பக்கங்கள் செல்ல

Tuesday, December 27, 2016

எதிர் தொடர் 23: பாதுகாக்கப்பட்ட திருக்குர்ஆன்

ஏகஇறைவனின் திருப்பெயரால்


      இந்த தொடரில் கட்டுரையாளர் குர்ஆன்பாதுகாக்கப்பட்டது குறித்து சில கேள்விகளை முன்வைத்துள்ளார். ஒவ்வோர் தொடரிலும் கட்டுரையாளரின் இஸ்லாம் குறித்த பார்வை மிசனரிகளின் வாந்திதான் என்பதை தோழுரித்து வருகிறோம். இவர் தன்னை நாத்திகராக காட்டி கொண்டாலும் இவரால் கூறப்படும் ஆதாரங்கள் யாவும் கிறித்தவ மிசனரிகளின் வளைத்தளங்களில் இருந்து பெறப்பட்டவைதான். அதே வரிசையில் இந்த கட்டுரையும் எதிர் கட்டுரையாளரால் முன்வைக்க பட்டுள்ளது. இன்ஷா அல்லாஹ் இந்த தொடரில் குர் ஆன் குறித்த கட்டுரையாளரின் ஒவ்வொரு விமர்சனத்திற்கும் பதிலளிப்போம்.

வசன மாற்றம் அல்லது சட்ட மாற்றம் ஏன்?
 
நமது பதில்:
      வசனங்களை அல்லாஹ் மாற்றுவது என்பதற்கு நமது கட்டுரையாளர் முன் சொன்னது என்ன சொதப்பலா என்ற அறிவுப்பூர்வமான???? ஒரு கேள்வியை முன்வத்துள்ளார். அதற்கான விடையை அல்லாஹ் தெள்ளத்தெளிவாக தனது வேதத்தில் கூறிவிட்டான்.

وَإِذَا بَدَّلْنَا آيَةً مَكَانَ آيَةٍ وَاللَّهُ أَعْلَمُ بِمَا يُنَزِّلُ قَالُوا إِنَّمَا أَنْتَ مُفْتَرٍ بَلْ أَكْثَرُهُمْ لا يَعْلَمُونَ (١٠١) قُلْ نَزَّلَهُ رُوحُ الْقُدُسِ مِنْ رَبِّكَ بِالْحَقِّ لِيُثَبِّتَ الَّذِينَ آمَنُوا وَهُدًى وَبُشْرَى لِلْمُسْلِمِينَ (١٠٢)

ஒரு வசனத்தின் இடத்தில் மற்றொரு வசனத்தை நாம் மாற்றினால் "நீர் இட்டுக்கட்டுபவர்'' எனக் கூறுகின்றனர். எதை அருள வேண்டும் என்பதை அல்லாஹ் நன்கறிந்தவன். மாறாக அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள். நம்பிக்கையாளர்களைப் பலப்படுத்திடவும், முஸ்லிம்களுக்கு நேர்வழியாகவும், நற்செய்தியாகவும் இதை உமது இறைவனிடமிருந்து "ரூஹுல் குதுஸ்' உண்மையுடன் இறக்கினார்' என்பதை (முஹம்மதே!) கூறுவீராக!  (அல் குர்ஆன் 16:101,102)
மேற்கூறிய காரணம்தான் பிர் மவூனா சம்பவத்தின் போது வசனங்களை இறக்கியதற்கும் அதை நீக்கியதற்கும் காரணம் என்பது பின்வரும் செய்தியே போதுமானது:

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

   பிஃரு மஊனாவில் தம் தோழர்களைக் கொலை செய்தவர்களுக்கெதிராக நபி(ஸல்) அவர்கள் முப்பது நாள் காலை(த் தொழுகை)யில் பிரார்த்தித்தார்கள். அப்போது, அல்லாஹ்வுக்கம் அவனுடைய தூதருக்கம் மாறு செய்த உஸய்யா, ரிஅல், தக்வான், (பனூ) லிஹ்யான் குலத்தாருக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள்.

அனஸ்(ரலி) கூறினார்:

      எனவே, இறைவன் தன்னுடைய தூதர்(ஸல்) அவர்களுக்கு பிஃரு மஊனாவில் கொல்லப்பட்டவர்களின் விஷயத்தில் குர்ஆன் வசனம் ஒன்றை அருளினான். அதை நாங்கள் ஓதிவந்தோம். பின்னர் (இறைவனால் அந்த வசனம்) நீக்கப்பட்டுவிட்டது.

(அந்த வசனம் இதுதான்:) 'நாங்கள் எங்கள் இறைவனைச் சந்தித்து விட்டோம். அவன் எங்களைக் குறித்துத் திருப்தியடைந்தான். நாங்களும் அவனைக் குறித்துத் திருப்தியடைந்தோம்' என்று எங்கள் சமுதாயத்தாரிடம் தெரிவித்து விடுங்கள்.
                                                   நூல் : புஹாரி 4095
  


      மேற்குறிபிட்ட சம்பவத்தை குறிப்பிட்டு கட்டுரையாளர் விமர்சித்துள்ளார். பிஃர் மஊனாவில் கொல்லப்பட்டவர்கள் அவர்களது சமுதாயத்திற்கு அல்லாஹ்விடம் அறிவிக்க வேண்டியதை அவர்கள் சமுதாயத்திற்கு அறிவித்துவிட்டான். அவர்களது சமுகத்தாருக்கு பயம் நீங்கிவிட்ட்து அல்லது அவர்கள் சமுதாயத்தாரின் கவலை நீங்கிவிட்டது. பிறகு அந்த வசனத்தின் தேவை இல்லாமல் போனதும் அல்லாஹ் அதை நீக்கிவிட்டான். அந்த வசனத்தை படிக்கும் யாருக்கும் இந்த விஷயம் புரியும். ஏனோ நடுநிலை நாத்திகன் என்று கூறும் கட்டுரையாளருக்கு இது தோன்றவில்லை.  


நபி(சல்) அவர்கள் காலத்தில் குர்ஆனுக்கு இறுதி வடிவம் வழங்கப்பட வில்லையா?
நமது பதில்:
            நபி(சல்) அவர்கள் காலத்திலேயே குர்ஆனுக்கு இறுதி வடிவம் கொடுக்கப்படவில்லை என்ற கருத்தை தனது விமர்சனத்தில் முன்வைத்துள்ளார். நாம் சிறிது ஆய்வு செய்தோமென்றால் குர்ஆனை நபி(சல்) அவர்கள் எந்த வடிவில் விட்டு சென்றார்ளோ அதே வடிவத்தில்தான் இன்றும் பயன்பாட்டில் உள்ளது என்பதைதான் காட்டும். அதற்கான வரலாற்று செய்திகளை வரிசைபடுத்தினால் கட்டுரையாளரின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைத்துவிடும்.
நபி (சல்) அவர்கள் காலத்திலேயே குர்ஆன் முழுமையாக்கப்பட்டதா?
      முதலில் குர்ஆன் எவ்வாறு பாதுகாக்கப்பட்டது அல்லது பாதுக்காக்கப்படும் என்பதை அல்லாஹ் முன்பே அறிவித்துவிடுகிறான். அதன் அடிப்படையில்தான் இன்று வரை பாதுகாக்கப்படுகிறது. அல்லாஹ் தான் எவ்வாறு குர்ஆனை பாதுகாக்கவுள்ளேன் என்பதை பின்வருமாறு கூறுகிறான்:
بَلْ هُوَ آيَاتٌ بَيِّنَاتٌ فِي صُدُورِ الَّذِينَ أُوتُوا الْعِلْمَ وَمَا يَجْحَدُ بِآيَاتِنَا إِلا الظَّالِمُونَ (٤٩)

