பக்கங்கள் செல்ல
1.மக்களின் அன்பையும், நெருக்கத்தையும் பெற 70 குறிப்புகள்
2.அர்த்தமுள்ள கேள்விகள், அறிவு பூர்வமான பதில்கள்!
3.பறையோசை வேர்ட்பிரஸ்-ஆரம்பத்தை நோக்கி தொடருக்கான எதிர் தொடர்
4.உடைந்த சிலுவை
5.உயிர் ஓர் ஆய்வு
6.பரிணாமம் : உண்மையா ஊகமா
7.பரிணாமம் (பல எழுத்தாளர்கள்)
8.இஸ்லாமும் பால்யவிவாகமும்
9.குர்ஆன் எவ்வாறு பாதுகாக்கபட்டுள்ளது
10.புதிய ஏற்பாடும் குறைவில்லா குளறுபடிகளும்
Thursday, June 4, 2015
இஸ்லாம்: விமர்சனங்களும், பதில்களும் பகுதி - 02 - பரிணாமவியல் ஓர் அறிவியல் புரட்டு!
படித்ததில் பிடித்து!
செங்கொடியின் கட்டுரைகளில் ஒன்றான மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? என்னும் கட்டுரைக்கு அளிக்கப்பட்ட மறுப்பினை இங்கு தரலாம் என எண்ணியுள்ளேன்.
செங்கொடியின் இஸ்லாம்:
கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே... எனும் தொடரின் அண்மையில் வெளிவந்த தொடர் இது. இதில் செங்கொடி, பரிணாமம் பற்றிய எமது எதிர்க்கேள்விகளுக்கு பதிலளிக்க முயன்றுள்ளார். அவர் அளிக்கும் பதில்களிலுள்ள அபத்தத்தை சுட்டிக்காட்டியாக வேண்டும்
முதலாவதாக, நாம் வழக்கமாக டார்வினின் பரிணாமவியல் கொள்கை நிரூபிக்கப்பட்டதல்ல! ஒரு யூகம் என்று கூறிவருகிறோம். இதற்கு பதிலளிக்கப்புகுந்தவர் அது நிரூபிக்கப்பட்ட அறிவியல்தான் என்பதை நிரூபிக்காமல் அது அறிவியல் யூகமா? அல்லது வெறும் யூகமா? என்று விளக்குகிறார். இது எமது கேள்விக்கான பதிலே அல்ல! அது அறிவியல் யூகமாகவே இருக்கட்டும்! இதனால் அக்கொள்கை சரியானதாகிவிடுமா? அறிவியல் ஆய்வுகளில் எத்தனையோ கொள்கைகள் வரும். அவற்றை யூகமாக, அறிவியல் யூகமாகத்தான் கருதப்படும். பிற்காலத்தில் அது தவறு என்றால் அதை தூக்கி எறிந்துவிட்டு சரியானதை கொள்கையாக பிரகடனப்படுத்துவார்கள். ஒரு காலத்தில், அறிவியல் இப்போதைய காலத்தைப்போன்று இல்லாத காலத்தில் இது ஒரு கொள்கையாக இருந்திருக்கலாம். தற்போது, ஜீனோம் யுகத்தில் இருந்துகொண்டு, அதை சரிகான இயலாது! அது ஒரு நிரூபிக்கப்படாத கொள்கை! பழைய குப்பை! இது தவறு என்றால் அது நிரூபிக்கப்பட்டதுதான் என்று நிறுவ வேண்டும்.
அடுத்து, குரங்கு மனிதனாக மாறினான் என்றால் இப்போது ஏன் எந்தக்குரங்கும் மனிதனாவதில்லை? எனும் கேள்வியை அடிப்படையற்றது என்கிறார். ஏன்? குரங்கு மனிதன் ஆவதற்கு நான்கு கோடி ஆண்டுகள் தேவைப்பட்டன! இன்னும் நான்கு கோடி ஆண்டுகள் எமது வாழ் நாள் இருந்தால் அதைப்பார்க்கலாம் என்று கூறுகிரார். இது அறிவியலா? அடிமுட்டாள்தனம்! குரங்கு மனிதனாவதற்கு நான்கு கோடி ஆண்டுகள் தேவை என்றால் நான்கு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய மூதாதையின் சந்ததிக்குரங்கு இப்போது இல்லாமலா போய் விட்டது? தொடர்ந்து வந்துகொண்டுதானே இருக்கிறது! பதிலென்ற போர்வையில் பசப்புகிறார்! இதற்குள் எம்மை நோக்கி பரிணாமவியலை அறியாதவர்களின் நினைப்பு என்ரு ஜம்பம் அடிக்கிறார்.
