சமீபத்தில் நண்பர் ஒருவரின் கீதை & ரிக் வேதம் பற்றிய பதிவை பதிவிட்டு இருந்தேன். பதிவின் வசனம் இது தான்:
"எவர் ஒருவர் பரம்பொருளை தாமாக உண்டாக்கி வணங்குகின்றாரோ, அவர் பொய்யானதையே வணங்குகிறார்" [ கீதை 7:20]
மாற்று மத நண்பர் ஒருவர், இந்த "விளக்கம் திரித்து சொல்லப்பட்டிருக்கிறது", சரியான விளக்கம் இது தான் என்றார்:
"அவரவர் ஆசைகளுக்கு கட்டுப்படும் அறிவுடையவர்கள்,
இயற்கைக்குள் கட்டுண்டு தங்கள் பிரதான தேவதையை வழிப்பட்டு
அதன் விதிமுறைகளுக்கும் கட்டுப்பட்டு நிற்பார்கள்"
முடிந்தவரை சொல்லப்பட்ட கருத்துக்கள் தெளிவாக இருக்கும்போது, அந்த கருத்தை அப்படியே எடுப்பது தான் சிறந்தது. ஒரு வசனத்தை ஆராயும்போது, பொதுவாக கீழ்க்கண்ட வழிமுறைகள் உள்ளதை பார்க்கலாம்:
1. அந்த வசனம் சொல்லப்படும் சூழ்நிலை, முந்தய/பிந்தைய வசங்களின் தொகுப்புகளின் மூலம், அந்த வசனத்தின் கருத்தை அறியலாம்
2. ஏதெனும் ஒரு வார்த்தையின் பிரயோகத்தில் குழப்பம் ஏற்பட்டால், அந்த வார்த்தை மற்ற இடங்களில் எவ்வாறு கையாளப்பட்டுள்ளது என்பதும், சரியான கருத்தை அடைய உதவும்
மேலும் ஒரு முஸ்லிமின் கண்ணோட்டம் எப்படிபட்டது என்றால், வேதத்தின் கருத்து தெளிவாக இருக்கும்போது எந்த மனிதருக்கும், வேறு பொருள் கொடுக்க உரிமையில்லை. தனி மனித கருத்து பின்னுக்கு தள்ளப்பட்டு, வேதத்தின் கருத்து தான் எடுத்துக்கொள்ளப்படும்.
இந்த வசனத்தின் கருத்து என்ன என்று அறிய, பல மொழியாக்கங்களை அலசினேன். சில இடங்களில், ஆங்கில/தமிழ் மொழியாக்கத்திற்கு இடையிலும் வேற்பாடுகள் இருப்பதும் தெரிகின்றது.
காமைஸ்தைஸ்தைர்ஹ்ருதஜ்ஞாநா: ப்ரபத்யந்தேऽந்யதேவதா:தம் தம் நியமமாஸ்தாய ப்ரக்ருத்யா நியதா: ஸ்வயா
தை:
தை:
காமை:-அந்த அந்த விருப்பங்களால்,
ஹ்ருதஜ்ஞாநா:-கவரப்பட்ட அறிவினையுடையோர், ஸ்வயா ப்ரக்ருத்யா நியதா:-தத்தம் இயற்கையால் கட்டுண்டு, தம் தம் நியமம் ஆஸ்தாய-வெவ்வேறு நியமங்களில் நிற்பாராய், அந்ய தேவதா: ப்ரபத்யந்தே-அன்னிய தேவதைகளை வழிபடுகின்றனர். ( |
மேற்கண்ட வசனத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு:
"Those whose minds are distorted by
material desires surrender unto demigods and follow the particular rules and
regulations of worship according to their own natures."
|
இதற்க்கு அடுத்த வசனம் 7:21, 22 இதை கண்டிக்கும் விதமாகவே நான் கருதுகின்றேன்.