     மாறாக, இவை தெளிவான வசனங்கள். கல்வி வழங்கப்பட்டோரின் உள்ளங்களில் இருக்கின்றன. அநீதி இழைத்தோரைத் தவிர வேறு எவரும் நமது வசனங்களை மறுக்க மாட்டார்கள். (அல்குர்ஆன் 29:49)

மேலும் நபி(சல்) அவர்கள் அல்லாஹ் கூறுவதாக பின்வருமாறு கூறுகிறார்கள்:
وَقَالَ إِنَّمَا بَعَثْتُكَ لأَبْتَلِيَكَ وَأَبْتَلِيَ بِكَ وَأَنْزَلْتُ عَلَيْكَ كِتَابًا لاَ يَغْسِلُهُ الْمَاءُ تَقْرَؤُهُ نَائِمًا وَيَقْظَانَ

இயாள் பின் ஹிமார் அல்முஜாஷிஈ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நாள் உரையாற்றியபோது பின்வருமாறு கூறினார்கள்:
.................மேலும் (என்னிடம்) இறைவன், நான் உம்மைச் சோதிப்பதற்கும் உம்மைக் கொண்டு (பிறரைச்) சோதிப்பதற்குமே உம்மை நான் அனுப்பினேன். நீரில் அழிந்துபோய்விடாத வேதத்தையும் உமக்கு நான் அருளினேன். அதை உறங்கும்போதும் விழித்திருக்கும் நிலையிலும் நீர் ஓதுகின்றீர்" என்று கூறினான்.
                                                நூல்: முஸ்லிம் 5498
      அதாவது நீரினால் அழிக்க முடியாத , மனனமிட எளிமையான வகையிலும் அமைந்த வேதத்தை தான் வழங்கியதாக அல்லாஹ் கூறுவதாக நபி(சல்) அவர்கள் கூறுகிறார்கள்.
     மனதில்தான் குர்ஆன் பாதுகாக்கப்பட்டது. மேலும் இவ்வாறு வழங்கப்பட்ட வசனங்களை நபிதோழர்கள் மனனம் செய்தே பாதுகாத்தும் வந்தனர்.

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ صَالِحٍ، حَدَّثَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ أَبِيهِ، جُبَيْرِ بْنِ نُفَيْرٍ عَنْ أَبِي الدَّرْدَاءِ، قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَشَخَصَ بِبَصَرِهِ إِلَى السَّمَاءِ ثُمَّ قَالَ " هَذَا أَوَانٌ يُخْتَلَسُ الْعِلْمُ مِنَ النَّاسِ حَتَّى لاَ يَقْدِرُوا مِنْهُ عَلَى شَيْءٍ " . فَقَالَ زِيَادُ بْنُ لَبِيدٍ الأَنْصَارِيُّ كَيْفَ يُخْتَلَسُ مِنَّا وَقَدْ قَرَأْنَا الْقُرْآنَ فَوَاللَّهِ لَنَقْرَأَنَّهُ وَلَنُقْرِئَنَّهُ نِسَاءَنَا وَأَبْنَاءَنَا .........

ஜுபைர் பின் நுஃபைர் அவரகள் அபூ தர்தா(ரலி) கூறியதாக அறிவித்ததாவது:
      நாங்கள் நபி(சல்) அவர்களுடன் இருந்த போது வானத்தை நோக்கி பார்த்தவர்களாக “மக்களிடம் இருந்து கல்வி முற்றிலுமாக மக்களிடம் எதுவுமே இல்லை எனும் அளவிற்கு அகற்றப்படும் என்று கூறினார்கள். அதற்கு ஜியாத் பின் லபீத்(ரலி) அவர்கள் நாங்கள் குர்ஆனை மனனமிட்டு ஓதிவருகிறோம். அல்லாஹ்வின் மீது ஆணையாக நாங்கள் ஓதுவோம், எங்கள் பெண்களும் குழந்தைகளும்  ஓதுவார்கள். இந்நிலையில் எப்படி அது எங்களிடம் இருந்து அகற்றப்படும் என்று கேட்டார்கள்........  
                                                   நூல்:  திர்மிதி 2653

இப்படி குர்ஆன் முழுவதையும் மனனம் செய்த நபிதோழர்களில் சிலர்:
      இப்னு மஸூத்(ரலி), அபூ அய்யூப்(ரலி), அபூபக்கர்(ரலி), அபூ தர்தா(ரலி), அபூ ஜைது(ரலி), அபூ மூஸா அல் அஸ்அரி(ரலி), அபூ ஹூரைரா(ரலி), உபை பின் காஹ்ப்(ரலி), உம்மு சலாமா(ரலி), தமிமுத் தாரி(ரலி), ஹுதைஃபா(ரலி), ஹஃப்ஸா(ரலி), ஸைது பின் தாபித்(ரலி),சஃத் பின் உபாதா(ரலி), உபைத் அல் காரி(ரலி), சஃத் பின் முந்தீர்(ரலி), சிஹாப் அல் குரைஷி(ரலி), தல்ஹா(ரலி), ஆயிஷா(ரலி), உபாதா பின் அஸ்ஸாமித்(ரலி), இப்னு அப்பாஸ்(ரலி), அப்துல்லாஹ் பின் உமர்(ரலி), அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி), உத்மான் பின் அஃப்பான் (ரலி), உக்பா பின் அமீர்(ரலி), அலி பின் அபிதாலிப்(ரலி), உமர் பின் அல்கத்தாப்(ரலி), அம்ர் அல் ஆஸ்(ரலி), முஃஆது பின் ஜபல்(ரலி),…………….

      குர்ஆனின் அமைப்பும் அந்த வகையிலேயேதான் அமைந்துள்ளது. அதாவது மனனம் செய்ய எதுவாகவும், செவி வழியில் மனனமிடுவது எதுவாகவும் அதன் மொழியியல் அமைப்பு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆக அல்லாஹ் கூறுவது போல இன்றுவரை மூலப்பிரதியாக இருப்பது குர்ஆனை மனனமிட்டவரின் உள்ளம்தான்.

சூராக்களின் வடிவம் நபி(சல்) அவர்கள் காலத்திலேயே முடிந்தது:
      மனனமிட்டு பாதுகாத்தல் என்பது மட்டும் அல்லாமல் எழுத்து வடிவிலும் குர்ஆனை பாதுகாக்க நபி(சல்) அவர்கள் ஏற்பாடுகளை செய்தார்கள்
      நபி(சல்) அவர்கள் காலத்திலேயே நபி(சல்) அவர்களின் மேற்பார்வையில் குர்ஆனில் இடம் பெற்றிருக்கும் சூராக்களின் வடிவம் முழுமையடைந்துவிட்டது. அதாவது எந்த எந்த சூராவில் எந்த எந்த வசனங்கள் இடம்பெற வேண்டும் என்பது நபி(சல்) அவர்கள் காலத்திலேயே நபி(சல்) அவர்களால் நிர்ணயிக்கப்பட்டது.

