பக்கங்கள் செல்ல

Thursday, December 31, 2015

"அல்குர்ஆன் உலகத்தையே மாற்றியது" உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் போலோ கொயல்கோ(Paulo Coelho)



"அல்குர்ஆன் உலகத்தையே மாற்றியது" உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்
போலோ கொயல்கோ(Paulo Coelho)
ççççççççççççççççççççççççççççççççççççççççççççççççççççççççççççç
முகநூல் பக்கத்தில் இவர் பதிந்த இப்பதிவு 40,000 ற்கும் அதிகமான லைக்ஸும், (Like) 5000 ற்கு அதிகமான பகிர்வுகளையும் பெற்றுள்ளது.
இது சகல மதங்களையும் பொறுமையுடன் ஆராயக்கூடிய மக்களிடம் இவருக்கிருக்கும் செல்வாக்கை காட்டுகிறது.
இப்பதிவுக்கு ஹிபா என்ற பெண்மணி, "கலவரங்களுக்கும், கொலைகளுக்கும் இப்புத்தகம்தான் காரணம்" என்ற கருத்தை வெளியிட்ட பொழுது, இவ் எழுத்தாளர் கீழ்வருமாறு பதிலடி கொடுத்தார்.
"நீங்கள் கூறுவது உண்மையல்ல, நானும் ஒரு கிறிஸ்தவன்தான்.பல நூற்றாண்டுகளாக கிறிஸ்தவர்கள்
வாழ் முனையில் தங்களுடைய மதத்தை வற்புறுத்தி பரப்பினார்கள்."
"தேவையென்றால் Cruzades என்ற சொல்லின் அர்த்தத்தை அகராதியில் பாருங்கள்." 
"பெண்களை சூனியக்காரர்கள் என்று கொலை செய்தோம். விஞ்ஞான உண்மைகளை மறுதளித்தோம். இதற்கு உதாரணம் கலிலியோவின் மரணமாகும்." (பூமி உருண்டை என்று கூறியதற்காக கொலை செய்யப்பட்டார்)
"ஆகவே மதத்தை குறை கூறாதீர்கள். கிறிஸ்தவத்தை மாற்றிய மக்களை குறை கூறுங்கள்."
இப்பெண்ணிற்கு கூறிய பதிலுக்கு 7277 லைக்ஸ் கிடைத்துள்ளது.

நன்றி : Meezan - தராசு


இரசாயண பொறியியலில் அற்புதமான கண்டுபிடிப்புக்காக அதிஉயர் விருது பெற்ற முஸ்லிம்பெண் விஞ்ஞானி.

இரசாயண பொறியியலில் அற்புதமான கண்டுபிடிப்புக்காக அதிஉயர் விருது பெற்ற முஸ்லிம்பெண் விஞ்ஞானி.
========================================================
சிங்கப்பூரை தலைமையகமாக கொண்ட IBN (Institute of Bio Engineering and Nano Technology) என்ற இரசாயண பொறியியல் தொழில்நுட்ப நிறுவனம் ஐந்து இலட்சம் அமெரிக்க டாலர்களையும், விருதையும் பரிசாக வென்றுள்ளது.
இப்போட்டியில் இஸ்லாமிய கூட்டமைப்பில் வாழும் முஸ்லிம் விஞ்ஞானிகளும், உலகில் மற்றைய நாடுகளில் வாழும் முஸ்லிம் விஞ்ஞானிகளும் கலந்து கொண்டார்கள்.
இவரின் வெற்றியை பெற்றுத்தந்த கண்டுபிடிப்பானது மிகச்சிறிய நனோ உயிரியல் துகளாகும். Nano Particles) இது உடம்பில் நீரிழிவுநோயாளிகளுக்கு சீனியின் அளவை கணக்கிட்டு, எப்பொழுது இன்சுலின் உடம்புக்குள் செலுத்த வேண்டுமென்பதை நோயாளிக்கு அறியத்தரும். அப்பொழுது அவர்கள் இன்சுலினை வாயினூடாகவோ, நாசியினூடாகவோ உடம்பில் சேர்க்க முடியும். இன்சுலின் ஊசி குத்துவது தவிர்க்கப்படும்.
இது மனித குலத்திற்கு மிகவும் வரப்பிரசாதமாகுமென்று போட்டியைநடாத்தியவர்கள் கருத்து தெரிவித்தனர்.
ஈரானில் தெஹ்ரானில் உள்ள விஞ்ஞான ஆராச்சிகழகம் இப்போட்டியை நடாத்துகிறது. உலகிலுள்ள 600 இஸ்லாமிய விஞ்ஞானிகள் இப்போட்டியில் கலந்து கொண்டார்கள். நோபல் பரிசுக்கு சமமாக இஸ்லாமிய உலகில் இவ்விருது கருதப்படுகிறது. IBN நிறுவனம் இதுவரை 150 ற்கு மேற்பட்ட கண்டுபிடிப்புகளுக்காக, கண்டுபிடிப்பு உரிமைகளை (Patent Rights) கொண்டுள்ளது.
இதில் வெற்றிபெற்ற சிங்கப்பூரை சேர்ந்த இந்நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி ஓர் இஸ்லாமிய பெண்ணாவார். 49 வயதுடைய பேராசிரியர் ஜாக்கி இங்க், தாய்வானிலுள்ள தாய்பேயை பிறப்பிடமாக கொண்டவர். 30 வயதில் இஸ்லாத்தை தழுவிய இவர் சிங்கபூரிலும், தாய்வானிலும், அமெரிக்காவிலும் இரசாயண பொறியியலில் உயர் கல்வி கற்றார்.
1992 ல் உலகின் புகழ்பெற்ற அமெரிக்க பல்கலைக்கழகமான மஸசூஸெட் தொழில்நுட்ப பல்கலைகழகத்தில் சேர்ந்து 2005 ம் ஆண்டுவரை இரசாயண பொறியியலில் பேராசிரியராக பணி புரிந்தார். அக்கால கட்டத்தில் ( 2003 ம் ஆண்டு) IBN என்ற ஆராச்சி நிறுவனத்தை உருவாக்கினார்.



