அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.
நீங்கள் அறிந்து கொண்டே உண்மையை பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள் --- குர்ஆன் 2:42
பரிணாமவியல் என்ற ஆதரமற்ற, அறிவியலுக்கு ஒத்துவராத, Hypothesis (Educated
Guess) ஆக கூட இருக்க தகுதியில்லாத ஒரு கொள்கை எப்படி லட்சக்கணக்கான மக்கள்
உயிரிழக்க காரணமாய் இருந்தது என்று சென்ற பதிவுகளில் பார்த்தோம்.
இன்ஷா அல்லாஹ், இந்த பதிவிலிருந்து, பரிணாமம் என்ற கோட்டை எத்தகைய கற்பனைகளால் கட்டப்பட்டது என்று பார்ப்போம்.
பதிவிற்கு செல்லும் முன் ஒரு சிறு விளக்கம். பரிணாமம் என்பது ஒரு பொதுவான
சொல் (Evolution in a broader sense means a merely change). அது
பலவற்றையும் குறிக்கும், eg. galaxies, languages, and political systems
etc. ஆனால் பரிணாமம் என்றாலே நமக்கெல்லாம் நினைவுக்கு வருவது உயிரியல்
பரிணாமம் (Biological Evolution) தான். அதாவது, இவ்வுலகில் உயிரினங்கள்
எப்படி வந்திருக்கும் என்று விளக்க முயற்சிக்கும் உயிரியல் பரிணாமம் தான்.
இப்போது பதிவிற்கு செல்வோம்....
உயிரியல் பரிணாமம் என்றால் என்ன?
ஒரு நிமிஷம்.....பதில் சொல்லுவதற்காக இந்த கேள்வியை கேட்கவில்லை.
உண்மையிலேயே பரிணாமம் என்றால் என்னவென்று உங்களிடம் தான் கேட்கிறேன்.
What is the definition of Evolution? or Define Evolution?
பரிணாமவியலின் உள்ளே சென்று பார்த்தால் தான் குளறுபடிகள் என்றால், பரிணாமம் என்ற தலைப்பை விளக்குவதிலேயே பல குளறுபடிகள்.
"படிப்படியாக" உயிரினங்கள் மாறியிருக்கும் என்று சொல்லுவார்களே,
அவையெல்லாம் பரிணாமத்தின் விளக்கம் இல்லையாம். என்ன குழப்பமாக இருக்கிறதா?.
பரிணாமவியல் என்றாலே குழப்பங்களின் கூடாரம் தானே!
இந்த பதிவில் மற்றொரு குழப்பத்திற்கும் உங்களை தயார் படுத்திக்கொள்ளுங்கள்.
இந்த பதிவில் மற்றொரு குழப்பத்திற்கும் உங்களை தயார் படுத்திக்கொள்ளுங்கள்.
விஷயத்திற்கு வருவோம். ஏன் அந்த விளக்கம் தவறு?
1. பரிணாமத்தின் மிகப் பெரிய ஆதரவாளரான Talk Origins தளத்தின் படி, "பரிணாமம் என்றால் என்ன"வென்று ஆக்ஸ்போர்ட் அறிவியல் அகராதி (Oxford Concise Science Dictionary) சொல்லுகிறதென்றால்,
"evolution: The gradual process by which the present diversity of plant and animal life arose from the earliest and most primitive organisms, which is believed to have been continuing for the past 3000 million years" - Oxford Concise Science Dictionary.
"பரிணாமம்: தற்காலத்திய, பல்வேறு வகைப்பட்ட தாவர வகைகளும், மிருகங்களும் எப்படி மிகப் பழங்கால உயிரினங்களிருந்து படிப்படியாக வந்திருக்கும் என்று கூறுவது பரிணாமம். இது கடந்த முப்பதாயிரம் லட்சம் ஆண்டுகளாக தொடர்வதாக நம்பப்படுகிறது" - Oxford Concise Science Dictionary
இந்த விளக்கம் சரியா? தவறா?
உங்களில் பலர், ஆக்ஸ்போர்ட் அறிவியல் அகராதி சரியாகத் தானே கூறுகிறது என்று நினைக்கலாம். அங்குதான் பிரச்சனையே...
Talk Origins தளம் என்ன தெரியுமா கூறுகிறது? ஒரு அறிவியல் அகராதி இப்படி விளக்கியிருப்பது மன்னிக்க முடியாததாம்.
"This is inexcusable for a dictionary of science" - Talk Origins
அதாவது, பரிணாமவியலை பலமாக ஆதரிக்கும் இந்த தளத்தை பொறுத்தவரை, அந்த
விளக்கம் தவறானது. அவர்களைப் பொறுத்தவரை இந்த விளக்கம் பரிணாமத்தின்
வரலாற்றை தான் பேசுகிறதாம், பரிணாமம் என்றால் என்னவென்று விளக்கவில்லையாம்.
அதுமட்டுமல்லாமல் "படிப்படியாக" என்ற வார்த்தை பரிணாமத்தை
விளக்க வரக்கூடாதாம்.
