பக்கங்கள் செல்ல

Sunday, July 17, 2016

எதிர்தொடர் 19: உடைந்த சிலுவை- பாகம் 2: பழைய ஏற்பாடும் கிரேக்க செப்டகணும்



ஏக இறைவனின் திருப்பெயரால்

எதிர்தொடர் 19: உடைந்த சிலுவை- பாகம் 2: பழைய ஏற்பாடு

   இந்த கட்டுரையானது கிறித்தவர்களின் நம்பிக்கையின் மையமான பைபில் குறித்து ஒரு சிறு வெளிச்சத்தை பாய்ச்சவுள்ளது. இதுவரை நாம் பல கட்டுரைகளை கிறித்தவம் குறித்து பல இணையங்களில் கண்டுள்ளோம். ஆனால் இந்த கட்டுரை சிறிது வேறு பட்டது. அதாவது பல கிறித்தவ எதிர்ப்பு இனையங்கள் பழைய ஏற்பாடு குறித்து விமர்சிக்கும் போது அதில் உள்ள கருத்து முரண்களையும் ஆபாசங்களையும் முன்வைக்கும் அதன் மூலம் பைபிலின் பழைய ஏற்பாடு இறைவேதம் இல்லை என்று வாதிக்கும். இந்த முரண்கள் ஏன் இறைவேதம் என்று கூறக்கூடியதில் நுழைந்த்து என்பதை ஆய்வு செய்வதே இந்த கட்டுரையின் நோக்கம். ஆதாவது பழைய ஏற்பாடின் வரலாற்றை அறிவதுதான் அதற்கு ஓரே வழி என்று எண்ணி அதே பாதையில் பயணித்து ஆய்ந்து அறிந்த வற்றை இங்கு வாசகர்களுக்கு கட்டுரையாக தந்துள்ளேன்.

பழைய ஏற்பாடு:

  கிறித்தவ வேதமான பைபிலின் இரண்டு பெரும் பாகங்களில் ஒன்றுதான் பழைய ஏற்பாடு ஆகும். இந்த பழைய ஏற்பாடானாது ஏசுவிற்கு முன்சென்ற பல காலங்களில் வாழ்ந்து மறைந்த தீர்கதரசிகள் மற்றும் ராஜாக்கள் மற்றும் முன்சென்ற நல்லோர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த செய்திகளை உள்ளடக்கிய சுமார் 39 புத்தகங்களை கொண்டுள்ளது. பழைய ஏற்பாட்டில் உள்ள புத்தகங்களின் உண்மை தன்மையை ஆய்வு செய்வதற்கு முன்பு அதன் வரலாற்று மூல ஆதாரங்கள் பற்றி சற்று விரிவாக காண்போம்.
 
மேலே தரப்பட்டிருக்கும் தகவல் படத்தில் LXX என்று குறிப்பிட பட்டிருக்கும் கிரேக்க செப்டகனில் இருந்தும் என்ன வென்றே தெரியாத மூலத்தில் இருந்தும் பெறப்பட்ட மொழிபெயர்ப்புகளையும் அடிப்படை ஆதாரமாக கொண்டதுதான் பழைய ஏற்பாடாகும். ஆதாவது வரலாற்றின் பல காலங்களில் வாழ்ந்து மறைந்த பலரின் நூல்களின் தொகுப்புதான் பழைய ஏற்பாடாகும். இது யாரால் எப்படி ஒவ்வோர் காலத்திலும் தொகுகப்பட்டு பாதுகாக்கப்பட்டது என்பது எல்லாம் படைத்தவனுக்கு மட்டுமே தெரிந்த உன்மை. இன்று இஸ்லாமியர்கள் கைகளில் கொண்டிருக்கும் ஹதீஸ்களில் பலவீனமானவை, இட்டுகட்டபட்டவை என்று ஒதிக்கித்தள்ளும் ஹதீஸ்களின் தரத்தை கூட பைபிலின் மூல ஆதாரம் பெறிருக்கவில்லை என்பது கவனிக்கதக்கது. ஆக நம்மிடம் இருக்கும் பழைய ஏற்பாட்டின் மூல ஆதாரங்களில் காலத்தால் மிகப்பழமையான மூல ஆதாரமான  செப்டகனில் இருந்து நமது ஆய்வை தொடங்குவோம்.
செப்டகனின் வரலாறு:
       
