பக்கங்கள் செல்ல

Thursday, April 16, 2015

எதிர் தொடர் 9: எதிர் தொடர் 8ன் தொடர்ச்சி...சில சந்தேகமும் தெளிவும்


எதிர் தொடர் 9: சந்தேகமும் தெளிவும் :
       
      முன்சென்ற கட்டுரையில் கட்டுரை ஆசிரியர் ஒரு கதை சொல்லி என்பதை நிறுவினோம். இந்த கட்டுரையில் சில இஸ்லாமிய அறிஞகர்களின் பதிலுக்கு எதிர் வாதம் வைத்திருப்பதாக எண்னிக்கொண்டு ஆசிரியர் சில உளறல்களை கூறியுள்ளார். அதையும் ஒரு கை பார்த்துவிடுவோம்....[refer:Source].

இந்த கட்டுரையில் இவர் எடுத்து வைக்கும் வாதமும் நமது மறுப்பும்



வாதம் 1.


நமது மறுப்பு:  
      முதலில் இந்த கட்டுரை ஆசிரியர் ஒரு விஷயத்தை லாவகமாக மறைத்து விடுகிறார். தத்து எடுத்தல் என்ற பழைய சமுக அவலம் ஒன்றை களை எடுக்க அல்லாஹ் நாடுகிறான். அதை நபி(ஸல்) அவர்களை கொண்டே செயல் படுத்தியும் காடுகிறான். ஏன் இந்த பழக்கம் ஒரு சமுக தீமை என்பதையும் அது எத்தகைய சமுக கேட்டிற்கு வழிசெய்தது என்பதையும் விளக்கியுள்ளோம். வளர்ப்பு பிள்ளையினால் தலாக் கூறப்பட்ட பெண் ஆகுமாக்க பட்டவர்கள்தான் என்பதை மக்களுக்கு உணர்த்த அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நபி(சல்) அவர்கள்தான். 

வாதம் 2:


நமது மறுப்பு:
      நபி(ஸல்) அவர்கள் எந்த இடத்தில் ஜைது(ரலி) அவர்க்ள் தலாக் சொல்வதை வெளிப்படையாக ஆதரித்தார்கள். இந்த ஆசிரியரே தனது முன்சென்ற கட்டுரையிலும் இதே கட்டுரையிலும் நபி(சல்) அவர்கள் தலாக் கூறும் ஜைத்(ரலி)யின் முடிவை மறுத்ததாக கூறுகிறார். இந்த கட்டுரையில் எப்படி உளறுகிறார், முன்சென்ற கட்டுரையில் இருந்து.....

    தன்னுடைய ஆசையை மறைத்தார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது. இவர் மேற்கொள் காட்டும் இறைவசனத்தில் கூட அல்லாஹ் வெளிப்படுத்த வேண்டியதை மறைத்தார்கள் என்று தானே உள்ளது. இது அடுத்த இட்டுகட்டல். அல்லது வாசிப்போரை திசை திருப்பும் முயற்சி.

வாதம் 3:
 

நமது மறுப்பு:

மேலும் இஸ்லாமிய அறிஞகர்கள் கேட்கும் எந்த ஒரு கேள்விக்கும் கட்டுரை ஆசிரியரிடம் எந்த பதிலும் இல்லை.
     
      உதாரணமாக நபி(சல்) அவர்கள் ஜைனப்(ரலி) அவர்களை சிறுவயது முதலே அறிந்திருந்தும் இளமையும் அழகும் நிறைந்திருக்கும் காலத்தை விட்டு விட்டு தலாக் கூறிய 36 வயது உடைய ஜைனப்(ரலி)ஐ ஏன் விரும்ப வேண்டும். இஸ்லாமிய அறிஞ்கர்கள் தான் இவ்வாறு கூறுகின்றனர் என்று கூறுகிறார். சரி அவர்களிடம் இதற்கு பதில் உள்ளதா?.....அறிஞர்களின் கருத்து சரி என்று கொண்டால் குர்துபி அவர்க்ளின் கருத்தை ஏன் முழுவதுமாக பதிவு செய்யவில்லை....? இந்த கதா ஆசிரியர் பல்வீனமான ஒரு அறிவிப்பை அடிப்படையாக கொண்டே தனது முழு வாதத்தையும் எடுத்து வைக்கிறார்....அதற்கு முன்பே எதிர் தொடர் 8 ல் பதில் வழங்கப்பட்டுள்ளது..

வாதம் 4 , 5: 







நமது மறுப்பு:
      குற்றம் கூறும் வகையில் இருந்திருக்கிறது என்று கூறுகிறார். எப்படி யார் குற்றம் கூறும் வகையில்? அல்லாஹ் இதற்கு முன்பு தடை செய்த ஒன்றை இப்போழுது அனுமத்தித்து சட்டம் இறக்கினானா? இல்லையே. மக்களிடம் உள்ள மூட தனத்தை மாற்றி ஒருவர் சமுகத்தை மாற்றும் போது அவரை சமுகம் குற்றம் சாட்டுவது இயல்பானது. அல்லாஹ்வின் கடமையை நிறைவேற்ற முன்வந்தவருக்காக  அதை குற்றம் அல்ல என்று வாதிடும் பொறுப்பினை அவன் ஏற்றுக்கொண்டான். தத்தெடுத்தலுக்கு தடை இந்த திருமணத்திற்கு முன்பே நடைமுறை படுத்தப்பட்ட நிலையில்தான் இந்த திருமணம் நடை பெற்று இருக்கும் போது புதிய சட்டம் இதன் பின்பு வந்ததாக கட்டுரை ஆசிரியர் உளறுவது வேடிக்கையாக உள்ளது. அதற்கான் சான்றை அவரே கூறியிருப்பது கேலிக்குரியது. முன் சென்ற கட்டுரையில் இருந்து. ஜைது(ரலி) அவர்கள் மதீனா வந்து இரண்டு ஆண்டுகள் வரை முஹம்மதுவின் மகன் ஜைது என்று அழைக்கப்பட்டார். பிறகு அவரது தந்தையின் பெயருடன் இணைத்து அழைத்தனர் என்கிறார். ஜைனப்(ரலி) நபி(சல்) அவர்களது திருமணம் மதீனா வந்து 5 ஆண்டுகள் பிறகுதான் நடை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. (ஸீரத் அந் நபவீய்யா 3/ 208)

அவரது கட்டுரையில் இருந்து:
 

    இவரது கருத்தியலின் அடிப்படையில் பார்த்தால் நான் கூறுவது சரிதான். இவர் கூறும் விளக்கம் இவரது அனைத்து கேள்விக்கும் பதில் அளிப்பதாய் உள்ளது. தத்தெடுத்தல் இந்த சம்பவத்திற்கு முன்பே தடை செய்யப்பட்டு விட்டது. ஜைனப்(ரலி) அவர்களது திருமணம் ஹிஜ்ரி 5ல் நடைபெற்றது . ஆக நபி(சல்) அவர்கள் தனது சுய லாபத்திற்காக தத்தெடுத்தலை தடை செய்ய வில்லை.


வாதம் 6: அனாதைகளை ஆதரிப்பதை இஸ்லாம் எதிர்கிறதா ?



நமது மறுப்பு:

      அடுத்ததாக இஸ்லாமிய அறிஞகர்கள் தத்தேடுத்தலை மானக்கேடு என்று கூறுவதை கேட்டு கொந்தளிப்பது போல் ஆசிரியர் நன்றாக பாவனை செய்கிறார். தான் பெற்ற பெண் குழந்தைகளை வாரிசாக எண்ணாமல் அவர்களை குழிதோண்டி புதைத்து கொண்டிருந்த காலத்தில் எங்கிருந்தோ ஒரு ஆணை தனது வரிசாக அறிவிப்பதை இந்த ஆசிரியர் சரி காண்கிறார் போலும். இன்றும் ஆண் வாரிசுகளை மட்டுமே தனது வாரிசாக எண்ணும் ஆயோக்கியதனதிற்கு தீனி போடும் இந்த தத்தெடுத்தல் முறையை சமுக கேடாக, மானக்கேடாக நினைப்பது எந்த விதத்திலும் தவறு இல்லை. பெண் சிசுக்கொலையை ஆதரிக்கும் கயவர்கள் வேண்டும் என்றால் வளர்ப்பு குழந்தைகளின் பெற்றொரின் அடையாளத்தை மாற்றுவதை ஏற்பர். அனாதைகளை அதரிப்பதை பற்றி நீழிக்கண்ணீர் வடிக்கும் கட்டுரை ஆசிரியர் ஏன் இஸ்லாம் அனாதைகளை ஆதரிப்பதை அதிகம் வலியுறுத்தவதை பற்றி வாய்திறக்க வில்லை


ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்
       இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'நானும் அநாதையின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம்' என்று கூறியபடி தம் சுட்டுவிரலையும் நடுவிரலையும் இணைத்து அந்த இரண்டுக்குமிடையே சற்று இடைவெளிவிட்டு சைகை செய்தார்கள்.

  நூல்: புஹாரி 5304



     இவர் முன்னால் முஸ்லிம் என்று கதை வேறு. இன்னும் சொல்வதாக இருந்தால் இஸ்லாம் பெற்றொரின் அடையாளத்தை மாற்றுவதையும் அவர்களை உன்மையான வாரிசாக அறிவிப்பதையும் தான் தடுக்கிறது. இன்னும் சொல்வதாக இருந்தால் அனாதைகளுக்கு அதிகப்படியான் உரிமையை ஒருவர் வழங்க முடியும். ஒருவர் தனது சொத்தில் மூன்றில் ஒரு பகுதியை அனாதைகளுக்கு தர்மமாக வழங்க முடியும். இது ஒரு உன்மை வாரிசு பெறும் பங்கைவிட பல மடங்கு அதிகம். தர்மமும் செலவும் செய்வதற்கு அதிக தகுதியுடையவராக அனாதைகளை இஸ்லாம் குறிப்பிடுகிறது. இவ்வாறு ஒருவர் தர்மம் செய்தால் அவர் அதற்கான் கூலியை மறுமையிலும் பெறுவார் என்று இஸ்லாம் ஊக்கப்படுத்திகிறது. இந்த கட்டுரை ஆசிரியர் துடிப்பதை பார்த்தால் தவறான வழியில் குழந்தைகளை பெற்று யார் தலையிலாவது கட்டுவதை இஸ்லாம் தடுக்கிறதெ என்ற கட்டுரை ஆசிரியரின் ஆதங்கம் தான் தெரிகிறது.

வாதம் 7: தடையா அனுமதியா?



நமது மறுப்பு:
33:50. நபியே! (முஹம்மதே!) உமது மனைவியரில் யாருக்கு அவர்களின் மணக்கொடையைக்¹⁰⁸ கொடுத்து விட்டீரோ அவர்களையும், அல்லாஹ் உமக்கு போர்க் கைதிகளாகக் கொடுத்த அடிமைப் பெண்களையும்⁰⁷ உமது தந்தையின் சகோதரரின் புதல்விகள், உமது தந்தையின் சகோதரிகளுடைய புதல்விகள், உமது தாயின் சகோதரருடைய புதல்விகள், உமது தாயின் சகோதரிகளுடைய புதல்விகள் ஆகியோரில் உம்முடன் ஹிஜ்ரத்⁴⁶⁰ செய்தோரையும் உமக்கு (மணமுடிக்க) நாம் அனுமதித்துள்ளோம். நபிக்காக தன்னைத் தானே அர்ப்பணம் செய்த நம்பிக்கை கொண்ட பெண்ணையும் நபி அவரை மணக்க விரும்பினால் (அனுமதித்துள்ளோம்) உமக்குச் சங்கடம் ஏற்படக் கூடாது என்பதற்காக நம்பிக்கை கொண்டோருக்கு இல்லாமல் உமக்கு மட்டும் சிறப்பான சட்டமாகும்.³⁷⁸ (மற்றவர்களுக்கு) அவர்களின் மனைவியர் மற்றும் அடிமைகள் குறித்து ஏற்படுத்தியுள்ளதை அறிவோம். அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