மூன்றாவதாக, மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்றால் மனிதன் இன்னும் பரிணாமம் அடையவில்லையே? ஏன்? எனும் கேள்விற்கு ஓர் அழகிய (?) பதிலளிக்கிறார்.
யாரும் தடுக்கவில்லை, தடுக்கவும் முடியாது. பரிணாமத்தின் முக்கியமான காரணியே சூழலால் பாதிக்கப்படுவது. சூழலால் தாக்கப்பட்டு நிர்ப்பந்தத்திற்குள்ளாகும் உயிரினங்கள் விரைவாக பரிணமிக்கின்றன. மனிதனைப் பொருத்தவரை தனக்கு ஏற்ப சூழலை மாற்றியமைத்து கொள்ளும் திறனுடன் இருக்கும் உயிரினினம் என்பதால் பரிணாமம் மெதுவாகவே நிகழும்.
மனிதன் பரிணாமம் அடைவான் அதற்கு லேட் ஆகும் என்றால் இதை கண்டுகொள்ளத்தேவையில்லை! ஆனால் அப்படி தாமதவாதற்கு இவர் சொல்லும் காரணம் ஏற்புடையதல்ல! அதிலுள்ள தவறை கண்டுபிடிக்க முடியாத வகையில் வார்த்தை ஜாலம் காட்டியுள்ளார்! அதுதான் மனிதன் தனக்கேற்ப சூழலை மாற்றிக்கொள்பவன் எனும் வாசகம்! இது சரியா? பரிணாமம் அடைவதற்கு இயற்கைத்தேர்வு முக்கியம். அந்த இயற்கையைத்தான் சூழல் என்கிறார்! சூழலை மாற்றலாம்! இயற்கையை மாற்ற இயலாது! இதை அறிந்த செங்கொடி சூழல் எனும் வார்த்தையை சூட்சுமமாக பயன்படுத்தியுள்ளார்! எனவே இந்த வாசகம் சரியாகவும் உண்மையாகவும் எப்படி வர வேண்டுமெனில், மனிதன் சூழலுக்கேற்ப தம்மை மாற்றிக்கொள்பவன் என்றுதான் வரவேண்டும்! செங்கொடி எழுதியதற்கு அர்த்தமும் அதுதான்! ஒரு மனிதன் சூழலுக்கேற்ப தம்மை மாற்றிக்கொண்டால் பரிணாமம் நிகழுமா? நிச்சயமாக இயலாது! ஏன்? மனிதன் பல செல் பிராணி! அவனுடைய ஒவ்வொரு செயலுக்கும் தனித்தனி கட்டமைப்புக்கள் கானப்படகின்றன. ஆனால், மனிதனின் மூதாதையான (?) ஒரு செல் பிராணிகள் தமது அனைத்துத்தேவைகளையும் ஒரு செல்லின் மூலமே நிகழ்த்திக்கொண்டன! நிகழ்த்திக்கொண்டும் இருக்கின்றன. எனவே பரிணாமம் என்பது எப்படி சாத்தியம்? சாத்தியமே இல்லை! ஒரு செல்லின் மூலமே அனைத்தையும் நிறைவேற்ற முடியும் என்றால் எதற்காக பல செல்லின் தேவை ஏற்பட்டது? பரிணாமத்திலுள்ள தவறு புரிகிறதா? எனவே இவரது வாதப்படி பார்த்தால் கூட மனிதன் லேட்டானாலும் பரிணாமம் அடைய மாடான்! இதற்கு முதலும் பரிணாமம் அடைந்திருக்க முடியாது! இப்படியில்லை என்றால், இவரது மேலோட்டமான வாதப்படி, சூழல் அதாவது இயற்கையை மாற்ற முடியும் என்று நிரூபித்துவிட்டு வாதிடலாம்.
