அல்குரான் மனித குலத்திற்கான இறுதி வேதம்! அது இஸ்லாமியர்களுக்கு மட்டும் சொந்தம் அல்ல! உலக மக்கள் அனைவருக்குமானது. அல்குரானை பின்பற்றுபவர்கள், இஸ்லாமியர்கள்.
இஸ்லாமிய கொள்கையின் படி, அல்லாஹ் தான், அனைத்து படைப்பினங்களின் இறைவன். படைத்தவனுக்கும், படைக்கப்பட்டவனுக்கும் இடையில் எந்த வித இடைத்தரகரும் இல்லை. இதோ அல்லாஹ் சொல்கின்றான்:
திருக்குர்ஆன் முஸ்லிம்களுக்கு மட்டும் உரித்தானது அல்ல. மனித குலத்திற்க்கே உரித்தானது. இதை பற்றி சான்று கூறும் திருக்குரானின் வசனங்கள்:
யாருக்கு நேர்வழிகட்டும்:
இஸ்லாமிய கொள்கையின் படி, அல்லாஹ் தான், அனைத்து படைப்பினங்களின் இறைவன். படைத்தவனுக்கும், படைக்கப்பட்டவனுக்கும் இடையில் எந்த வித இடைத்தரகரும் இல்லை. இதோ அல்லாஹ் சொல்கின்றான்:
என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் "நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும்போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள்'' (என்பதைக் கூறுவீராக!) [2:186]அல்லாஹ், தன் அடியார்களின் பிரார்த்தனையை கேட்கின்றான்... தன்னுடைய அடியானுக்கு மிக அருகில் இருக்கின்றான்:
மனிதனைப் படைத்தோம். அவனது மனம் எதை எண்ணுகிறது என்பதையும் அறிவோம். நாம் அவனுக்குப் பிடரி நரம்பை விட மிகவும் நெருக்கமாக இருக்கிறோம். [50:16]
திருக்குர்ஆன் முஸ்லிம்களுக்கு மட்டும் உரித்தானது அல்ல. மனித குலத்திற்க்கே உரித்தானது. இதை பற்றி சான்று கூறும் திருக்குரானின் வசனங்கள்:
மனிதர்களே! இத்தூதர் (முஹம்மத்) உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு உண்மையைக் கொண்டு வந்துள்ளார். எனவே நம்பிக்கை கொள்ளுங்கள்! (அது) உங்களுக்குச் சிறந்தது. நீங்கள் (ஏகஇறைவனை) மறுத்தால் வானங்களிலும்,பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான். [4:170]
"மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு உண்மை வந்து விட்டது. நேர்வழி நடப்பவர் தனக்காகவே நேர்வழி நடக்கிறார். வழிகெட்டவர் தனக்கு எதிராகவே வழிகெடுகிறார். நான் உங்கள் மீது பொறுப்பாளன் அல்லன்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக! [10:108]
" (முஹம்மதே!) உண்மையை உள்ளடக்கிய இவ்வேதத்தை அவன் உமக்கு அருளினான். இது தனக்கு முன் சென்றவற்றை உண்மைப்படுத்துகிறது. இதற்கு முன் மனிதர்களுக்கு நேர்வழி காட்ட தவ்ராத்தையும், இஞ்சீலையும் அவன் அருளினான். (பொய்யை விட்டு உண்மையைப்) பிரித்துக் காட்டும் வழிமுறையையும் அவன் அருளினான்." [3:3-4]
இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் அருளப்பட்டது. (இது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும் [2:185]
யாருக்கு நேர்வழிகட்டும்:
" இது வேதம். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு (இது) வழிகாட்டி." [2:2]
No comments:
Post a Comment