பக்கங்கள் செல்ல

Sunday, May 31, 2015

எதிர்தொடர் 15: சூரியன் இன்னும் கிழக்கில்தான் உதிக்கிறது!


ஏக இறைவனின் திருப்பெயரால்...............


       சென்ற தொடரில் பூமி தட்டையானது இல்லை என்பதை தெளிவாக இஸ்லாம் கூறுவதை கண்டோம். இந்த முறை நமது அருமை கட்டுரையாளர் இஸ்லாம் டாலமியின் ‘பூமி மையக்கோட்பாட்டை’(geocentricism) ஆதரிப்பதாக வாதிட முயற்சிக்கிறார்[ refer:Source]. ஆனால் இஸ்லாம் உரைப்பது இன்றை நவீன அறிவியலைத்தான் என்பதும் இந்த கட்டுரையாளரின் அறிவியல் குறித்த புரிதல் 17ம் நூற்றாண்டை இன்னும் தாண்ட வில்லை என்பதும் புட்டு புட்டு வைக்கப்படும் இந்த தொடரில், இன்ஷா அல்லாஹ்

குற்றச்சாட்டு 1:





நமது பதில்:
அல் குர்ஆன் 36:38 வசனத்திற்கான விளக்கம்:
 وَالشَّمْسُ تَجْرِي لِمُسْتَقَرٍّ لَهَا ذَلِكَ تَقْدِيرُ الْعَزِيزِ الْعَلِيمِ (٣٨)

       சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இது அறிந்தவனாகிய மிகைத்தவனுடைய ஏற்பாடாகும்.



      மேற்குறிப்பிட்ட வசனம். சூரியனுக்கு என்று ஒரு நிலை கொள்ளும் இடம் இருப்பதாகவும். அதை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் கூறுகிறது. முதலில் இதற்கான விளக்கத்தை நாம் குர்ஆனில் இருந்து பெறுவோம். பின் வரும் இறைவசனம் ஒரு குறிப்பை தருகிறது.

 خَلَقَ السَّمَاوَاتِ وَالأرْضَ بِالْحَقِّ يُكَوِّرُ اللَّيْلَ عَلَى النَّهَارِ وَيُكَوِّرُ النَّهَارَ عَلَى اللَّيْلِ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ كُلٌّ يَجْرِي لأجَلٍ مُسَمًّى أَلا هُوَ الْعَزِيزُ الْغَفَّارُ (٥)
 
     தக்க காரணத்துடனேயே வானங்களையும், பூமியையும் அவன் படைத்தான். பகலின் மீது இரவைச் சுருட்டுகிறான். இரவின் மீது பகலைச் சுருட்டுகிறான். சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணை வரை ஓடும். கவனத்தில் கொள்க! அவனே மிகைத்தவன்; மன்னிப்பவன்.(அல் குர்ஆன் 39:5 )
      அதாவது சூரியனும் சந்திரனும் குறிபிட்ட காலம் வரை ஒடும்.அதில் எந்த தடையும் தளர்வும் இருக்காது. அதை பின் வரும் வசனம் தெளிவாக கூறுகிறது. 
 وَسَخَّرَ لَكُمُ الشَّمْسَ وَالْقَمَرَ دَائِبَيْنِ وَسَخَّرَ لَكُمُ اللَّيْلَ وَالنَّهَارَ (٣٣)
 
      தொடர்ந்து இயங்கும் நிலையில் சூரியனையும், சந்திரனையும் உங்களுக்குப் பயன்படச் செய்தான். இரவையும், பகலையும் உங்களுக்காகப் பயன்படச் செய்தான்.  (அல் குர்ஆன்14:33)


     ஆக சூரியன் தொடர்ந்து இயங்குவதாய் உள்ளது. அது எங்கும் ஓய்வு கொள்ள போவதில்லை. இந்த உலகம் அழியும் நாள் வரை எனபது தெளிவாக மேற்கூறிய வசனம் கூறுகிறது. இதற்கு நபி(சல்) அவர்களது விளக்கமாக பின்வரும் ஹதீஸை நமது கட்டுரையாசிரியர் பதிந்துள்ளார்.

அபூ தர்(ரலி) அறிவித்தார்.