"...it specifically includes a term "gradual process" which should not be part of the definition. More importantly the definition seems to refer more to the history of evolution than to evolution itself" - Talk Origins
இப்போது நம்மிடத்தில் எழும் சில கேள்விகள்,
- ஒரு அறிவியல் அகராதியே இப்படி தவறாக எழுதியிருப்பது எதனால்?
- இதை எழுதுவதற்கு முன் அவர்கள் பரிணாமவியலாளர்களிடம் கருத்து கேட்கவில்லையா?
- அவர்களுக்கு பரிணாமம் என்றால் என்னவென்று புரியவில்லையா? அல்லது விளக்கத் தெரியவில்லையா?
- இப்படி தவறான ஒரு தகவலை தந்து மக்களை ஏமாற்றுகிறதா ஆக்ஸ்போர்ட் அகராதி?
- இல்லை, Talk Origins தளம் தவறா?
தயவு கூர்ந்து துறைச்சார்ந்த சகோதரர்கள் பதிலளியுங்கள்.
Talk Origins தளம் இத்தோடு நின்று விடவில்லை. மற்ற பிரபல அகராதிகளான
Webster's மற்றும் Chambersசும் தவறாம். இவைகளின் விளக்கம் ஆக்ஸ்போர்ட்
அறிவியல் அகராதியை விட மோசமாம்.
"evolution: ...the doctrine according to which higher forms of life have gradually arisen out of lower.." - Chambers
"evolution: ...the development of a species, organism, or organ from its original or primitive state to its present or specialized state; phylogeny or ontogeny" - Webster's
நான், எங்கள் நகர பொது நூலகத்தில் உள்ள Academic American Encyclopedia
வில் இது குறித்து பார்த்தது பின்வருகிறது. இதனுடைய
விளக்கமும் ஆக்ஸ்போர்ட் அகராதியை போலத்தான் இருக்கிறது.
"Evolution is the process by which all living things have developed from primitive organisms through changes occurring over billions of years, a progression that includes the most advanced animals and plants" - Academic American Encyclopedia, Vol-7, p-318.
இப்போது நம்முள் எழும் சில கேள்விகள்,
- எப்படி இத்தனை பிரபல அகராதிகள் மற்றும் கலைக்களஞ்சியங்கள் (Encyclopedia) தவறான விளக்கத்தை தந்திருக்கின்றன?
- ஒருவேளை, Talk Origins தளத்தினுடைய வாதம் தான் தவறா?
அதெல்லாம் சரி, இவையெல்லாம் தவறான விளக்கமென்றால் சரியான விளக்கம் தான் என்ன?
இதற்கு talk origins தளம் என்ன பதில் சொல்லுகிறது?
2. பிரபல பரிணாமவியலாரான Douglas J.Futuyma அவர்கள் கூறிய ஒரு விளக்கத்தை கூறுகிறது இந்த தளம். அது என்ன விளக்கம்?
"Biological evolution ... is change in the properties of populations of organisms that transcend the lifetime of a single individual. The ontogeny of an individual is not considered evolution; individual organisms do not evolve. The changes in populations that are considered evolutionary are those that are inheritable via the genetic material from one generation to the next. Biological evolution may be slight or substantial; it embraces everything from slight changes in the proportion of different alleles within a population (such as those determining blood types) to the successive alterations that led from the earliest protoorganism to snails, bees, giraffes, and dandelions." - Douglas J. Futuyma in Evolutionary Biology, Sinauer Associates 1986.
மேலே உள்ளதை சுருக்கமாக விவரிக்க வேண்டுமென்றால்,
"Evolution is a process that results in heritable changes in a population spread over many generations" - Talk Origins website.
"பல தலைமுறைகளுக்கு மக்கள் தொகையில் ஏற்படும் பரம்பரை மாற்றங்களின் விளைவுகளே பரிணாமம்" - Talk Origins website
(மொழிபெயர்த்துள்ள இந்த வாக்கியம் சரியா?, தவறென்றால் சரியான மொழிபெயர்ப்பை தரவும். திருத்திக் கொள்ளப்படும்)
நாம் மேலே பார்த்த யாவையும் talk origins தளத்தில் எழுதியது Lawrence A. Moran
அவர்கள். அவருடைய இந்த பதிவு நீட்டிக்க பட்ட போது (V2.15, 2006) அதில்,
Douglas J. Futuyma அவர்களின் குழு, 1997 ல் பரிணாமம் குறித்து கூறிய
விளக்கம் தவறென்கிறார் அவர்.
அதாவது 1986ல் Douglas J. Futuyma அவர்கள் கூறிய விளக்கம் சரி, ஆனால் 1997 ல் அவர் தலைமையில் இருந்த குழு கூறிய விளக்கம் தவறு.
