பக்கங்கள் செல்ல

Friday, August 21, 2020

உடைந்த சிலுவை பாகம் 14- மெசோரெடிக் ஏடுகளும் பழைய ஏற்பாடும்

உடைந்த சிலுவை பாகம் 14- மெசோரெடிக் ஏடுகளும் பழைய ஏற்பாடும்

       நாம் சென்ற தொடரில் LXX குறித்து கண்டோம். அந்த கட்டுரையில் LXX நம்பகத்தன்மை எப்படி எல்லாம் கேள்வி குறியாக உள்ளது என்பதையும், அது குறித்த தேவாலய பிதாக்கள் மற்றும் வரலாற்று ஏடுஅளின் அடிப்படையில் அதில் இருக்கும் சிக்கல்களை நாம் விளக்கியிருந்தோம். இந்த தொடரில் இன்றிருக்கும் பிராட்டட்டண்ட்களால் ஏற்றுக்கொள்ளப்ட்ட தற்கால பைபிள் மொழியாக்கத்தின் மூலமாக கருத்தப்படும் மசோரெடிக் ஏடுகள் குறித்து காணவிருக்கிறோம். 

    இன்று இஸ்லாமியர்கள் பலர் தங்களது பதிவுகளில் பைபிளின் மூல மொழியான ஹீப்ருவில் இருக்கும் பைபிளின் மூல எழுத்துப்பிரதிகள் எதுவும் இருக்கிறதா என்று கேட்கின்றனர். அதற்கு பதிலளிக்க நுழைந்த தற்கால மிசனரிகள் ஆம் ஹீப்ருவில் இருக்கும் பைபிள் இன்றும் இருக்கிறது என்று கதை அளந்து வருகின்றன. அந்த பைபிளின் பழைய ஏற்பாட்டின் மூலமாக இருப்பது இந்த மசோரெடிக் ஏடுகள் தான்.

மசோரெடிக் டெக்ஸ்ட் வரலாற்று குறிப்பு:


     மசோரெடிக் டெக்ஸ்ட் என்பதின் வேர் சொல் மசோரத் என்ற ஹீப்ரு சொல்லில் இருந்து பிறந்ததாகும். இந்த மசோரெத் என்ற சொல்லிற்கு மரபுரை என்று பொருள். அதாவது   தலைமுறைதோரும் பாதுகாக்கப்பட்டு வாய்வழியாக கூறப்படும் செய்திகள் என்று பொருள். யூதர்கள் தங்களிடம் இருந்த பைபிள் ஏடுகளை எப்படி எழுத்து வடிவில் பாதுகாத்தனரோ அதே போன்று ஒலி வடிவிலும் பாதுகாத்தனர்.  எழுத்து வடிவிலான அன்றைய ஹீப்ருவானது வெறும் மெய்யெழுத்துகளை மட்டுமே கொண்டது. அதோடு எப்படி உயிர் குறியீடுகளை இணைக்கவேண்டும் என்பதை மசோரேட்டுகளே அறிந்திருந்தனர். இப்படி உயிர்மெய் குறியீடுகள் இடப்பட்ட ஏடுகளையும் தாங்கள் மனனமிட்டு பாதுகாத்து வந்த வாய்வழி மரபுரைகளையும் ஒன்றாக்கி மசோரேட்டுகள் கிபி 6ம் நூற்றாண்டில் இருந்து கிபி 10 நூற்றாண்டு வரை உருவாக்கியதுதான் இந்த மசோரெடிக் ஏடுகள்.(1)

யார் இந்த மசோரேட்டுகள் :


இந்த மசோரேட்டுகள் கிபி 6ல் இருந்து 11 ம் நூற்றாண்டுவரை பாபிலோன், டைபிரியஸ்(தப்ரியா) மற்றும் எருசலேம் ஆகிய பகுதிகளில் இயங்கி வந்த தல்மூத் பள்ளிகளில் யூத அறிஞர்களாக இருந்தவர்கள். இவர்களில் பென் ஆஸர் என்பவது குடும்பம் தான் மசோரெடிக் ஏடுகளை உருவாக்கியதில் பெரும் பங்காற்றின. பென் ஆசர் என்பவரது இயற்பெயர் ஆரோன் பென் மோசஸ் பெண் ஆசர் என்பதாகும். இவர் டைபிரிய தல்மூத் பள்ளியில் இருந்த யூத அறிஞர் ஆவார். இவரது காலம் கிபி 10ம் நூற்றாண்டு.

         மேலும் இவரது மசோரா குறித்து ரம்பம் என்று அறியப்படும் மைமோனிட் (11-12ம் நூற்றாண்டு) கூறும்போது

"All relied on it, since it was corrected by ben Asher and was worked on and analyzed by him for many years, and was proofread many times in accordance with the masorah, and I based myself on this manuscript in the Sefer Torah that I wrote".