      நபி(ஸல்) அவர்கள் சூரியன் மறைந்த நேரத்தில் என்னிடம், 'அது (சூரியன்) எங்கு செல்கிறது என்று உனக்குத் தெரியுமா?' என்று கேட்டார்கள். நான், 'அல்லாஹ்வும்,அவனது தூதருமே அறிவார்கள் என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள், 'அது அர்ஷுக்கு (இறை சிம்மாசனத்திற்குக்) கீழே ஸஜ்தா (வணக்கம்) செய்வதற்காகச் செல்கிறது. அங்கு அது (கிழக்கிலிருந்து உதயமாகுவதற்கு இறைவனிடம்) அனுமதி கேட்கிறது. உடனே அதற்கு அனுமதியளிக்கப்படுகிறது. (இறுதியாக ஒரு நாள்) அது ஸஜ்தா செய்ய, அந்த ஸஜ்தா ஏற்கப்படாமல் போகவிருக்கிறது. அப்போது அது (வழக்கம் போன்று) கிழக்கிலிருந்து உதயமாகுவதற்கு அனுமதி கேட்கும்; அதற்கு அனுமதியளிக்கப்படாது. மாறாக, 'வந்த வழியே திரும்பி விடு" என்று அதற்கு உத்தரவிடப்படும். அதன்படி அது மேற்கிலிருந்து உதயமாகும்" என்றார்கள். இதைத் தான், 'சூரியன், தான் நிலை கொள்ளம் ஓர் இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அது பேரறிவாளனான வல்லமை மிக்க (இறை)வனின் நிர்ணயமாகும்" என்னும் (திருக்குர்ஆன் 36:38) இறைவசனம் குறிக்கிறது" என்றார்கள்.


நூல்: புஹாரி 3199



     மேலும் இதே போன்ற செய்தி அதிகப்படியான விளக்கத்துடன் முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் மொழிபெயர்ப்பின் அவசியம் கருதி மூலத்துடன் பதிவு செய்யப்படுகிறது.

 حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، جَمِيعًا عَنِ ابْنِ عُلَيَّةَ، - قَالَ ابْنُ أَيُّوبَ حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، - حَدَّثَنَا يُونُسُ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ يَزِيدَ التَّيْمِيِّ، - سَمِعَهُ فِيمَا، أَعْلَمُ - عَنْ أَبِيهِ، عَنْ أَبِي ذَرٍّ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ يَوْمًا ‏"‏ أَتَدْرُونَ أَيْنَ تَذْهَبُ هَذِهِ الشَّمْسُ ‏"‏ ‏.‏ قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ ‏.‏ قَالَ ‏"‏ إِنَّ هَذِهِ تَجْرِي حَتَّى تَنْتَهِيَ إِلَى مُسْتَقَرِّهَا تَحْتَ الْعَرْشِ فَتَخِرُّ سَاجِدَةً وَلاَ تَزَالُ كَذَلِكَ حَتَّى يُقَالَ لَهَا ارْتَفِعِي ارْجِعِي مِنْ حَيْثُ جِئْتِ فَتَرْجِعُ فَتُصْبِحُ طَالِعَةً مِنْ مَطْلِعِهَا ثُمَّ تَجْرِي حَتَّى تَنْتَهِيَ إِلَى مُسْتَقَرِّهَا تَحْتَ الْعَرْشِ فَتَخِرُّ سَاجِدَةً وَلاَ تَزَالُ كَذَلِكَ حَتَّى يُقَالَ لَهَا ارْتَفِعِي ارْجِعِي مِنْ حَيْثُ جِئْتِ فَتَرْجِعُ فَتُصْبِحُ طَالِعَةً مِنْ مَطْلِعِهَا ثُمَّ تَجْرِي لاَ يَسْتَنْكِرُ النَّاسُ مِنْهَا شَيْئًا حَتَّى تَنْتَهِيَ إِلَى مُسْتَقَرِّهَا ذَاكَ تَحْتَ الْعَرْشِ فَيُقَالُ لَهَا ارْتَفِعِي أَصْبِحِي طَالِعَةً مِنْ مَغْرِبِكِ فَتُصْبِحُ طَالِعَةً مِنْ مَغْرِبِهَا ‏"‏ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ أَتَدْرُونَ مَتَى ذَاكُمْ ذَاكَ حِينَ لاَ يَنْفَعُ نَفْسًا إِيمَانُهَا لَمْ تَكُنْ آمَنَتْ مِنْ قَبْلُ أَوْ كَسَبَتْ فِي إِيمَانِهَا خَيْرًا ‏"‏

