بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
“During the battle of Yamama, 450 reciters of the Qur'an were killed.” (The True Guidance - An Introduction To Qur'anic Studies, published by Light of Life, P.O. BOX 13, A-9503 Villach, Austria, part 4, p. 47– citing Ibn Kathir’s Al-Bidaya wa al-Nihaya, chapter on Battle of Yamama)
யமாமா யுத்தத்தின் போது 450 குர்ஆன் காரிகள் (குர்ஆனை மனனமிட்டவர்கள்) கொல்லப்பட்டார்கள். இப்னு கதீர் அவர்களது பிதாயா வந் நிஹாயா , பாடம் யமாமா யுத்தம் பகுதி 4, பக்கம் 47 குறிப்பின் மேற்கோள்படி.
இதில் யமாமா யுத்தத்தில் 450 காரிகள் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தி 4ம் பாகத்தில் எங்கும் இடம் பெறவில்லை. மாறாக இப்னு கதீர் அவர்களது பிதாயா வந் நிஹாயாவில் 6ம் பாகம் 332ம் (அல்லது 6/373) பக்கத்தில் யமாமாவில் கொல்லப்பட்டவர்கள் குறித்த குறிப்பு பின்வருமாறு இடம் பெறுகிறது.
ﻭﻗﺎﻝ اﻟﻘﺮﻃﺒﻲ: ﻗﺪ ﻗﺘﻞ ﻳﻮﻡ اﻟﻴﻤﺎﻣﺔ ﺳﺒﻌﻮﻥ ﻣﻦ اﻝﻗﺮاء
குர்துபீ அவர்கள் கூறியதாவது: யமாமாவில் கொல்லப்பட்டவர்களில் 70 பேர் காரிகள் ஆவர்.(அல் இத்கான் 1/245).
ஆதாரம் 2: உமர்(ரலி) குர்ஆன் ஆயத்தை தேடினார்களா??
அல் ஹஸன் அல் பஸ்ரி கூறியதாவது:உமர் இப்னு அல்கத்தாப்(ரலி) அல்லாஹ்வின் வேதத்தில் உள்ள ஒரு வசனம் குறித்து கேட்டார்கள். யமாமாவில் கொல்லப்பட்ட ஒரு நபரிடம் இருந்ததாக கூறப்பட்டது. உடன் (உமர்(ரலி)) அவர்கள், "நிச்சயமாக நாம் அல்லாஹ்விற்கு உரியவர்கள்," என்று கூறிவிட்டு குர்ஆனை தொகுக்க கட்டளையிட்டார்கள். அவரே முதன் முதலில் குர்ஆனை தொகுத்தவர் ஆவார். ( கிதாப் அல் மஸாஹிஃப் 1/60,துர்ருல் மன்சூர் 6/558 , கன்சூல் உம்மால் 2/574 )
ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺑﻦ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﺧﻼﺩ ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ ﻳﺰﻳﺪ ﻗﺎﻝ: ﺃﺧﺒﺮﻧﺎ ﻣﺒﺎﺭﻙ، ﻋﻦ اﻟﺤﺴﻦ، ﺃﻥ ﻋﻤﺮ ﺑﻦ اﻟﺨﻄﺎﺏ ﺳﺄﻝ ﻋﻦ ﺁﻳﺔ ﻣﻦ ﻛﺘﺎﺏ اﻟﻠﻪ ﻓﻘﻴﻞ ﻛﺎﻧﺖ ﻣﻊ ﻓﻼﻥ ﻓﻘﺘﻞ ﻳﻮﻡ اﻟﻴﻤﺎﻣﺔ ﻓﻘﺎﻝ: ﺇﻧﺎ ﻟﻠﻪ ﻭﺃﻣﺮ ﺑﺎﻟﻘﺮﺁﻥ ﻓﺠﻤﻊ، ﻭﻛﺎﻥ ﺃﻭﻝ ﻣﻦ ﺟﻤﻌﻪ ﻓﻲ اﻟﻤﺼﺤﻒ
