பக்கங்கள் செல்ல

cross tab2

Saturday, February 14, 2026

1 பேதுருவை எழுதியது சில்வானுவா?????

 بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم

       
    நாம் சென்ற கட்டுரையை, 1 பேதுருவை எழுதியது பேதுருவின் உதவியாளரில் ஒருவர் என்ற அனுமானக் கற்பனை குறித்து சில கேள்விகளை முன்வைத்து அதனை முடித்திருந்தோம். அந்த அனுமானமே இந்த நிருபம் பேதுருவால் எழுதப்பட்டது என்ற அந்த நிருபத்தின் சுயசாட்சியை தூக்கி நிறுத்தும் தூணாக உள்ளது. அந்த அனுமானத்தின் அவசியத்தை “இந்த நிருபம் பேதுருவால்தான் எழுதப்பட்டது” என்று வாதிட்டு வரும் அறிஞர் ஒருவரின் வார்த்தைகளில் இருந்து பார்ப்போம்.
          For anyone reading the Epistle in the original language the most obvious difficulty in the way of accepting the Petrine authorship is the character of the Greek-the good style and extensive literary vocabulary. Is it likely that a Galilean fisherman, who at the beginning of the apostolic mission could be described as 'unlearned and ignorant' (Acts 4.13), would ever have managed to write some of the best Greek in the New Testament? But this difficulty disappears on the assumption that Silvanus (5.12) played the part of a responsible secretary rather than a mere scribe writing to dictation (P.No,13-14, Introduction, I & II Peter And Jude: Introduction And Commentary by C.E.B. Cranfield (Torch Bible Commentaries))

     மூல மொழியில் இந்த நிருபத்தைப் படிக்கும் எவருக்கும், பேதுருவை எழுத்தாளராக ஏற்றுக்கொள்வதில் இருக்கும் மிகவும் வெளிப்படையான சிரமம் அதன கிரேக்க நயம், அதன் நல்ல நடை மற்றும் விரிவான இலக்கியச் சொற்களஞ்சியம்  ஆகும். அப்போஸ்தலிக்கப் பணியின் தொடக்கத்தில் 'கல்வியறிவற்றவர் மற்றும் அறிவிலி' (அப்போஸ்தலர் 4.13) என்று விவரிக்கப்படக்கூடிய ஒரு கலிலேய மீனவர், புதிய ஏற்பாட்டில் சிறந்த கிரேக்க மொழியில் சிலவற்றை எப்போதாவது எழுதியிருக்க சாத்தியமா? ஆனால் சில்வானு (5.12) சொல்ல சொல்ல எழுதும் வெறும் எழுத்தாளராக அல்லாமல், ஒரு பொறுப்பான காரியதரிசியாக கடமையாற்றினார் என்ற அனுமானத்தின் அடிப்படையில் இந்தச் சிரமம் மறைந்துவிடும். (P.No,13-14, Introduction, I & II Peter And Jude: Introduction And Commentary by C.E.B. Cranfield (Torch Bible Commentaries)) 

அதாவது C.E.B. Cranfield அவர்களது கருத்தின் படி 1 பேதுருவின் கிரேக்க மொழியியல் நடை என்பது அப்போஸ்தலர் 4.13 நேர் எதிரானது. எனவே இந்த சிக்கலை அல்லது சிரமத்தை சரிகெட்ட இருக்கும் ஒரே வழி இந்த நிருபத்தை இயற்றியது சில்வானுதான், அதுவும் பேதுரு சொல்ல சொல்ல எழுதாமல், அதை திரம்பட எழுதிய காரியதரிசியாக சில்வானு இருந்தார் என்று அனுமானிக்க வேண்டுமாம். எனவே இந்த அனுமானத்திற்கு அடிப்படையாய் அமைந்த 1 பேதுருவின் வசனம் குறித்த மொழியியல் விமர்சனத்தை கிறித்தவ வல்லுனர்களின் பார்வையில் இங்கு முன்வைப்போம் இன் ஷா அல்லாஹ். 

1 பேதுரு 5:12ன் மொழியியல் ஆய்வு:

        1 பேதுருவை இயற்றியது சில்வானுதான் என்ற கருத்தை முன்வைக்கும் புதிய ஏற்பாட்டு அறிஞர்கள் தங்களது வாதத்திற்கு பிரதானமாக முன்வைக்கும் ஆதாரமாக இருப்பது 1 பேதுரு நிருபத்தின் 5:12 வசனமாகும். இந்த வசனம் உண்மையில் அதைத்தான் கூறுகிறதா என்பதை பார்ப்போம்.

Διὰ Σιλουανοῦ ὑμῖν τοῦ πιστοῦ ἀδελφοῦ, ὡς λογίζομαι, δι’ ὀλίγων ἔγραψα, παρακαλῶν καὶ ἐπιμαρτυρῶν ταύτην εἶναι ἀληθῆ χάριν τοῦ θεοῦ• εἰς ἣν στῆτε.

உங்களுக்குப் புத்திசொல்லும்படிக்கும், நீங்கள் நிலைகொண்டு நிற்கிற கிருபை தேவனுடைய மெய்யான கிருபைதானென்று சாட்சியிடும்படிக்கும், நான் சுருக்கமாய் உங்களுக்கு எழுதி, எனக்குத் தோன்றுகிறபடி உண்மையுள்ள சகோதரனாகிய சில்வானுவின் கையிலே கொடுத்து அனுப்பியிருக்கிறேன். 

        “1 பேதுருவை இயற்றியது சில்வானுதான்” என்ற கருத்தை முன்வைக்கும் புதிய ஏற்பாட்டு அறிஞர்கள், மேலே இடம் பெறும் Διὰ Σιλουανοῦ……. ἔγραψα, என்ற வார்த்தைகளை மொழிபெயர்க்கும் போது, இது சில்வானு மூலமாக எழுதி அனுப்பியது என்ற பொருளை தருவதாய் வாதிக்கின்றனர். உண்மையில் மேற்குறிபிட்ட படியான வார்த்தை கோர்வை எப்படி அன்றைய காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை அதே காலப்பகுதியில் (தோராயமாக கி.பி. 110 ல்) எழுதப்பட்ட இக்னேஷியஸின் கடிதங்கள், பாலிகார்ப்பின் கடிதம் மற்றும் PFay 123 பாப்பிரஸை கொண்டு ஆய்வு செய்து   பாம் பீச் அட்லாண்டிக் பல்கலைகழகத்தின் புதிய ஏற்பாட்டு பேராசிரியாரன E. Randolph Richards ((https://www.pba.edu/directory/randy-richards/)) பின்வருமாறு முடிவினை முன்வைக்கிறார். 

To summarize the argument that the formula γράφω διά τινος was used solely to identify the letter-carrier and never to identify the secretary, let us note four points.

First, although references identifying a secretary are found in Greco-Roman letters, we have found no examples of the formula γράφω διά τινος- (meaning- writing through someone) being used to identify the secretary. There is an adequate number of examples of this formula. The formula seems always to be identifying the letter-carrier. 

Second, the best two examples we have of this formula come from literature that is quite analogous to the NT and clearly demonstrate that the formula γράφω διά τινος 42  was meant to identify the letter-carrier and not the secretary. The remaining secular papyri support this contention.