பராஉ(ரலி) அறிவித்தார்
         'இறைநம்பிக்கையாளர்களில் அறப்போரில் கலந்து கொள்ளாமல் இருந்துவிட்டவர்களும், தம் உயிராலும் பொருளாலும் இறைவழியில் அறப்போர் புரிந்தவர்களும் சமமாக மாட்டார்கள்' எனும் (திருக்குர்ஆன் 04:95 வது) இறைவசனம் அருளப்பட்டபோது, நபி(ஸல்) அவர்கள் (என்னிடம்) 'ஸைதை அழைத்து வாருங்கள். அவர் தம்முடன் 'பலகை, மைக்கூடு, அகலமான எலும்பு அல்லது 'அகலமான எலும்பு, மைக்கூடு' ஆகியவற்றை எடுத்துவரட்டும்' என்று கூறினார்கள். (ஸைத் இப்னு ஸாபித்(ரலி) வந்தபோது,) 'இந்த (திருக்குர்ஆன் 04:95 வது) இறைவசனத்தை எழுதிக்கொள்ளுங்கள்!' என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் முதுகுக்குப் பின்னால், கண் பார்வையற்றவரான அம்ர் பன் உம்மி மக்த்தூம்(ரலி) இருந்தார்கள். அவர், 'இறைத்தூதர் அவர்களே! தாங்கள் எனக்கு என்ன உத்தரவிடுகிறீர்கள். நானோ, கண்பார்வையற்ற மனிதனாயிற்றே!' என்று கேட்டார்கள். உடனடியாக அதே இடத்தில் 'இடையூறு உள்ளவர்கள் தவிர' எனும் (இணைப்புடன்) இவ்வசனம் (முழுமையாக) இறங்கிற்று.
                                                    நூல்: புஹாரி 4990
      இவ்வாறு வசனங்கள் இறங்க இறங்க குர்ஆனை மனனமிட்டது அல்லாமல் எழுத்து வடிவிலும் பாதுகாக்கப்பட்ட்து. மேலும் ஒவ்வோர் சூராவிலும் வசனங்கள் எவ்வாறு இடம் பெறவேண்டும் என்பதையும் எழுத்து பிரதிகளில் பதிய ஆணையிட்டார்கள்:

                حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، وَمُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، وَابْنُ أَبِي عَدِيٍّ، وَسَهْلُ بْنُ يُوسُفَ، قَالُوا حَدَّثَنَا عَوْفُ بْنُ أَبِي جَمِيلَةَ، حَدَّثَنَا يَزِيدُ الْفَارِسِيُّ، حَدَّثَنَا ابْنُ عَبَّاسٍ، قَالَ قُلْتُ لِعُثْمَانَ بْنِ عَفَّانَ مَا حَمَلَكُمْ أَنْ عَمَدْتُمْ، إِلَى الأَنْفَالِ وَهِيَ مِنَ الْمَثَانِي وَإِلَى بَرَاءَةَ وَهِيَ مِنَ الْمِئِينَ فَقَرَنْتُمْ بَيْنَهُمَا وَلَمْ تَكْتُبُوا بَيْنَهُمَا سَطْرَ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَوَضَعْتُمُوهُمَا فِي السَّبْعِ الطُّوَلِ مَا حَمَلَكُمْ عَلَى ذَلِكَ فَقَالَ عُثْمَانُ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِمَّا يَأْتِي عَلَيْهِ الزَّمَانُ وَهُوَ تَنْزِلُ عَلَيْهِ السُّوَرُ ذَوَاتُ الْعَدَدِ فَكَانَ إِذَا نَزَلَ عَلَيْهِ الشَّىْءُ دَعَا بَعْضَ مَنْ كَانَ يَكْتُبُ فَيَقُولُ ضَعُوا هَؤُلاَءِ الآيَاتِ فِي السُّورَةِ الَّتِي يُذْكَرُ فِيهَا كَذَا وَكَذَا وَإِذَا نَزَلَتْ عَلَيْهِ الآيَةُ فَيَقُولُ ضَعُوا هَذِهِ الآيَةَ فِي السُّورَةِ الَّتِي يُذْكَرُ فِيهَا كَذَا وَكَذَا ……..

இப்னு அப்பாஸ்(ரலி) கூறியதாவது:
            நான் உஸ்மான் பின் அஃபானிடம் “ அல் அன்ஃபால் நூறுக்கு குறைவான வசனங்களை கொண்டிருக்க, அது குறித்து உங்களது கருத்து என்ன ?, அல் பராஹ் அல்லது அத் தவ்பா நூறு வசனங்களுக்கு மேல் கொண்டிருக்க, அது குறித்து உங்களது கருத்து என்ன?” என்று கேட்டேன். மேலும் “நீங்கள் ஏன் அவ்விரணடையும் ஒன்றாக பதிவிட்டு ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்’ என்பதை எழுதாமல் விட்டீர்கள்” என்றும் கேட்டேன். அதற்கு உஸ்மான் அவர்கள் “ நபி(சல்) அவர்களுக்கு இறை அறிவிப்பு ஏதுமின்றி பல நாட்கள் சென்றிருக்கும், பிறகு சில நேரங்களில் அதிகமானவை இறங்கும். ஆக ஏதனும் இறைவனிடம் இருந்து அறிவிக்கப்பட்டால், எழுத்தர்களை அழைப்பார்கள். மேலும் கூறுவார்கள் இந்த இந்த இடத்தில் இன்ன இன்ன வசனங்கள் இடம்பெறும் சூராவில் இந்த வசனத்தை எழுதுங்கள் என்று கட்டளையிடுவார்கள் ........( நூல்: திர்மிதி 3086)

      இப்படி ஒவ்வொரு வசனம் இறங்கும் போதும் நபி(சல்) அவர்கள் எந்த சூரவில் அதை பதிவிட வேண்டும் என்பதையும் சேர்த்து கூறுவார்கள். மேலும் சந்தர்ப்பங்கள் அமையும் போது குர் ஆன் அத்தியாயங்களை மொத்தமாக ஓதியும் காட்டுவார்கள். 

      ஹாரிஸா பின் நுஅமான் (ரலி) அவர்களின் புதல்வியார் உம்மு ஹிஷாம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் ஓராண்டு அல்லது ஓராண்டும் சில மாதங்களும் ஒரே அடுப்பையே பயன்படுத்திவந்தோம். நான் "காஃப். வல்குர்ஆனில் மஜீத்" எனும் (50ஆவது) அத்தியாயத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் நாவிலிருந்தே மனனமிட்டேன். அவர்கள் ஒவ்வொரு ஜுமுஆவிலும் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபடி மக்களுக்கு உரையாற்றும் போது அந்த அத்தியாயத்தை ஓதுவார்கள். (முஸ்லிம் 1582.)
      இப்படியாக ஒவ்வொரு அத்தியாயத்தின் அமைப்பும் நபி(சல்) அவர்கள் காலத்திலேயே சரிபார்க்கப்பட்டு மக்களின் உள்ளங்களில் பாதுகாக்கப்பட்டது. மேலும் ஒவ்வோர் தொழுகையிலும் அத்தியாயங்கள் ஓதப்பட்டு சரியான அமைவு சரிபார்க்கப்பட்டது. தொழுகையும் மக்களின் மனதில் குர் ஆனை நிலை நிறுத்துவதில் பெரும் பங்காற்றியது. மேலும் நபி(சல்) அவர்கள் காலத்தில் ஒவ்வொரு ரமலான் மாதத்திலும் அதுவரை இறங்கிய குர்ஆனை நபி(சல்) அவர்களுக்கு ஜிப்ரீல்(அலை) அவர்கள் மூலமாக தொகுத்து வழங்கப்பட்டது. நபி(சல்) அவர்கள் இறந்த வருடத்தில் இரண்டு முறை இந்த நிகழ்வு நடந்ததாக ஹதீஸ்கள் கூறுகின்றன.

