பக்கங்கள் செல்ல

Friday, October 30, 2020

உஸ்மான்(ரலி) அரசாணையும் இப்னு மஸ்ஊத்(ரலி) எதிர்ப்பும் ஏற்பும்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு,இப்னு மஸ்ஊத்(ரலி),இப்னு மஸ்ஊத்(ரலி),குர்ஆன் குழு,உபை இப்னு கஅப்(ரலி),பிரதிகள் எரிப்பு,அலி(ரலி),

        உஸ்மான்(ரலி) அவர்கள், அவர்களால் நியமிக்கப்பட்ட குழுவினால் பிரதி எடுக்கப்பட்ட குர்ஆனை இஸ்லாமிய பேரரசின் பகுதிகளுக்கு அனுப்பிவைத்தார்கள். அதனோடு ஒரு கட்டளையும் பிறப்பித்தார்கள். அதாவது ஏனைய குர்ஆன் பிரதிகளை அழிக்க கட்டளை பிறப்பித்தார்கள். குர்ஆனை ஸைத் இப்னு ஸாபித்(ரலி) தொகுத்ததற்கும், ஏனைய குர்ஆன் பிரதிகளை பரிமுதல் செய்து எரிக்கவும் பிறபிக்கப்பட்ட கட்டளையை எதிர்த்தவர் இப்னு மஸ்ஊத்(ரலி) ஆவார்கள். இதற்கு இஸ்லாமோஃபோபுகள் வைக்கும் வாதங்களும் அதற்கான பதிலும்  இதோ. 

وَلِذَلِكَ قَالَ عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ يَا أَهْلَ الْعِرَاقِ اكْتُمُوا الْمَصَاحِفَ الَّتِي عِنْدَكُمْ وَغُلُّوهَا فَإِنَّ اللَّهَ يَقُولُ وَمَنْ يَغْلُلْ يَأْتِ بِمَا غَلَّ يَوْمَ الْقِيَامَةِ فَالْقُوا اللَّهَ بِالْمَصَاحِفِ قَالَ الزُّهْرِيُّ فَبَلَغَنِي أَنَّ ذَلِكَ كَرِهَهُ مِنْ مَقَالَةِ ابْنِ مَسْعُودٍ رِجَالٌ مِنْ أَفَاضِلِ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم

     மேலும் இது குறித்து அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) கூறினார்கள்: இராக் மக்களே! உங்களிடம் இருக்கும் மஸாஹிஃப்களை மறைத்து வைத்துக்கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கூறுகிறான்: "யார் மறைக்கிறாரோ அவர், தாம் மறைத்தவற்றுடன் மறுமை நாளில் வருவார், எனவே அல்லாஹ்வை உங்களது மஸாஃஹிப்களுடன் சந்தியுங்கள்” அல் ஜுஹ்ரி கூறியதாவது: “இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்களது இந்த முடிவை தலைசிறந்த நபிதோழர்கள் சிலர் எதிர்த்ததாகவும் எனக்கு தெரிவிக்கப்பட்டது” (திர்மிதி 3104)
இஸ்லாமோ போஃபுகளின் குருட்டு வாதமும் நமது பதிலும்:

             மேற்குறிபிட்ட செய்தியை பதிவிட்டு மிசனரிகள் ஒரு நிகழவின் ஒரு பக்கத்தை மட்டுமே கூறுகின்றன. அதாவது

1. அதாவது ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களின் குர்ஆன் தொகுப்பினை இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் எதிர்த்தது அன்றைய மொத்த சமூகத்தின் எதிர்ப்பு. 

2. குர்ஆன் பிரதிகளை எரிப்பது என்பது உஸ்மான்(ரலி) இன் தனிப்பட்ட முடிவு. அதற்கும் சமூகத்திற்கு தொடர்பில்லை 

உஸ்மான்(ரலி) அமைத்த குர்ஆன் தொகுப்பு குழுவும் அதன் முடிவும்:


     உஸ்மான்(ரலி) குர்ஆனை தொகுக்க முடிவு செய்தபோது ஸைத் இப்னு சாபித்(ரலி) உட்பட நான்கு எழுத்தர்களையும் உள்ளடக்கிய பன்னிரண்டு பேர் கொண்ட குழுவினை அமைத்தார்கள்.
خْبَرَنَا عَارِمُ بْنُ الْفَضْلِ قَالَ: أَخْبَرَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ أَيُّوبَ وَهِشَامٍ عَنْ مُحَمَّدٍ بْنِ سِيرِينَ أَنَّ عُثْمَانَ جَمَعَ اثْنَيْ عَشَرَ رَجُلا مِنْ قُرَيْشٍ وَالأَنْصَارِ فِيهِمْ أُبَيُّ بْنُ كَعْبٍ وَزَيْدُ بْنُ ثَابِتٍ فِي جَمْعِ الْقُرْآنِ.

      இப்னு சீரின் கூறியதாவது:  உஸ்மான்(ரலி) குர்ஆனை தொகுக்க முடிவு செய்ததும் குரைஷி மற்றும் அன்சாரிகளில் இருந்து பன்னிரண்டு பேர் கொண்ட சபையை உருவாக்கினார்கள். அதில் உபை இப்னு காஃப் (ரலி) மற்றும் ஸைத் இப்னு ஸாபித்(ரலி) உள்ளடங்குவர்.(தபக்கத் இப்னு சாஃத் 3/381)

      உபை இப்னு கஆப்(ரலி) அவர்களும் அந்த குழுவில் இடம் பெற்றி ருந்தார்கள். அவ்வாறு அமைக்கப்பட்ட குழுவிற்கு உஸ்மான்(ரலி) மேலும் ஒரு கட்டளையை பிறப்பித்தார்

أخبرنا أبو بكر محمد بن عبد الباقي أنا الحسن بن علي أنبأ أبو عمر بن حيوية أنا أحمد بن معروف نا الحسين بن الفهم نا محمد بن سعد قال وأنا محمد بن عمر حدثني هشيم عن المغيرة عن مجاهد أن عثمان أمر أبي بن كعب يملي ويكتب زيد بن ثابت ويعربه سعيد بن العاص وعبد الرحمن بن الحارث 
முஜாஹித்(ரஹ்) கூறியதாவது: 
உஸ்மான்(ரலி), உபை இப்னு காஃப்(ரலி) அவர்களை ஓதவும், அதை ஜைத் இப்னு தாபித்(ரலி) அவர்கள் எழுதவும் , அதை ஸயீத் இப்னு அல் ஆஸ்(ரலி) மற்றும் அப்துர் ரஹ்மான் இப்னு அல் ஹாரித்(ரலி) அவர்களை பிரதி எடுக்கவும் கட்டளை இட்டார்கள் (தாரிக் திமிஸ்க் 34/276:3779) 
      அதனால்தான் மேற்குறிப்பிட்ட செய்தியை ஒத்த செய்தியை அலி இப்னு அப்துல் மாலிக் தனது நூலான கன்சூல் உம்மாலில் பதிவிட்டு பின்வருமாறு குறிப்பிடுகிறார். 

عن عطاء أن عثمان بن عفان لما نسخ القرآن في المصاحف أرسل إلى أبي بن كعب، فكان يملي على زيد بن ثابت وزيد يكتب ومعه سعيد بن العاص يعربه، فهذا المصحف على قراءة أبي وزيد.
       அதாஃ அவர்கள் கூறியதாவது: உஸ்மான்(ரலி) குர்ஆனை தொகுத்த போது, உபை இப்னு கஅப்(ரலி)யை அழைத்து ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களிடம் ஓதிக்காண்பிக்கவும்,அதை ஸைத் இப்னு ஸாபித்(ரலி) எழுதவும் கட்டளை இட்டார்கள். அவருடன் ஸயீத் (ரலி) அவர்களும் அதை செய்தார்கள். அதனால் இந்த முஸ்ஹஃப் உபை மற்றும் கஅப் அவர்களது ஓதலில் அமைந்ததாகும் .(கன்சூல் உம்மால் 4789) 
     மேலும் உபை இப்னு கஅப்(ரலி) அவர்கள் குறித்து நபி(சல்) அவர்கள் குறிப்பிடும் சில செய்திகள் உபை இப்னு கஅப்(ரலி) அவர்களது முக்கியத்துவம் குறித்து நாம் புரிந்து கொள்ள அவசியமாகும்.

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَبْدِ الْمَجِيدِ الثَّقَفِيُّ، حَدَّثَنَا خَالِدٌ الْحَذَّاءُ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم” أَرْحَمُ أُمَّتِي بِأُمَّتِي أَبُو بَكْرٍ وَأَشَدُّهُمْ فِي أَمْرِ اللَّهِ عُمَرُ وَأَصْدَقُهُمْ حَيَاءً عُثْمَانُ وَأَقْرَؤُهُمْ لِكِتَابِ اللَّهِ أُبَىُّ بْنُ كَعْبٍ وَأَفْرَضُهُمْ زَيْدُ بْنُ ثَابِتٍ وَأَعْلَمُهُمْ بِالْحَلاَلِ وَالْحَرَامِ مُعَاذُ بْنُ جَبَلٍ أَلاَ وَإِنَّ لِكُلِّ أُمَّةٍ أَمِينًا وَإِنَّ أَمِينَ هَذِهِ الأُمَّةِ أَبُو عُبَيْدَةَ بْنُ الْجَرَّاحِ “هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ
அனஸ் பின் மாலிக்(ரலி) அறிவிப்பதாவது: 
    அல்லாஹ்வின் தூதர்(சல்) அவர்கள் கூறியதாவது: எனது சமூதாயத்தில் மிக்க கருணையுள்ளவர் அபூபகர் ஆவார். அல்லாஹ்வின் கட்டளைகளை கைகொள்வதில் மிக்க உறுதியானவர் உமர் ஆவார். உண்மையில் மிகுந்த அடக்கமுடையவர் உஸ்மான் இப்னு அஃபான் ஆவார். அவர்களில் அல்லாஹ்வின் வேதத்தை ஓதுவதில் தலைசிறந்தவர் உபை இப்னு கஅப் ஆவார். சொத்துரிமை சட்டங்களில் மிகுந்த அறிவுடையவர் ஸைத் இப்னு சாபித் ஆவார். ஹலால் ஹராம் ஆகியவற்றில் மிகுந்த அறிவுடையவர் முஆத் இப்னு ஜபல் ஆவார். ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒரு நம்பிக்கைக்கு உரியவர் இருப்பார், அதுபோல் இந்த சமூதாயத்தின் நம்பிக்கைக்கு உரியவர் அபூ உபைதா பின் ஜர்ராஹ் ஆவார் (திர்மிதி 3791) 
     குர்ஆனை தொகுக்க அமைக்கப்பட்ட குழுவில் குர்ஆன் குறித்து நன்கு அறிந்த, முழு குர்ஆனையும் அதன் இறுதி வடிவத்தையும் மனனமிட்ட ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களும், குர்ஆனை நன்கு ஓதக்கூடிய உபை இப்னு கஅப்(ரலி) அவர்களும் இருந்தனர் என்பது குறிப்பிடதக்கது. இவ்வாறு தொகுக்கப்பட்ட குர்ஆன் ஏனைய நபித்தொழர்களிடம் ஓதிக்காண்பிக்கப்பட்டு அனைத்து பகுதிக்கும் அனுப்பி வைக்கப்பட்டதாக இப்னு கதீர் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்: 
وإنما كتبها زيد بن ثابت فى أيامه وغيره، فنسبت إلى عثمان؛ لأنها بأمره واشارته، ثم قُرِئَتْ على الصحابة بين يدى عثمان، ثم نفذت إلى الآفاق, رضى الله عنه.
         அல்லது அவர்களது காலத்தில் அவர்களது கட்டளையால் ஸைத் பின் ஸாபித் அவர்களால் எழுதப்பட்டதால் இது உஸ்மான்(ரலி) அவர்களது என்று அழைக்கப்படுகிறது. இது நபி தோழர்களிடம் உஸ்மான்(ரலி) முன்னிலையில் ஓதிக்காண்பிக்கப்பட்டு நாட்டின் எல்லைகளுக்கு அனுப்பப்பட்டது. அல்லாஹ் அவர்களை பொருந்திக்கொள்வானாக..(அல் ஃபதாயில் குர்ஆன் இப்னு கதீர் 1/89) 
     இவ்வாறு நபித்தோழர்களின் அங்கிகாரம் பெற்ற குர்ஆன் பிரதிதான் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டது. மேலும் முன் சென்ற தொடரில் உஸ்மான்(ரலி) அவர்களது தொகுப்பு, அர்தா அல் அஹீரா தான் என்ற சாட்சியம் பகிரும் சமூர(ரலி) அவர்களின் செய்தியையும் பார்த்தோம் என்பது குறிப்பிடதக்கது. 

குர்ஆன் பிரதிகளை எரிப்பது யாரது முடிவு:


      மேலும் இப்படி குர்ஆன் ஓதலில் தலைசிறந்தவர்கள் மற்றும் ஏனைய நபித்தோழர்களின் முடிவின் அடிப்படையில்தான் ஏனைய குர்ஆன் பிரதிகள் அழிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது:
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبَانَ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، عَنِ الْعَيْزَارِ بْنِ جَرْوَلٍ، مِنْ رَهْطِ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ سُوَيْدِ بْنِ غَفَلَةَ، قَالَ: سَمِعْتُ عَلِيًّا رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ: " اللَّهَ اللَّهَ أَيُّهَا النَّاسُ، وَإِيَّاكُمْ وَالْغُلُوَّ فِي عُثْمَانَ وَقَوْلَكُمْ: حَرَّاقُ الْمَصَاحِفِ، فَوَاللَّهِ مَا حَرَقَهَا إِلَّا عَنْ مَلَأٍ مِنْ أَصْحَابِ مُحَمَّدٍ 
   சுவைத் இப்னு ஃகஃபாலா கூறியதாவது: “நான் அலி பின் அபிதாலிப்(ரலி) கூறுவதை செவியுற்றேன். “மக்களே! உஸ்மான்(ரலி) அவர்களின் மீது வரம்பு மீறுதல் குறித்தும் அவர்களை குர்ஆன் பிரதிகளை எறித்தவர் என்று கூறுவதில் இருந்தும் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக நிச்சயமாக முஹம்மது (சல்) அவர்களது தோழர்களின் சபையின் அறிவுரையின் பேரிலேயே அதை அவர்கள் எறித்தார்கள்.         (நூல்: தாரிக் மதினா அல் இப்னு ஸபாஹ் ஹதீஸ் எண் 1598, 3/996)

மேலும் அலி(ரலி) அவர்கள் கூறினார்கள்

حَدَّثَنا عَبْدُ اللَّهِ قَالَ حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ النَّهْشَلِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، وَمُحَمَّدُ بْنُ أَبَانَ الْجُعْفِيُّ، كِلَاهُمَا عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ قَالَ شُعْبَةُ: عَمَّنْ سَمِعَ سُوَيْدَ بْنَ غَفَلَةَ يَقُولُ: سَمِعْتُ عَلِيًّا يَقُولُ: رَحِمَ اللَّهُ عُثْمَانَ، لَوْ وُلِّيتُهُ لَفَعَلْتُ مَا فَعَلَ فِي الْمَصَاحِفِ (وإسناده صحيح، كما قال الحافظ في " الفتح " ٩ / ١٦)
       அலி (ரலி) அவர்கள் கூறியதாவது : உஸ்மான்(ரலி) மீது அல்லாஹ் கருணை புரியட்டும். நான் உஸ்மான்(ரலி) அவர்களின் இடத்தில் இருந்திருந்தால் , குர்ஆன் பிரதிகளுக்கு உஸ்மான்(ரலி) செய்ததையே நானும் செய்திருப்பேன்.( அல் மஸாஹிஃப் இப்னு அபி தாவூத் 1/98)
         இஸ்லாமோஃபோபுகளின் இரண்டு வாதங்களும் மேற்குறிபிட்ட அலி(ரலி) அவர்களது கூற்றினால் தவிடு பொடி ஆவதை காணமுடிகிறது. 

இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்களின் எதிர்ப்பும் ஏற்பும் 


      இப்னு மஸ்ஊத்(ரலி) ஆரம்பத்தில் கூஃபாவில் இருக்கும் காலங்களில் உஸ்மான்(ரலி அவர்களின் இந்த முடிவை எதிர்த்த போதும், பிற்காலத்தில் அதன் நியாயங்களை அறிந்து அதை சரி கண்டார்கள். மேலும் அவர்கள் மதீனாவிற்கு சென்ற பிறகும் பல தூதுக்குழுக்கள் அவர்களை சந்தித்து இது குறித்து தெளிவு பெற்று வந்தார்கள் என்பதை அறிய முடிகிறது
عَمْرُو بْنُ شُرَحْبِيلَ عن عبد الله بن مسعود أنه أتاه ناس من أهل الكوفة فقرأ عليهم السلام وأمرهم بتقوى الله عز وجل وأن لا يختلفوا في القرآن ولا يتنازعوا فيه فإنه لا يختلف ولا ينسى ولا ينفد لكثرة الرد
    அம்ர் இப்னு ஸுரஹ்பீல், இப்னு மஸ்வூத் (ரலி) அறிவிப்பதாக கூறுவதாவது : கூஃபாவில் இருந்து சிலர் அவரிடம் வந்தனர். அவர்களுக்கு சலாம் கூறிவிட்டு, அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்! இந்த குர்ஆன் குறித்து வேறுபட கூடாது , அதனோடு மாறுபட கூடாது, ஏனென்றால் அது மாறுபடவோ மறக்கடிக்கவோ படாது, தொடர் எதிர்ப்பால் நீர்த்தும் போகாது , என்று அறிவுரை கூறினார்கள். (தப்ராணி அல் கபீர் 10076: 10/97, அல் மஜ்மு அல் ஜவாயித் 11582: 7/153 )

 حَدَّثَنَا إبْرَاهِيمُ بْنُ أَبِي دَاوُدَ قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ يُونُسَ ح وَحَدَّثَنَا فَهْدُ بْنُ سُلَيْمَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو غَسَّانَ مَالِكُ بْنُ إسْمَاعِيلَ النَّهْدِيُّ قَالَا: حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ قَالَ: حَدَّثَنِي الْوَلِيدُ بْنُ قَيْسٍ الْيَشْكَرِيُّ أَبُو هَمَّامٍ، عَنْ عُثْمَانَ بْنِ حَسَّانَ الْعَامِرِيِّ، عَنْ فُلْفُلَةَ الْجُعْفِيِّ قَالَ: " فَزِعْتُ فِيمَنْ فَزِعَ إلَى عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ فِي الْمَصَاحِفِ، فَدَخَلْنَا عَلَيْهِ، فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ: إنَّا لَمْ نَأْتِكَ زَائِرِينَ؛ وَلَكِنَّا جِئْنَا حِينَ رَاعَنَا هَذَا الْخَبَرُ، قَالَ: " إنَّ الْقُرْآنَ أُنْزِلَ عَلَى نَبِيِّكُمْ مِنْ سَبْعَةِ أَبْوَابٍ عَلَى سَبْعَةِ أَحْرُفٍ، وَإِنَّ الْكِتَابَ كَانَ يَنْزِلُ أَوْ يُنْزَلُ مِنْ بَابٍ وَاحِدٍ عَلَى حَرْفٍ وَاحِدٍ " 

                           ஃபுல்ஃபுலா அல் ஜுஃபீ கூறியதாவது; “அல் மஸாஹிஃப்"  (உஸ்மான்(ரலி) அவர்களது குர்ஆன் தொகுப்பு) குறித்து அறிந்து கொள்ள சென்றவர்களில் நானும் ஒருவர், நாங்கள் சென்ற போது எங்களில் ஒருவர் , “ நாங்கள் உங்களை சந்திக்க வந்திருப்பது , இது குறித்த செய்தி எங்களை அடைந்ததும் அதை பற்றி அறியவே என்று கூறினார். அதற்கு இப்னு மஸ்ஊத்(ரலி) பின் வருமாறு பதிலளித்தார்கள்.: நிச்சயமாக குர்ஆன் ஏழு உச்சரிப்பு முறைகளில் ஏழுவாசல்களின் வழியாக இறக்கப்பட்டதாகும். உங்களுக்கு அனுப்பப்பட்ட ஏடுகள் ஒரு வாசல் வழியாக வந்தது. ஒரே உச்சரிப்பையும் கொண்டது. (இமாம் தஹவீ யின் முஸ்கில் அல் அஸார் 3094) 

இப்னு அபி தாவூத் அவர்களின் கருத்து:

    மேற்குறிபிட்ட ஹதீஸை இப்னு மஸ்ஊத்(ரலி) உஸ்மான்(ரலி) குர்ஆன் தொகுப்பு குறித்த கருத்து எனும் தலைப்பின் கீழ் இப்னு அபிதாவூத் கொண்டுவருகிறார்.(ப.எண்:82)

இப்னு அதிர் அவர்களது வரலாற்று குறிப்பு:


فَلَمَّا نَسَخُوا الصُّحُفَ رَدَّهَا عُثْمَانُ إِلَى حَفْصَةَ، وَأَرْسَلَ إِلَى كُلِّ أُفُقٍ بِمُصْحَفٍ، وَحَرَقَ مَا سِوَى ذَلِكَ، وَأَمَرَ أَنْ يَعْتَمِدُوا عَلَيْهَا وَيَدَعُوا مَا سِوَى ذَلِكَ. فَكُلُّ النَّاسِ عَرَفَ فَضْلَ هَذَا الْفِعْلِ, إِلَّا مَا كَانَ مِنْ أَهْلِ الْكُوفَةِ فَإِنَّ الْمُصْحَفَ لَمَّا قَدِمَ عَلَيْهِمْ فَرِحَ بِهِ أَصْحَابُ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَإِنَّ أَصْحَابَ عَبْدِ اللَّهِ وَمَنْ وَافَقَهُمُ امْتَنَعُوا مِنْ ذَلِكَ وَعَابُوا النَّاسَ فَقَامَ فِيهِمُ ابْنُ مَسْعُودٍ وَقَالَ وَلَا كُلُّ ذَلِكَ فَإِنَّكُمْ وَاللَّهِ قَدْ سُبِقْتُمْ سَبْقًا بَيِّنًا، فَارْبِعُوا عَلَى ظَلْعِكُمْ. وَلَمَّا قَدِمَ عَلِيٌّ لْكُوفَةَ فَعَابَ عُثْمَانَ بِجَمْعِ النَّاسِ عَلَى الْمُصْحَفِ فَصَاحَ بِهِ وَقَالَ: اسْكُتْ فَعَنْ مَلَأٍ مِنَّا فَعَلَ ذَلِكَ، فَلَوْ وُلِّيتُ مِنْهُ مَا وُلِّيَ عُثْمَانُ لَسَلَكْتُ سَبِيلَهُ.
   அவர்கள் குர்ஆன் தொகுப்பை பிரதி எடுத்தப்பிறகு, அதனை (அபூபக்ர்(ரலி) அவர்களது காலத்தில் தொகுக்கப்பட்ட குர்ஆன் பிரதியை ) ஹஃப்ஸா(ரலி) இடமே திருப்பி அனுப்பினார்கள். குர்ஆனின் பிரதிகளை அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பினார்கள்.. ஏனைய பிரதிகளை எறித்து விட்டார்கள். மேலும் அதை சார்ந்திருக்கவும் ஏனையவற்றை விட்டுவுடவும் கட்டளை பிறப்பித்தார்கள். அனைத்து மக்களும் அதன் நன்மையை கருதி அதன் படி செயல்பட்டனர், கூஃபா மக்களை தவிர. நபி(சல்) அவர்களது தோழர்கள் குர்ஆன் பிரதிகள் கொண்டுவரப்பட்டபோது மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி) அவர்களது தோழர்களும் அவர்களை ஏற்றவர்களும் அதை ஏற்க மறுத்து நிந்தித்தனர். அதனால் இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்களிடம்; “இது அனைவருக்குமானது அல்ல. அல்லாஹ்வின் மீது ஆணையாக முன்பே உங்களுக்கு இது குறித்து கூறப்படுள்ளது. அதாவது உங்களது பிரதிகளை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என்று. ஆனால் அலி(ரலி) அவர்கள் கூஃபா வந்த போது, ஒரு மனிதர் அவரிடம் வந்தார், மக்கள் கூடினர். உஸ்மான்(ரலி) அவர்களை குர்ஆன் தொகுத்தல் குறித்து ஏசத் துவங்கினர். உடனே (இப்னு மஸ்ஊத் (ரலி) எழுந்து “அனைவரும் அமைதியாக இருக்குமாறு கத்தினார்கள். மேலும் இது நம் கண் முன்னே நடந்துள்ளது. உஸ்மான்(ரலி) அவர்களது பொறுப்பு என்னிடம் ஒப்புவிக்கப்பட்டாலும் நானும் நிச்சயம் அதே வழியையே தேர்வு செய்திருப்பேன் என்று கூறினார்கள். (காமில் இப்னு அதீர் 2/482-483)

இப்னு அஸாகிரின் கருத்து:

روي عن ابن مسعود أنه رضي بذلك وتابع ووافق رأي عثمان في ذلك وراجع وذلك

     இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் பிற்காலத்தில் உஸ்மான்(ரலி) அவர்களது முடிவை சரி கண்டு ஏற்றுக்கொண்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது (இப்னு அஸாகிரின் தாரிக் அல் திமிஸ்க் 33/140) 

இப்னு கஸீரின் கருத்து 

كَتَبَ إِلَيْهِ عُثْمَانُ رَضِيَ اللَّهُ عَنْهُ يَدْعُوهُ إِلَى اتِّبَاعِ الصَّحَابَةِ فِيمَا أَجْمَعُوا عَلَيْهِ مِنَ الْمَصْلَحَةِ فِي ذَلِكَ، وَجَمْعِ الْكَلِمَةِ، وَعَدَمِ الِاخْتِلَافِ، فَأَنَابَ وَأَجَابَ إِلَى الْمُتَابَعَةِ، وَتَرَكَ الْمُخَالَفَةَ رَضِيَ اللَّهُ عَنْهُمْ أَجْمَعِينَ…… وَفِي رِوَايَةٍ الْخِلَافُ شَرٌّ فَإِذَا كَانَ هذا متابعة من ابن مسعود إلى عُثْمَانَ فِي هَذَا الْفَرْعِ فَكَيْفَ بِمُتَابَعَتِهِ إِيَّاهُ في أصل القرآن؟…..
     உஸ்மான்(ரலி) ஏனைய நபித்தோழர்கள் எதை அதன் நன்மை கருதியும், கருத்தொற்றுமையினாலும் ஏற்கொண்டார்களோ அதை பின்பற்றுமாறு (இப்னு மஸ்ஊத்(ரலி)) அவர்களுக்கு கடிதம் எழுதினார்கள். அதனால் அதை ஏற்று தனது எதிர்ப்பை கைவிட்டு அதை பின்பற்றினார்கள்…அல்லாஹ் அவர்கள் அனைரையும் பொருந்திக்கொள்வானாக…. ஆக உஸ்மான்(ரலி) அவர்களை ஏனைய சிறிய விசயங்களிலேயே இப்னு மஸ்ஊத்(ரலி) ஏற்று செயல் பட்டார்கள் என்றால் , குர்ஆன் விசயத்திலும், மக்களுக்கான ஓதலை நிர்ணயம் செய்ததிலும் எந்த அளவிற்கு பின்பற்றி இருப்பார்கள்’ (இப்னு கஸீரின் அல் பிதாயா வநிகாயா 7/217)

  அபுபக்கர் அல் அன்பாரியின் கருத்து

قَالَ أَبُو بَكْرٍ: وَمَا بَدَا مِنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ مِنْ نَكِيرِ ذَلِكَ فَشَيْءٌ نَتَجَهُ الْغَضَبُ، وَلَا يُعْمَلُ بِهِ ولا يؤخذ به، ولا يشك في ان رَضِيَ اللَّهُ عَنْهُ قَدْ عَرَفَ بَعْدَ زَوَالِ الْغَضَبِ عَنْهُ حُسْنَ اخْتِيَارِ عُثْمَانَ وَمَنْ مَعَهُ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَبَقِيَ عَلَى مُوَافَقَتِهِمْ وَتَرَكَ الْخِلَافَ لَهُمْ. فَالشَّائِعُ الذَّائِعُ الْمُتَعَالَمُ 

        அபுபக்கர் அல் அன்பாரி கூறியதாவது: ஆரம்பத்தில் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்களது எதிர்ப்பானது கோபத்தினால் ஏற்பட்டதாகும் ஆனால் அதில் அவர்கள் செயல் படவும் இல்லை அதில் அவர்கள் நிலைக்கவும் இல்லை. பின்னாளில் அவரது கோபம் மறைந்த போது உஸ்மான்(ரலி) மற்றும் ஏனைய நபித்தோழர்களின் முடிவை ஏற்றுக்கொண்டு தனது எதிர்ப்பை விடவும் செய்தார்( தஃப்ஸீர் அல் குர்துபீ 1/54)
    மேற்குறிபிட்ட ஹதீஸ்களின் அடிப்படையிலும், அதன் வரலாற்று குறிப்புகளின் அடிப்படையிலும் இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்களின் எதிர்ப்பு ஆரம்பத்தில் அறியாமையினால் ஏற்பட்டது என்பதையும், பிற்காலத்தில் அலி(ரலி) அவர்களின் வருகையின் போதும், உஸ்மான்(ரலி) அவர்களின் விளக்க கடிதத்தினாலும் அவர்கள் எதிர்ப்பை கைவிட்டர்கள் என்பதை விளங்க முடிகிறது. குருட்டு இஸ்லாமோஃபோபுகளின் வாதங்கள் அறியாமை மற்றும் காழ்ப்புணர்ச்சியால் தோன்றியது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. 