மேற்குறிப்பிட்ட வசனத்தில் சாயமிட்டிருக்கும் பகுதி நபி(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் பெண்கள் திருமண விஷயத்தில் வழங்கிய சலுகைகள் குறித்து பேசுகின்றன. ஆனால் நபி(சல்) அவர்களை பெண் பித்தர் என்று குற்றம் சுமத்தும் பலருக்கு சம்மட்டி அடியாக இதே வசனமே அமைந்துள்ளது என்பது மிகவும் ஆச்சரியமானது.
      மேலே குறிப்பிட்ட வசனத்தில் அல்லாஹ் நபி(சல்) அவர்கள் திருமணம் புரிவதற்கு அனுமதி அளித்த அனைவருமே முஸ்லிம்கள் அனைவருக்கும் அனுமதிக்கப்பட்டவர்களே. ஆனால் ஒருவரை தவிர. ஆம் தன்னை தானே அன்பளிப்பு செய்யும் பெண்களை நபி(சல்) அவர்கள் மணக்கொடையின்றி நபி(சல்) அவர்கள் விரும்பினால் திருமணம் செய்து கொள்ளலாம்.  இதை இன்னும் தெளிவு படுத்தும் விதமாக அடுத்த வசனங்கள் உள்ளன. 

 (முஹம்மதே!) அவர்களில் நீர் விரும்பியவரை ஒதுக்கி விடலாம். விரும்பியவரை உம்முடன் வைத்துக் கொள்ளலாம். நீர் ஒதுக்கியோரில் யாரை விரும்புகிறீரோ (அவரை மீண்டும் சேர்த்துக் கொள்வதில்) உம் மீது குற்றம் இல்லை. அவர்களின் கண்கள் குளிரவும், அவர்கள் கவலைப்படாமல் இருக்கவும், நீர் அவர்களுக்கு எதைக் கொடுக்கிறீரோ அதில் அவர்கள் அனைவரும் திருப்தியடையவும் இது ஏற்றது. உங்கள் உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் அறிவான். அல்லாஹ் அறிந்தவனாகவும், சகிப்புத்தன்மை உடையவனாகவும் இருக்கிறான்.

.      அடிமைப் பெண்கள் தவிர வேறு பெண்கள் இதன் பிறகு உமக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்களின் அழகு உம்மைக் கவர்ந்த போதும் சரியே. (அவர்களை விவாகரத்துச் செய்து விட்டு) அவர்களுக்குப் பகரமாக வேறு மனைவியரை மாற்றுவதும் கூடாது. அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் கண்காணிப்பவனாக இருக்கிறான். 
அல் குர் ஆன் 33:51,52 
 

    ஆனால் நபி(சல்) அவர்கள் இந்த சலுகையை பயன் படுத்தவே இல்லை. அவர்களின் எந்த மனைவியும் மணக்கொடையின்றி மணக்கப்பட்டவர்கள் இல்லை. தன்னை மணக்கொடையின்றி அன்பளிப்பு செய்தவர்கள் இல்லை. அவ்வாறு அன்பளிப்பு செய்தவர்களை நபி(சல்) அவர்கள் மணக்கவும் இல்லை.

சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
       ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்க (மஹ்ரின்றி என்னைத் தாங்கள் மணந்து கொள்ளுமாறு கோரி) வந்துள்ளேன்" என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரை நோக்கிப் பார்வையை உயர்த்தி நேராகப் பார்த்துவிட்டுப் பார்வையைத் தாழ்த்திக்கொண்டார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தலையைத் தொங்கவிட்டுக்கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது விஷயத்தில் எந்த முடிவுக்கும் வரவில்லை என்பதைக் கண்ட அந்தப் பெண்மணி (அந்த இடத்திலேயே) அமர்ந்துகொண்டார்.
     
      அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவர் எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்கு அவர் தேவையில்லையென்றால், அவரை எனக்கு மணமுடித்துவையுங்கள்" என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(மணக்கொடையாகச் செலுத்த) உம்மிடம் ஏதேனும் பொருள் உண்டா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "அல்லாஹ்வின் மீதாணையாக! என்னிடம் ஏதுமில்லை, அல்லாஹ்வின் தூதரே!" என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உம் குடும்பத்தாரிடம் சென்று ஏதாவது கிடைக்குமா என்று பார்" என்றார்கள். அவர் போய்ப் பார்த்து விட்டுத் திரும்பிவந்து, "அல்லாஹ்வின் மீதாணையாக! ஏதும் கிடைக்கவில்லை, அல்லாஹ்வின் தூதரே!" என்று சொன்னார். "இரும்பாலான ஒரு மோதிரமாவது கிடைக்குமா என்று பார்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்லியனுப்பினார்கள். அவர் (மீண்டும்) சென்றுவிட்டுத் திரும்பிவந்து, "அல்லாஹ்வின் மீதாணையாக! இரும்பு மோதிரம்கூடக் கிடைக்கவில்லை, அல்லாஹ்வின் தூதரே! ஆனால், இதோ இந்த எனது வேட்டி உள்ளது; அதில் பாதி அவளுக்கு" என்று சொன்னார்.
        -அறிவிப்பாளர் சஹ்ல் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அவரிடம் ஒரு மேல் துண்டு கூட இல்லை. (அதனால்தான் தனது வேட்டியில் பாதியை அவளுக்குத் தருவதாகச் சொன்னார்.)-
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உமது (ஒரு) வேட்டியை வைத்துக் கொண்டு நீர் என்ன செய்வீர்? இந்த வேட்டியை நீர் அணிந்துகொண்டால், அவள்மீது ஏதும் இருக்காது. அவள் அணிந்துகொண்டால், உம்மீது ஏதும் இருக்காது" என்றார்கள்,
       பிறகு அந்த மனிதர் நீண்ட நேரம் அங்கேயே அமர்ந்துவிட்டு எழுந்தார். அவர் திரும்பிச்செல்வதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்தபோது, அவரை அழைத்து வரும்படி உத்தரவிட்டார்கள். அவர் அழைக்கப்பட்டார். அவர் வந்தபோது, "உம்முடன் குர்ஆனில் என்ன (அத்தியாயம் மனப்பாடமாக) உள்ளது?" என்று கேட்டார்கள். அவர், "இன்ன அத்தியாயம், இன்ன அத்தியாயம் என்னிடம் உள்ளது" என்று எண்ணி எண்ணிச் சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவற்றை நீர் மனப்பாடமாக ஓதுவீரா?" என்று கேட்டார்கள். அவர், "ஆம் (ஓதுவேன்)" என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உம்முடன் உள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இப்பெண் உமக்குரியவளாக ஆக்கப்பட்டுவிட்டாள்; நீர் செல்லலாம்!" என்று சொன்னார்கள். 
நூல்: முஸ்லிம் 2785


     பெண்பித்தராக இருந்தால் நபி(சல்) அவர்கள் அந்த பெண்ணை திருமணம் செய்திருக்கலாம். மேலும் 33:50-33:52 வசனம் நபி(சல்) அவர்களுக்கு ஹிஜ்ரத் செய்யாத முஸ்லிம் பெண்களையும், முஸ்லிம் அல்லாத வேதகார பெண்களை மணப்பதையும் தடை செய்கிறது. நபி(சல்) அவர்கள் இதற்கு பிறகு இறக்கும் வரை திருமணமே செய்து கொள்ளவில்லை என்பதுதான் உன்மை. ஆனால் அன்றைய காலத்தில் முஸ்லிம்கள் அனைவருக்கும் இந்த அனுமதி இருந்தது. நபி(சல்) அவர்கள் செய்த 10 திருமணங்களும்( ஹதீஜா(ரலி)  அவர்களது திருமணம் தவிர்த்த)  இறைவனின் கட்டளையாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்பதற்கு அவர்களது திருமணத்தை பட்டியலிடுவது உதவியாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

1. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது 25வது வயதில் தம்மை விட வயதில் மூத்தவரான கதீஜா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தார்கள். தமது 50 வயது வரை அந்த ஒரு மனைவியுடன் மட்டுமே வாழ்ந்தார்கள்.இல்லற சுகம் அதிகம் தேவைப்படுகின்ற 25 முதல் 50 வயது வரையிலான காலகட்டத்தில் ஒரேயொரு மனைவியுடன் அதுவும் தம்மை விட அதிக வயதுடையவருடன் வாழ்ந்தவர் பெண்மோகம் கொண்டவராக எப்படி இருக்க முடியும்?

2.கதீஜா (ரலி) அவர்கள் மரணித்த பிறகு, தமது 50வது வயதில் தம்மை விட ஐந்து வயது அதிகமான, 55 வயதான ஸவ்தாவை மணந்தார்கள்.



