அல்லாஹ்வின் திருப்பெயரால்
பரிணாமம் என்ற
அறிவியல் ஆய்வு தொடரினுள் செல்வதற்கு முன்பு ஏன் இந்த தலைப்பு என்பதையும்,
இந்த தொடரின் கட்டமைப்பு என்ன என்பதையும் தெளிவாக விளக்கிவிட்டால் இந்த
ஆய்வு கட்டுரை தொடரை வாசிப்பவருக்கு உதவியாக இருக்கும் என எண்ணுகிறோம்.
இன்ஷா அல்லாஹ்.
ஏன் இந்த தலைப்பு:
நாம் இந்த தலைப்பை தொடராக
வழங்க வேண்டும் என்ற எண்ணமானது சமூக வளைத்தளங்களில் அதிகமாக கம்பு சுற்றும்
நாத்திகர்களாலும், நாத்திக வேடமணிந்த கிறித்தவ மிசனரிகளாளும் காவிகளாளும்
தோற்றுவிக்கப்பட்டதே. ஆனால் நாம் இங்கு குறிப்பிட்ட இந்த கூட்டத்தினர் நாம்
கண்டவரையில் அறிந்ததென்னவென்றால் இவர்களுக்கு பரிணாமம் குறித்து எந்த புரிதலும்
இல்லை. குறைந்த பட்ச புரிதல் கூட இல்லாமல்தான் இந்த இஸ்லாமிய எதிர்ப்பு
கூட்டத்தினர் சமூக வளைத்தளங்களில் கதை அளந்து வருகின்றனர். அதே போல்
பரிணாமவியலை எதிர்த்து பதிவிடும் இஸ்லாமியர்கள் பெரும்பாலும் இஸ்லாமிய
அறிஞர்களின் அடியொட்டிய எதிர் கருத்துகளையே பதிகின்றனர். இதற்கான மூல
காரணம் நாம் பரிணாமவியல் குறித்த மூல ஆதார நூல்களில் இருந்து கற்காததும்,
பரிணாமவியலின் தற்போதைய போக்கு குறித்த அப்டேட்
இல்லை என்பதுமே ஆகும். (எ.டு) ஒட்டங்கச்சிவிங்கியின் கழுத்து நீண்டதற்கான
காரணத்தை இஸ்லாமிய அறிஞர்கள் பதிவிடும் போது குட்டை கழுத்திருக்கும் ஒரு
உயிரினம் அது தரையில் உணவு இல்லாமல் மேலே இருக்கும் கிளைகளில் இருக்கும்
உணவை உட்கொள்ள முயற்சித்ததின் விளைவே என்ற கருத்தை முன்னிறுத்தி விமர்சிப்பார்கள். (பரிணாமவியலில் இந்த
உதாரணத்தையும் பாக்டீரியாவின் ஆண்டிபயாடிக் எதிர்ப்பு குறித்த
உதாரணத்தையும் நாம் பரிணாமவியலின் இந்த தொடரில் அடிக்கடி பயன்படுத்துவோம்.
ஆக இத்தகைய உதாரணங்கள் கூறப்படும் இடங்களை சற்று கவனத்துடன் கடந்து செல்ல
பார்வையாளர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்).
ஆனால் இன்றைய பரிணாமவியலாளர்கள் இந்த கருத்தை கொண்டிருக்கவில்லை. இது டார்வினுக்கும் முன்பாக லாமார்க் என்பரால் எடுத்தாளப்பட்ட கருத்தாகும். இதன் பிறகு பரிணாமம் என்பது டார்வின் முதல் இன்றிருக்கும் டாக்கின்ஸ் வரை பல படிநிலை பரிணாமத்தை அடைந்துவிட்டது அடைந்து கொண்டுள்ளது. ஏன் இந்த கட்டுரை தொடர் எழுதி முடிப்பதற்குள் தற்போதைய பல பரிணாம புரிதல்கள் காணாமல் கூட போய்விடலாம். பல புதிய புரிதல்கள் ஏற்படவும் செய்யலாம். ஆக தொடர் அப்டெட்டில் இருப்பது ஆகச்சிறந்தது.
ஆனால் இன்றைய பரிணாமவியலாளர்கள் இந்த கருத்தை கொண்டிருக்கவில்லை. இது டார்வினுக்கும் முன்பாக லாமார்க் என்பரால் எடுத்தாளப்பட்ட கருத்தாகும். இதன் பிறகு பரிணாமம் என்பது டார்வின் முதல் இன்றிருக்கும் டாக்கின்ஸ் வரை பல படிநிலை பரிணாமத்தை அடைந்துவிட்டது அடைந்து கொண்டுள்ளது. ஏன் இந்த கட்டுரை தொடர் எழுதி முடிப்பதற்குள் தற்போதைய பல பரிணாம புரிதல்கள் காணாமல் கூட போய்விடலாம். பல புதிய புரிதல்கள் ஏற்படவும் செய்யலாம். ஆக தொடர் அப்டெட்டில் இருப்பது ஆகச்சிறந்தது.
ஆக பரிணாமவியலை நாம் நுணுகிப்பார்க்கும் போது அதில் இருக்கும் பல ஓட்டைகள் பட்டவர்த்தணமாய் சாமானியனுக்கும் புரியும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. அதனால்தான்
அதில் மாற்றம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. உண்மை என்பது விளங்குவதற்கு எளிது அதை நுணுகிப்பார்க்கும் போது. அதுபோல் பரிணாமத்தில் இருக்கும் பல முரண்பாடுகளும் குறைகளும் சாமானியனுக்கும் விளங்கும்படி செய்வதே இந்த கட்டுரை தொடரின் நோக்கமாய் இருக்கின்றது. இன்ஷா அல்லாஹ் நிச்சயம் இந்த தொடர்களின் இறுதியில் இது ஏற்பட்டிருக்கும் என நம்புகிறேன்.
இந்த தொடரின் கட்டமைப்பு:
ஆக நமது குறிக்கோளான மக்கள் விழிப்புணர்வு மற்றும் விமர்சனம் இரண்டையும் நிறைவேற்றும் விதமாக இந்த தொடர்கள் அமையவுள்ளன இன்ஷா அல்லாஹ். பரிணாமவியலின் அடிப்படை கோட்பாடுகளை விளக்கி அவற்றுள் எழும் விமர்சனங்களை ஆதாரப்பூர்வமாய் எடுத்துரைக்கும் விதமாக இந்த தொடர்கள் அமையவுள்ளன. ஆக தொடர்களை வரிசை மாறாமல் தொடர்ந்து படிக்குமாறு பார்வையாளர்களுக்கு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment