பக்கங்கள் செல்ல

Sunday, July 16, 2017

உயிர்: 3.உயிர் என்றால் என்ன: இஸ்லாமிய பார்வை:

ஏக இறைவனின் திருப்பெயரால்


உயிர் என்றால் என்ன: இஸ்லாமிய பார்வை:
சென்ற தொடரில் கூறியவாறு நபி(சல்) அவர்கள் இஸ்லாமை முன்வைப்பதற்கு முன்பும் பின்பும் பல தத்துவவியலாளர்கள் உயிர் குறித்து பல கருத்துகளை முன்வைத்துள்ளனர். இஸ்லாம் உயிர் குறித்து என்ன சொல்கிறது என்பதை பார்ப்போம். 

உயிர் குறித்து குர் ஆன் கூறுவது என்ன?

    உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.(அல் குர்ஆன் 39:42)

மேற்கூறிய வசனம் அல்லாஹ் உயிர்களை இரண்டு தருவாயில் கைப்பற்றுவதாக கூறுகிறான். அதாவது தூங்கும் போதும், மரணத்தின் போதும் என்றும் கூறுகிறான். நாம் தூங்கும் போது நமது உயிர் கைப்பற்றப்படுகிறது ஆயினும் நம் உடலை சோதிக்கும் போது நமது உடல் உறுப்புக்களின் இயக்கமான மூச்சு, இதயதுடிப்பு போன்றவற்றை உணரவியலும். நமது உடலில் இருந்த உணர்வுநிலை இல்லாமல் போய்விடுகிறது. இந்த உணர்வுநிலைக்கும் பகுத்தறிவிற்கும் ஆதாரமாக அமைந்த ஆன்மாவான அந்த உயிர்தான் கைப்பற்றப்படுகிறது. மனித உடலில் இருக்கும் இதயதுடிப்பு உள்ளிட்டவை மற்றுமொரு ஆன்மாவால் கட்டுபடுத்தப்படுகிறது. இதை நாம் உடல் என்றே புரிந்து கொள்கிறோம். அதாவது ஒவ்வொரு மனித உடலிலும் இரண்டு ஆன்மாக்கள் இருக்கின்றன. ஒன்று நன்மை தீமையை பகுத்தறிந்து உடலிற்கு கட்டளையிடும் உயிர். இதை காலம் தோறும் உயிர், ஆன்மா,(SOUL, CONCIOUS MIND என்று தத்துவவியலாளர்களால் அழைக்கப்படுகிறது) மற்றொன்று உடல் உறுப்புகளின் செயல்பாட்டை உறுதி செய்யும் உயிர். அதாவது ஒவ்வொரு செல்லிலும் இருக்கும் செயல்பாட்டை உறுதி செய்யும் உயிர். இந்த உடலும் அதன் இயக்கத்தை உறுதி செய்யும் உயிர் என்ற இந்த மொத்த அமைப்பையும் உடல் (BODY) என்று தத்துவவியலாளர்கள் அழைப்பார்கள். இந்த இணைப்பு குறித்த விவாதத்தை MIND-BODY PROBLEM என்று தத்துவவியலாளர்கள் அழைப்பார்கள். இந்த இரண்டு உயிர்களும் மொத்தமாக கைப்பற்றப்படுவது மரணமாகும் .

மேலும் மேற்கூறிய இருமைத்துவத்தைதான் இஸ்லாம் முன்வைக்கிறது என்பதற்கு பின்வரும் வசனங்களை கவனிப்போம்.  
  
அல்லாஹ்வை எப்படி மறுக்கிறீர்கள்? உயிரற்று இருந்த உங்களுக்கு அவன் உயிரூட்டினான். பின்னர் உங்களை மரணமடையச் செய்வான். பின்னர் உங்களை உயிர்ப்பிப்பான். பின்னர் அவனிடமே கொண்டு வரப்படுவீர்கள்!(அல் குர்ஆன் 2:28)

    பின்னர் அவனைச் சீரமைத்து தனது உயிரை அவனிடம் ஊதினான். உங்களுக்குச் செவியையும், பார்வைகளையும், உள்ளங்களையும் ஏற்படுத்தினான். நீங்கள் குறைவாகவே நன்றி செலுத்துகின்றீர்கள்.
                                                                                                                               (அல்குர்ஆன் 32:9)

      "எங்கள் இறைவா! எங்களை இரண்டு தடவை மரணிக்கச் செய்தாய். இரண்டு தடவை உயிர்ப்பித்தாய். எங்கள் குற்றங்களை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். தப்பிக்க வழி ஏதும் உள்ளதா?'' என்று அவர்கள் கேட்பார்கள்.
                                                                                                                            (அல்குர் ஆன் 40:11)

மேற்குறிய வசனம் நாம் உயிரற்று இருந்தோம் என்பது கருவின் ஆரம்ப நிலையை கூறுவதாகும். கருவின் ஆரம்ப நிலையில் செல்லின் உயிர் இருக்கத்தான் செய்யும். ஆனால் அவற்றிற்கு ஆன்மாவை பின்னாளில்தான் அல்லாஹ் வழங்குவதாக கூறுகிறான். அதை பின்வரும் நபிமொழி உறுதிசெய்கிறது.

உண்மையே பேசியவரும் உண்மையே அறிவிக்கப்பட்டவருமான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தம் தாயின் வயிற்றில் நாற்பது நாட்கள் (கருவாக) சேமிக்கப்படுகிறார். பிறகு வயிற்றிலேயே அதைப் போன்றே (நாற்பது நாட்கள்) அந்தக் கரு (அட்டை போன்று கருப்பையின் சுவரைப் பற்றிப் பிடித்துத் தொங்கும்) ஒரு கருக்கட்டியாக மாறுகிறது. பிறகு வயிற்றில் அதைப் போன்றே (மேலும் நாற்பது நாட்கள் மெல்லப்பட்ட சக்கை போன்ற) ஒரு சதைப் பிண்டமாக மாறிவிடுகிறது. பிறகு அதனிடம் ஒரு வானவர் அனுப்பப்படுகிறார். அவர் அதில் உயிரை ஊதுகிறார். (அதற்கு முன்பே) அந்த மனிதனின் வாழ்வாதாரம், வாழ்நாள், செயல்பாடு, அவன் நற்பேறற்றவனா அல்லது நற்பேறு பெற்றவனா ஆகிய நான்கு விஷயங்களை எழுதுமாறு அவர் பணிக்கப்படுகிறார்.
(அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி) நூல்: முஸ்லிம் 5145.)

ஆனால் எவ்வளவுதான் குர்ஆனும் நம்பகமான ஹதீஸ்களும் உடல் உயிர் குறித்து இருமைத்துவ வாதத்தை (DUALISM) முன்வைத்தாலும் உடல் மற்றும் உயிரின் இணைப்பு குறித்து (MIND BODY PROBLEM) நமக்கு எந்த விளக்கமும் இல்லை. இது குறித்து மனிதன் பல ஆயிரம் ஆண்டுகளாக விவாதித்து வந்தாலும் போதிய முடிவுகளை தற்போதுவரை எட்டவில்லை , என்றும் எட்டப்போவதுமில்லை என்பதுதான் நிதர்சன் உண்மையாகும் அதைத்தான் இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் பதிவிட்ட செய்தியானது பின்வரும் குர் ஆன் வசனத்தினால் எடுத்துரைக்கிறது.

   (முஹம்மதே!) உயிரைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். "உயிர் என்பது எனது இறைவனின் கட்டளைப்படி உள்ளது. நீங்கள் குறைவாகவே கல்வி கொடுக்கப்பட்டுள்ளீர்கள்'' என்று கூறுவீராக! (அல் குர் ஆன் 17:85)

வில்டர் பென்ஃபீல்டின் ஆய்வுகள்: ஒரு பொருள்முதல்வாதியின் சவக்குழி


வில்டர் பென்ஃபீல்ட் இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுனர். வலிப்பு நோய் அறுவை சிகிச்சையின் தந்தை. மாண்ட் ரியல் நரம்பியல் கல்வி நிறுவனத்தின் முதல் தலைவர். புகழ் பெற்ற நரம்பியல் நிபுனர் நோபல் பரிசு பெற்ற செர்ரிங்க்டன் அவர்களது மாணவர். இன்று இருக்கும் நவீன நரம்பியலின் முன்னோடி. மூளை வரைபடத்தினை திரம்பட செய்வித்தவர் என்று பல புகழுக்கு சொந்தகாரர். 
ஒரு பொருள்முதல்வாதியாக தனது ஆய்வுகளை ஆரம்பம் செய்து முடிவுகளால் பொருள் இருமைத்துவத்தை முன்வைத்தவர். பொருள்முதல் வாதியான வில்டர் பென்ஃபீல்ட் எப்படி தனது ஆய்வுகளால் வீழ்த்தப்பட்டு இருமைத்துவத்தை ஏற்று கொண்டார் என்பதைதான் பின்வரும் பகுதியில் காணவிருக்கிறோம்.   