Third, the expanded superscription for Romans found in the majority text reads: ".... προς Πωμαιους εγράφη από Κορίνθου δια Φοιβης..." where Phoebe is clearly the carrier and not the secretary. While we would not argue for the historical reliability of the superscription, it is noteworthy that εγράφη - - - δια is use to identify the carrier, not the secretary.

Fourth, a variation of this formula is found in the letter/decree of the Apostolic Council (Acts 15). There we find the text of the letter introduced: "They sent Judas called Barsabbas, and Silas, leading men among the brethren, writing through their hand..."43 The structure and wording is sufficiently different, so that it might not serve as an example of the γράφω διά τινος formula. Nevertheless, the usual interpretation of this phrase is that Judas and Silas were chosen as bearers of the letter to accompany Paul and Barnabas and are commended to the church in Antioch in the manner we have seen as fairly typical for a letter-carrier. ……..

…………However, 1 Pet 5:12 does not address the role of the secretary. While many—perhaps most—commentators now interpret this verse as identifying Silas as the carrier, there are still lingering tendencies among us evangelicals, those defending Petrine authorship of 2 Peter, to “seek water for thirsty souls” here in 1 Pet 5:12. 85 Yet this is a “broken cistern that can hold no water.” (Silvanus was not Peter's Secretary: Theological Bias In Interpreting Διὰ Σιλουανοῦ ἔγραψα Ιν 1 Ρeter 5:12 By E. Randolph Richards )

γράφω διά τινος என்ற (வாக்கிய) அமைப்பு கடிதத்தை எடுத்துச் செல்பவரை அடையாளம் காண மட்டுமே பயன்படுத்தப்பட்டது, காரியதரிசியை அடையாளம் காண ஒருபோதும் பயன்படுத்தப்படவில்லை என்ற வாதத்தை சுருங்கச்சொல்ல நான்கு புள்ளிகளைக் குறிப்பிடுவோம். 
முதலாவதாக, ஒரு காரியதரிசியை அடையாளம் காணும் குறிப்புகள் கிரேக்க-ரோமன் எழுத்துக்களில் காணப்பட்டாலும், செயலாளரை அடையாளம் காண γράφω διά τινος - (பொருள் - யாரோ ஒருவர் மூலமாக எழுதியனுப்புதல்) என்ற (வாக்கிய) அமைப்பு பயன்படுத்தப்பட்டதற்கான எந்த உதாரணங்களையும் நாம் காணவில்லை. இந்த (வாக்கிய) அமைப்பிற்கு போதுமான எண்ணிக்கையிலான எடுத்துக்காட்டுகள் உள்ளன. (வாக்கிய) அமைப்பு எப்போதும் கடிதத்தை எடுத்துச் செல்பவரை அடையாளம் காண்பதாகத் தெரிகிறது.
இரண்டாவதாக, இந்த (வாக்கிய) அமைப்பின் சிறந்த இரண்டு எடுத்துக்காட்டுகள் புதிய ஏற்பாட்டிற்கு மிகவும் ஒத்த இலக்கியங்களிலிருந்து வருகின்றன, மேலும் γράφω διά τινος 42 என்ற (வாக்கிய) அமைப்பு கடிதத்தை எடுத்துச் செல்பவரை அடையாளம் காணவே உருவாக்கப்பட்டது, காரியதரிசியை அல்ல என்பதை தெளிவாக நிரூபிக்கிறது. மீதமுள்ள மதச்சார்பற்ற பாப்பிரஸ் இந்த வாதத்தை ஆதரிக்கிறது.
மூன்றாவதாக, பெரும்பான்மை உரையில் காணப்படும் ரோமர்-இன் விரிவுபடுத்தப்பட்ட மேற்குறிப்பு இவ்வாறு கூறுகிறது: " προς Πωμαιους εγράφη από Κορίνθου δια Φοιβης...".... இங்கு பெபெயா தெளிவாக கடிதத்தை எடுத்துச் செல்பவர், காரியதரிசி அல்ல. மேற்குறிப்பின் வரலாற்று நம்பகத்தன்மைக்காக நாம் வாதிட மாட்டோம் என்றாலும், εγράφη - - - δια என்பது காரியதரிசியை அல்ல, எடுத்துச் செல்பவரையே அடையாளம் காணப் பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நான்காவதாக, இந்த (வாக்கிய) அமைப்பின் ஒரு மாறுபாடு அப்போஸ்தலிக்க கவுன்சிலின் கடிதம்/ஆணையில் காணப்படுகிறது (அப்போஸ்தலர் 15). அங்கு அறிமுகப்படுத்தப்பட்ட கடிதத்தின் வாசகத்தைக் இவ்வாறு காண்கிறோம்: “அவர்கள் யாரென்றால், சகோதரரில் விசேஷித்தவர்களாகிய பர்சபா என்று மறுபேர்கொண்ட யூதாவும் சீலாவுமே. இவர்கள் கையில் அவர்கள் எழுதிக்கொடுத்தனுப்பின நிருபமாவது…..” இது γράφω διά τινος என்ற (வாக்கிய) அமைப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டாக இல்லாமல் இருப்பதற்கு போதிய அளவு, அமைப்பு மற்றும் வார்த்தைகளில் வேறுபட்டுள்ளது. ஆயினும்கூட, இந்த சொற்றொடரின் வழக்கமான விளக்கம் என்னவென்றால், பவுல் மற்றும் பர்னபாவுடன் சேர்ந்து நிருபத்தைத் தாங்குபவர்களாக யூதாவும் சீலாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் மிகவும் பொதுவானதாக நாம் கண்ட விதத்தில், அந்தியோகியாவில் உள்ள தேவாலயத்திற்கு கடிதம் எடுத்துச் செல்பவராக அங்கிகரிக்கப்படுகிறார்கள்.
…………….…………ஆனால், 1 பேதுரு 5:12 செயலாளரின் பங்கைக் குறிப்பிடவில்லை. தற்காலத்தில் பல - சொல்லப்போனால் பெரும்பாலான- வர்ணனையாளர்கள் இந்த வசனம் சில்வானுவை எடுத்துச் செல்பவராக அடையாளம் காட்டுவதாக விளக்கும் போதும், 1 பேதுரு 5:12-ல் "தாகமுள்ள ஆத்துமாக்களுக்குத் தண்ணீர் தேடும்" போக்குகள், 2 பேதுருவின்,  “பேதுரு ஆசிரியத்துவத்தை” ஆதரிக்கும் நம் சுவிசேஷகர்கள் மத்தியில் இன்னும் நீடிக்கின்றன. ஆனாலும் இது "தண்ணீர் வைக்க முடியாத உடைந்த குடம்." (Silvanus was not Peter's Secretary: Theological Bias In Interpreting Διὰ Σιλουανοῦ ἔγραψα Ιν 1 Ρeter 5:12 By E. Randolph Richards )

        புதிய ஏற்பாட்டு பேராசிரியாரன E. Randolph Richards அவர்களின் ஆய்வினால் பெறப்படும் கருத்தே, சில்வானுவை 1 பேதுருவின் எழுத்தராக ஆக்கத்துடிக்கும் கிறித்தவ அறிஞர்களின் ஆதாரமான 1 பேதுரு 5:12-கு கொடுக்கப்பட்ட சம்மட்டி அடியாகும். 1 பேதுருவின் சமகால கிரேக்க இலக்கிய நடையில் இல்லாத விசித்தித்திர பொருளை 5:12 வசனத்திற்கு இவர்கள் கொடுக்க நினைப்பது எவ்வளவு பரிதாபத்திற்குரியது என்பதை நாம் மேலும் விளக்கத்தேவை இல்லை. போதிய உவமைகளினால், பேராசிரியாரன E. Randolph Richards விளக்கிவிட்டார். 

