பக்கங்கள் செல்ல

Saturday, April 18, 2015

எதிர் தொடர் 10: நண்பர்கள் மீது சந்தேகமும் வேதவெளிப்பாடும்- பதில்

ஏக இறைவனின் திருப்பெயரால்....



         இந்த கட்டுரையில் நண்பர்கள் மீது சந்தேகம் கொண்டதால்தான் ஹிஜாப் அமலாக்கப்பட்டதாக கூற வருகிறார். இவர் கூறும் குற்றச்சாட்டுகள் உண்மையானதா.....[refer:Source]

குற்றச்சாட்டு 1: விருந்துக்கு அழைக்கப்பட்டால்:
நமது மறுப்பு:
     
           விருந்துக்காக அழைக்கப்பட்டால் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்ற நடைமுறையை இஸ்லாம் மக்களுக்கு கற்று கொடுக்கிறது. இதில் என்ன தவறு இருக்கிறது. விருந்து வைக்கும் நேரத்திற்கு மட்டும் அங்கு செல்வதுதான் அழகு. விருந்தினர் வேதனை கொள்ளும் அளவிற்கு முன்னும் பின்னும் அங்கு அமர்வது அநாகரிகம் என்று இஸ்லாம் சொல்கிறது...இதில் கட்டுரை ஆசிரியருக்கு என்ன வருத்தம் என்று தெரியவில்லை.

குற்றச்சாட்டு 2: நபி(சல்) அவர்களது  மனைவிமார்கள் மறுமணம் செய்ய    தடை  ஏன்:



நமது மறுப்பு:
       
இந்த வசனம் இதற்குமுன் இறங்கிய இறைவசனத்தின் விளக்கமாக அமைந்துள்ளது. ( அன்னை என்றவுடன் நேரடியான தாயை குறிக்கும் சொல் என்று எண்ணிவிடக்கூடாது. உம்மு என்ற சொல்லுக்கு அன்னை என்ற பொருள் இருந்தாலும் அன்னை என்பது மரியாதை நிமித்தமாகவும் சிறப்பிக்கவும் கூறப்படுவது உண்டு. எடு. உம்முல் குரான்( அல் ஃபாத்திகா அத்தியாத்தின் மற்றொரு பெயர்.  நபி(சல்) அவர்களது மனைவிமார்களை இறைநம்பிக்கையாளர்களின் அன்னையாக அல்லாஹ் அறிவிக்கின்றான்.

நம்பிக்கை கொண்டோருக்கு தங்களை விட இந்த நபி (முஹம்மத்) தான் முன்னுரிமை பெற்றவர். அவரது மனைவியர் அவர்களுக்கு அன்னையர். நம்பிக்கை கொண்டோரையும், ஹிஜ்ரத் செய்தோரையும் விட உறவினர்களே ஒருவருக்கு மற்றவர் முன்னுரிமை பெற்றவர். நீங்களாக உங்கள் நண்பர்களுக்கு உபகாரம் செய்தாலே தவிர. இது அல்லாஹ்வின் வேதத்தில் உள்ளது. இது பதிவேட்டில் எழுதப்பட்டதாக இருக்கிறது. 

அல் குர்ஆன் 33:6.      
         இந்த வசனம்  இறங்கிய பிறகு கிட்டதட்ட 5 ஆண்டுகள் மனைவிமார்கள் நபி(சல்) அவர்களோடு இருந்துள்ளனர். அப்போது அவர்கள் இது தொடர்பாக எதுவும் கேட்கவில்லை. அல்லாஹ் நபி(சல்) அவர்களின் மனைவியருக்கு விருப்ப விவாகரத்து உரிமை ( அல் குர்ஆன் 33:28) வழங்கிய போதும் மனைவிமார்கள் விவாகரத்து கோர வில்லை என்று முன் சென்ற கட்டுரையில் (எதிர் தொடர் 7) கண்டோம். அல்லாஹ் அவர்களது மனநிலையைதான் இந்த வசனத்தில் கூறுகிறான். அதற்கு ஒரு காரணமும் உண்டு. அல்லாஹ் அல் குர்ஆனில் பின் வருமாறு கூறுகிறான்.

(இறைவனை) அஞ்சி, நமது வசனங்களை நம்பி முஸ்லிம்களாக இருந்தோரைத் தவிர உற்ற நண்பர்கள் அந்நாளில் ஒருவருக்கொருவர் பகைவர்களாக இருப்பார்கள். "என் அடியார்களே! இன்று உங்களுக்கு எந்தப் பயமும் இல்லை. கவலைப்படவும் மாட்டீர்கள்! மகிழ்விக்கப்படுவீர்கள். நீங்களும் உங்கள் மனைவியரும் சொர்க்கத்தில் நுழையுங்கள்!'' (என்று அவர்களுக்குக் கூறப்படும்.