நாம் பரிணாமம் தவறு என்பது இவர்கள் சில ஆதாரங்களை காட்டுவர். நகங்கள் வளர்ச்சியடைவது குறைவு, முடி வளரும் வீதம் குறைவு போன்ற சில ஆதாரங்களை பரிணாமத்திற்கு சான்றாக எடுத்துக்காட்டுவர். இது பரிணாமம் என்றால் அதை மறுக்கப்போவது இல்லை. இவை சரியானது. நிரூபிக்கப்பட்டது. ஆனால், ஒரு இனம் இன்னொரு இனமாக மாறுவதற்கு இந்த ஆதாரத்தில் எந்தச்சான்றும் கிடையாது!
அடுத்து நாம் கேட்கும் ஒரு கேள்வியை திரித்து கூறுகிறார். நாம் மனிதன் மண்ணிலிருந்துதான் படைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதற்கு ஒரு சான்றாக மனித உடலிலுள்ள பெரும்பாலான தனிமங்கள் மண்ணிலுள்ளவைதான் என்று கூறுகிறோம். ஆனால் செங்கொடி, இதை அறிவியல் நிரூபித்துவிட்டதாக நாம் கூறுவதாக கூறுகிறார். அப்படி கூறுவதில்லை! ஆனால், இவர் கொடுக்கும் பதிலும் சரியில்லை!
மனிதனின் உடலிலுள்ள 58 தனிமங்கள் மண்ணிலிருந்து வந்தது. ஆனால் அந்த மண்ணிற்கே அடிப்படை 108 தனிமங்கள்! இதை நாம் திரிப்பதாக கூறுகிறார்.
மனித உடலில் இருக்கும் தனிமங்கள் என 58 வகை தனிமங்களை வகைப்படுத்தியிருக்கிறார்கள் அறிவியலாளர்கள். இதை களிமண்ணிலிருந்து மனிதனை படைத்ததாக கூறும் குரானின் கூற்றை மெய்ப்படுத்துவதாக கூறமுடியாது. மென்டலீப் எனும் வேதியியலாளர் சுமார் 108 தனிமங்களை அட்டவணைப் படுத்தியுள்ளார். பூமியிலுள்ள எந்தப் பொருளானாலும் அவற்றுக்கு இந்த தனிமங்கள் தான் அடிப்படை. ஆனால் மனித உடலிலிருக்கும் தனிமங்களுக்கு மண்தான் அடிப்படை என மதவாதிகள் திரிக்கிறார்கள். மண் ஒரு பொருள் அந்தப் பொருளுக்கும் மேற்கண்ட தனிமங்களே அடிப்படை என்பது தான் உண்மை.
இவரது வாதம் சரியா? மண் 108 தனிமங்களால் ஆனவை என்பதால் மண்னிலிருந்து மனிதன் படைக்கப்படவில்லை என்றாகிவிடுமா? இது ஒரு வாதமா? கதிரை ப்ளாஸ்டிக்கினால் ஆனது என்று கூறினால், அந்த பிளாஸ்டிக் ரப்பரிலிருந்து உருவாகிறது. அதற்கு ரப்பர் மரம் அடிப்படை! இவர் திரிக்கிறார் என்று ஒருவன் கூறினால் எவ்வாறிருக்குமோ அவ்வாறிருக்கிறது இவரது பதில். பாமரன் கூட இப்படிக்கேட்க மாட்டான்.
மனிதன் மட்டுமல்ல உலகின் அனைத்துப் பொருட்களும் மேற்கண்ட தனிமங்களினால் ஆனவையே. ஆனால் குரான் மனிதனை மட்டும் சிறப்பாக களிமண்ணினால் படைத்ததாக கூறுகிறது. மனிதன் உட்பட உலகின் அனைத்துப் பொருட்களுக்குமே மேற்கண்ட தனிமங்களினால் ஆக்கப்பட்டிருக்க குரான் மனிதனை மட்டும் களிமண்ணால் படைத்ததாக கூறுவதிலிருந்தே அதற்கும் அறிவியலுக்கும் உள்ள பொருத்தம் எளிதில் விளங்கும்.
ஒன்றை மறுக்க வேண்டும் என்பதற்காக எத்தனை விடயங்களில் விளையாடுகிறார்! எல்லா உயிரினங்களுக்கும் அடிப்படை ஒரு செல்தான்! இது எல்.கே.ஜி! ஆனால், உண்மை அதற்கும் அடிப்படை என்று ஒன்றிருக்கிறது. அதுதான் அணு. செங்கொடியின் வாதம் இவ்வாறுதான் அமைந்துள்ளது!