யார் இந்த சில்வானு? சில்வானு மொழி வல்லுனர் என்று புதிய ஏற்பாட்டில் எங்குள்ளது:

         சில்வானுவை, பேதுருவின் கருத்துகளுக்கு உருவம் கொடுத்து 1 பேதுருவை இயற்றிய எழுத்தர்/காரியதரிசி என்பதற்கு பின்வரும் வசனங்களை முன்வைக்கின்றனர்.  

          அப்பொழுது அவன் தீபங்களைக் கொண்டுவரச்சொல்லி, உள்ளே ஓடி, நடுநடுங்கி, பவுலுக்கும் சீலாவுக்கும் முன்பாக விழுந்து,………. சிறைச்சாலைக்காரன் பவுலுக்கு இந்த வார்த்தைகளை அறிவித்து: உங்களை விடுதலையாக்கும்படிக்கு அதிகாரிகள் கட்டளை அனுப்பினார்கள்; ஆகையால் நீங்கள் இப்பொழுது புறப்பட்டுச் சமாதானத்துடனே போங்கள் என்றான். அதற்குப் பவுல்: ரோமராகிய எங்களை அவர்கள் நியாயம் விசாரியாமல், வெளியரங்கமாய் அடித்து, சிறைச்சாலையிலே போட்டார்கள்; இப்பொழுது இரகசியமாய் எங்களை விடுதலையாக்குகிறார்களோ? அப்படியல்ல, அவர்களே வந்து, எங்களை வெளியே அழைத்து அனுப்பி விடட்டும் என்றான். (Acts 16:29-37)

      அப்பொழுது தங்களில் சிலரைத் தெரிந்துகொண்டு பவுலோடும் பர்னபாவோடும் அந்தியோகியாவுக்கு அனுப்புகிறது அப்போஸ்தலருக்கும் மூப்பருக்கும் சபையாரெல்லாருக்கும் நலமாகக்கண்டது. அவர்கள் யாரென்றால், சகோதரரில் விசேஷித்தவர்களாகிய பர்சபா என்று மறுபேர்கொண்ட யூதாவும் சீலாவுமே. இவர்கள் கையில் அவர்கள் எழுதிக்கொடுத்தனுப்பின நிருபமாவது: அப்போஸ்தலரும் மூப்பரும் சகோதரருமாகிய நாங்கள் அந்தியோகியாவிலும் சீரியாவிலும் சிலிசியாவிலும் இருக்கும் புறஜாதியாராகிய சகோதரருக்கு வாழ்த்துதல் சொல்லி எழுதிய நிருபம் என்னவென்றால்: (Acts 15:22-23)

    அந்தப்படியே யூதாவையும் சீலாவையும் அனுப்பியிருக்கிறோம். அவர்களும் இவைகளை வாய்மொழியாக உங்களுக்கு அறிவிப்பார்கள். எவையெனில், விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளுக்கும், இரத்தத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், வேசித்தனத்திற்கும், நீங்கள் விலகியிருக்கவேண்டுமென்பதே. (Acts 15:27 - 28)

   என்னாலும், சில்வானுவினாலும், தீமோத்தேயுவினாலும், உங்களுக்குள்ளே பிரசங்கிக்கப்பட்ட தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்துவும் ஆம் என்றும் அல்ல என்றும் இராமல், ஆம் என்றே இருக்கிறார். (2Cor 1:19) 

        மேற்குறிபிட்ட புதிய ஏற்பாட்டின் வசனங்கள் எதிலும் சில்வானு, மெருகேரிய கிரேக்கத்தில் புலமையுடைய எழுத்தர் என்றில்லை. அவரை மேற்குறிபிட்ட வசனங்கள் அனைத்தும் சபையில் செல்வாக்கு மிக்கவராக காட்டுகிறதே ஒழிய ஒரு எழுத்தராக காட்டவில்லை. மேலும் மார்க், லூக்கா, குளோசியஸ், போன்றவர்களை எழுத்தர்கள் என்று கூறிய ஆரம்ப காலசபைபிதாக்கள், சபைத்தலைவர் எனும் அளவிற்கு தகுதி பெற்றிருந்த சில்வானுவின் எழுத்தாற்றல் குறித்தோ, அவர் 1 பேதுருவை இயற்றிய எழுத்தர் என்றோ எந்த இடத்திலும் கூறவில்லை. சில்வானு போன்று புகழ் பெற்ற சபைத்தலைவரின் இந்த சிறப்பை சரியாக பதிவு செய்யப்பட வேண்டிய இடம் 1 பேதுருவை இயற்றியதில் அவரது பங்களிப்பை பகிரங்கமாக கூறுவதுதான். ஆனால் அத்தகைய குறிப்புக்கள் எதுவும் ஆரம்பகால சபை பிதாக்களின் குறிப்புக்களில் காண முடியவில்லை. ஆரம்பகால சபை பிதாக்களின் குறிப்புக்களில் மயான அமைதி நிலவுகிறது. வரலாற்று ரீதியாக இது ஒரு அடிப்படையும் இல்லாத வாதம் என்பது இதன் மூலம் தெரிகிறது. 

தெசலோனிக்கேயர் நிருபங்களும் கிறித்தவ அறிஞர்களின் இரட்டை நாக்கும் 

        சில்வானுவை எழுத்தராக காட்ட எந்த முகாந்திரமுமே இல்லாத வசனங்களை எல்லாம் தூக்கிவந்து புதிய ஏற்பாட்டு அறிஞர்களில் ஒரு சாரார் 1பேதுருவை இயற்றியது சில்வானுதான் என்று வாதிடுகின்றனர். ஆனால் சில்வானுவை துணை எழுத்தராக பகிரங்கமாக அறிவிக்கும் புதிய ஏற்பாட்டின் 1ம் மற்றும் 2ம் தெசலோனிக்கேயர் நிருபங்களின் பின்வரும் வசனங்களுக்கு எப்படி எல்லாம் கிறித்தவ புதிய ஏற்பாட்டு அறிஞர்கள் விளக்கம் கொடுக்கிறார்கள் என்பதை காணலாம்.