பென்ஃபீல்ட் வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை வழங்குவதில் வள்ளவர். அவ்வாறு சிகிச்சை அளிக்கும் போது அவர்களை விழிப்பு நிலையிலேயே அவர்களது மூளையின் பகுதிகளை ஒவ்வொரு உறுப்புகளின் செயல்பாட்டோடு எவ்வாறு தொடர்புடையது என்பதை ஆய்வு செய்தபின் சேதம் அடைந்த பகுதியில் மட்டுமே திரம்பட அறுவை சிகிச்சையை மேற்கொள்வார். அதாவது 60Hz கொண்ட குறைந்த மின்னோட்டத்தை கொண்டு மூளையின் பகுதிகளை தூண்டும் போது குறிப்பிட்ட மூளையின் பகுதியுடன் தொடர்புடைய உடல் உறுப்பில் அசைவை காண்வியலும். இவ்வாறு ஆய்வுகளை மேற்கொண்டு ஆய்வு முடிவுகளை பின்வரும் படத்தினால் விளக்கினார்.

Add caption


      இவ்வாறு தொடர் ஆய்வில் ஈடுபட்ட பென்ஃபீல்ட் மனிதனின் உயிர் அல்லது உள்ளம்* என்பது குறித்து பின்வரும் ஆய்வு முடிவுகளை முன்வைக்கிறார். அதாவது உள்ளம் என்று நாம் இன்று கூறிவரும் ஒன்றிற்கும் மூளையின் நரம்பியல் செயல்பாட்டிற்கும் எந்த தொடர்பும் இல்லை. உள்ளம் என்பது தனித்த ஒன்று என்று குறிப்பிடுகிறார். மேலும் உள்ளத்தின் செயல்பாடான விழிப்பானது எந்த நரம்பியல் செய்ல்பாட்டையும் சார்ந்தில்லை எங்கிறார் பென்ஃபீல்ட். தனது ஆய்வுமுடிவுகளை தனது எண்ண மாற்றங்களையும் வில்டர் பென்ஃபீல்ட்  “The mystery of Mind: A critical study of Consciousness and Human Brain” என்ற புத்தகத்தின் வாயிலாக வெளியிட்டார்.

   *உயிரும் உள்ளமும் ஒன்றாய்தான் அல்லது உயிரின் பகுதியாய்தான் வரலாறு நெடுக காணவியலும்.[1] نفس -- நஃப்ஸ் என்ற அரபுச்சொல் உள்ளம் ஆன்மா இரண்டுக்கும் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கிரேக்க சொல்லான Psyche[2] என்ற சொல் உள்ளம் ஆன்மா இரண்டையும் குறிக்கும்.


சிந்தனையும் முடிவுகளும் மூளையிலா பிறக்கிறது:

பல காலமாய் மனித சமுகத்தின் கூற்று ஒன்றையே கேள்விக்கு உடப்டுத்துகிறார் பென்ஃபீல்ட். அதாவது சிந்தனையும் முடிவெடுத்தலும் மூளையில் உதிக்கிறது என்று நாம் கூறிவரும் நெடுநாள் நம்பிக்கையையே மறுக்கப்பட்டுவிட்ட்து என்பதுதான் வில்டரின் ஆய்வு முடிவுகள் நமக்கு தரும் அதிர்ச்சியே என்பது குறிப்பிடத்தக்கது. முதலாவது பென்ஃபீல்ட் உள்ளம் எவற்றை எல்லாம் செய்கிறது என்று நாம் நம்புவதை பட்டியலிடுகிறார்.


மேலும் நாம் அறியப்படும் உள்ளம் என்பதற்கும் மூளைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறுகிறார். அதாவது உள்ளமானது மூளையின் எந்த பகுதியிலும் இல்லை. அது தனித்து இயங்குவதாய் உள்ளது. மேலும் அந்த உள்ளம்தான் தான் இருக்கும் சூழலை அறிந்து அதை உணர்த்துவதாய் இருக்கிறது. அவர் நினைவில் இருக்கும் நோயாளியின் மூளையை மின்முனையினால் இயக்கி அதன் விளைவை விளக்குகிறார்.


         மேற்குறிப்பிடும்  முடிவு என்ன காட்டுகிறது. மூளையின் இயக்கத்திற்கும் “நான்” என்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை. “நான்” என்று அறியப்படும் உள்ளமானது மூளை என்ற உறுப்பில் இல்லை. மூளையில் தான் “நான்” என்பது இருக்குமானால் ஏன் அந்த நோயாளி “தான்” செய்யவில்லை என்று கூறவேண்டும். மூளைதான் உள்ளத்தின் இருப்பிடமாக இருந்தால் எப்படி அந்த நோயாளியினால் தனது செயலை தானே தடுக்கவியலும். மின்முனையால் ஏற்படும் செயலை எதிர்க்கும் முடிவானது மூளையில் எட்டப்படவில்லை. மூளை என்பது வெறும் கருவிதான். அதைதான் பின்வரும் பகுதியில் பென்ஃபீல்ட் விளக்குகிறார்


     அதாவது இந்த இடத்தில்தான் ஒரு பொருள்முதல்வாதியின் நம்பிக்கை தகர்ந்ததை உணரமுடிகிறது. வில்டரின் ஆய்வுகள் எதுவும் உள்ளத்தின் செயல்பாடுகளை தோற்றுவிக்கவில்லை. மூளை என்பது ஒரு உறுப்பாக பதிவு செய்வதையும், ஆன்மாவுடன் உடலின் ஏனைய பாகத்தை இணைக்கும் ஒரு பாலமாகவும்தான் உள்ளதே தவிர, சிந்தனை முடிவெடுத்தல் சூழல் குறித்த விழிப்பு போன்ற எதையும் மேற்கொள்ளவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. மேலும் வாசிப்பை தொடர்வோம்.


     அதாவது உள்ளமும் மூளையும் தனித்தவை. ஆனால் ஒன்றை கொண்டு மற்றொன்று இயங்குவதாய் இருக்கிறது. இந்த இணைப்பைதான் உயர்ந்த மூளை இயக்கம் என்று வில்டர் கூறுகிறார். மேலும் தனது இறுதி கருத்தை, பல வருட உழைப்பின் முடிவுகளை பின்வருமாறு கூறுகிறார்.


            ஆக மனித இருப்பு என்பது இரண்டு மூல கூறுகளால் ஆனது. ஒன்று நமது உடல் உறுப்புகளிலும் செல்களிலும் காணப்படும் ஆற்றல் அல்லது உயிர்.  மற்றோன்று அறியமுடியாத உள்ளத்தை இயக்கும் உயிர். இந்த உயிர்தான் முடிவெடுத்தல் போன்ற செயல்களை செய்கிறது. இந்த உயிர்தான் நமது உறக்கத்தில் காணாமல் போகிறது. இந்த உயிர்தான் நம்மை விழிப்பில் சிந்திக்கவும் முடிவெடுக்கவும் புரிந்துகொள்ளவும் வைக்கிறது. அதனால்தான் மூளையை கணிணி போன்றது என்றும் அதை நிரலாக்கம் செய்து இயக்கும் தனித்த சுதந்திரமான  புரிதலுடைய செய்லாண்மைதான் நமது ஆன்மா அல்லது உள்ளம் என்று கூறுகிறார் வில்டர். பொருள்முதல் வாதத்தை அடிப்படையாக கொண்டு நாத்திகர்கள் ஆன்மா குறித்து எடுத்துவைத்த அத்துனை வாதங்களுக்கும் வில்டரின் அறிவியல் ஆய்வுகள் சம்மட்டி அடி கொடுத்தது என்பதை மூஸ்லிம்களாகிய நாம் சொல்லி புரியவைக்கத்தேவை இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.
  மனிதனைப் படைத்தோம். அவனது மனம் எதை எண்ணுகிறது என்பதையும் அறிவோம். நாம் அவனுக்குப் பிடரி நரம்பை விட மிகவும் நெருக்கமாக இருக்கிறோம். (அல் குர்ஆன் 50:16. )

உயிர்: 2. வரலாற்றில் உயிர்:

ஏக இறைவனின் திருப்பெயரால்


வரலாற்றில் உயிர்:
உயிர் என்றால் என்ன?????? இந்த  கேள்வியை மானுட சமுதாயம் பல நூற்றாண்டுகளாய் எழுப்பி வந்துள்ளது. இந்த கேள்வியை எழுப்பாத சமுதாயங்களே இல்லை என்றே கூறலாம். உயிர் குறித்து பல நூற்றாண்டுகாய் மனித சமுதாயம் ஆய்வுகளையும் பல சித்தாந்தங்களையும் முன் வைத்து வந்துள்ளது. அவை குறித்த ஒரு சிறிய பார்வை இதோ......... 