Thursday, October 29, 2020

ஸைத் இப்னு ஸாபித்(ரலி) குர்ஆனை தொகுக்க தகுதியற்றவரா?

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு,ஸைத் இப்னு ஸாபித்(ரலி) குர்ஆனை தொகுக்க தகுதியற்றவரா?


          குர்ஆனின் பாதுகாப்பு குறித்து விளக்கங்கள் கொடுக்கப்படும் போது அதற்கு இஸ்லாமிய எதிர்ப்பாளர்களிடம் புறப்படும் விமர்சனங்களில் மிக முக்கிய இடம் வகிப்பது இந்த தலைப்பு ஆகும். இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்களின் ஓதல் குறித்த சிறப்புகளை முன்னிறுத்தி, ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களது தொகுப்பில் குறை இருப்பதாகவும் , நபி(சல்) அவர்களால் புகழப்பட்ட இப்னு மஸ்ஊத்(ரலி) போன்ற நபித்தோழரே இதனை எதிர்த்துள்ளார் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த இஸ்லாமோஃபோபுகள் பெரும் முயற்சியை மேற்கொள்கின்றனர். இந்த நிகழ்வின் உண்மை நிலை என்ன என்பதை இங்கு காண்போம் இன் ஷா அல்லாஹ்.

இஸ்லாமோ போஃபுகளின் குருட்டு வாதம் 


     குர்ஆனை ஓதவும் அதனை கற்றுக்கொடுக்கவும் நபி(சல்) அவர்களால் பெரிதும் முன்னிறுத்தப்பட்டவர் இப்னு மஸ்ஊத்(ரலி) என்று மிசனரிகள் முதற்கொண்டு பல இஸ்லாமிய எதிர்ப்பாளர்களால் முன்னிறுத்தப்படுவதற்கு ஆதாரமாய் அமைந்த  ஹதீஸ்களையும் அதன் மூலம் அவர்கள் வைக்கும் வாதங்களை சற்று பார்போம்.

ஆதாரம் 1:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

       இப்னு மஸ்வூத்(ரலி), அபூ ஹுதைஃபாவின் (முன்னாள்) அடிமையான சாலிம், உபை இப்னு கஅப் மற்றும் முஆத் இப்னு ஜபல் ஆகிய நான்கு பேரிடமிருந்து குர்ஆனை ஓதக் கற்றுக் கொள்ளுங்கள். என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். (புகாரி 3806)
   குறிப்பு: மேற்குறிபிட்ட செய்தியில் இடம் பெறும் முஆத் இப்னு ஜபல் மற்றும் சாலிம் இருவரும் அபூபகர்(ரலி) அவர்களது ஆட்சிக்காலத்திலேயே மரணித்துவிட்டார்கள். இதில் எஞ்சியவர்கள் இப்னு மஸ்ஊத்(ரலி) மற்றும் உபை இப்னு கஅப்(ரலி) ஆகியோர் மட்டுமே. என்பது குறிப்பிடதக்கது.

        மேலும் இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள்தான் மக்காவில் ஹிஜ்ரத்திற்கு முன்பு நபி(சல்) அவர்களுடன் குர்ஆனை ஓதக்கூடியவர்களாக இருந்துள்ளார்கள்.

ஆதாரம் 2:

قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ وَالْفَضْلُ بْنُ دُكَيْنٍ قَالا: حَدَّثَنَا الْمَسْعُودِيُّ عَنِ الْقَاسِمِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ قَالَ: كَانَ أَوَّلُ مَنْ أَفْشَى الْقُرْآنَ بِمَكَّةَ مِنْ فِيَّ رَسُولِ الله.
     காஸிம் இப்னு அப்துர் ரஹ்மான் கூறியதாவது: நபி(சல்) அவர்களிடம் இருந்து முதன் முதலில் குர்ஆனை மக்காவில் ஓதியவர் இப்னு மஸ்ஊத்(ரலி) ஆவார்கள்.(தபக்கத் இப்னு சாஃத் 3/112)
 இதுவல்லாத மேலும் ஒரு செய்தியையும் முன்வைக்கிறார்கள்: அதாவது ஸைத்(ரலி) அவர்களை விட இப்னு மஸ்ஊத்(ரலி) தான் சிறந்தவர் என்று இப்னு மஸ்ஊத்(ரலி) கூறுவதான பின்வரும் செய்தியையும் முன்வைத்து ஸைத் இப்னு ஸாபித்(ரலி) இந்த பொறுப்பிற்கு தகுதியற்றவர் என்பதாக வாதிக்கின்றனர். 

ஆதாரம் 3:

قَالَ الزُّهْرِيُّ فَأَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ كَرِهَ لِزَيْدِ بْنِ ثَابِتٍ نَسْخَ الْمَصَاحِفِ وَقَالَ يَا مَعْشَرَ الْمُسْلِمِينَ أُعْزَلُ عَنْ نَسْخِ كِتَابَةِ الْمُصْحَفِ وَيَتَوَلاَّهَا رَجُلٌ وَاللَّهِ لَقَدْ أَسْلَمْتُ وَإِنَّهُ لَفِي صُلْبِ رَجُلٍ كَافِرٍ يُرِيدُ زَيْدَ بْنَ ثَابِتٍ 
       அல் ஜுஹ்ரி கூறியதாவது உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் பின் உத்பா தெரிவிப்பதாவது ,அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி) அவர்கள் ஸைத் இப்னு ஸாபித்(ரலி) மஸாஹிஃப்களை பிரதி எடுப்பதை விரும்பவில்லை. மேலும் கூறினார்கள் : முஸ்லீம் மக்களே! அந்த முஸ்ஹஃபையும் , அவரது ஓதலையும் பிரதி எடுப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் இஸ்லாத்தை தழுவிய போது அவர் (ஸைத் (ரலி) இறைமறுப்பாளரின் முதுகில் இருந்தார். (திர்மிதி 3104) 

 குருட்டு வாதம்:

     மேற்குறிபிட்ட செய்திகள் மற்றும் இன்ன பிற செய்திகளை முன்னிறுத்தி பின்வரும் வாதங்களை இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் முன்வைக்கிறார்கள்:

1.  இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் மட்டுமே குர்ஆன் ஓதலில் தலைசிறந்தவர்  அதனால்  இப்னு மஸ்ஊத்(ரலி) மட்டுமே குர்ஆனை கற்று கொடுக்க , தொகுக்க முழு தகுதிவாய்ந்தவர். 

2. ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களை இப்னு மஸ்ஊத்(ரலி)யே விமர்சித்திருப்பதால் ஸைத் இப்னு ஸாபித்(ரலி) இதற்கு தகுதியற்றவர் . 

இப்னு மஸ்ஊத்(ரலி) மட்டும்தான் குர்ஆன் ஓதலில் தலைசிறந்தவரா?


        மேற்குறிபிட்ட ஆதாரம் 1 மற்றும் 2 நபி(சல்) அவர்களிடம் மக்காவிலும், மதீனாவின் ஆரம்ப காலத்திலும் இப்னு மஸ்ஊத்(ரலி) குர்ஆனை நபி(சல்) அவர்களிடம் இருந்தே கற்றவராய் இருந்தார்கள் என்பதை தெளிவாக விளக்குகிறது. ஆனால் நபி(சல்) அவர்களின் மரணத்திற்கு பின்னான இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்களின் கருத்து முழு குர்ஆனையும் அவர்கள் நபி(சல்) அவர்களிடம் கற்கவில்லை என்பதை பிரதிபளிப்பதாய் இருக்கிறது.

ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
        (ஒரு முறை) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், "யார் மோசடி செய்கிறாரோ அவர், தாம் மோசடி செய்தவற்றுடன் மறுமை நாளில் வருவார்" (3:161) எனும் இறைவசனத்தை ஓதிக்காட்டி விட்டு, "யாருடைய ஓதல் முறைப்படி நான் ஓத வேண்டுமெனக் கூறுகிறீர்கள்? நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எழுபதுக்கும் மேற்பட்ட அத்தியாயங்களை ஓதிக்காட்டியுள்ளேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள், அவர்களிலேயே நான்தான் இறைவேதத்தை நன்கு கற்றவன் என்பதை அறிந்துள்ளார்கள். என்னைவிட (இறைவேதத்தை) நன்கு அறிந்த ஒருவர் இருக்கிறார் என நான் அறிந்தால், (அவர் எங்கு இருந்தாலும் சரி) அவரை நோக்கி நான் பயணம் மேற்கொள்வேன்" என்று கூறினார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் கூடியிருந்த (அந்த) அவையில் வீற்றிருந்தேன். அவர்களில் எவரும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதற்கு மறுப்பும் தெரிவிக்கவில்லை; அதற்காக அவரைக் குறை கூறவுமில்லை.(முஸ்லிம் 4860)
      மேற்குறிபிட்ட இந்த செய்தி இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்களின் நேரடியான சாட்சியாக இருக்கிறது. 

நபி(ஸல்) அவர்களிடம் முழு குர்ஆனையும் மனனமிட்டிருந்த ஸைத்(ரலி)


        இதற்கு மாற்றமாக நபி(சல்) அவர்களது காலத்தில் அவர்களின் நாவினாலே முழு குர்ஆனையும் கற்றவர்கள் பலர் இருதுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. அதில் ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களும் ஒருவர் ஆவார்கள். 
கதாதா(ரஹ்) அறிவித்தார்.
          இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் நான்கு பேர் (கொண்ட குழுவினர்) குர்ஆனை (மனனம் செய்து) திரட்டினார்கள். அவர்கள் அனைவருமே அன்சாரிகள் ஆவர். 1. உபை இப்னு கஅப். 2. முஆத் இப்னு ஜபல். 3. அபூ ஸைத். 4. ஸைத் இப்னு ஸாபித் ஆகியோர் தாம் அவர்கள்" என்று அனஸ்(ரலி) கூறினார். நான் அனஸ்(ரலி) அவர்களிடம், 'அபூ ஸைத் என்பவர் யார்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'என் தந்தையின் சகோதரர்களில் ஒருவர்" என்று பதிலளித்தார்கள்.(புகாரி 3810)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ الْحَضْرَمِيُّ، ثنا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ عُثْمَانَ الْحَضْرَمِيُّ، ثنا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ، عَنْ عَامِرٍ الشَّعْبِيِّ، قَالَ: «جَمَعَ الْقُرْآنَ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سِتَّةٌ مِنَ الْأَنْصَارِ زَيْدُ بْنُ ثَابِتٍ، وَأَبُو زَيْدٍ، وَمُعَاذُ بْنُ جَبَلٍ، وَأَبُو الدَّرْدَاءِ، وَسَعْدُ بْنُ عُبَادَةَ، وَأُبَيُّ بْنُ كَعْبٍ، وَفِي حَدِيثِ زَكَرِيَّا وَكَانَ جَارِيَةُ بْنُ مُجَمِّعِ بْنِ جَارِيَةَ قَدْ قَرَأَهُ إِلَّا سُورَةً أَوْ سُورَتَيْنِ
ஆமிர் அல் ஸ’அபி கூறியதாவது:
       நபி(சல்) அவர்களிடம் அவர்களது காலத்தில் முழுமையாக மனனமிடப்பட்டு தொகுக்கப்பட்டது. அவர்கள் ஆறு பேரும் அன்சாரிகள் ஆவார்கள். அவர்கள் ஸைத் இப்னு ஸாபித்(ரலி), அபூ ஸைத்(ரலி), முஆத் இப்னு ஜபல்(ரலி), அபூதர்தா(ரலி), சஅத் இப்னு உபாதா(ரலி) மற்றும் உபை இப்னு கஃப்(ரலி) ஆவர். மேலும் ஸகரிய்யா அவர்களது அறிவிப்பில் , முஜம்மி பின் ஜாரியா(ரலி) முழு குர்ஆனையும் மனனமிட்டிருந்தார்கள் ஒன்றிரண்டு சூராக்களை தவிர என்று இடம் பெற்றுள்ளது. ( மஜ்ம உல் கபீர் 2092) 
أخبرنا أبو بكر محمد بن عبد الباقي أنا الحسن بن علي أنا أبو عمر بن حيوية أنا أحمد بن معروف نا الحسين بن الفهم نا محمد بن سعد أنا محمد بن يزيد الواسطي عن إسماعيل بن أبي خالد عن الشعبي قال جمع القرآن على عهد رسول الله صلى الله عليه وسلم ستة نفر أبي بن كعب ومعاذ بن جبل وأبو الدرداء وزيد بن ثابت وسعد وأبو زيد وكان مجمع ابن جارية قد جمع القرآن إلا سورتين أو ثلاثا وكان ابن مسعود قد أخذ بضعا وسبعين سورة وتعلم بقية القرآن من مجمع.
         ஆமிர் அல் ஸ’அபி கூறியதாவது: நபி(சல்) அவர்களிடம் அவர்களது காலத்தில் முழுமையாக மனனமிடப்பட்டு தொகுக்கப்பட்டது. அவர்கள் ஆறு பேர் ஆவார்கள். அவர்கள் உபை இப்னு கஃப்(ரலி),முஆத் இப்னு ஜபல்(ரலி), அபூதர்தா(ரலி), ஸைத் இப்னு ஸாபித்(ரலி),சஅத் (ரலி) மற்றும் அபூ ஸைத்(ரலி), ஆவர். மேலும் முஜம்மி இப்னு ஜாரியா குர்ஆன் முழுவதையும் மனனமிட்டிருந்தார்கள் இரண்டு அல்லது மூன்று சூராக்களை தவிர. மேலும் இப்னு மஸ்ஊத்(ரலி) 70 சூராக்களை மனனமிட்டிருந்தார்கள். குர்ஆனின் ஏனைய பகுதியை முஜம்மி(ரலி)- அவர்களிடம் இருந்து மனனமிட்டார்கள்.        (அல் தாரிக் வ அல் திமிஸ்க் பாகம் 47 பக்கம் 111) 
       அதாவது நபி(சல்) அவர்களிடம் இருந்து குர்ஆனின் எழுவது சூராக்களை இப்னு மஸ்ஊத்(ரலி) கற்றுள்ளார்கள். ஏனைய சூராக்களை முஜம்மி(ரலி) அவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டார்கள் என்பதை மேற்குறிபிட்ட செய்தியும், இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்களின் சுய சாட்சியமும் தெளிவாக விளக்குகின்றன.