 அபூதர் அல்ஃகிஃபாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் (எங்களிடம்), "இந்தச் சூரியன் எங்கு செல்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார்கள். மக்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிவார்கள்" என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், "அது (சூரியன்) இறை அரியாசனத்துக்கு (அர்ஷுக்கு)க் கீழே தலைவணங்குவதற்காகத் தனது நிலையை நோக்கிச் செல்கிறது. அதனிடம், "எழுந்து, நீ வந்த வழியே சென்றுவிடு" என்று கூறப்படும் வரை அது அவ்வாறே இருந்துகொண்டிருக்கிறது. அவ்வாறு கூறப்பட்டதும் அது சென்று கிழக்கிலிருந்து உதயமாவதை தொடர்கிறது. பிறகு இறை அரியாசனத்துக்குக் கீழே தனது நிலையை நோக்கிச் சென்று தலைவணங்குகிறது, அதனிடம், "நீ எழுந்து, வந்த வழியே திரும்பிச் சென்றுவிடு!" என்று கூறப்படும்வரை அது அவ்வாறே இருந்துகொண்டிருக்கிறது. அவ்வாறு கூறப்பட்டதும் அது திரும்பிச் சென்று கிழக்கிலிருந்து உதயமாவதை தொடர்கிறது. பிறகு மக்களுக்கு (எந்த வித்தியாசமும்) தெரியாத விதத்தில் இறை அரியாசனத்துக்குக் கீழே தனது நிலையை நோக்கிச் செல்கிறது. அப்போது அதனிடம், "நீ எழுந்து மேற்கிலிருந்து உதயமாகு!" என்று கூறப்படும். அப்போது அது (வழக்கத்திற்கு மாறாக) மேற்கிலிருந்து உதயமாகும்" என்று கூறினார்கள்.
பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அது எந்த நாள் என்று உங்களுக்குத் தெரியுமா? அது, முன்பே இறைநம்பிக்கை கொண்டிராத, அல்லது இறைநம்பிக்கை கொண்டிருந்தாலும் நன்மையேதும் செய்திராத எந்த மனிதருக்கும் அந்த நேரத்தில் கொள்ளும் இறைநம்பிக்கை பயனளிக்காத (இறுதி) நாளாகும்" என்று கூறினார்கள்.(6:158)
                                                    நூல்:  முஸ்லிம் 250
          மேற்குறிபிட்ட ஹதீஸில் இடம் பெறும் فَتُصْبِحُ  - ஃபதுஷ்பிஹு என்ற சொல்லிற்கு உதயமாகி கொண்டே இருகிறது என்று பொருள் படும். சொல்லில் இடம்பெறும் 'து' மற்றும் இறுதி எழுத்தில் இடம் பெறும் தம்மா ( ‘உ’ ஒசை) நிகழ்கால முற்றா வினையை குறிப்பதாகும். மேலும் மேலே குறிப்பிட்ட அந்த செய்தியில் கதையாசிரியர் கூறுவதை போன்று தினமும் அல்லது  அன்றாடம் இரவு அல்லது அன்று மாலையே சூரியன் அல்லாஹ்வின் அர்ஷ்க்கு அடியில் செல்வதாகவும் அதன் இயக்கத்தை நிறுத்திக்கொள்வதாகவும் இல்லை. அந்த இடத்தில் ثُمَّ – அதன் பிறகு என்ற பொதுவான வார்த்தைதான் இடம்பெறுகிறது என்பது குறிப்பிட்தக்கது இந்த ஹதீஸிற்கு அல்லாஹ்வின் அர்ஷுக்கு அடியில் குறிபிட்ட காலதவணைக்கு ஒரு முறை சூரியன் செல்வதாகவும், அல்லாஹ்வின் அர்ஷுக்கு அடியில் சென்றாலும் கிழக்கில் இருந்து உதிப்பதும் மேற்கில் மறைவதும் எந்த இடையூறும் இன்றி நடப்பதாகவும் பொருள் தந்தால்தான் பின் வரும் இந்த இறை வசனத்திற்கு "தொடர்ந்து இயங்கும் நிலையில் சூரியனையும், சந்திரனையும் உங்களுக்குப் பயன்படச் செய்தான். இரவையும், பகலையும் உங்களுக்காகப் பயன்படச் செய்தான்.  (அல் குர்ஆன்14:33)" முரண் இன்றி அமையும். இப்னு அப்பாஸ்(ரலி) போன்றவர்கள் சூரியனும் சந்திரனும் தொடர்ந்து இயங்கும் நிலையில் உள்ளதாக இந்த வசனத்தின் விளக்கத்தில் தெரிவிக்கின்றனர் (தஃப்ஸீர் இப்னு கஸீர்). மேலும் ஒரு இடத்தை அடிப்படையாக கொண்டு கூறப்பட்டது என்றும் கூறஇயலாது. அல்லாஹ் தனது திருமறையில்  (அவன்) வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவற்றுக்கு இறைவன். கிழக்குகளுக்கும் இறைவன்.( அல் குர்ஆன் 37:5). பல உதிக்கும் திசைகள் உள்ளதாக கூறுகிறான்.   ஆக பல இடங்களில் உதிக்க வேண்டும் என்றால் தொடர்ச்சியாக இயங்க வேண்டும்.  மேலும் இவ்வாறு இறை அரியாசனத்தின் அடியில் செல்வதை நம்மால் அறிய முடியாது என்பதையும் அதே ஹதீஸ் கூறுகிறது. மேலும் அல்லாஹ் பின் வருமாறு தனது திருமறையில் கூறுகிறான்.

