குர்ஆனின் பாதுகாப்பு குறித்த இஸ்லாமோஃபோபுகளின் கேள்விகளுக்கு தொடர்களாக நாம் பதிலளித்து வருகிறோம். அந்த வரிசையில் இந்த கட்டுரையில் குர்ஆனின் பகுதிகள் காணவில்லை என்று கூறும் சில ஹதீஸ்களை முன்னிறுத்தி இஸ்லாமோஃபோபுகள் முன்வைக்கும் விமர்சனங்களையும் அதற்கான விளக்கங்களையும் வரிசைப்படுத்தி காணவுள்ளோம் இன்ஷா அல்லாஹ்.
- உஸ்மான்(ரலி) அவர்கள் அல் அஹ்ஸாப் சூராவை முழுமையாக பெறவில்லையா??
- குர் ஆனில் இரு வசனங்கள் விடுபட்டுவிட்டதா??
- கல்லெறி தன்டனை குறித்த ஆயத்தை கொண்டுவந்த உமர்(ரலி)யை, ஸைத் இப்னு ஸாபித்(ரலி) மறுத்துவிட்டார்களா?
- உஸ்மான்(ரலி) முஸ்ஹஃப்பை மாற்றுவதற்கு முன்பிருந்த வசனம் பிறகு காணவில்லையா??
- "நீங்கள் முதலில் போராடியது போல் போராடுங்கள்" என்ற வசனம் விடப்பட்டுவிட்டதா??
உஸ்மான்(ரலி) அவர்கள் அல் அஹ்ஸாப் சூராவை முழுமையாக பெறவில்லையா??
ﻭﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ اﺑﻦ ﺃﺑﻲ ﻣﺮﻳﻢ ﻋﻦ اﺑﻦ ﻟﻬﻴﻌﺔ ﻋﻦ ﺃﺑﻲ اﻷﺳﻮﺩ ﻋﻦ ﻋﺮﻭﺓ ﺑﻦ اﻟﺰﺑﻴﺮ ﻋﻦ ﻋﺎﺋﺸﺔ ﻗﺎﻟﺖ ﻛﺎﻧﺖ ﺳﻮﺭﺓ اﻷﺣﺰاﺏ ﺗﻘﺮﺃ ﻓﻲ ﺯﻣﻦ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻣﺎﺋﺘﻲ ﺁﻳﺔ ﻓﻠﻤﺎ ﻛﺘﺐ ﻋﺜﻤﺎﻥ اﻟﻤﺼﺎﺣﻒ ﻟﻢ ﻳﻘﺪﺭ ﻣﻨﻪا ﺇﻻ ﻋﻠﻰ ﻣﺎ ﻫﻮ اﻵﻥ.
ஆயிஷா(ரலி) கூறியதாவது:நபி(ஸல்) அவர்களது காலத்தில் அல் அஹ்ஸாப் சூரா இருநூறு வசனங்களாக ஓதப்பட்டு வந்தது.உஸ்மான்(ரலி) முஸ்ஹஃபை எழுதியபோது இப்போது இருப்பதை தவிர எதையும் பெற முடியவில்லை. (அறிவிப்பாளர்: உர்வா இப்னு ஜுபைர். நூல்: இத்கான் 3/82, அல் ஃபதாயில் அல் குர்ஆன் 1/320)
நமது பதில்:
அல் குர்ஆனில் இரு வசனங்கள் விடுபட்டுவிட்டதா??
ﻭﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ اﺑﻦ ﺃﺑﻲ ﻣﺮﻳﻢ ﻋﻦ اﺑﻦ ﻟﻬﻴﻌﺔ ﻋﻦ ﻳﺰﻳﺪ ﺑﻦ ﻋﻤﺮﻭ اﻟﻤﻌﺎﻓﺮﻱ ﻋﻦ ﺃﺑﻲ ﺳﻔﻴﺎﻥ اﻟﻜﻼﻋﻲ ﺃﻥ ﻣﺴﻠﻤﺔ ﺑﻦ ﻣﺨﻠﺪ اﻷﻧﺼﺎﺭﻱ ﻗﺎﻝ ﻟﻬﻢ ﺫاﺕ ﻳﻮﻡ: ﺃﺧﺒﺮﻭﻧﻲ ﺑﺂﻳﺘﻴﻦ ﻓﻲ اﻟﻘﺮﺁﻥ ﻟﻢ ﻳﻜﺘﺒﺎ ﻓﻲ اﻟﻤﺼﺤﻒ ﻓﻠﻢ ﻳﺨﺒﺮﻭﻩ ﻭﻋﻨﺪﻫﻢ ﺃﺑﻮ اﻟﻜﻨﻮﺩ ﺳﻌﺪ ﺑﻦ ﻣﺎﻟﻚ ﻓﻘﺎﻝ ﻣﺴﻠﻤﺔ " ﺇﻥ اﻟﺬﻳﻦ ﺁﻣﻨﻮا ﻭﻫﺎﺟﺮﻭا ﻭﺟﺎﻫﺪﻭا ﻓﻲ ﺳﺒﻴﻞ اﻟﻠﻪ ﺑﺄﻣﻮاﻟﻬﻢ ﻭﺃﻧﻔﺴﻬﻢ ﺃﻻ ﺃﺑﺸﺮﻭا ﺃﻧﺘﻢ اﻟﻤﻔﻠﺤﻮﻥ ﻭاﻟﺬﻳﻦ ﺁﻭﻭﻫﻢ ﻭﻧﺼﺮﻭﻫﻢ ﻭﺟﺎﺩﻟﻮا ﻋﻨﻬﻢ اﻟﻘﻮﻡ اﻟﺬﻳﻦ ﻏﻀﺐ اﻟﻠﻪ ﻋﻠﻴﻬﻢ ﺃﻭﻟﺌﻚ ﻻ ﺗﻌﻠﻢ ﻧﻔﺲ ﻣﺎ ﺃﺧﻔﻲ ﻟﻬﻢ ﻣﻦ ﻗﺮﺓ ﺃﻋﻴﻦ ﺟﺰاء ﺑﻤﺎ ﻛﺎﻧﻮا ﻳﻌﻤﻠﻮﻥ "
மஸ்லமா இப்னு முஹல்லத்(ரலி) ஒரு நாள் அவர்களுடன் இருந்தவர்களிடம் " முஸ்ஹஃப்பில் எழுதப்படாத இரண்டு வசனங்கள் குறித்து கூறுங்கள்" என்று கூறினார்கள். யாரும் பதிலளிக்கவில்லை. அவர்கள் மத்தியில் அபூ அல்கனூத் ஸஅத் இப்னு மாலிக் இருந்தார்கள். மஸ்லமா(ரலி) கூறியதாவது : நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத் செய்து, தமது செல்வங்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோர் நற்செய்தியை பெற்றுக்கொள்ளுங்கள்.நீங்கள் தாம் வெற்றி பெற்றோர். மேலும் அல்லாஹ் கோபம் கொண்டோருக்கு எதிராக அவர்களுக்கு உறையுள், உதவி மற்றும் பாதுகாப்பு வழங்கியோரும்( வெற்றி பெற்றோர்). யாரும் அவர்கள் செய்ததற்காக அவர்களுக்கு காத்திருக்கும் கூலியை அறியமாட்டார். (அறிவிப்பாளர்: அபீ ஸுஃப்யான் அல் கலாயீ, நூல்: அல் இத்கான் 3/84)
நமது பதில்:
கல்லெறி தன்டனை குறித்த ஆயத்தை கொண்டுவந்த உமர்(ரலி)யை, ஸைத் இப்னு ஸாபித்(ரலி) மறுத்துவிட்டார்களா??
ﻭﻗﺪ ﺃﺧﺮﺝ اﺑﻦ ﺃﺷﺘﺔ ﻓﻲ اﻟﻤﺼﺎﺣﻒ ﻋﻦ اﻟﻠﻴﺚ ﺑﻦ ﺳﻌﺪ ﻗﺎﻝ: ﺃﻭﻝ ﻣﻦ ﺟﻤﻊ اﻟﻘﺮﺁﻥ ﺃﺑﻮ ﺑﻜﺮ ﻭﻛﺘﺒﻪ ﺯﻳﺪ ﻭﻛﺎﻥ اﻟﻨﺎﺱ ﻳﺄﺗﻮﻥ ﺯﻳﺪ ﺑﻦ ﺛﺎﺑﺖ ﻓﻜﺎﻥ ﻻ ﻳﻜﺘﺐ ﺁﻳﺔ ﺇﻻ ﺑﺸﺎﻫﺪﻱ ﻋﺪﻝ ﻭﺇﻥ ﺁﺧﺮ ﺳﻮﺭﺓ ﺑﺮاءﺓ ﻟﻢ ﺗﻮﺟﺪ ﺇﻻ ﻣﻊ ﺧﺰﻳﻤﺔ ﺑﻦ ﺛﺎﺑﺖ ﻓﻘﺎﻝ: اﻛﺘﺒﻮﻫﺎ ﻓﺈﻥ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺟﻌﻞ ﺷﻬﺎﺩﺗﻪ ﺑﺸﻬﺎﺩﺓ ﺭﺟﻠﻴﻦ ﻓﻜﺘﺐ. ﻭﺇﻥ ﻋﻤﺮ ﺃﺗﻰ ﺑﺂﻳﺔ اﻝﺭﺟﻢ ﻓﻠﻢ ﻳﻜﺘﺒﻬﺎ ﻷﻧﻪ ﻛﺎﻥ ﻭﺣﺪﻩ.