21. யோ யோ யாம் யாம் தநும் பக்த: ஸ்ரத்தயார்சிதுமிச்சதி
தஸ்ய தஸ்யாசலாம் ஸ்ரத்தாம் தாமேவ விததாம்யஹம்
ய: ய: பக்த:-எந்த எந்த பக்தன், யாம் யாம் தநும்-எந்த எந்த வடிவத்தை (தெய்வத்தை), ஸ்ரத்தயா அர்சிதும்-நம்பிக்கையுடன் அர்ச்சிக்க விரும்புகிறானோ, தஸ்ய தஸ்ய ஸ்ரத்தாம்-அந்த அந்த பக்தனுக்கு சிரத்தையை, அஹம் தாம் ஏவ-நான் அந்த தேவதையிடமே, அசலாம் விததாமி-ஸ்திரமாக செய்கிறேன்.
|
I am in everyone's heart as the Super soul. As
soon as one desires to worship the demigods, I make his faith steady so that
he can devote himself to some particular deity.
|
எப்போது உண்மையான இறைவனை அல்லாமல், அந்நிய/மாற்று தேவதைகளை எவன் வழிபடுகின்றானோ, அவன் உள்ளத்தை அதன் பக்கமே விழ செய்கின்றேன், என்பது தானே இதன் அர்த்தம்!
22. ஸ தயா ஸ்ரத்தயா யுக்தஸ்தஸ்யாராதநமீஹதே
லபதே ச தத: காமாந்மயைவ விஹிதாந்ஹிதாந்
ஸ தயா ஸ்ரத்தயா யுக்த:-அவன் அந்த நம்பிக்கையுடன் கலந்து, தஸ்ய ஆராதநம் ஈஹதே-அவ்வடிவத்தை ஆராதித்து வேண்டுகிறான், ச தத: காமாந் லபதே-மேலும் அதனின்றும் விரும்பியனவற்றை எய்துகிறான், ஹி தாந் விஹிதாந் மயா ஏவ-எனினும் அவை என்னாலேயே வகுத்துக் கொடுக்கப் பட்டது.
|
Endowed with such a faith, he seeks favors of a
particular demigod and obtains his desires. But in actuality these benefits
are bestowed by Me alone.
|
மனிதன் யாரை வழிபட்டாலும், அவனு கிடைக்கும் நன்மை/தீமை இரண்டுமே அந்நிய/மற்று தேவதைகளால் கிடப்பது இல்லை மாறாக அதற்க்கு காரணம் நானே, என்று கடவுள் சொல்வதாகவே தானே தெரிகின்றது.
23. யேऽப்யந்யதேவதாபக்தா யஜந்தே ஸ்ரத்தயாந்விதா:
தேऽபி மாமேவ கௌந்தேய யஜந்த்யவிதிபூர்வகம்
கௌந்தேய-குந்தியின் மகனே, யே பக்தா-எந்த பக்தர்கள், ஸ்ரத்தயா அந்விதா: அபி-நம்பிக்கையுடன் கூடியவர்களாக இருந்த போதிலும், அந்ய தேவதா: யஜந்தே-மற்ற தேவதைகளை வழிபடுகிறார்களோ, தே அபி அவிதி பூர்வகம்- அவர்களும் விதிமுறைப்படி அல்லாமல் (அஞ்ஞானத்துடன்), மாம் ஏவ யஜந்தி-என்னையே தொழுகின்றனர். (
|
O Arjuna, even those devotees who worship demigods with faith, they too worship Me, but in an improper way. (9.23)
|
இந்த வசனத்தை படிக்கும்போது நமக்கு ஏற்பட்ட கேள்விகள்:
தவறான வழிமுறைப்படி வணங்குபவனின் வணக்கம் எப்படி ஏற்றுக்கொள்ளப்படும்?
ஒரு மாணவன், தான் தேர்வில் வெற்றி அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் தேர்வை எழுதுகின்றான். தவறான பதிலை கொடுத்தால் வெற்றி அடைய முடியுமா?
இது கடவுளின் வார்த்தையாக நீங்கள் நம்பினால், "கடவுளே, என்னையல்லாமல் வேறு யாரையும் வணங்குபவர் தவறான முறையிலே வணங்குகின்றனர் என்று சொல்லும்போது",
சரியான வழியை கண்டறிந்து வணங்குவது முறையா அல்லது கடவுளே சொன்னாலும் நான் தவறாகத்தான் வணங்குவேன் என்று சொல்வது சரியே?