அல் குர்ஆன் 43:67, 68, 69, 70.
    மேலும் பெண்கள் இறுதியாக யாரது மனைவியராக இருக்கிறார்களோ அவர் சொர்க்கவாசியாக இருந்தால் அவருடன் அல்லாஹ் மறுமையில் இணைத்து வைப்பான் என்று பின்வரும் நபிமொழி விளக்குகிறது

     சியாத் பின் அபி மர்யம் அவர்கள் கூறியதாவது: உம்மு சலாமா(ரலி)  (தன்னுடைய கணவரான) அபூ சலாமா(ரலி) அவர்களிடம் “ஒரு பெண்ணின் கணவர் இறந்து, அவர் சொர்க்கவாசியாகவும் இருந்து விட்டால், அவரது மனைவி அவர் இறந்த பிறகு மறுதிருமணம் செய்யவில்லையென்றால் அவர்களை அல்லாஹ் சொர்க்கதில் இணைத்து வைப்பான். இது ஆண்களுக்கும் பொருந்தும் என்று நான் செவியுற்றேன்” என்று கூறினார்கள்.
அல் இஸாபா 11845, தபகத் இப்னு சாஃத்(8/page 88)

அறிவிப்பாளர் தொடர்: 

Umm Salamah( comp) --> Ziyaad ibn abi Maryam( freed slave of uthman(rali)(tabi) --> Asim al Ahwal (50 ah- 142 ah)(tabi) -->abdul wahid ibn ziyad(130-176 ah)(taba tabi)-->ahmad ibn ishaq(150-211)(taba tabi)--> ibn sa’d (168-230 ah)(3 century )





ஆக அல்லாஹ் நபி(சல்) அவர்களது மனைவிமார்களுக்கு ஏதுவான சட்டத்தைதான் இந்த வசனத்தின் மூலம் இறக்கியுள்ளான். 




குற்றச்சாட்டு 3:


1.திரை விலகியது என்பது கட்டுகதை என்பதை சென்ற          கட்டுரையில் விளக்கியுள்ளோம்  
2.இந்த வசனம் குறித்து நபி(சல்) அவர்கள் என்ன எண்ணம் கொண்டிருந்தார்கள் என்பதை விளக்க இதோ ஒரு ஹதீஸ் . 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:


     அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியர் (மதீனாவின்) புறநகர்ப் பகுதிகளுக்கு இயற்கைக் கடனை நிறைவேற்ற இரவு வேளைகளில் புறப்பட்டுச் செல்வார்கள். ("புற நகர்ப் பகுதிகள்" என்பதைக் குறிக்க ஹதீஸின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) "மனாஸிஉ" எனும் சொல், விசாலமான இடங்களைக் குறிக்கும். உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் "தங்கள் துணைவியரைத் திரைக்குள்ளிருக்குமாறு கூறுங்கள்" என்று சொல்வார்கள். ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. இந்நிலையில் ஒரு நாள் நபி (ஸல்) அவர்களின் துணைவியார் சவ்தா பின்த் ஸம்ஆ (ரலி) அவர்கள் ஓர் இரவில் இஷா நேரத்தில் வெளியே சென்றார்கள்.

    சவ்தா (ரலி) அவர்கள் உயரமான பெண்ணாக இருந்தார்கள். உமர் (ரலி) அவர்கள் சவ்தா (ரலி) அவர்களை நோக்கி, "சவ்தாவே! (நீங்கள் பர்தா அணிந்திருந்தாலும்) நாங்கள் உம்மை யார் என்று அடையாளம் தெரிந்துகொண்டோம்" என்று கூறினார்கள். பர்தா தொடர்பான சட்டம் அருளப்பட வேண்டுமென்ற பேராவலிலேயே இவ்வாறு கூறினார்கள். வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் அவ்வாறே பர்தா தொடர்பான வசனத்தை அருளினான்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
நூல்: முஸ்லிம் 4381  
     இதுவே போதுமானது முன்பே நபி(சல்) அவர்களுக்கு உமர்(ரலி) மூலம் அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் கன்னிப்பெண்ணான ஆயிசா(ரலி) அவர்களை நபி(சல்) அவர்கள் மணம் முடித்து இருந்த காலத்தில்லே நபி(சல்) அவர்கள் இதை ஏற்கவில்லை. 35 வயது உள்ள ஜைனப்(ரலி) அவர்களுக்காக வஹியில் விளையாடியதாக உளறுபவர்தான் இந்த கட்டுரை ஆசிரியர் 
ஒரு கேள்வி?
 
ஜைது (ரலி) குறித்து ஒரு கருத்தை பதிவு செய்திருக்கிறார். முஹம்மது(சல்) ஜைனப்(ரலி) திருமணம் கிபி 629 நடைபெற்றதாக கூறுகிறார். வளர்ப்பு பிள்ளை முறை மதீனா வந்து இரண்டு ஆண்டுகளில் தடைசெய்யப்பட்டதாக கூறுகிறார். அவரது கட்டுரை "பொருந்தா உறவும் வேதவெளிபாடும்" ல் பின் வருமாறு கூறுகிறார்





    அதாவது கிபி 624ல் (ஹிஜ்ரத் செய்து இரண்டு ஆண்டுகள்) தத்தெடுத்தல் அல்லாஹ்வால் தடை செய்யப்படுகிறது என்று கதாசிரியர் கூறுகிறார். ஆக பின் வரும் கேள்வியை ஏன் முன்வைத்தார் தனது 9ம் தொடரில் பின் வருமாறு கேள்வி எழுப்புகிறார்.....



      ஆக தத்தெடுத்தல் தடை செய்யப்பட்டதற்கும் நபி(சல்) - ஜைனப்(ரலி) திருமணத்திற்கும் இடையில் இவரது கருத்துபடி 5 ஆண்டுகள்.....இவரது காழ்புணர்ச்சி கண்ணை மறைத்துவிட்டது போலும்......அல்லாஹ்வே அனைத்தும் அறிந்தவன்.

No comments:

Post a Comment