முஸ்லிம்கள், கிருத்துவர்களை எப்படி நடத்த வேண்டும்? நபி (ஸல்) அவர்களால் எழுதப்பட்டதாக நம்பப்படும் இந்த கடிதத்தின் சுருக்கம்:
இன்று உலகில் முஸ்லிம், கிறிஸ்துவ மக்களுக்கு இடையேயான உறவு பலவீனப்பட்டுள்ள நிலையில், கிறிஸ்துவ சகோதர(ரி)களுக்கு நாம் சொல்லிக்கொள்வது என்னவென்றால், ஒரு உண்மையான முஸ்லிம் எந்த விதத்திலும் அவர்களை துன்புறுத்த மாட்டான் என்பதை இந்த கடிதத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம், மேலும் முஹம்மத் நபி (ஸல்) தன்னுடைய ஆளுமையின் கீழ் உள்ள சிறுபான்மையினரை எப்படி நடத்தினார்கள் என்பதற்கும் இது ஒரு சான்று.
(Saint Catherine's Monastery, Egypt) |
பல ஆதாரப்பூர்வமான வரலாற்று பதிவுகள், St.Catherine (Egypt) நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதில் சில பதிவுகள், இஸ்லாமிய நீதிபதிகளால் வரலாற்று நம்பகத்தன்மை வாய்ந்ததாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
துருக்கிய இஸ்லாமிய படைகள், எகிப்தை வெற்றிக்கொண்டபோது, அங்கே உள்ள மடத்தில் இருந்து எடுக்கப்பட்டு, இஸ்தான்பூல் அரண்மனையில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டது. இதனுடைய மூல பிரதி, இன்றும் இஸ்தான்பூல் அருங்காட்சியத்தில் உள்ளது.
கடிதத்தின் சுருக்கம்:
அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மத் இடமிருந்து, அருகில், மேலும் தொலைவில் உள்ள கிருத்துவர்களுக்கு இந்த உடன்படிக்கையின் மூலம் சொல்வது என்னவென்றால், நாங்கள் உங்களோடு இருக்கின்றோம்.
நிச்சயமாக, நான், இறை அடியார்கள், என் உதவியாளர்கள் மற்றும் என்னை பின்பற்றுபவர்கள், கிருத்துவர்களை பாதுகாப்போம், ஏனென்றால் அவர்கள் என் குடிமக்கள்; மேலும் அல்லாஹ்வின் மீது ஆணையாக அவர்கள் விரும்பாததை விட்டும் நான் தடுத்துக்கொள்வேன் .
அவர்களின் மீது எந்த கட்டாயமும் இல்லை. அவர்களின் நீதிபதிகள், பொறுப்பிலிருந்து நீக்கப்படமாட்டார்கள் துறவிகள் மடத்திலிருந்து நீக்கப்படமாட்டார்கள். கிறிஸ்துவர்களின் ஆலயங்களை இடிப்பதர்க்கோ, சேதப்படுத்துவத்ர்க்கோ யாருக்கும் அனுமதி இல்லை. ஆலயங்களில் இருந்து எதையும் முஸ்லிம்கள் எடுத்துச் செல்லக் கூடாது, யாராவது மீறி செய்தால், அல்லாஹ்வின் கட்டளைக்கும், அவன் தூதருக்கும் மாறு செய்தவராவார். உண்மையிலேயே, கிருத்துவர்கள் என்னுடைய நண்பர்கள், மேலும் அவர்கள் வெருப்பதிலிருந்து விலகிக்கொள்ள என்னுடைய அனுமதி பட்டயத்தை பெற்றுள்ளனர்.
அவர்களை யாரும் பயணம் செய்யுமாறும் கட்டாயப்படுத்தக்கூடாது. தங்களை பாதுகாத்துக்கொள்ள, முஸ்லிம்கள் தான் போரிட வேண்டுமே தவிர, கிறிஸ்துவர்களை தங்களோடு சேர்ந்து போரிடுமாறு கட்டாயப்படுத்தக்கூடாது. கிறிஸ்துவப் பெண்ணின் சம்மதம் இல்லாமல் முஸ்லிம் திருமணம் செய்யக்கூடாது, அவள் தன்னுடைய ஆலயத்திற்கு சென்று வழிபடுவதை தடுக்கக்கூடாது.
அவர்களுடைய ஆலயங்கள் கண்ணியப்ப்படுத்தப்படவேண்டும். அவைகள் பழுது பார்க்கப்படுவதை விட்டும் தடுக்கக்கூடாது. இறுதி நாள் வரை உள்ள முஸ்லிம்கள் இந்த உடன்படிக்கையை மீறக்கூடாது.
முழு விபரத்தையும் இந்த லிங்கில் சென்று பார்க்கலாம்.
நன்றி: நாடோடி தமிழன்
Ref:- letter-to-all-christians-from-prophet-muhammad-sa
குறிப்பு: சுறுக்கமாக மொழிபெயர்த்துள்ளேன்... மொழிபெயர்ப்பில் தவறு இருந்தால் தயவு செய்து சுட்டிக்காட்டவும்.
No comments:
Post a Comment