பக்கங்கள் செல்ல

Sunday, August 14, 2016

எதிர் தொடர் 19:உடைந்த சிலுவை-பாகம்-6- புதிய ஏற்பாடு ஆகமங்களின் எண்ணிக்கை

ஏக இறைவனின் திருப்பெயரால்

 நாம் சென்ற தொடரில் புதிய ஏற்பாடின் மூல ஏடுகள் குறித்து பார்த்தோம். இந்த தொடரானாது புதிய ஏற்பாட்டின் ஆகமங்களின் பெயர்கள் இடம்பெறும் பண்டைய ஏடுகள் குறித்த சிறிய அறிமுகமாகும். இந்த ஏடுகளில் இடம்பெறும் ஆகமங்களின் பெயர்களைக் கொண்டு நாம் ஏசுவின் காலத்திற்கு பிறகு மக்களின் பயன்பாட்டில் குறிப்பாக சர்சுகளில் வாசிக்கப்பட்டு வந்த ஆகமங்கள் குறித்து அறிந்து கொள்ள முடியும். இது புதிய ஏற்பாட்டின் தோற்றம் குறித்த தெளிவான பார்வையை வழங்கும் இன்ஷா அல்லாஹ்.

புதிய ஏற்பாட்டின் ஆகமங்கள் குறித்த வரலாற்று ஆவணங்கள்:

இது குறித்து அறிந்து கொள்ள நமக்கு இருக்கும் வரலாற்று ஆவணங்கள் ஆரம்ப கால தேவாலய பிதாக்களின் குறிப்புகளில் காணப்படும் வசனங்கள் மற்றும் ஆகமங்களின் பெயர்கள். அடுத்ததாக பண்டைய கிரேக்க ஏடுகளில் காணப்படும் ஆகமங்கள் குறித்த குறிப்புகள். இவற்றை இங்கு ஒப்பிடுவதினால் நாம் புதிய ஏற்பாட்டின் ஆகமங்களின் உறுதிசெய்யப்பட்ட எண்ணிக்கையை? அறிந்து கொள்ளலாம்.

ஆரம்ப கால தேவாலய பிதாக்களின் குறிப்புகள:
      இங்கு ஆரம்ப கால தேவாலய பிதாக்கள் சிலரின் குறிப்புகளை இங்கு காண்போம். இதுவே நம்மை தலை சுற்றவைக்க போதுமானது!!!!!!!!!
 

பாலிகார்பின் குறிப்புகளில் காணப்படும் ஆகமங்கள்: (கிபி 69-155)         
      1. மத்தேயு, 2. மாற்கு, 3. லூக்கா, 4. அப்போஸ்தல நடபடிகள் 
5. பவுலின் 8 கடிதங்கள்: (1 கொரிந்தியர், 2கொரிந்தியர், எபேசியர், பிலிப்பியர், காலாத்தியர், 1தெசலோனிக்கேயர், 2தெசலோனிக்கேயர், ரோமர், 6. பவுலின் 2 தனிநபர் கடிதங்கள்: 1 தீமோத்தேயு, 2 தீமோத்தேயு 7. எபிரேயர், 1பேதுரு, 1யோவான், 3யோவான்


விடுபட்ட ஆகமங்கள்:   
      1. யோவான், 2. பவுலின் 1 கடிதம்: கோலோசியர்,  3. பவுலின் 2 தனிநபர் கடிதம்: தீத்து, பிலேமோன் 4. யாக்கோபு, 2பேதுரு, 2யோவான், யூதா, வெளிப்படுத்தின விஷேசம் 

குறிபிடப்பட்டவை: 18 விடுபட்டவை: 09

இரேனியஸின் குறிப்புகளில் காணப்படும் ஆகமங்கள்: (கிபி 130- கிபி 202) 

               1. மத்தேயு, 2. மாற்கு, 3. லூக்கா, 4. யோவான் 5. அப்போஸ்தல நடபடிகள் 6. பவுலின் 9 கடிதங்கள்: (1 கொரிந்தியர், 2கொரிந்தியர், எபேசியர், பிலிப்பியர், கோலோசியர், காலாத்தியர், 1தெசலோனிக்கேயர், 2தெசலோனிக்கேயர், ரோமர், 7. பவுலின் 3 தனிநபர் கடிதங்கள்: தீத்து, 1 தீமோத்தேயு, 2 தீமோத்தேயு  8. எபிரேயர், யாக்கோபு, 1 பேதுரு, 1யோவான், 2யோவான், வெளிப்படுத்தின விஷேசம்
விடுபட்ட ஆகமங்கள்:
         