" நிதர்சனம் என்னவென்றால் அபூபக்ர்(ரலி), உமர்(ரலி) மற்றும் உஸ்மான்(ரலி) ஆகியோர் ஸைத்தை(ரலி) குர்ஆனை தொகுக்க முன்னிறுத்தியது அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்களைவிட ஸைத் அவர்கள் சிறந்தவர் என்பதற்காக அல்ல. இப்னு மஸ் ஊத்(ரலி) இஸ்லாமில் முந்தியவர், அதிக போரில் பங்கு பெற்றவர் மேலும் பல சிறப்புக்கள் அவருக்கு உண்டு. ஆனால் ஸைத்(ரலி) அவர்கள் இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்களைவிட குர்ஆனில் அதிகம் கற்றவர். அவர்கள் நபி(சல்) அவர்களது காலத்திலேயே முழு குர்ஆனையும் மனனமிட்டிருந்தார்கள். மாறாக இப்னு மஸ்ஊத்(ரலி) எழுவது சூராக்களைதான் மனனமிட்டிருந்தார்கள். யார் நபி(சல்) அவர்களது காலத்திலேயே முழூ குர்ஆனையும் கற்று மனனமிட்டிருந்தாரோ அவர்தான் குர்ஆனை தொகுக்க முழு தகுதி உடையவர் அதனால் தேர்வு செய்யவும் பட்டார். இது இப்னு மஸ்ஊத்(ரலி) மீதான தாக்குதலாக எந்த அறிவற்றவரும் கருதக்கூடாது, இருவரிலும் ஸைத்(ரலி) அவர்கள் அதிகம் குர்ஆனை மனமிட்டவர் என்பதானது அனைத்திலும் சிறந்தவர் என்ற பொருளைத்தராது ஏனென்றால் ஸைத்(ரலி) அபூபகர் மற்றம் உமரை விட அதிகம் குர்ஆனை மனனமிட்டவர், ஆனால் அவர்கள் இருவரின் சிறப்பில் (ஸைத்(ரலி) மேன்மையானவரோ, நிகரனாவரோ அல்ல என்பது உறுதியானது." (தஃப்ஸீர் குர்துபீ 1/54)
மேற்குறிபிட்ட செய்திகளில் இருந்து இரு விசயங்கள் தெளிவாகிறது. 

1. நபி(சல்) அவர்களது நாவுகளில் இருந்து முழுமையாக குர்ஆனை மனனமிட்டவர்களில் ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களும் ஒருவர். இவர்தான் நபி(சல்) அவர்கள்து இறுதி ஓதலின் சாட்சியும் ஆவார்கள். இது குறித்து சென்ற தொடரில் விளக்கியுள்ளோம்

2.  மறுபக்கத்தில் இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் 70 சூராக்களை மனனமிட்டிருந்தார்கள். 

   மேற்குறிபிட்ட செய்திகளே போதுமானது ஸைத்(ரலி) குர்ஆனை தொகுக்க முழு தகுதியுடையவர் என்பதை புரிந்து கொள்ள. மேலும் நபி(சல்) அவர்களின் நெருங்கிய தோழர்களான அபூபகர்(ரலி), உமர்(ரலி), ஹப்ஸா(ரலி), உஸ்மான்(ரலி) உள்ளிட்ட பலரால் அறியப்படாத ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களின் குறை பல நூறு ஆண்டுகளுக்கு பின்னர் வந்து சில இஸ்லாமிய புத்தகங்களை அறையும் குறையுமாக வாசித்த ஓரியண்டலிஸ்ட்களுக்கும்,  அவர்களின் பிதற்றலை அப்படியே நம்பும் அரைவேக்காடு இஸ்லாமோஃபோபுகளுக்கும் தெரிந்துவிட்டதா என்ன??????

குர்ஆன் தொகுப்பு குழுவில் ஸைத் பின் ஸாபித்(ரலி)

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

குர்ஆன் தொகுப்பு குழுவில் ஸைத் பின் ஸாபித்(ரலி)


       நபி(சல்) அவர்களின் மரணத்திற்கு பிறகு குர்ஆனை தொகுக்கும் குழுக்கள் இரண்டு முறை இஸ்லாமிய கலிஃபாக்களால் நியமிக்கப்பட்டுள்ளது. முதல் முறை அபூபக்ர்(ரலி) அவர்களால், இரண்டாவது முறை உஸ்மான்(ரலி) அவர்களால். இரண்டிலுமே ஸைத் பின் ஸாபித்(ரலி) பங்குபெற்றுள்ளார்கள். குர் ஆன் பாதுகாப்பு குறித்த விமர்சனங்களிற்கான விளக்கங்களை புரிந்து கொள்ள முதலில் மேற்குறிப்பிட்ட ஸைத பின் ஸாபித்(ரலி) அவர்களின் நியமனத்தின் நியாயங்கள அறிந்து கொள்வது அவசியமாகும். அது குறித்த ஹதீஸ்களை முதலில் பார்ப்போம்.

அபூபக்ர்(ரலி) அவர்களது காலத்தில்


          ஸைத் இப்னு ஸாபித் அல்அன்சாரி(ரலி) - அன்னார் வேத அறிவிப்பினை (வஹியை) எழுதுவோரில் ஒருவராக இருந்தார் அவர்கள் கூறினார்.

         யமாமா போர் நடைபெற்ற பின் (கலீஃபா) அபூ பக்(ரலி), எனக்கு ஆளனுப்பி (என்னை அழைத்துவரக் கூறினார்கள். (நான் சென்றேன். அங்கே) அவர்களுக்கு அருகில் உமர் இப்னு கத்தாப்(ரலி) இருந்தார்கள். 

அப்போது அபூ பக்ர்(ரலி) (என்னிடம்) கூறினார்கள்:
          உமர் அவர்கள் என்னிடம் வந்து, 'இந்த யமாமாப் போரில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள். (இறைமறுப்பாளர்களுடன் போர் நடக்கும்) பல்வேறு இடங்களில் குர்ஆன் அறிஞர்களில் ஏராளமான பேர் கொல்லப்பட்டு, அதனால் குர்ஆனை நீங்கள் திரட்டினால் தவிர, அதன் பெரும் பகுதி (நம்மைவிட்டுப்) போய்விடுமோ என நான் அஞ்சுகிறேன். (எனவே,) தாங்கள் குர்ஆனைத் திரட்டி ஒன்று சேர்க்க வேண்டுமென கருதுகிறேன்' என்று கூறினார்கள். நான் 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நான் எப்படிச் செய்வேன்?' என்று உமர் அவர்களிடம் கேட்டேன். அதற்கு உமர் அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! இது (குர்ஆனைத் திரட்டுவது) நன்மை(யான பணி)தான்' என்று கூறினார்கள். இதற்காக என் மனத்தை அல்லாஹ் விரிவாக்கும் வரை இது விஷயத்தில் (தொடர்ந்து) அவர்கள் என்னிடம் வலியுறுத்திக் கொண்டேயிருந்தார்கள். (முடிவில்) உமர் அவர்கள் கருதியதை(யே) நானும் (பொறுத்தமானதாகக்) கண்டேன். (இதை அபூ பக்ர் அவர்கள் என்னிடம் கூறியபோது) உமர்(ரலி) (ஏதும்) பேசாமல் அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு அருகில் அமர்ந்துகொண்டிருந்தார்கள்.
        (பிறகு) அபூ பக்ர்(ரலி) (என்னிடம்) 'நீங்கள் புத்திசாலியான இளைஞர்; உங்களை நாங்கள் (எந்த விதத்திலும் சந்தேகப்படமாட்டோம். நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்காக வஹி (வேத வசனங்களை) எழுதக்கூடியவராயிருந்தீர்கள். எனவே, நீங்கள் குர்ஆனைத் தேடிக் கண்டுபிடித்து (ஒரே பிரதியில்) ஒன்று திரட்டுங்கள்' என்று கூறினார்கள்.

       அல்லாஹ்வின் மீதாணையாக! மலைகளில் ஒன்றை நகர்த்த வேண்டுமென எனக்கு அவர்கள் கட்டளையிட்டிருந்தாலும் கூட அது எனக்குப் பளுவாக இருந்திருக்காது; குர்ஆனை ஒன்று திரட்டும்படி எனக்கு அவர்கள் கட்டளையிட்டது அதைவிட எனக்குப் பளுவாக இருந்தது. நான், நபி(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நீங்கள் இருவரும் எப்படிச் செய்யப்போகிறீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு அபூ பக்ர்(ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக! இது நன்மை(யான பணி)தான்' என்று பதிலளித்தார்கள். இதையே நான் தொடர்ந்து (அவர்கள் இருவரிடமும்) வலியுறுத்திக் கொண்டிருந்தேன். முடிவில் எதற்காக அபூ பக்ர் மற்றும் உமர் ஆகியோரின் மனத்தை அல்லாஹ் விரிவாக்கினானோ அதற்காக என் மனத்தையும் அல்லாஹ் விரிவாக்கினான். (குர்ஆனை ஒன்று திரட்ட முன்வந்தேன்.) எனவே, நான் எழுந்து சென்று (மக்களின் கரங்களிலிருந்த) குர்ஆன் (சுவடிகளைத்) தேடினேன். அவற்றை துண்டுக் தோல்கள், அகலமான எலும்புகள், போரிச்சமட்டைகள் மற்றும் (குர்ஆன் வசனங்களை மனனம் செய்திருந்த) மனிதர்களின் நெஞ்சுகள் ஆகியவற்றிலிருந்து திரட்டினேன். (இவ்வாறு திரட்டிபோது) 'அத்தவ்பா' எனும் (9 வது) அத்தியாயத்தின் (கடைசி) இரண்டு வசனங்களை குஸைமா இப்னு ஸாபித் அல்அன்சாரி(ரலி) அவர்களிடமிருந்து பெற்றேன்; இவை வேறெவரிடமிருந்தும் (எழுதப்பட்டு) கிடைக்கவில்லை.
         (அவை:) 'உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார். நீங்கள் துன்பத்திற்குள்ளாவது அவருக்குக் கடினமாக இருக்கிறது. மேலும், உங்கள் (வெற்றியின்) விஷயத்தில் பேராவல் கொண்டவராகவும், நம்பிக்கையாளர்களின் மீது அதிகப் பரிவும், கருணையும் உடையோராகவும் இருக்கிறார். (நபியே! இதற்குப்) பின்னரும் அவர்கள் உம்மைப் புறக்கணித்தால் நீர் கூறிவிடும்: அல்லாஹ் எனக்குப் போதுமானவன். அவனைத்தவிர வேறு இறைவன் இல்லை. அவனையே நான் முழுமையாகச் சார்ந்திருக்கிறேன். மேலும், அவன் மகத்தான அரியாசனத்தின் (அர்யுன்) அதிபதியாயிருக்கிறான்.' (திருக்குர்ஆன் 09:128 , 129)
             (என் வாயிலாக) திரட்டித் தொகுக்கப்ப பெற்ற குர்ஆன் பிரதிகள் (கலீஃபா) அபூ பக்ர்(ரலி) அவர்களிடம், அவர்களை அல்லாஹ் இறக்கச் செய்யும் வரை இருந்(து வந்)தது. பின்னர். (கலீஃபாவான) உமர்(ரலி) அவர்களிடம், அவர்களை அல்லாஹ் இறக்கச் செய்யும் வரை இருந்தது. பிறகு உமர் அவர்களின் புதல்வியார் ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் இருந்தது.(புகாரி 4679).

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

        ஹுதைஃபா யமான்(ரலி) உஸ்மான்(ரலி) அவர்களிடம் (அவர்களின் ஆட்சிக் காலத்தின்போது மதீனாவிற்கு) வருகை புரிந்தார்கள். (அப்போது) உஸ்மான்(ரலி), அர்மீனியா மற்றும் அஃதர் பைஜான் ஆகிய நாடுகளை இராக்கியருடன் சேர்ந்து வெற்றிகொள்வதற்கான போரில் கலந்துகொள்ளுமாறு ஷாம்வாசிகளுக்கு ஆணை பிறப்பித்தார்கள். 9 ஹுதைஃபா(ரலி) அவர்களை, (இராக் மற்றும் ஷாம் நாட்டு) முஸ்லிம்கள் குர்ஆனை ஓதும் முறையில் கருத்துவேறுபாடுகொண்டு அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 10 எனவே, ஹுதைஃபா(ரலி) உஸ்மான்(ரலி) அவர்களிடம், 'யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தங்களின் வேதங்களில்) கருத்து வேறுபாடுகொண்டது போல் இந்தச் சமுதாயமும் இந்த(த் திருக்குர்ஆன்) வேதத்தில் கருத்து வேறுபாடு கொள்வதற்கு முன்பே இவர்களைக் காப்பாற்றுங்கள், இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் அவர்களே!' என்று கூறினார்கள். எனவே, உஸ்மான்(ரலி) (அன்னை) ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் ஆளனுப்பி 'தங்களிடமுள்ள குர்ஆன் பதிவை எங்களிடம் கொடுத்து அனுப்புங்கள்! நாங்கள் அதனைப் பல பிரதிகள் படியெடுத்துவிட்டு திருப்பித் தந்து விடுகிறோம்' என்று தெரிவித்தார்கள்.
        எனவே, ஹஃப்ஸா(ரலி) தம்மிடமிருந்த குர்ஆன் பதிவை உஸ்மான்(ரலி) அவர்களிடம் கொடுத்தனுப்பினார்கள். ஸைத் இப்னு ஸாபித்(ரலி), அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி), ஸயீத் இப்னு ஆஸ்(ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு ஹாரிஸ் இப்னி ஹிஷாம்(ரலி) ஆகியோரிடம் அவற்றைப் பல பிரதிகளில் படியெடுக்கும்படி உஸ்மான்(ரலி) உத்தரவிட்டார்கள். மேலும், உஸ்மான்(ரலி) (அந்த நால்வரில்) குறைஷிக் குழுவினரான மூவரை நோக்கி, 'நீங்களும் (அன்சாரியான) ஸைத் இப்னு ஸாபித் அவர்களும் குர்ஆனில் ஏதேனும் ஒரு (எழுத்திலக்கண) விஷயத்தில் கருத்து வேறுபட்டால் குறைஷியரின் (வட்டார) மொழிவழக்குப்படியே பதிவு செய்யுங்கள். ஏனெனில், குர்ஆன் குறைஷியரின் மொழிவழக்குப்படியே இறங்கிற்று' என்று கூறினார்கள். அந்த நால்வரும் அவ்வாறே செயல்பட்டார்கள். (ஹஃப்ஸா(ரலி) அவர்களிடமிருந்த) அந்தக் குர்ஆன் பதிவை பல பிரதிகளில் படியெடுத்தார்கள். பிறகு உஸ்மான்(ரலி) அந்தப் பிரதியை ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். பிறகு அவர்கள் படியெடுத்த பிரதிகளில் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு பகுதிக்கு அனுப்பிவைத்தார்கள். இதுவல்லாமல் (புழக்கத்திலிருந்த) இதர பிரதிகளை, அல்லது ஏடுகளை எரித்து விடும்படி உஸ்மான்(ரலி) உத்தரவிட்டார்கள். (புஹாரி 4987.)

