எதிர்தொடர்
7: சக்களத்தி சண்டையும் வேத வெளிப்பாடும்-எதிர் தொடர்
இந்த கட்டுரையில் ஆசிரியர் சக்களத்தி சண்டைக்காக மட்டும்தான் வேதவெளிப்பாடு ஏற்பட்டதாக கூறுகிறார். ஆனால் அதன் உன்மைநிலை என்ன என்பதை இந்த கட்டுரையில் ஆய்வு செய்வோம். [refer:Source]
குற்றச்சாட்டு
1: மற்ற
மனைவிமார்களை ஏன் விலக்கி வைக்க வேண்டும்:
நமது பதில்:
ஆமாம் இதில் அனைத்து மனைவிமார்களுக்கும்
இந்த பங்கு உள்ளது . பின் வரும் ஹதீஸ் இதை தெளிவாக உணர்த்த போதுமானது’
ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்.
இறைத்தூதர்(ஸல்)
அவர்களுக்கு இனிப்பும் தேனும் விருப்பமானவையாக இருந்தன. நபி(ஸல்) அவர்கள் அஸ்ர்
தொழுகையை முடித்ததும் தம் துணைவியரிடம் வந்து பகல்பொழுதைக் கழிப்பார்கள்; அவர்களுடன் நெருக்கமாக
இருப்பார்கள். இவ்வாறு (ஒரு நாள்) ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் சென்ற நபியவர்கள்
வழக்கத்திற்கு மாறாக அதிக நேரம் இருந்துவிட்டார்கள். அது குறித்து நான்
விசாரித்தேன். அப்போது ஹஃப்ஸாவின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் அவருக்கு
(தாயிஃப் நகர சுத்த)த் தேன் உள்ள ஒரு தோல்பையை அன்பளிப்பாக வழங்கினாள் என்றும்,
அதிலிருந்து தயாரித்த பானத்தை இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு ஹஃப்ஸா
புகட்டினார் என்றும் என்னிடம் கூறப்பட்டது. உடனே நான் 'அல்லாஹ்வின்
மீதாணையாக! இதை நிறுத்துவதற்காக இதோ ஒரு தந்திரம் செய்வோம்' என்று கூறிக்கொண்டு, (நபியவர்களின் துணைவியரில்
ஒருவரான) சவ்தா(ரலி)
அவர்களிடம் அதைப் பற்றிக் கூறி, 'நபி(ஸல்) அவர்கள் உங்களிடம்
வரும்போது உங்களை நெருங்குவார்கள். அப்போது, இறைத்தூதர்
அவர்களே! கருவேலம் பிசின் சாப்பிட்டீர்களா? என்று கேளுங்கள்.
'இல்லை' என்று நபியவர்கள் கூறுவார்கள்.
உடனே இது என்ன வாடை? என்று அவர்களிடம் கேளுங்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள்
தம்மிடமிருந்து (துர்) வாடை வீசுவதைக் கடுமையாகக் கருதுவார்கள். எனவே,
'எனக்கு ஹஃப்ஸா தேன் பானம் புகட்டினார்' என்று
கூறுவார்கள். உடனே நீங்கள் 'இதன் தேனீக்கள் கருவேல மரத்தில்
அமர்ந்து (தேனை உறிஞ்சி)விட்டு வந்திருக்கலாம். (எனவேதான் வாடை வருகிறது)' என்று சொல்லுங்கள். நானும் இவ்வாறே சொல்வேன். ஸஃபிய்யாவே! நீங்களும் இவ்வாறே சொல்லுங்கள்
என்று (மற்றொரு துணைவியாரான ஸஃபிய்யாவிடமும்) சொன்னேன்.
நபி(ஸல்) அவர்கள்
சவ்தா(ரலி) அவர்களிடம் சென்றபோது (நான் சொன்னபடி செய்துவிட்டு) சவ்தா (என்னிடம்)
கூறினார்கள்: எவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறெவனுமில்லையோ அத்தகைய (இறை)வன்
மீதாணையாக! நபி(ஸல்) அவர்கள் என் வீட்டு வாசலில் இருந்தபோது உங்களுக்கு பயந்து
நீங்கள் என்னிடம் சொன்னபடி நபியவர்களிடம் சொல்ல விரைந்தேன். இறைத்தூதர்(ஸல்)
அவர்கள் (என்னை) நெருங்கியதும் அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! தாங்கள் கருவேலம் பிசினைச்
சாப்பிட்டீர்களா?' என்று கேட்டேன். அவர்கள் 'இல்லை' என்று பதிலளித்தார்கள். 'அப்படியானால், (இது என்ன வாடை?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'ஹஃப்ஸா எனக்குத்
தேன் பானம் புகட்டினார்' என்றார்கள். நான், 'அதன் தேனீக்கள் கருவேல மரத்தில் அமர்ந்து (தேன் உறிஞ்சி)விட்டு
வந்திருக்கலாம் ' என்று சொன்னேன்.
