கள், இவர்களின் புதிய ஏற்பாட்டின் மாறுபட்ட வாசிப்பிற்கு என்ன விளக்கம் கொடுப்பார்கள் என்பதை பார்ப்போம். என்ன மாறுபாடு ஏற்பட்டாலும் மைய கருத்து மாறாது என்ற வாதம் குர்ஆனின் மாறுபட்ட கிராத்திற்கும் பொருந்தும் எனும் போதிலும் இன்றும் குர்ஆன் பாதுக்காக்கப்படவில்லை என்று கூறித்திரியும் கிறித்தவ மிசனரிகளின் புதிய ஏற்பாட்டை அதே அளவீட்டை கொண்டு அளக்கப்போகிறோம்., குர்ஆனைவிட மிக தீர்க்கமான வாத்தையை கொண்டு புதிய ஏற்பாடு வேத்தின் பாதுகாப்பு குறித்த விசயத்தில் பேசுகிறது என்பதை நாம் முன்பே கண்டிருக்கிறோம். மாறுபட்ட குர்ஆன் ஓதலை நிர்ணயிக்க எப்படி அறிவிப்பாளர் தொடருடன் கூடிய தீர்க்கமான அளவீடுகளை நாம் முன்வைக்கிறோமோ அதே போன்று எதாவது அளவீடுகளை இவர்களின் முன்னோர்களும் இவர்களும் கொண்டிருக்கிறார்களா என்பதை இந்த கட்டுரையில் விளக்க உள்ளோம். 

சபைப்பிதாக்களை சாட்சிக்கு அழைக்கும் கிறித்தவர்கள்:
    முன்சென்ற கட்டுரைகளில் புதிய ஏற்பாட்டு நூலின் பாதுகாப்பு குறித்து காணும்போது சபைபிதாக்களின் ஆதாரங்களின் அவல நிலையை படம் பிடித்து காட்டி இருந்தோம். வரலாற்று ஆதாரங்களின் அவல நிலையும், நற்செய்தி நூல்களின் அரைகுறை தகவல்களும் நற்செய்தி நூல்களின் நிலையை கேள்விக்கு உள்ளாக்குவதால் கிறித்தவ உலகம் அதனை எதிர் கொள்ள, இந்த சபை பிதாக்களின் எழுத்துக்களில் இருக்கும் நற்செய்தி நூல்களின் மேற்கோள்களை காட்டி நற்செய்தி நூல்கள் ஆதி காலம் தொட்டே புலக்கத்தில் இருப்பவை என்று நிறுவுவதற்கு முயல்கின்றனர். இந்த முயற்சி எவ்வளவு பலவீனமானது என்பதையும் சேர்த்து இந்த கட்டுரையில் காண இருக்கிறோம். அதாவது இவர்கள் கூறும் சபைப்பிதாக்கள் இன்றிருக்கும் நற்செய்தி நூல்களின் வசன்ங்களை மட்டும் மேற்கோள் காட்டவில்லை, மாறாக இன்னும் இன்றைய புதிய ஏற்பாட்டில் இல்லாத பல வசனங்களையும், இன்றிருக்கும் நற்செய்தி நூல்களின் வசனங்களின் மாறுபட்டவைகளையும் மேற்கோள்காட்டியுள்ளனர். இந்த கட்டுரையில் மாறுபட்ட வாசிப்புக்கள் குறித்து காணவிருக்கிறோம். இந்த மாறுபட்ட வாசிப்பு குறித்த தொகுப்பினை Dr. J. A. Moorman அவர்களது Early Manuscripts, Church Fathers, & the Authorized Version என்ற நூலில் இருந்து காட்டவிருக்கிறோம். CHAPTER FIVE: THE DIGEST: 149 DOCTRINAL PASSAGES “DISTINCTLY BYZANTINE” என்ற பகுதியில் கிட்டதட்ட KJVல் இருந்து NIVல் மாறுபடும் 149 வசனங்களை சபைப்பிதாக்களின் மேற்கோள்களுடன் தொகுத்து வழங்கியுள்ளார். அதில் சிலவற்றை மட்டும் கீழே தருகிறோம்.

வ.
எண்
வசனம் மாறுபட்ட வாசிப்பு -1  மற்றும் ஆதாரம் மாறுபட்ட வாசிப்பு -2  மற்றும் ஆதாரம்
1. மத்தேயு 5.22
That whosoever is angry with his brother without a cause shall be in danger of the Judgment.

Monday, August 5, 2024

நற்செய்தி நூல்களின் ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- யோவானின் படியான சுவிஷேசம்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ


    கிறித்தவர்களின் புதிய ஏற்பாட்டின் நற்செய்தி நூல்கள் குறித்தும் அதன் எழுத்தர்கள் குறித்த வரலாற்று குளறுபடிகள் குறித்தும் கண்டு வருகிறோம். அந்த வரிசையில் இன் ஷா அல்லாஹ் அடுத்ததாக யோவானின் படியான சுவிஷேசம் குறித்து பார்க்க இருக்கிறோம். கிறித்தவ உலகின் கூற்றின் படி ஏனைய சுவிஷேசங்களில் இருந்து மாறுபட்டு இந்த சுவிஷேசம் இயேசு குறித்து பிறப்பில் இருந்து விவரிக்காமல், படைப்பின் ஆரம்பத்தில் இருந்து இருப்பதாக கூறுகிறது.எனவே கிறித்தவர்களின் இறையியலின் ஆணி வேரை சுமந்து நிற்பதாக இந்த சுவிஷேசம் அமைந்துள்ளது. இப்படி கிறித்தவ உலகத்தால் சிலாகித்து கூறப்படும் யோவானின் படியான நற்செய்தியின் ஆசிரியரின் வரலாற்று தரவுகளையும், புதிய ஏற்பாட்டின் தரவுகளையும் ஒப்பிட்டு அதன் நிலையை இந்த கட்டுரையில் விரிவாக விளக்க இருக்கிறோம்.