அபூ பகர் (ரலி) அவர்கள் தான் முதன்முதலில் குர்ஆனை ஒன்றாக தொகுத்தவர்கள். அதனை ஸைத்(ரலி) எழுதினார்கள். ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களிடம் மக்கள் வருவார்கள். இரண்டு சாட்சியம் இல்லாமல் எந்த வசனத்தையும் எழுத மாட்டார்கள். அல் பராஅத் ஸுராவின் இறுதி பகுதி, குஸைமா இப்னு ஸாபித்(ரலி) அவர்களிடம் இருந்தது. ஸைத் (ரலி) " அதனை எழுதிக்கொள்ளுங்கள்.ஏனென்றால் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் குஸைமாவின் சாட்சியத்தை இரண்டு நபர்களின் சாட்சிக்கு நிகராக்கியுள்ளார் ", என்று கூறினார்கள். அதனால் எழுதி கொண்டார்கள். உமர்(ரலி) கல்லெறி குறித்த வசனத்துடன் வந்தார்கள். அவர் மட்டும் தனித்து வந்ததால் அது எழுதப்படவில்லை. (அறிவிப்பாளர்: லைஸ் இப்னு சஅத் நூல்: அல் இத்கான் 1/206)
நமது பதில்:
உஸ்மான்(ரலி) முஸ்ஹஃப்பை மாற்றுவதற்கு முன்பிருந்த வசனம் பிறகு காணவில்லையா??
ﺣﺪﺛﻨﺎ ﺣﺠﺎﺝ ﻋﻦ اﺑﻦ ﺟﺮﻳﺞ ﺃﺧﺒﺮﻧﻲ اﺑﻦ ﺃﺑﻲ ﺣﻤﻴﺪ ﻋﻦ ﺣﻤﻴﺪﺓ ﺑﻨﺖ ﺃﺑﻲ ﻳﻮﻧﺲ ﻗﺎﻟﺖ ﻗﺮﺃ ﻋﻠﻲ ﺃﺑﻲ ﻭﻫﻮ اﺑﻦ ﺛﻤﺎﻧﻴﻦ ﺳﻨﺔ ﻓﻲ ﻣﺼﺤﻒ ﻋﺎﺋﺸﺔ " ﺇﻥ اﻟﻠﻪ ﻭﻣﻼﺋﻜﺘﻪ ﻳﺼﻠﻮﻥ ﻋﻠﻰ اﻟﻨﺒﻲ ﻳﺄﻳﻬﺎ اﻟﺬﻳﻦ ﺁﻣﻨﻮا ﺻﻠﻮا ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻤﻮا ﺗﺴﻠﻴﻤﺎ ﻭﻋﻠﻰ اﻟﺬﻳﻦ ﻳﺼﻠﻮﻥ اﻟﺼﻔﻮﻑ اﻷﻭﻝ " ﻗﺎﻟﺖ ﻗﺒﻞ: ﺃﻥ ﻳﻐﻴﺮ ﻋﺜﻤﺎﻥ اﻟﻤﺼﺎﺣﻒ. ﻗﺎﻝ: ﻗﺎﻝ اﺑﻦ ﺟﺮﻳﺞ: ﻭﺃﺧﺒﺮﻧﻲ اﺑﻦ ﺃﺑﻲ ﺣﻤﻴﺪ، ﻋﻦ ﻋﺒﺪ اﻟﺮﺣﻤﻦ ﺑﻦ ﻫﺮﻣﺰ ﻭﻏﻴﺮﻩ ﻣﺜﻞ ﺫﻟﻚ ﻓﻲ ﻣﺼﺤﻒ ﻋﺎﺋﺸﺔ
ஹமீதா பின்த் அபீ யூனிஸ் கூறியதாவது: எனது தந்தை என்பது வயதாக இருக்கும் போது ஆயிஷா(ரலி) அவர்கள் முஸ்ஹஃப்பில் "இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். அவனது வானவர்களும் (அவருக்காகப்) பிரார்த்திக்கின்றனர். இறைநம்பிக்கையாளர்களே! மேலும் அவர் மீதும், தொழுகையில் முதல் வரிசையில் நிற்ப்பவர்கள் மீதும் ஸலவாத் சொல்லுங்கள்! ஸலாமும் கூறுங்கள்! " என்று ஓதினார்கள். மேலும் அவர்கள்(ஹமீதா பின்த் அபீ யூனிஸ்) " அது உஸ்மான் முஸ்ஹஃபை மாற்றுவதற்கு முன்பாகும்" என்று கூறினார்கள். (நூல்: அல் இத்கான் 3/82, ஃபதாயில் அல் குர்ஆன் 1/324)
நமது பதில்:
"நீங்கள் முதலில் போராடியது போல் போராடுங்கள்" என்ற வசனம் விடப்பட்டுவிட்டதா??