தேல்ஸ்:(கிமு. 624-548) 
அனைத்து உயிர்களுக்கும் மூலம் நீர். ஈரப்பதமே அனைத்து உயிர்களுக்கும் ஊட்டசத்தாக அமைகிறது. ஈரப்பத்தத்தில் இருந்து வெப்பம் உணடாகிறது. அந்த வெப்பமே உயிரின் ஆதாரம் என்ற கருத்தை தேல்ஸ் முன்வைத்தார்

பித்தகோரஸ்:(கிமு 582-500)
அழுகும் குப்பைகளில் இருந்து விலங்கினங்கள், கடவுளின் உயிரில் இருந்து தோன்றின. ஒரு விலங்கின் வாழ்வானது இந்த ஆன்மாவும், மண்ணுடலும் இணைந்திருக்கும் காலமே ஆகும். இந்த மண்ணுடல் இறக்கும் போது இந்த அழிவற்ற ஆன்மாவானது வேறொரு மண்ணுடல் ( அது விலங்காகவோ, மனிதனாகவோ இருக்கலாம்) அதனுள் நுழைகிறது. இதுவே மண்ணில் தோன்றும் அனைத்து நன்மை தீமைக்கும் காரணம். மேலும் உயிரானது மூன்று மூலக்கூறுகளை உடையது. 
1. உள்ளுணர்வுப்பகுதி: இந்த பகுதிதான் மண்ணுடல் மற்றும் பவ்தீக தேவை குறித்து உணர்வதாய் அமைந்தது.
2. ஆன்மாப்பகுதி: இதுதான் அன்பு, கோபம் உள்ளிட்டவற்றுடன் தொடர்புடயது.
3. கல்வியறிவு: இந்த பகுதி இறைசட்டங்களை புரிந்து செய்படுத்தும் பகுதி.
பித்தகோரஸின் சிந்தனை பள்ளிகள் பிளேட்டோவின் சிந்தனை பள்ளிகளுக்குப் பிறகு காணமல் போனது.

ஹிராகிளைட்டஸ்:(கிமு 535 –  475 )
உலக ஆன்மா என்பது அக்னிதான். மூச்சின் மூலமாக இந்த உலக ஆன்மாவை மனிதன் எடுத்து கொண்டு உயிர்வாழ்கிறான். எங்கும் காணப்படும் அறிவே கடவுள். உணர்வு என்பதே எதோ ஒன்று வெளியில் இருந்து நமக்குள் பாய்வது என்று கூறினார். 

எம்படொகில்ஸ்:(கிமு  490 – 430)
இவர்தான் நிறை அழிவின்மை குறித்து முதன்முதலில் பேசியவர். முன்பே இருக்கும் பொருடகளோடு இணைவதாலும் பிரிவதாலுமே பிறப்பு மற்றும் இறப்பு ஏற்படுகிறது. நீர் நெருப்பு காற்று ஆகிவைதான் முன்பே இருக்கும் பொருட்களாகும். இரண்டு விசைகள் இவ்வுலகை இயக்குகின்றன. விலக்கு விசை, ஈர்ப்புவிசை. ஆன்மா தனித்தவை அல்ல. இறைமறுப்பையும், இன்பமே நோக்கம் என்ற கொள்கையின் அடிப்படையில் உயிர் குறித்த கருத்துகளையும் முன்வைத்தார்.
மேலும் மனோதத்துவவியலுக்கு அடிகோலிட்டவர். மனிதனின் குணங்கள் உடல் கூறு கலவையின் அடிப்படையில் அமைகின்றன என்று வாதிட்டார். தகுதியற்றவை வாழாது என்பதை கூட முன்வைத்தார். இன்றிருக்கும் பல பொருள்முதல்வாதிகளின் மூல கொள்கை இங்கிருந்துதான் ஆரம்பமானது என்று கூறலாம்.

டெமொகிரைடஸ்:(கிமு 460 – 370)
இவ்வுலகமானது எண்ணில்லா அணுக்களினால் ஆனவை. உயிரானது உலகின் ஒரு பகுதி. அது உயிர்ப்புடன் நகர்வதாய் இருந்தாலும் அதுவும் இவ்வுலகின் ஒரே வகையான அணுக்களினால்தான் ஆனது. இந்த அணுக்கள் யாவும் நெருப்பை போன்ற வெப்பத்துகள்களாகும். இவை உடலின் அனைத்து பகுதியிலும் ஊடுருவி உடலிற்கு உயிரை தருகிறது. இந்த உயிரை பல கூறுகளாக பிரித்து அவை உடலின் ஒவ்வொரு பகுதிக்கானது என்றும் கூறினார். அதாவது சிந்தனை என்பது மூளையின் உயிர், பார்வை கண்ணின் உயிர், கோபம் இதயத்தின் உயிர், ஆசை ஈரலின் உயிர் என்று குறிப்பிட்டார்.

ஹிப்பொகிரேடஸ்:((கிமு 460 – 370))
தத்துவவியலையும், மருத்துவத்தையும் இரு துறையாக முதன் முதலில் பிரித்தவர். உடல் என்பது அண்டத்தின் சிறிய மாதிரி. அண்டத்தில் நீர், நிலம், நெருப்பு மற்றும் காற்று போல் உடலில் ரத்தம்,  மஞ்சள் பித்தம், சளி மற்றும் கரும் பித்தம் அமைந்துள்ளது. இவையே மனிதனின் மனோநிலையை நிர்ணயிக்கின்றன. இதே போல் உடல் நோய்கள் அனைத்தும் இந்த நான்கு திரவங்களின் சமநிலையில் ஏற்படும் ஏற்றத்தாள்வுகளே என்ற கருத்தை முன்வைத்தார். இந்த அனைத்து திரவங்களின் ஊற்றுக்கண் மூளையே. ஆக அனைத்து நோயின் மூலமும் மூளையே. உள்ளத்தின் இருப்பிடம் மூளையே. மனநோய் என்பது இந்த உறுப்பில் ஏற்படும் பாதிப்பேயாகும். கரும்பித்தமே மனிதனின் தீய எண்ணங்களான பொறாமை, சந்தேகம், வெறுப்பு, பழியுணர்ச்சி போன்றவற்றிற்கு காரணமாகும் என்றும் குறிபிட்டார்.

சாக்ரட்டீஸ்:

        ஓர் இறைக்கொள்கையை முன்மொழிந்தார். டெல்ஃபியின் இறைவனை தனது ஒரே இறைவனாக எடுத்துக்கொண்டார். (அந்த கடவுள் அப்பலோதான் என்பது அறிஞர்களின் வாதம்) மற்ற கிரேக்க கடவுளர்களை முழுமையாக மறுத்துவிட்டார். இதனாலேயே நாத்தீக குற்றச்சாட்டு இவர் மீது சுமத்தப்பட்டது. இந்த கொள்கையினால் இளைஞர்களை வழிகெடுக்கிறார் என்று குற்றம்சுமத்தப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடதக்கது.

உயிர் குறித்து இருமைதத்துவத்தை முன்வைத்தார். அதாவது உடலும் உயிரும் தனித்தவை என்ற தத்துவம். உடல் இயங்கக்கூடியது. உயிர் இயக்கக்கூடியது. உடல் அழியக்கூடியது. உயிர் அல்லது ஆன்மா அழிவில்லாதது. அதாவது உடல் இயங்கும் அற்றலை பெற்றிருக்கும். அந்த உடலை ஆன்மா இயக்கும் இதுதான் இருமைதத்துவம்

பிளாட்டோ:


பிளாட்டோ தனது “ரீபப்ளிக்” என்ற புத்தகத்தில் உயிர் குறித்து விளக்கியுள்ளார். இதற்கு முன்சென்ற தத்துவவியலாளர்கள் கூறிவந்த உடலின் அனைத்து பகுதியிலும் உயிர் என்ற பொருள் உடுறுவியுள்ளது, ஒவ்வொரு உறுப்பிற்கும் தனித்தனி ஆன்மா உள்ளது என்ற கருத்தியல்களை மறுத்தார். பிளாட்டோ முன்வைத்ததும் இருமைத்துவம் தான். அதாவது ஆன்மாவும் உடலும் தனித்தனியானவை.