    முன்னே நாம் கண்ட மூன்று நற்செய்தி நூலிலும் யார் யாரிடம் கேட்டு எழுதினார்கள் என்று எந்த தகவலும் இருக்காது. இதிலும் யார் எழுதினார் என்ற எந்த குறிப்பும் இல்லை. மாறாக இது யாரது கூற்று என்பது மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    பேதுரு திரும்பிப்பார்த்து, இயேசுவுக்கு அன்பாயிருந்தவனும், இராப்போஜனம்பண்ணுகையில் அவர் மார்பிலே சாய்ந்து: ஆண்டவரே, உம்மைக் காட்டிக்கொடுக்கிறவன் யார் என்று கேட்டவனுமாகிய சீஷன் பின்னே வருகிறதைக் கண்டான். அவனைக் கண்டு, பேதுரு இயேசுவை நோக்கி: ஆண்டவரே, இவன் காரியம் என்ன என்றான். அதற்கு இயேசு: நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால், உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றிவா என்றார். ஆகையால் அந்தச் சீஷன் மரிப்பதில்லையென்கிற பேச்சு சகோதரருக்குள்ளே பரம்பிற்று. ஆனாலும், அவன் மரிப்பதில்லையென்று இயேசு சொல்லாமல், நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால் உனக்கென்னவென்று சொன்னார். அந்தச் சீஷனே இவைகளைக்குறித்துச் சாட்சிகொடுத்து இவைகளை எழுதினவன்; அவனுடைய சாட்சி மெய்யென்று அறிந்திருக்கிறோம். இயேசு செய்த வேறு அநேக காரியங்களுமுண்டு; அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகிறேன். ஆமென். (யோவான் 21:20-25)
    யாரோ ஏசுவின் பிரியத்திற்குரிய சீடனின் கூற்றை யாரோ பெயர் தெரியாத நபர் பதிந்துள்ளார் என்பதை மேற்குறிபிட்ட வசனம் தெளிவாக கூறுகிறது. மேற்குறிபிட்ட யோவான் 21:20-25 வரையிலான வசனத்தில் கூறப்படும் சீஷனின் பெயர் குறித்து எந்த தகவலும் புதிய ஏற்பாட்டில் இடம் பெறவில்லை. ஆனால் கிறித்தவ உலகம் அந்த சீடன் யோவான் என்று கூறிவருகிறது. மேற்குறிபிட்ட இந்த வாக்குமூல வசனங்களின் நிலை குறித்து கிறித்தவ உலகின் அறிஞர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை பார்த்துவிட்டு புதிய ஏற்பாட்டின் ஏனைய தகவல்களையும் ஆய்விற்கு உட்படுத்துவோம்.


    யோவானின் படியான சுவிஷேசத்தை சற்று கவனித்து அவதானித்தால், அந்த சுவிஷேசம் இரண்டு முடிவுரைகளை கொண்டிருப்பதை காணமுடியும். அதாவது யோவானின் படியான சுவிஷேத்தின் 20ம் அதிகாரம் பின்வருமாறு முடிவடைகிறது
இந்தப் புஸ்தகத்தில் எழுதியிராத வேறு அநேக அற்புதங்களையும் இயேசு தமது சீஷருக்கு முன்பாகச் செய்தார். இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது. (யோவான் 20:30-31)
    ஆனால் யோவான் 20ம் அதிகாரத்துடன் முடிவையவில்லை. அதன் பிறகு ஒரு அதிகாரம் இடம் பெறுகிறது. அதுவும் இதே கருதுகோளுடன் கூடிய முடிவுரையை கொண்டு முடிவதை காண முடிகிறது.
அந்தச் சீஷனே இவைகளைக்குறித்துச் சாட்சிகொடுத்து இவைகளை எழுதினவன்; அவனுடைய சாட்சி மெய்யென்று அறிந்திருக்கிறோம். இயேசு செய்த வேறு அநேக காரியங்களுமுண்டு; அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகிறேன். ஆமென். (யோவான் 21:24-25)
    யோவானின் படியான சுவிஷேசம் யோவான் 20:30-31 மற்றும் 21:24-25 ஆகிய இரண்டு முடிவுரையை தாங்கி நிற்பதை எளிமையாக புரிந்து கொள்ளலாம். அதாவது 20ம் அத்தியத்துடன் ஒருவர் எழுதி முடித்ததை மறுபடியும் வேறு ஒருவர் 21ம் அத்தியத்தையும் இணைத்து சாட்சியம்!!! கூறுவதாய் உள்ளது ப்படி இரு முடிவுரைகளை தாங்கி நிற்பதாலேயே தற்கால கிறித்தவ அறிஞர்களில் பெரும்பான்மையோர், யோவான் 21:24-25 பிற்செர்க்கை என்று கூறிவருகின்றனர். அதாவது இந்த சுவிஷேத்தை அறிவித்ததாக கூறப்படும் சீஷன் குறித்த வாக்குமூலம் ஒரு பிற்சேர்க்கை என்று கூறுகின்றனர்.
    Here we must take up at once the possibility that 21:24-25 is a late addition to the Gospel and that therefore its evidence as to the authorship of the Gospel may well be quite unreliable. This issue is inseparable from the question of the original ending of the Gospel. A very large majority of modern scholars have supposed that the Gospel originally ended at the end of chapter 20, since 20:30-31 reads, to these scholars, like a conclusion that appropriately brings the Gospel narrative to a close. It follows that chapter 21 is a kind of appendix added later ( Jesus and the Eyewitnesses: The Gospels as Eyewitness Testimony By Richard Bauckham, Ch.14. The Gospel of John as Eyewitness Testimony)