மேற்குறிபிட்ட செய்தியில் இரண்டு பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.அல் ஹஸன் அல் பஸ்ரி கூறியதாவது:உமர் இப்னு அல்கத்தாப்(ரலி) அல்லாஹ்வின் வேதத்தில் உள்ள ஒரு வசனம் குறித்து கேட்டார்கள். யமாமாவில் கொல்லப்பட்ட ஒரு நபரிடம் இருந்ததாக கூறப்பட்டது. உடன் (உமர்(ரலி)) அவர்கள், "நிச்சயமாக நாம் அல்லாஹ்விற்கு உரியவர்கள்," என்று கூறிவிட்டு குர்ஆனை தொகுக்க கட்டளையிட்டார்கள். அவரே முதன் முதலில் குர்ஆனை தொகுத்தவர் ஆவார். ( கிதாப் அல் மஸாஹிஃப் 1/60,துர்ருல் மன்சூர் 6/558 , கன்சூல் உம்மால் 2/574 )
1. அப்துல்லாஹ் இப்னு முஹம்மத் இப்னு ஃகல்லாத்
2. முபாரக் இப்னு ஃபதாலா
1)அப்துல்லாஹ் இப்னு முஹம்மத் இப்னு ஃகல்லத் குறித்த விமர்சனம்
عبد الله بن محمد بن خلاد الواسطي أبو أمية يروى عن يزيد بن هارون ثنا عنه محمد بن يحيى بن لؤي بفم الصلح
அப்துல்லாஹ் இப்னு முஹம்மத் இப்னு ஃகல்லாத் அல் வாஸ்தீ அபூ உமியா என்பவர் யஸீத் இப்னு ஹாரூன் என்பவரிடம் இருந்து அறிவிக்கிறார். இவரிடம் இருந்து செவியுற்று முஹம்மத் இப்னு யஹ்யா இப்னு லூஐ, அல் சுல்ஹ் வழியாக அறிவிக்கிறார்.( திக்காத் இப்ன் ஹிப்பான் 13916).
2)முபாரக் இப்னு ஃபதாலா குறித்த விமர்சனம்
وقال الدارقطني لين كثيرالخطأ يعتبر به
ﻓﻀﺎﻟﺔ ﻋﻦ اﻟﺤﺴﻦ ﺃﻥ ﻋﻤﺮ ﺑﻦ اﻟﺨﻄﺎﺏ ﺳﺄﻝ ﻋﻦ ﺁﻳﺔ ﻣﻦ ﻛﺘﺎﺏ اﻟﻠﻪ، ﻓﻘﻴﻞ: ﻛﺎﻧﺖ ﻣﻊ ﻓﻼﻥ ﻓﻘﺘﻞ ﻳﻮﻡ اﻟﻴﻤﺎﻣﺔ، ﻓﻘﺎﻝ: ﺇﻧﺎ ﻟﻠﻪ، "ﻓﺄﻣﺮ" ﺑﺎﻟﻘﺮﺁﻥ ﻓﺠﻤﻊ، ﻓﻜﺎﻥ ﺃﻭﻝ ﻣﻦ ﺟﻤﻌﻪ ﻓﻰ اﻟﻤﺼﺤﻒ. ﻭﻫﺬا ﻣﻨﻘﻄﻊ؛ ﻓﺈﻥ اﻟﺤﺴﻦ ﻟﻢ ﻳﺪﺭﻙ ﻋﻤﺮ
ﻭﺃﺧﺮﺝ اﺑﻦ ﺃﺑﻲ ﺩاﻭﺩ ﻣﻦ ﻃﺮﻳﻖ اﻟﺤﺴﻦ ﺃﻥ ﻋﻤﺮ ﺳﺄﻝ ﻋﻦ ﺁﻳﺔ ﻣﻦ ﻛﺘﺎﺏ اﻟﻠﻪ ﻓﻘﻴﻞ: ﻛﺎﻧﺖ ﻣﻊ ﻓﻼﻥ ﻗﺘﻞ ﻳﻮﻡ اﻟﻴﻤﺎﻣﺔ ﻓﻘﺎﻝ: ﺇﻧﺎ ﻟﻠﻪ! ﻭﺃﻣﺮ ﺑﺠﻤﻊ اﻟﻘﺮﺁﻥ ﻓﻜﺎﻥ ﺃﻭﻝ ﻣﻦ ﺟﻤﻌﻪ ﻓﻲ اﻟﻤﺼﺤﻒ. ﺇﺳﻨﺎﺩﻩ ﻣﻨﻘﻄﻊ
"உமர் இப்னு அல்கத்தாப்(ரலி) அல்லாஹ்வின் வேதத்தில் உள்ள ஒரு வசனம் குறித்து கேட்டார்கள். யமாமாவில் கொல்லப்பட்ட ஒரு நபரிடம் இருந்ததாக கூறப்பட்டது. உடன் (உமர்(ரலி)) அவர்கள், "நிச்சயமாக நாம் அல்லாஹ்விற்கு உரியவர்கள்," என்று கூறிவிட்டு குர்ஆனை தொகுக்க கட்டளையிட்டார்கள். அவரே முதன் முதலில் குர்ஆனை தொகுத்தவர் ஆவார் என்ற செய்தி இப்னு அபீதாவுத் அவர்கள் அல்ஹஸன் வழியாக அறிவிக்கிறார்கள். இது அறிவிப்பாளர் தொடர் முறிந்த செய்தி ஆகும். (அல் இத்கான் 1/205).
