"மற்றவர்களின் இதயங்களை வென்றடுப்பது எப்படி" என்று தேடினால் ஹார்வார்ட் பல்கலை கழகத்திலிருந்து மோடிஜி வரை அவரவரின் அறிவுக்கு ஏற்ப பல வழிகளை சொல்வார்கள் ஆனால் எந்தவித அறிவுரையும் இல்லாமல் வெறும் செய்கைகளின் மூலம் மட்டும் பல தேச மக்களை ஒரே நேரத்தில் வென்றெடுக்க முடியமா என்றால் சாத்தியமே.
இதோ ஒரு உண்மைச் சம்பவம்:
நபியின் பள்ளியில் ஜனாஸாக்கள் (இறந்தவர்களின் சடலங்கள்) கொண்டுவரப்படுகின்றன. யார், எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது சொல்லப்படுவதில்லை.
அங்கெ உள்ள அனைத்து மக்களும் அவர்களுக்காக தொழுகை நடத்துகின்றனர். எப்படி அடக்கம் செய்கிறார்கள் என்பதைக் காண நானும் பின்தொடர்ந்தேன்.
தொழுகை முடிந்தவுடன் நான்கு ஜனாஸாக்கள் கொண்டு செல்லப்பட்டன. அந்த ஜனாஸாக்களை சுமந்து செல்ல கடும் போட்டி நடக்கின்றது. ஒவ்வொருவருக்குமென தனியாக குறிப்பிட்ட இடம் இல்லை. எங்கே காலியாக உள்ளதோ அங்கெ அடக்கம் செய்கின்றனர்.
அடக்கம் செய்யும் இடத்தில் பொறுமையாக நின்று ஒவ்வொருவரும் தன்னால் இயன்ற உதவிகளை செய்து, இறுதியில் அமைதியாக கலைந்து செல்கின்றனர்.

நான் யாரோ ஒருவன்.. ...என்னை சுமந்து சொல்ல ஏன் இந்த மக்கள் போட்டி போடுகின்றனர்? முகமறியா எனக்காக அவர்கள் பிரார்த்தனை செய்வது ஏன்? நபி அவர்களின் அடக்கத்தலத்திற்கு மிக அருகாமையில் அமைந்துள்ள மேலும் புகழ் பெற்ற நபித்தோழர்கள் அடங்கியுள்ள இடத்தில் அந்நியனாகிய என்னை எப்படி இங்கே அடக்கம் செய்கின்றார்கள்?
பொதுவாக இறந்தவரின் சமூக, மத அந்தஸ்த்தை வைத்து அவரின் இறப்பு தொடர்பான காரியங்களும், அடக்கத்தலங்களும் வேறுபடுவது தான் உலகில் நாம் காணும் ஒன்று ஆனால் அரசன் முதல் ஆண்டி வரை எல்லோருக்கும் ஒரே முறையை செயல்படுத்தி வருவது இஸ்லாம் மட்டுமே.
நபியின் காலம் முதல் இன்று வரை இப்படித்தான் நடக்கின்றது. இஸ்லாம் கூறுவது வெறும் வாரத்தை ஜாலம் அல்ல. செயல்முறை விளக்கம் அதனால் தான் மிகவும் குறுகிய காலத்தில் அதிகமான மக்களை வென்றெடுத்தது, வென்று வருகின்றது மேலும் வென்றெடுக்கும்.
இதோ ஒரு உண்மைச் சம்பவம்:
அங்கெ உள்ள அனைத்து மக்களும் அவர்களுக்காக தொழுகை நடத்துகின்றனர். எப்படி அடக்கம் செய்கிறார்கள் என்பதைக் காண நானும் பின்தொடர்ந்தேன்.
தொழுகை முடிந்தவுடன் நான்கு ஜனாஸாக்கள் கொண்டு செல்லப்பட்டன. அந்த ஜனாஸாக்களை சுமந்து செல்ல கடும் போட்டி நடக்கின்றது. ஒவ்வொருவருக்குமென தனியாக குறிப்பிட்ட இடம் இல்லை. எங்கே காலியாக உள்ளதோ அங்கெ அடக்கம் செய்கின்றனர்.
அடக்கம் செய்யும் இடத்தில் பொறுமையாக நின்று ஒவ்வொருவரும் தன்னால் இயன்ற உதவிகளை செய்து, இறுதியில் அமைதியாக கலைந்து செல்கின்றனர்.

பொதுவாக இறந்தவரின் சமூக, மத அந்தஸ்த்தை வைத்து அவரின் இறப்பு தொடர்பான காரியங்களும், அடக்கத்தலங்களும் வேறுபடுவது தான் உலகில் நாம் காணும் ஒன்று ஆனால் அரசன் முதல் ஆண்டி வரை எல்லோருக்கும் ஒரே முறையை செயல்படுத்தி வருவது இஸ்லாம் மட்டுமே.
நபியின் காலம் முதல் இன்று வரை இப்படித்தான் நடக்கின்றது. இஸ்லாம் கூறுவது வெறும் வாரத்தை ஜாலம் அல்ல. செயல்முறை விளக்கம் அதனால் தான் மிகவும் குறுகிய காலத்தில் அதிகமான மக்களை வென்றெடுத்தது, வென்று வருகின்றது மேலும் வென்றெடுக்கும்.
No comments:
Post a Comment