திருக்குர்ஆனையும் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலையும் அடிப்படையாகக் கொண்டே முஸ்லிம்கள் தமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பரவலாக மக்கள் அறிந்து வைத்துள்ளனர்.
ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தொடர்பான செய்திகளை ஏற்கத்தக்கவை எனவும் ஏற்கத்தகாதவை எனவும் வகைப்படுத்தி இருப்பதை பெரும்பாலானோர் அறிந்திருக்கவும் இல்லை. இதைச் சிலர் அறிந்திருந்தாலும் ஏன் அவ்வாறு வகைப்படுத்தப்பட்டது என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் உள்ளனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லாததை இரண்டாகப் பிரித்து சிலவற்றை நாம் நிராகரிப்பதாக அவர்கள் புரிந்து கொள்கின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது அனைத்துமே ஏற்கத்தக்கவை என்பதில் யாருக்கும் இரண்டாவது கருத்து இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்களா? என்பதில் ஏற்படும் சந்தேகம் காரணமாகவே சில ஹதீஸ்கள் மறுக்கப்படுகின்றன என்பதை விளக்கவே இந்நூல். சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும்
அறிவிப்பாளர் சரியில்லை என்று நாம் காரணம் கூறி ஒரு ஹதீஸை நிராகரிக்கும் போது அறிவிப்பாளர்கள் சஹாபாக்கள் (நபி தோழர்கள்) தானே சஹாபாக்கள் அனைவரும் நம்பகமானவர்களாக இருக்கும் போது அறிவிப்பாளரை ஏன் குறை சொல்ல வேண்டும் என்றும் சிலர் நினைக்கின்றனர்.
நாம் சஹாபாக்களைக் காரணம் காட்டி எந்த ஹதீஸையும் மறுப்பதில்லை. சஹாபாக்கள் அல்லாத அறிவிப்பாளர்களை மட்டுமே காரணம் காட்டுகிறோம் என்ற உண்மை இந்நூலில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
சரியான ஹதீஸ்களையும் தவறான ஹதீஸ்களையும் எவ்வாறு கண்டறிவது என்று ஆசைப்படுவோருக்கு முழுமையான விளக்கம் இன்ஷா அல்லாஹ் இந்நூலில் கிடைக்கும்.
ஹதீத்களின் வகைகள் & அதன் தரத்தை, இந்த படம் தெளிவாக விளக்குகின்றது.
மேலும் சரியான விளக்கத்திற்கு, இந்த நூலை படிக்கவும். Download PDF
No comments:
Post a Comment