ஆதாரம் 3: குர்ஆனின் பகுதிகள் காணவில்லை என்று கூறிய சுஃப்யான் அஸ்ஸவ்ரி
அல் ஸவ்ரி கூறியதாவது: அல்குர்ஆன் ஓதிக் கொண்டிருந்த நபித்தோழர்களில் சிலர் முஸைலமாவுடனான போரின் நாளில் கொல்லப்பட்டனர். குர்ஆனின் அவர்களது ஓதல் முறை அத்துடன் சென்றுவிட்டது. (முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் 13363)
ﻗﺎﻝ اﻟﺜﻮﺭﻱ: ﻭﺑﻠﻐﻨﺎ ﺃﻥ ﻧﺎﺳﺎ ﻣﻦ ﺃﺻﺤﺎﺏ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻛﺎﻧﻮا ﻳﻘﺮءﻭﻥ اﻟﻘﺮﺁﻥ ﺃﺻﻴﺒﻮا ﻳﻮﻡ ﻣﺴﻴﻠﻤﺔ ﻓﺬﻫﺒﺖ ﺣﺮﻭﻑ ﻣﻦ اﻟﻘﺮﺁﻥ "
அஸ்ஸவ்ரி கூறியதாவது:அல்குர்ஆன் ஓதிக் கொண்டிருந்த நபித்தோழர்களில் சிலர் முஸைலமாவுடனான போரின் நாளில் கொல்லப்பட்டனர். குர்ஆனின் அவர்களது ஓதல் முறை அத்துடன் சென்றுவிட்டது என்ற செய்தி மேலும் எங்களுக்கு கிடைத்தது. (முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் 13363)
ஆதாரம் 4: குர்ஆனின் பகுதிகள் காணவில்லை என்று கூறிய அல் ஜுஹ்ரி
அல் ஜுஹ்ரி கூறியதாவது: இறங்கிய குர் ஆனின் பகுதிகளை மனனமிட்ட நபித்தோழர்கள் யமாமா யுத்தத்தில் கொல்லப்பட்டனர். அந்த பகுதிகள் எழுதப்படவில்லை. அவர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து அது அதற்கு பிறகு அறியப்படவில்லை. அபூபக்ரோ, உமரோ , உஸ்மானோ அப்போது குர்ஆனை தொகுத்திருக்கவில்லை. அவ்வாறு காணாமல் போன பகுதிகள் அதனை மனனமிட்டவர்கள் மரணித்த பிறகு யாரும் அவற்றை கொண்டிருக்கவில்லை என்ற செய்தி எங்களுக்கு கிடைத்தது.எனவே என்னை பொறுத்தவரை, இதுவே அவர்களை, குர்ஆனை கவனிக்க செய்தது. நாட்டின் முஸ்லீம்களில், குர்ஆனின் குறிப்பிடப்படும்படியான பகுதியினை கொண்டிருந்த மனிதர்கள் கொல்லப்பட்டுவிடுவார்கள் என்ற அச்சம்தான் கலிஃபா அபூபகர் அவர்களை குர்ஆனை ஒரே ஏடாக தொகுக்க செய்தது. ( அல் மஸாஹிஃப் 1/99)
மேற்குறிபிட்ட செய்தியின் அடிப்படையில், யமாமாவில் குர்ஆன் காரிகள் இறந்து போனதால் குர்ஆன் பாதுக்காக்கப்படவில்லை என்பது இஸ்லாமோஃபோபுகள் முவைக்கும் வாதம். அதற்கான பதிலை காண்போம்.