       உயிர் என்பது மூன்று கூறுகளால் ஆனவை. 1. கடவுளிடம் இருந்து வந்த பகுத்தறியும் அழிவில்லா பகுதி, 2. உணர்வைத்தரும் ஆன்மா பகுதி 3.இவை இரண்டையும் இணைக்கும் பகுதி. ஆகிய மூன்று பகுதிகளை கொண்டதுதான் உயிர் என்ற கருத்தை முன்வைத்தார்.
ஆன்மாவின் புணர் ஜென்மம், வேறு ஜென்மம், ஒரு சரிரத்தில் இருந்து மற்றொரு சரிரத்திற்கு செல்லுதல் போன்ற கருத்தை முன்வைத்தார். ஆன்மாவானது மரணத்திற்கு பிறகு ஒரு இடைநிலையில் காக்க கூலி வழங்கப்படுவதற்காக வைக்கப்பட்டிருக்கும். பல ஜென்மங்கள் எடுத்து தூய்மை அடைந்த ஆன்மாவே இறுதியில் சுவனத்தில் அதன் இடத்தை அடைந்து கொள்ளும்.
பகுத்தறியும் ஆன்மாவானது மூன்று நிலைகளாக காணப்படுகிறது:
1. உன்மையுடன் தொடர்புடைய அறிவாக 
2. கூட்டாக செயல்படும் போது கருத்தாக 
3. இல்லாதவை குறித்து அறியாமையாகவும் இருக்கிறது.


          அறிவாற்றல் என்பது ஒரு உணர்ச்சியே.  மேலும் ஆன்மா ஒரு வஸ்தாகும். ஆக நினைவாற்றலும் கற்பனையும் வஸ்துக்களே. பகுத்தறியும் உயிரானது சுவனத்திற்கு மிக நெருக்கமானது. இதுதான் மூளையை மையமாக கொண்டது. உணர்வைத்தரும் பகுத்தறியாத உயிரின் பகுதி தண்டுவடத்துடன் தொடர்புடையது. தண்டுவடமும் மூளையும் தான் உயிர் சக்தியை எடுத்து செல்கிறது என்ற கருத்தை முன்வைத்தார். மேலும் இணக்கும் உயிர் பகுதியானது இதயத்தில்தான் இருக்கிறது என்றும் கூறினார்.
ஒன்றை குறித்த எண்ணம் என்பது உள்ளத்தில் முற்பிறவியில் ஏற்பட்ட பதிவாகும். அவற்றை கல்வியின் மூலம் வெளிக்கொணர்கிறோம் என்று கூறினார்.

அரிஸ்டாடில்:
உடலின் செயல்பாடுதான் உயிர். உயிர் உடலில் இருந்து தனித்த பொருள் அல்ல. உடலில்லாமல் உயிர் இல்லை. உயிர் இல்லாமல் உடல் இல்லை என்ற கருத்தை முன்வைத்தார். உயிருக்கு தூய்மைபடுத்துதல் அல்லது பல பிறப்பிகளை அடைந்து தூய்மை பெறும் என்பன் போன்ற எந்த தேவையும் அற்றது. மேலும் உயிர் என்பது ஓர் இயக்கவிதி. அதுவே உயிர் வாழ்க்கையின் முதல் தோற்றுவாய். உயிரின் ஏனைய ஆற்றல்களான உணவு உட்கொள்ளுத, நகர்வு , சிந்தனை போன்றவையாவும் உயிர்வாழ்க்கையின் இரண்டாம் தோற்றுவாய். ஒரு உயிர் மரணத்திற்கு பிறகு வெறு ஓர் அசையும் உடலோடு கலந்து விடுகிறது. ஆனால் முற்பிறப்பின் கருத்தியல்களை அது கடத்திச் செல்வதில்லை. உடலின் உள்ளுறுப்புகள் என்பவை வெப்பத்தையும், குளிர்ச்சியையும் சமநிலையில் வைத்துகொள்ளும் இயந்திரங்களாகும். அனைத்து உணர்ச்சிகளும் மூளையுடன் தொடர்புடையவை அல்ல மாறாக இதயத்துடன் தொடர்புடையவை. மேலும் உயிரினங்களின் உயிரை மூன்று வகையாக வரையறுத்தார்.
1.தாவர உயிர்
2.விலங்கின் உயிர்
3.மனித உயிர். 

வரும் தொடரில் இஸ்லாமும் அறிவியலும் உயிர் குறித்து என்ன சொல்கிறது என்று காண்போம் இன்ஷா அல்லாஹ்.

உயிர் :1.உயிர் என்றால் என்ன?.......... மக்காவில் ஒருநாள்

ஏக இறைவனின் திருப்பெயரால்


உயிர் என்றால் என்ன?.......... மக்காவில் ஒருநாள்
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது,

       “குரைஷியர்கள் அல் நள்ர் பின் அல் ஹாரிஸ் மற்றும் உக்பா பின் அபூ முயீத் ஆகியோரை “ முஹம்மது குறித்தும், அவர் கூறுவது குறித்தும் கேட்டுவாருங்கள். அவர்கள்தான் முதல் வேதத்திற்கு உரியவர்கள். நாம் அறியாதவற்றை அவர்கள் அறிவார்கள்” என கூறி அவர்கள் இருவரையும் மதீனாவில் இருந்த யூத ரப்பீக்களிடத்தில் அனுப்பிவைத்தனர். ஆகவே அல் நள்ர் மற்றும் உக்பா இருவரும் மதீனா சென்று யூத ரப்பீக்களிடத்தில் இறைத்தூதர் குறித்தும், அவர் கூறுவது குறித்தும் கூறினர். அவ்விருவரும் “நீங்கள் தாம் தவ்ராத்தையுடைய மக்கள், எங்கள் இந்த மனிதர் குறித்து அறிந்து கொள்ளவே உங்களிடம் வந்தோம்” என்றும் கூறினர்.

          அதற்கு அந்த ரப்பீக்கள் அவர்களிடத்தில் “ நாங்கள் கூறும் இந்த மூன்று விஷயம் குறித்து அவரிடம் கேளுங்கள். இந்த மூன்றும் குறித்து அவர் பதிலளித்தால் அவர் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்தாம். அவ்வாறில்லாமல் அவர் பதிலளிக்கவில்லை என்றால் அவர் பொய்யர். அவரை நீங்கள் விரும்பியவாரு செய்து கொள்ளுங்கள்.

      1.“முன்னொரு காலத்தில் வாழ்ந்த குறிபிட்ட வாலிபர்களைப் பற்றி ஏதாவது செய்தி தெரியுமா? ஏனெனில் அவர்களைப் பற்றி ஓர் ஆச்சரியமான செய்தி இருக்கிறது. அவர்கள் என்னவானார்கள்?

               2.பூமியின் கிழக்கு மேற்கு பகுதிகளையெல்லாம் சுற்றி வந்த பயணி ஒருத்தரைப் பற்றிய செய்தி தெரியுமா?

               3.ரூஹ்(உயிர்) என்றால் என்ன?

               இந்த மூன்று கேள்விகளை கேளுங்கள். அவர் இவற்றுக்கு சரியான பதிலளித்தால் அவர் இறைத்தூதர்தான், அவரை பின்பற்றுங்கள். அவர் பதிலளிக்கவில்லை என்றால் அவர் பொய்யர். அவரை நீங்கள் விரும்பியவாரு செய்து கொள்ளுங்கள். அவர்கள் நள்ர் மற்றும் உக்பா குரைஷியரிடம் திரும்பி வந்தனர்.

      “குரைஷியரே! உங்களுக்கும் முஹம்மதிற்கும் இடையில் முடிவு செய்வதற்கு தேவையான தீர்வை கொண்டுவந்துள்ளோம். ரப்பீக்கள் சிலவற்றை குறித்து கேள்வி எழுப்புமாறு கூறியுள்ளனர்.” என்று கூறினர். அவை என்ன என்பதையும் குறைஷியரிடம் விவரித்தனர்.