பவுலும், சில்வானும், தீமோத்தேயும், பிதாவாகிய தேவனுக்குள்ளும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள்ளும் இருக்கிற தெசலோனிக்கேயர் சபைக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. (1Thess 1:1)

பவுலும், சில்வானும், தீமோத்தேயும், நம்முடைய பிதாவாகிய தேவனுக்குள்ளும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள்ளும் இருக்கிற தெசலோனிக்கேயர் சபைக்கு எழுதுகிறதாவது: (2Thess 1:1)

I & II Thessalonians, A Commentary By M.Eugene Boring,

When Paul writes 1 Thessalonians, his authority as an apostle has not yet been challenged in the churches of the Aegean mission. He is no individualist, sensitive about placing himself in a special category. Paul can emphasize the corporate mission shared by his coworkers and the congregations they are establishing without detriment to his apostolic status. The repeated we-form is an indication that Paul’s Letters, thought direct and personal, are also intended to represent the Pauline mission, the missionary team, and the supporting churches in which the mission is integrated. The letter is not composed by a committee chaired by Paul. He includes his coworkers in the greeting as cosenders, not as coauthors. Paul writes (= dictates) the letter; he is the responsible author. (The Senders, 1:1 Prescript (Greeting), Commentary On 1 Thessalonians, The New Testament Library, Published By Westminster John Knox Press)

பவுல் 1 தெசலோனிக்கேயருக்கு நிருபத்தை எழுதும்போது, ஏஜியன் மிஷன் சபைகளில் ஒரு அப்போஸ்தலராக அவரது அதிகாரம் இன்னும் சவாலுக்கு உள்ளாகவில்லை. அவர் தன்னை சிறப்பான பிரிவினராக காட்டிக்கொள்ள அவர் சுயபற்றுவாதி அல்ல. பவுல் தனது அப்போஸ்தலிக்க அந்தஸ்துக்கு தீங்கு விளைவிக்காமல், தனது சக ஊழியர்களாலும் அவர்கள் நிறுவும் சபைகளாலும் பகிர்ந்து கொள்ளப்படும் கூட்டுப் பணியை வலியுறுத்த முடிந்தது. "நாங்கள்" என்ற வடிவம் மீண்டும் மீண்டும் வருவது, பவுலின் கடிதங்கள், நேரடியாகவும் தனிப்பட்ட முறையிலும் சிந்திக்கப்பட்டு, பவுலின் மிஷன், மிஷனரி குழு மற்றும் மிஷன் ஒருங்கிணைக்கப்பட்ட துணை தேவாலயங்களைக் குறிக்கும் நோக்கம் கொண்டவை என்பதற்கான அறிகுறியாகும். . இந்தக் கடிதம் பவுலின் தலைமையிலான குழுவால் இயற்றப்படவில்லை. அவர் தனது சக ஊழியர்களை வாழ்த்துக்களில் இணை ஆசிரியர்களாக அல்ல, இணை அனுப்புநர்களாகவே சேர்க்கிறார். பவுல் கடிதத்தை எழுதுகிறார் என்பது எழுத சொல்கிறார்; அவர்தான் பொறுப்பு ஆசிரியர் ஆவார். (The Senders, 1:1 Prescript (Greeting), Commentary On 1 Thessalonians, The New Testament Library, Published By Westminster John Knox Press)

The New international commentary on the New Testament
        Paul is designated neither as “an apostle of Christ Jesus” nor as “a servant of Christ.” The three of them are simply named as co-authors, jointly speaking into the situation in Thessalonica, even though the letter itself is dictated by Paul. (Authorship and Date, Commentary On 1 Thessalonians, The First and Second Letters to the Thessalonians by  Gordon D. Fee.)
பவுல் "கிறிஸ்து இயேசுவின் அப்போஸ்தலன்" என்றோ அல்லது "கிறிஸ்துவின் ஊழியன்" என்றோ நியமிக்கப்படவில்லை. இந்த நிருபம் பவுலால் எழுத சொல்லப்பட்டாலும்  , அவர்கள் மூவரும் இணை ஆசிரியர்கள் என்று மட்டுமே பெயரிடப்பட்டுள்ளனர், தெசலோனிக்கேயின் சூழ்நிலையைப் பற்றி கூட்டாகப் பேசுகிறார்கள். 

An Introduction to the New Testament—Second Edition by D. A. Carson and Douglas J. Moo 

As we have seen, both letters name Paul, Silas, and Timothy as the authors of the letters. Yet the letters are traditionally ascribed to Paul alone. Is this fair? Many scholars answer no………The inclusion of more than one person in the salutation of a letter was most unusual in antiquity; readers would probably have read the plural “we” as a genuine indication of authorship. However, there is reason to pause before drawing this conclusion. First person singular references do pop up in both letters (1 Thess. 2:18; 3:5; 5:27; 2 Thess. 2:5; 3:17). These would be most unusual if the letters had been genuinely co-authored. The first person plural may, then, be no more than a literary device, an “authorial plural” appropriate to the parenetic form of the letters. Perhaps, however, a mediating solution is the best. Paul’s mention of Silas and Timothy, because of their close associations with the Thessalonians, must be taken seriously. But Paul is the primary author. It is his voice that we hear in the letters, and their ascription to the apostle is not, therefore, unjustified. (P.No.535)

நாம் பார்த்தபடி, இரண்டு நிருபங்களும் பவுல், சீலா மற்றும் தீமோத்தேயு ஆகியோரை நிருபங்களின் ஆசிரியர்கள் என்று குறிப்பிடுகின்றன. இருப்பினும், பாரம்பரியமாக இந்தக் நிருபங்கள் பவுலுக்கு மட்டுமே சொந்தமானதாகக் கூறப்படுகிறது. இது நியாயமா? பல அறிஞர்கள் இல்லை என்று பதிலளிக்கின்றனர்……ஒரு நிருபத்தின் வணக்கத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களைச் சேர்ப்பது பழங்காலத்தில் மிகவும் அசாதாரணமானது; வாசகர்கள் "நாங்கள்" என்ற பன்மையை ஆசிரியரின் உண்மையான குறியீடாக படித்திருப்பார்கள். இருப்பினும், இந்த முடிவுக்கு வருவதற்கு முன் சிறிது நேரம் நிதானிப்பதற்கு காரணம் உள்ளது. இரண்டு நிருபத்திலும் முதல் நபர் ஒருமை குறிப்புகள் உதிக்கின்றன (1 தெச. 2:18; 3:5; 5:27; 2 தெச. 2:5; 3:17). நிருபங்கள் உண்மையிலேயே இணைந்து எழுதப்பட்டிருந்தால் இவை மிகவும் அசாதாரணமானதாக இருக்கும். எனவே, முதல் நபர் பன்மை என்பது ஒரு இலக்கிய சாதனமாக மட்டுமே இருக்க முடியாது, அவை நிருபங்களின் அறிவுரை வழங்கும் தனமைக்கு பொருத்தமான "ஆசிரியர் பன்மை". இருப்பினும், சாத்தியமானால், ஒரு நடுனிலையான தீர்வே சிறந்தது. சீலாவும் தீமோத்தேயுவும் தெசலோனிக்கேயருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததால், பவுல் அவர்களைப் பற்றிக் குறிப்பிட்டதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால் பவுல் முதன்மை ஆசிரியர் ஆவார். இந்த நிருபங்களில் நாம் கேட்கும் குரல் அவருடையது, எனவே, அவர்கள் அப்போஸ்தலருக்குரியதாக கூறுவது நியாயமற்றது அல்ல.

    கிறித்தவ அறிஞர்களில் பெரும் பகுதியினரின் கருத்து சுருக்கமாக,  1ம் மற்றும் 2ம் தெசலோனிக்கேயர் நிருபங்களின் முதல் வசனங்கள், சில்வானுவை துணை எழுத்தர் என்று நேரடியாக கூறினாலும், 1ம் தெசலோனிக்கேயர் 2:1-12, 2ம் தெசலோனிக்கேயர் 3:10, போன்ற வசனங்களில் “நாங்கள்” என்று கூறி அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தாலும் இக்கடிதங்கள் பவுலின் நேரடி கடிதம். இதில் 1ம் தெசலோனிக்கேயர் கிறித்தவ அறிஞர்கள் மத்தியில் எந்த சர்ச்சையும் இல்லாத கடிதம் வேறு. ஆனால் 1 பேதுருவில் இத்தகைய துணை எழுத்தர்களின் கோரல் இல்லை, “நாங்கள்” என்ற கும்பல் கோஷம் இல்லை, ஆயினும் அது துணை எழுத்தர்களால் எழுதப்பட்ட கடிதம். இதுதான் கிறித்தவ அறிஞர்கள் இரட்டை வேஷம் போடும் அவல நிலையை படம் பிடித்து காட்டுகிறது. 