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்:
      ஒவ்வோர் ஆண்டுக்கொரு முறை (வானவர் ஜிப்ரீல் அதுவரை அருளப்பெற்ற) குர்ஆன் வசனங்களை நபி(ஸல்) அவர்களுக்கு (மொத்தமாக) ஓதிக்காட்டுவது வழக்கம். நபி(ஸல்) அவர்கள் இறந்த ஆண்டில் இரண்டுமுறை அவர்களுக்கு (ஜிப்ரீல்) ஓதிக்காட்டினார்கள். நபி(ஸல்) அவர்கள் ஒவ்வோர் ஆண்டும் (ரமளான் மாதத்தின் இறுதிப்)பத்து நாள்கள் 'இஃதிகாஃப்' மேற்கொள்வது வழக்கம். அவர்கள் இறந்த ஆண்டு, (ரமளானில்) இருபது நாள்கள் 'இஃதிகாஃப்' மேற்கொண்டார்கள். (புஹாரி 4998)

    இப்படியாக சரிபார்க்கபட்ட குர் ஆன் தான் நபி(சல்) அவர்கள் மறைவிற்குப் பிறகு நபிதோழர்களிடம் இருந்தது.

அப்துல் அஸீஸ் இப்னு ருஃபைஉ(ரஹ்) கூறினார்
      நானும் ஷத்தாத் இப்னு மஅகில்(ரஹ்) அவர்களும் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் ஷத்தாத்(ரஹ்), 'நபி(ஸல்) அவர்கள் (உலகைப் பிரிந்தபோது, இந்தக் குர்ஆனில் இடம் பெறாத) வேறு (இறைவசனங்கள்) எதையும் (நம்மிடையே)விட்டுச் சென்றார்களா?' என்று கேட்டார்கள். இப்னு அப்பாஸ்(ரலி), '(இந்தக் குர்ஆனின்) இரண்டு அட்டைகளுக்கிடையேயுள்ள வசனங்களைத் தான் (இறைவேதமாக) நபி(ஸல்) அவர்கள்விட்டுச் சென்றார்கள்' என்று பதிலளித்தார்கள்.

      நாங்கள் (அலீ(ரலி) அவர்களின் புதல்வரான) முஹம்மத் இப்னு ஹனஃபிய்யா(ரஹ்) அவர்களிடம் சென்று, இது குறித்துக் கேட்டோம். அதற்கு அவர்கள் (இப்னு அப்பாஸ்(ரலி) பதிலளித்தது போன்றே) '(இந்தக் குர்ஆனின்) இரண்டு அட்டைகளுக்கிடையேயுள்ள வசனங்களைத்தான் (இறைவேதமாக) நபி(ஸல்) அவர்கள்விட்டுச் சென்றார்கள்' என்று பதிலளித்தார்கள்.( புஹாரி 5019)

அபூபக்ர்(ரலி) செய்தது என்ன?
 (வேத அறிவிப்பை எழுதுவோரில் ஒருவராக இருந்த) ஸைத் இப்னு ஸாபித் அல் அன்சாரி(ரலி) கூறினார்
.........எனவே, நீங்கள் குர்ஆனைத் தேடிக் கண்டுபிடித்து (ஒரே பிரதியில்) ஒன்று திரட்டுங்கள்' என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! மலைகளில் ஒன்றை நகர்த்த வேண்டுமென எனக்கு அவர்கள் கட்டளையிட்டிருந்தாலும் கூட அது எனக்குப் பளுவாக இருந்திருக்காது. குர்ஆனை ஒன்றுதிரட்டும்படி எனக்கு அவர்கள் கட்டளையிட்டது அதைவிட எனக்குப் பளுவாக இருந்தது. நான், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நீங்கள் எப்படிச் செய்கிறீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு அபூ பக்ர்(ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக! இது நன்மை(யான பணி) தான்' என்று பதிலளித்தார்கள். இதையே அன்னார் என்னிடம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருந்தார்கள். முடிவில் எதற்காக அபூ பக்ர் மற்றும் உமர் ஆகியோரின் மனத்தை அல்லாஹ் விரிவாக்கினானோ அதற்காக என் மனத்தையும் அல்லாஹ் விரிவாக்கினான். (குர்ஆனை ஒன்றுதிரட்ட முன் வந்தேன்.) எனவே, (மக்களின் கரங்களிலிருந்த) குர்ஆன் (சுவடிகளைத்) தேடினேன். அவற்றை போPச்ச மட்டைகள், ஓடுகள் மற்றும் (குர்ஆனை மனனம் செய்திருந்த) மனிதர்களின் நெஞ்சுகளிலிருந்து திரட்டினேன். (இவ்வாறு திரட்டியபோது) 'அத்தவ்பா' எனும் (9 வது) அத்தியாயத்தின் கடைசி (இரு) வசனங்களை அபூ குஸைமா அல் அன்சாரி(ரலி) அவர்களிடமிருந்து பெற்றேன்; அவரல்லாத வேறெவரிடமிருந்தும் இதனை நான் பெறவில்லை. (அவை:) 'உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கிறார். நீங்கள் துன்பத்திற்குள்ளாவது அவருக்குக் சிரமமாக இருக்கிறது. மேலும், உங்கள் (வெற்றியின்) விஷயத்தில் பேராவல் கொண்டவராகவும், நம்பிக்கையாளர்களின் மீது அதிகப் பரிவும், கருணையும் உடையோராகவும் இருக்கிறார். (நபியே! இதற்குப்) பின்னரும் அவர்கள் உம்மைப் புறக்கணித்தால் நீர் கூறிவிடும்: அல்லாஹ் எனக்குப் போதுமானவன். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவனையே நான் முழுமையாகச் சார்ந்திருக்கிறேன். மேலும், அவன் மகத்தான அரியாசனத்தின் அதிபதியாயிருக்கிறான்.' (திருக்குர்ஆன் 09:128, 129)
      (என் வாயிலாக) திரட்டித் தொகுக்கப்பட்ட குர்ஆன் பிரதிகள் (கலீஃபா) அபூ பக்ர்(ரலி) அவர்களிடம், அவர்களை அல்லாஹ் இறக்கச் செய்யும் வரை இருந்(து வந்)தது. பின்னர் (கலீஃபாவான) உமர்(ரலி) அவர்களிடம் அவர்களின் வாழ்நாளில் இருந்தது. (அவர்களின் இறப்பிற்குப்) பிறகு உமர்(ரலி) அவர்களின் புதல்வி ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் இருந்தது. (புஹாரி 4986).
      மேலே கூறப்பட்ட செய்தியையும் முன் சென்ற தலைப்பிகளிலும் உள்ள செய்திகளையும் வாசிப்பவர் எளிதாக ஒரு விஷயத்தை அறிந்து கொள்ளமுடியும். நபி(சல்) அவர்களது காலத்தில் துண்டு துண்டாக எழுதப்பட்ட குர்ஆனின் ஏடுகள் மொத்த குர்ஆனையும் கொண்ட மூலப்பிரதியான உள்ளத்தோடு ஒப்பீடு செய்யப்பட்டு முழுமையாக ஓரே புத்தகமாக மாற்றப்பட்டது என்பதுதான். அதனால்தான் மேற்குறிபிட்ட செய்தியில் ‘தொகுக்கப்பட்ட குர்ஆன்என்று பொருள்படும். جَمْعِ الْقُرْآنِ என்ற பதமே பயன்படுத்தப்படுகிறது. 
 
உஸ்மான்(ரலி) செய்தது என்ன?

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்
            ஹுதைஃபா யமான்(ரலி) உஸ்மான்(ரலி) அவர்களிடம் (அவர்களின் ஆட்சிக் காலத்தின்போது மதீனாவிற்கு) வருகை புரிந்தார்கள். (அப்போது) உஸ்மான்(ரலி), அர்மீனியா மற்றும் அஃதர் பைஜான் ஆகிய நாடுகளை இராக்கியருடன் சேர்ந்து வெற்றிகொள்வதற்கான போரில் கலந்துகொள்ளுமாறு ஷாம்வாசிகளுக்கு ஆணை பிறப்பித்தார்கள். 9 ஹுதைஃபா(ரலி) அவர்களை, (இராக் மற்றும் ஷாம் நாட்டு) முஸ்லிம்கள் குர்ஆனை ஓதும் முறையில் கருத்துவேறுபாடுகொண்டு அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 10 எனவே, ஹுதைஃபா(ரலி) உஸ்மான்(ரலி) அவர்களிடம், 'யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தங்களின் வேதங்களில்) கருத்து வேறுபாடுகொண்டது சூபால் இந்தச் சமுதாயமும் இந்த(த் திருக்குர்ஆன்) வேதத்தில் கருத்து வேறுபாடு கொள்வதற்கு முன்பே இவர்களைக் காப்பாற்றுங்கள், இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் அவர்களே!' என்று கூறினார்கள். எனவே, உஸ்மான்(ரலி) (அன்னை) ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் ஆளனுப்பி 'தங்களிடமுள்ள குர்ஆன் பதிவை எங்களிடம் கொடுத்து அனுப்புங்கள்! நாங்கள் அதனைப் பல பிரதிகள் படியெடுத்துவிட்டு திருப்பித் தந்து விடுகிறோம்' என்று தெரிவித்தார்கள்.
      எனவே, ஹஃப்ஸா(ரலி) தம்மிடமிருந்த குர்ஆன் பதிவை உஸ்மான்(ரலி) அவர்களிடம் கொடுத்தனுப்பினார்கள். ஸைத் இப்னு ஸாபித்(ரலி), அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி), ஸயீத் இப்னு ஆஸ்(ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு ஹாரிஸ் இப்னி ஹிஷாம்(ரலி) ஆகியோரிடம் அவற்றைப் பல பிரதிகளில் படியெடுக்கும்படி உஸ்மான்(ரலி) உத்தரவிட்டார்கள். மேலும், உஸ்மான்(ரலி) (அந்த நால்வரில்) குறையுக் குழுவினரான மூவரை நோக்கி, 'நீங்களும் (அன்சாரியான) ஸைத் இப்னு ஸாபித் அவர்களும் குர்ஆனில் ஏதேனும் ஒரு (எழுத்திலக்கண) விஷயத்தில் கருத்து வேறுபட்டால் குறையுயரின் (வட்டார) மொழிவழககுப்படியே பதிவு செய்யுங்கள். ஏனெனில், குர்ஆன் குறையுயரின் மொழிவழக்குப்படியே இறங்கிற்று' என்று கூறினார்கள். அந்த நால்வரும் அவ்வாறே செயல்பட்டார்கள். (ஹஃப்ஸா(ரலி) அவர்களிடமிருந்த) அந்தக் குர்ஆன் பதிவை பல பிரதிகளில் படியெடுத்தார்கள். பிறகு உஸ்மான்(ரலி) அந்தப் பிரதியை ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். பிறகு அவர்கள் படியெடுத்த பிரதிகளில் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு பகுதிக்கு அனுப்பிவைத்தார்கள். இதுவல்லாமல் (புழக்கத்திலிருந்த) இதர பிரதிகளை, அல்லது ஏடுகளை எரித்து விடும்படி உஸ்மான்(ரலி) உத்தரவிட்டார்கள். (புஹாரி 4987.)
     
     இஸ்லாம் பல பகுதிகளில் பரவலான பிறகு குர் ஆனை மனனமிட்டவர்களின் எண்ணிக்கை குர்ஆனை பரவலாக்கவும், குழப்பத்தை தவிர்க்கவ்ய்ம் போதியதாக இல்லை. ஆக தொகுக்கப்பட்டு இருந்த ஒற்றை பிரதியை பரவலாக்குவதன் மூலம், சிறு பகுதிகளை கைகளில் வைத்துக்கொண்டு இது குர்ஆன் என்று கூறி குழப்பம் ஏற்படுவதை தடுக்க வழிசெய்தார்கள் உஸ்மான் (ரலி). அதனால் தான் ஏனைய பிரதிகள் அழிக்கப்பட்டது.

ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார்
      நாங்கள் (உஸ்மான்(ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில்) குர்ஆனுக்குப் பிததிகள் எடுத்தபோது 'அல்அஹ்ஸாப்' எனும் (33 வது) அத்தியாயத்தில் ஒரு வசனம் காணவில்லை. அதனை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஓத நான் கேட்டிருந்தேன். அதை நாங்கள் தேடியபோது அது குஸைமா இப்னு ஸாபித் அல்அன்சாரி(ரலி) அவர்களிடம் இருக்கக் கண்டோம். (அந்த வசனம் இதுதான்:) 'அல்லாஹ்விடம் தாங்கள் கொடுத்த வாக்குறுதியை மெயப்படுத்திவிட்டவர்களும் இறைநம்பிக்கையாளர்களில் உள்ளனர். அவர்களில் சிலர் (இறை வழியில் உயிரை அர்ப்பணிக்க வேண்டுமென்ற) தம் இலட்சியத்தை நிறைவேற்றிவிட்டார்கள். அவர்களில் சிலர் (அதை நிறைவேற்ற தக்க தருணம்) எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர். (திருக்குர்ஆன் 33:23)
       உடனே நாங்கள் அ(ந்த வசனத்)தை குர்ஆன் பிரதியில் அதற்குரிய அத்தியாயத்தில் இணைத்துவிட்டோம். (புகாரி 4988)


      மேற்குறிபிட்ட செய்தி ஸைத் பின் சாபித்(ரலி) எப்படி குர்ஆன் பிரதியை ஒப்பிட்டார்கள் என்பதை அறிய முடிகிறது. அதாவது உள்ளத்தில் இருந்த அந்த மூல பிரதியோடுதான் எழுத்துப்பிரதிகளை ஒப்பிட்டார்கள் எனபதை தெளிவாக மேற்குறிப்பிட்ட செய்தி கூறுகிறது. அதனால்தான் இது குறித்து வில்லியம் கிரகாம் என்ற ஹார்வர்ட் பல்கலை ஆசிரியர் குறிபிடும் போது பின்வருமாறு கூறுகிறார்,
ஒரு ஆங்கில அரபியே ஆய்வாளர் முன்பே குறிபிட்டது "குர் ஆனின் முதலில் இருந்து கடைசி வரை கேட்கப்படவேண்டிய புத்தகமே அன்றி வாசிக்கப்பட வேண்டிய புத்தகம் அல்ல. இஸ்லாமிய வரலாற்றின் 13 நூற்றாண்டுகளாய் எண்ணிலடங்கா மில்லியன் இஸ்லாமியர்களுக்கு அல் கிதாப் கற்கப்பட்டு, ஓதப்பட்டு பல தடவை ஓதல்களால் மணனமிடப்பட்டு வாய்வழியாக கடத்தப்பட்டிருக்கிறது (P.No: 79-80, Beyond the Written Word: Oral Aspects of the Scriptures in History of Religion by William A.Graham )


    மேற்குறிபிட்ட அறிஞரின் கூற்றே அறிவுள்ள மனிதனுக்கு போதுமானது எப்படி அல்லாஹ்வின் தீர்க்கதரிசனம் மெய்படுத்தப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள. 