(தொடர்ந்து
ஆயிஷா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:) என்னிடம் நபி(ஸல்) அவர்கள் வந்தபோது அதைப்
போன்றே நானும் சொன்னேன். ஸஃபிய்யாவிடம் நபி(ஸல்) அவர்கள் சென்றபோது அவரும்
அதைப் போன்றே தெரிவித்தார். பிறகு (மறுநாள்) நபி(ஸல்) அவர்கள் ஹஃப்ஸாவிடம்
சென்றபோது நபியவர்களிடம் அவர், 'இறைத்தூதர் அவர்களே!
அருந்துவதற்கு தங்களுக்குச் சிறிது தேன் தரட்டுமா?' என்று
கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'அது எனக்குத் தேவையில்லை'
என்று கூறினார்கள்.
(இது குறித்து)
சவ்தா(ரலி) அவர்கள், 'அல்லாஹ் தூயவன்! நபி(ஸல்) அவர்களை அதை
அருந்தவிடாமல் நாம் தடுத்து விட்டோமே!' என்று
(வருத்தத்துடன்) கூறுவார்கள். நான் அவரிடம், 'சும்மா
இருங்கள்! (விஷயம் பரவிவிடப்போகிறது)' என்று சொல்வேன்.
நூல்: புஹாரி
6972
ஆம் இந்த செயலிற்கு காரணமாக இருந்தது ஆயிஷா(ரலி)
என்றாலும் மற்ற மனைவிமார்கள் இந்த செயலிற்கு உறுதுணையாக இருந்தது அனைவர் மீதும்
நபி(ஸல்) அவர்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியது விளங்கும்.
குற்றச்சாட்டு
2: தேன் சாப்பிட்டால் தேனின் வாசனைதான் உடலில் வீசுமா?
நமது பதில்:
நபி(ஸல்) அவர்கள்
உடலில் துர்வாடை வருவதை கடுமையாக வெறுப்பவர் என்று மேற் குறிப்பிட்ட ஹதீஸில்
தெளிவாக உள்ளது. மேலும் நாம் உண்ணும் உணவிற்கு ஏற்ப நமது உடலின் வியர்வையில் வாடை
வீசும் என்பதின் அடிப்படையில் தான் மனைவிமார்கள் கூறுகிறார்கள். அதை விளக்கவே
அவர்கள் தேனீக்கள் கருவேல மரத்தில் உண்டிருக்கும் என்று கூறுகின்றனர். உங்களது
கருத்துப்படி நறுமணம் மிகுந்த உணவு உட்கொண்டால் நறுமனமாக உடல் வேர்வை
இருப்பதில்லை. உணவு பொருட்களின் தன்மைக்கு ஏற்ப உடல் துர்வாடை இருக்கும். மாமிசம்,
கடுகு என்னை போன்றவற்றை உட்கொண்டால் அன்று உடலில் வேறு மாதிரி வாடை வருவதற்கும்
அதுதான் காரணம்.
குற்றச்சாட்டு
3: அல்லாஹ் கண்டிப்பது யாரை?
நமது பதில்:
அல்லாஹ் இந்த வசனத்தில் கண்டிப்பது
ஆயிஷா(ரலி) அவர்களையும் ஹஃப்ஷா(ரலி) அவர்களையும் தான். இதுதான் ஹதிஸ் குறித்த இந்த ஆசிரியரின் அறியாமையை வெளிப்படுத்துகிறது.
ஹதிஸ் முறைமை என்பது சதாரண மனிதன் கைகொள்ளும் முறைதான். இந்த குறிப்பிட்ட செய்தியை
பொறுத்தவரையில் இதில் நேரடியாக தொடர்புடைய இருவரின் சாட்சி உள்ளது. ஒன்று
ஆயிஷா(ரலி) அவர்களின் கூற்று. இதில் சற்று முரண்பாடு உள்ளது. ஆயிஷா(ரலி) அவர்களே
முரண்பட்டு அறிவித்துள்ளார்கள். இரண்டாவது நபி(ஸல்) அவர்களின் மற்றோரு மனைவியான
ஹஃப்சா(ரலி) அவர்களின் தந்தையான உமர்(ரலி) அவர்களின் கூற்று. ஆக ஒரு ஆசிரியரிடம்
இருந்து ஒரு செய்தியை நான்கு மாணவர்கள் செவியுற்றார்கள் என்று வைத்துகொள்வோம்
நால்வரில் மூவர் அறிவிப்பதற்கு மாற்றமாக ஒரு மாணவர் அறிவிக்கிறார் என்றால் அதில்
முரண்பாடு நிராகரிக்கப்படும். அதிகப்படியான செய்தி சேர்த்து கொள்ளப்படும். இது
சதாரன layman முறைதான். இவ்வாறு முரண்படுவதை ஷாத் வகை ஹதீஸ் என்பர். அதன் அடிப்படையில் இந்த
செய்தியில் வரும் ஹஃப்சா (ரலி) என்பது ஹதிஸை வழி வழியாக அறிவிக்கும் இடையில் உள்ள
அறிவிப்பாளர் ஒருவரின் குறைபாடினால்
ஏற்ப்பட்டு இருக்க வேண்டும். ஆக அதில் இருக்கும் அதிக்கப்படியான் செய்திகள்
ஏற்புடையது ஆனால் பெயரில் இருக்கும் தவறு மறுக்கப்பட வேண்டியது. மேலும் புற ஆதாரம்
ஒன்றும் ஆயிஷா(ரலி) அவர்களுடன் கூட்டாக செயல் பட்டவர் யாராக இருக்கும் என்பதை
சிந்தித்து அறியும் வகையிலும் எனது கூற்றான நபி(சல்) அவர்கள் ஹஃப்சா(ரலி) அவர்களது
வீட்டில் தேன் அறுந்தவில்லை என்பதை கூறுவதாகவும்
அமைந்துள்ளது.