  நாம் எப்போதும் இவர்களது முரண்களை புதிய ஏற்பாட்டில் இருக்கும் புத்தகங்களில் இருக்கும் குளறுபடிகளை சுட்டிகாட்டும் குறிகாட்டிகவே எடுத்துக்கொள்வோம். நாம் பகுப்பாய்வின் மூலம் அதன் உண்மைதன்மையை வெளிகொணருவோம். அந்த அடிப்படையில் இந்த கடிதத்தின் எழுத்து நடையின் ஆராய்ச்சியை தேடினோம்..

எழுத்தரை நிர்ணயம் செய்யும் ஆய்வு முறைமை: Stylometry

   1 பேதுருவை இயற்றியது சில்வானுதான் என்பதற்கு ஆதாரமாய் வைக்கப்பட்ட வசனம் 5:12 அதற்கான பொருளை பெற்றிருக்கவில்லை. அதுபோல் அதற்கு வரலாற்று தரவுகளும் இல்லை. எனவே  அதன் எழுத்தர் சில்வானுதான் என்பதை உறுதி செய்ய எழுத்தரை நிர்ணயம் செய்யும் அறிவியல் ஆய்வு முறைமையை கொண்டு சில்வானு எழுத்தர் என்று கூறப்படும் 1 பேதுருவையும் 1 தெசலோனிக்கேயரையும் ஒப்பீடு செய்த எழுத்தியல் நடை அறிஞர்களின் ஆய்வுகள் மற்றும் கூற்றை தேடினோம். அந்த ஆய்வு முடிவுகளை முன்வைப்பதற்கு முன்பாக எழுத்தியல் ஆய்வு- Stylometry குறித்து பார்ப்போம்

Stylometry என்றால் என்ன?

        ஒரு எழுத்தாளரின் எழுத்து பாணியை அறிவியல், புள்ளிவிவர முறையில் ஆய்வு செய்து அந்த எழுத்தை யார் எழுதியது என்பதை கண்டுபிடிக்க உதவும் ஒரு ஆய்வு துறை. ஒரு எழுத்தாளரின் அறியாமல் உருவாகும் மொழி வழக்கங்களை கணக்கிட்டு ஆராய்கிறது. அடிக்கடி வரும் சொற்கள், அரிய சொற்கள், சொல் வளம் இலக்கணம் வாக்கிய நீளம், நிறுத்தக்குறி பயன்பாடு, வினைச்சொல் அமைப்பு, எழுத்தர் அறியாமல் பயன்படுத்தும் ஆனால், மேலும் போன்ற சொற்களின் பயன்பாடு, இரண்டு /மூன்று சொற்களை இணைத்து பயன்படுத்துதல், வாக்கிய ஓட்டம் போன்றவற்றை கொண்டு ஒரே எழுத்தாளரின் எழுத்துகளா? பெயரில்லா நூலை யார் எழுதியிருக்கலாம்? ஒரே புத்தகத்தில் பகுதிகள் வெவ்வேறு எழுத்தாளர்களால் எழுதப்பட்டதா? பழைய கிரந்தங்களில் உண்மையான / போலியாக சேர்க்கப்பட்ட பகுதிகள் உள்ளதா? போன்றவற்றை நிர்ணயம் செய்யும் அறிவியல் முறைமைதான் Stylometry. 

Katarina Laken அவர்களது ஆய்வு

    மேற்கூறிய முறைமையை கையாண்டு, பவுலிய கடிதங்களை Katarina Laken என்ற சாண்டியாகோ பல்கலை மாணவி பகுபாய்வு செய்து அதனை An Authorship Study on the Letters of Saint Paul  என்ற ஆய்விதழாக வெளியிட்டுள்ளார். பிலேமோன் கடிதம் சிறிதாக இருந்ததால் அதனை மட்டும் தவிர்த்துள்ளார். அதில் இடம்பெறும் அனைத்து புதிய ஏற்பாட்டின் கடிதங்களின் மொழிநடையின் பல கூறுகளை ஆய்வு செய்து வெளியிட்ட வரை கட்டங்கப் படங்களில்(graph) ஒன்று இதோ. இதில் X- அச்சில் இடம் பெறும் மொழியல் கூறுகள் வார்த்தை செழுமை, வார்த்தையின் நீளம், வார்த்தை தேர்வு உள்ளிட்ட பொதுவான மொழியில் கூறுகளை கொண்டுள்ளது. இது எழுத்தாளர் எவ்வாறு வார்த்தைகளை கையாண்டுள்ளார் என்பதை காட்டுகிறது. Y- அச்சு வாக்கிய அமைப்பு, நீளம், சிக்கலான இலக்கண அமைப்பு உள்ளிட்ட மொழியில் கூறுகளை கொண்டுள்ளது. இது எழுத்தாளர் எவ்வாறு வாக்கியங்களை உருவாக்கியுள்ளார் என்பதை காட்டுகிறது
    1 தெசலோனிக்கேயர் பவுலிய கடிதத்தொகுப்பில் சர்ச்சைகளற்ற கடிதங்களின் தொகுப்பான கலாத்தியர், ரோமர், 1 & 2கொரிந்தியர், பிலிப்பியர் ஆகியவற்றின் கூட்டத்தில் இடம்பெற்றிருப்பதை மேலே காணலாம். 1பேதுரு 1 தெசலோனிக்கேயரில் இருந்து வார்த்தை அமைப்பிலும், வாக்கிய அமைப்பிலும் முழுமையாக வேறுபட்டுள்ளதை காட்டுகிறது. இது இரண்டு செய்திகளை நமக்கு உணர்த்துகிறது

👉1 தெசலோனிக்கேயரின் எழுத்தருக்கும் 1 பேதுருவின் எழுத்தருக்கும் எந்த தொடர்பும் இல்லை.

👉1 தெசலோனிக்கேயர் பவுலின் நேரடி எழுத்துக்களாக இப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் அதிகம்.

👉சில்வானு கிரேக்க புலமையுடன் கூடிய கடிதத்தை எழுதும் ஆற்றலுடையவர் என்ற கிறித்தவ அறிஞர்களின் கோரலுக்கு எந்த முகாந்திரத்தையும் வழங்கவில்லை. எனவே 1ம் தெசலோனிக்கேயரின் முதல் வசனம் எவ்விதத்திலும் சில்வானுவை கிரேக்க புலமையுடன் கூடிய எழுத்தர் என்று நிருவ உதவாது என்பதை அறிவியல் எழுத்தியல் பகுப்பாய்வு காட்டுகிறது.