            ஆகவே குறைஷியர்கள் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது போல கேள்விகளை தூதரிடம் முன்வைத்தனர். அல்லாஹ்வின் தூதர்(சல்) அவர்கள் “நீங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு நாளை விடையளிக்கிறேன்” என்று கூறிவிட்டார்கள். நபி(சல்) அவர்கள் இன்ஷா அல்லாஹ் –இறைவன் நாடினால் என்று குறிப்பிடாமல் விட்டுவிட்டார்கள்.

                 குரைஷியர்களும் சென்று விட்டனர். ஆனால் நபி(சல்) அவர்கள் எந்த வஹி அறிவிப்பும் இன்றி, ஜிப்ரில்(அலை) அவர்களது வருகைக்காக 15 நாட்கள் காத்திருந்தார்கள். அதனால் மக்காவாசிகள் வதந்திகளை பரப்ப துவங்கினர். “முஹம்மது நாளை பதிலளிக்கிறேன் என்று வாக்களித்தார் ஆனால் 15 நாட்கள் ஆகியும் நாம் கேட்ட எதற்கும் பதிலளிக்கவிலை” என்று பரப்ப துவங்கினர். வஹியின் தாமதம் இறைத்தூதருக்கு மிகப்பெரிய சிக்கலையும், மக்காவாசிகளின் சொற்கள் மிகப்பெரிய மனவேதனையையும் அளித்தது.

                அதன் பிறகு ஜிப்ரில்(அலை) அவர்கள் எல்லா புகழும் உடைய ஏக இறைவனிடம் இருந்து காஃப் அத்தியாயத்தை கொண்டுவந்தார்கள். அதில் அவர்களது வேதனைக்கான காரணம் குறித்தும், அந்த வாலிபர்கள் குறித்தும், அந்த பயணி குறித்தும் செய்திகள் இடம் பெற்றிருந்தன. மேலும் ஏக இறைவன் குறிபிட்டான், “ (முஹம்மதே!) உயிரைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். "உயிர் என்பது எனது இறைவனின் கட்டளைப்படி உள்ளது. நீங்கள் குறைவாகவே கல்வி கொடுக்கப்பட்டுள்ளீர்கள்'' என்று கூறுவீராக! (17:85.) (இப்னு கஸீரின் அல் சீரா அல் நபவிய்யா ப.எண்:351, பாகம் 1)

             மேற்குறிபிட்ட சம்பவமானது நபி(ஸல்) அவர்களின் மக்காவின் ஏகத்துவ பிரச்சாரத்தின் ஆரம்ப காலத்தில் நடை பெற்றதாகும். அங்கிருந்த குறைஷியர்கள் யூத ரப்பீகளிடம் ஆலோசனை செய்து நபி(ஸல்) அவர்களிடம் கேட்ட கேள்விதான இவை மூன்றும். உயிர் குறித்த இஸ்லாமிய பார்வையானது இன்று கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. நாத்திகர்களும் கிறித்தவ மிசனரிகளும் உயிர் குறித்த இஸ்லாமின் பார்வையை விமர்சனம் செய்து வருகின்றனர். இஸ்லாம் உயிர் குறித்து அப்படி என்னதான் கூறுகிறது. அது அறிவியலுடன் எவ்வளவு பொறுந்துகிறது என்பதை ஒத்து நோக்குவோம் இன்ஷா அல்லாஹ்

Monday, May 29, 2017

எதிர்தொடர் 24: சந்திரன் பிளந்துவிட்டது

ஏக இறைவனின் திருப்பெயரால்

          இஸ்லாம் இது இறைவனின் மார்க்கம்தான் என்பதை நிறுவ தன்னகத்தே எத்தனையோ ஆதாரங்களை கொண்டுள்ளது. அவற்றில் சில அறிவியல் உண்மைகளை உள்ளடக்கியவையாகவும் உள்ளன. நமது எதிர் தரப்பு கட்டுரையாளர் இந்த முறை, முஹம்மது(சல்) அவர்களுக்கு அன்றைய அரபிய குரைஷியர்களுக்கு தன்னை இறைவனின் தூதர் என்று நிறுவ ஏக இறைவன் அல்லாஹ்வால் வழங்கப்பட்ட ஓர் அற்புதமான, நிலவு பிளவுண்டது குறித்து சில விமர்சனங்களை முன்வைத்துள்ளார்(1).
இந்த விமர்சனங்கள் யாவும் இஸ்லாமிய எதிர்ப்பு வளைதளங்களில் இருந்து என்றும் போல் திருடப்பட்டவைதான். இந்த கட்டுரையாளர் இஸ்லாமிய எதிர்ப்பு விமர்சனங்களில் பகுத்தாய்வு என்பதை மேற்கொள்ளவே மாட்டாரா? என்ற எண்ணம் தான் இந்த கட்டுரையை எழுதும் போது நமக்கு ஏற்படுகிறது. சென்ற தொடர்களில் எல்லாம் கட்டுரையாளரின் பல அபத்தங்களையும், அவதூறுகளையும், அறியாமையையும் தோழுரித்திருக்கிறோம். இம்முறை கட்டுரையாளரின் அறிவியல் ஞானத்தையும், அந்த அறிவியல் ஞானம் எப்படி காழ்ப்புணர்ச்சியினால் மழுங்கடிக்கப்பட்டுள்ளது என்பதையும் காண்போம். மேலும் தன்னை என்னதான முன்னாள் முஸ்லிம் என்று கூறினாலும், இஸ்லாம் குறித்து அடிப்படை அறிவு கூட கட்டுரையாளருக்கு இருந்ததில்லை என்பதையும் இந்த கட்டுரையிலும் காண்போம் இன்ஷா அல்லாஹ்….

சந்திரனும் பிளந்துவிட்டது:

       அவரது இந்த கட்டுரையின் முடிவாக பின்வரும் நான்கு விமர்சனங்களை நம்மால் பெற முடியும். அந்த விமர்னங்களையும் அதற்கான விளக்கத்தையும் காண்போம்.

விமர்சனம் 1: நபி(ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட அற்புதம் குறித்த விமர்சனம்.     நபிகளாருக்கு(சல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட அற்புதங்கள் என்பவை குர்ஆனிற்கு முரண்படுகிறது என்பது கட்டுரையாளரின் வாதம்.

நமது பதில்:
        கட்டுரையாளர் தனது கட்டுரையில் நபி(ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட குர்ஆன் அல்லாத ஏனைய அற்புதங்கள் குறித்த தனது புரிதலை முன்வைக்கிறார் அது குர்ஆனிற்கே முரண்படுவதாகவும் குற்றம் சுமத்துகிறார். ஆனால் குர் ஆனில் இருந்து அதற்கு எந்த வசன ஆதாரத்தையும் முன்வைக்காமல் தனது வாதத்தின் முக்கிய ஆதாராமாக ஹதீஸையே முற்படுத்திகிறார். முதலில் நபி(சல்) அவர்களுக்கு குர்ஆன் அல்லாத ஏனைய அற்புதங்கள் வழங்கப்பட்டது குறித்து குர்ஆன் என்ன கூறுகிறது என்பதை கண்டுவிட்டு இவரது முக்கிய ஆதாரமான ஹதீஸின் விளக்கத்தையும் காண்போம்.

நபி(சல்) அவர்களுக்கு அற்புதங்கள் வழங்கப்படவில்லையா???

وَأَقْسَمُوا بِاللَّهِ جَهْدَ أَيْمَانِهِمْ لَئِنْ جَاءَتْهُمْ آيَةٌ لَيُؤْمِنُنَّ بِهَا قُلْ إِنَّمَا الآيَاتُ عِنْدَ اللَّهِ وَمَا يُشْعِرُكُمْ أَنَّهَا إِذَا جَاءَتْ لا يُؤْمِنُونَ (١٠٩) وَنُقَلِّبُ أَفْئِدَتَهُمْ وَأَبْصَارَهُمْ كَمَا لَمْ يُؤْمِنُوا بِهِ أَوَّلَ مَرَّةٍ وَنَذَرُهُمْ فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ (١١٠)

     "எங்களிடம் அற்புதம் வந்தால் அதை நம்புவோம்'' என்று அல்லாஹ்வின் மீது உறுதியாக சத்தியம் செய்து அவர்கள் கூறுகின்றனர். அற்புதங்கள் அல்லாஹ்விடமே உள்ளன எனக் கூறுவீராக! "அது நிகழும்போது அவர்கள் நம்ப மாட்டார்கள்'' என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்? அவர்கள் ஆரம்பத்தில் நம்பிக்கை கொள்ளாமல் இருந்தது போலவே அவர்களின் உள்ளங்களையும், பார்வைகளையும் புரட்டுவோம். அவர்களது அத்துமீறலில் அவர்களைத் தடுமாற விட்டு விடுவோம் (6:109,110)

      மேற்குறிபிட்ட வசனமே தெளிவாக குறிப்பிடுகிறது, அற்புதங்கள் நிகழும் என்பதை அல்லாஹ்வே உறுதிப்பட தெரிவித்திருக்கும் போது அற்புதமே நிகழாது என்று எப்படி கட்டுரையாளர் கூறுகிறார். மேலும் நபி(சல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட ஏனைய அற்புதங்கள் குறித்தும் அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான். உதாரணமாக பத்ர் யுத்தத்தில் நபி(சல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட ஓர் அற்புதம் தொடர்பாக பின்வருமாறு திருக்குர்ஆன் கூறுகிறது.