மட்டுமல்லாது மனிதன் பூமியிலுள்ள களிமண்ணிலிருந்து படைக்கப்படவில்லை. சொர்க்கம் அல்லது வேற்று கிரகத்திலுள்ள ஒருவகை களிமண்ணிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறான். ஆனால் மனிதனின் உடலிலுள்ள தனிமங்கள் அனைத்தும் பூமியிலுள்ளவையே. பூமியில் இருக்கும் தனிமங்கள் வேற்று கிரகத்தில் இருப்பதற்கான வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை என்றாலும் பூமியில் இல்லாத ஒன்றிரண்டு தனிமங்களாவது மனிதனின் உடலில் இருந்தாக வேண்டுமல்லவா? அப்படி எந்த தனிமமும் இல்லை என்பதிலிருந்தே மனிதன் முழுக்க முழுக்க பூமியின் தயாரிப்பு என்பது உறுதியாகிறது.
இஸ்லாம் என்ற பேரில் எதையாவதொன்றை விட்டு அடிப்பது இவரது வழக்கமாகிக்கொண்டிருக்கிறது. மனிதன் பூமியிலுள்ள மண்ணிலிருந்து படைக்கப்படவில்லை என்கிறார். இதற்கு இவர் ஆதாரத்தைக்காட்ட வேண்டும். எந்த குர்ஆன் வசனத்தில் அல்லது எந்த ஹதீஸில் ஆதம் (அலை) சுவர்க்கத்து மண்ணினால் படைக்கப்பட்டார் என்றுள்ளது என்பதை செங்கொடி காட்ட வேண்டும்.
அடுத்து ஒரு கேள்வி,
பலமான விலங்கே உயிர்வாழும் என்று பரிணாமவியல் கூறுகிறது. பலமான விலங்கான புலியை அரசு தனியாக நிதி ஒதுக்கி பாதுகாக்க வேண்டியுள்ளது, பலவீனமான ஆடு பல்லயிரம் கோடி எண்ணிக்கையில் இந்தியாவில் இருக்கிறது. இதிலிருந்தே தெரியவில்லையா டார்வின் தத்துவம் ஏற்கமுடியாத ஒன்று என்பது?
இதற்கு ஓர் அற்புதமான சூப்பரான பதிலளிக்கிறார்.
தகுதியான விலங்கு உயிர்வாழும் என்பதற்கும், பலமான விலங்கு உயிர்வாழும் என்பதற்கும் இடையில் பொருள் மாறுபாடு உண்டு. சூழ்நிலையின் வினைப்பாட்டை தாக்குப்பிடித்து நீடிக்கும் விலங்கே உயிர்வாழும் தகுதியைப் பெறும். டைனோசர்கள் வாழும் காலத்தில் அவற்றைவிட பலசாலியான வேறு விலங்குகள் எதுவும் பூமியில் இல்லை. ஆனால் ஒரு குறுங்கோள் பூமியை தாக்கியபோது அதை தாக்குப்பிடித்து வாழும் வலிமையை பலசாலியான அந்த விலங்குகள் பெற்றிருந்திருக்கவில்லை என்பதால் அவை அழிந்துபோயின. ஆடுகளுடன் ஒப்பிடுகையில் புலிகள் வலிமையானவை தான். ஆனால் மனிதனின் உணவுத்தேவையே ஆடுகளை கோடிகளில் வாழவைத்திருக்கிறது. புலிகளிடம் இவ்வாறான தேவை எதுவும் மனிதனுக்கில்லை. ஒருவேளை புலிகளை மனிதன் உணவுத் தேவைகளுக்காக பயன்படுத்தியிருந்தால் அதும் எண்ணிக்கையில் அதிகம் இருந்திருக்கக் கூடும். அதேநேரம் ஆடுகளில் அதிக எண்ணிக்கையில் இருப்பது வெள்ளாடு, செம்மறியாடு எனும் இரண்டு வகைதான். இந்த இரண்டும் மனிதனின் உணவுத்தேவையை பூர்த்தி செய்கின்றன. இதே ஆட்டினத்தில் வரையாடு என்றொரு வகை உண்டு. தமிழ்நாடு அரசின் விலங்காக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த வரையாடுகள் அரசின் நிதி ஒதுகீட்டிற்கும், பராமரிப்புக்கும் பிறகும் கூட எண்ணிக்கையில் குறைந்துகொண்டே செல்கின்றன. இது ஏன் என சிந்திப்பவர்களுக்கு அந்தக் கேள்வியிலுள்ள பித்தலாட்டம் புரியவரும்.