      செப்டகண் குறித்த வரலாற்றை நாம் சிறிது பார்வையிட்டோம் என்றாலே பழைய ஏற்பாட்டின் உண்மைதன்மை என்னவென்பது தெளிவாகிவிடும். இது குறித்து பல காலகட்டங்களில் வாழ்ந்து மறைந்த கிறித்தவ பாதிரிகளின் குறிப்புகளையும் சில வரலாற்றாளர்களின் குறிப்புகளையும் இங்கு பதிவு செய்வதின் மூலம் செப்டகன் குறித்த ஒரு அடிப்படையான பார்வையை நாம் பெற முடியும். இன்று பலராலும் ஏற்க்கொள்ளப்பட்ட செப்டகனின் வரலாற்று குறிப்பு இதுதான் கிபி. ஒன்றாம் இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த ஜோசபெஸ் தனது புத்தகமான Antiquities of Jews ல் பாடம் இரண்டில் பக்கம் 275 -281 முடிய ஹீப்ரு தோராவில் இருந்து மோசேயின் யூத சட்டங்கள் கிரேக்கத்திற்கு மொழியாக்கம் செய்தல் குறித்த வரலாறை கூறுகிறார். அந்த பாடத்தில் கிமு 300களில் தாலமி ஃபிலடெல்பஸ், தனது நூலக பொறுப்பாளரான டெமெட்ரியஸின் உந்துதலால் மோசேயின் சட்டத்தை மொழியாக்கம் செய்ய தனது நண்பரான அரிஸ்டியஸுக்கு வேண்டுதல் செய்ததில் இருந்து எவ்வாறு 70 யூத பெரியவர்களால் மோசேயின் சட்டங்கள்* மொழியாக்கம் செய்யப்பட்ட்து என்பதை விரிவாக அலசுகிறார். ஆனால் இந்த இடத்தில் ஒரு விஷயத்தை தெளிவாக கவனிக்க வேண்டும். அதாவது 70 யூத பெரியவர்களால் மொழியாக்கம் செய்யப்பட்ட்து மோசேயின் சட்ட புத்தகம்தான். மேலும் ஏசுவின் சமகாலத்தவரான கிபி. ஒன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஃபைலோ ஜுடீயா என்ற யூத அறிஞகரின் புத்தகமும் மோசேயின் சட்டங்கள் குறித்த விளக்கத்தோடு முடிவடைகின்றன்.
 ஆனால் இன்று நமக்கு கிடைக்கும் பழைய ஏற்பாட்டில் மோசேக்கு வழங்க பட்டதாக கூறப்பட்ட ஆகமங்கள் தவிர்த்து கிட்டத்தட்ட ராஜாக்கள் என்றும், தீர்கதரிசிகள் என்றும், பாடல்கள் என்றும் 34 ஆகமங்கள் உள்ளன. இது யாரால் எப்போது தொகுக்கப்பட்டது என்பதை அறிய இன்னும் நாம் வ்ரலாற்றை சற்று நோக்குவோம். இரண்டாம் நூற்றாண்டு வரை ஏசுவே அறியாத ஆகமங்கள் மற்றும் வசனங்கள் பழைய ஏற்பாட்டில் எப்படி நுழைந்தன.(அடுத்தடுத்த தொடர்களில் இவற்றை விளக்கமாக காணலாம்) என்பதை அறிய மேலே குறிபிட்ட ஏசுவின் சமகால குறிப்புகள் தவிர வேறு ஏதும் இல்லாத நிலையில் அன்றைய கால பாதிரிகளின்( EARLY CHURCH FATHER ) குறிப்புகளை நாட வேண்டிய நிலை ஏற்பட்டது. அதை ஆய்வு செய்ததில் பல சுவரஸ்யமான  முடிவுகளை அடைந்தேன். அதை இங்கு பகிர்கிறேன்.
தியாகி ஜஸ்டின் அவர்களது உலரல்