  تُسَبِّحُ لَهُ السَّمَاوَاتُ السَّبْعُ وَالأرْضُ وَمَنْ فِيهِنَّ وَإِنْ مِنْ شَيْءٍ إِلا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِنْ لا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ إِنَّهُ كَانَ حَلِيمًا غَفُورًا (٤٤)
 
        ஏழு வானங்களும், பூமியும், அவற்றில் உள்ளவைகளும் அவனைத் துதிக்கின்றன. அவனைப் போற்றிப் புகழாத எதுவுமே இல்லை. ஆயினும் அவை துதிப்பதைப் புரிந்து கொள்ள மாட்டீர்கள்! அவன் சகிப்புத் தன்மையுடையவன்; மன்னிப்பவன்.( அல் குர்ஆன் 17:44)
 
இந்த ஹதீஸின் சாரம் இதுதான்:
1. அல்லாஹ்வின் அர்ஷின் அடியில் சூரியன் செல்வது என்பது தினம்    இரவில் நடைபெறுவதாக எந்த செய்தியும் இல்லை

2. சூரியன் குறிப்பிட்ட காலக்கெடுவில் அல்லாஹ்வின் அர்ஷின் அடியில்  தனது நிலைகொள்ளும் இடத்திற்கு செல்கிறது.

3. இவ்வாறு அர்ஷின் அடியில் செல்வதை மக்களால் அறிய முடியாது.

4. அல்லாஹ்வின் கட்டளை இறுதி முறையாக அர்ஷின் அடியில் செல்லும்போது சூரியனுக்கு இடப்படுகிறது. இதை தொடர்ந்து சூரியன் மேற்கில் இருந்து உதிக்கிறது.

5. தன் பிறகு இறைநம்பிக்கை கொள்வது வீண்.  

      மேலே நான் குறிபிட்டது போல் சரியாக பொருள் கொண்டால் 20 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருந்து சூரியன் ஓடிவரும் தேவை ஏற்படாது என்று எண்ணுகிறேன்.

குற்றச்சாட்டு 2:


 நமது பதில்:

      பூமியில் ஏற்படும் சுழற்ச்சிதான் இரவு பகல் ஏற்பட காரணம் என்பது உன்மைதான். ஆயினும் பூமியின் சுழற்சிக்கு காரணம் பூமி மட்டும் அல்ல. பூமியின் சுய சுழற்சிக்கும் , சூரியனை சுற்றி வருவதற்கும்  சூரியன்தான் காரணம் என்று இன்றைய அறிவியல் கூறிக்கொண்டிருக்கும் போது 17ம் நூற்றாண்டின் அறிவியலில் இருந்து தனது கருத்தை பதிவு செய்கிறார் கதாசிரியர். Nainan Varghese என்ற அறிவியலாளரின் கருத்து இதோ1.