    அவர்களை நீங்கள் கொல்லவில்லை. மாறாக அல்லாஹ்வே அவர்களைக் கொன்றான். (முஹம்மதே!) நீர் எறிந்த போது (உண்மையில்) நீர் எறியவில்லை. மாறாக அல்லாஹ்வே எறிந்தான். நம்பிக்கை கொண்டோருக்கு அழகிய முறையில் பரிசளிப்பதற்காக இவ்வாறு செய்தான். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.(அல்குர்ஆன் 8:17)

      இதேபோன்று மிஃராஜ் பயணம் என்ற அற்புதம் குறித்து அல்குர்ஆன் 53:01-18 கூறுகிறது. நபி(சல்) அவர்களை மனிதர்கள் கொல்லமுடியாது என்ற அற்புதம் குறித்து அல்குர்ஆன் 5:67 குறிப்பிடுகிறது. மக்காவில் இருந்து மதினா ஹிஜ்ரத்தின் போது அல்லாஹ் நபி(சல்) அவர்களை பாதுகாக்க மக்கள் அறியாத படைகளை கொண்டு உதவி செய்த அற்புதத்தை அல்குர்ஆன் 9:40 கூறுகிறது. இதைபோன்ற பல அற்புதங்கள் நபி(சல்) அவர்களுக்கு வழங்கப்பட்டதாக குர்ஆனே கூறுகிறது. அவற்றிற்கு எல்லாம் முத்தாய்ப்பாய் சந்திரன் பிளந்தது என்று குர்ஆன் குறிப்பிடுகிறது.

اقْتَرَبَتِ السَّاعَةُ وَانْشَقَّ الْقَمَرُ (١)

(யுகமுடிவு நேரம் நெருங்கி விட்டது. சந்திரனும் பிளந்து விட்டது (குர்ஆன் 54:1

    ஆக சந்திரன் பிளந்தது குறித்த செய்தியானது எந்த வகையிலும் குர்ஆனிற்கு முரண்படவில்லை. கட்டுரையாளரின் புரிதல் ஒருவேலை குர்ஆனிற்கு மாற்றமாக, அற்புதங்களை நபிமார்கள் தங்களது சுயவிருப்பத்தால் செய்ய முடியும் என்று இருக்குமேயானால் நிச்சயம் சந்திரன் பிளந்த சம்பவம் அவர் கூறிப்பிடும் குர்ஆன் வசனத்திற்கு முரண்பட்டிருக்கும். அவ்வாறில்லாமல் அற்புதங்கள் இறைவனின் அதிகாரத்தில் உள்ளவை என்று குர்ஆன் கூறுவதை ஏற்கும் பட்சத்தில் சந்திரன் பிளந்ததும் இறைவனின் கட்டளைபடியே என்பதை விளங்கிகொள்ளலாம்.

அப்படியென்றால் நபிகள்(சல்) அவர்கள் குறிப்பிடுவதாக கூறப்படும் அந்த ஹதீஸ் என்ன கூறுகிறது என்ற கேள்வி எழும்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

       ஒவ்வோர் இறைத்தூதருக்கும் சில அற்புதங்கள் வழங்கப்பட்டே இருந்தன. அவற்றைக் காணும் மக்கள் நம்பித்தான் ஆகவேண்டிய நிலை இருந்தது. எனக்கு வழங்கப்பெற்ற அற்புதமெல்லாம், அல்லாஹ் எனக்கு அருளிய வேத அறிவிப்பு (வஹீ) தான். எனவே, நபிமார்களிலேயே மறுமை நாளில், பின்பற்றுவோர் அதிகம் உள்ள நபியாக நான் இருக்கவேண்டும் என எதிர்பார்க்கிறேன் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.( (புஹாரி 4981)

     அதாவது ஒவ்வொரு நபிமார்களுக்கும் சில அற்புதங்கள் வழங்கப்பட்டன, அவற்றை அந்த சமுகமக்கள் கண்ணுற்றனர். அதனால் ஏகஇறைவனை நம்பிக்கை கொண்டனர். அதுபோல நபி(ஸல்) அவர்களுக்கு வழங்கிய அத்தகைய அற்புதம் வஹிதான் என்று மேற்குறிபிட்ட செய்தி கூறுகிறது. அதாவது முன்சென்ற நபிமார்களுக்கு வழங்கப்பட்ட அற்புதமாகட்டும், நபி(சல்) அவர்களுக்கு வழங்கபட்ட வஹி அல்லாத ஏனைய அற்புதங்கள் யாவும் அந்த அந்த காலத்தை சார்ந்த சமூகத்தினருக்கு உரியதாய் இருந்தது. அந்த சமுகத்திற்கு அந்த அற்புதங்களை துணையாகக் கொண்டு நபிமார்கள் தங்களை நம்பும்படி வாதிட்டனர். உதரணமாக மூசா அலை அவர்கள் காலத்தில் கடல் பிளந்த அற்புதம். அவரது சமுகத்தினர் அனைவரும் கண்ணுற்றனர். நம்பிக்கை கொண்டனர். 

  அதுபோல நபி(சல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட வஹீயானது நபி(ஸல்) அவர்களது மரணத்திற்கு பிறகும் யுகமுடிவு நாள்வரை உள்ள மக்களுக்கு இஸ்லாத்தை போதிக்கும் அற்புதமாக, யுகமுடிவு நாள்வரை உள்ள மக்கள் அதை காணும் படியாக, யுகமுடிவுவரை சுயசாட்சி பகர்வதாய், நபி(சல்) அவர்களுக்கும் அந்த வஹியே சாட்சி பகர்வதாய் அமைந்த அற்புதமாக இன்றும் இருப்பதை நம்மால் காணமுடிகிறது. அந்த அற்புதம்தான் இன்றும் அமேரிக்க, ஐரோப்பிய கண்டத்தை அனைத்து எதிர்ப்பையும் மீறி வென்றுகொண்டிருக்கிறது என்பது உண்மை அல்லவா. நபி(சல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட ஏனைய அற்புதங்களான சந்திரன் பிளந்தது உள்ளிட்ட எதுவும் இந்த தனிச்சிறப்பை கொண்டிருக்கவில்லை. இதைதான் நபி(சல்) அவர்கள் “அவற்றைக் காணும் மக்கள் நம்பித்தான் ஆகவேண்டிய நிலை இருந்தது” என்ற தொடரின் மூலம் விளக்குகிறார்கள்.

விமர்சனம் 2: ஹதீஸில் கூறப்பட்ட சந்திரன் பிளந்தது என்ற செய்தியின் உண்மைதன்மை சந்தேகத்திற்குரியது, அந்த விண்ணியல் சம்பவம் குறித்த அரபு அல்லாத மற்ற சமுகத்தாரின் குறிப்புகள் இல்லை. 

நமது பதில்:

மேற்குறிபிட்ட சந்திரன் பிளந்த செய்தியானது ஹதீஸ்களில் பின்வருமாறு இடம் பெற்றுள்ளது:
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
           மக்காவாசிகள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஓர் அற்புதச் சான்றைக் காட்டும்படி கேட்டார்கள். எனவே, சந்திரன் (இரண்டாகப்) பிளவுண்ட நிகழ்ச்சியை (தம் உண்மைக்குச் சான்றாக) நபி(ஸல்) அவர்கள் காட்டினார்கள்.(புகாரி 3637)

            இதேபோன்று பல சஹாபாத் தோழர்கள் அறிவிக்கின்றனர். அவர்களுள் இப்னு அப்பாஸ்(ரலி), இப்னு உமர்(ரலி), இப்னு மஸூத்(ரலி), ஆகியோர் அறிவிக்கும் ஒரே செய்தி பல அறிவிப்பாளர் தொடர்களை பெற்று முத்தவாதிர் (அறிவிப்பாளர் தொடரின் ஓவ்வொரு நிலையிலும் குறைந்த பட்சம் நான்கிற்கு மேற்பட்ட அறிவிப்பாளர்களை கொண்டிருக்கும் செய்தியாகும்). ஆக இந்த செய்தி மிக வழுவான செய்தியாகும். ஒரு சம்பவம் குறித்து குறிப்பிட்ட பகுதியில் வாழ்ந்த சமகால மக்களின் நேரடி சாட்சியாக இந்த ஹதீஸ்கள் அமைகின்றன.