இன்னும் ஓர் தெளிவான வசனம்:
9/25. யாந்தி தேவவ்ரதா தேவாந்பித்ரூந்யாந்தி பித்ருவ்ரதா:
பூதாநி
யாந்தி
பூதேஜ்யா
யாந்தி
மத்யாஜிநோऽபி மாம்
தேவவ்ரதா:
தேவாந்
யாந்தி-தேவதைகளை வழிபடுபவர்கள் தேவதைகளை அடைகிறார்கள்,
பித்ருவ்ரதா: பித்ரூந் யாந்தி-பித்ருக்களை வழிபடுவோர் பித்ருக்களை அடைவார், பூதேஜ்யா பூதாநி யாந்தி-பூதங்களைத் தொழுவார் பூதங்களை யடைவார், மத்யாஜிந: அபி மாம் யாந்தி-என்னை வழிபடுபவர்கள் என்னை அடைகிறார்கள்.
|
Worshippers of the demigods
go to the demigods,
the worshippers of the ancestors go to the ancestors,
and
the worshippers of the ghosts go to the ghosts,
but My devotees come
to Me .
(9.25)
|
தெளிவாக இந்த வசனம் சொல்கின்றது, இறைவனை வழிபடுபவன் மட்டும் தான் இறைவனை அடைவதாக.
நேர்மையாக சிந்திக்கும் மக்களுக்கு, இவைகள் மிக தெளிவான, சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில், உண்மையான இறைவனை அல்லாமல் வேறு யாரையும். எவைகளையும் வணங்குபவன், இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டன் என்று நிரூபணம் ஆகின்றது, மேலும் இந்த கீழ்க்கண்ட மொழியாக்கமும் சரியாகவே படுகின்றது.
"எவர் ஒருவர் பரம்பொருளை தாமாக உண்டாக்கி வணங்குகின்றாரோ, அவர் பொய்யானதையே வணங்குகிறார்" [7:20]
இதைபற்றி குரான் என்ன சொல்கின்றது, என்று பார்ப்போம்:
"என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் "நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும்போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள்'' (என்பதைக் கூறுவீராக!)" [2:186]
"அல்லாஹ்வையன்றி உமக்குப் பயனும், தீங்கும் தராதவற்றைப் பிரார்த்திக்காதீர்! (அவ்வாறு) செய்தால் நீர் அநீதி இழைத்தவராவீர்!"
"அவனையன்றி கடவுள்களை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டனர். அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர். தமக்கே தீங்கும், நன்மையும் செய்ய அவர்களுக்கு இயலாது. வாழ்வதற்கோ, மரணிப்பதற்கோ, (பின்னர்) எழுப்புவதற்கோ அவர்கள் அதிகாரம் படைத்தோராக இல்லை." [25:3]
By: Nadodi Tamilan
Thanks:
1. (
2. Bhagavad-gita (www.AsItIs.com)
உண்மையை சரியான விளக்கத்தோடு பகிர்ந்தமைக்கு அதற்காக எடுத்த முயற்சிக்கு ஏக இறைவன் அருள்புரிவானாக... முந்தைய வேதங்கள் கரைபடுத்தபட்டுவிட்டன என்பதற்கு திரிபாலர்களின் மொழிபெயர்ப்பு சாட்சி.. திருக்குர்ஆன் என்றும் கரைபடுத்த முடியாத இறைவனின் வேதம் என்பது முந்தைய வேதங்களின் மூலமாகவே ஊர்ஜிதமாகி வருவதை காண மாட்டார்களா?
ReplyDeleteஉங்களின் கருத்திற்கு நன்றி, சகோ ஹசன் நூருல்! சத்தியம் வெளிபடவேண்டும், மேலும் உண்மையான இறைவணக்கம் என்பது அகில உலகையும் படைத்து பரிபாலிக்கும் அந்த ஏக இறைவனுக்கு மட்டும் தான் என்பதை கீதையிலிருந்தும் நிரூபித்து இருக்கின்றோம்.
Delete"தேவதைகளை வழிபடுபவர்கள் தேவதைகளை அடைகிறார்கள்,
பித்ருக்களை வழிபடுவோர் பித்ருக்களை அடைவார்,பூதங்களைத் தொழுவார் பூதங்களை யடைவார்,என்னை வழிபடுபவர்கள் என்னை அடைகிறார்கள். [9:25]"
கீதை 7:20 யாருடைய மதிநுட்பம் லவ்கீக ஆசைகளால் கவரப்பட்டுள்ளதோ ; அவர்கள் தங்கள் தேவைகள் நிறைவேற அசுரர்களை சரணடைகிறார்கள் ! அவர்களை பிரியப்படுத்த சடங்குகளையும் வழிபாடுகளையும் மதமாச்சரியங்களையும் உருவாக்கி சிறையாகி கொள்ளுகின்றனர் !!