ஆயிஷா(ரலி)
அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதருடைய மனைவிமார்களான நாங்கள் இரு குழுக்களாக
இருந்தோம். ஒரு குழுவில் நானும் ஹஃப்ஸா, ஸஃபிய்யா, மற்றும்
சவ்தா ஆகியோரும் இருந்தோம். மற்றெhரு குழுவில்
உம்மு சலாமா அவர்களும் அல்லாஹ்வின் தூதருடைய மற்ற மனைவிமார்களும் இருந்தனர்.
நூல்
புஹாரி(2581)
குற்றச்சாட்டு 4: உம்மு சலாமா(ரலி) உமர்(ரலி) அவர்களிடம் என்ன கூறினார்கள்:
நமது பதில்:
ஹஃப்ஸா(ரலி) யின் எதிரணியில்
இருக்கும் உம்மு சலாமா(ரலி) அவர்கள் ஹஃப்ஷா(ரலி) யின் தந்தையான உமர்(ரலி)
அவர்களிடம் என்ன கூறியிருப்பார்கள் என்பதை நம்மால் உகிக்க முடிகிறது. மேலும்
ஹஃப்ஷா(ரலி) அவர்களிடம் எதை கூறினாரோ அதே போன்றதைதான் கூறியிருப்பார்கள். கணவன்
மனைவி தொடர்பான விஷயங்களில் மூக்கை நுழைப்பதை உம்மு சலாமா(ரலி) கண்டித்ததாக அவர்
குறிப்பிடும் ஹதீஸில் (புஹாரி 4913) இல்லையா என்ன?....
நமது பதில்:
மேலும் இந்த கட்டுரை ஆசிரியர் இதற்கு
ஒரு பலவீனமான செய்தியை கூறி தனது கருத்தை திணிக்க முற்படுகிறார். இந்த இடத்தில் ஆசிரியரின்
பாணியில் ஒரு கேள்வி கேட்க தோன்றுகிறது. உறவு கொண்டால் மக்ஃபிரின் துர்வாடை அடிக்குமா? சும்ம சங்கேத வார்த்தையை
கண்டுபிடித்து விட்டதாக CID ரேஞ்சுக்கு ஆசிரியர் பேசிக்கொள்கிறார். இவரே இந்த செய்தியை அறிவிக்கும் அல்
வாகிதியின் தரத்தை கூறிவிட்டார். இது பலவீனமான செய்திதான். ஆக இதை கண்டுகொள்ள தேவை
இல்லை. அல் வாகிதி ஒரு பொய்யர் என்று புஹாரி, தஹபி போன்ற பல அறிஞர்களால்
விமர்சிக்கப்பட்டவர். ஆக இது ஒரு இட்டு கட்டபட்ட செய்தி. இன்னும் இதில் கருத்து ரீதியான
பல பிழைகள் உள்ளன். மரியா(ரலி) அவர்கள் ஹஃப்சா(ரலி) அவர்களின் வீட்டில்
இருந்தார்கள் என்பது முதல் பிழை. அப்படி இருப்பதற்கு அவர்கள் ஹஃப்ஷா(ரலி)ன் அடிமை இல்லை. மேலும் இது போல் ஒரு
செய்தி நஸயீல் இடம் பெறுகிறது ஆனால் ஹஃப்ஸா(ரலி) அவர்களை ஏமாற்றி அனுப்பி
விட்டு இந்த செயலை நபி(சல்) அவர்கள் செய்த்தாக கூறுவது அதில் இடம் பெறவில்லை. அடிமைப் பெண்களை அல்லாஹ்
அனுமத்தித்து இருக்கும் போது மற்றொரு மனைவி வீட்டில் திருட்டுதனமாக இந்த செயலை அரங்கேற்ற
நபி(சல்) அவர்களுக்கு எந்த தேவையும் இல்லை. இது தொடர்பான நஸயீயில். இடம் பெறும் செய்தியை இந்த கட்டுரையின்
இறுதியில் பதிவு செய்துள்ளோம்.