     மேற்குறிபிட்ட செய்தியில் முதல் செய்தியை ஆய்வு செய்யும் போது அபூபக்ர்(ரலி) அவர்கள் ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்கள் குறித்து பின்வரும் முக்கியத்துவங்களை முன்வைத்து அவரது நியமனத்தின் காரணத்தை விளக்குவதை நாம் புரிந்து கொள்ளலாம்:

1. புத்திசாலியான இளைஞர். ஸைத் பின் ஸாபித்(ரலி) அவர்கள் புத்தி கூர்மை உடையவராகவும், இளைய வயதுடையவராகவும் இருந்தார்கள்.

2. நபி(சல்) அவர்களின் எழுத்தர். ஸைத் பின் ஸாபித்(ரலி) அவர்கள் நபி(சல்) அவர்களின் எழுத்தராகவும் குறிப்பாக வஹி செய்திகளை எழுதுபவராக இருந்தார்கள்.

3. மிகுந்த நம்பத்தகுந்தவர்.
      மேற்குறிபிட்ட சிறப்புகள் அல்லாமல், இந்த குர்ஆனை தொகுப்பதற்கு ஸைத் பின் ஸாபித்(ரலி) அவர்கள் நியமிக்கப்பட மேலும் சில சிறப்பு காரணங்களும் உண்டு.  அவற்றையும் நாம் காண்போம்.

கதாதா(ரஹ்) அறிவித்தார்.

       இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் நான்கு பேர் (கொண்ட குழுவினர்) குர்ஆனை (மனனம் செய்து) திரட்டினார்கள். அவர்கள் அனைவருமே அன்சாரிகள் ஆவர். 1. உபை இப்னு கஅப். 2. முஆத் இப்னு ஜபல். 3. அபூ ஸைத். 4. ஸைத் இப்னு ஸாபித்(ரலி) ஆகியோர் தாம் அவர்கள்" என்று அனஸ்(ரலி) கூறினார். நான் அனஸ்(ரலி) அவர்களிடம், 'அபூ ஸைத் என்பவர் யார்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'என் தந்தையின் சகோதரர்களில் ஒருவர்" என்று பதிலளித்தார்கள்.(புகாரி 3810)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ الْحَضْرَمِيُّ، ثنا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ عُثْمَانَ الْحَضْرَمِيُّ، ثنا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ، عَنْ عَامِرٍ الشَّعْبِيِّ، قَالَ: «جَمَعَ الْقُرْآنَ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سِتَّةٌ مِنَ الْأَنْصَارِ زَيْدُ بْنُ ثَابِتٍ، وَأَبُو زَيْدٍ، وَمُعَاذُ بْنُ جَبَلٍ، وَأَبُو الدَّرْدَاءِ، وَسَعْدُ بْنُ عُبَادَةَ، وَأُبَيُّ بْنُ كَعْبٍ، وَفِي حَدِيثِ زَكَرِيَّا وَكَانَ جَارِيَةُ بْنُ مُجَمِّعِ بْنِ جَارِيَةَ قَدْ قَرَأَهُ إِلَّا سُورَةً أَوْ سُورَتَيْنِ 
ஆமிர் அல் ஸ’அபி கூறியதாவது: 
     நபி(சல்) அவர்களிடம் அவர்களது காலத்தில் முழுமையாக மனனமிடப்பட்டு தொகுக்கப்பட்டது. அவர்கள் ஆறு பேரும் அன்சாரிகள் ஆவார்கள். அவர்கள் ஸைத் இப்னு ஸாபித்(ரலி), அபூ ஸைத்(ரலி), முஆத் இப்னு ஜபல்(ரலி), அபூதர்தா(ரலி), சஅத் இப்னு உபாதா(ரலி) மற்றும் உபை இப்னு கஃப்(ரலி) ஆவர். மேலும் ஸ்கரிய்யா அவர்களது அறிவிப்பில் , முஜம்மி பின் ஜாரியா(ரலி) முழு குர்ஆனையும் மனனமிட்டிருந்தார்கள் ஒன்றிரண்டு சூராக்களை தவிர என்று இடம் பெற்றுள்ளது.                        ( மஜ்ம உல் கபீர் 2092)
         மேற்குறிபிட்ட அறிவிப்புகளின் அடிப்படையில் பார்த்தோம் என்றால் ஸைத பின் ஸாபித்(ரலி) அவர்கள் நபி(சல்) அவர்களது காலத்திலேயே குர்ஆனை முழுமையாக மனனமிட்டவர்களில் ஒருவர் என்பது நிரூபனமாகிறது.


قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيُّ: قَرَأَ زَيْدُ بْنُ ثَابِتٍ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْعَامِ الَّذِي تَوَفَّاهُ اللَّهُ فِيهِ مَرَّتَيْنِ، وَإِنَّمَا سُمِّيَتْ هَذِ الْقِهِرَاءَةُ قِرَاءَةَ زَيْدِ بْنِ ثَابِتٍ، لأَنَّهُ كَتَبَهَا لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَرَأَهَا عَلَيْهِ، وَشَهِدَ الْعَرْضَةَ الأَخِيرَةَ، وَكَانَ يُقْرِئُ النَّاسَ بِهَا حَتَّى مَاتَ، وَلِذَلِكَ اعْتَمَدَهُ أَبُو بَكْرٍ وَعُمَرُ فِي جَمْعِهِ، وَوَلاهُ عُثْمَانُ كِتْبَةَ الْمَصَاحِفِ رَضِيَ اللَّهُ عَنْهُمْ أَجْمَعِينَ
அபூ அப்துர் ரஹ்மான் அல ஸலாமி கூறியதாவது:

     ஸைத்(ரலி), நபி(சல்) அவர்களிடம், நபி(சல்) அவர்கள் இறந்த ஆண்டில் இரண்டுமுறை ஓதிக்காட்டினார்கள். அந்த ஓதல்தான் ஸைத்தின் ஓதல் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் அவர் நபி(சல்) அவர்களுக்காக அதை எழுதினார்கள், அவர்களிடம் ஓதியும் காட்டினார்கள். நபி(சல்) அவர்களின் இறுதி ஓதலான அர்தத் அல் ஆகிராவின் சாட்சியுமாக இருந்தார்கள். அதையே அவர்கள் இறக்கும் வரையில் மக்களுக்கு கற்றும் கொடுத்தார்கள். அதனால்தான் அபுபக்கர்(ரலி) மற்றும் உமர்(ரலி) அவர்கள் இருவரும் அவரை தொகுக்க நியமித்தார்கள். மேலும் உஸ்மான்(ரலி) அவர்களும் அவரை தொகுக்க நியமித்தார்கள். அவர்களை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக. (அல் பாகவியின் ஸ்ரஹ் அஸ் ஸுன்னாஹ் 4/526) 
    மேலும் இதை அறிவிக்கும் அபூ அப்துர் ரஹ்மான் அல் ஸலாமிதான் குர்ஆனை கற்று கொடுக்க உஸ்மான்(ரலி) அவர்களால் கூஃபாவிற்கு அனுப்பப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்களது மாணவரும் கூட ( சியார் அல் நுஃபுலா இமாம் தஹபி 4/268).

        இப்படி ஸைத் பின் ஸாபித்(ரலி) அவர்கள் நபி(சல்) அவர்களது இறுதி ஓதலை மனமிட்டிருந்ததால்தான் அதன் அடிப்படையில் தொகுக்கப்பட்ட குர்ஆன் ஓதலை நபிதோழர்களும், தாபியீன்களும் அர்தா அல் ஆகீரா என்று குறிப்பிடுகின்றனர். இது குறித்து சென்ற தொடரில் நாம் விளக்கியுள்ளோம்.

أَخْبَرَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدِ بْنِ نُصَيْرٍ الْخَلَدِيُّ، ثنا عَلِيُّ بْنُ عَبْدِ الْعَزِيزِ الْبَغَوِيُّ، بِمَكَّةَ، ثنا حَجَّاجُ بْنُ الْمِنْهَالِ، قَالَ: ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ سَمُرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «عُرِضَ الْقُرْآنُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَرَضَاتٍ فَيَقُولُونَ: إِنَّ قِرَاءَتِنَا هَذِهِ هِيَ الْعَرْضَةُ الْأَخِيرَةُ
       சமூரா (ரலி) அவர்கள் கூறியதாவது ; நபி(சல்) அவர்களுக்கு பல முறை குர்ஆன் ஓதிகாண்பிக்கப்பட்டது. இன்று நமது ஓதல்தான் அர்தத் அல் ஆகிரா (இறுதி ஓதல்) என்று கூறப்படுகிறது.( முஸ்தத்ரக் அல் ஹாக்கிம் 2904) 
      அல்ஹசன் அல் பஸரி கிபி 642ல் பிறந்தவர் ஆவார். உஸ்மான(ரலி) அவர்களது ஆட்சிக்காலம் கிபி 644- 656 வரையிலானது கிபி 650ல் தான் குர்ஆனை தொகுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அல்ஹசன் அல் பஸரி அவர்களிடம் சமூரா(ரலி) (மரணம் கிபி 680) குறிப்பிட்டு கூறுவதாக மேற்குறிபிட்ட செய்தி இடம் பெறுகிறது. ஆக மேற்குறிபிட்ட செய்தியானது உஸ்மான்(ரலி) அவர்களின் தொகுப்பு குறித்துதான் பேசுகிறது என்பது நமக்கு தெளிவாக நிருபனமாகிறது. 
    மேலும் உஸ்மான்(ரலி) அவர்களது காலத்தை சேர்ந்தவரும், இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்களில் மாணவர்களில் ஒருவரான உபைதா(ரஹ்) அவர்கள் இப்னு ஸீரின் வழியாக பின்வரும் செய்தியை குறிப்பிடுகிறார்கள்: 

حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَلِيٍّ، عَنِ ابْنِ عُيَيْنَةَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، وَعَنِ ابْنِ سِيرِينَ، عَنْ عَبِيدَةَ، قَالَ: الْقِرَاءَةُ الَّتِي عُرِضَتْ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْعَامِ الَّذِي قُبِضَ فِيهِ هِيَ الْقِرَاءَةُ الَّتِي يَقْرَؤُهَا النَّاسُ الْيَوْمَ فِيهِ
    உபைதா அவர்கள் கூறியதாவது: நபி(சல்) அவர்கள் இறந்த ஆண்டில் ஓதப்பட்டதுதான் நபி(சல்) அவர்களது ஓதல் ஆகும். அதைதான் இன்று மக்கள் ஓதி கொண்டிருக்கிறார்கள் (முஸன்னஃப் இப்னு அபிஷைபா 30291) 
   உபைதா அவர்கள் அபூபகர்(ரலி) அவர்களது காலத்தின் குர்ஆன் தொகுப்பையும் கண்டவர், உஸ்மான்(ரலி) காலத்தின் குர்ஆன் தொகுப்பையும் கண்டவர் ஆவார். 

    மேற்குறிபிட்ட செய்திகள் ஸைத் பின் ஸாபித்(ரலி) அவர்கள் குர்ஆனை தொகுக்கும் குழுவில் நியமிக்கப்பட்டதற்கான தெளிவான காரணங்களை விளக்க போதுமானது. மேலும் மேற்குறிபிட்ட செய்திகளில் இடம் பெறும் அபூ அப்திர் ரஹ்மான் ஸ்லாமி, உபைதா, இப்னு சீரின் என்று அனைவரும் இப்னு மஸ்ஊத்(ரலி) உள்ளிட்ட பல நபிதோழர்களின் மாணவர்கள் என்பது குறிப்பிடதக்கது. ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களால் தொகுக்கப்பட்ட குர்ஆனிற்கு கலிஃபாக்களான அபூபக்ர்(ரலி), உஸ்மான்(ரலி) அவர்கள் வழங்கிய அங்கீகாரம், குர்ஆன் தொகுப்பினை கண்ட முதல் இரு தலைமுறையான சஹாபாக்கள் மற்றும் தாபீயீன்களின் சாட்சியங்கள் ஆகியவையே, ஸைத் பின் ஸாபித்(ரலி) அவர்களது குர்ஆன் தொகுப்பு நபி(சல்) அவர்களது இறுதி ஓதல்தான் என்பதை நிறுவ போதுமானது.. மேற்குறிபிட்ட ஆதாரங்களை மறுக்கும் வண்ணம் நேரடியான எதிர் சாட்சியங்கள் எதையும் கொண்டு வரமுடியாத மிசனரிகளும், இஸ்லாமோஃபோபுகளும் இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்களின் எதிர்ப்பு குறித்த சில செய்திகளை தூக்கித்திரிகின்றன. அது குறித்து அடுத்த தொடரில் இன் ஷா அல்லாஹ் காண்போம்.

Wednesday, October 28, 2020

பெரும்பான்மை மக்களின் ஓதலும் உஸ்மான்(ரலி) அவர்களது குர்ஆன் தொகுப்பும்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு, உஸ்மான்(ரலி),குர்ஆன் தொகுப்பு,கிராத் அல் ஆம்மா,அர்தத் அல் ஆஹிரா,


        குர்ஆன் எப்படி மக்கள் உள்ளங்களில் மனனம் செய்யப்பட்டு தலைமுறை தலைமுறையாக கடத்தப்பட்டது என்பதை இஸ்லாமியர்கள் ஆதாரப்பூர்வமாக நிரூவும் போது, இங்கிருக்கும் கிறித்தவ மிசனரிகளும், இஸ்லாமோஃபோபுகளும் , ஹதீஸ்களில் காணப்படும் குர்ஆன் தொகுக்கப்பட்டது குறித்த வரலாற்று குறிப்புகளை முன்வைத்து சில மூடத்தனமான விமர்சனங்களை முன்வைத்த ஆர்தர் ஜெஃப்ரி போன்ற ஓரியண்டலிஸ்டுகளின் புத்தகங்களில் இருந்தும், தற்காலத்தில் சில இஸ்லாமிய எதிர்ப்பு ஆங்கில வளைத்தளத்தில் பதியப்பட்டவைகளையும் அடிப்படையாக கொண்டு தாங்களே தேடி கண்டறிந்தது போன்று விமர்சனங்களை செய்து வருகின்றனர். உண்மையில் சொல்வதாக இருந்தால் ஆர்தர் ஜெஃப்ரி போன்ற ஓரியண்டலிஸ்டுகளே, இஸ்லாமிய அறிஞர்கள் சிலர் இது குறித்து எழுதிய பண்டைய கிரந்தங்களில் இருந்துதான் இத்தகைய விமர்சனங்களை, அறியாமையையும், காழ்புணர்ச்சியையும் அதில் ஏற்றி தங்களது புத்தகங்களில் வழங்கி உள்ளனர். இந்த விசயங்களில் ஆர்தர் ஜெஃரியின் தந்தையாக கருத்தப்பட்ட இஸ்லாமிய அறிஞர்களின் நூல்கள் எல்லாம் கிபி 10ம் நூற்றாண்டுகளில் இருந்து இஸ்லாமிய சமூகத்தால் பார்க்கப்பட்டு , அதற்கான தெளிவுரைகளையும் இஸ்லாமிய அறிஞர்களே வழங்கியும் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதையும் இந்த கட்டுரையின் இறுதியில் காணவுள்ளோம்.

   மேற்குறிபிட்ட படியான விமர்சனங்களில், உஸ்மான்(ரலி) அவர்களது காலத்தில் தொகுக்கப்பட்டு பல பகுதிகளுக்கு அனுப்பப்பட்ட குர்ஆன் பிரதிகளின் தொகுத்தலுக்கான நடைமுறைகள் குறித்தவைகளையே இங்கிருக்கும் இஸ்லாமோஃபோபுகள் தங்களது முதன்மை விமர்சனமாக முன்வைத்து வருகின்றனர். உஸ்மான்(ரலி) அவர்களது ஆட்சிக்காலத்தில் தொகுக்கப்பட்ட குர்ஆன் நபி(சல்) அவர்களுக்கு இறுதியாக ஓதிக்காண்பிக்கப்பட்ட குர்ஆன் அல்ல என்பது இவர்களின் பிரதான வாதம். அதற்கான விளக்கத்தை தகுந்த தரவுகளுடன் இந்த கட்டுரையில் விளக்கவுள்ளோம்.

உஸ்மான்(ரலி) அவர்களது தொகுப்புதான் அர்தத் அல் ஆகிரா

        நபி(சல்) அவர்களுக்கு ஜிப்ரீல் (அலை) அவர்களால் இறுதி வருடத்தில் ஓதிகாண்பிக்கப்பட்ட  அர்தத் அல் ஆகிரா- இறுதி ஓதல் என்றால் என்ன என்பதை நாம் விளங்கிகொள்ளவது அவசியமாகும்.
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்:
      ஒவ்வோர் ஆண்டுக்கொரு முறை (வானவர் ஜிப்ரீல் அதுவரை அருளப்பெற்ற) குர்ஆன் வசனங்களை நபி(ஸல்) அவர்களுக்கு (மொத்தமாக) ஓதிக்காட்டுவது வழக்கம். நபி(ஸல்) அவர்கள் இறந்த ஆண்டில் இரண்டுமுறை அவர்களுக்கு (ஜிப்ரீல்) ஓதிக்காட்டினார்கள். நபி(ஸல்) அவர்கள் ஒவ்வோர் ஆண்டும் (ரமளான் மாதத்தின் இறுதிப்)பத்து நாள்கள் 'இஃதிகாஃப்' மேற்கொள்வது வழக்கம். அவர்கள் இறந்த ஆண்டு, (ரமளானில்) இருபது நாள்கள் 'இஃதிகாஃப்' மேற்கொண்டார்கள். (புஹாரி 4998)

    மேற்குறிபிட்ட செய்தியில் கூறப்பட்டது போல் நபி(சல்) அவர்கள் இறந்த வருடத்தில் குர்ஆன் இரண்டுமுறை நபி(சல்) அவர்களுக்கு ஜிப்ரைல்(அலை) அவர்களால் ஓதிக்காண்பிக்கப்பட்டு சரி பார்க்கப்பட்டது. இந்த இறுதி ஓதல்தான் அர்தத் அல் ஆகிரா என்று அழைக்கப்படுகிறது. இது குறித்த நபித்தோழரான சமூரா(ரலி) பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்
 
أَخْبَرَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدِ بْنِ نُصَيْرٍ الْخَلَدِيُّ، ثنا عَلِيُّ بْنُ عَبْدِ الْعَزِيزِ الْبَغَوِيُّ، بِمَكَّةَ، ثنا حَجَّاجُ بْنُ الْمِنْهَا، قَالَ: ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ سَمُرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: عُرِضَ الْقُرْآنُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَرَضَاتٍ فَيَقُولُونَ: إِنَّ قِرَاءَتِنَا هَذِهِ هِيَ الْعَرْضَةُ الْأَخِيرَةُ
சமூரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி(சல்) அவர்களுக்கு பல முறை குர்ஆன் ஓதிகாண்பிக்கப்பட்டது. இன்று நமது ஓதல்தான் அர்தத் அல் ஆகிரா என்று கூறப்படுகிறது. ( முஸ்தத்ரக் அல் ஹாக்கிம் 2904)
    மேற்குறிபிட்ட இறுதி ஓதல் குறித்து பேசுவதோடு வேறு ஒரு அதிகப்படியான தகவலையும் தருகிறது. மேற்குறிபிட்ட செய்தியில் அல்ஹசன் அல் பஸரி வழியாக சமூரா(ரலி) அறிவிக்கிறார்கள். அல்ஹசன் அல் பஸரி கிபி 642ல் பிறந்தவர் ஆவார். உஸ்மான(ரலி) அவர்களது ஆட்சிக்காலம் கிபி 644- 656 வரையிலானது கிபி 650ல் தான் குர்ஆனை தொகுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அல்ஹசன் அல் பஸரி அவர்களிடம் சமூரா(ரலி) (மரணம் கிபி 680) குறிப்பிட்டு கூறுவதாக மேற்குறிபிட்ட செய்தி இடம் பெறுகிறது. ஆக மேற்குறிபிட்ட செய்தியானது உஸ்மான்(ரலி) அவர்களின் தொகுப்பு குறித்துதான் பேசுகிறது என்பது நமக்கு தெளிவாக நிருபனமாகிறது. 

حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَلِيٍّ، عَنِ ابْنِ عُيَيْنَةَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، وَعَنِ ابْنِ سِيرِينَ، عَنْ عَبِيدَةَ، قَالَ: الْقِرَاءَةُ الَّتِي عُرِضَتْ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْعَامِ الَّذِي قُبِضَ فِيهِ هِيَ الْقِرَاءَةُ الَّتِي يَقْرَؤُهَا النَّاسُ الْيَوْمَ فِيهِ 

   உபைதா அவர்கள் கூறியதாவது: 
            நபி(சல்) அவர்கள் இறந்த ஆண்டில் ஓதப்பட்டதுதான் நபி(சல்) அவர்களது ஓதல் ஆகும். அதைதான் இன்று மக்கள் ஓதி கொண்டிருக்கிறார்கள். (முஸன்னஃப் இப்னு அபிஷைபா 30291)
       மேலும் உபைதா அவர்கள் அபூபகர்(ரலி) அவர்களது காலத்தின் குர்ஆன் தொகுப்பையும் கண்டவர், உஸ்மான்(ரலி) காலத்தின் குர்ஆன் தொகுப்பையும் கண்டவர் ஆவார்.
     ஆக மேற்குறிபிட்ட இரண்டு செய்திகளும் ஒரு விசயத்தை தெளிவாக உணர்த்துகின்றன. உஸ்மான்(ரலி) அவர்களின் தொகுப்பானது நபி(சல்) அவர்களது குர்ஆனின் இறுதி ஓதல்தான் என்பதை உறுதிப்பட நிறுவுகிறது. மேலும் உஸ்மான்(ரலி) அவர்களால் குர்ஆனை தொகுக்க நியமிக்கப்பட்ட ஜைத் பின் ஸாபித்(ரலி) அவர்களின் ஓதல்தான் நபி(ஸல்) அவர்களது இறுதி ஓதலும், அன்றைய பெரும்பான்மையினரின் ஓதலும் ஆகும். பெரும்பான்மை மக்களின் ஓதல் இஸ்லாமிய வரலாற்றில் கிராத் அல் ஆம்மா என்று அழைக்கப்படுகிறது.

ﻭﺭﻭﻱ ﻋﻦ ﺃﺑﻲ ﻋﺒﺪ اﻟﺮﺣﻤﻦ اﻟﺴﻠﻤﻲ، ﻗﺎﻝ: ﻛﺎﻧﺖ ﻗﺮاءﺓ ﺃﺑﻲ ﺑﻜﺮ، ﻭﻋﻤﺮ، ﻭﻋﺜﻤﺎﻥ، ﻭﺯﻳﺪ ﺑﻦ ﺛﺎﺑﺖ، اﻟﻤﻬﺎﺟﺮﻳﻦ ﻭاﻷﻧﺼﺎﺭ ﻭاﺣﺪﺓ، ﻛﺎﻧﻮا ﻳﻘﺮءﻭﻥ ﻗﺮاءاﻟﻌﺎﻣﺔ، ﻭﻫﻲ اﻝﻗﺮاءاﻟﺘﻲ ﻗﺮﺃﻫﺎ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻋﻠﻰ ﺟﺒﺮﻳﻞ ﻣﺮﺗﻴﻦ ﻓﻲ اﻟﻌﺎﻡ اﻟﺬﻱ ﻗﺒﺾ ﻓﻴﻪ، ﻭﻛﺎﻥ ﻋﻠﻰ ﻃﻮﻝ ﺃﻳﺎﻣﻪ ﻳﻘﺮﺃ ﻣﺼﺤﻒ ﻋﺜﻤﺎﻥ، ﻭﻳﺘﺨﺬﻩ ﺇﻣﺎﻣﺎ. ﻭﻳﻘﺎﻝ: ﺇﻥ ﺯﻳﺪ ﺑﻦ ﺛﺎﺑﺖ ﺷﻬﺪ اﻟﻌﺮﺿﺔ اﻷﺧﻴﺮﺓ اﻟﺘﻲ ﻋﺮﺿﻬﺎ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻋﻠﻰ ﺟﺒﺮﻳﻞ، ﻭﻫﻲ اﻟﺘﻲ ﺑﻴﻦ ﻓﻴﻬﺎ ﻣﺎ ﻧﺴﺦ ﻭﻣﺎ ﺑﻘﻲ.

      அபூபகர், உமர், உஸ்மான் , ஸைத் இப்னு ஸாபித், அனைத்து முஹாஜிர்கள் மற்றும் அன்ஸாரிகளின் ஓதல் ஒன்றுதான். அவர்கள் குர்ஆனை கிராத் அல் ஆம்மா (பெரும்பான்மை மக்களின் ஓதல்) அடிப்படையில் ஓதினார்கள். இதே ஓதல்தான் நபி(சல்) அவர்கள் மரணித்த ஆண்டில் ஜிப்ரீல் அவர்களால் இரண்டு முறை ஓதிக்காண்பிக்கப்பட்டது. ஸைத் இப்னு ஸாபித் அவர்கள், இந்த இறுதி ஓதலின் (அர்தா அல் ஆகிரா) போது அங்கிருந்தார்கள். அவர் மரணிக்கும் வரை இந்த ஓதலைத்தான் மக்களுக்கு கற்பித்தார்கள்       ( அறிவிப்பாளர்: அபூ அப்திர் ரஹ்மான் அஸ்ஸலாமி, ஸரஹ் ஸுன்னா 4/525)

மேலும் ஸைத் இப்னு ஸாபித் (ரலி) அவர்களை ஒருமுறை உமர்(ரலி) அவர்கள் ஓதச் சொல்லி, அதைதான் தாங்களும் ஓதுவதாகவும் குறிப்பிடுகிறார்கள்.

ﻓﻘﺎﻝ ﻋﻤﺮ ﺑﻦ اﻟﺨﻄﺎﺏ ﻟﺰﻳﺪ ﺑﻦ ﺛﺎﺑﺖ اﻗﺮﺃ ﻳﺎ ﺯﻳﺪ ﻓﻘﺮﺃ ﺯﻳﺪ ﻗﺮاءاﻟﻌﺎﻣﺔ ﻓﻘﺎﻝ ﻋﻤﺮ اﻟﻠﻬﻢ ﻻ ﺃﻋﺮﻑ ﺇﻻ ﻫﺬا

     ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களை ஓத உமர் இப்னு அல்கத்தாப்(ரலி) கட்டளை இட்டார்கள். ஸைத்(ரலி) அவர்கள் பெரும்பான்மை மக்களின் ஒதலை(கிராத் அல் ஆம்மாவை) ஓதிக்காட்டினார்கள். அதற்கு உமர் (ரலி) இதைத்தான் நானும் அறிவேன் என்று கூறினார்கள்( தாரிக் திமிஸ்க் லி இப்னு அஸாகிர் 7/338, 68/102)
        மேற்குறிபிட்ட ஆதாரங்கள் கிராத் அல் ஆம்மா  - பெரும் பான்மை மக்களின் ஓதலில்தான் ஸைத் இப்னு ஸாபித்(ரலி) குர்ஆனை தொகுத்தார்கள் என்பதை விளக்க போதுமானது. மேலும் இந்த கிராத் அல் ஆம்மா தான் நபி(சல்) அவர்களின் இறுதி ஓதல். அன்றைய சமூகத்தின் பெரும்பான்மை ஓதலும் ஆகும். 




          மேற்குறிபிட்ட உதாரணங்களில் இன்றிருக்கும் பெரும்பான்மை மக்களின் ஓதல் நபி(சல்) அவர்களின் இறுதி ஓதலான கிராத் அல் ஆம்மாவுடன் ஒத்திருப்பதை காண இயலும். சென்ற தொடரில் குர்ஆன் என்பது வெகுஜன ஓதல்-கேட்டல் முறை மூலமாக ஒவ்வொரு தலைமுறையிலும் கடத்தப்பட்டது என்பதை வரலாற்று ஆவணங்களின் மூலம் விளக்கியிருந்தோம். 
    
