இறைவன், திருக்குரானை மனித கரங்கள் விளையாடுவதை விட்டும் பாதுகாப்பதாக உறுதி அளித்துள்ளான்.
திருக்குரான் எப்படி பாதுகாக்கப்படுகின்றது?
- உலகில் உள்ள அனைத்து மொழி பேசும் மக்களாலும் ஒவ்வரு நொடியும் மனனம் செய்யப்படுகின்றது
- எந்தெந்த நவீன தொழில்நுட்பம் வந்தாலும், அதைகொண்டும் பாதுகாப்பு செய்யப்படும்
- உலகிலே குரானைபோல் மனனம் செய்யும் வேறு எந்த புத்தகமும் இதுவரை வந்ததும் இல்லை, வரவும் முடியாது!
- எந்தவித நவீன தொழிநுட்பம் இல்லாமல் போனாலும், மிக எளிதில் குரான் தொகுக்கப்பட்டுவிடும் - மனிதர்களின் உள்ளத்தில் பாதுகக்கப்படுவதால்
இங்கே ஒரு மிக நேர்த்தியான முறை (PATTERN) தெரிகின்றதே...இதை யாராலும் ஏற்படுத்த முடியுமா? இறைவன் பாதுகாகின்றான் என்பதற்கு இதுவே சான்று!
இதுவரை எந்த மாற்றத்திற்கும் ஆகாத, யாராலும் மாற்றவே முடியாது என்ற உறுதிமொழியை தரும், இந்த திருக்குரானை நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டாமா?
அல்லாஹ் கூறுகின்றான்:
- நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம்" [15:9]
- இது பாக்கியமான வேதம். இதன் வசனங்களை அவர்கள் சிந்திப்பதற்காகவும், அறிவுடையோர் படிப்பினை பெறுவதற்காகவும் உமக்கு அருளினோம்." [38:29]
- அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா? [47:24]
- அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ்அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள் [4:82]
No comments:
Post a Comment