 ஆக இரவு பகல் ஏற்படுவதற்கு பூமி மட்டுமே காரணமல்ல. சூரியன் தான் பூமியின் சுழற்ச்சியை தீர்மானிக்கும் மைய ஆற்றல். இது குறித்த மேலும் அறிந்து கொள்ள இந்த வலைதளத்தை சொடுக்கவும் 2. ஆக மேலே குறிப்பிடும் ஹதீஸ் இன்றைய அறிவியலுடன் ஒத்துபோவதாய்தான் உள்ளது. மேலே பதியப்பட்டிருக்கும் அறிவியல் ஆய்வில் சூரியனின் நகர்வு, அதில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை கோல்களின் சுழற்சி பாதையில் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. . மேலும் கட்டுரையாளர் குறிபிட்ட அல் குர்ஆன் வசனம், அந்த ஹதீஸ் மற்றும் அறிவியல் எப்படி நேர்கொட்டில் உள்ளது என்பதற்கு சரியான சான்றாக மேற்கூறிய அறிவியல் கட்டுரை அமைந்துள்ளது. மேலும் பூமியின் சுழற்ச்சியை சூரியனின் காந்தபுயலும் 3 , சூரியனின் ஈர்ப்பால்  பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் அலை( Crustal Tide) போன்றவை வெகுவாக பாதிப்பதாகவும் இன்றைய அறிவியல் கூறிக்கொண்டு இருக்கிறது.4 இப்படி பூமி, சூரியன், சந்திரன் ஒவ்வொன்றும் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கையில் சூரியனுக்கு பூமியின் சுழற்ச்சியில் எந்த பங்கும் இல்லை என்பது சரியானது அல்ல. கதாசிரியர் இன்னும் கோப்பர்நிக்கஸ் காலத்தை விட்டு வெளிவரவே இல்லை என்று தோன்றுகிறது.



குற்றச்சாட்டு 3:

நமதுபதில்:
      அதுதான் அற்புதமே. விண்கலை, எண் கணிதம் போன்றவற்றை கூட அறியாத சமுகத்தில் பிறந்தவர் எப்படி இன்றை அறிவியலுக்கு எந்த முரணும் இன்றி உரைக்க முடிந்தது என்பதுதான். மேலும் இந்த கட்டுரையாளர் பூமி மைய கோட்பாட்டை நபி(சல்) அவர்கள் கூறினார்கள் என்று கூறினாலும் நபி(சல்) அவர்கள் அறியாத விண்கலை குறித்து  17ம் நுற்றாண்டுவரை கோலோச்சிய கருத்தை எப்படி எழுதப்படிக்க தெரியாதவர் கூற முடியும் என்ற கேள்விக்கு ஏதேனும் ஆதாரப்பூர்வமான பதிலை கட்டுரையாளரால் பதிய முடியுமா? மேலும் இங்கு ஒரு கருத்தை குறிப்பிட எண்ணுகிறேன். ஒரு கோட்பாட்டை ஒரு நூல் சொல்கிறது என்று கூற வேண்டும் என்றால் அந்த கோட்பாட்டின் மையத்தை அந்த நூல் கூறியிருக்க வேண்டும். பூமி மைய கோட்பாடிற்கும், இன்றை நவீன அறிவியலுக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. உதாரணமாக சூரியன் நகர்கிறது என்பது. சூரியன் நகர்வதாக ஒரு நூல் கூறுவதால் அது பூமி மையகோட்பாட்டை விளக்குவதாக கொள்ள முடியாது. அது எதை சுற்றி நகர்கிறது என்ற குறிப்புதான் அது பூமி மைய கோட்பாட்டை விளக்குகிறதா அல்லது இன்றைய அறிவியலை கூறுகிறதா எனபதை நிறுபிக்கும். ஆக கட்டுரையாளர் சூரியன் பூமியை சுற்றி வருகிறது என்று நேரடியான வார்த்தைகளை குர்ஆனிலிருதோ, ஆதாரப்பூர்வ ஹதீஸ்களில் இருந்தோ எடுத்துகாட்டாத வரை தனது குற்றச்சாட்டை நிலைநிறுத்த இயலாது. இதே தவறைதான் ஆங்கில இஸ்லாமிய எதிர்ப்பு வலைதளங்களும் செய்கின்றன. இதே போன்ற தவறைதான் சென்ற கட்டுரையிலும் கண்டோம்.

குற்றச்சாட்டு 4:



நமது பதில்:
      இது இஸ்லாம் குறித்து இஸ்லாமின் மைய கோட்பாடுகள் குறித்த ஆசிரியரின் அறியாமையைதான் காட்டுகிறது. மனிதனுக்கு கேடு விளைவிப்பவையை அல்லாஹ்வும் , நபி(சல்) அவர்களும் பல இடங்களில் சைத்தான் என்றே கூறியிருக்கின்றனர். இவரது அறியாமை சூரியனை மூக்கில் இருந்து உதிக்க செய்துவிட்ட்து. இதோ பின் வரும் செய்திகளை பார்க்க.