ﺣﺪﺛﻨﺎ اﺑﻦ ﺃﺑﻲ ﻣﺮﻳﻢ ﻋﻦ ﻧﺎﻓﻊ ﺑﻦ ﻋﻤﺮ اﻟﺠﻤﺤﻲ ﻭﺣﺪﺛﻨﻲ اﺑﻦ ﺃﺑﻲ ﻣﻠﻴﻜﺔ ﻋﻦ اﻟﻤﺴﻮﺭ ﺑﻦ ﻣﺨﺮﻣﺔ ﻗﺎﻝ ﻗﺎﻝ ﻋﻤﺮ ﻟﻌﺒﺪ اﻟﺮﺣﻤﻦ ﺑﻦ ﻋﻮﻑ: ﺃﻟﻢ ﺗﺠﺪ ﻓﻴﻤﺎ ﺃﻥﺯﻝ ﻋﻠﻴﻨﺎ " ﺃﻥ ﺟﺎﻫﺪﻭا ﻛﻤﺎ ﺟﺎﻫﺪﺗﻢ ﺃﻭﻝ ﻗﺎﻝ: ﺃﺳﻘﻄﺖ ﻓﻴﻤﺎ ﺃﺳﻘﻂ ﻣﻦ اﻟﻘﺮﺁﻥ
Umar said to ’Abdul-Rahman Ibn ’Oaf, ‘Didn’t you find among the verses that we received one saying, "Strive as you strove at the first?" We do not locate it (any more).’ ’Abdul-Rahman Ibn ’Oaf told him, ‘This verse has been removed among those others which were removed from the Qur’an."’ ( Al itqaan 3/84 - ஆன்சரிங்க் இஸ்லாம் தளத்தின் ஆங்கில மொழியாக்கம்) .
உமர்(ரலி) அவர்கள்," 'நீங்கள் முதலில் போராடியது போல் போராடுங்கள்' என்று இறங்கியதை நீங்கள் அறிவீர்களா?அதை நாம் காணவில்லையே ?" என்று அப்துர் ரஹ்மான் இப்னு அஃப்(ரலி) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு, "குர்ஆனில் நீக்கப்பட்டவைகளுடன் அதுவும் நீக்கப்பட்டுவிட்டது" என்று அவர்கள் கூறினார்கள்.
நமது பதில்:
حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ عَبْدِ الصَّمَدِ بْنِ عَبْدِ الْوَارِثِ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ كَانَ فِيمَا أَنْزَلَ اللَّهُ مِنَ الْقُرْآنِ ثُمَّ سَقَطَ لاَ يُحَرِّمُ إِلاَّ عَشْرُ رَضَعَاتٍ أَوْ خَمْسٌ مَعْلُومَاتٌ ."