குற்றச்சாட்டு 6: அல்லாஹ் ஏன் மனிதர்களின் சண்டையை நிறுத்த வேண்டும்:
நமது பதில்:
இவ்வுலக வாழ்கை சோதனைதான். ஒவ்வோருவரின் பிரச்சனையையும் தீர்க்க
இறைவன் வர தேவை இல்லை. அவர்களை அல்லாஹ் பகுத்தறியும் தன்மையுடன் படைத்திருப்பதால்
தான் இறைவேதமும் இறைத்தூதர்களும் அனுப்பப்பட்டனர். இறைவசனங்களை சிந்தித்து மக்கள்
திருந்துவதும் திருந்தாமல் இருப்பதும் அவரவர் விருப்பம்.குடும்பத்தில் சக்களத்தி சண்டையினாலும், அதன் காரணத்தினால் நபி(சல்) அவர்களது ரகசியத்தை வெளியிட்டதாலும்,
நபி(ஸல்) அவர்கள் தங்களது பொருளாதார தேவையை
நிறைவேற்ற மனைவிமார்கள் அதிகம் வற்புறுத்தி வந்ததாலும் நபி(சல்) அவர்கள் மன வருத்தம் அடைகிறார்கள். குடும்பத்தில் சக்களத்தி சண்டையை நிறுத்தவும்,
நபி(ஸல்) அவர்கள் தங்களது பொருளாதாரத் தேவையை
நிறைவேற்ற மனைவிமார்கள் அதிகம் வற்புறுத்தி வந்ததை கண்டிக்கும் விதமாகவும் அனைத்திற்கும்
சேர்த்து இறைவன் 66:1-5 மற்றும் 33:28
வசனங்களை இறக்கினான் என்று பின் வரும் ஹதிஸ்கள் விளக்குகிறது.
மேலும் இறைத்தூதர்கள் மக்களுக்கு முன்னுதரணமாக இருக்கத்தான் அனுப்பட்டனர். அவர்கள் ஒன்றை தங்களுக்கு ஹராம் ஆக்கினால் நிச்சயம் பின் பற்றும் மக்களும் அதை ஹராம் ஆக்கி விடுவார்கள். ஆக அவர்கள் மனைவியை ரகசியம் காக்க சொன்னது சரிதான்.
ஜாபிர் பின்
அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை)
அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அவர்களது வீட்டுக்கு)
வந்து, உள்ளே வர அனுமதி கேட்டார்கள். அப்போது மக்கள் பலர்,
தங்களில் எவருக்கும் உள்ளே செல்ல அனுமதி கிடைக்காமல் அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்களது வீட்டு வாசலிலேயே அமர்ந்திருப்பதைக் கண்டார்கள். அனுமதி
கிடைத்ததும் அபூபக்ர் (ரலி) அவர்கள் உள்ளே நுழைந்தார்கள். பிறகு உமர் (ரலி)
அவர்கள் வந்து உள்ளே நுழைய அனுமதி கேட்டார்கள். அவர்களுக்கும் அனுமதி கிடைத்தது.
(அவர்களும் உள்ளே நுழைந்தார்கள்.) அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
தம்மைச் சுற்றி தம் துணைவியர் இருக்க, பேச முடியாத
அளவிற்குத் துக்கம் மேலிட்டவர்களாக மௌனமாக அமர்ந்திருப்பதைக் கண்டார்கள்.
அப்போது
அபூபக்ர் (ரலி) அவர்கள் "நபி (ஸல்) அவர்களைச் சிரிக்க வைக்க எதையேனும் நான்
சொல்லப்போகிறேன்" என்று (மனதிற்குள்) சொல்லிக்கொண்டு, "அல்லாஹ்வின் தூதரே! என் மனைவி (ஹபீபா) பின்த் காரிஜா
என்னிடத்தில் குடும்பச் செலவுத் தொகையை (உயர்த்தித் தருமாறு) கேட்க, நான் அவரை நோக்கி எழுந்து அவரது கழுத்தில் அடித்து விட்டேன் என்றால்,
நீங்கள் என்ன சொல்வீர்கள்?" என்று
கேட்டார்கள். (இதைக் கேட்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள்.