    அதனால் இன்றிருக்கும் பெரும்பான்மை மக்களின் ஒதல்தான் சென்ற தலைமுறையின் பெரும்பான்மை ஓதாலாக இருந்திருக்கும். குர்ஆன் கிராத் பரவலில் உலகளாவிய அளவில் எந்த காலத்திலும் அரசியல் அழுத்தம் இருந்ததில்லை. உஸ்மான்(ரலி) அவர்களது காலத்தில் கூட உலகின் சிறு பகுதிதான் இஸ்லாமிய ஆளுகையில் இருந்தது என்பது குறிப்பிடதக்கது. மேலும் பாரசீகத்தில் தபரி குறிப்பிடும் கிராத் அல் ஆம்மாதான் இஸ்லாமிய ஸ்பெயினின் குர்துபி குறிப்பிடும் கிராத் அல் ஆம்மா.அந்த பெரும்பான்மை ஓதல்தான் இன்றைய பெரும்பான்மை ஓதலாக இருக்கிறது என்பதை மேலே இருக்கும் தஃப்ஸீர் குறிப்புகளால் புரிந்து கொள்ள முடியும்.  குர்ஆன் , வெகுஜன ஓதல்-கேட்டல் முறை மூலமாக ஒவ்வொரு தலைமுறையிலும் கடத்தப்பட்டது என்பதால் இன்றைய பெரும்பான்மை ஓதல்தான் 1400 வருடங்களுக்கு முந்தைய மக்களின் பெரும்பான்மை ஓதலாக இருந்தது என்பதை உறுதியாக கூறமுடியும். நபி(சல்) அவர்களது இறுதி ஓதல்தான் அன்றைய சமூகத்தின் மற்றும் அடுத்து வந்த சமூகத்தின் பெரும்பான்மையினர் ஓதல் என்பதையும் அதனையே ஸைத் பின் ஸாபித்(ரலி) அவர்கள் உஸ்மான்(ரலி) காலத்தில் தொகுத்தார்கள்  என்பது வரலாற்றில் தெளிவாக பதியப்படுள்ளது என்பதை மேலே விளக்கியுள்ளோம். 

      இத்தகைய தரப்படுத்துதல் துள்ளியமாக இஸ்லாமிய அறிஞர்களால் வரலாற்றில் பதியப்பட்டுள்ளதால்தான் எது பெரும்பான்மை ஓதல் என்பதையும் எது மாறுபட்ட ஓதல் என்பதையும் இன்றும் சரியாக பிரித்து அறிய முடிகிறது.     மேலும் இத்தகைய மாறுபட்ட ஓதல் முறைகள் குறித்து பேசும் நூல்களும், தஃப்ஸீர்களும் இஸ்லாமிய வரலாற்றில் ஏராளம். இஸ்லாமியர்கள் 12 நூற்றாண்டுகளுக்கு முன்பே குர்ஆனின்   " Variant Reading"களை இனம் கண்டு அதை பிரித்து அறிவித்திருப்பது இஸ்லாமிய சமூகம் குர்ஆனின் மீது கொண்ட அக்கறையை பறைசாற்றுவதாய் உள்ளது. அல்லாஹ் மிகைத்தவன்....  
 

Sunday, October 25, 2020

உள்ளத்தில் பாதுக்காக்கப்பட்ட அல் குர்ஆன்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
உள்ளத்தில் பாதுக்காக்கப்பட்ட அல் குர்ஆன்

    குர்ஆனின் பாதுகாப்பு குறித்தும் அது எவ்வாறு பாதுக்காக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் இந்த இஸ்லாமிய சமூகம் நன்கு அறியும். ஆயினும் இன்று முளைத்திருக்கும் சில மிசனரிகளும் தங்களை முன்னாள் முஸ்லீம்கள் என்று கூறித்திரியும் சிலரும் இஸ்லாம் மீது கொண்ட காழ்ப்புணர்சியாலும் , ஃபோபியாவினாலும் குர்ஆன் எந்த வழியிலும் பாதுக்காக்கப்பட வில்லை என்று அவதூறு பரப்பி திரிகின்றன. ஆனால் அப்படி பரப்பி திரியும் அரைவேக்காடுகள் ஒரு விஷயத்தை கவனிக்கவோ பகுத்தறிவை கொண்டு சிந்திக்கவோ மறந்துவிட்டன.  எழுத்து வடிவிலும் ஓசை வடிவிலும் பாதுகாக்கப்படாத ஒரு ஏடு எப்படி பல கோடி முஸ்லீம்களிடம் அதுவும் உலகின் பல பகுதியில் வாழும் முஸ்லீம்களிடம் ஒரே மாதிரி இருக்கிறது என்பதை இவர்கள் பகுத்தறிவு ரீதியாக விளக்க வேண்டும். எந்த வழியிலும் பாதுகாக்கப்படாத ஒரு ஏடு பல கோடி மக்களின் கையில் ஒரே மாதிரி இருக்கிறது என்பது ஒரே இரவில் அனைவரிடமும் வந்துவிட வில்லை என்பதற்கு போதிய சான்று. ஆக இவர்களது வெத்து வாதத்தால் நம் கண் முன்பு இருக்கும் ஒரு விசயத்தை தெளிவாக விளக்க முடியவில்லை என்றால் இவர்களது வாதத்தில் மெகா சைஸ் ஓட்டை இருக்கிறது என்பது நிரூபனம் ஆகிறது. இந்த குர்ஆன் எப்படி பல கோடி முஸ்லீம் மக்களின் கையில் ஒரே போன்றுள்ளது என்பதற்கான அடிப்படையை இந்த கட்டுரையில் காணவுள்ளோம் இன்ஷா அல்லாஹ்.

குர்ஆன் மக்களின் உள்ளங்களில்: ஒரு வரலாற்று பார்வை

        குர்ஆன் எவ்வாறு ஓசை வடிவில் பாதுக்காப்படுகிறது என்பதற்கு முன்சென்ற தொடரில் கண்டிருக்கிறோம். இன்றும் உலகில் குர்ஆனை கோடிக்கணக்கான மக்கள் மனனமிட்டு வருவதை நாம் அறிவோம். இப்படி ஒவ்வொரு தலைமுறையிலும் கோடிக்கணக்கான மக்களினால் மனனமிடப்பட்டு இன்றும் குர்ஆன் பாதுக்காக்கப்படுகிறது. இது குறித்த சிறிய வரலாற்று சுருக்கம்.

நபி(சல்) அவர்கள் உருவாக்கிய ஸுஃபா கல்வி நிலையங்கள் 


         நபி(சல்) அவர்கள் மதீனாவிற்கு சென்ற பிறகு அவர்கள் உருவாக்கிய நபவீ பள்ளியில் முதன் முதலில் ஸுஃபா கல்வி நிலையத்தை உருவாக்கினார்கள். அங்கு தங்கி இருப்பவர்கள் அஸ்ஹாபுஸ்ஸுஃபா- ஸுஃபா வாசிகள் அல்லது திண்ணை தோழர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். இவர்கள் ஏழைத்தோழர்கள், பயணிகள் என்று அனைவரையும் உள்ளடக்கியவர்கள். இவர்களின் முக்கிய பணி நபி(சல்) அவர்களிடம் இருந்து குர் ஆனை கற்பது, மார்க்க விளக்கங்களை கற்பது. அதே போல் போர்களிலும் இவர்களே முன்னின்றனர். இத்தகைய திண்ணை தோழர்களில் ஒருவர்தான் அதிக ஹதீஸ்களை அறிவித்த அபூஹுரைரா(ரலி) அவர்களும். மேலும் இந்த திண்ணையின் கொள்ளளவு குறித்து ஹதீஸ்களில் காணமுடிகிறது. ஜைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களது திருமணத்தின் போது இந்த திண்ணை நிறைந்ததாகவும் அங்கு சற்று ஏறக்குறைய 300 நபர்கள் இருந்ததாகவும் அனஸ் ரலி அவர்கள் பின்வரும் செய்தியில் அறிவிக்கிறார்கள்.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

….…………..அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதை (ஓரிடத்தில்) வை" என்று கூறிவிட்டு, "நீ சென்று எனக்காக இன்ன மனிதரையும் இன்ன மனிதரையும் இன்ன மனிதரையும் மற்றும் நீ சந்திப்பவர்களையும் அழைப்பாயாக!" என்று கூறி, சிலரது பெயரைக் குறிப்பிட்டார்கள். அவ்வாறே அவர்கள் பெயர் குறிப்பிட்டவர்களையும் நான் சந்தித்தவர்களையும் அழைத்தேன். -இதை அறிவிப்பவரான அபூஉஸ்மான் அல்ஜஅத் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் அனஸ் (ரலி) அவர்களிடம், "அவர்கள் எத்தனை பேர் இருந்தார்கள்?" என்று கேட்டேன். அதற்கு, "ஏறக்குறைய முன்னூறு பேர் இருந்தார்கள்" என அனஸ் (ரலி) அவர்கள் விடையளித்தார்கள். (தொடர்ந்து அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:) என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அனஸ்! அந்தப் பாத்திரத்தை எடு" என்றார்கள். அப்போது மக்கள் வந்து நுழைந்தனர். திண்ணையும் (அஸ்ஸுஃபா) அறையும் நிரம்பியது……(முஸ்லிம் 2803 )

           மேலும் இந்த திண்ணைவாசிகளை குர்ஆனை கற்கவும் , ஓதிகாட்டவும் தொடர்ந்து  நபி(சல்) அவர்கள் ஆர்வமூட்டினார்கள். 

உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலின்) திண்ணையில் இருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்தார்கள். அப்போது "உங்களில் எவர் ஒவ்வொரு நாள் காலையிலும் "புத்ஹான்" அல்லது "அகீக்" (சந்தைக்குச்) சென்று பாவம் புரியாமலும் உறவைத் துண்டிக்காமலும் பருத்த திமில்கள் கொண்ட இரு ஒட்டகங்களுடன் திரும்பி வருவதை விரும்புவார்?" என்று கேட்டார்கள். "நாங்கள் (அனைவருமே) அதை விரும்புவோம்" என்று நாங்கள் பதிலளித்தோம். அதற்கு அவர்கள், "உங்களில் ஒருவர் காலையில் பள்ளிவாசலுக்குப் புறப்பட்டுச் சென்று அல்லாஹ்வின் வேதத்திலிருந்து இரு வசனங்களைக் "கற்றுக்கொள்வது" அல்லது "ஓதுவது" இரு ஒட்டகங்களைவிடச் சிறந்ததாகும். மூன்று வசனங்கள் மூன்று ஒட்டகங்களைவிடவும்,நான்கு வசனங்கள் நான்கு ஒட்டகங்களைவிடவும் சிறந்ததாகும். இவ்வாறு எத்தனை வசனங்கள் ஓதுகின்றாரோ அந்த அளவு ஒட்டகங்களைவிடச் சிறந்ததாக அமையும்" என்று கூறினார்கள்.  (முஸ்லிம் 1469)

     மேலும் இங்கு கல்வி கற்போர் இஸ்லாம் குறித்து கற்பிக்கவும் அனுப்பி வைக்கப்பட்டார்கள். உதாரணமாக ஹிஜ்ரி 4 ம் ஆண்டு இவ்வாறு குர்ஆனை கற்ற 70 பேரை இஸ்லாமை கற்பிக்க இணைவைப்போரிடம் அனுப்பினார்கள் அந்த எழுவது பேரையும் அந்த இணைவைப்பாளர்கள் படுகொலை செய்துவிட்டனர்.
ஆஸிம் அறிவித்தார்.
குனூத் பற்றி அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் 'குனூத் (நபி(ஸல்) அவர்கள் காலத்தில்) நடைமுறையில் இருந்தது தான்' என்று விடையளித்தார்கள். ருகூவுக்கு முன்பா? பின்பா? என்று கேட்டேன். அதற்கு 'ருகூவுக்கு முன்பு தான்' என்று கூறினார்கள். ருகூவுக்குப் பிறகு என்று நீங்கள் கூறினார்கள் என ஒருவர் எனக்குக் கூறினாரே என்று அனஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன். 'அவர் பொய் சொல்லி இருக்கிறார். நபி(ஸல்) அவர்கள் ருகூவுக்குப் பிறகு ஒரு மாதம்தான் குனூத் ஓதினார்கள். நபி(ஸல்) அவர்கள் குர்ஆனை மனனம் செய்த சுமார் எழுபது நபர்களை இணை வைப்பவர்களில் ஒரு கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள். இவர்கள் அந்த முஷ்ரீகீன்களைவிடக் குறைந்த எண்ணிக்கையினராக இருந்தனர். அவர்களுக்கும் நபி(ஸல்) அவர்களுக்குமிடையே ஓர் உடன்படிக்கையும் இருந்தது. (அந்த முஷ்ரிகீன்கள் எழுபது நபர்களையும் கொன்றுவிட்டனர்.) அப்போது நபி(ஸல்) அவர்கள் முஷ்ரீகீன்களுக்கு எதிராக ஒரு மாதம் குனூத் ஓதினார்கள் என்று அனஸ்(ரலி) விடையளித்தார்கள். (புகாரி 1002) 
     மதீனா வாழ்கையின் ஆரம்ப காலத்திலேயே 70 நபர்கள் அதுவரை இறங்கிய குர்ஆனை மனனமிட்டிருந்தார்கள் என்பதை அறிய முடிகிறது. இவ்வாறாக இருந்த தோழர்களின் எண்ணிக்கையை ஒவ்வொரு வரலாற்று ஆசிரியரும் பலவாறாக குறிப்பிடுகிறார்கள். அதாவது 100-900 பேர் வரை திண்ணை தோழர்களின் எண்ணிக்கை இருந்ததாக கூறப்படுகிறது.

السمهودي أن أبا نعيم سرد أسماءهم في الحلية فزادوا على المائة 

அல்சம்ஹூதி கூறியதாவது : அபுநுஐம் அல் ஹிலாயாவில் அவர்களின் நூறு பேரின் பெயர்களை குறிபிட்டுள்ளார்கள்       (சியாரத் அல் நபவீ அல் ஸஹீஹா(1/260))

இது குறித்து கத்தானி அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்:

وقال قتادة بلغوا تسعمائة رجل 

கத்தாதா அவர்கள் (திண்ணை தோழர்களின்) எண்ணிக்கையை 900 எட்டும் என்று கூறுகிறார்கள். (அல் கத்தானி அவர்களது அல்தராதிப் அல் இதாரியா 1/367 ).
      நூற்றுக்கனாக்கனோர் நபி(சல்) அவர்களது காலத்திலேயே அவர்களிடம் இருந்து நேரடியாக குர்ஆனை கற்போராய் இருந்துள்ளனர் என்பது உறுதியாக அறிய முடிகிறது. இது போக நபிதோழர்கள் - நபிதோழர்களிடம் இருந்து கற்றவர்கள் என்று குர்ஆன் முழுமையாகவோ, பகுதிகளாகவோ நபி(சல்) அவர்களது காலத்திலேயே ஆயிரத்திற்கும் மேற்பட்டோரால் மனனமிடப்பட்டிருந்தது. 

