பக்கங்கள் செல்ல

Friday, November 25, 2016

எதிர்தொடர் 20: நசாராக்களின் கொள்கையை இஸ்லாம் போதிக்கிறதா?????.......

ஏக இறைவனின் திருப்பெயரால்



      சிலுவை மரணம் என்ற தொடரில் கட்டுரையாளர் சில கருத்துகளை முன்வைத்து இஸ்லாம் கூறும் ஈஸா(அலை) அவர்களது விண்ணேற்றம் குறித்த கருத்தை விமர்சிக்கிறார். அவர் தான வைக்கும் விமர்சனத்திற்கு ஆதாரமாக பார்னபாஸின் சுவிசேசத்தினை ஆதாரமாக கொண்டும், சில குர்ஆன் விரிவுரைகளையும் அடிப்படையாக கொண்டு தனது வாதத்தை முன்வைக்கிறார். விரிவுரைகளில் காணப்படும் சிலுவை மரணம் தொடர்பான விளக்கங்கள் அனைத்தும் அக்கால கிறித்தவர்களின் ஏடுகளில் இருந்து கூறப்பட்டவைதான். அதற்கும் நபி(ஸல்) அவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆக பார்ன்பாஸ் சுவிஷேசம் குறித்து நாம விளக்க வேண்டிய தேவை இல்லை. ஆயினும் சில கருத்துகளை நாம் ஆய்வு செய்வதினால் இந்த கட்டுரையாளரின் அறியாமையையும், இஸ்லாம் மீது சுமத்தும் அவதூறுகளை தோழுரிக்கவியலும்.

யூதாஸ்தான் ஈஸா(அலை) அவர்களுக்கு ஒப்பாக்கப்பட்டாரா?
      பார்னபாஸின் சுவிஷேசம் இந்த கருத்தை முன்வைப்பதாகவும் அது 15ம் நூற்றாண்டின் மோசடி என்றும் கூறுகிறார். மேலும் முஸ்லீம்கள் அனைவரும் இந்த சுவிஷேசத்தை ஏற்று கொள்வதாகவும் கூறுகிறார். உண்மையை கூறுவது என்றால் சிலுவை மரணம் குறித்து பல கருத்துகள் முதலாம் நூற்றாண்டில் இருந்தே காணப்படுகிறது. உதாரணமாக 2ம் நூற்றாண்டை சேர்ந்த இரேனியஸ் “யூதாஸ் சுவிஷேசம்“ என்ற புத்தகம் குறித்து பின்வருமாறு கூறுகிறார்.,

      They declare that Judas the traitor was thoroughly acquainted with these things, and that he alone, knowing the truth as no others did, accomplished the mystery of the betrayal; by him all things, both earthly and heavenly, were thus thrown into confusion. They produce a fictitious history of this kind, which they style the Gospel of Judas.( XXXI Doctrines of Cainite,Against Heresis).

    அதாவது யூதாஸிற்கு மக்களுக்கு தெரியாத பல ஞானங்கள் இயேசுவால் கூறப்பட்டதாகவும், அவர்கள் கற்பனையான ஒரு வரலாற்று ஏட்டை யூதாசின் சுவிஷேசம் என்ற பெயரில் இயற்றி இருப்பதாகவும் இரேனியஸ் குறிப்பிட்டார். மேலும் ஏசுவினால் யூதாசிற்கு வழங்கப்பட்ட கட்டளையின் பேரில்தான் யூதாஸ் காட்டி கொடுக்கும் நாடகம் அரங்கேரியாதாக கூறுகிறது. மேலும் கொல்லப்பட்ட மனிதர் ஏசுவை போன்று இருந்தவர் என்றும் காணப்படுகிறது. இப்படி பல கருத்து வேறுபாடுகளில் ஒரு கருத்துத்தைதான் பார்னபாஸ் சுவிஷேசம் பிரதிபலிக்கிறது. முஸ்லீம்களை பொறுத்தவரை ஈஸா(அலை) அவர்கள் சிலுவையில் கொள்ளப்படவில்லை என்பதுதான் உறுதியானது. இங்கு இன்னொரு செய்தியை கூற வேண்டியுள்ளது.

     எழுத்து வடிவம், மொழி ஆகியவற்றை அடிப்படையாக் கொண்டு பார்னபாஸின் சுவிஷேசத்தை ஏற்க மறுக்கும் கட்டுரையாளர் ஏனோ கிரேக்க கிறித்தவ ஏடுகளின் அடிப்படையில் வாதங்களை முன்னிறுத்தும் வலைதளத்தின் ஆவணத்தை ஏற்று கொள்கிறார். இதுதான் காழ்புணர்ச்சியால் தோன்றும் விமர்சனம். பார்னபாஸின் சுவிஷேசம் குறித்து 5ம் நூற்றாண்டை சேர்ந்த ‘Decretum Gelasian’ல் காணப்படுகிறது. இதே நிலைதான் ஒவ்வொரு கிறித்தவ சுவிஷேசத்திற்கும். ஆரம்ப கால தேவாலய பிதாக்களின் குறிப்புகளில் பெயர் இருப்பதாலேயே பல அத்தியாயங்கள் இன்றைய சுவிஷேசத்தில் உள்ளது. மேலும் பார்னபாஸ் சுவிஷேசத்தின் சுருள்களை முழுமையாக விளக்கிய ஜான் டோலண்ட் பின் வருமாறு தனது நூலில் குறிப்பிடுகிறார்.