"இதோ நீங்கள் காண்கிறீர்களே இவர்களும் என்னிடம் செலவுத் தொகையை (உயர்த்தித்
தருமாறு) கோரியே என்னைச் சுற்றிக் குழுமியுள்ளனர்" என்று கூறினார்கள். உடனே
அபூபக்ர் (ரலி) அவர்கள் (தம்முடைய புதல்வி) ஆயிஷா (ரலி) அவர்களை நோக்கி, அவர்களது கழுத்தில் அடிக்க எழுந்தார்கள். அடுத்து உமர் (ரலி) அவர்கள் (தம்
புதல்வி) ஹஃப்ஸாவை நோக்கி, அவர்களது கழுத்தில் அடிப்பதற்காக
எழுந்தார்கள். "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இல்லாததை நீங்கள்
கேட்கிறீர்களா?" என்று அவர்களிருவருமே கூறினர். அதற்கு
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியர், "அல்லாஹ்வின்
மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இல்லாத எதையும் ஒருபோதும் நாங்கள்
கேட்கமாட்டோம்" என்று கூறினர்.
பின்னர்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மாதம் அல்லது இருபத்தொன்பது நாட்கள் தம்
துணைவியரிடமிருந்து விலகியிருந்தார்கள். பிறகு "நபியே! உங்கள் துணைவியரிடம்
கூறுங்கள்" என்று தொடங்கி, "உங்களிலுள்ள நல்லவர்களுக்காக மகத்தான நற்பலனை அல்லாஹ்
தயார் செய்துள்ளான்" என்று முடியும் (33:28,29)இந்த
வசனங்கள் அவர்களுக்கு அருளப்பெற்றன.
இதையடுத்து
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆரம்பமாக ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, "ஆயிஷா! நான் உன்னிடம் ஒரு
விஷயத்தை முன்வைக்க விரும்புகிறேன். அது தொடர்பாக நீ உன் பெற்றோரிடம் ஆலோசனை
கேட்காத வரை அவசரப்பட்டு (எந்த முடிவுக்கும் வந்து)விடக் கூடாது என
விரும்புகிறேன்" என்று கூறினார்கள்.
அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "அது
என்ன, அல்லாஹ்வின் தூதரே?" என்று
கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த (33:28ஆவது) வசனத்தை ஓதிக் காட்டினார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! உங்கள் (உறவைத் துண்டிக்கும்) விஷயத்திலா நான் என்
பெற்றோரிடம் ஆலோசனை கேட்க வேண்டும்? இல்லை! நான்
அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறு உலகத்தையுமே தேர்ந்தெடுக்கிறேன்"என்று சொல்லிவிட்டு, "நான் கூறியதைத் தாங்கள்
மற்றத் துணைவியரில் எவரிடமும் தெரிவிக்க வேண்டாமென உங்களைக்
கேட்டுக்கொள்கிறேன்" என்றார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,
"அவர்களில் எவரேனும் என்னிடம் (நீ சொன்னதைப் பற்றிக்) கேட்டால்
நான் அவர்களிடம் அதைத் தெரிவிக்காமல் இருக்கமாட்டேன். அல்லாஹ் என்னைக் கடினமான
போக்கு உள்ளவனாகவோ, எவரையும் வழிதவறச் செய்பவனாகவோ
அனுப்பவில்லை. மாறாக, (இறைநெறியை) எளிதாக்கிச் சொல்லும்
ஆசானாகவே என்னை அனுப்பியுள்ளான்"என்றார்கள்.
நூல்:முஸ்லிம் 2946.
உமர் பின்
அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் (ஒரு மாத காலம் தம் துணைவியரிடம் நெருங்கமாட்டேன் எனச் சத்தியம்
செய்து) தம் துணைவியரிடமிருந்து விலகியிருந்தபோது, நான் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்குச் சென்றேன்.
அங்கு மக்கள் (கவலையோடு) சிறு கற்களைத் தரையில் எறிந்து கொண்டு, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்
துணைவியரை மணவிலக்குச் செய்துவிட்டார்கள்" என்று கூறிக்கொண்டிருந்தனர். - இது
பர்தா பற்றிய சட்டம் அருளப்பெறுவதற்கு முன்பு நடந்த நிகழ்ச்சியாகும்.- "அன்று
என்ன நடந்தது என்பதை நான் அறிந்தே தீருவேன்" என்று (எனக்குள்) நான் கூறிக்கொண்டேன்.