சற்று விளக்கமாக சொல்லுவதென்றால், 1997ல் பரிணாமம் குறித்த ஒரு அறிக்கை
அளிப்பதற்காக Douglas J. Futuyma அவர்களின் தலைமையில் இருபது
அறிவியலாளர்கள் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு இறுதியாக
சமர்ப்பித்த அறிக்கையில், "பரிணாமம் என்றால் என்ன" என்ற கேள்விக்கு விளக்கமாக பின்வரும் பதில் வருகிறது,
"Biological evolution consists of change in the hereditary characteristics of groups of organisms over the course of generations. From long-term perspective, evolution is the descent with modification of different lineages from common ancestors. From a short-term perspective, evolution is the ongoing adaptation of organisms to environmental challenges and changes." - Final Draft, a group of twenty scientists chaired by Douglas J. Futuyma issued a working draft of a "white paper" on Evolution, Science, and Society, 1997.
இந்த விளக்கத்தை பற்றி கருத்து தெரிவிக்கும் Lawrence A. Moran அவர்கள்,
இந்த விளக்கத்தின் ஒரு பகுதி துருதிஷ்டவசமானது என்று கூறுகிறார்.
அதுமட்டுமல்லாமல், Douglas J. Futuyma அவர்களின் குழு பரிணாமம்
குறித்து அளித்த விளக்கம் தவறு என்கிறார் அவர்.
"This last sentence is really unfortunate. These twenty scientists have now agreed to a definition that specifically mentions the mechanism of adaptation. This is not how one should define evolution. One wonders whether they mean to exclude random genetic drift or whether they simply lost sight of their goal in trying to work out a compromise definition" - Lawrence A. Moran
ஆக, 1986ல் Douglas J. Futuyma அவர்கள் பரிணாமம் குறித்து கூறிய விளக்கம் சரி, ஆனால் 1997ல் அவர் சார்ந்த குழு கூறிய விளக்கம் தவறு.
இது என்ன குழப்பம்?
இப்போது நாம் கேட்க நினைக்கும் கேள்விகள்,
- Douglas J. Futuyma போன்ற பெரிதும் மதிக்கத்தக்க ஒரு பரிணாமவியலாளர் ஏன் இருவேறு விளக்கங்களை தர வேண்டும்?
- இந்த இரு விளக்கங்களில் எது சரி? எது தவறு?
ஆக மொத்தத்தில் "பரிணாமம் என்றால் என்ன" என்ற கேள்வி அப்படியே இருக்கிறது. தலைப்பிலேயே இவ்வளவு குழப்பங்களா?
இத்தனை வருடங்களாக "(உயிரியல்) பரிணாமம்" என்ற சொல்லுக்கு சரியான விளக்கம் இல்லாமல் இருப்பது நன்றாகவா இருக்கிறது?
அதனால், துறைச்சார்ந்த சகோதரர்கள் இதை படிக்க நேர்ந்தால் பரிணாமத்திற்கு தெளிவான "Definition" யை ஆதாரங்களுடன் தாருங்கள்.
ஆனால் இதிலும் ஒரு பிரச்சனையுள்ளது. என்னவென்றால், அறிவியலாளர்களுக்குள்ளாகவே இது குறித்து குழப்பங்களாம்.
அடடா, என்னவொரு தெளிவாக, ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார்கள். அவர்களுக்குள்ளாகவே குழப்பங்களாம்....
புரியாத புதிர்தான்...
இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் நிலைக்கச் செய்வானாக...ஆமின்.
ஆனால் இதிலும் ஒரு பிரச்சனையுள்ளது. என்னவென்றால், அறிவியலாளர்களுக்குள்ளாகவே இது குறித்து குழப்பங்களாம்.
"confusion among scientists themselves about how to define such an important term" - Talk Origins
"முக்கியமான இந்த சொல்லை விளக்குவதில் அறிவியலாளர்களுக்குள்ளாகவே குழப்பங்கள் இருக்கின்றன" - Talk Origins
அடடா, என்னவொரு தெளிவாக, ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார்கள். அவர்களுக்குள்ளாகவே குழப்பங்களாம்....
- பரிணாமம் என்ற oncept க்கு உண்டான definition னிலேயே இவ்வளவு பிரச்சனைகளா?
- ஏன் சரியாக விளக்க முடியவில்லை?
- அவர்களுக்கே புரியவில்லையா?
புரியாத புதிர்தான்...
ஒரு நிமிஷம், நீங்கள் விடைபெறுவதற்கு முன் ஒரு சிறு கேள்வி. தற்போதைய
ஆக்ஸ்போர்ட் விலங்கியல் அகராதி (Oxford Dictionary of Zoology, Indian
Edition, 2008 sixth impression, p-198) இது குறித்து என்ன தெரியுமா
கூறுகிறது?..................
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.
My Sincere thanks to:
1. Talk Origins website
2. Br. Lawrence A.Moran.
Source of Information:
1. http://www.talkorigins.org/faqs/evolution-definition.html
2. http://bioinfo.med.utoronto.ca/Evolution_by_Accident/What_Is_Evolution.html
References:
1. What is Evolution - Talk Origins
2. Evolution - Academic American Encyclopedia, Vol-7, p-318.
3. Evolution - Oxford Dictionary of Zoology, Indian Edition, 2008 sixth impression, p-198
நன்றி தோழர்: ஆஷிக் அஹமது
நன்றி தோழர்: ஆஷிக் அஹமது
No comments:
Post a Comment