    வசனங்கள் 21:24-25 என்பது நற்செய்திக்கு தாமதமாகச் சேர்க்கப்பட்டது என்பதற்கான சாத்தியக்கூறுகளை இங்கே நாம் உடனடியாக எடுத்துக் கொள்ள வேண்டும், எனவே நற்செய்தியின் ஆசிரியர் பற்றிய அதன் சான்றுகள் நம்பகத்தன்மையற்றதாக இருக்கலாம். நற்செய்தியின் அசல் முடிவு குறித்த கேள்வியிலிருந்து இந்த சிக்கல் பிரிக்க முடியாதது. 20:30-31 வசனங்கள் சுவிசேஷ விவரிப்பை சரியான முறையில் முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு முடிவு போல, இந்த அறிஞர்களுக்கு தெரிவதால் தற்கால அறிஞர்களில் பெரும்பாலோர் சுவிசேஷம் அசலாக அத்தியாயம் 20 இன் இறுதியில் முடிந்தது என்று கருதுகின்றனர். அத்தியாயம் 21 என்பது பின்னர் சேர்க்கப்பட்ட ஒரு வகையான பிற்சேர்க்கையாகும். ( Jesus and the Eyewitnesses: The Gospels as Eyewitness Testimony By Richard Bauckham, Ch.14. The Gospel of John as Eyewitness Testimony)
    அதாவது “அந்தச் சீஷனே இவைகளைக்குறித்துச் சாட்சிகொடுத்து இவைகளை எழுதினவன்” என்ற சாட்சியை தாங்கி நிற்கும் 21ம் அத்தியாயம் முழுவதுமே பிறசேர்க்கை அல்லது இடைச்செருகல். எனவே இந்த இடைச்செருகலுக்கான காரணம் என்னவாக இருக்கும் என்று நாம் தேடி, மேலும் யோவானின் படியான சுவிஷேசத்தை ஆய்வுக்குட்படுத்தும் போது வசனங்களில் இருக்கும் ஒரு ஒழுங்கற்றதன்மை புலப்பட்டது. பின்வரும் செய்தியை ஆய்வு செய்வோம்.
சீமோன் பேதுருவும், திதிமு என்னப்பட்ட தோமாவும், கலிலேயா நாட்டிலுள்ள கானா ஊரானாகிய நாத்தான்வேலும், செபெதேயுவின் குமாரரும், அவருடைய சீஷரில் வேறு இரண்டுபேரும் கூடியிருக்கும்போது, சீமோன் பேதுரு மற்றவர்களை நோக்கி: மீன்பிடிக்கப்போகிறேன் என்றான். அதற்கு அவர்கள்: நாங்களும் உம்முடனேகூட வருகிறோம் என்றார்கள். அவர்கள் புறப்பட்டுப்போய், உடனே படவேறினார்கள். அந்த இராத்திரியிலே அவர்கள் ஒன்றும் பிடிக்கவில்லை. விடியற்காலமானபோது, இயேசு கரையிலே நின்றார்; அவரை இயேசு என்று சீஷர்கள் அறியாதிருந்தார்கள்.இயேசு அவர்களை நோக்கி: பிள்ளைகளே, புசிக்கிறதற்கு ஏதாகிலும் உங்களிடத்தில் உண்டா என்றார். அதற்கு அவர்கள்: ஒன்றுமில்லை என்றார்கள்.அப்பொழுது அவர்: நீங்கள் படவுக்கு வலதுபுறமாக வலையைப் போடுங்கள், அப்பொழுது உங்களுக்கு அகப்படும் என்றார். அப்படியே அவர்கள் போட்டு, திரளான மீன்கள் அகப்பட்டதினால், அதை இழுக்கமாட்டாதிருந்தார்கள். ஆதலால் இயேசுவுக்கு அன்பாயிருந்த சீஷன் பேதுருவைப் பார்த்து: அவர் கர்த்தர் என்றான். அவர் கர்த்தர் என்று சீமோன் பேதுரு கேட்டவுடனே, தான் வஸ்திரமில்லாதவனாயிருந்தபடியினால், தன் மேற்சட்டையைக் கட்டிக்கொண்டு கடலிலே குதித்தான். (யோவான் 21:2-7)
    மேலே குறிப்பிடப்பட்ட வசனத்தில் “οι του ζεβεδαιου” என்ற கிரேக்க சொற்பிரயோகம். பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் பொருள்- the sons of Zebedee என்பதை KJVல் பார்க்க முடிகிறது. அதாவது செபெதேயுவின் மகன்கள் என்று பொருள். செபெதேயுவின் மகன்கள் வேறு யாரும் இல்லை அவர்கள் யாக்கோபும் யோவானும் தான்.
சீமோனுக்குக் கூட்டாளிகளான செபெதேயுவின் குமாரராகிய யாக்கோபும் யோவானும் அந்தப்படியே பிரமித்தார்கள். அப்பொழுது இயேசு சீமோனை நோக்கி: பயப்படாதே, இதுமுதல் நீ மனுஷரைப் பிடிக்கிறவனாயிருப்பாய் என்றார். (லூக்கா 5:10)
    உண்மையில் அன்பாயிருந்த சீஷன் செபெதேயுவின் குமாரராகிய யோவானாக இருந்தால், “οι του ζεβεδαιου”- செபெதேயுவின் மகன்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தமாட்டார். நேரடியாக நானும் யாக்கோபும் என்றோ யாக்கோபு என்று மட்டுமோ கூறி இருந்திருப்பார். மேலும் அங்கிருந்தவர்கள் எல்லாம் அவர்களது மற்றப்பெயருடன் சேர்த்து கூறப்படும் போது அந்த செய்தியின் தொடர்ச்சியான யோவான் 21:7ல் இயேசுவுக்கு அன்பாயிருந்த சீஷன் என்ற சொற்பிரயோகம் திடீர் என நுழைகிறது. ஏன் அந்த அன்பாயிருந்த சீஷன் தோமாவகவோ, நாத்தான்வேலுவாகவோ, யாக்கோபாகவோ, வேறு இருவரில் ஒருவராகவோ இருக்கக்கூடாது. இது போன்ற கேள்விகளுக்கு கிறித்தவ உலகில் ஆதாரங்களின் அடிப்படையிலான பதிலேதும் இருப்பதாக தெரியவில்லை. “இயேசுவுக்கு அன்பாயிருந்த சீஷன்” என்பது இந்த சுவிஷேசத்தை வாசிப்பவரை மடைமாற்றம் செய்ய வேறு நோக்கத்துடன் இடைச்செருகப்பட்ட வாசகமாக தோன்றுகிறது. எனவேதான் Burton L. Mack என்ற புதிய ஏற்பாட்டின் அறிஞர் பின்வருமாறு கூறுகிறார்.