3.இதன் பின்னர் சிறுமியான ஆயிஷா (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணம் செய்தார்கள். இத்திருமணத்திற்கும் பெண் மோகத்தைக் காரணமாகக் கூற முடியாது. ஏனெனில் பெண் மோகத்தில் திருமணம் செய்பவர் உடனே அனுபவிக்கும் வகையில்தான் பெண்களைத் தேர்வு செய்வார். உடலுறவுக்குத் தகுதி பெறாத சிறுமியை யாரும் மணந்து கொள்ள மாட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவைத் துறந்து, மதீனா சென்ற பிறகுதான் ஆயிஷா (ரலி) பருவமடைகிறார்கள். அதன் பிறகுதான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆயிஷாவுடன் இல்லறம் நடத்தினார்கள். காமத்திற்காகத் திருமணம் செய்பவர் உடனடியாக அதை நிறைவேற்றிக் கொள்ளத்தக்க பெண்ணைத் தான் திருமணம் செய்வார்.


4. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது 56ஆம் வயதில் ஹஃப்ஸா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தார்கள். இவர் நபிகள் நாயகத்தின் மற்றொரு உயிர் நண்பரான உமர் (ரலி) அவர்களின் புதல்வியாவார். ஹஃப்ஸா (ரலி) அவர்களது கணவர் உஹதுப் போரில் வீர மரணமடைந்ததால் விதவையானார்கள்.

5.நபிகள் நாயகம் (ஸல்) தமது 56ஆம் வயதில் ஸைனப் பின்த் ஹுஸைமாவை மணந்தார்கள். இவர் அதற்கு முன்பு ஒன்றன் பின் ஒன்றாக மூன்று கணவர்களுக்கு வாழ்க்கைப்பட்டு, மூவரும் அடுத்தடுத்து மரணித்ததால் விதவையாக இருந்தார். ஏறக்குறைய நபிகள் நாயகத்தின் வயதை ஒத்தவராக ஸைனப் பின்த் ஹுஸைமா (ரலி) இருந்தார்கள். மூன்று கணவருடன் வாழ்ந்த, சுமார் 56 வயதுடைய ஒரு பெண்ணை, யாரேனும் பெண்மோகத்திற்காகத் திருமணம் செய்வார்களா?

6.ஸைனப் (ரலி) 35வது வயதில் விவாகரத்துச் செய்யப்பட்டு, திக்கற்றவராக இருந்தார். எனவே அவரை நபிகள் நாயகம் (ஸல்) திருமணம் செய்தார்கள்.

7.அடுத்ததாக, உம்மு ஸலமா (ரலி) அவர்களை மணந்து கொண்டார்கள். இவரது கணவர் அபூஸலமா (ரலி) மரணித்த பின் ஏழாவதாக இவரைத் திருமணம் செய்து கொண்டார்கள். உம்மு ஸலமாவை நபிகள் நாயகம் (ஸல்) திருமணம் செய்வதாகக் கூறிய போது, "நான் வயது முதிர்ந்தவளாக இருக்கிறேன்; என் வயதுடையவர்கள் திருமணம் செய்து கொள்வதில்லை. குழந்தை பெறும் வயதைக் கடந்து விட்டேன்'' என்று அவர்கள் பதிலளித்தார்கள். இத்தகைய நிலையில் உள்ள ஒரு பெண்ணை, பெண்மோகத்திற்காக யாரேனும் மணப்பார்களா?

