பக்கங்கள் செல்ல

Friday, May 8, 2020

அறிவியலில் மற்றும் வேலைவாய்ப்பில் அதிரடி வளர்ச்சி காணும் இன்றைய முஸ்லீம் பெண்கள்!

அரபு நாடுகள் முதல் அமெரிக்கா வரை அனைத்து துறைகளிலுமான முஸ்லீம் பெண்களின் அதிரடியான வளர்ச்சி, உலக பொருளாதாரத்தில் ட்ரில்லியன் டாலர் மார்கெட்டாக உலக பொரூளாதார சங்கம்   அறிவித்துள்ளது. (World Economic Forum)

ஒரு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வரமாட்டார்கள் என்று கருதப்பட்ட முஸ்லீம் பெண்கள், அறிவியல் துறையில் சாதனைப் படைத்து வருவது அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளது.


உலக பொருளாதார சங்கம், முஸ்லீம் பெண்களின் அபாரமான வளர்ச்சி குறித்து  இந்த பத்து குறிப்புகளை தந்துள்ளது:

அறிவியலில் மற்றும் வேலைவாய்ப்பில் அதிரடி வளர்ச்சி காணும் இன்றைய முஸ்லீம் பெண்கள்!
Tahani Amer, Nasa
இன்றைய இளைய முஸ்லிம்கள், இஸ்லாமிய வரலாற்றிலேயே மிக உயர்ந்த கல்வித்திறனை கொண்டுள்ளார்கள். புதிய அணுகுமுறைகளோடு, நவீன தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளார்கள்.


உலக கிராமத்தில் முஸ்லிம்கள் தான் மற்றவர்களை விட வயதில் இளையவர்களாக உள்ளனர்.

"உலக மக்களின் சராசரி வயது 28.          உலக முஸ்லிம்களின் சராசரி வயது 23."

    1.  முஸ்லீம் உலகில், பல்கலைக்கழக மாணவர்களில்
         பெண்கள் தான் இப்போது பெரும்பான்மையாக உள்ளனர்.

     2. STEM education (Science, Technology, Engineering and Mathematics ) துறையில் 
முஸ்லீம் பெண்களின் பங்களிப்பு நான்காவது தொழில்துறை புரட்சிக்கு வழிவகுத்துள்ளது. ஐந்து நாடுகளில் ஆண்களைவிட அதிகமாக பெண்கள் தான் இந்தத் துறையில் பங்கேற்றுள்ளனர். அதில் இரண்டு நாடுகள் புரூணை மற்றும் குவைத்.

3. கடந்த ஆயிரம் ஆண்டுகளிலே முதன்மையாக, ஐந்து கோடிக்கும் அதிகமான முஸ்லீம்  பெண்கள் வேலை வாய்ப்புகளில் பங்கேற்றுள்ளனர் 

4. அவர்களின் ஒருங்கிணைந்த வருவாய், முஸ்லீம் பெண்களை உலகின் 16 வது பணக்கார நாடாக மாற்றும்

Dr. Hina ChaudhryDirector of Cardiovascular Regenerative Medicine 

5. இந்த பொருளாதார புரட்சிக்கு சில வரலாற்று முன்மாதிரிகள் உள்ளன. 
முஸ்லீம் உலகெங்கிலும் உழைக்கும் பெண்களின் அதிரடியான  உயர்வு புதியது என்றாலும், இன்றைய லட்சிய வணிகப் பெண்களின் முன்னேற்றத்திற்கு  ஒரு வரலாற்று  முன்மாதிரியைக்  காணலாம். முதன் முதலில் இஸ்லாத்தை ஏற்றவர், கதிஜா என்ற தொழிலதிபர். அவர் நபிகள் நாயகத்தை வேலைக்கு அமர்த்தி மெக்காவிலிருந்து சிரியாவிற்கு ஒரு வர்த்தக பணிக்கு அனுப்பினார். பின்னர் நபிகள் நாயகத்தை  அவர் திருமணம் செய்து கொண்டதோடு மட்டுமில்லாமல், இஸ்லாத்திற்க்காக அதிக நிதி உதவியையும் செய்தார்.

6. உலகமயமாக்கல், தொழில்நுட்பம், லட்சியம் மற்றும் பொருளாதாரத் தேவை ஆகியவை முஸ்லிம் உலகின் வளர்ந்து வரும் சந்தைகளில் உழைக்கும் பெண்களின் எழுச்சிக்கு ஒரு 'சரியான புயலை' உருவாக்கியுள்ளன.

7. வேலை மற்றும் குடும்பப் பொறுப்புகள் விஷயத்தில், பெண்கள் இன்னும் பெரும்பாலான பொறுப்பைச் சுமக்கிறார்கள்.

8. தொழில்துறையினர் இந்த புதிய போக்கை ஏற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். சட்டமியற்றுபவர்கள் இதை ஏற்றுக்கொள்வதில் விரைவு காட்ட வேண்டும் 
Cryptologist Hoda Al Khzaimi is a leader in cybersecurity research

9. தற்காலிக  அல்லது ஒப்பந்த அடிப்படையிலான வேலை வாய்ப்புகள் (Gig platforms) மற்றும் மின்-வணிகம் ( e-commerce) போன்ற துறைகள் முஸ்லீம் பெண்களுக்கு முன்பில்லாத வகையில் அதிகமான பொருளாதார வாய்ப்புகளைக் கொடுக்கின்றன 

10. இதன் தாக்கங்கள், முஸ்லீம் நாடுகளின் எல்லைகளைத் தாண்டியும் எதிரொலிக்கும்.



Ref:

Hina Chaudhry - Medical Scientist


"இறைவனுக்கு உண்மையில்  நன்றியுடன் நடந்துகொண்டால், அனைத்து உயிரினங்களுடனும் நிச்சயம் அன்பு செலுத்துவீர்கள். கல்வி தான் அனைத்து வாய்ப்புகளின் திறவுகோல். பிறருக்கு இரக்கத்தோடும், கருணையோடும் உதவி செய்யுங்கள்"  - Tahani Amer - Nasa

Dr. Hoda Al Khzaimi (Phd in Cryptogrpahy, Cyber Security)

Working Muslim women are a trillion-dollar market - World Economic forum

Fifty Million Rising Generation By Saadia Zahidi

No comments:

Post a Comment