ஆயிஷா(ரலி) கூறியதாவது:அல்லாஹ்வால் அல் குர்ஆனில் இறக்கிவிட்டு பின்னர் நீக்கப்பட்ட விஷயங்களில் ஒன்று பத்து முறை அல்லது ஐந்து முறை பால் உறிஞ்சி குடிக்கப்பட்டிருந்தால் திருமண உறவு தடுக்கப்பட்டு விடும் என்பதாகும். (நூல்: இப்னு மாஜா 1942)மேற்குறிபிட்ட இதே மைய கருத்தை கொண்ட செய்தி பின்வருமாறு
ﻗﺎﻝ: ﺯﻋﻤﻮا ﺃﻥ ﻋﺎﺋﺸﺔ ﻗﺎﻟﺖ: " ﻟﻘﺪ ﻛﺎﻥ ﻓﻲ ﻛﺘﺎﺏ اﻟﻠﻪ ﻋﺰ ﻭﺟﻞ: ﻋﺸﺮ ﺭﺿﻌﺎﺕ، ﺛﻢ ﺭﺩ ﺫﻟﻚ ﺇﻟﻰ ﺧﻤﺲ، ﻭﻟﻜﻦ ﻣﻦ ﻛﺘﺎﺏ اﻟﻠﻪ ﻣﺎ ﻗﺒﺾ ﻣﻊ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ "
ஆயிஷா(ரலி) கூறியதாவது " பத்து முறை உறிஞ்சி பாலருந்துதல் என்பது திடமாக குர்ஆனில் கூறப்பட்டிருந்தது. பின்னர் அது ஐந்து முறை என்று மாற்றப்பட்டது. அல்லாஹ்வின் வேதத்தில் அது இருந்தது. ஆனால் அது நபி(சல்) அவர்கள் இருக்கும் போதே எடுக்கப்பட்டுவிட்டது.(முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் 13928)
உதாரணம்: 2
ﻭﻋﻦ ﻣﺎﻟﻚ ﺃﻥ ﺃﻭﻟﻬﺎ ﻟﻤﺎ ﺳﻘﻂ ﺳﻘﻂ ﻣﻌﻪ اﻟﺒﺴﻤﻠﺔ ﻓﻘﺪ ﺛﺒﺖ ﺃﻧﻬﺎ ﻛﺎﻧﺖ ﺗﻌﺪﻝ اﻟﺒﻘﺮﺓ ﻟﻄﻮﻟﻬﺎ.
மாலிக் அவர்களது அறிவிப்பில் " அதில் (அத் தவ்பா ஸூரா) முதல் பகுதிகள் விடப்பட்ட போது, பிஸ்மில்லாஹ்வும் விடப்பட்டுவிட்டது. நீளத்தில் அது (அத் தவ்பா ஸூரா) அல்பகரா ஸூராவிற்கு இணையானது என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது",என்று இடம் பெற்றுள்ளது. (இத்கான் 1/226)
وروي عن مالك أنه قال: بلغنا أنها كانت نحو سورة البقرة ثم نسخ ورفع كثير منها وفيه البسملة
மாலிக் அவர்களது அறிவிப்பில் "அது அல் பகரா ஸூராவிற்கு இணையானது. பிறகு அதில் கணிசமானது ரத்து செய்யப்பட்டு உயர்த்தப்பட்டுவிட்டது. அதில் பிஸ்மில்லாஹ்வும் அடக்கம் என்று கேள்விப்பட்டோம்" என்று இடம் பெறுகிறது.( தஃப்ஸீர் அல் அதிய்யா 3/4)
உமர்(ரலி) அவர்கள்," 'நீங்கள் முதலில் போராடியது போல் போராடுங்கள்' என்று இறங்கியதை நீங்கள் அறிவீர்களா?அதை நாம் காணவில்லையே ?" என்று அப்துர் ரஹ்மான் இப்னு அஃப்(ரலி) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு, "குர்ஆனில் எடுத்துக்கொள்ளப்பட்டவையுடன் அதுவும் எடுத்து கொள்ளப்பட்டுவிட்டது" என்று (அப்துர் ரஹ்மான் இப்னு அஃப்(ரலி)) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: மிஸ்வர் இப்னு மஹ்ரமா, அல் இத்கான் 3/84)
எனவே இஸ்லாமொஃபோபுகள் குர்ஆனின் பகுதிகள் காணவில்லை என்ற வாதம், ஆதாரங்களை தவறாக புரிந்து கொண்டதாலும், காழ்புணர்வினால் ஏற்பட்ட அறியாமையினாலுமே என்பதை மேற்குறிபிட்ட நமது பதில்களும், முன்சென்ற தொடர்களும் உறுதிபடுத்துகின்றன. அல்லாஹு அஃலம்.