8.பனூ முஸ்தலக் என்ற எதிரிகள் மீது நபிகள் நாயகம் (ஸல்) போர் தொடுத்தார்கள். போரில் கைதிகளாகப் பிடிபட்டவர்களில் ஜுவைரிய்யாவும் இருந்தார். இவர் அக்கூட்டத்தின் தலைவருடைய மகளாவார். அன்றைய வழக்கப்படி போரில் கைது செய்யப்பட்டவர்கள் போராளிகளுக்குப் பிரித்துக் கொடுக்கப்படுவார்கள். ஜுவைரிய்யா (ரலி), ஸாபித் பின் கைஸ் என்ற நபித்தோழருக்கு வழங்கப்பட்டார். அவரைப் பெற்றுக் கொண்ட ஸாபித் பின் கைஸ் (ரலி), "ஏழு வெள்ளிக் காசுகள் தந்து விட்டு நீ விடுதலையாகிக் கொள்'' என்று ஜுவைரிய்யாவிடம் தெரிவித்தார். ஜுவைரிய்யா, நபிகள் நாயகத்திடம் வந்து, "நான் சமுதாயத்தில் முக்கியப் பிரமுகரின் மகளாக இருக்கிறேன். எனவே எனக்காக ஏழு வெள்ளிக்காசுகள் கொடுத்து விடுதலைக்கு உதவுங்கள்'' என்று கேட்டார். அவ்வாறே அவரை விடுவித்து நபிகள் நாயகம் (ஸல்) மணந்து கொண்டார்கள்.இத்திருமணமும் பெண் மோகத்திற்காக நடந்திருக்க முடியாது. ஏனெனில் ஜுவைரிய்யா அவர்கள் பெண்மோகம் கொண்டவர்களை ஈர்க்கும் வசீகரத்துடன் இருந்து, நபிகள் நாயகமும் அதில் ஆசைப்பட்டிருந்தால் அவரை ஸாபித்துக்குக் கொடுக்காமல் தாமே எடுத்துக் கொண்டிருப்பார்கள்.மேலும் அன்றைய சமூகத்தில் இளம் பெண்கள் அதிக விலைக்கும் வயதானவர்கள் குறைந்த விலைக்கும் விற்கப்பட்டனர். ஜுவைரிய்யாவைப் பெற்றுக் கொண்ட ஸாபித் வெறும் ஏழு வெள்ளிக் காசுகளே கேட்கிறார். இவ்வாறு அற்ப விலையைப் பெற்றுக் கொண்டு அவர் விடுதலை செய்ய முன்வந்ததே ஜுவைரிய்யா அவர்கள் முதிய வயதுடையவராக இருப்பார் என்பதைச் சொல்கிறது.

9.அடுத்ததாக, தமது 60வது வயதில் உம்மு ஹபீபா அவர்களைத் திருமணம் செய்தார்கள். இவரது தந்தை முஸ்லிம்களின் எதிரிகளான மக்காவாசிகளுக்குத் தலைவராகத் திகழ்ந்தவர். உம்மு ஹபீபா இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதால் தந்தையின் கொடுமைக்கு ஆளானார்கள். எனவே தமது கணவர் அப்துல்லாஹ்வுடன் அபீசீனியாவுக்கு நாடு துறந்து சென்றார்கள்.
அதன்பின் இவரது கணவர் அப்துல்லாஹ் இஸ்லாத்தை விட்டு கிறித்தவ மதத்திற்கு மாறி விட்டார். இன்னொரு நாட்டில் நிர்கதியாக விடப்பட்டு, பெற்ற தந்தையை எதிர்த்து நிற்கும் தியாகப் பெண்மணிக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் அவரைத் தாமே திருமணம் செய்து கொள்வதாக நஜ்ஜாஷி என்ற அபீசீனிய மன்னருக்கு நபிகள் நாயகம் (ஸல்) தகவல் அனுப்பினார்கள்.
உம்மு ஹபீபாவை நஜ்ஜாஷி, மதீனாவுக்கு அனுப்பி வைத்த பின் அவரை நபிகள் நாயகம் (ஸல்) திருமணம் செய்து கொண்டார்கள். இதற்கும் பெண் மோகம் காரணமாக இருக்க முடியாது. ஏனெனில் 15 ஆண்டுகளுக்கு முன்பே நபிகள் நாயகத்தைப் பிரிந்து உம்மு ஹபீபா, தம் கணவருடன் அபீசீனியாவிற்குச் சென்று அங்கேயே தங்கி விட்டார்கள். அவர்களது தோற்றமோ, அழகோ எப்படியிருக்கும் என்பது நபிகள் நாயகத்திற்குத் தெரியாது. நிர்கதியாக நிற்கும் ஒரு தியாகப் பெண்மணி என்பது மட்டும் தான் நபிகள் நாயகத்திற்குத் தெரியும். அதற்காகத்தான் அவரைத் திருமணமும் செய்தார்கள்.