நபிதோழர்களின் காலம்:


     நபி(சல்) அவர்களது காலத்திற்கு பின்னான காலத்திலும் நேரடியாக குர்ஆனை கேட்டு மனனமிடும் வழக்கம் தொடர்ந்தது. ஒவ்வொரு பள்ளிகளிலும் ஆயிரக்கணக்கான மக்கள் அதன் நன்மையை கருதி குர்ஆனை மனனமிடத்துவங்கினர். இது குறித்து இப்னு மஷ்காம்(ரஹ்) என்ற தாஃபி (நபிதோழர்களை கண்டவர்) பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

عن سام ابن مشكم قال: قال لي أبو الدرداء: اعدد من يقرأ عندي القرآن. فعددتهم ألفا وستمائة ونيفا، وكان, لكل عشرة منهم مقرىء 
    இப்னு மஷ்காம் கூறியதாவது: அபுதர்தா(ரலி) என்னிடம் கூறியதாவது:  இங்கு குர்ஆனை என்னோடு கற்பவர்களை எண்ணச் சொன்னார்கள். நான் எண்ணிய போது ஆயிரத்து ஆறுநூறாக இருந்தது. ஒவ்வொரு பத்து நபர்களுக்கும் ஒரு காரி இருந்தார்கள்.          (அல் தஹபியின் மாஃரிஃபத் அல் குர்ரா ப.எண்:20, இப்னு ஜாஸாரியின் கையத் அல் நிஹாயா ஃபீ தபக்கத் அல் குர்ரா 2480, 1/606-607)
மேற்குறிபிட்டவாறே வேறு ஒரு தாஃபியும் தெரிவிக்கிறார்.
قال سويد بن عبد العزيز: كان أبو الدرداء إذا صلى الغداة في جامع دمشق اجتمع الناس للقراءة عليه فكان يجعلهم عشرة عشرة وعلى كل عشرة عريفا، ويقف هو في المحراب يرمقهم ببصره، فإذا غلط أحدهم رجع إلى عريفه فإذا غلط عريفهم رجع إلى أبي الدرداء يسأله عن ذلك
சுவைத் இப்னு அப்துல் அஸீஸ் கூறியதாவது: அபுதர்தா(ரலி) பஜர் தொழுகையை டமாஸ்கஸ் பள்ளியில் நிறைவேற்றினால் மக்கள் குர் ஆனை ஓத கற்றுக்கொள்ள திரண்டு விடுவார்கள். அவர்களை பத்து நபர்களாக பிரித்து பத்து பேருக்கு ஒரு காரி என்று நியமிப்பார். மிஃராபில் நின்று அதை மேற்பார்வையிடுவார். இதில் ஓதுபவர் தவறிழைத்தால் அதை அந்த குழுவின் காரியிடம் தெரிவிப்பார்கள். காரி ஓதுவதில் தவறிழைத்தால் அபுதர்தாவிடம் முறையிடப்பட்டு அது குறித்து விளக்கப்படும். (தஹபியின் மாஃரிஃபத் அல் குர்ரா அல் கிபார் ப.எண்:20) 
          மேலும் பஸ்ராவில் நபித்தோழர்கள் காலத்தில் பின்வரும் நிலையை அறிய முடிகிறது. உமர்(ரலி) அவர்களது ஆட்சிக்காலத்தில் கிபி 639ல் பஸ்ரா நகரித்தின் கவர்னராக நியமிக்கப்பட்டவர் அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) ஆவார்கள். அவர்கள் உஸ்மான(ரலி) அவர்களது ஆட்சிகாலம் கிபி 644 வரை பொறுப்பில் இருந்தார்கள். கிட்டதட்ட நபி(சல்) அவர்கள் மரணித்து 10 ஆண்டுகளில் பஸ்ராவில் காணப்பட்ட நிலையை பின்வரும் செய்தி கூறுகிறது.

حَدَّثَنَا عَفَّانُ، قَالَ: حَدَّثَنَا وُهَيْبٌ، قَالَ: حَدَّثَنَا دَاوُدُ بْنُ أَبِي هِنْدٍ، عَنْ أَبِي حَرْبِ بْنِ أَبِي الْأَسْوَدِ، عَنْ أَبِيهِ قَالَ: جَمَعَ أَبُو مُوسَى الْقُرَّاءَ، فَقَالَ: لَا يَدْخُلَنَّ عَلَيْكُمْ إِلَّا مَنْ جَمَعَ الْقُرْآنَ ، قَالَ: فَدَخَلْنَا زُهَاءَ ثَلَاثِمِائَةِ رَجُلٍ فَوَعَظَنَا وَقَالَ: أَنْتُمْ قُرَّاءُ هَذَا الْبَلَدِ وَأَنْتُمْ، فَلَا يَطُولَنَّ عَلَيْكُمُ الْأَمَدُ فَتَقْسُو قُلُوبُكُمْ كَمَا قَسَتْ قُلُوبُ أَهْلِ الْكِتَابِ
அபுல் அஸ்வத்(ரஹ்) அவர்கள் கூறியதாவது: அபூமூசா அல் அஸ் அரீ(ரலி) அவர்கள் குர்ஆனை கற்றவர்கள் தவிர யாரும் வரக்கூடாது என்று குறிப்பிட்டு ஒரு கூட்டத்தை கூட்டினார்கள். (அவர்களது அழைப்பை ஏற்று) குர் ஆனை கற்றறிந்த முன்னூறு பேர் அவர்களிடம் வந்தார்கள். அப்போது அவர்களிடம் அபூமூசா(ரலி) அவர்கள் “இந்நகரத்தில் நீங்கள்தாம் ஓதுபவர்கள். காலம் நீண்டுவிட்ட போது வேதம் அருளப்பட்டவர்களின் உள்ளங்கள் இறுகிவிட்டதைப் போன்று உங்களுடைய உள்ளங்களும் இறுகிவிட வேண்டாம்” என்று கூறினார்கள். (முஸன்னஃப் இப்னு அபி ஷைபா 34823) 
        மேற்குறிபிட்ட சூழல் என்பது ஒரு சில பகுதியில் இருக்கும் நிலையே ஆகும். இப்படி அடுத்த தலைமுறையில் பல்லாயிரக்கணக்கானோர் குர்ஆனை மனனமிட்டனர் என்பது தெளிவாக வரலாற்றில் காணமுடிகிறது. பின்னாட்களில் குர்ஆனை கற்பிக்க பள்ளிவாசல்களுடன் இணைத்த குத்தப் பள்ளிகள் உருவாக்கப்பட்டன. பிறகு 10-11 ம் நூற்றாண்டுகளில் உயர்கல்வி இஸ்லாமிய சட்ட ஆய்வுகளுக்காக மதரஸாக்கள் உருவாகின, இவ்வாறு அமைக்கப்பட்ட மத்ரஸாக்கள் பக்தாதில் மட்டும் 10ந் நூற்றாண்டிற்குள் 300 ஆக இருந்தது என்று வரலாற்று ஆய்வாளர்கள் பதிவு செய்கிறார்கள்(1)

   இவ்வாறு மனனமிடப்பட்டு ஒவ்வொரு தலைமுறையிலும் அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட்டதால்தான்  இமாம் சுயூத்தி அவர்கள் குர்ஆன் குறித்த தனது இத்கான் ஃபீ உளூம் அல் குர்ஆன் என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார்கள்:

الْأَوَّلُ: لَا خِلَافَ أَنَّ كُلَّ مَا هُوَ مِنَ الْقُرْآنِ يَجِبُ أَنْ يَكُونَ مُتَوَاتِرًا فِي أَصْلِهِ وَأَجْزَائِهِ وَأَمَّا فِي مَحَلِّهِ وَوَضْعِهِ وَتَرْتِيبِهِ فَكَذَلِكَ عِنْدَ مُحَقِّقِي أَهْلِ السُّنَّةِ لِلْقَطْعِ بِأَنَّ الْعَادَةَ تَقْضِي بِالتَّوَاتُرِ فِي تَفَاصِيلِ مِثْلِهِ لِأَنَّ هَذَا الْمُعْجِزَ الْعَظِيمَ الَّذِي هُوَ أَصْلُ الدِّينِ الْقَوِيمِ وَالصِّرَاطِ الْمُسْتَقِيمِ مِمَّا تَتَوَفَّرُ الدَّوَاعِي عَلَى نَقْلِ جُمَلِهِ وَتَفَاصِيلِهِ فَمَا نُقِلَ آحَادًا وَلَمْ يَتَوَاتَرْ يُقْطَعُ بِأَنَّهُ لَيْسَ مِنَ الْقُرْآنِ قَطْعًا
குர்ஆன் முழுமையாகவும், பகுதியாகவும் தவறே ஏற்படாத அளவிற்கு எண்ணிலடங்கா அறிவிப்பாளர்களால் (முத்தாவாதீர்) அறிவிக்கப்பட்டது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அஹ்லுஸ் சுன்னாவை பொருத்தவரை அதன் அமைப்பும், அதன் வரிசை முறையும் எண்ணிலடங்கா அறிவிப்பாளர்களால் அறிவிக்கப்பட்டது , அதனால் அது எந்த சர்ச்சைக்கும் அப்பார்பட்டது. ஏனென்றால் எண்ணிலடங்கா அறிவிப்பாளர்களின் செய்தியை உள்ளடக்கிய ஒரு ஆவணம் குர்ஆன் என்பதால், அது அமோதிக்கப்பட்ட உண்மையாகும். அதன் விளையவாக எண்ணிலடங்கா அறிவிப்பாளர் இன்றி ஒற்றை அறிவிப்பாளர் வழியாக வந்த எதுவும் குர்ஆன் ஆகாது (இத்கான் ஃபீ உளூம் அல் குர்ஆன் 1/266)
    மேலே உள்ள கருத்தை எளிமையாக புரிவது என்றால் குர்ஆன் என்பது முதன்மை முத்தவாதீர் செய்தி. அதில் இருக்கும் செய்திகள், அதன் அமைப்பு அதன் வசன வரிசை உட்பட அதற்கு முரணாக வரும் எந்த செய்தியும் நிராகரிக்கத்தக்கது. 


மேலும் குர்ஆன் கற்றல் குறித்து மேற்கத்திய அறிஞர்களும் இந்த கருத்தைதான் முன்வைக்கின்றனர்.இது குறித்து வில்லியம் கிரகாம் என்ற ஹார்வர்ட் பல்கலை ஆசிரியர் குறிபிடும் போது பின்வருமாறு கூறுகிறார்,
ஒரு ஆங்கில அரபியே ஆய்வாளர் முன்பே குறிபிட்டது "குர் ஆனின் முதலில் இருந்து கடைசி வரை கேட்கப்படவேண்டிய புத்தகமே அன்றி வாசிக்கப்பட வேண்டிய புத்தகம் அல்ல. இஸ்லாமிய வரலாற்றின் 13 நூற்றாண்டுகளாய் எண்ணிலடங்கா மில்லியன் இஸ்லாமியர்களுக்கு அல் கிதாப் கற்கப்பட்டு, ஓதப்பட்டு பல தடவை ஓதல்களால் மணனமிடப்பட்டு வாய்வழியாக கடத்தப்பட்டிருக்கிறது (P.No: 79-80, Beyond the Written Word: Oral Aspects of the Scriptures in History of Religion by William A.Graham )

மேற்குறிபிட்ட அறிஞரின் கூற்றே அறிவுள்ள மனிதனுக்கு போதுமானது எப்படி இன்று உலகின் பல கோடி இஸ்லாமியர்களின் கையில் ஒரே வகையான குர்ஆன் இருக்கிறது என்பதை விளங்கிகொள்ள.  மேற்குறிபிட்ட வரலாற்று தரவுகள் நமக்கு பின்வரும் முடிவுகளை தருகின்றன.

1.குர்ஆன் என்பது ஒவ்வொரு தலைமுறையிலும் ஆயிரக்கணக்கானோர்களால் மனனமிடப்பட்டு ஏற்கப்பட்டது. மேலே இருக்கும் வரலாற்று ஆவணங்கள் தெளிவாக ஒன்றை விளக்குகிறது அதாவது குர்ஆன் ஆனது வெகுஜன ஓதல்- கேட்டல் முறை மூலமாக நபி(சல்) அவர்களது காலம் முதல் ஐவேலை தொழுகையின் மூலமும், கற்றுக்கொடுத்தல் மூலமும் ஒவ்வொரு தலைமுறையிலும் கடத்தப்பட்டுள்ளது. இன்றும் அதே முறை கையாளப்படுகிறது. 

2. குர்ஆனில் அறிவிப்பாளர் தொடர் என்பது அனைத்து கிரந்தகளில் கூறப்பட்ட முத்தவாதீரான ஹதீஸை விட அதிக அறிவிப்பாளர்களால் அறிவிக்கப்பட்டது என்பது வரலாற்று ரீதியாக நிரூவப்படுகிறது.

3. குர்ஆனின் வசனங்கள் வேறுபட்டதாக கூறும் எந்த ஹதீஸும் குர்ஆனை விட முத்தவாதீர் அல்ல. ஆக அந்த ஹதீஸ்கள் மறுக்கப்படுவதற்கு இதுவே போதிய காரணமாக இருக்கிறது. 

4.குர்ஆன், எழுத்துப்பிரதிகளை நம்பி கடத்தப்படவில்லை என்பது மேற்குறிப்பிடப்பட்ட செய்திகளை படிக்கும் யாரும் அறிந்து கொள்வார்கள். அதனால் இன்று கிடைக்கும் பண்டைய எழுத்துப்பிரதிகளில் இருக்கும் கூட்டல் கழித்தல்கள், மாற்றல்கள் எல்லாம் குர்ஆன் ஓதல் முறையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. (இத்தகைய எழுத்துப்பிரதிகள் குறித்து வரும் தொடர்களில் காணவிருக்கிறோம் இன் ஷா அல்லாஹ்)

5.எழுத்து வடிவிலும் பாதுக்காக்கப்படவில்லை, மனன முறையிலும் பாதுக்காக்கப்படவில்லை என்பது சரியென்றால், வேறுபட்ட மொழி பேசும், உலகின் பலபகுதிகளில் இருக்கும் பல கோடி முஸ்லீம் மக்களின்  குர்ஆன் ஓதல் எப்படி  ஒன்றாய் இருக்கிறது என்ற கேள்விக்கு, விடையளிக்க   மேற்குறிபிட்ட வரலாற்று ரீதியாக நிருவப்பட்ட கோட்பாடன்றி வேறு பகுத்தறிவு அடிப்படையிலான கோட்பாடுகள் எதுவும் இந்த அறைவேக்காட்டு இஸ்லாமோஃபோபுகளிடம் இருக்கிறதா ???????