    By not saying which ones, however, the author allowed the reader to fill in the blanks as one wished. Perhaps inadvertently, the author succeeded in crafting a very clever puzzle for subsequent readers: Who was the beloved disciple? Was he one of the disciples mentioned in the gospel? And which one? The only one he could not have been was Peter, for he and Peter were mentioned together in four stories as contestants.
    Why would anyone have wanted to do that? Interest in bringing the fourth gospel into line with centrist ideology dictated the need to introduce an apostolic guarantor into the story of the disciples. But since the people who produced the fourth gospel had never had such a guarantor or needed one, the author was confronted with an embarrassing situation. The solution was to avoid the term apostle (it does not appear in the Johannine tradition), include the sons of Zebedee as an accommodation to the apostolic myth, and assign the writing of the gospel to the mysterious, unnamed figure of the beloved disciple. (Who Wrote the New Testament?: The Making of the Christian Myth by Burton L. Mack Part 2, 8.Letters from the Apostles)
    எவ்வாறாயினும், யார் என்று கூறாமல், ஆசிரியர் தனது விருப்பப்படி வெற்றிடங்களை நிரப்பிக்கொள்ள வாசிப்பவரை விட்டுவிட்டார். ஒருவேளை கவனக்குறைவாக, அடுத்தடுத்து வாசிப்பவர்ளுக்கு மிகவும் புத்திசாலித்தனமான புதிரை உருவாக்குவதில் ஆசிரியர் வெற்றி பெற்றுள்ளார்: அன்பான சீடர் யார்? அவர் நற்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள சீடர்களில் ஒருவரா? யார் அவர்? அவரும் பேதுருவும் போட்டியாளர்களாக நான்கு கதைகளில் ஒன்றாகக் குறிப்பிடப்படுவதால், அவர் பேதுருவாக மட்டும் இருந்திருக்க முடியாது.
    ஏன் அதை ஒருவர் செய்ய விரும்ப வேண்டும்? நான்காவது சுவிசேஷத்தை மையவாத சித்தாந்தத்திற்கு ஏற்ப கொண்டு வருவதில் உள்ள ஆர்வம், சீடர்களின் கதையில் ஒரு அப்போஸ்தலிக்க உத்தரவாதத்தை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியத்தை திணித்தது. ஆனால் நான்காவது சுவிசேஷத்தை உருவாக்கியவர்களுக்கு அத்தகைய உத்தரவாதம் இல்லை அல்லது தேவைப்படாமல் இருந்ததால், ஆசிரியர் சங்கடமான சூழ்நிலையை எதிர்கொண்டார். இதற்கு விடை, அப்போஸ்தலன் என்ற சொல்லைத் தவிர்த்து (இது ஜோஹனைன் பாரம்பரியத்தில் இடம்பெறவில்லை), அப்போஸ்தலிக்க புராணத்திற்கு இடமளிக்கும் வகையில் செபதேயுவின் மகன்களை உள்ளடக்கி, மேலும் அன்பான சீடரின் மர்மமான, பெயரிடப்படாத நபருக்கு நற்செய்தி எழுதுவதை ஒதுக்குவதே ஆகும்.
    அதாவது, “சுவிஷேசம் என்ற பெயரில் எழுதப்பட்ட கட்டுகதையை, அப்போஸ்தல செய்திகள்தான் என்று கூறி மைய கோட்பாட்டில் இணைப்பதற்காக “இயேசுவுக்கு அன்பாயிருந்த சீஷன்” என்ற சொற்பிரயோகம் இடைச்செருகல் செய்யப்பட்டதாக மேலே கூறப்படுகிறது. நேரடி பெயரை குறிப்பிட்டால், இப்போது மேற்கொண்டு நாம் செய்வது போன்று ஆய்வை செய்து மக்கள் மறுத்துவிடுவார்கள் என்ற அச்சமே இந்த சொற்ப்பிரயோகத்தை உள்ளே இணைக்க காரணமாக இருந்துள்ளது என்பதை நம்மால் அறிய முடிகிறது. மேலும் எலைன் பேகல்ஸ் தனது “Beyond Belief: THE SECRET GOSPEL OF THOMAS நூலில் பேதுரு தோமா போன்ற இயேசுவின் உண்மை சீடர்களை ஓரம் கட்டும் நோக்கத்துடனே “இயேசுவுக்கு அன்பாயிருந்த சீஷன்” என்ற சொற்பிரயோகம் இடைச்செருகல் செய்யப்பட்டதாக கூறுகிறார்.