இந்த பதில் பகுத்தறிவுக்கு துளியும் சம்பந்தமில்லை! ஒரு விலங்கு அதிகமாக வேட்டையாடப்பட்டால் அதன் எண்ணிக்கை அதிகரிக்குமாம்! என்ன லாஜிக் இது? துளியும் இதில் உண்மை அல்லது பகுத்தறிவு இருக்கிறதா? வெங்காயத்திற்கு அதிக டிமாண்ட் இருந்தால் அதன் எண்ணிக்கை அதிகரிக்குமா? குறையுமா? எது அதிகமாக சாப்பிடப்படுகிறதோ அது அதிகரிக்கிறது! எது சாப்பிடப்படுவதில்லையோ அது குறைகிறது. இது எப்படி சாத்தியம்? பகுத்தறிவு இந்த இடத்தில் தவறிழைக்கும்! ஏன்? இது நேர்மாற்றமான விளைவு! இது கூட இறைவன் இருக்கிறான் என்பதற்கான சான்றுதான். கூட, வரையாடு குறைகிறது என்கிறார் அது இக்கேள்வியின் பித்தலாட்டத்தை புரிய வைக்கும் என்கிறார். ஆனால், அது செங்கொடிக்கு எதிரான வாதம் என்பதைக்கூட செங்கொடி சிந்திக்கவில்லை! வரையாடு சாப்பிடப்படுவதில்லை! இதனால் குறைகிறது. ஆக, இவரது பதில் துளி கூட பகுத்தறிவுக்கு ஒப்பானதல்ல! இவ்வளவுதான் இத்தொடரின் சாரம்.
பரிணாமவியல் பற்றிய வாதங்கள் மிக ஆழமாகவும் விரிவாகவும் பேசப்படவேண்டியவை! இது எழுத்தில் விவரிப்பதை விட நேரடி விவாதத்தில்தான் சாத்தியம். அதனால்தான், மிகவும் சுருக்கமாக பதிலளிக்கப்பட்டுள்ளது. ஆனால், செங்கொடியோ இத்தொடரை இதே தலைப்பின் கீழ் இன்னும் பல மாதங்களுக்கு இழுத்தடிக்கும் நோக்குடன் "இத்தொடரை முடிக்கவில்லை! இன்னும் வரும்! கேள்விகளுக்கான பதிலின் பின் மீண்டும் தொடர்வேன்..." என்று கூறி முடிக்கிறார். ஆனால், இது முறையானதல்ல! இவை ஆழமான விடயம் என்பதால் நேருக்கு நேர், உடனுக்குடன் பதிலில்தான் தெளிவு கிடைக்கும்! அதில்தான் அழகாக விவரிக்கவும் முடியும் என்பதால் நாம் இது தொடர்பான விடயத்துக்கும் இன்னும் செங்கொடி இதுவரை பேசிய விடயங்களுக்கும், இன்னும் எவையெல்லாம் பேசப்பட வேண்டுமென்கிறாரோ, அவற்றுக்கும் நேரடி விவாதம் மிக மிக ஏற்புடையது என்பதால் தமிழ் நாடு தவ்ஹீத் ஜாமாஅத் சார்பாக நாம் செங்கொடியை நேரடி விவாதத்திற்கு மீண்டும் அழைக்கிறோம்! செங்கொடி பயப்படாமல், மழுப்பாமல், பல்டி அடிக்காமல் வருவார் என்று எதிர்பார்க்கிறோம். இத்துடன் எமது "செங்கொடியின் கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே..." எனும் தொடரை முடிக்கலாம் என எண்ணுகிறேன். எமது முடிவுரையில் மீதி விடயங்களையும் இம்முடிவிற்கான காரணங்களையும் சகோதரர்கள் அறிந்துகொள்ளலாம்.
நன்றி: முஹம்மட் இஹ்ஸாஸ் (இலங்கை)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment