பக்கங்கள் செல்ல

Tuesday, November 8, 2016

லிபிய சுதந்திரப் போராட்ட உயிர்த் தியாகி உமர் முக்தார் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவம்.

லிபிய சுதந்திரப் போராட்ட உயிர்த் தியாகி உமர் முக்தார் அவர்களிடம், இத்தாலி அரசின் விமானப் படை பற்றி கூறியபோது:
உமர் முக்தார் - அறிய புகைப்படம்:"துரோகிகளை வரலாறு மறந்து விடுகின்றது; வீரர்களை வரலாறு என்றும் மறப்பதில்லை"  என்ற வாசகம் இந்த படத்தில் எழுதப்பட்டுள்ளது


வீரர்கள்: இத்தாலி  விமானங்கள் வைத்துள்ளன..நம்மிடம் ஒன்றும் இல்லை

உமர் முக்தார்: அந்த விமானங்கள் அல்லாஹ்வின் அர்ஷின் கீழ் பறக்கின்றனவா அல்லது மேலேவா?

வீரர்கள்:  கீழே தான்

உமர் முக்தார்: நம்மிடம் அர்ஷிற்கு மேலே உள்ளவன் இருக்கின்றான் அதனால் அதற்க்கு கீழே உள்ளவைகள் பற்றி நமக்கு அச்சமில்லை.

இறைவன் தூய்மையானவன். தூய்மையான  இறை நம்பிக்கையின் வெளிப்பாடு. உமர் முக்தார் மற்றும் சத்தியத்தின் வழியில் போராடும் அனைத்து மக்களுக்கும் இறைவன் கருணை காட்டுவானாக. ஆமீன்.


 "மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. "எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர். [3:173]

No comments:

Post a Comment