பிறகு நான் ஆயிஷா
(ரலி) அவர்களிடம் சென்று, "அபூபக்ர் (ரலி) அவர்களின் புதல்வியே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை மன
வேதனைப்படுத்தும் அளவிற்கு உங்களது தகுதி உயர்ந்துவிட்டதா?" என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள்,
"கத்தாபின் புதல்வரே! உங்களுக்கும்
எனக்கும் என்ன பிரச்சினை? (முதலில்)
நீங்கள் உங்களது பெட்டகத்தை (வீட்டை)க் கவனியுங்கள் (உங்கள் புதல்வி ஹஃப்ஸாவிற்கு
அறிவுரை கூறுங்கள்)" என்று கூறினார்கள். ஆகவே, நான் (என் புதல்வி)ஹஃப்ஸா பின்த்
உமரிடம் சென்று,
"ஹஃப்ஸா! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை மன வேதனைப்படுத்தும்
அளவிற்கு உனது தகுதி உயர்ந்துவிட்டதா? அல்லாஹ்வின் மீதாணையாக! (நீ இவ்வாறு
செய்தால்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உன்னை நேசிக்கமாட்டார்கள் என்பதை நீ
அறிந்தே உள்ளாய். நான் மட்டும் இல்லையென்றால், உன்னை அவர்கள் மணவிலக்குச்
செய்திருப்பார்கள்" என்று கூறினேன்.
இதைக் கேட்டு
ஹஃப்ஸா கடுமையாக அழுதார். நான் ஹஃப்ஸாவிடம் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
(இப்போது) எங்கே இருக்கிறார்கள்?" என்று கேட்டேன். அதற்கு ஹஃப்ஸா, "மாடியிலுள்ள அவர்களது தனி அறையில் அவர்கள் இருக்கிறார்கள்" என்றார்கள்.
உடனே நான் அங்கு
சென்றேன். அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பணியாளர் ரபாஹ், அந்த மாடியறையின் வாசற்படியில், செதுக்கப்பட்ட மரக்கட்டையின் மீது கால்களைத்
தொங்கவிட்டபடி அமர்ந்திருந்தார். அது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏறுவதற்கும்
இறங்கு வதற்கும் பயன்படுத்திய பேரீச்ச மரக்கட்டையாகும்.
நான் (அவரைக்)
கூப்பிட்டு, "ரபாஹே!
எனக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேள்" என்றேன். அப்போது
ரபாஹ் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்த) அந்த அறையை உற்றுப் பார்த்தார்.
பிறகு என்னையும் பார்த்தார். ஆனால், பதிலேதும் சொல்ல வில்லை. பின்னர் (மீண்டும்) நான், "ரபாஹே! எனக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்களிடம் (உள்ளே வர) அனுமதி கேள்" என்றேன்.
ரபாஹ் அந்த
அறையைப் பார்த்தார். பிறகு என்னையும் பார்த்தார். ஆனால், பதிலேதும் சொல்லவில்லை. பின்னர் நான் குரலை உயர்த்தி,
"ரபாஹே! எனக்காக அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்களிடம் (உள்ளே வர) அனுமதி கேள். நான் (என் மகள்) ஹஃப்ஸா வுக்(குப்
பரிந்து பேசுவதற்)காக வந்துள்ளேன் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
எண்ணிவிட்டார்கள் என நான் நினைக்கிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! என் மகளின்
கழுத்தை வெட்டுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டால் கூட நிச்சயமாக
அவரது கழுத்தை வெட்டி விடுவேன்" என்று உரத்த குரலில் சொன்னேன்.
அப்போது ரபாஹ்
என்னை ஏறிவரச் சொல்லி சைகை செய்தார். உடனே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்களிடம் சென்றேன். அவர்கள் ஒரு பாயில் சாய்ந்து படுத்திருந்தார்கள். நான்
அமர்ந்தவுடன் அவர்கள் தமது கீழாடையைச் சுருட்டி (ஒழுங்குபடுத்தி)னார்கள். அப்போது அவர்கள் உடலில் அந்த
ஆடையைத் தவிர வேறெதுவும் இருக்கவில்லை. அந்தப் பாய் அவர்களது விலாப் புறத்தில்
அடையாளம் பதித்திருந்தது. அப்போது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தனி
அறையை நோட்டமிட்டேன். அங்கு ஒரு "ஸாஉ" அளவு தொலி நீக்கப்படாத கோதுமையும், அறையின் ஒரு
மூலையில் அதே அளவு கருவேல இலையும் இருந்தன. நன்கு பதனிடப்படாத ஒரு தோல் அங்கு
தொங்கவிடப்பட்டிருந்தது.
(இதைக் கண்ட) என்
கண்கள் (என்னையும் அறியாமல்) கண்ணீர் சொரிந்தன. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள், "கத்தாபின்
புதல்வரே! ஏன் அழுகிறீர்கள்?" என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வின் நபியே! என்னால் எவ்வாறு அழாமலிருக்க முடியும்? இந்தப் பாய் உங்களது விலாப் புறத்தில்
அடையாளப்படுத்தியுள்ளதே. (இதோ) இதுதான் உங்களது தனிஅறை. இதில் நான் காணுகின்ற
(விலை மலிவான) சில பொருட்களைத் தவிர வேறெதையும் நான் காண வில்லை. அந்த (பாரசீகம்
மற்றும் இத்தாலி அரசர்களான) குஸ்ருவும் சீசரும் கனி வர்க்கங்களிலும் நதிகளிலும்
(உல்லாசமாக) இருக்கின்றனர். நீங்களோ அல்லாஹ்வின் தூதரும் அவனால்
தேர்ந்தெடுக்கப்பட்டவரும் ஆவீர்கள். ஆனால், உங்களது தனி அறை இவ்வாறு இருக்கிறதே!" என்றேன்.
