பகுத்தறிவாள நாத்தீகர்களிடம் நீங்கள் விவாதத்தில் ஈடுபட்டிருக்கும்போது அவர்கள் பகுத்தறிவிற்கு ஆதரவாக எப்பொழுதும் கீழ் வரும் விசயங்களைத் தவராமல் பட்டியலிடுவார்கள்.
அறிவியல் மனித சமூகம் சந்தித்த கொள்ளை நோய்களை இல்லாமல் ஆக்கிவிட்டது, மனிதர்களின் வாழ்வை எளிமையாக்கிவிட்டது, கடுமையான நோய்களுக்கும் மருந்து கண்டுவிட்டது, மனிதர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திவிட்டது, மனிதர்களின் இறப்பு விகிதத்தை குறைத்துவிட்டது, மனிதனின் ஆயுளை அதிகரித்துவிட்டது.
இப்படியாகப்பட்ட நாத்தீகர்களின் அறிவியல் குறித்த புளித்த விளக்கங்களைக் கேட்டு உங்களுடைய காதுகளுக்கு மந்தத் தன்மை வந்திருந்தால் நிச்சயம் நீங்கள் படித்தே ஆகவேண்டியக் கட்டுரை இது. யாம் ஏற்கனவே பகுத்தறிவாள நாத்தீகர்கள் பிடித்துக்கொண்டு அழும் டார்வினின் பரிணாமக் கொள்கைக்கு பின்னால் இருக்கும் அரசியலைக் குறித்து இந்த தளத்தில் ஒரு கட்டுரைத் தொடரை எழுதிவிட்டமையால் மீண்டும் ஒருமுறை டார்வினின் பரிணாமக் கொள்கை தவறு என்று நிருபிக்கப்போவதில்லை.
மாறாக பகுத்தறிவாள நாத்தீகர்களின் சாப விமோசனமான அறிவியல் எப்படி டார்வினின் பரிணாமக் கொள்கைக்கு ஆப்பு அடிக்கிறது என்பதையே இந்தக் கட்டுரையில் சொல்லப் போகிறோம். Harvard பல்கலைக் கழகத்தின் Evolutionary Biologist Daniel Liberman, Dysevolution என்கிற வார்த்தையை முன்வைத்திருக்கிறார். அவர் தனது புத்தகமான The Story of the Human Body Evolution, Health, and Disease-ல் நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள் எத்தகைய தாக்கத்தை நம்முடைய மரபணுக்களில் உண்டாக்குகின்றன என்பதைப் பற்றி விளக்கமா பேசியிருக்கிறார்.
Homo Sapien-களுக்கு இருந்த உடல் ஆரோக்கியத்தை, தற்காலத்தில் பல அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு மத்தியில் இருக்கும் நம்முடைய உடல் ஆரோக்கியம் ஏணி வைத்துக்கொண்டு முக்கி முக்கி எட்டினாலும் எட்டிவிட முடியாது என்கிறார். விவசாயம் கண்டுபிடிக்கப்பட்ட 10,000 வருடங்களுக்கு முன்பே மனிதனின் மரபணுவிற்கானத் தீவினை தொடங்கிவிட்டது என்கிறார். அப்படி கொஞ்சமாக இருந்த தீவினையை தொழில் புரட்சி காலகட்டத்தின் அறிவியல் கடந்த 250 ஆண்டுகளில் மிகவும் தீவிரப் படுத்திவிட்டது என்பதை ஆதாரப் பூர்வமாக விளக்குகிறார்.
இதற்கு Liberman துணையாக கொள்வது Mismatch Hypothesis Evolution கொள்கையை. Mismatch Hypothesis Evolution கொள்கையைப் பற்றி எளிதாக விளக்குவதென்றால், பரிணாமக் கொள்கையின் படி நம்முடைய மரபணுக்கள் நம்முடைய சுற்றுச் சூழலின் இயல்பை ஆமை வேகத்தில் உள்வாங்கி கொண்டிருக்கிறது. இங்கே ஆமை வேகம் என்பது பல லட்ச கணக்கான வருடங்கள். இப்படிப் பல லட்சக் கணக்கான வருடங்களாக நமது மரபணுக்கள் புறச் சூழ்நிலைக்கு ஏற்ப நமது உடம்பு தகவமைப்பதை நமது இயல்புகளில், பழக்கங்களில் ஒன்றாகப் பதிவுச் செய்து வருகிறது.
அப்படி 2,00,000 வருடங்களுக்கு முன்பு விவசாயம் கண்டுபிடிக்கப்படாத வேட்டை நாகரீகத்திற்கு பழக்கப்பட்டுவிட்ட நமது முன்னோர்களான Homo Sapien-களின் மரபணு, Homo Sapien-களின் உணவு, உடை, ஓய்வு, தொழில் ஆகியவற்றின் பண்புகளைத் தன்னுடைய DNA கேந்திரங்களில் சேமித்து வந்திருக்கிறது. Homo Sapien-களின் உணவு, உடை, ஓய்வு, தொழில் ஆகியவையும் இயற்க்கையைச் சார்ந்தே இருந்திருக்கிறது.
ஆனால் 10,000 வருடங்களுக்கு முன்புத் தீடிரென்று விவசாயம் கண்டுபிடிக்கப்பட்டதும் Homo Sapien-களின் உணவு, உடை, ஓய்வு, தொழில் ஆகிய பழக்கவழக்கங்களும் தேவைகளும் மாற்றமடைகின்றன. அப்படியே புறச் சூழ்நிலைகளும் விவசாயத்திற்கு ஏற்ப மாற்றம் அடைகிறது.