    இப்படி யோவானின் படியான சுவிஷேசத்தின் நம்பகத்தன்மையே கேள்விக்குறியாக இருக்கிறது. இது ஒருபுறம் இருந்தாலும், “இயேசுவுக்கு அன்பாயிருந்த சீஷன்” யார் என்பது குறித்து மேலும் தேடுவோம்.  யோவானின் படியான சுவிஷேசத்தில் “இயேசுவுக்கு அன்பாயிருந்த சீஷன்” குறித்த தகவல் எந்த எந்த வசனங்களில் இடம் பெறுகிறது என்பதை முதலில் காண்போம்


அந்தச் சமயத்தில் அவருடைய சீஷரில் இயேசுவுக்கு அன்பானவனாயிருந்த ஒருவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டிருந்தான். (யோவான் 13:23)

அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். (யோவான் 19:26)

உடனே அவள் ஓடி, சீமோன்பேதுருவினிடத்திலும் இயேசுவுக்கு அன்பாயிருந்த மற்றச் சீஷனிடத்திலும் போய்: கர்த்தரைக் கல்லறையிலிருந்து எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எங்களுக்குத் தெரியவில்லை என்றாள். (யோவான் 20:2)

சீமோன்பேதுருவும், திதிமு என்னப்பட்ட தோமாவும், கலிலேயா நாட்டிலுள்ள கானா ஊரானாகிய நாத்தான்வேலும், செபெதேயுவின் குமாரரும், அவருடைய சீஷரில் வேறு இரண்டு பேரும் கூடியிருக்கும்போது, சீமோன் பேதுரு மற்றவர்களை நோக்கி: மீன்பிடிக்கப்போகிறேன் என்றான். அதற்கு அவர்கள்: நாங்களும் உம்முடனேகூட வருகிறோம் என்றார்கள். அவர்கள் புறப்பட்டுப்போய், உடனே படவேறினார்கள். அந்த இராத்திரியிலே அவர்கள் ஒன்றும் பிடிக்கவில்லை. விடியற்காலமானபோது, இயேசு கரையிலே நின்றார்; அவரை இயேசு என்று சீஷர்கள் அறியாதிருந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: பிள்ளைகளே, புசிக்கிறதற்கு ஏதாகிலும் உங்களிடத்தில் உண்டா என்றார். அதற்கு அவர்கள்: ஒன்றுமில்லை என்றார்கள்.அப்பொழுது அவர்: நீங்கள் படவுக்கு வலதுபுறமாக வலையைப் போடுங்கள், அப்பொழுது உங்களுக்கு அகப்படும் என்றார். அப்படியே அவர்கள் போட்டு, திரளான மீன்கள் அகப்பட்டதினால், அதை இழுக்கமாட்டாதிருந்தார்கள். ஆதலால் இயேசுவுக்கு அன்பாயிருந்த சீஷன் பேதுருவைப் பார்த்து: அவர் கர்த்தர் என்றான். அவர் கர்த்தர் என்று சீமோன்பேதுரு கேட்டவுடனே, தான் வஸ்திரமில்லாதவனாயிருந்தபடியினால், தன் மேற்சட்டையைக் கட்டிக்கொண்டு கடலிலே குதித்தான். (யோவான் 21:2-7)
    இந்த இயேசுவுக்கு அன்பாயிருந்த சீடன், இயேசுவின் சீடனான யோவான்தான் என்ற இந்த கிறித்தவ உலகின் நம்பிக்கைக்கு ஆதாரமாய் அமைவது ஐரீனியஸின் இந்த கூற்றுதான். ஏனைய கூற்றுக்கள் அனைத்தும் அவரை பின்பற்றி கூறப்பட்டவைதான்.
Afterwards, John, the disciple of the Lord, who also had leaned upon His breast, did himself publish a Gospel during his residence at Ephesus in Asia.
அதன்பிறகு, இறைவனின் சீடரான, அவருடைய மார்பில் சாய்ந்திருந்த யோவான், ஆசியாவிலுள்ள எபேசஸ் என்ற இடத்தில் தாம் தங்கியிருந்தபோது ஒரு நற்செய்தியை அவரும் வெளியிட்டார். ( Against Heresies:Book III, Chapter I)
    கி.பி. 2ம் நூற்றாண்டின் ஐரீனியஸின் மேற்குறிபிட்ட இந்த குறிப்புதான் இயேசுவுக்கு அன்பாயிருந்த சீடன் யோவான் தான் என்பதற்கு காலத்தால் முந்தையது. அதாவது இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதிகளில்தான் இந்த கருத்து முதன் முதலில் முன்னெடுக்கப்பட்டது. அதுவரை இந்த கருத்து இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. இந்த இடத்தில் கிறித்தவ மிசனரிகள் ஒரு வாதத்தை முன்வைக்கலாம். அதாவது ஐரீனியஸ் ஸ்மிர்னாவின் பிஷப் பாலிகார்பின் சீடர், பாலிகார்ப் யோவானின் சீடர், எனவே ஐரினியஸின் கூற்று உண்மை என்று வாதிக்கலாம். ஆனால் இங்கு கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், பாலிகார்ப்பின் எழுத்துக்களில் இன்றும் எஞ்சி இருப்பது “பிலிப்பியர்களுக்கு எழுதிய நிருபம்” மட்டுமே. இதில் ஏனைய சுவிஷேச வசனங்களை குறிப்பிட்ட பாலிகார்ப் ஒரு இடத்திலும் தப்பி தவறி கூட யோவானின் சுவிஷேச வசனங்களை குறிப்பிடவில்லை. எனவே பாலிகார்ப் யோவானின் சீடர் என்பதெல்லாம், ஐரீனியஸின் கருத்து, அதனை எந்த விதத்திலும் உறுதிபடுத்த இயலாது. ஐரீனியஸின் இந்த கருத்தின் தற்போதைய நிலைகுறித்து Delbert Burkett தனது An Introduction to the New Testament and the Origins of Christianity. Cambridge: Cambridge University Press, 2002; 2nd. ed., 2019. 14 The Gospel of John,P.No.231) கூறுகையில்:
Irenaeus claims that his information came from an older man, Polycarp bishop of Smyrna, who heard it from the apostles. For several reasons, most contemporary scholars doubt that the Gospel originated with John the apostle. (1) There is no evidence that John the apostle lived in Ephesus and some evidence that he did not. When Ignatius, bishop of Antioch, wrote to the church in Ephesus in the time of Trajan, he made no mention of John, though he did mention the apostle Paul’s much earlier stay in Ephesus. This omission suggests that John did not live there. (2) Other traditions suggest that John the apostle suffered martyrdom prior to the composition of Mark around 70 CE (Mark 10:39). (3) The thought of the Fourth Gospel has undergone a greater degree of theological development than that of the other three, making it unlikely that an eyewitness of Jesus’ ministry wrote it. If the Beloved Disciple was an actual disciple of Jesus, traditions begun by him must have undergone development before being included in the Gospel. 
ஸ்மிர்னாவின் பிஷப் பாலிகார்ப்  என்ற வயோதிகரிடம் இருந்து தகவல் வந்தது என்றும், அவர் அதை அப்போஸ்தலர்களிடமிருந்து கேட்டதாகவும் ஐரேனியஸ் கூறுகிறார். பல காரணங்களுக்காக, பெரும்பாலான சமகால அறிஞர்கள் அந்த சுவிசேஷம் அப்போஸ்தலன் யோவானிடமிருந்து வந்ததை சந்தேகிக்கின்றனர். (1) அப்போஸ்தலன் யோவான் எபேசஸில் வாழ்ந்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை, அவர் அவ்வாறு இருக்கவில்லை என்பதற்கு சில சான்றுகளும் உள்ளன. டிராஜனின் காலத்தில் அந்தியோக்கியாவின் பிஷப் இக்னேஷியஸ் எபேசஸில் உள்ள தேவாலயத்திற்கு கடிதம் எழுதியபோது, அவர் யோவானை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை, இருப்பினும் அவர் அப்போஸ்தலன் பவுல் எபேசஸில் மிக முற்காலத்தில் தங்கியிருந்ததைக் குறிப்பிடுகிறார். இந்த புறக்கணிப்பு யோவான் அங்கு வசிக்கவில்லை என்று கூறுகிறது. (2) மற்ற மரபுகள்) மாற்கு எழுதப்படுவதற்கு முன் (மாற்கு 10:39) கி.பி 70க்கு முன். அப்போஸ்தலன் யோவான் கொல்லப்பட்டுவிட்டதாக கூறுகின்றன. (3) நான்காவது நற்செய்தியின் சிந்தனை மற்ற மூன்றையும் விட அதிக அளவு இறையியல் வளர்ச்சியைப் பெற்றுள்ளது, இது இயேசுவின் ஊழியத்தை நேரில் கண்ட சாட்சி எழுதியதற்கு வாய்ப்பில்லை. அன்பான சீடர் இயேசுவின் உண்மையான சீடராக இருந்தால், அவரால் தொடங்கப்பட்ட மரபுகள் நற்செய்தியில் சேர்க்கப்படுவதற்கு முன்பு மாறுபாடு அடைந்திருக்க வேண்டும்.