எழுத்து வடிவிலான பாதுகாப்பு:

      இந்த பகுதிதான் கிறித்தவ மிசனரிகளுக்கு மிகவும் பிடித்த விமர்சன பகுதி. ஏனென்றால் அவர்களது வேதத்தின் மூலங்கள் வெறும் பிரதிகளை நம்பி இருப்பதால் அவர்கள் இந்த கோணத்திலான விமர்சனத்தையே பெரிதும் முன்வைப்பார்கள். ஆனால் இவர்கள் இவர்களது ஏடுகளின் வரலாறு குறித்து அறியாததுதான் இத்தகைய அறிவீனமான விமர்சனத்திற்கான காரணம்.
         அதாவது எழுத்து பூர்வமாக குர் ஆன் பாதுகாக்கப்பட வில்லை என்பது இன்றிருக்கும் மிசனரிகளின் வாதமாக இருக்கிறது. இது குறித்து நாம் விளங்கும் முன்னர் இன்று சுருள்களின் காலத்தை நிர்ணயம் செய்யும் Radiocarbon Dating குறித்து நாம் கொஞ்சம் அறிந்து கொள்ள வேண்டும். அதாவது இவ்வாறு Radiocarbon Dating தரும் தகவல் குறித்து நாம் புரிந்து கொள்ள வேண்டும் அதன் துல்லியத்தின் அளவு குறித்த விபரங்களை நாம் அறிந்து கொள்வது இந்த கட்டுரையை விளங்க ஏதுவானதாக இருக்கும்.

       இப்போது குர் ஆன் மூல எழுத்துப்பிரதி குறித்த தகவலை பார்ப்போம். இது பிரிமிங்காம் சுருள் குறித்த தகவல் இதோ. 
95.4% confidence to the calendar years CE 568–645 when calibrated
   இதை பின்வருமாறு புரிந்து கொள்ள வேண்டும். 

1. 1950ல் இந்த சுருள் ஆய்வுகுட்படுத்தப்படுகிறது அதன் உத்தேசமாக 1343 ஆண்டுகள் பழமையானது அதுவும் 95.4% அதை உறுதியாக கூறலாம் என்றால் அதன் ஆண்டுகள் +/- 61 இருக்கும் என்று பொருள் கொண்டால். ஆக இந்த சுருள் குறிபிடபட்ட ஆண்டில் இருந்து முன்ன பின்ன 61 ஆண்டுகள் இருக்கலாம் என்று பொருள். அப்படி பார்க்கையில் இந்த சுருள் நபி(சல்) அவர்களது தோழர்களின் காலத்தினது என்பது அறிந்து கொள்ளலாம்.இதனால்தான் குர் ஆன் சுருள்கள் குறித்து ஆய்வு செய்த அறிஞ்சரான புஇன் 100-200 வருடங்கள் மார்ஜினல் குறை ஏற்படும் என்று கூறுகிறார்.

2.அடுத்ததாக இந்த சுருள்களில் மேல் எழுத்து கீழ் எழுத்து உள்ளது என்று கூறுகின்றனர். 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு இன்று போல் எழுது உபகரணமான தோல் சுருள்கள் மலிந்த காலம் அல்ல. ஆக அவற்றை மறுபயன்பாடு செய்வது என்பதும், முன்பே பதியப்பட்ட ஆவணங்களில் அரிப்பு, சேதம் ஏற்படும் போது இதை செய்வார்கள். மேலும் இன்றிருக்கும் அறிவியல் முறைப்படி மைய்யின் வயதை எழுத்தை சிதைக்காமல் அறியும் முறைகள் ஏதும் நம்பகமாக இல்லாததால் அதை அறிய முடியாது.

        1முதல் 2 நூற்றாண்டு ஹிஜ்ரியை சார்ந்த ஏடுகளின் பட்டியலையும் அவை எந்தளவுக்கு இன்றிருக்கு குர் ஆனின் சூராக்களை கொண்டிருக்கிறது என்பதையும் சுருக்கமாக இனி காண்போம்.பின்வரும் பட்டியல் 1-2 நூற்றாண்டு எழுத்துப்பிரதிகள் சில எங்கு இருக்கிறது என்பதை கூறுகிறது.

தூனிஷியாவின் சுருள்கள்:
1) Ms. R 38,Ms. R 119
2) Ms. P 511
ஏமனின் சுருள்கள்:
1.DAM 01-28.1
2.DAM 01-18.3,
3.DAM 01-30.1
4.DAM 01-32.1,
5.DAM 01-29.2
6.DAM 01-32.2
துருக்கியின் டாப்காப்பி மூயூசியத்தில் இருக்கும் சுருள்கள்:
1.Topkapı Sarayı Medina 1a / TSM M1,
2.TIEM Env. 51, 53, Ms. 678,Sam Fogg IAGIC,Ghali Adi Fragment (ஒரே சுருள்),
3.TIEM ŞE 80,
4.TIEM ŞE 85,
5.TIEM ŞE 89,
6.TIEM ŞE 358,
7.TIEM ŞE 364,
8.TIEM ŞE 709
9.TIEM ŞE 12995.
இங்கு மேலும் பல உமையாக்கள் கால சுருள்களும் இருக்கின்றது.
ஆஸ்டிரியாவின் சுருள்கள்
1.A. Perg. 186,
2.A. Perg 202,
3.Mixt. 917
அமெரிக்காவின் சுருள்கள்
1.AL-17, `Ayn 444(ஒரே சுருள்),
2.1-85-154.101
3.P. Garrett Coll. 1139
எகிப்தின் சுருள்கள்
1.Arabic Palaeography Plates 39-40
2.Mss. Arab 21-25
3.Arabe 330d
4.KFQ42
5.KFQ62
பிரிட்டனின் சுருள்கள்
1.BL Add. 11737/1
2.மேலும் பல சுருள்கள் Nasser D. Khalili Collection of Islamic Artல் இருந்து
பிராண்ஸ் சுருள்கள்
1.Arabe 330a + Ms. 66(ஓரே சுருள்)
அயர்லாந்து சுருள்கள் 
1.Is. 1404
2.Arabic Palaeography Plates 19-30
ரஸ்யாவின் நேசனல் நூலகம்
1.Codex Amrensis 1
சோத்பேயில் ஏலம் விடப்பட்ட சுருள்கள்
1. 15 அக் 1984 அன்று ஏலம் விடப்பட்ட Lot 206
2. 22மே 1986, அன்று ஏலம் விடப்பட்ட Lot 269
3. 30 ஏப்ரல் 1992, அன்று ஏலம் விடப்பட்ட Lots 318 & 319
4. 28 ஏப்ரல் 1993, அன்று ஏலம் விடப்பட்ட Lot 73
5. 22அக் 1993, அன்று ஏலம் விடப்பட்ட Lot 11, 15, 28 & 29
6. 19அக்1994, அன்று ஏலம் விடப்பட்ட Lot 16
7. 24th April 1996, அன்று ஏலம் விடப்பட்ட Lot 1
8. 16அக் 1996, அன்று ஏலம் விடப்பட்ட Lot 1
9. 5அக்1997, அன்று ஏலம் விடப்பட்ட Lot 12
10.13ஏப்ரல் 2000, அன்று ஏலம் விடப்பட்ட Lot 1,
11. 3மே 2001, அன்று ஏலம் விடப்பட்ட Lot 8
12. 5அக் 2011, அன்று ஏலம் விடப்பட்ட Lot 47
13. 3அக் 2012, அன்று ஏலம் விடப்பட்ட Lot 11 

       மேலே குறிபிடபட்ட சுருள்களின் பெயரை கூகுளில் தேடிப்பார்க்க் ஏதுவாக இருக்க அதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. மேலும் டாப்காப்பின் சுருள், பெர்லினில் இருக்கும் சுருள், பிரிமிங்காம் சுருள்கள், சமர்கண்ட் சுருள்கள் , சனா சுருள்கள் என்று பலவற்றிலும் ஹிஜ்ரி 1-2ம் நூற்றாண்டின் சுருள்கள் உள்ளன.