          ஆனால் இந்த சம்பவம் குறித்து ஏன் மற்ற சமூகத்தினர் பதியவில்லை என்ற கட்டுரையாளரின் கேள்வி எவ்வளவு அபத்தமானது என்பது அது குறித்த அறிவியல் பார்வை நமக்கு காட்டிவிடும். பொதுவாக விண்ணியல் நிகழ்வுகளை உலகில் உள்ள அனைவரும் ஒரு சேர கண்ணுர இயலாது என்பது ஏனோ கட்டுரையாளரின் சிந்தனையில் தோன்றவில்லை. உதாரணமாக சந்திர கிரகணம், சூரிய கிரகணம் போன்றவற்றின் குறிபிட்ட நிலையை அனைத்து மக்களும் ஒரு சேர காணவியலாது. வரலாறு நெடுகிலும் பதிவு செய்யப்பட்ட பல கிரகணங்கள் ஒவ்வோரு முறையும் ஏதேனும் ஒரு சமுகத்தாரால்தான் பதிவு செய்யப்பட்டிருப்பதை நம்மால் காணவியலும். உதரணமாக கிபி 14 செப் 27ல் நிகழ்ந்த சந்திர கிரகணத்தை ரோம் பகுதியில் வாழ்ந்த மக்களின் குறிப்புகளில் காணமுடிகிறது, ஏனைய சமூக மக்களின் குறிப்புக்களில் காண வியலாது. (2)

     ஆக இத்தகைய நெடுநேரம் நிடிக்கும் விண்ணியல் நிகழ்வுகளே இந்த நிலையில் இருக்கும் போது, சிறிது நேரம் நடை பெறும் நிகழ்வுகளை ஒரு சமுகத்தினர் பதிந்திருக்கும் போது ஏனையோர் பதியவில்லை என்ற கேள்வி விண்ணியல் நிகழ்வுகள் குறித்து சிறிதும் ஞானம் இல்லாதவரிடமே தோன்றும். மேலும் இதே போன்றதொரு நிகழ்வு “கேண்டர்பெரியின் கெர்வேஸ் (Gervase of Canterbury ) தனது தொகுப்பில் (“ த குரோனிக்கல்) கிபி 1178 ஜூன் 18ல் நடைபெற்றதாக பின்வருமாறு பதிவு செய்துள்ளார்.

      “This year on the 18th of June, when the Moon, a slim crescent, first became visible, a marvellous phenomenon was seen by several men who were watching it. Suddenly, the upper horn of the crescent was split in two. From the mid point of the division, a flaming torch sprang up, spewing out over a considerable distance fire, hot coals and sparks. The body of the Moon which was below, writhed like a wounded snake. This happened a dozen times or more, and when the Moon returned to normal, the whole crescent took on a blackish appearance.”
    
    அதாவது நிலவானது இரண்டாக பிளந்ததாகவும், அந்த நிலவின் வெடிப்பில் இருந்து தீ பிளம்பு வெளியேறியதாகவும், அப்போது நிலவானது அடிபட்ட பாம்பை போல் சுடித்ததாகவும், பல முறை இந்த அதிர்வானது ஏற்பட்ட பிறகு நிலவு தனது நிலைக்கு திரும்பியதாகவும் கூறுகிறது அந்த குறிப்பு.  இத்தகைய நிகழ்வுகள் நடைபெறும் போது நிலவு தானே தன்னிலைக்கு வந்துவிடும் என்று மேற்கூறிய செய்தி குறிப்பிடுவதை நம்மால் அறிய முடிகிறது.(3)

     மேலும் இந்த நிகழ்வும் இங்கிலாந்து அல்லாத மக்களினால் பதிவு செய்யப்படவில்லை. இது குறித்து கூறும்போது சரியான இடத்தில் சரியான நேரத்தில் இருக்கும் மக்களால் மட்டுமே இத்தகைய நிகழ்வுகளை காணமுடியும் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். (இதைதான் ஒருதலைபட்சம் என்று மக்கள் கூறுவார்கள் என்பது வேறு விஷயம்)


           "I think they happened to be at the right place at the right time to look up in the sky and see a meteor that was directly in front of the moon, coming straight towards them," Withers said. This idea was strongly suggested by others in a 1977 scientific paper.(4)



விமர்சனம் 3: சேர மன்னன் நிலவு பிளந்த்தை காண்டாரா????? 

நமது பதில்:




     நிலவு பிளந்த சமபவத்தினை உறுதி செய்ய சேரமான் பெருமானின் சாட்சியம் அவசியமற்றது என்பதுதான் நமது வாதம். ஆயினும் இது குறித்த பல இஸ்லாமிய எதிர்ப்பு வலைதளங்கள் உளறிவருவதால் இந்த சமபவம் குறித்து நாம் விளக்க வேண்டியுள்ளது.
     
        சேரமான் பெருமான் என்ற கேரள மன்னன் இந்த சம்வத்தை கண்டார் அதன் பிறகு அவர் இஸ்லாத்தை ஏற்றார் என்ற வாய்வழிச்செய்தி இருப்பதாக நாம் அறிய முடிகிறது. இது குறித்து இப்னு கஸீர் போன்ற அறிஞர்கள் காலத்திலும்(14ம் நூற்றாண்டு) இந்த தகவல்கள் இருந்ததாகவும் நாம் அறியமுடிகிறது. (பிதாயா வந் நிகாயா, பாகம் 2).இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் உள்ளது. அதாவது குறிபிட்ட இந்த விண்ணியல் அற்புதமும் அதை ஒரு மன்னர் கண்டதாகவோ அல்லது கேள்விப்பட்டதாவோ இடம்பெறும் செய்திகள் 6ம் நூற்றாண்டில் நடைபெற்று இருக்க வேண்டும். ஆனால் இது குறித்த குறிப்புகள் ஆறாம் நூற்றாண்டை சேர்ந்த கேரள வரலாற்று நூல்களில் காணமுடியவில்லை. இது களப்பிரர்களின் காலமாகும் (3 முதல் 7ம் நூற்றாண்டு). இதனை இருண்ட காலமாக வரலாற்று ஆசிரியர்கள் வருணிக்கின்றனர். இந்த காலத்தைய இலக்கியங்கள் பல காணமல் போய்விட்டன. இந்த காலம் குறித்து ரோமிலா தாப்பர் பின் வருமாறு குறிப்பிடுகிறார்.

        The Kalabhras are said to have been hill tribes, but soon became sufficiently settled to extend patronage to Buddhists and Jainas. Possibly this is why they were reviled in later texts, some of which were of Brahman authorship. The Change encouraged the breaking down of the system of clan-based societies. (P.No:327, Ch:10 The Peninsula: Emerging Regional Kingdoms c. AD 500-900, Penguin History of Early India from the Origins to AD 1300 by Romila Thapar)

       அதாவது களப்பிரர்கள் பவுத்த சமண சமயத்தை வளர்த்தனர். அதனால் அவர்களது வரலாறு சிதைக்கப்பட்டதாக ரோமிலா தாப்பர் குறிப்பிடுகிறார். மேலும் அது சாதிய அடிப்படையிலான சமூக அமைப்பை உடைத்தது என்று கூறுகிறார். ஆக பிராமணர்களால் உருவாக்கப்ட்ட பெரியபுராணம் போன்ற நூல்களை அடிப்படையாக கொண்டு எல்லாம் ஒரு வரலாற்று குறிப்பை மறுக்க இயலாது.

        மேலும் இவ்வாறு மக்காவிற்கு பயணம் மேற்கொண்ட இரு பெருமாள்கள் குறித்து பேராசிரியர் ஹெர்மான் குண்டார்ட் தனது கேரளோபதியில் குறிப்பிடுகையில் அதில் பானபெருமாள் பவுத்தத்தை ஏற்றதாகவும், அவர் பிறகு மக்காவிற்கு சென்றதாகவும் கூறுகிறார்.