             How great (by the way) is the ignorance of those, who make this an original invention of the Mahometans! for the Basilidians, in the very beginning of Christianity, deny'd  that Christ himself suffer'd, but that Simon of Cyrene was crucify’d in his place. The Cerinthians before them,' and the Carpocratians next (to name no more of those, who affirm'd Jesus to have been a mere Man) did believe the same thing; that it was not himself, but one of his followers very like him, that was crucify'd : so that the Gospel of Barnabas, for all this account, may be as old as the time of the Apostles, bateing several interpolations (from which, 'tis known, that no Gospel is exemt) Since Cerinthus was contemporary with Peter, Paul, and John, if there be any truth in Ecclesiastical history.(P.No 17,The Nazarenes OR Jewish, Gentile and Mahometan Christianity)

    அதாவது ஏசுவின் சீடர்களான பேதுரு, பவுல் மற்றும் ஜான் ஆகியோர் இருந்த காலத்தில் இருந்த செரிந்தியன் என்பவரும் இந்த கருத்தை கொண்டிருந்தாக டோலண்ட் குறிப்பிடுகிறார். நாம் பார்ன்பாஸ் சுவிஷேசத்தின் அடிப்படையில் நமது எதிர் தொடர்களை அமைக்கவில்லை ஆக பார்னபாஸ் சுவிஷேசத்தின் ஆய்வில் இறங்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது.

நசாராக்கள் (Nestorians) சிலுவை மரணத்தை மறுத்தனரா?


நமது பதில்:
    கட்டுரையாளரின் இந்த கருத்தில் பாதி உண்மை. அதாவது நசாராக்கள் ஈஸா(அலை) அவர்கள் மனித பண்பும் தெய்வீகத்தன்மையும் தனிதனியே கொண்ட ஒரே மனிதர், கடவுளால தத்தேடுக்கப்பட்டவர் என்றும் நம்பினர் என்பது சரி. ஆனால் ஏசுவிற்கு பதிலாக வேறு ஒரு யூதர் கொள்ளப்பட்டார் என்று அவர்கள் கூறவில்லை. இதோ நெஸ்டோரியஸின் கருத்தாக ஹெரகிலைட்ஸ்( கிபி 5ம் நூற்றாண்டு) என்பவர் இயற்றிய ‘The Bazaar of Heraclides’ல் பின்வருமாறு காணப்படுகிறது. 
11. How water which becomes ice is in its nature ice, |11 becoming that which it was not without receiving it from outside: so they say that God the Word became a body without having taken a body from outside.

                As, after running and flowing water is frozen and becomes solid, we say that it is nothing but water which has become solid, so God truly became flesh though he was by his nature God; and he was in everything and he acted as God. And, as touching [the operations of] the flesh, he both did [them] also in truth, and he suffered also as flesh, and he became flesh in the womb, and in that he became [it] he both was born and grew up truly as flesh; and, after he had chosen to become it, he both hungered and thirsted and grew weary and suffered and was crucified truly, seeing that he was truly flesh. For as water, which cannot be broken because it is frozen, can in truth be broken / and truly accepts the suffering of the nature which it has become, so also God who became flesh in truth accepted truly all [the sufferings of] the nature which he became without having been expelled from his [own] nature.( P.No: 10-11, THE BOOK OF MY LORD NESTORIUS PATRIARCH OF CONSTANTINOPLE AND THE CANON OF ORTHODOXY BOOK I. PART I, The Bazaar of Heraclides)

61.  Concerning this: that through the nature of man he received a name which is more excellent than all names.

                This in fact is the chief greatness of the nature of humanity: that, since he remains in the nature of humanity, he accepts a name which is more excellent than all names; neither in consequence of moral progress nor in consequence of |58 knowledge and faith, but therein 52 by virtue of his readiness to accept [it] has it come about that it should become his eikôn and his prosôpon in such wise that his prosôpon is also the prosôpon of the other. And he is both God and man, and the likeness of God in condescension and in kenôsis and in schema, [and] the likeness of the flesh as man; and the man is by exaltation what God is, through the name which is above all names. Consequently in the kenôsis he humbled himself unto death, even death / upon the cross, in that he made use of the prosôpon of him who died and was crucified as his own prosôpon, and in his own prosôpon he made use of the things which appertained unto him who died and was crucified and was exalted. And therefore [this] is said as of the one prosôpon of Christ, and the former things and the latter are each thus different, in nature, as the divine nature is different from the nature of man; so that Christ is two natures, the likeness of God and the likeness of a servant, that which has been exalted and that which exalts. If also he is called Christ because of the flesh which has been anointed, there is one prosôpon of the two natures, because also there is only one name which is more excellent than all names, [one for] both of them, if the divine nature is meant; for the names of the natural prosôpa are common in the condescension and in the exaltation.(  P.No: 58, THE BOOK OF MY LORD NESTORIUS PATRIARCH OF CONSTANTINOPLEAND THE CANON OF ORTHODOXYBOOK I. PART I, The Bazaar of Heraclides) 

 
    அதாவது கடவுளை நீரை போல் சித்தரித்து சிலுவையில் அறைந்ததால் கடவுள் மனிதனாக மாட்டார் என்று வாதிக்கப்படுகிறது. மேலும் ஏசுவிடம் இருந்த மனித முகம் தான் சிலுவையில் அறையப்பட்டதாக மேற்குறிபிட்ட செய்தியில் அழுத்தமிட்ட சொற்கள் காட்டுகின்றன. ஆக நசாராக்கள் யூதாசு சிலுவையில் கொல்லப்பட்டார் என்ற கொள்கையை கொண்டிருக்க வில்லை. மேலும் நசாராக்களின் எந்த கொள்கையையும் இஸ்லாம் கொண்டிருக்கவில்லை. 


No comments:

Post a Comment