ReplyDeleteகீதை 7:21 எல்லோரின் இதயத்திலும் பரமாத்துமாவாய் வாசம் செய்யும் கடவுள் ; ஒருவன் அசுரர்களை பின்பற்ற தொடங்கியதும் அவன் எதை நினைக்கிறானோ அதுவாகவே ஆகும் படி விட்டு விடுகிறார் !!
கீதை 7:22 எதை விரும்புகிறானோ ; அதற்கான அசுரனை பின்பற்றி அதையும் அடைந்து கொள்ளுகிறான் ! எதை நினைக்கிறானோ அதுவாகவே ஆகும் படி கடவுள் தான் அனுமதித்தார் என்பதை அறியாமலேயே போகிறான் !!
கீதை 7:23 சிற்றின்ப நாட்டமுள்ள சிறு மதியுடையோர் ; அது அதற்கான அசுரனை வழிபட்டு அதனை அடைந்து கொண்டாலும் ; அந்த பலன்கலெல்லாம் தற்காலிகமானவையும் குறைந்த நிம்மதியை தறுபவை ஆகும் ! அவர்கள் பூமிக்குரியவைகளை நாடி பூமியிலேயே பிறந்து பிறந்து இளைக்கிறார்கள் ! ஆனால் எனது சீடர்களோ உண்ணதமான கடவுளின் பரலோகத்தை அடைவார்கள் !!
கீதை 7:24 ஞானமற்ற மனிதர்கள் என்னை பூரணமாக அறிந்து கொள்ள முடியாமல் நான் இதற்கு முன்பு இல்லாமலிருந்து இப்போது இறைதூதர் கிரிஷ்னர் என்ற நபராக வந்திருப்பதாக நினைக்கிறார்கள் ! அவர்களின் சிற்றறிவால் எனது அழிவற்ற நித்திய ஜீவனையும் ; யுக புருஷன் என்ற உண்ணத தன்மையையும் உணராதவர்களாக இருக்கிறார்கள் !!
கீதை 7:25 மூடர்களுக்கும் ஞானமற்றவர்களுக்கும் என்னை நான் வெளிப்படுத்தி கொள்ளுவதில்லை ! அவர்களுக்கு எனது உள்ளார்ந்த தன்மை மறைக்க பட்டுள்ளது ! ஆகவே நான் பிறப்பு இறப்பு அற்றவன் என்பதை அறியார்கள் !!
கீதை 7:26 அர்ச்சுணா ! யுக புருஷன் என்ற நிலையால் இதுவரை நடந்தது அனைத்தும் நான் அறிவேன் ! இப்போது நடந்து கொண்டிருப்பதும் இனிமேல் நடக்க போவதும் கடவுளால் எனக்கு மறைக்க படவில்லை !! அனைத்து உயிரிணங்களையும் நான் அறிவேன் ; ஆனால் அவைகளோ என்னை அறியாமலிருக்கின்றன !!
http://gita-omni.blogspot.in
உங்களின் கருத்திற்கு நன்றி, சகோ கிருபாநந்தன்! நான் ஆங்கில, தமிழ் மொழியாகங்களை ஒப்பிடும்போது மிகப் பெரிய வேறுபாடுகள் இருப்பதை காண்கிறேன். நேரிடையான மொழியாக்கமாக இல்லாமல், வசனத்தின் கருத்தை (தனக்கு புரிந்தவாறு) கொடுத்து இருக்கலாம்.
Deleteஇது மிகவும் ஆபத்தானது. இதனால் தான் இறைவனின் கருத்து நாளடைவில் மறைக்கப்பட்டு, மனிதர்களின் கருத்து புகுத்தப்பட்டுள்ளது.
நேரிடையான விளக்கம் தெளிவாக இருக்கும் பொது, அதற்க்கு விளக்கம் என்ற பெயரில் தன கருத்தை திணித்து, அது தான் இறை கருத்து என்று சொல்வது நியாயமல்ல.
இங்கே ஒரு வசனத்தை ஆராய, நான் பல இடங்களில் அது பற்றிய கருத்தை தேடி, ஒரு முழுமையான கருத்தை, எந்த வித சுய விளக்குமும் அல்லாமல் கொடுத்துள்ளேன்.