அதேசமயத்தில் ஆமை வேகத்தில் (லட்சம் ஆண்டுகள்) புற சூழ்நிலைக்கு தகவமைக்கும் மரபணு, Homo Sapien-களின் தீடிரென்ற விவசாயக் கண்டுபிடிப்புக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறுகிறது. இந்த திணறலின் விளைவு மரபணுவின் malfunction. இந்த malfunction காரணமாக வேட்டை நாகரீகத்தில் Homo Sapien-கள் அறிந்திராத நோய்கள் எல்லாம் விவசாயம் கண்டுபிடிக்கப்பட்டப் பிறகான காலகட்டத்தில் Homo Sapien-களுக்கு உண்டாகிறது. Mismatch Hypothesis Evolution கொள்கை.
விவசாய நாகரீகம் மக்களை ஒரிடத்தில் கூடி வாழும் வாழ்க்கை முறைக்கு அழைத்துச் சென்றது. இது நகரமயமாக்கலுக்கு வழி வகுத்தது. இந்த நகரமயமாதல் கழிவுகளை உண்டாக்கி அதன் வழி புதுப் புது கிருமிகளை உண்டாக்கியது. இந்த செயல்பாடுகள் புறச் சூழலில் அதிவேகமாக நடந்தேருகிறது அதாவது ஒரு சில ஆயிரம் ஆண்டுகளில். ஆனால் மரிணாமக் கொள்கைப் படி ஆமை வேகத்தில் அதாவது பல லட்சம் ஆண்டுகளில் புறச் சூழலுக்கு ஏற்பத் தன்னை தகவமைக்கும் மனிதனின் மரபணு இந்த தீடீர் பாய்ச்சலான நகரமயமாதலை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறுகிறது.
விளைவு நகரமயமாதலின் காரணமாகத் தோன்றிய புதுப் புத கிருமிகள் பிளேக், காலரா, மலேரியா, எய்ட்ஸ் போன்றக் கொள்ளை நோய்களை உண்டாக்க இந்த நோய்களுக்கு எதிராகத் தன்னை தகவமைத்து பாதுகாத்துக்கொள்ள முடியாத மனிதனின் மரபணு அந்த கிருமிகளுக்கு பலியாகி மனித உயிர் இழப்புகளை உண்டாக்கிவிட்டது.
ஆனால் பகுத்தறிவாள நாத்தீகர்கள் நமக்கு கடா வெட்டி பொங்கல் வைத்து காது குத்திக் கொடுக்கும் விளக்கம் என்னமோ மதம்தான் பிளேக், காலரா, மலேரியா, எய்ட்ஸ் போன்றக் கொள்ளை நோய்களை மூடநம்பிக்கையாக கட்டமைத்து மனிதர்களை ஏமாற்றியதாகவும் அறிவியல் கண்டுபிடிப்புகள் வந்துதான் எல்லாவற்றையும் ஒழித்ததாகவும். ஆனால் Mismatch Hypothesis Evolution கொள்கையின் படி விவசாயம் என்கிறக் கண்டுபிடிப்புதானே பிளேக், காலரா, மலேரியா, எய்ட்ஸ் போன்றக் கொள்ளை நோய்களுக்கு காரணமாகிப்போனது.
ஒரே கண்டுபிடிப்பான விவசாயத்திற்கே மனிதனின் மரபணு பழக்கம் பொருந்திவராமல் திணறி நோய்களை உண்டாக்குமானால் இன்றைய நிலையை நீங்களே நினைத்துப் பாருங்கள். தூங்கி கண் விழித்தால் ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு. புறச் சூழலில் நிகழும் இந்த படுவேகமான அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் மனிதனின் மரபணு திணறிக்கொண்டிருக்கிறது. அந்த திணறலின் வெளிப்பாடு இன்றைய நோய்கள்.
பரிணாமக் கொள்கை முன்வைக்கும் மரபணுவின் Natural Selection புறச் சூழலில் நடந்தேரும் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறி mismatch-ஆகி தொடர்ச்சியாக நோய்களை உண்டாக்குகிறது. இன்றைய அறிவியல் நோய்களுக்கு தான் மருந்து கண்டுவிட்டதாகச் சொன்னாலும் தான் கண்டுபிடிக்கும் மருந்துகள் நோய்களை இல்லாமல் ஆக்காது என்றும் தன் வாலை கால்களுக்கு இடுக்கில் சுருட்டிக்கொண்டு விளக்கமும் தருகிறது.
அறிவியல் இன்று மனித வாழ்வை எளிமையாக்கிவிட்டதாகவும் அர்த்த முள்ளதாக்கிவிட்டதாகவும் மார்த்தட்டிக்கொள்ளும் அதே வேலையில் டார்வீனின் மரிணாமக் கொள்கைப் படி தோற்றுக்கொண்டருக்கிறது. டார்வீனின் மரிணாமக் கொள்கையின் சாராம்சமான Natural Selection படி இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனித வாழ்வை பேராபத்திற்குள்ளாக்கிக் கொண்டிருக்கின்றன.
Darwin-னின் பரிணாமக் கொள்கைக்கு அறிவியல் அடிக்கும் இந்த ஆப்பு குறித்து பகுத்தறிவாள நாத்தீகர்கள் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்.
No comments:
Post a Comment