    ஆக இப்படி கிடைத்திருக்கும் முதல்-இரண்டாம் ஹிஜ்ரிக்குள் ஆன சுருள்கள் பல ஏலத்தில் விடப்பட்டும் விற்கப்பட்டும் உள்ளது. இவ்வாறு இந்த தோல் சுருள்கள் பல மூயூசியத்திற்கு விற்கப்பட்டுள்ளது. இந்த சுருள்கள் எந்த அளவிற்கு இன்றிருக்கும் குர்ஆன் உடன் ஒத்திருக்கிறது என்பது இங்கு  பட்டியலிடப்பட்டுள்ளது. (1)

     அதாவது தோல் சுருள்களில் இருப்பவையும் , சில தட்டுகளில் பதிவு செய்யப்பட்டவை மட்டுமே மேலே குறிபிட்ட பட்டியலில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது இது வல்லாத கல்வெட்டுக்கள், நாணயங்கள் மற்றும் ஜெருசலேம் பள்ளி மினாராவில் இருக்கும் குர் ஆன் வசனங்கள் என்று அனைத்து எழுத்து ஏடுகளையும் ஒன்றினைத்தால் பெரும்பகுதி அதாவது 97% குர்ஆனும் வந்துவிடும்....

          Sergio Noja Noseda அவரது கணக்கின் படி 97% குர்அனின் எழுத்து பிரதிகள் ஹிஜ்ரி 1-2ம் நூற்றாண்டு உள்ளாகவே இருக்கிறது.ஆக இப்படி இருக்கையில் இரண்டாம் நூற்றாண்டு சுருள்களை கணக்கில் எடுத்தால் குர் ஆனின் முழு பகுதியும் கிடைத்துவிடும். இதுதான் குர் ஆனின் எழுத்து வடிவிலான பாதுகாப்பின் நிலை. இந்த சுருள்களில் இருக்கும் எழுத்துப்பிழைகளையும் முஸ்லிம்களின் மனதில் காணப்படும் ஓதல் முறைகளோடு ஒப்பிட்டு பிரதி எடுத்தவரின் பிழைகளை இன்றும் அறிந்து கொள்ளும் நிலையில் குர் ஆன் இரு அடுக்கு, இரு பிரதி பாதுகாப்பை கொண்டு அல்லாஹ்வின் கிருபையால் முழுவதுமாக பாதுக்காக்கப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை .

நபி(சல்) அவர்கள் முத்தியிரையிட்ட பிரதியை ஏன் தரவில்லை:
      இதற்கு முன்பிருந்த யூத கிறித்தவ வேதங்களின் நிலை குறித்து சென்ற பல தொடர்களில் கண்டோம். எது எந்த மார்க்கினால் எழுத்தப்பட்டது, எத்தனை பேதுரு இருந்தார்கள், எத்துனை கிளமண்ட் இருந்தார்கள், அவற்றுள் எத்துனை போலி என்பதை இன்றுவரை கிறித்தவ உலகம் விவாதித்து கொண்டிருக்கையில் “ நபி(சல்) அவர்கள் ஏன் முத்திரையிட்டு குர்ஆனை வழங்கவில்லை என்ற கேள்வி பகுத்தறிவை ஒட்டுமொத்தமாக குத்தகை எடுத்ததாக கூறிக்கொள்பவர்கள் கேட்பது கேலிக்குரியது இல்லையா?. என்றைக்கும் இருக்கப்போகும் குர்ஆனை எப்படி பாதுகாக்க வேண்டுமோ அப்படியே அது பாதுகாக்கப்பட்டுள்ளது. நபி(சல்) அவர்களது முத்திரையை கண்டு உண்மை குர்ஆனை அடையாளப்படுத்தலாம் என்ற கட்டுரையாளரின் அறியாமையை என்னவென்பது. முத்திரை என்பது மனிதனால் உருவாக்கப்பட்டது. அதை யாரும் உருவாக்கலாம். முத்திரையிட்டு பாதுகாக்கும் முறை எல்லாம் சுத்த வீணானது என்பதைதான் யூத கிறித்தவ ஏடுகளின் எழுத்தர் குறித்த குழப்பங்கள் தெளிவாக உணர்த்துகின்றன. கட்டுரையாளர் கூறுவதை விட சிறந்த முறையில் குர்ஆன் பாதுகாக்க பட்டிருப்பதால்தான் இன்றும் எந்த வேதத்தையும் விட பாதுகாப்பான நிலையில் குர்ஆன் இருக்கிறது. எழுத்து வடிவிலான பிரதிகள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டாலும் சில மணி நேரங்களில் மீண்டும் எழுத்து பிரதிகளை உருவாக்கிவிட முடியும்.
 
      இது போக ஆயிஷா(ரலி) கையில் இருந்த பிரதிகளை ஆடு தின்றது, போன்ற ஹதிஸ்கள் யாவும் கட்டுகதைகளே. கட்டுரையாளர் அவற்றை ஆதாரத்துடன் பதியவில்லை என்பதால் அந்த செய்திகள் குறித்து அதிக விளக்கம் தரதேவையில்லை என்று எண்ணுகிறேன்.

உஸ்மான்(ரலி)யை கொலைசெய்ய ஆயிஷா(ரலி) தூண்டினார்களா?

நமது பதில் :
      நமது கட்டுரையாசியர் பழுதான செய்திகளை முன்னிருத்தியே இஸ்லாமிய விமர்சனத்தை அவரது தொடர்கள் முழுவதும் முன்னெடுத்துள்ளார். என்ன் செய்வது ஷியாக்களின் வாந்தியை அடிப்படையாக கொண்டு கிறித்தவ மிசனரிகளின் வலைத்தளங்களில் இஸ்லாமிய விமர்சனம் காணப்படுகிறது. இவர் அதை அப்படியே அவரது தொடரில் பதிந்துள்ளார்.

      நாம் மேற்குறிபிட்ட செய்திகள் குறித்து பார்ப்போம்.
1.முதலில் இந்த செய்தி இடம் பெறுவதாக கட்டுரையாளர் குறிப்பிடும் அன் நிகாயா என்ற நூலே இப்னு அதிரால் எழுதப்பட வில்லை. அந்த நூலின் பெயர் “அல் காமில் ஃபி அல் தாரிக்”  எனபதாகும். கதையாசிரியர் இப்னு கதிரின் புத்தகம் போல பொய்யாக காட்ட முயன்றுள்ளார்.

2. அல் காமில் ஃபி அல் தாரிக்கில் மேற்குறிபிட்ட செய்தி காணப்படுகிறது. ஆனால் அதில் அறிவிப்பாளர் தொடர் இடம் பெறவில்லை. அந்த நூலில் இடம் பெறும் செய்திகள் யாவும் இப்படியான வர்ணனையாக இருக்குமே தவிர அதில் எந்த அறிவிப்பாளரின்  தொடர இருக்காது.

3.இது போன்ற செய்திகளின் மூலம் தபரியில் இடம் பெறும் பின்வரும் செய்திதான்.