நமது பதில்: அல் ஜுஹ்ரியின் முர்ஸல் அறிவிப்புﺣﺪﺛﻨﺎ ﺃﺑﻮ اﻟﺮﺑﻴﻊ ﻗﺎﻝ: ﺃﺧﺒﺮﻧﺎ اﺑﻦ ﻭﻫﺐ ﻗﺎﻝ: ﺃﺧﺒﺮﻧﻲ ﻳﻮﻧﺲ ، ﻋﻦ اﺑﻦ ﺷﻬﺎﺏ ﻗﺎﻝ: «ﺑﻠﻐﻨﺎ ﺃﻧﻪ ﻛﺎﻥ ﺃﻧﺰﻝ ﻗﺮﺁﻥ ﻛﺜﻴﺮ، ﻓﻘﺘﻞ ﻋﻠﻤﺎﺅﻩ ﻳﻮﻡ اﻟﻴﻤﺎﻣﺔ، اﻟﺬﻳﻦ ﻛﺎﻥﻭا ﻗﺪ ﻭﻋﻮﻩ ﻓﻠﻢ ﻳﻌﻠﻢ ﺑﻌﺪﻫﻢ ﻭﻟﻢ ﻳﻜﺘﺐ، ﻓﻠﻤﺎ ﺟﻤﻊ ﺃﺑﻮ ﺑﻜﺮ ﻭﻋﻤﺮ ﻭﻋﺜﻤﺎﻥ اﻝﻗﺮﺁﻥ ﻭﻟﻢ ﻳﻮﺟﺪ ﻣﻊ ﺃﺣﺪ ﺑﻌﺪﻫﻢ، ﻭﺫﻟﻚ ﻓﻴﻤﺎ ﺑﻠﻐﻨﺎ، ﺣﻤﻠﻬﻢ ﻋﻠﻰ ﺃﻥ ﻳﺘﺒﻌﻮا اﻟﻘﺮﺁﻥ ﻓﺠﻤﻌﻮﻩ ﻓﻲ اﻟﺼﺤﻒ ﻓﻲ ﺧﻼﻓﺔ ﺃﺑﻲ ﺑﻜﺮ ﺧﺸﻴﺔ ﺃﻥ ﻳﻘﺘﻞ ﺭﺟﺎﻝ ﻣﻦ اﻟﻤﺴﻠﻤﻴﻦ ﻓﻲ اﻟﻤﻮاﻃﻦ ﻣﻌﻬﻢ ﻛﺜﻴﺮ ﻣﻦ اﻝﻗﺮﺁﻥ،
அல் ஜுஹ்ரி கூறியதாவது: இறங்கிய குர்ஆனின் பகுதிகளை மனனமிட்ட நபித்தோழர்கள் யமாமா யுத்தத்தில் கொல்லப்பட்டனர். அந்த பகுதிகள் எழுதப்படவில்லை. அவர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து அது அதற்கு பிறகு அறியப்படவில்லை. அபூபக்ரோ, உமரோ , உஸ்மானோ அப்போது குர்ஆனை தொகுத்திருக்கவில்லை. அவ்வாறு காணாமல் போன பகுதிகள் அதனை மனனமிட்டவர்கள் மரணித்த பிறகு யாரும் அவற்றை கொண்டிருக்கவும்வில்லை, யாரும் எழுதியிருக்கவும் இல்லை என்ற செய்தி எங்களுக்கு கிடைத்தது. எனவே என்னை பொறுத்தவரை, இதுவே அவர்களை, குர்ஆனை கவனிக்க செய்தது. நாட்டின் முஸ்லீம்களில், குர்ஆனின் குறிப்பிடப்படும்படியான பகுதியினை கொண்டிருந்த மனிதர்கள் கொல்லப்பட்டுவிடுவார்கள் என்ற அச்சம்தான் கலிஃபா அபூபகர் அவர்களை குர்ஆனை ஒரே ஏடாக தொகுக்க செய்தது. ( அல் மஸாஹிஃப் 1/99)
الشافعي يقول: وإرسال الزهري ليس بشيء ذلك أن نجده يروي عن سليمان بن أرقم.