        மேற்குறிபிட்ட அறிவியல் ஆய்வையும் தாண்டி, 1 பேதுருவின் உயரிய கிரேக்க நடைக்கு காரணம் சில்வானுவே என்று வாதிக்கும் Karen H. Jobes இவ்வாறான ஆய்வை செய்துவிட்டு பின்வருமாறு புலம்புவதை காண முடிகிறது. அந்த புலம்பலில் அவர் கண்டறிந்த ஒரு உண்மையையும் கூறுகிறார். இதோ…. 
Being based on an analysis of syntax, the study presented is not sufficient for determining who the author of 1 Peter was, or for concluding that the same author wrote both 1 Peter and 1 Thessalonians, because syntax is shared by all speakers and writers of a given language. The interference in Greek as a second language caused by Semitic syntax could be expected to be similar for all Semitic speakers whose second language was Greek and who had attained equivalent proficiency in the language. It does demonstrate that it is unlikely that the author of 1 Peter was a native speaker of Greek.  (The Syntax of 1 Peter: Just How Good Is the Greek? by Karen H. Jobes Westmont College,  Bulletin for Biblical Research 13.2 (2003) 159- 173)

        Karen H. Jobes 1 பேதுருவை இயற்றியவர் கிரேக்கத்தை தாய்மொழியாக கொண்டவர் அல்ல என்ற உண்மைதான் அது. ஆனால் சில்வானு கிரேக்கத்தை தாய்மொழியாக கொண்ட ரோம யூதர் என்று Acts 16:29-37 கூறுகிறது.   மேலும் இப்படி பாலஸ்தீனம் அல்லாத பகுதியில் வாழ்ந்த யூத மக்கள் குறித்து THE JEWISH ENCYCLOPEDIA பாகம் 6 Hellenism என்ற தலைப்பின் கீழ் முதலாம் நூற்றாண்டின் பைலோவின் கருத்தை பின்வருமாறு கூறுகிறது: The Jews called themselves Palestinians in religion, but Hellenes in language (Philo, "De Congressu  Quserendse Erud." § 8),  அதாவது கி.பி.முதலாம் நூற்றாண்டில் பாலஸ்தீனம் அல்லாத பகுதிகளில் வாழ்ந்த யூதர்கள் தங்களது தாய்மொழியாக கிரேக்கத்தை ஏற்றிருந்தனர் என்கிறார் பைலோ என்பது கவனிக்கத்தக்கது. ஆனால் Karen H. Jobes 1 பேதுருவை இயற்றியர் கிரேக்கத்தை தாய்மொழியாக கொண்டவர் அல்ல என்கிறார். சில்வானு போன்றே பவுலும் கிரேக்கமயமான ரோம யூதர்தான்.  அவரது எழுத்துக்களுடன் 1 பேதுரு பொருந்த வில்லை. அதாவது ரோம யூதரான பவுலின் எழுத்தியல் நடையுடனும்  1 பேதுரு பொருந்த வில்லை.

    Katarina Laken  அவரது ஆய்வில் கிரேக்கமயமான யூதரான பவுலின் கடிதத்தொகுப்பு தனித்து நிற்பது,  Karen H. Jobesன் கருத்துடன் ஒத்தமைந்து இருப்பதை பார்க்க முடிகிறது. வாக்கிய அமைப்பிலும் வார்த்தை பயன்பாட்டிலும் தனித்து நிற்கிறது. இது தெளிவாக 1பேதுருவை இயற்றியது சில்வானு என்ற ரோம யூதர் அல்ல என்பதை காட்டுகிறது. 

 தீராத மொழி பிரச்சனையை தீர்த்த சில்வானு

1 பேதுருவின் மொழியியல் எந்த கிரேக்கத்தை தாய்மொழியாக கொண்ட யூத எழுத்துக்களுடனும் பொருந்தவில்லை. அவரை இணை எழுத்தராக கருதப்படும் 1ம் தெசலோனிக்கேயர்ருடனும் பொருந்தவில்லை. இப்படி தீராத மொழி சிக்கல் இன்று தோன்றியது அல்ல மாறாக இந்த நிருபத்தின் கிரேக்கத்தை அடிப்படையாக கொண்டு கி.பி. 5ம் நூற்றாண்டிலேயே இருந்துள்ளது என்பதை பின்வரும் ஜெரோமின் எழுத்துக்களால் அறிய முடிகிறது:

Also we see that the two epistles attributed to Saint Peter have different styles and turn phrases differently, by which it is discerned that it was sometimes necessary for him to use different interpreters . ( Question 11, Jerome, Letter 120: To Hedibia)

    இந்த தீராத சிக்கலை தீர்க்க கண்டுபிடித்து திணிக்கப்பட்ட யூகம்தான் 1 பேதுருவின் 5:12 கூறப்படும் சில்வானுதான் இதன் எழுத்தர் என்ற கப்ஸா. இந்த யூகம் கிறித்தவ வரலாற்றில் நாம் தேடிய வரை, 18ம் நூற்றாண்டில் ஜான் கில் தனது விளக்கவுரையில் முதன் முதலில் முன்வைத்தார். அதன் பிறகு வந்த F.C.Baur போன்றவர்களின் 1பேதுருவின் மொழியியல் மீதான கடும் விமர்சனம் இந்த யூகத்தை பிடித்து கிறித்தவ உலகத்தை தொங்க வைத்தது. பேபியஸ் போன்றவர்கள் பேதுருவின் எழுத்தர் குறித்து எல்லாம் பட்டியலிட்டவர்கள், சபைத்தலைவராக இருந்த சில்வானுவின் எழுத்தாற்றல் குறித்தும் அவர் பேதுருவிற்கு ஆற்றிய எழுத்துச்சேவை குறித்தும் வாய்த்திறக்காததே இது வெறும் யூகம் என்பதற்கு போதிய சான்று.  நாம் முதலில் கூறிய C.E.B. Cranfield-ந் கருத்தில் இருந்து நமது புரிதல், சில்வானு பேதுருவின் எழுத்தர் என்பதை நிருவ முடியாவிட்டால், பேதுருதான் 1பேதுருவின் கர்த்தா என்பது வெறும் கற்பனையே……அல்லாஹு அஃலம்.


Friday, November 7, 2025

கத்தோலிக்க நிருபங்களின் ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- 1 பேதுரு

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم

கத்தோலிக்க நிருபங்களின் ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- 1 பேதுரு

        நாம் புதிய ஏற்பாட்டின் நம்பகத்தன்மை குறித்தும் அதில் இருக்கும் வரலாற்று குளறுபடிகள் குறித்தும் தொடராக கண்டுவருகிறோம். அந்த வரிசையில் அடுத்ததாக இடம்பெறும் நூல் 1பேதுரு. இந்த தொடரில் ஒவ்வொரு கட்டுரையிலும் புதிய ஏற்பாட்டின் ஒவ்வொரு நூலின் நம்பகத்தன்மை எப்படி அவர்களது கிறித்தவ அறிஞர்களாலேயே கேள்விக்குள்ளாகி கேலிகூத்தாக்கியுள்ளது என்பதை வரிசையாக ஆதாரப்பூர்வமாக விளக்கிவந்துள்ளோம். இந்த கட்டுரையிலும், இந்த புதிய ஏற்பாட்டின் நூலாகிய 1பேதுரு என்ற கத்தோலிக்க நிருபத்தையும் அதே பாணியில் தோழுரிக்க உள்ளோம் இன் ஷா அல்லாஹ்….