             1. பவிலின் 1 தனிநபர் கடிதம்: பிலேமான்  2. 2 பேதுரு, 3 யோவான், யூதா

இன்று இருக்கும் புதிய ஏற்பாட்டில் இல்லாத ஏற்கத்தக்க ஆகமங்கள் :

             1 கிளமண்ட்

குறிப்பிடபட்டவை:  23 விடுபட்டவை: 04    புதிய ஏற்பாடில் இல்லாதவை: 01


அலெக்சாண்டியாவின் கிளமண்டின் குறிப்புகளில் காணப்படும் ஆகமங்கள்: (கிபி 150-215):                 
       1. மத்தேயு, 2. மாற்கு, 3. லூக்கா, 4. யோவான் 5. அப்போஸ்தல நடபடிகள்             6. பவுலின் 9 கடிதங்கள்: 1 கொரிந்தியர், 2கொரிந்தியர், எபேசியர், பிலிப்பியர், கோலோசியர், காலாத்தியர், 1தெசலோனிக்கேயர், 2தெசலோனிக்கேயர், ரோமர்,  7. பவுலின் 3 தனிநபர் கடிதங்கள்: தீத்து, 
1 தீமோத்தேயு, 2 தீமோத்தேயு 8. எபிரேயர், 1 பேதுரு, 1 யோவான், யூதா, வெளிப்படுத்தின விஷேசம்

விடுபட்ட ஆகமங்கள்:

             1. பவுலின் 1 தனிநபர் கடிதங்கள்: பிலேமான்  2. யாக்கோபு, 2 பேதுரு, 2 யோவான், 3 யோவான்

இன்று இருக்கும் புதிய ஏற்பாட்டில் இல்லாத ஏற்கத்தக்க ஆகமங்கள்:

             1. எகிப்திய நற்செய்தி  2. எபிரேய நற்செய்தி  3. மத்தியாவின் செய்திகள்
4. பேதுருவின் போதனைகள் 5. 1 கிளமண்ட் 6. பார்ணபாவின் கடிதம் 7. டிடாக்
8. ஹெர்மஸின் மேய்ப்பர் (Shepherd of Hermas)  9. பீட்டரின் வெளிபடுத்தின விஷேசம் (Apocalypse of Peter)

குறிப்பிடப்பட்டவை : 22. விடுபட்டவை: 05 புதிய ஏற்பாட்டில் இல்லதவை: 09

ஓரிகனால் குறிப்பிடப்படும் ஆகமங்கள்: (கிபி 184-254):
             1. மத்தேயு, 2. மாற்கு, 3. லூக்கா, 4. யோவான் 5. அப்போஸ்தல நடபடிகள் 6. பவுலின் 9 கடிதங்கள்: (1 கொரிந்தியர், 2கொரிந்தியர், எபேசியர், பிலிப்பியர், கோலோசியர், காலாத்தியர், 1தெசலோனிக்கேயர், 2தெசலோனிக்கேயர், ரோமர், 7. பவுலின் 4 தனிநபர் கடிதங்கள்: பிலேமோன், தீத்து, 1 தீமோத்தேயு, 
2 தீமோத்தேயு 8. எபிரேயர், 1 பேதுரு, 1யோவான், யூதா, வெளிப்படுத்தின விஷேசம்

சந்தேகத்திற்கு உரியவை:                யாக்கோபு, 2 பேதுரு, 2 யோவான், 3 யோவான்

குறிப்பிடபட்டவை: 23 சந்தேகத்திற்குரியவை: 04
      
                யூஸிபியஸின் (கிபி 263-339) குறிப்புகளில் புதிய ஏற்பாட்டின் 21 ஆகமங்கள் ஏற்கத்தக்கவை எனவும் சந்தேகத்திற்குரியதாக 06ம் கூறப்படுகிறது . அவை எபிரேயர், யாக்கோபு, 2 பேதுரு, 2யோவான். 3யோவான், யூதா ஆகியவையாகும்.