    எனவே ஐரீனியஸ் கூறுவதான “இந்த சுவிஷேசம் இயேசுவுக்கு அன்பாயிருந்த சீடன் எழுதியது என்பதற்கோ அது யோவான் தான்” என்பதற்கோ வெளி ஆதாரங்களில் எந்த முகாந்திரமும் இல்லை. மேலும் கிறித்தவ உலகம் விசித்திரமான ஒரு வாதத்தையும் கையாள்கிறது, அதாவது இந்த சுவிஷேசத்தில் யோவானின் பெயர் குறிப்பிடப்படாததற்கு யோவானின் பணிவே காரணம் என்று கூறுகிறது. இந்த சுவிஷேசத்தில் சீமோன் பேதுரு, அந்திரேயா, பிலிப்பு, நாத்தான்வேல், தோமா யூதாஸ்காரியோத்து, செபதேயுவின் குமாரர் ஆகியோரது பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது. பலரின் பெயர் இல்லாத போது, இந்த சப்பைகெட்டும் எந்த தீர்வையும் இந்த சிக்கலுக்கு தராது.  “இயேசுவுக்கு அன்பாயிருந்தவன்” என்ற சொற்பிரயோகம் ஏனைய மூன்று சுவிஷேசத்திலும் இடம் பெறவில்லை, யோவானின் படியான சுவிஷேசத்தை தவிர. யோவானின் படியான சுவிஷேசம் இயேசுவுக்கு அன்பாயிருந்தவர்கள் குறித்து என்ன கூறுகிறது என்பதை பார்ப்போம்.

✅இயேசு லாசருவிடம் அன்பாயிருந்தார்:

இயேசு மார்த்தாளிடத்திலும் அவளுடைய சகோதரியினிடத்திலும் லாசருவினிடத்திலும் அன்பாயிருந்தார்.( யோவான் 11:5)
பஸ்கா பண்டிகைக்கு முன்னே, இயேசு இவ்வுலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகும்படியான தம்முடைய வேளை வந்ததென்று அறிந்து, தாம் இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார்.(யோவான் 13:1)
    இயேசு இப்படி பலரிடம் அன்பாயிருந்தார் என்று யோவான் கூறுகிறது. அது என்னவோ அந்த சீடர் மட்டும் என்ன ஸ்பெஷல் அன்பை கொண்டிருந்தார் என்பது தெரியவில்லை. எனவே யார் இந்த சீஷன் என்பதை யாராலும் உறுதிபட புதிய ஏற்பாட்டின் தகவல்களை கொண்டு நிறுவ இயலாது. குறைந்த பட்சம் இந்த யோவானோடு, அவரது பண்பு நலன்களில் ஒன்றான மொழிநடையிலாவது ஒன்றி வருகிறதா என்பதை ஆய்வுக்கு உட்படுத்துவோம். யோவானை பொருத்தவரை அவர் ஒரு கலிலேயன், மீனவர், அரமேய மொழியை தாய்மொழியாக கொண்டவர்.
இயேசு கலிலேயாக் கடலோரமாய் நடந்துபோகையில், மீன்பிடிக்கிறவர்களாயிருந்த இரண்டு சகோதரராகிய பேதுரு என்னப்பட்ட சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும், கடலில் வலைபோட்டுக்கொண்டிருக்கிறபோது, அவர்களைக் கண்டு: என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார். உடனே அவர்கள் வலைகளை விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள். அவர் அவ்விடம் விட்டுப் போகையில், வேறே இரண்டு சகோதரராகிய செபெதேயுவின் மகன் யாக்கோபும், அவன் சகோதரன் யோவானும் தங்கள் தகப்பன் செபெதேயுவுடனே படவிலிருந்து, தங்கள் வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருக்கிறபோது, அவர்களைக் கண்டு, அவர்களையும் அழைத்தார். (மத்தேயூ 4:18-21)