நம்பிக்கை கொண்டோரை அவர்கள் சந்திக்கும் போது "நம்பிக்கை கொண்டுள்ளோம்'' எனக் கூறுகின்றனர். தமது ஷைத்தான்களுடன் தனித்திருக்கும் போது "நாங்கள் உங்களைச் சேர்ந்தவர்களே. நாங்கள் (அவர்களை) கேலி செய்வோரே'' எனக் கூறுகின்றனர்.( அல்குர்ஆன் 2:14. )

இவ்வாறே மனிதர்களிலும், ஜின்களிலும் உள்ள ஷைத்தான்களை ஒவ்வொரு நபிக்கும் பகைவர்களாக ஆக்கினோம். ஏமாற்றுவதற்காக கவர்ச்சிகரமான சொற்களை அவர்களில் ஒருவர் மற்றவருக்கு அறிவிக்கின்றனர். உமது இறைவன் நாடியிருந்தால் அவர்கள் இதைச் செய்திருக்க மாட்டார்கள். அவர்கள் இட்டுக்கட்டுவதோடு அவர்களை விட்டு விடுவீராக! (அல்குர்ஆன் 6:112. )

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் "அல்அர்ஜ்" எனுமிடத்தில் பயணம் செய்துகொண்டிருந்தோம். அப்போது கவிஞர் ஒருவர் கவிதைகளைப் பாடிக்கொண்டு எதிரில் வந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அந்த ஷைத்தானைப் பிடியுங்கள். ஒரு மனிதருடைய வயிறு கவிதையால் நிரம்பியிருப்பதை விடச் சீழ் சலத்தால் நிரம்பியிருப்பது நன்று" என்று கூறினார்கள். ( முஸ்லிம் 4548. )

    ஆக மனிதனுக்கு தீங்கு விளைவிக்கும் மனிதனையும் சைத்தான் என்று இஸ்லாம் கூறுகிறது. தூங்கி எழும் போது மூக்கை சுத்தம் செய்வதற்கு அறிவுறுத்தபட்ட ஒரு செயலை இந்த ஆசிரியர் அறியாமையால் எப்படி அனுகியிருக்கிறார் எனபதற்கு சிறந்த உதாரணம் இந்த கட்டுரை.

குற்றச்சாட்டு 5:



நமது பதில்:
      இதுவும் இஸ்லாம் குறித்த இவரது அறியாமையைதான் காட்டுகிறது. அற்புதங்கள் யாவும் இறைவன் புறத்தில் உள்ளது என்பதுதான் இஸ்லாமிய நம்பிக்கை. நபியாக இருந்தாலும் அவர் நாடிய போது அற்புதங்கள் செய்ய இயலாது. அப்படி இருக்கையில் நபி(சல்) அவர்களால் ஏன் மறைவானவற்றை அறிய முடியவில்லை என்ற கேள்வியே தவறானது.

அவன் மறைவானதை அறிபவன். தனது மறைவான விஷயங்களை அவன் பொருந்திக் கொண்ட தூதரைத் தவிர யாருக்கும் வெளிப்படுத்த மாட்டான். அவர்கள் தமது இறைவனின் தூதுச் செய்திகளை எடுத்துச் சொன்னார்களா என்பதை அறிவிப்பதற்காக அவருக்கு முன்னும், அவருக்குப் பின்னும் கண்காணிப்பாளரை ஏற்படுத்துகிறான். அவர்களிடம் உள்ளதை அவன் முழுமையாக அறிவான். ஒவ்வொரு பொருளையும் அவன் எண்ணிக்கையால் அறிவான்.( அல்குரஆன் 72:26, 27, 28)

     இவையெல்லாம் நபி(சல்) அவர்கள் மனிதர்தான் என்பதற்கு சான்று. இன்றும் அவர்கள் கடவுளாக மாற்றப்படாமல் இருப்பதற்கு காரணம். அல்லாஹ் மனிதனுக்கு தேவையானதை கொடுக்கத்தான் தூதர்களை அனுப்பி வைத்தான் தூதர்களை வளமாக்க அல்ல என்பது 15 கட்டுரை எழுதியப் பிறகும் கட்டுரையாளருக்கு தெரியவில்லை என்பதை என்ன சொல்ல....
அல்லாஹ்வே அனைத்தயும் அறிந்தவன்.....




No comments:

Post a Comment