Tuesday, December 29, 2015

புகழ்பெற்ற ஹார்ட்வர்ட் சட்டப் பல்கலைகழகத்தால் சிறந்த நீதிச் சட்டங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்ட வசனம்!

புகழ்பெற்ற ஹார்ட்வர்ட் சட்டப் பல்கழைகழகம், திருக்குரானின் வசனத்தை மிகச் சிறந்த நீதிச் சட்டங்களில் ஒன்றாக தேர்ந்தெடுத்துள்ளது.
மனித வரலாற்றில் வெளியான, நீதி தொடர்புடைய சட்டங்களில் சிறந்த ஒன்றாக, ஹார்ட்வர்ட் பல்கழைகழக நூலக நுழைவாயிலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.






தும்மலில் ஒளிந்துள்ள தத்துவம்!


இஸ்லாம் மதம் அல்ல, ஒரு முழுமையான வாழ்க்கைச் சட்டம் என்று அறிந்து இருப்பீர்கள்... அதே போல் தான் ஒவ்வரு மதத்தைப் பின்பற்றுபவர்களும் சொல்கின்றனர்...இது எந்த அளவிற்கு சரியானது என்பதை ஆராய இந்த பதிவு ஒரு அளவுகோல்.

இஸ்லாத்தைப் பொருத்தவரை, ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு தேவையான அனைத்துச் சட்ட திட்டங்களையும் தெளிவாக தந்து விடுகின்றது... வேறு எந்த ஒரு சட்டமும் தேவையில்லாத அளவிற்கு ஒரு முஸ்லிம் எந்தக் காலத்திலும், சூழலிலும் வாழ முடியும், வாழ வேண்டும். இதன் ஒரு பகுதியாக, "தும்மல்" எப்படி மக்களால் எதிர்கொள்ளப்படுகின்றது என்பதை ஆராயுங்கள்.

அமெரிக்காவில் ஒருவன் தும்மினால், தும்மியவன் எதுவும் சொல்லாவிட்டாலும், அதைக் கேட்பவர்கள் "God Bless You" (இறைவன் அருள் புரியட்டும்) என்று சொல்வான்.

தும்மல் ஏற்பாட்டால் உலகில் உள்ள மக்கள் அனைவரும் மதத்தின் அடிப்படையில் இல்லாமல் மொழி, கலாச்சாரத்தின் அடிப்படையில் அணுகுகின்றனர். முஸ்லிம்கள் மட்டும் தான், உலகம் முழுவதிலும் ஒரே மாதிரியான அணுகுமுறை.

முஸ்லிம் தும்மினால், "எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே" (அல்ஹம்துலில்லாஹ்) என்று சொல்வான்..அதைக் கேட்பவன், "உனக்கு இறைவன் அருள்புரியட்டும்" என்று சொல்வான். இது  தான் ஆண்டிப்பட்டியில் உள்ள முஸ்லிமும், அமெரிக்காவில் உள்ள முஸ்லிமும் செய்கின்றான். அதுவும் இன்று நேற்றல்ல...1400 வருடங்களுக்கும் மேல், இன்னும் கடைசி முஸ்லிம் இருக்கும் வரை. இது எப்படி சாத்தியம்?

உலகில் எவ்வளவு மிகப்  பெரிய தலைவராக இருந்தாலும் (அ) அரசாக இருந்தாலும் இது போன்ற காலத்தால் அழியாத, உலக மக்கள் அனைவருக்கம் ஏற்ற ஒரு பழக்கத்தை கொண்டு வரவே முடியாது. தும்மல் ஒரு சிறிய உதாரணம் மட்டுமே....இஸ்லாத்தின் எந்த சட்டத்தை வேண்டுமென்றாலும்  எடுத்துக்கொள்ளுங்கள்... universal principal..

சமூகத்தில் உயர்ந்த்தவனுக்கு  ஒரு கலாச்சாரம், தாழ்ந்தவனுக்கு ஒன்று  அல்ல என்று நிரூபிக்கும் நெறி முறைகள்..

இறைவனால் மட்டுமே முடியும்... இஸ்லாம் சான்று பகிகின்றது.

எல்லாப் புகழும் இறைவனுக்கே!


குறிப்பு:"ரிதர்ந்கு" என்ற மொழி பேசும் மக்கள் மட்டும், தும்மியவனைப் பார்த்து, " நீ மூக்குத் தண்ணீரை வெளியாக்கிவிட்டாய்" என்று சொல்வார்களாம்.


 மருத்துவ ரீதியாக சரியான முறையில் தும்முவது எப்படி?



Ref:Responses_to_sneezing