முரேடொரியன் துண்டுகளில் காணப்படும் ஆகமங்களின் பெயர்கள் (Muratorian Fragments) :(கிபி. 170)

                 இது 7ம் நூற்றாண்டின் இலத்தின் மொழியிலான பொருளடக்கமாகும். இதில் இருக்கும் குறிப்புகள் கிபி 170ஐ சேர்ந்த கிரேக்க மூலத்தின் இலத்தின் மொழியாக்கம் என்பதை பறைசாற்றுகிறது. இது மூரேடொரி என்ற பாதிரியால் 1740ல் அம்புரோசியா நூலகத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாகும். கிபி 170ன் கிரேக்க மூலத்திலிருந்து பெறப்பட்டது என்று நம்பப்படுவதால் இதுதான புதிய ஏற்பாடின் ஆகமங்களின் பொருளடக்க குறிப்புகளில் மிக பழமையானது என்று கூறப்படுகிறது.(இன்று வரை கிரேக்க மூலம் கிடைக்கவில்லை). இன்று இருக்கும் புதிய ஏற்பாட்டின் 27 ஆகமங்களில் 22 ஆகமங்களின் பெயர் இதில் இடம்பெறுகிறது. அவை பின் வருமாறு:

1. மத்தேயு, மாற்கு (எந்த இடத்திலும் இரண்டு ஆகமத்தின் பெயர்களும் இல்லை. ஆயினும் 3வது ஆகமமாக லூக்கா குறிப்பிடப்படுவதால் இவை இரண்டும் தான் இருக்கும் என்று யூகிக்கப்படுகிறது)
2. லூக்கா
3. யோவான்
4. அப்போஸ்தல நடபடிகள்
5. பவுலின் 9 கடிதங்கள்: (1 கொரிந்தியர், 2கொரிந்தியர், எபேசியர், பிலிப்பியர், கோலோசியர், காலாத்தியர், 1தெசலோனிக்கேயர், 2தெசலோனிக்கேயர், ரோமர்,
6. பவுலின் 4 தனிநபர் கடிதங்கள்: பிலேமோன், தீத்து, 1 தீமோத்தேயு,
2 தீமோத்தேயு
7. யூதா, 1 யோவான், 2 யோவான், வெளிப்படுத்தின விஷேசம்

விடுபட்ட ஆகமங்கள்:

1. எபிரேயர் 2. யாக்கோபு 3. 1 பேதுரு 4. 2 பேதுரு 5.3 யோவான்

இன்று இருக்கும் புதிய ஏற்பாட்டில் இல்லாத ஏற்கத்தக்க ஆகமங்கள்

1. சாலமோனின் ஞானம்
2. பீட்டரின் வெளிபடுத்தின விஷேசம் (Apocalypse of Peter)
3. ஹெர்மஸின் மேய்ப்பர் (Shepherd of Hermas)

குறிப்பிடப்பட்டவை: 22, விடுபட்டவை: 05, புதிய ஏற்பாட்டில் இல்லாதவை: 03

              இப்படி சமகாலத்தில் உள்ள ஆரம்ப கால தேவாலய பிதாக்கள் குறிப்புகளில் ஏற்றுகொள்ளப்படும் ஆகமங்கள் முரண்பட்டதாய் உள்ளது. பலரால் ஏற்றுகொள்ளப்பட்டது சிலரால் மறுக்கப்பட்டும் விடுபட்டும் இருக்கிறது. சிலரால் மறுக்கப்பட்டது பலரால் குறிபிட்டப்படாமல் விடுபட்டும் உள்ளது.சில ஞானப்பாட்டை(Gnostic) போற்றும் ஏடுகள் சிலரால் ஏற்று கொள்ளப்பட்டுள்ளது.  இந்த நிலை கிட்டதட்ட நான்காம் நூற்றாண்டின் இறுதி வரை காணப்பட்டது. அதாவது கிபி 393ல் ஆயர்கள் சபையில் ஹிப்போவின் அகஸ்டின்தான் இன்றிருக்கும் 27 புதிய ஏற்பாட்டின் ஆகமங்களை முன்மொழிந்தார். இப்படி எந்த எந்த ஆகமங்கள் ஏறகத்தது என்பதை முடிவு செய்வதற்கே பல நூற்றாண்டுகள் தேவைபட்டது கிறித்தவ உலகத்திற்கு என்பதே புதிய ஏற்பாட்டின் நிலையை எடுத்துரைக்க போதுமானது.

Reference:
1.http://www.ntcanon.org/table.shtml
2.The Canon of the New Testament : Its Origin, Development, and Significance by   
   BRUCE M . METZGER
எதிர்தொடர்அனைத்து கட்டுரைகளையும் காண                    உடைந்தசிலுவை அனைத்து கட்டுரைகளையும் காண

No comments:

Post a Comment