  கிபி 2ம் நூற்றாண்டில் வாழ்ந்த தியாகி ஜஸ்டின் செப்டகனில் இருக்கும் தூதர்கள் புத்தகம் குறித்து கூறும் போது பின் வருமாரு கூறுகிறார்:
            And when Ptolemy king of Egypt formed a library, and endeavoured to collect the writings of all men, he heard also of these prophets, and sent to Herod, who was at that time king of the Jews, requesting that the books of the prophets be sent to him. And Herod the king did indeed send them, written, as they were, in the foresaid Hebrew language. And when their contents were found to be unintelligible to the Egyptians, he again sent and requested that men be commissioned to translate them into the Greek language. And when this was done, the books remained with the Egyptians, where they are until now.(anf 1. p.no.456)
      அதாவது கிமு 300 ல் வாழ்ந்த தாலமி தூதர்கள் புத்தகம் குறித்து கிபி 1 ல் வாழ்ந்த ஏரோதிடம் ஒரு வேண்டுகோளை வைத்தாராம்? எப்படி இருக்கிறது கதை. ஆக செப்டகணில் இருக்கும் தூதர்கள் தொடர்பான புத்தகம் ஒரு போலி என்பதற்கு ஜஸ்டினின் உலரல் ஒரு ஆதாரம்.

இரேனியஸின் வாக்குமூலம்:

 கிபி 2ம் நூற்றாண்டில் வாழ்ந்த இரேனியஸ் செப்டகனில் இருக்கும் தூதர்கள் புத்தகம் குறித்து கூறும் போது பின் வருமாரு கூறுகிறார்:
For before the Romans possessed their kingdom, while as yet the Macedonians held Asia, Ptolemy the son of Lagus, being anxious to adorn the library which he had founded in Alexandria, with a collection of the writings of all men, which were [works] of merit, made request to the people of Jerusalem, that they should have their Scriptures translated into the Greek language. And they—for at that time they were still subject to the Macedonians—sent to Ptolemy seventy of their elders, who were thoroughly skilled in the Scriptures and in both the languages, to carry out what he had desired.1063 But he, wishing to test them individually, and fearing lest they might perchance, by taking counsel together, conceal the truth in the Scriptures, by their interpretation, separated them from each other, and commanded them all to write the same translation. He did this with respect to all the books. But when they came together in the same place before Ptolemy, and each of them compared his own interpretation with that of every other, God was indeed glorified, and the Scriptures were acknowledged as truly divine. For all of them read out the common translation [which they had prepared] in the very same words and the very same names, from beginning to end, so that even the Gentiles present perceived that the Scriptures had been interpreted by the inspiration of God.1064 And there was nothing astonishing in God having done this,—He who, when, during the captivity of the people under Nebuchadnezzar, the Scriptures had been corrupted, and when, after seventy years, the Jews had returned to their own land, then, in the times of Artaxerxes king of the Persians, inspired Esdras the priest, of the tribe of Levi, to recast all the words of the former prophets, and to re-establish with the people the Mosaic legislation. (anf 1 , P.No.1138)
  இரேனியஸ், எஸ்டரஸ் என்ற பூசாரிதான் தூதர்கள் குறித்த புத்தகத்தை ஆர்டரசெர்செக்ஸ் காலத்தில் செப்டகணில் இனைத்ததாக கூறுகிறார்.

  இவ்வாறு சமகாலத்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசும் நிலையில் தியாகி ஜஸ்டின், டிரிபோ என்ற யூத அறிஞகருக்கு அனுப்பிய மறுப்பு கடிதத்தில் ஒன்றை குறிப்பிடுகிறார். அதையும் காணுங்கள்:


 “But I am far from putting reliance in your teachers, who refuse to admit that the interpretation made by the seventy elders who were with Ptolemy [king] of the Egyptians is a correct one; and they attempt to frame another. And I wish you to observe, that they have altogether taken away many Scriptures from the translations effected by those seventy elders who were with Ptolemy, and by which this very man who was crucified is proved to have been set forth expressly as God, and man, and as being crucified, and as dying; but since I am aware that this is denied by all of your nation, I do not address myself to these points, but I proceed to carry on my discussions by means of those passages which are still admitted by you. For you assent to those which I have brought before your attention, except that you contradict the statement, ‘Behold, the virgin shall conceive,’ and say it ought to be read, ‘Behold, the young woman shall conceive.’ And I promised to prove that the prophecy referred, not, as you were taught, to Hezekiah, but to this Christ of mine: and now I shall go to the proof.” Here Trypho remarked, “We ask you first of all to tell us some of the Scriptures which you allege have been completely cancelled.”(ANF 1, Chapter LXXI, P.No:626)

