Thursday, July 7, 2016

போர்க்கப்பல் பறவை - இவ்வளவு ஆற்றல் எங்கிருந்து கிடைத்தது?

21ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த, 20 மணிநேரம் கூட  தொடர்ச்சியாக  பறக்க முடியாத விமானத்தின் மதிப்பு 1250 கோடி.

இந்த விமானத்தை தயாரிப்பதற்கு பல மாதங்கள், பல மனிதர்களின் கடின உழைப்புகள் தேவைப்படுகின்றது.

.
 மிகச் சக்தி வாய்ந்த போர்க்கப்பல் Frigate பெயரைக் கொண்டு அழைக்கப்படும் போர்க்கப்பல் பறவையோ(Frigate Birds) ஒரு நாளைக்கு 255 மைல்கள் வீதம் பல மாதங்கள் தொடர்ச்சியாக பறக்கக்கூடியது.
  ஆனால் இந்தப் பறவை யாராலும் படைக்கப்பட வில்லை என்று நாத்திகத் தோழர்கள் சொல்கின்றார்கள்.

பகுத்தறிவு  ஏற்க மறுக்கின்றது.  இவ்வளவு சக்தி வாய்ந்த, பல நூற்றாண்டுகளாக உள்ள  ஒரு பறவை யாராலும் படைக்கப்படவில்லை ஆனால் இதில் நூறில் ஒரு பங்கு கூட இல்லாத விமானத்திற்கு இவ்வளவு செலவும், மனித ஆற்றலும் தேவைப்படுகின்றது.

உண்மையான பகுத்தறிவை உபயோகித்தால் கணக்கு இடிக்குதே..நாத்திகள் தோழர்கள் சிந்திப்பார்களாக!!


"அவர்களுக்கு மேலே பறவைகள் (சிறகுகளை) விரித்தும், மடக்கியும் இருப்பதை அவர்கள் காணவில்லையா? அளவற்ற அருளாளனைத் தவிர வேறு எதுவும் அவற்றை கீழே விழாது தடுத்துக் கொண்டிருக்கவில்லை.அவன் ஒவ்வொரு பொருளையும் பார்ப்பவன்." [67:49]

"ஆகாய வெளியில் வசப்படுத்தப்பட்ட நிலையில் பறவையை அவர்கள் பார்க்கவில்லையா? அல்லாஹ்வைத் தவிர யாரும் அவற்றை (அந்தரத்தில்) நிறுத்தவில்லை. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன." [16:79]



No comments:

Post a Comment