யார் இந்த நபிகள் நாயகம்????
எனதருமை தமிழ் உறவுகளே.. நபிகளாரை ஏதோ அன்னிய தேசத்து மனிதராகவும் இஸ்லாத்தை தனக்கு சம்பந்தமில்லாத விஷயமாகவும் நினைப்பவர்களுக்காக இந்தப் பதிவு...
நபிகளாரின் வழிமுறைகளாகிய சுன்னத்துக்களும், பண்டைய தமிழர் பாரம்பரியமும் இரு விளக்குகளில் இருந்து தோன்றும் ஒரே வெளிச்சத்தைப் போன்றேயாகும். மேற்கத்திய நாடுகளின் பன்முகக் கலாச்சாரத்திற்கு நேர் எதிராக இவை இருக்கின்றன.. அவற்றில் சில துளிகள்..
#"குடும்பம்" என்ற அடிப்படையைக் கொண்டே இஸ்லாமும், தமிழர் நாகரீகமும் கட்டமைக்கப் பட்டுள்ளன. மேற்கத்திய கலாச்சாரத்தில் அவ்வாறு இல்லை என்பதை அறிவீர்கள்..
# உறவுகளைப் பேணுதல், விருந்தோம்பல் போன்றவற்றிற்கு இஸ்லாம் & தமிழர் பண்பாடு இரண்டிலுமே அதிக முக்கியத்துவம் இருப்பதை உணரலாம்..
# ஈகை, போர்க்குணம் ஆகிய இரண்டும் மிகைத்தும் ஒரு சேர அமைந்தும் இருப்பதையும் இவ்விரு கலாச்சாரத்திலும் காணலாம்..
# உணவு உண்ணும் விஷயத்திலும் பல ஒற்றுமைகளைக் காணலாம்..
கூட்டாக அமர்ந்து உண்ணுதல், தரையில் அமர்ந்து உண்ணுவது, கரண்டிகள் அல்லாமல் கைகளால் எடுத்துண்ணுதல் போன்றவற்றைக் கூறலாம்.
# வலது கரத்தை மற்றும் வலது காலை நல்ல காரியங்களில் முற்படுத்துவது நபிகளாரின் வழிமுறையாகவும், தமிழர்களின் மரபாகவும் இருக்கிறது.
# இறைவழிபாட்டை பொறுத்த மட்டும் நபிகளாரின் போதனைகள், ஒரு தேர்ந்த பகுத்தறிவாளனால் சிந்தித்து ஏற்றுக் கொள்ளும் வகையில் தான் அமைந்ததுள்ளது.
பண்டைய தமிழர்களின் கடவுட்கொள்கையானது, பொதுவாக இயற்கை முறையைச் சார்ந்திருந்தாலும், எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டு ஒரு பரம்பொருள் உண்டு என்பதை உணர்ந்த ஒரு பகுத்தறிவுச் சிந்தனையுடன் தான் இருந்திருக்கிறது.
எனவே மொழி, இனம், மதம், நாடு என்னும் வேறுபாடுகளைத் தாண்டி இவ்விரு கலாச்சாரங்களும் இதுபோல் பல ஒற்றுமைகளைக் கொண்டவையே..
## ஒரு மதப் போதகராக நபிகளாரைப் பார்க்காமல் அவரின் நற்போதனைகளை, ஒரு நல்ல மனிதரின் சிந்தனைகளாகப் பார்க்கலாமே.. நல்லறிவைத் தேடி அறிய, தமிழர்கள் என்றும் தயங்கியதில்லையே.. நபிகளாரின் வாழ்க்கை வரலாற்றை ஒரு முறை படித்துதான் பாருங்களேன் சகோதரர்களே..

No comments:
Post a Comment