    நாம் பைபிலின் மொழிக்குழப்பம் குறித்த தொடரில் அன்றைய காலத்தில், கற்றறிந்த ஜோஸப்ஸ் போன்றவர்களுக்கே கிரேக்க மொழியை கற்பதில் இருந்த சிக்கல்களை விளக்கியிருந்தோம். மீண்டும் அதனை ஒருமுறை நினைவு படுத்தி விட்டு இந்த ஆய்வுப்பகுதியில் நுழைவோம்.
I have also taken a great deal of pains to obtain the learning of the Greeks, and understand the elements of the Greek language, although I have so long accustomed myself to speak our own tongue, that I cannot pronounce Greek with sufficient exactness; for our nation does not encourage those that learn the languages of many nations, and so adorn their discourses with the smoothness of their periods; 
கிரேக்கர்களின் கல்விகளைப் பெறுவதற்கும், கிரேக்க மொழியின் கூறுகளைப் புரிந்துகொள்வதற்கும் நான் மிகுந்த சிரத்தை எடுத்துக்கொண்டேன், ஆனால் நான் நீண்ட காலமாக எனது சொந்த மொழியைப் பேசப் பழகியிருந்தாலும், போதுமான துல்லியத்துடன் என்னால் கிரேக்கத்தை உச்சரிக்க முடியவில்லை;ஏனென்றால், பல தேசங்களின் மொழிகளைக் கற்று, அவர்களின் ஆக்கங்களை அவர்களின் காலகட்டங்களின் சுமூகம் அலங்கரிக்கிறவர்களை நம் தேசம் ஊக்குவிப்பதில்லை; ( Antiquities of Jews XX, chapter XI)
    நாம் சென்ற கட்டுரையில் லூக்காவின் சுவிஷேசம் குறித்து பார்க்கையில், கிறித்தவ உலகம் லூக்காவின் சுவிஷேசத்தின் கிரேக்க மொழி நடை, ஏனைய இரு ஒத்தமை சுவிஷேசங்களை விட மேம்பட்டதாக சிலாகித்து கூறிவருகிறது என்று கூறியிருந்தோம். ஜோஸபஸ் போன்றவர்கள் கிரேக்கத்தை கற்கவே பெரும்பாடாய் இருந்த காலத்தில் யோவான் என்ற மீனவன் அதை அன்று கற்றிருந்தார் என்று கூறுவதே நம்பத்தகுந்ததாய் இல்லை. இந்நிலையில் யோவானின் கிரேக்க நடை லூக்காவின் கிரேக்க நடைக்கு ஒப்பாக உள்ளது என்றால், அது எப்படி பட்ட கேலிக்கூத்து. அதைதான் நாம் கீழே காணவிருக்கிறோம். அதாவது சுவிஷேசங்களில், லூக்கா மட்டுமே பிரத்தியேகமாக பயன்படுத்தும் சொற்கள் பலவற்றை யோவானில் காணமுடிகிறது. அதன் சிறு பட்டியல்தான் இது.

வ.எண் பயன்படுத்தப்பட்ட
    வார்த்தை
லூக்கா யோவான்
1.
ἀγωνίζομαι
லூக்கா 13:23யோவான் 18:36
2.
ἀντιλέγω
லூக்கா 2:34யோவான் 19:12
3.
ἀδικία
லூக்கா 13:27யோவான் 7:18
4.
αριθμός
லூக்கா 22:3யோவான் 6:10
5.
βαθύς
லூக்கா 24:1யோவான் 4:2
6.
βραχίων
லூக்கா 1:51யோவான் 12:38
7.
γνωστός
லூக்கா 2:44, 23:49யோவான் 18:15,16
8.
ἐκμάσσω
லூக்கா 7:38,44யோவான் 11:2, 12:3
9.
ἐξηγέομαι
லூக்கா 24:35யோவான் 1:18
10.
βάπτω
லூக்கா 16:24யோவான் 13:26
11.
γράμμα
லூக்கா 16:6,7யோவான் 5:47
12.
ἐμπίμπλημι
லூக்கா 1:53யோவான் 6:12
13.
ἐνιαυτός 
லூக்கா 4:19யோவான் 11:49,11:51, 18:13
14.
ἐνώπιον
லூக்கா 24:43 யோவான் 20:30
15.
ἱματισμός
லூக்கா 7:25, 9:29யோவான் 19:24
16.
κόλπος
லூக்கா 6:38 யோவான் 1:18
17.
κυκλόω
லூக்கா 21:20யோவான் 10:24
18.
λαγχάνω
லூக்கா 1:9யோவான் 19:24
19.
λύπη
லூக்கா 22:45யோவான் 16:6
20.
λογίζομαι
லூக்கா 22:37யோவான் 11:50
21.
μηνύω
லூக்கா 20:37யோவான் 11:57
22.
ἐπίκειμαι
லூக்கா 5:1யோவான் 11:38
23.
πράσσω
லூக்கா 3:13யோவான் 3:20
24.
ὀθόνιον
லூக்கா 24:12யோவான் 19:40
25.
μηνύω
லூக்கா 20:37யோவான் 11:57