   டிரிபோவுக்கு எழுதிய கடித்தில் ஜஸ்டின்யூதர்கள் உங்களிடம் இருக்கும் செப்டகணில் பல ஆகமங்கள் மொத்தமாகவே இல்லை என்பதாக எழுதுகிறார். ஆக பைலோ ஜூடியாவின் காலத்திற்கு பிறகு பல சேர்கப்பட்டிருக்க வேண்டும். இந்த இடத்தில் ஒரு கேள்வியை முன் வைக்கத்தோன்றுகிறது அதாவது பழைய ஏறபாட்டில் ஏசு சென்ற பிறகு ஏன் இவ்வளவு குழப்பம்.

கேள்வி 1: பழைய ஏற்பாட்டில் இருக்கும் ஆகமங்களின் எண்ணிக்கை என்ன? 5, 39, அல்லது அதற்கும் மேற்பட்டதா? இன்று இருக்கும் பழைய ஏற்பாடானது எப்படி யூதர்களின் தற்போதைய தனாகின் 39 ஆகமங்களுடன் ஒத்து அமைகிறது? ஜஸ்டினின் குறிப்பை கொண்டு பார்க்கும் போது இன்றிருக்கும் பழைய ஏற்பாட்டில் 39 க்கும் அதிகமான ஆகமங்கள் இருந்திருக்க வேண்டும். மேரியை குறிக்கும் கன்னி என்ற வார்த்தையை மாற்றி இளம்பெண் என்று மாற்றம் செய்த யூதர்களின் ஆகமங்களின் எண்ணிக்கையை சாடுகிறார் ஜஸ்டின் என்பதை நினைவில் இருத்த வேண்டியுள்ளது. ஜொசபஸ், ஃபைலோ ஜூடியா போன்ற அறிஞர்களின் கருதியலின் படி 5 ஆகமங்கள் இருந்திருக்க வேண்டும். இதில் எது சரி.

கேள்வி 2: ஏசுவின் முன் உள்ள காலத்தை சார்ந்த எந்த சுருள்களும் இன்று இருக்கும் பழைய ஏற்பாடு போல் இருப்பதாக தெரியவில்லை. ஏன்?
(கும்ரான் அல்லது சாக்கடல் சாசனச் சுருளையும் சேர்த்து. வரும் தொடர்களில் இது குறித்து தெளிவாக காண்போம்).
  இப்படியாக விடை அறியமுடியாத கேள்விகள் பழைய ஏற்பாட்டின் மூல ஆதாரங்களின் ஒன்றான செப்டகண் குறித்து எழும் வேலையில்  கத்தோலிக்க கலைகளஞ்சியம் ஒரு பகீர் தகவலை நமக்கு தருகிறது. இதோ

 "The Church had adopted the Septuagint as its own ; this differed from the Hebrew not only by the addition of several books and passages but also by innumerable variations of text, due partly to the ordinary process of corruption in the transcription of ancient books, partly to the culpable temerity, as Origen called it, of correctors who used not a little freedom in making 'corrections,' additions, and suppressions, partly to mistakes in translation, and finally in great part to the act that the original Septuagint had been made from a Hebrew textuite different from that fixed at Jamnia as the one standard by the Jewish Rabbis under Akiba the founder of Rabbinical Judaism." (Hexapla, P.No.828, Vol VII, Catholic Encyclopedia)



அதாவது கிறித்தவர்கள் செப்டகணை சரி செய்கிறோம் என்ற பெயரில் பல புத்தகங்களை இணைத்ததாகவும் அவ்வாறு இணைத்ததின் விளைவால் செப்டகண் முழுமையாக தனது உண்மை வடிவத்தையே இழந்து விட்டதாக கத்தோலிக்க கலைகளஞ்சியம் கூறுகிறது. இப்படியாக பழைய ஏற்பாட்டின் மூல ஆதாரங்களே ஆடிபோய் உள்ளது. வரும் தொடர்களில் இன்னும் கிறித்தவர்கள் மூல ஆதாரங்களாக கொள்ளும் ஏடுகள் குறித்து ஆய்வு செய்வோம், இன்ஷா அல்லாஹ்.
எதிர்தொடர்அனைத்து கட்டுரைகளையும் காண    உடைந்தசிலுவை அனைத்து கட்டுரைகளையும் காண

No comments:

Post a Comment