அதற்கு
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கத்தாபின் புதல்வரே! நமக்கு மறுமையும் அ(ம்மன்ன)வர்களுக்கு இம்மையும் இருப்பது
உங்களுக்குத் திருப்தி இல்லையா?" என்று கேட்டார்கள். நான் "ஆம் (திருப்திதான்)" என்றேன்.
அந்த அறைக்குள்
நுழைந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகத்தில் கோபத்தைக் கண்டிருந்தேன்.
ஆகவே, "அல்லாஹ்வின்
தூதரே! தங்கள் துணைவியரைப் பற்றித் தங்களுக்கு என்ன சஞ்சலம்? நீங்கள் அவர்களை மணவிலக்குச்
செய்திருந்தாலும் (நீங்கள் சஞ்சலப்பட வேண்டியதில்லை. ஏனெனில்,) தங்களுடன் (தங்களுக்கு உதவி புரிவதற்கு)
அல்லாஹ் இருக்கின்றான். அவனுடைய வானவர்களும் ஜிப்ரீலும் மீக்காயீலும் நானும்
அபூபக்ரும் இதர இறைநம்பிக்கையாளர்களும் தங்களுடன் இருக்கின்றோம்" என்று
சொன்னேன்.
நான் ஒரு சிறு
விஷயத்தைக் கூறினாலும் -நான் அல்லாஹ்வைப் புகழுகிறேன்- நான் கூறிய சொல்லை அல்லாஹ்
மெய்யாக்கி வைப்பான் எனும் நம்பிக்கை எனக்கு இருக்கவே செய்தது. அப்போது "உங்களை அவர்
மணவிலக்குச் செய்துவிட்டால் உங்களுக்குப் பதிலாக உங்களைவிடவும் சிறந்த துணைவியரை
அவருடைய இறைவன் அவருக்கு வழங்க முடியும்" (66:5) என்ற விருப்ப உரிமை
அளிக்கும் இந்த வசனமும், "அவருக்கு எதிராக நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டால் அல்லாஹ்
அவருடைய அதிபதி ஆவான். ஜிப்ரீலும் நம்பிக்கை கொண்டோரில் நல்லவர்களும் வானவர்களும்
அதன் பின் (அவருக்கு) உதவுவார்கள்" (66:4) எனும் இறைவசனமும் அருளப்பெற்றன.
அபூபக்ர் (ரலி) அவர்களின் புதல்வி ஆயிஷா (ரலி) அவர்களும் (என் புதல்வி) ஹஃப்ஸாவுமே
நபி (ஸல்) அவர்களின் மற்றத் துணைவியரை மிகைத்தவர்களாக இருந்தனர்.
ஆகவே, நான், "அல்லாஹ்வின் தூதரே! (உங்கள் துணைவியரான) இவர்களை
நீங்கள் மணவிலக்குச் செய்துவிட்டீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "இல்லை"
என்றார்கள். நான், "அல்லாஹ்வின்
தூதரே! நான் பள்ளிவாசலுக்குள் நுழைந்தேன். (அங்கு) முஸ்லிம்கள் சிறு கற்களைத்
தரையில் எறிந்துகொண்டு (ஆழ்ந்த கவலையுடன்) இருந்தனர்; "அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியரை மணவிலக்குச் செய்து விட்டார்கள்" என்று
கூறிக்கொண்டுமிருந்தனர். நான் இங்கிருந்து இறங்கிச்சென்று, "தாங்கள்
தங்கள் துணைவியரை மணவிலக்குச் செய்யவில்லை என அவர்களிடம் தெரிவித்துவிடவா?" என்று
கேட்டேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம்; நீங்கள்
விரும்பினால் (அவ்வாறு செய்யுங்கள்)" என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகத்திலிருந்து
கோபம் விலகும் வரையிலும், பற்கள்
தெரியுமளவிற்கு அவர்கள் சிரிக்கும்வரையிலும் அவர்களிடம் நான்
பேசிக்கொண்டேயிருந்தேன். -அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடையே அழகான
பற்கள் உடையவராக இருந்தார்கள்.- பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்த
மாடியறையிலிருந்து) இறங்கினார்கள். நானும் இறங்கினேன்.
அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் அந்தப் பேரீச்ச மரக்கட்டையைத் தமது கரத்தால் பற்றாமலேயே தரையில்
நடப்பதைப் போன்று (சாதாரணமாக) நடந்தார்கள். (ஆனால்,) நான் அந்த மரக்கட்டையைப் பிடித்துக்கொண்டே
இறங்கினேன். நான், "அல்லாஹ்வின்
தூதரே! நீங்கள் இந்த அறையில் இருபத்தொன்பது நாட்கள் மட்டுமே தங்கியுள்ளீர்கள்
(ஆனால், ஒரு மாதம்
மனைவியரிடமிருந்து விலகியிருக்கப்போவதாக சத்தியம் செய்திருந்தீர்களே?)!"என்று கேட்டேன். அதற்கு அவர்கள்,
"மாதம் என்பது இருபத்தொன்பது
நாட்களாகவும் இருக்கும்" என்று சொன்னார்கள்.
பின்னர் நான்
பள்ளிவாசலின் தலைவாயிலில் நின்றுகொண்டு உரத்த குரலில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்
துணைவியரை மணவிலக்குச் செய்யவில்லை" என்று கூறினேன். அப்போது, "பாதுகாப்பு அல்லது பயம் பற்றிய செய்தி
அவர்களுக்குக் கிடைத்தால் அதை அவர்கள் (உடனே) பரப்பிவிடுகின்றனர். அதை
இறைத்தூதரிடமும் தங்களில் அதிகாரமுள்ளோரிடமும் கொண்டுசென்றிருந்தால் அதை ஆய்வு
செய்வோர் அறிந்துகொண்டிருப்பர்" (4:83) எனும் இந்த வசனம் அருளப்பெற்றது. நானே
அச்செய்தியை ஆய்வு செய்தவனாக இருந்தேன்.
ஆக, மனைவியருக்கு விருப்ப உரிமை அளிப்பது தொடர்பான (33:28ஆவது)
வசனத்தை, வலிவும்
மாண்பும் உடைய அல்லாஹ் அருளினான்.
நூல்: முஸ்லிம்
2947.
நபி(ஸல்)
அவர்களுக்கு ஒரு அடிமைப்பெண் இருந்தார். அவர்களுடன் உறவு கொண்டுவந்தார்கள். அவர்களுடன்
உறவு கொள்வதை ஹராம் என்று கூறும் வரை நபி(ஸல்) அவர்களை, அன்னை ஆயிஷா(ரலி) மற்றும்
ஹஃப்ஸா(ரலி) ஆகிய இருவரும் வற்புறுத்தி வந்தனர்.
அப்போது அல்லாஹுத்தஆலா “நபியே! அல்லாஹ் உமக்கு ஹலாலாக்கிய ஒன்றை எப்படி
நீர் ஹராமாக்கலாம்?” என்ற 66:1 வசனத்தை இறக்கி வைத்தான்.
அறிவிப்பாளர்: அனஸ் (ரலி)
பாடம்: கிதாபுன்
ஹிஸ்ரத் அந்நஸாயி(3411)
நூல்: நஸயீ
ஆக இவை அனைத்தும் தனி தனி நிகழ்வுகள். இவை
ஒரு சேர நடந்து இருக்க வேண்டும். இதை மொத்தமாக கண்டிக்கும் விதமாக இந்த குர் ஆன்
வசனங்களை அல்லாஹ் இறக்கி இருக்கிறான் என்பது புலப்படும். இந்த வசனங்கள் அனைத்தும் மனைவிமார்கள்
ஒன்றினைந்து தொடர்ச்சியாக அல்லாஹ்வின் தூதரை துயரத்திற்கு ஆளாக்கியதை கண்டிக்கும்
விதமாக இறங்கியவை. இந்த குர்ஆன் வசனங்கள்
(66:1-5 ம் 33:28,29) தொடர்பான அனைத்து ஹதிஸ்களையும் பார்க்கும்
பட்சத்தில் நபி(சல்) அவர்களின் மனவருத்தம் ஒரு சம்பவம் தொடர்பானவை அல்ல என்பது தெளிவாக புரியும்.
மேலும் இந்த வசனங்கள் கணவன் மனைவி தொடர்பான அறிவுரைகளையும், ரகசியம் பேணுவதின்
அவசியத்தையும், பெண்களுக்கான விருப்ப விவாகரத்து உரிமை குறித்தும் மக்களுக்கு
விளக்குவதாய் உள்ளது. இன்னும் கொள்கை சகோதரராக எப்படி நபித்தோழர்கள் தங்களது மகள்களுக்கு அறிவுரை கூறினார்கள் என்பதும் அவர்களது தியாக உள்ளமும் வெளிப்படுகிறது. மேலும் நபி(சல்) அவர்களது மனைவிமார்கள் அல்லாஹ் விருப்ப விவாகரத்து உரிமை வழங்கிய போதும் அல்லாஹ் வழங்கும் நற்கூலியை விரும்பினர் என்ற முன்னுதாரணமும் இந்த நிகழ்வில் உள்ளது....
No comments:
Post a Comment