10.தமது 60வது வயதில் ஸஃபிய்யா அவர்களை மணந்தார்கள். இவர் கைபர் பகுதியைச் சேர்ந்தவராவார். கைபர் மீது நபிகள் நாயகம் (ஸல்) போர் தொடுத்து வெற்றியடைந்த போது யூதத் தலைவர்களில் முக்கியமானவர்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் ஸஃபிய்யாவின் கணவர் கினானாவும் ஒருவர். கைது செய்யப்பட்ட ஸஃபிய்யாவை அன்றைய வழக்கப்படி திஹ்யா என்பவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழங்கினார்கள். அப்போது நபித் தோழர்கள், "இவர் இந்தச் சமுதாயத்தின் தலைவருடைய புதல்வியாக இருக்கிறார். இவரைத் தங்களைப் போன்ற ஒரு தலைவர் எடுத்துக் கொள்வதே சிறந்தது' என்று கூறினார்கள். இதை ஏற்றுக் கொண்டு அவரை விடுதலை செய்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். ஜுவைரிய்யா (ரலி) அவர்களைத் திருமணம் செய்வதற்குச் சொன்ன காரணமே இதற்கும் பொருந்தும்.

11.இறுதியாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதே 60வது வயதில் மைமூனா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தார்கள். இவரது வயது குறித்துத் தெளிவான சான்று கிடைக்கவில்லை என்றாலும் ஏற்கனவே அடுத்தடுத்து இரண்டு கணவர்களை மணந்து விதவையாக இருந்தார் என்பதற்குச் சான்று உள்ளது. எனவே இவரும் நடுத்தர வயதைக் கடந்தவர் என்பதை யூகிக்க முடியும்.மைமூனா (ரலி), நபிகள் நாயகத்தின் பெரிய தந்தை அப்பாஸின் மனைவிக்குச் சகோதரியாவார். பெரிய தந்தையின் வற்புறுத்தலின் பெயரிலும், மைமூனாவே வந்து கேட்டுக் கொண்டதன் பேரிலும் இவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மணந்து கொண்டார்கள்.நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண்மோகத்தின் காரணமாக அதிகத் திருமணங்களைச் செய்யவில்லை என்பதை மேலே நாம் கூறிய இந்த வரலாற்றுக் குறிப்புகளைப் பார்ப்பவர்கள் விளங்கிக் கொள்ளலாம்.

      இது அல்லாத திருமணம் நபி(சல்) அவர்கள் செய்ததாக பல நூல்களில் காணப்படுகின்றன. ஆனால் அவையாவும் ஆதாரமற்றவை.

      நபி(சல்) அவர்கள் திருமணம் செய்த அனைவரும் ஆயிஷா(ரலி) அவர்களைத் தவிர ஏனைய பெண்கள் அனைவரும் இல்லற வாழ்கையின் முடிவில் உள்ளவர்கள் தான். ஒரு பெண் பித்தர் இத்தகைய பெண்களை தேர்வு செய்வார் என்பது சிறிதும் நடைமுறைக்கு பொருந்தாத ஒன்று. மேலும் இஸ்லாமிய வரைவுபடி 11 திருமணம் செய்து வாழ்வது என்பது சுகம் அல்ல மிகவும் சுமையானது.  ஆனால் அல்லாஹ் ஒவ்வொரு திருமணத்தையும் ஒரு காரணத்தை முன்னிட்டுதான் கட்டளையிட்டுள்ளான் என்பது அந்த திருமணத்தால் ஏற்பட்ட நன்மைகள் உணர்த்துகின்றன. எடுத்துக்காட்டாக ஜுவைரிய்யா(ரலி) அவர்களது திருமணத்தால் ஒட்டுமொத்த பனு முஸ்தலிக் சமுகமும் விடுதலை அடைந்தது. இஸ்லாமை ஏற்றது. நபி(சல்) அவர்கள் இத்துனை திருமணம் செய்த்தின் விளைவாகத்தான் அவர்களது வாழ்கை நமக்கு தெள்ளதெளிவாக கிடைத்தது என்பது கூடுதல் நன்மை. 
அல்லாஹ் அனைத்திலும் மிகைத்தவன். 

No comments:

Post a Comment