பக்கங்கள் செல்ல

Sunday, July 17, 2016

எதிர் தொடர் 19:உடைந்த சிலுவை-பாகம்-3 பைபிலின் மூலங்கள் ஒரு பார்வை

ஏக இறைவனின் திருப்பெயரால்

எதிர்தொடர் 19: உடைந்த சிலுவை- பாகம் 3: பழைய ஏற்பாடு 

           சென்ற தொடரில் நாம் பைபில் பழைய ஏற்பாட்டின் மூல ஆதாரங்களில் ஒன்றான செப்டகண் குறித்தும் அது குறித்த வரலாற்று தகவல்கள் எப்படி முரண்பாடுகளின் மொத்த வடிவமாக இருக்கிறது என்பதை கண்டோம். அதுவல்லாத சில மூலங்களையும் அடிப்படையாக கொண்டாதுதான் பழைய ஏற்பாடு என்பதாக கிறித்தவ உலகம் இன்று கூறிகொண்டுள்ளது. அவை குறித்து இந்த தொடரில் காண்போம்.

பைபிலின் மூலங்கள் ஒரு பார்வை:







    பைபிலின் மூலங்களை விளக்கும் படத்தில் கீழே காட்டப்பட்டிருக்கும் சுருள்கள் இன்று நம்மிடம் இல்லை. சென்ற தொடரில் செப்டகணின் மூலங்களாக கூறப்படும் தொலைந்த சுருள்கள்தான் original manuscripts என்று இங்கு கூறப்பட்டுள்ளது. இன்று பைபிலின் மூலங்களால கூறப்படுபவையில் மிகப்பிரதானமானவை masoretic text மற்றும் சாக்கடல் சாசனச்சுருள்கள் தான். இவற்றை குறித்து சிறிது பார்த்துவிடுவோம். 
           இந்த இரண்டில் காலத்தால் மிகப்பழமையானது கும்ரான் சாக்கடல் சாசனச் சுருள்கள்தான்.

கும்ரான் சாக்கடல் சாசனச்சுருள்கள்:
  இவை சாக்கடல் அருகாமையில் உள்ள கும்ரான் குகைகளில் கிடைக்கப்பெற்ற 981 சுருள்களாகும். இவை 1947-1956 பல கட்ட அகழ்வாராய்ச்சியின் போதும் விபத்தாகவும் 11 குகைகளில் இருந்து கிடைத்தவை ஆகும். இந்த சுருள்கள் கிமு 2ம் நூற்றாண்டில் இருந்து கிபி 1ம் நூற்றாண்டு காலகட்டத்தை சேர்ந்த்தாக கூறப்படுகிறது. ஆனால் இந்த சுருள்கள் பழைய ஏற்பாட்டினை முழுவதும் கொண்டதாக இல்லை. அதாவது பழைய ஏற்பாட்டின் பல பகுதிகள் இதில் இல்லை. உதாரணமாக எஸ்தரின் ஆகமம் காணவில்லை. அது போல் இதில் காணப்படும் பல ஆகமங்கள் இன்றைய பழைய ஏற்பாட்டில் இல்லை. உதாரணமாக ஏனோகின் ஆகமம். உன்மையில் இந்த சுருள்களை கிறித்தவர்கள் மூல ஆதாரமாக கொண்டிருந்தால் இதில் இருக்கும் பல புத்தகங்கள் இன்றைய பைபிலில் சேர்க்கப்பட்டிருக்கும். அது போல் இதில் இல்லாதது நீக்கப்பட்டிருக்க வேண்டும். ஆக இந்த சுருள்கள் கிடைக்கப்பட்ட பிறகும் எந்த பெரிய மாற்றமும் பைபிலில் இல்லை. இது கண்டு பிடிப்பதற்குமுன்பு எந்த ஆகமங்கள் இருந்தனவோ அதுதான் இன்றும் உள்ளது. ஆகமங்களின் பகுதிகள்தான் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக் கிடக்கின்றன. மேலும் ஆகமங்களாக வரிசை படுத்தப்பட்ட நிலையில் இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. இதில் இன்னொன்றும் கவனிக்கப்பட வேண்டியதுள்ளது. ஆதாவது இது பைபிலின் நாயகர்களான மோசே, தாவீது, சாலமோன் போன்றவர்களின் சமகாலத்தையுடையதும் இல்லை. இதை இயற்றியவர்கள் குறித்த தகவல்களும் இன்றும் இல்லை. ஆக இதை மூல ஆதாரமாக கொள்ளும் நிலையில் இன்றைய கிறித்தவர்கள் இல்லை.

மசோரெடிக் ஏடுகள்:
        
      இந்த ஏடுகள் கிபி 10ம் நூற்றாண்டு வரை யூத அறிஞர்களால் தொகுக்கப்பட்டு (கூட்டல் கழித்தல் செய்யப்பட்டு) தானாக் என்று அறியப்படும் யூத நூலாகும். சென்ற தொடரில் தியாகி ஜஸ்டின் “யூதர்கள் தங்களது ஏடுகளில் தொடர்ச்சியாக கூட்டல் கழித்தல் செய்தனர்” என்று குறிபிட்டதை இங்கு நினைவு கூறுவது சரியாக இருக்கும். பத்தாம் நூற்றாண்டுவரை கிறித்தவத்தின் முதன்மை எதிரிகளால் தோற்றம் பெற்று கொண்டிருந்த தானாக் நூல்தான் கிறித்தவர்களின் பழைய ஏற்பாட்டின் மூலம் என்று கூறுவதே கிறித்தவ வேதத்தின் அவலத்தை காட்ட போதுமானது. இந்நிலையில் கத்தோலிக்கர்கள் பைபிலில் அதிக புத்தகம் இருப்பதாகவும் கூறி அதை மறுத்த பிராடஸ்டண்ட் எழுச்சி?... குறித்து அடுத்த தொடரில் இன்ஷா அல்லாஹ் காண்போம்

எதிர்தொடர்அனைத்து கட்டுரைகளையும் காண                    உடைந்தசிலுவை அனைத்து கட்டுரைகளையும் காண
       


No comments:

Post a Comment