ஆயிஷா(ரலி) மக்காவில் இருந்து திரும்பி கொண்டிருக்கையில் சரிஃப் எனும் இடத்தில் உபைத் பின் அபிசலாமாவை சந்தித்தார்கள். “என்ன செய்தி? என்று ஆயிஷா(ரலி) என்று உபைத் பின் அபிசலாமாவிடம் வினவினார்கள்.  அதற்கு “அவர்கள் உஸ்மான்(ரலி)யை கொலை செய்துவிட்டு எட்டு நாட்கள் எதுவும் செய்யாமல் விட்டுவிட்டார்கள் என்று உபைத் பதிலளித்தார்கள்.................அல்லாஹ்வின் மீது ஆணையாக! உஸ்மான்(ரலி) அவர்கள் அந்நியாயமாக கொல்லப்பட்டுள்ளார்கள், அவர்களது ரத்தத்திற்கு பலிவாங்குவேன் என்று ஆயிஷா (ரலி) கூறிவிட்டு மக்காவிற்கு கிளம்பினார்கள். இப்னு உம்மு கிலாப் (உபைத் பின் அபிஸலாமா) “அது எப்படி? அல்லாஹ்வின் மீது ஆணையாக நீங்கள்தான் “அந்த முட்டாள் கிழவனை கொள்ளுங்கள். அவர் காஃபிர் ஆகிவிட்டார் “ என்று கூறி உஸ்மான்(ரலி)யை எதிர்த்து முதலில் வாள் எடுத்தீர்கள் என்று வினவினார்கள்.........
                    (P.No: 52,53 Vol16 ENGLISH VERSION HISTORY OF TABARI)

அறிவிப்பாளர் தொடர்:
அஷத் பின் அப்தில்லாஹ் ---> உமர் இப்னு சஃத் -->நசர் பின் முஷாஹிம் -->அல் ஹுஸைன் பின் நசர் அல் அத்தார்--->அலி பின் அஹமத் பின் அல் ஹசன் அலி இஜ்லி--> தபரி
முஹம்மது பின் நுவைரா ---> சயிஃப் பின் உமர் -->நசர் பின் முஷாஹிம் -->அல் ஹுஸைன் பின் நசர் அல் அத்தார்--->அலி பின் அஹமத் பின் அல் ஹசன் அலி இஜ்லி--> தபரி
தல்கா பின் அல் அஃலாம் அல் ஹனஃபி ---> சயிஃப் பின் உமர் -->நசர் பின் முஷாஹிம் -->அல் ஹுஸைன் பின் நசர் அல் அத்தார்--->அலி பின் அஹமத் பின் அல் ஹசன் அலி இஜ்லி -->தபரி

ஆய்வு: 

1. அலி பின் அஹமது பின் அல ஹசன் அல் இஜ்லி குறித்து என்த குறிப்பும் வரலாற்று ஆய்வாளர்களின் நூலில் எந்த குறிப்பும் காணப்படவில்லை. ஆக இவர் யார் என்று அறியப்படாதவர்.

2. ஹுசைன் பின் நசர் அல் அத்தார் குறித்தும் எந்த குறிப்பும் இடம் பெறவில்லை, ஆக இவரும் அறியப்படாதவர்.

3.சயிஃப் பின் உமர் குறித்து இப்னு ஹிப்பான் போன்ற அறிஞர்கள் இட்டுக்கட்டகூடியவர் என்று கூறியுள்ளனர்.(மீஸான் அல் இஹ்திதால்)

4. நசர் பின் முசாஹிம் :  இவரும் ஏற்றுகொள்ளபடாதவர், இட்டுகட்டக்கூடியவர், ஷியா வெறியர் என்று இஜ்லி, தாரகுத்னி போன்ற அறிஞர்கள் சாடியுள்ளனர். (லிசானுல் மீசான்)

      ஆக கட்டுரையாளர் குறிப்பிட்ட செய்தி முற்றிலும் பொய்யான இட்டுகட்டபட்ட செய்தி என்பது நிருபனமாகியுள்ளது. மேலும் இத்தகைய கருத்துகள் எல்லாம் ஷியாக்களினால் தொடர்ந்து பரப்பப்பட்டது. இன்றும் பரப்பப்பட்டும் வருகிறது. 

உஸ்மான்(ரலி) உடல் எங்கு புதைக்கப்பட்டது?



நமது பதில்

      சென்ற பகுதியில் ஆயிஷா(ரலி) யின் கூற்று குறித்தும் அது இட்டுகட்டபட்டது என்பதையும் தெளிவாக கண்டோம். அதை தொடர்ந்து உஸ்மான்(ரலி) மரணித்த பிறகு அவரது உடல் மூன்று நாட்கள் குப்பையில் விசப்பட்டதாகவும் அதன் பிறகு கழிப்பிடத்தில் புதைக்கப்பட்டதாகவும் என்ற அடுத்த அவதூறு. இந்த செய்தி தப்ரானியின் மஜ்மு அல் கபீர் போன்ற நூல்களில் காணப்படுகிறது. ஆனால் இந்த அறிவிப்புகளும் பலவீனமானது. இதில் இடம் பெறும் அப்துல் மாலிக் இப்னு மஜசூன் சாஹாபாக்கள் குறித்து விசித்திரமான நம்பகமற்ற செய்திகளை மாலிக் (ரஹ்) அவர்கள் வழியாக அறிவிப்பவர் என்று அல் சஜ்ஜி போன்ற அறிஞர்களால் சாடப்பட்டவர். அடுத்ததாக இந்த செய்தி இமாம் மாலிக்(ரஹ்) அவர்களால் நேரடியாக அறிவிக்கப்படுகிறது. இமாம் மாலிக்(ரஹ்) அவர்களது பிறப்பு ஹிஜ்ரி 93. ஆனால் உஸ்மான்(ரலி) கொல்லப்பட்ட்து ஹிஜ்ரி 35. ஆக இது நேரடி சாட்சியோ அறிவிப்போ இல்லை. ஆக இந்த செய்தியும் நிராகரிக்கப்பட்டது. அடுத்ததாக கழிப்பிடத்தில் உஸ்மான்(ரலி) அவர்கள் உடல் அடக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுவதும் தவறு. அவரது அடக்கம் தொடர்பான செய்திகளில் இடம் பெறும் “ஹுஸ்- தோட்டம்  என்ற வார்த்தைக்கு கழிப்பிடம் என்று ஷியாக்கள் மொழியாக்கம் செய்தனர். அதையே நமது கட்டுரையாளர் காப்பி அடித்துள்ளார்.  
      இங்கு ஒரு விஷயத்தை சுட்ட வேண்டியுள்ளது. அதாவது கிறித்தவர்களின் அளுகைக்கு உடபட்ட பல பகுதிகளில் குர்ஆனை பரவலாக்க மூல காரணமாக இருந்தவர், சைப்ரஸ் போன்ற பகுதியை கைப்பற்றினார் என்பது போன்ற காழ்புணர்ச்சியால் மேற்குறிபிட்ட செய்தியை பதிந்து அவதூறு கூறுகின்றனர். ஷியாக்கள் அவர்கள் நபிதோழர்கள் மீது கொண்ட காழ்புணர்ச்சி என்று கொள்ளலாம். ஆனால் தன்னை பகுத்தறிவுவாதியாக அடையாளம் காட்ட நினைக்கும் இந்த கட்டுரையாளர் ஏன் இந்த செய்தியை பதிவிட வேண்டும். மேலும் ஒருவர் இறந்த பின் புதைக்கப்படும் இடத்தை கொண்டுதான் தண்டனையும், வெகுமதியும் நிர்ணயிக்கப்படுமா? என்னே ஒரு பகுத்தறிவு...... சின்னப்புள்ளத்தனமால இருக்கு!!!!!!!!!!!!!
அல்லாஹ் ஏன் நேர்வழியை வழங்குகிறான்?


 நமது பதில்:
 சராசரியாக யாருக்கும் புரியும் இந்த வசனம் ஏனோ பகுத்தறிவை முழுமையாக குத்தகை எடுத்தது போல் பேசும் கட்டுரையாளருக்கு தெரியவில்லை. வழிகேட்டில் இருப்பவனைத்தான் நேர்வழியை பின்பற்றுமாறு ஏவ முடியும். சுகமாக வாழ்வது என்றால் தீயவழியில் மக்களை சுரண்டி, விபச்சாரத்தினாலும் லஞ்சத்தினாலும் சுகமாக வாழ்பவருக்கு வக்காலத்து வாங்குகிறார் போல கட்டுரையாளர்...................... 

No comments:

Post a Comment