ஷாஃபீ(ரஹ்) அவர்கள் கூறியதாவது மேலும் ஜுஹ்ரியின் இர்ஸால் (யார் தனக்கு அறிவித்தார் என்ற குறிப்பில்லாத செய்தி) என்பது ஒன்றும் இல்லாதது. அவர் அறிவிப்பது ஸுலைமான் இப்னு அர்கம் என்பவரின் அறிவிப்பு என்பது அறியப்பட்டுள்ளது.(ஸரஹ் இலல் திர்மிதீ 1/535)
மேலும் ஸுலைமான் இப்னு அர்கம் பலவீனமானவர், கைவிடப்பட்டவர் ஆவார். (தக்ரீப் அல் தஹ்தீப் ப.எண்:249). மேலும் முன்சென்ற செய்தியை அறிவிக்கும் ஸுஃப்யான் அஸ்ஸவ்ரியும் இவரது மாணவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடதக்கது. (மீஸான் அல் இஹ்திதால் பாகம் 2)
யமாமா யுத்தத்தில் குர்ஆனை மனனமிட்ட பலர் கொல்லப்பட்டனர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அதனால் குர்ஆனின் பகுதிகள் காணாமல் போய்விட்டது என்பது மிகைப்படுத்தப்பட்ட பொய். குர்ஆனை மனனமிட்ட நபித்தோழர்களில் பலர் யமாமா யுத்தத்திற்கு பிறகு உயிருடன் இருந்தனர் என்பது குறிபிடத்தக்கது. மனாஹில் அல் இர்ஃபான் என்ற 1/242ல் முஹம்மத் அல் ஜுர்கானி அவர்கள் வேறுபட்ட பல ஹதீஸ்களை ஆய்வு செய்து நபி(ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கும்போதே பின்வரும் நபித்தோழர்கள் குர்ஆனை முழுமையாக கற்றிருந்தனர் என்று கூறுகிறார்.
முஹாஜிர்களில் 1.அபூபகர் அஸ்ஸித்தீக்(ரலி), 2.உமர் இப்னு அல் கத்தாப்(ரலி), 3.உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி), 4.அலி இப்னு அபீதாலிப்(ரலி), 5.ஹுதைஃபா(ரலி), 6.அபூஹுரைரா(ரலி), 7.அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி), 8.அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி), 9.அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு அல்ஆஸ்(ரலி), 10.அம்ர் இப்னு அல்ஆஸ்(ரலி), 11.மூஆவியா(ரலி), 12.அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்(ரலி), 13.அப்துல்லாஹ் இப்னு ஸாயிப்(ரலி), 14.ஆயீஷா(ரலி), 15.ஹஃப்ஸா(ரலி), 16.உம்மு ஸலாமா(ரலி),
அன்ஸாரிகளில், 17.உபை இப்னு கஅப்(ரலி, 18.முஆத் இப்னு ஜபல்(ரலி), 19.ஸைத் இப்னு ஸாபித்(ரலி),20.அபூ தர்தா(ரலி), 21.முஜம்மிஃ இப்னு ஹாரிஸா (ஜாரியா), 22.அனஸ் இப்னு மாலிக்(ரலி), 23.அபூ ஸயீத் அல்குத்ரி(ரலி).
No comments:
Post a Comment