      மைமோனிட் கூறும் போது இவரின் எழுத்து பிரதிகளைஅடிப்படையாக கொண்டே மிஸ்னாவை எழுதியாக கூறுகிறார்.   ஆக யூதர்கள் எழுதிய மசோரெடிக் ஏடுகளுக்கு யூதர்கள் கொடுத்த விளக்கம் தான் மிஸ்னா என்பது தெளிவாகிறது.மேலும் இன்றும் தோராவின் எழுத்துக்குறியீடுகள் பென் மோசஸின் குறியீடுகளை பின்பற்றிய மைமோனிட்டின் குறியீடுகளை அடிப்படையாக கொண்டதுதான்(2)

      ஆரோன் பென் மோசஸ் பென் ஆசர் அவரது மசோரெடிக் ஏடுதான் Aleppo Codex மற்றும் Leningrad Codex என்று எண்ணப்படுகிறது. இந்த இரண்டும் இஸ்லாமிய அப்பாஸியாக்களின் ஆட்சியின் போது தப்ரியா(Tiberias) ல் இருந்த தல்மூத் பள்ளிகளில் உருவாக்கப்பட்டதுதான்.

மசோரெடிக் ஏடுகளை கிறித்தவ உலகம் முழுதும் ஏற்கிறதா?

     
      மேலும் இந்த மசோரெடிக் ஏடுகளை கொண்டே முழுமையாக பழைய ஏற்பாட்டை ஏற்கமுடியுமா என்றால் அதிலும் கிறித்தவ உலகில் சிக்கல் நிழவுகிறது... அதாவது ஏசு குறித்த தீர்க்கதரிசனங்கள் எல்லாம் மறுக்கும்படியாக மசோரெடிக் ஏடுகள் பேசுகிறது. இதில் இருக்கும் கருத்துக்களை யூதர்கள் இருட்டடிப்பு செய்துள்ளார்கள் என்று கூறுகிறது. நாம் சென்ற தொடரில் ஜெரோமின் கருத்து குறித்து பார்த்தோம் அதாவது யூதர்கள் பல புத்தகங்களையே தூக்கிவிட்டார்கள் என்றும், அதே போல் மரியாள் கண்ணியல்ல என்று இருட்டடிப்பு அவர்களது ஏட்டில் செய்திருக்கிறார்கள் என்றும் விமர்சித்திருந்தார் என்பதை நாம் கண்டோம். இது போல் ஏராளமான மறுப்புக்களை தங்கள் வலைதளங்களில் யூதர்கள் தங்களது மசோரெடிக் ஏடுகளின் அடிப்படையில் கூறுவதை இன்றும் காண முடிகிறது.(3)

      இவ்வாறு அன்றைய எழுத்தர்களே தங்களிடம் கிடைத்த ஏடுகளை தாங்களே தங்களது கொள்கைக்கு ஏற்ப திருத்திக் கொண்டனர் என்று கூறப்படுகிறது.  இவ்வாறு எழுத்தர்கள் ஏடுகளை மாற்றி எழுதுவதை பெருமையாக "Emendations of Scribes"  என்று கூறுகிறார்கள்.(4)

       இதனால்தால் இன்றும் ரஸ்யாவின் ஈஸ்டர்ன் ஆர்தோடக்ஸ்கள் மசோரெடிக் ஏடுகளை மறுத்துவருகின்றனர் . செப்டகணை ஏற்கின்றனர். ஆனால் அமெரிக்க வெஸ்டர்ன் சர்ச்சுகள் மசோரெடிக் ஏடுகளை ஏற்கின்றனர். இன்று மசொரெடிக் ஏடுகளை அடிப்படையாக கொண்டு KJV, NKJV, NLT, ESV, NASB, NIV உள்ளிட்ட ஆங்கில மொழியாக்கம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது...

இந்த நிலையில் இருக்கும் ஏடுகள்தான் இவர்களது மூலப்பிரதியா?????️

Reference:
1.Chapter 4: Copying and Transmitting of the Text Textual Criticism of the Hebrew Bible by Emanuel Tov, Second Revised edition
2.Encyclopedia Judaica vol:13, P.No.648-650
3.https://langfocus.com/language-features/how-different-are-modern-hebrew-and-biblical-hebrew/
4.https://www.jewishvirtuallibrary.org/aaron-ben-moses-ben-asher
5.https://www.britannica.com/topic/Masoretic-text
6.http://www.aleppocodex.org/links/10.html
7.https://russian-faith.com/explaining-orthodoxy/russian-bibles-are-totally-different-american-ones-heres-why-n1470



No comments:

Post a Comment