புற்று நோய் மிகக் குறைவாக இருந்த நாட்டில் 4000 மடங்கு அதிகரிப்பு - அதிர்ச்சி ரிப்போர்ட்! ஹிரோஷிமாவை விட அதிகம் பாதிப்பு!!
அமெரிக்கா இராக்கின் மேல் குண்டு வீசுவதை இப்போது நிறுத்தி இருக்கலாம் ஆனால் குண்டு வீச்சினால் ஏற்பட்ட பாதிப்புகள் இராக்கில் உள்ள மனித உடல்களை பல தலைமுறைகளுக்கு பாதிக்கும் என்பது நிரூபிக்கப்பட்டு வருகின்றது. பிறக்கும் குழந்தைகளின் உடலமைப்பில் ஏற்படும் மாற்றங்கள், அதிசியமான வியாதிகள், மேலும் எண்ணிலடங்கா புற்று நோய் பாதிப்புகள் என அந்த மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஆயுதங்களால் ஏற்பட்ட சுற்றுப்புற சூழல் பாதிப்பு, குறிப்பாக யுரானிய வெடிமருந்துகளால் ஏற்பட்ட தாக்கம் தான் இராக் மக்களை மிகவும் கடுமையாக பாதித்து வருகின்றது. இரண்டு தலைகளுடன் பிறந்த குழந்தைகள், ஒரு கண்ணுடன் பிறந்த குழந்தைகள், முற்றிலும் சிதைக்கப்பட்ட நிலையில் பிறக்கும் குழந்தைகள் என மிகவும் மோசமான நிலையில் குழந்தைகள் பிறப்பதற்கான காரணம் இந்த ஆயுந்தங்களினால் ஏற்பட்ட தாக்கம் தான் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இன்று, 15 சதவீத பலூஜா குழந்தைகள் பிறக்கும்போதே ஊனமுற்றதாக பிறக்கின்றன. இது 14 மடங்கு ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா, நாகஷாக்கி மாநிலங்களை விட அதிகம். ஐரோப்பாவை விட 33 மடங்கு அதிகம். மேலும் இந்த பாதிப்பு ஆண்/பெண் சதவீதத்தையும் தாக்கியுள்ளது. தற்போது, 100 பெண்களுக்கு, 86 ஆண்கள் மட்டுமே உள்ளனர்.
பொய்யை மூலதனமாக வைத்து ஒரு நாட்டு மக்களையே நாசப்படுத்திய ரவுடிப் படைகளோ, இதைப்பற்றிக் கவலைகொள்வதாக இல்லை. ஒரு காலத்தில் மருத்துவத்தில் மட்டுமில்லாமல் அனைத்துத் துறைகளிலும் கோலோச்சிய இராக், இப்போது அநியாயக்காரர்களின் அக்கிரமத்தால் தன வளத்தை இழந்து, வருங்கால சந்ததிகளையும் இழந்து வருவது வேதனையிலும் வேதனை.
இந்த அக்கிரமக்காரர்களுக்கு என்ன தான் தண்டனை? இதைப்பற்றி திருக்குர்ஆன் என்ன சொல்கின்றது என்று பார்ப்போம்.
"மேலும் அக்கிரமக்காரர்கள் செய்து கொண்டிருப்பதைப் பற்றி அல்லாஹ் பராமுகமாக இருக்கிறான் என்று (நபியே!) நீர் நிச்சயமாக எண்ண வேண்டாம்; அவர்களுக்கு (தண்டனையை) தாமதப் படுத்துவதெல்லாம், கண்கள் விரைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கும் (அந்த மறுமை) நாளுக்காகத்தான்." [14:42]
"அவர்கள் தங்கள் சூழ்ச்சிகளைச் செய்து கொண்டேயிருந்தனர்; அவர்களுடைய சூழ்ச்சிகள் மலைகளைப் பெயர்த்து விடக்கூடியவையாக இருந்தபோதிலும், அவர்களின் சூழ்ச்சி(க்கு உரிய தண்டனை) அல்லாஹ்விடம் இருக்கிறது." [14:46]
"இந்த பூமி வேறு பூமியாகவும், இன்னும் வானங்களும் மாற்றப்படும் நாளில் (அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.) மேலும் அடக்கியாளும் ஏகனாகிய அல்லாஹ்வின் முன்னிலையில் வெளியாகி நிற்பார்கள்." [14:48]
"இன்னும் அந்நாளில் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டவர்களாகக் குற்றவாளிகளை நீர் காண்பீர்." [14:49]