        இப்படி லூக்காவின் படியான சுவிஷேசத்தின் மேம்பட்ட கிரேக்க நடையின் வார்த்தைகளை யோவானின் படியான சுவிஷேசம் கொண்டிருப்பது இது மீனவ யோவானின் எழுத்துக்கள் அல்ல என்பதை தெளிவாக காட்டுகிறது. மேலும் இந்த சுவிஷேசம் மிகுந்த இலக்கிய நயம் உடையதாகவும் கூறப்படுகிறது. சுவிஷேசம் எழுதியதாக கூறப்படும் யோவான், 'பவுல்', 'லூக்கா' போன்ற கற்றறிந்த எழுத்தர்களை கொண்டிருந்ததாக எந்த ஆதாரங்களும் இல்லை. இந்த சுவிஷேசத்தை எழுதிய எழுத்தர் யார் என்பதற்கும் எந்த குறிப்பும் இல்லை. உதாரணமாக ரோமர் 16:22ல் எழுத்தர் யார் என்பது எல்லாம் பதிவு செய்யப்படுகிறது. இப்படி யார் அந்த இயேசுவிடம் அன்பாயிருந்த சீஷன் என்பதும் தெரியவில்லை. எழுத்தர் குறித்த தகவலும் இல்லை, 

     இயேசுவுக்கு அன்பாயிருந்த சீடன் யார் என்பதில புதிய ஏற்பாட்டின் தரவுகளும், வரலாற்று ஆவணங்களும், குழம்பி நிற்கும் நிலையில், அது இயற்றப்பட்டதாக அனுமாகிக்கப்படும் கால அட்டவனையும் உண்மையில் கிறித்தவ உலகம் எவ்வளவு இந்த விஷயத்தில் குழம்பி நிற்கிறது என்பதை படம் பிடித்துக்காட்டுகிறது. அது குறித்த தகவலை An introduction to the literature of The New Testament by JAMES MOFFATT. B.D., D.D. Oct 1918 P.No.580-581 என்ற நூலில் இருந்து வழங்குகிறோம். 

c.70-85 A.D.Wittichen, Alford, Reithmayr, Bleek
c.80-90 A.D. Ewald, Godet, Bisping, Westcott, Calmes, Zahn
c.85-95 A.D. Camerlynck
c.90-100 A.D.Mangenot, Batiffol, B. Weiss
c.100 A.D.Lightfoot, Weizsacker, Reynolds, Cornely
After 95 A.D.Harnack
Before 100 A.D.Lepin
c.90-120 A.D. Jackson
c.100-110 A.D. Renan, Schenkel
c.100-125 A.D.O. Holtzmann, J. Réville, Julicher, Loisy, Bauer
c.130-140 A.D. Hilgenfeld, Keim, Thoma, Lutzelberger, A. Réville
c.140-155 A.D. Schwegler, Zeller, Volkmar, Taylor, van Manen, Kreyenbuhl, Schmiedel, Erbe
c. 150 A.D Bretschneider, Schwartz                                                                    
before 135-140 Pfleiderer
c.160-170 A.D Baur, Scholten, Bruno Bauer                                                       

    கி.பி. 70 முதல் கி.பி.170 வரையிலான கிட்டதட்ட 100 ஆண்டுகால இடைவெளியை யோவானின் படியான சுவிஷேசம் எழுதப்பட்ட காலமாக கிறித்தவ உலகம் கூறிவருகிறது. மேற்குறிபிட்ட இந்த கால கருத்தியலுக்கு ஒவ்வொரு அறிஞர்களும் தங்களது வாதத்தை உறுதிப்படுத்தும் ஆதாரங்களை கொண்டிருப்பார்கள்.

   கிறித்தவ அறிஞர்கள் யார் இந்த சுவிஷேசத்தின் ஆசிரியர் யோவான் என்று விவாதிப்பதை இங்கு பதிவிட்டால், பக்கங்கள் பத்தாது.  யார் அந்த இயேசுவிற்கு அன்பாய் இருந்த சீடர் என்று அறிய முடியாத நிலையில், மேம்பட்ட கிரேக்க நடையில் இதை அந்த சீடர் சொல்ல சொல்ல எழுதிய அந்த எழுத்தர் யார் என்று யாருக்குமே தெரியாத நிலையில், வரலாற்றுத்தரவுகள் என்று கூறப்படும் கூற்றும் கூட உறுதிப்படுத்த முடியாத அளவிற்கு பலவீனமானதாக இருக்கும் நிலையில், இயற்றப்பட்ட காலம் குறித்து கிறித்தவ உலகமே குழம்பி நிற்கும் நிலையில், ஒரு முழு அத்தியாயமும், அந்த “இயேசுவிற்கு அன்பாய் இருந்த சீடர்” என்ற சொற்ப்பிரயோகமுமே இடைச்செருகல் என்று கிறித்தவ அறிஞர்களில் பெரும்பான்மையினர் கூறிவரும் நிலையில், இதுவும் ஏனைய நற்செய்தி நூல்களை போன்று இயேசுவின் சீடர் ஒருவரின் பெயரில் முன்பிருந்த நற்செய்தி நூல்களில் இருந்தும், சில வாய்வழிச் செய்திகளில் இருந்தும், சுய கற்பனையிலிருந்தும், கட்டுக்கதைகளில் இருந்தும் ஒன்று திரட்டி இயேசுவின் சீடர் ஒருவரின் பெயரில் இட்டுக்கட்டபட்ட நூல்” என்ற முடிவிற்கே வர இயலும்.