     இங்கு இன்னொரு விஷயமும் கவனிக்கப்பட வேண்டியுள்ளது. அதாவது சேரமான் பெருமாள் என்பது சேர நாட்டை (சேர நாடு = கேரள நாட்டை) ஆட்சி செய்த அரசர்களை குறிக்கும் பொதுப்பெயரும் கூட. “சேர” என்ற வார்த்தை குறித்து வின்செண்ட் சுமித் என்ற வரலாற்று ஆசிரியர் தனது 

The Early History of India(P.No:447) என்ற புத்தகத்தில் பின்வருமாறு கூறுகிறார்.


     நாம் முன்பே கண்டது போல பவுத்த அரசர்களின் வரலாறு அழிக்கப்பட்டது போல இந்த மன்னனின் வரலாறும் ஏன் அழிக்கப்பட்டிருக்கக்கூடாது? இதில் சேரமான் ஜும்மா மசூதி முன்னாள் பவுத்த விஹாரமாக இருந்த இடம் என்பது குறிப்பிட்தக்கது.(5)

      மேலும் இந்திய வரலாற்று ஆராய்ச்சி கழகத்தின் முன்னாள் தலைவரான M.G.S. நாராயணன் குறிப்பிடும் போது

     “ there is no reason to reject the tradition that the last Chera king embraced Islam and went to Makkah, since it finds a place, not only in Muslim chronicles, but also in Hindu brahmanical chronicles like the Keralolpatti which need not be expected to concoct such a tale which is no way enhances the prestige or the interests of the Brahmins or Hindu population.” (Perumlas of Kerala, M.G.S Narayanan,P.No: 65 )

   சேர மன்னன் இஸ்லாத்தை ஏற்றது தொடர்பாக இஸ்லாமிய நூல்கள்* மற்றும் இந்து பிராமணர்களின் ஏடுகளில் காணப்படும் செய்தியை மறுப்பதற்கு எந்த வரலாற்று முகாந்திரமும் இல்லை என்று குறிப்பிடுகிறார்.

*தாரிக் ஜுஹூருல் இஸ்லாம் ஃபில் மலபாரி என்ற முஹம்மத் பின் மாலிக் அவர்களின் நூல சேரமான் மன்னன் நிலவு பிளந்ததை கண்டுதான் இஸ்லாத்தை ஏற்றதாக கூறும் மிக பழமையான வரலாற்று நூல் என்பது குறிப்பிட்தக்கது


     மேலும் இந்த வரலாற்று செய்தி பற்றி கட்டுரையாளரின் விமர்சனம் ஒன்றை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அதாவது நபி(சல்) அவர்களை எந்த இந்திய அரசரும் சந்தித்தற்கான குறிப்பு இல்லை என்று கூறுகிறார். ஆனால் அல் இஷாபாவில் (பாகம் 3, பக்கம் 170) நபி(சல்) அவர்களை சந்தித்த இந்திய மன்னரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரை சர்பனாக் அல் ஹிந்த் என்ற பெயரால் நபிதோழர்கள் அழைத்ததாகவும் குறிப்பு காணப்படுகிறது.


    இப்போது நமது கேள்வி என்னவென்றால் சாதிய சமூக அமைப்பை எதிர்க்கும் பவுத்த சமண சமயத்தை வளர்த்த களப்பிரர்களின் வரலாறே சிதைக்கப்பட்டிருக்கும் போது, இஸ்லாமியர்களின் வரலாறு மட்டும் துள்ளியமாக காணக்கிடைக்கும் என்று எவ்வாறு கட்டுரையாளர் நம்புகிறார்?

      இஸ்லாம் 7ம் நூற்றாண்டிலேயே மலபாரை வெற்றி கொண்டது எப்படி? அதாவது மாலிக் இப்னு தீனார் என்ற தாபிஈயால் (மரணம்: ஹிஜ்ரி 130/748 கிபி) கேரளாவின் கசார்கோடு , கொடுங்காநல்லுர் பகுதியில் நிறுவப்பட்ட ஜும்மா பள்ளிகளை காணும் போது அது பெருந்திரலான மக்களுக்கு நிறுவப்பட்டிருப்பதை நாம் அறிய முடியும். ஆக மாலிக் இப்னு தீனார் வருவதற்கு முன்பாகவே கேரளாவில் இஸ்லாம் இவ்வளவு விரைவாக காலூண்ற காரணம் என்ன???

விமர்சனம் 4: லூனார் ரெயில் என்று அழைக்கப்படும் சந்திரனில் காணப்படும் பிளவுகள் குறித்த இன்றைய அறிவியலின் நிலைபாட்டை அடிப்படையாக கொண்ட விமர்சனம்.

நமது பதில்:

       இறைவனால் அன்றைய மக்களுக்காக நிகழ்த்தப்பட்ட ஓர் அற்புதம் நிலவு பிளந்த சம்பவம். அதன் சுவடுகள் இன்றிருக்கும் நிலவில் இருக்க வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை. நிலவு தொடர்ச்சியாக விண்கற்களினால் பாதிக்கப்படுகிறது. அதில் சுவடுகள் இல்லாமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதுதான் நிதர்சன உண்மை. இதில் லூனார் ரெயில்கள் குறித்த நாசாவின் கூற்று ஏற்று கொள்ளப்பட்டாலும் நாசா உள்ளிட்ட எந்த ஆய்வு நிறுவனமும் நிலவை முழுமையாக ஆராய்ந்து முடிக்கவில்லை. லூனார் ரெயில்கள் எதனால் தோன்றி இருக்கும் என்பதற்கு காரணங்கள் அனைத்தும் யூகங்களாகத்தான் உள்ளனவே ஒழிய ஆய்வுக்குட்படுத்தி உறுதிசெய்யப்பட்டவை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.(7)(8)



Monday, February 27, 2017

"பெண் சிசுக்கொலை" - மதங்கள் என்ன சொல்கின்றன?

"பெண் சிசுக்கொலை" - மதங்கள் என்ன சொல்கின்றன?




 ஹிந்துயிசம் - ஹிந்து மத பிரமுகர்கள்  கண்டித்த போதிலும், மத/வேதங்கள் இது தொடர்பாக என்ன சொல்கின்றன என்ற விபரம் இல்லை. வேதங்களில் இது தொடர்பான விபரம் அறிந்தவர்கள்,  ஆதாரத்துடன் பதிவு செய்யுங்கள்.

இந்திய சட்டத்தில் தடை உள்ளது ஆனால் இந்த சட்டம் "ஹிந்து மத" சட்டம் அல்ல.


கிறித்துவத்திலும், யூத  மதத்திலும்  கண்டிக்கப்பட்டுள்ளது.


இஸ்லாத்திற்கு முன் அரேபியர்களிடத்தில் இந்த பழக்கம் நடைமுறையில் இருந்து வந்தது. அதை இஸ்லாம் அடியோடு ஒழித்து, அதைக் கொலைக்குற்றமாக அறிவித்தது.


இது தொடர்பான திருக்குர்ஆன் வசனம்:

" என்ன பாவத்துக்காகக் கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்டவள் விசாரிக்கப்படும்போது" [81:8-9]


"வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும்." [17:31]

மனித சட்டங்களால் மட்டும்  இவைகளை தடுத்து நிறுத்த முடியாது.

இஸ்லாம் எப்படி இதை அடியோடு ஒழித்தது என்று பார்ப்போம்.


பெண் குழந்தைகளைக் கொல்பவர்களின் முக்கியமான  காரணம் பொருளாதார சுமை மட்டுமே.அந்தக் கவலை தீர்க்கப்பட்டால் இவை அடியோடு ஒழிந்துவிடும்.



1. வறுமைக்கு பயந்து அவர்கைளக் கொல்லாதீர்கள் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம் என்ற உறுதிமொழியை இறைவன் அளிக்கின்றான். இது குழந்தைகளுக்கு மட்டுமல்ல. ஒவ்வொரு மனிதனுக்கும் பொதுவானது. எந்த நிலையிலும் உயிரை எடுப்பதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை.


2. மீறிச் செய்தால், இறைவனின் நீதிமன்றத்தில் நீங்கள் குற்றவாளியாக நிறுத்தப்படுவீர்கள். அப்போது "என்ன குற்றத்திற்காக  அவள் கொல்லப்பட்டாள் " என்று உங்களிடம் விசாரிக்கப்படும்.


ஒன்று பொருளாதார உத்திரவாதம் - இரண்டு குற்றத்திற்க்கான தண்டனை.  மன நல ரீதியான இந்த போதனை, 100%  சதவீத வெற்றியைக் கொடுத்தது.


Ref:http://www.bbc.co.uk/ethics/abortion/medical/infanticide_1.shtml