1 பேதுரு நிருபம்: எழுத்தர் யார்? கோட்பாடுகளும் குழப்பங்களும்அனுமானங்கள் அடிப்படை ஆதரமல்ல


          நாம் முன்சென்ற பல கட்டுரைகளில் இந்த கருத்தை முன்வைத்துள்ளோம். அதாவது என்றும் உறுதிபடுத்தப்பட்ட உண்மையை விளக்க நமக்கு அனுமானங்களும் கோட்பாடுகளும் தேவை இல்லை. ஒரு நூலின் ஆசிரியர் இவர்தான் என்று அந்த நூலே கோரும்போது, அந்த நூல்களின் உள்ளே இருக்கும் செய்திகள் அதற்கே முரணாக அமையும் போதுதான், அந்த நூலின் ஆசிரியர் யார் என்று உறுதிபடுத்த அனுமானங்களும், கோட்பாடுகளும் தேவை படுகிறது. புதிய ஏற்பாட்டின் ஒவ்வொரு நூலிற்கும் இருக்கும் இந்த அவல நிலை, ஏனைய புதிய ஏற்பாட்டின் நூலை காட்டிலும் ஒரு படி மேலாக இருப்பதை இந்த நிருபத்தின் எழுத்தர் குறித்த கோட்பாடுகளை முன்வைக்கும் அறிஞர்களுக்கு ஏற்பட்டுள்ளதை நாம் வரும் சில கட்டுரைகளில் காண்யிருக்கிறோம். இப்படியாக 1 பேதுருவின் எழுத்தர் குறித்தும் புதிய ஏற்பாட்டு அறிஞர்கள் மத்தியில் உலாவும் பல கோட்பாடுகளில் சிலவற்றை அலசவுள்ளோம்.


    கிறித்தவ புதிய ஏற்பாட்டு அறிஞர்களில் பெரும்பகுதியினர் இந்த நிருபம் பேதுருவின் பெயரில் புனையப்பட்ட ஒரு நிருபம் என்று கூறுகிறார்கள். 1 பேதுரு நிருபம் பேதுருவினால் இயற்றப்பட்டது என்று கூறிக்கொண்டிருக்கையில், ஏன் புதிய ஏற்பாட்டு அறிஞர்கள் மத்தியில் இப்படி ஒரு அவல நிலை இருக்கிறது என்பதை முதலில் பார்ப்போம்.

    இந்த வாதத்தை முன்வைப்பவர்கள், தங்களது விமர்சனத்திற்கு ஆதாரங்களை புதிய ஏற்பாட்டில் இருந்தே முன்வைக்கின்றனர். பின்வரும் விமர்சனத் தொகுப்பை புதிய ஏற்பாட்டு ஆய்வுகள் சங்கத்தின் Studiorum Novi Testamenti Societas  (SNTS- Society for New Testament Studies. ), 2019- ஆசிய பசிபிக் தொடர்புக் குழுவின் மாநாட்டில்,  இறையியல் முனைவர் Manabu Tsuji, Hiroshima University, Japan  அவர்களால் வழங்கப்பட்ட கட்டுரையில் இருந்து தருகிறோம்.(P.No. 208-209, Matthew, Paul, and Others: Asian Perspectives on New Testament Themes, by William Loader, Boris Repschinski, Eric Wong (Eds.), © innsbruck university press, 2019)
        The majority of exegetes regard the name “Peter” as a pseudonym. The main reasons for this view, asserted since the 19th century, are as follows:

1) Why did Peter need to write to churches that he was not familiar with? Peter devoted himself to missionary work mainly with the Jews of Palestine, as the agreement of the Apostolic Council shows (see Gal 2:9). In addition, the contents of 1 Peter were too general to be an answer to the specific questions sent from these churches to Peter.

2) The letter is addressed not to Jewish Christians but to Christians in pagan lands, and the recipients are those who converted from paganism (1:8, 12; 2:10, 12; 4:3). But Peter understands himself as the apostle for the circumcised, sc. Jews (cf. Gal 2:8).

3) The letter reflects the circumstances under which Christianity has already spread not only in Asia Minor but throughout the Roman Empire by the missionaries (1:12; cf. also Eph 4:11; 2 Tim 4:5), who were exposed to objections and persecution (5:9). This indicates that it was written (or at least set) after Peter’s lifetime.

4) The author does not argue about the relationship between Christianity and Judaism, which was quite important to Peter (Gal 2:12, 13; Acts 10:9ff.).

5) The author is familiar with the text of the Old Testament—such literacy cannot be expected from Peter, a Galilean fisher. Besides, its interpretation and comments are very similar to those of Paul; also typical Pauline expressions and terms appear in the letter…..

6) the fact that the author calls himself “fellow elder” (συμπρεσβύτερος) in 5:12 

7) the fact that the author refers to Rome (5:13) as “Babylon.”

        பெரும்பாலான உரையாசிரியர்கள் "பேதுரு" என்ற பெயரை ஒரு புனைப்பெயராகக் கருதுகின்றனர். 19 ஆம் நூற்றாண்டிலிருந்து வலியுறுத்தப்படும் இந்த பார்வைக்கான முக்கிய காரணங்கள் பின்வருமாறு:

1) பேதுரு தனக்குப் பரிச்சயமில்லாத தேவாலயங்களுக்கு ஏன் எழுத வேண்டியிருந்தது? அப்போஸ்தலிக்க கவுன்சிலின் உடன்பாடுகள் காட்டுவது போல், பேதுரு முக்கியமாக பாலஸ்தீன யூதர்களின் மிஷனரி பணிக்காக தன்னை அர்ப்பணித்தார் (கலா 2:9 ஐப் பார்க்கவும்). கூடுதலாக, 1 பேதுருவின் உள்ளடக்கங்கள் இந்த தேவாலயங்களில் இருந்து பீட்டருக்கு அனுப்பப்பட்ட குறிப்பிட்ட கேள்விகளுக்கு மிகவும் பொதுவான பதில்களாக உள்ளது.

2) இந்தக் கடிதம் யூத கிறிஸ்தவர்களுக்கு அல்ல, மாறாக புறமத நாடுகளில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு எழுதப்பட்டுள்ளது, மேலும் பெறுநர்கள் புறமதத்திலிருந்து மதம் மாறியவர்கள் (1:8, 12; 2:10, 12; 4:3). ஆனால் பேதுரு தன்னை விருத்தசேதனம் செய்யப்பட்ட யூதர்களுக்கான அப்போஸ்தலனாகப் புரிந்துகொள்கிறார் (கலா 2:8 ஐப் பார்க்கவும்).

3) இந்தக் கடிதம், மிஷனரிகளால் ஆசியா மைனரில் மட்டுமல்ல, ரோமானியப் பேரரசு முழுவதும் கிறிஸ்தவம் ஏற்கனவே பரவியுள்ள சூழ்நிலைகளைப் பிரதிபலிக்கிறது (1:12; cf. எபே 4:11; 2 தீமோத்தேயு 4:5), ஆட்சேபனைகள் மற்றும் துன்புறுத்தல்களுக்கு ஆளானவர்கள் (5:9). இது பேதுருவின் வாழ்நாளுக்குப் பிறகு எழுதப்பட்டது (அல்லது குறைந்தபட்சம் அமைக்கப்பட்டது) என்பதைக் குறிக்கிறது.

4) கிறிஸ்தவத்திற்கும் யூத மதத்திற்கும் இடையிலான உறவைப் பற்றி ஆசிரியர் வாதிடவில்லை, இது பேதுருவுக்கு மிகவும் அவசியமானதாக இருந்தது (கலா 2:12, 13; அப்போஸ்தலர் 10:9 தொடர்ச்சி).

5) பழைய ஏற்பாட்டின் உரையை ஆசிரியர் நன்கு அறிந்திருக்கிறார் - கலிலிய மீனவரான பேதுருவிடமிருந்து அத்தகைய எழுத்தறிவை எதிர்பார்க்க முடியாது. மேலும், அதன் விளக்கமும் கருத்துகளும் பவுலின் விளக்கங்களுடன் மிகவும் ஒத்தவை; மேலும் வழக்கமான பவுலிய சொல்திறம் மற்றும் சொற்கள் கடிதத்தில் காணப்படுகின்றன…

6) 5:12 இல் ஆசிரியர் தன்னை "இணை மூப்பர்" (συμπρεσβύτερος) என்று அழைத்துக் கொள்வது..

7) ஆசிரியர் ரோமை (5:13) "பாபிலோன்" என்று குறிப்பிடுவது.

    இந்த நிருபம் பேதுருவின் பெயரில் இட்டுகட்டி புனையப்பட்டது என்று விமர்சிக்கும் புதிய ஏற்பாட்டின் வல்லுனர்களில் Raymond E. Brown, Paul Achtemeier , John E. C. O’Neill , Ernest Best ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். மேற்குறிபிட்ட விமர்சனங்களுக்கு பதிலளிக்க புறப்பட்ட புதிய ஏற்பாட்டு அறிஞர்களின் ஒருசாராரின் ஆதாரமற்ற அனுமானங்களின் சிறுதொகுப்பு இதோ.

 1) 1 பேதுருவை பேதுருவே தனது கைப்பட எழுதினார்:

இந்த கருத்துதான் கி.பி.19ம் நூற்றாண்டு வரை கிறித்தவ உலகில் நிலவிவந்தது. இந்த கருத்தை முன்வைக்கும் அறிஞர்களை பொறுத்தவரையில் 1 பேதுருவை இயற்றியது பேதுரு என்று அந்த நிருபம் கூறுவது பிரதான ஆதாரமாகும். 

    இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பேதுரு, பொந்து, கலாத்தியா, கப்பத்தோக்கியா, ஆசியா, பித்தினியா தேசங்களிலே சிதறியிருக்கிறவர்களில், பிதாவாகிய தேவனுடைய முன்னறிவின்படியே, ஆவியானவரின் பரிசுத்தமாக்குதலினாலே, கீழ்ப்படிதலுக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய இரத்தந்தெளிக்கப்படுதலுக்கும் தெரிந்துகொள்ளப்பட்ட பரதேசிகளுக்கு எழுதுகிறதாவது: கிருபையும் சமாதானமும் உங்களுக்குப் பெருகக்கடவது. (1 பேதுரு 1:1-2) 

அடுத்ததாக ஏசுவின் பாடுகளுக்கு தன்னை சாட்சியாக கூறுகிறார் இந்த நிருபத்தின் ஆசிரியர் என்று கூறப்படும் பேதுரு.

    உங்களிலுள்ள மூப்பருக்கு உடன்மூப்பனும், கிறிஸ்துவின் பாடுகளுக்குச் சாட்சியும், இனி வெளிப்படும் மகிமைக்குப் பங்காளியுமாயிருக்கிற நான் புத்திசொல்லுகிறது என்னவென்றால் (1 பேதுரு 5:1).

மேற்குறிபிட்ட இருவசனங்களையும் முன்னிறுத்தி புதிய ஏற்பாட்டின் அறிஞர்களில் ஒரு சாரார் இந்த நிருபத்தை இயற்றியவர் இயேசுவின் அப்போஸ்தலர் பேதுருதான் என்று வாதிக்கிறார்கள். இந்த கருத்தை முன்னிறுத்தும் புதிய ஏற்பாட்டின் அறிஞர்களில் Myers, I. Howard Marshall Marshall, Wayne Grudem, D.A.Carson and Douglas J.Moo, F. F. Bruce, ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். ஆனால் இவர்களினால், இந்த நிருபம் பேதுருவின் பெயரில் புனையப்பட்டது என்று கூறுவோரின் குற்றச்சாட்டை முழுமையாக எதிர்கொள்ள முடியவில்லை. பேதுருவின் வேறு எழுத்தாக்கங்கள் எதுவும் நமக்கு ஆதாரப்பூர்வமானதாக கிடைக்காததால், இந்த நிருபம் பேதுரு எழுதியதுதான் என்பதை உரையின் நடையை ஒப்பிட்டு உறுதி படுத்த இயல வில்லை. இத்தகைய அவல நிலை இருப்பதால் பின்வரும் அனுமானங்களை சேர்த்து இருக்கும் ஓட்டைகளை அடைக்க முற்பட்டுள்ளனர். ஆனால் அதுவும் குழப்பத்திலேயே முடிந்துள்ளது.

1. அ) 1 பேதுரு, பேதுருவின் எழுத்தரினால் எழுதப்பட்டது:

புதிய ஏற்பாட்டின் அறிஞர்களில் ஒரு பிரிவினர் 1 பேதுரு,  பேதுருவின் எழுத்தரால் எழுதப்பட்டது என்று கூறுகிறார்கள். அதற்கு மூல காரணமாய் அமைந்திருப்பது 1 பேதுருவின் மெருகூட்டப்பட்ட கிரேக்கம். பேதுருவின் கல்விப்புலமை குறித்து புதிய ஏற்பாடு பின்வருமாறு சாட்சி பகர்கிறது.

    பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு, அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதைமையுள்ளவர்களென்றும் அறிந்தபடியினால் ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவுடனேகூட இருந்தவர்களென்றும் அறிந்துகொண்டார்கள்.(அப்போஸ்தல நடபடிகள் 4:13)

எனவே மேற்குறிபிட்ட ஆதாரத்தை எதிர்கொள்ள கிறித்தவ புதிய ஏற்பாட்டு அறிஞர்களில் ஒரு சாரார் 1 பேதுருவை இயற்றியது பேதுருவின் எழுத்தர்தான். அந்த கூட்டத்திலும் ஒரு பிரிவினர் 1 பேதுருவை இயற்றியது சில்வானு என்று கூறுகிறார்கள். அதற்கு ஆதாரமாய் பின்வரும் வசனத்தை முன்வைக்கின்றனர்.

உங்களுக்குப் புத்திசொல்லும்படிக்கும், நீங்கள் நிலைகொண்டு நிற்கிற கிருபை தேவனுடைய மெய்யான கிருபைதானென்று சாட்சியிடும்படிக்கும், நான் சுருக்கமாய் உங்களுக்கு எழுதி, எனக்குத் தோன்றுகிறபடி உண்மையுள்ள சகோதரனாகிய சில்வானுவின் கையிலே கொடுத்து அனுப்பியிருக்கிறேன். (1 பேதுரு 5:12)

1 பேதுருவை இயற்றியது பேதுருவின் எழுத்தர் என்று வாதிப்பவர்களில் இருக்கும் மற்றொரு பிரிவினர் 1 பேதுருவை இயற்றியது மாற்க் என்று வாதிக்கிறார்கள். மேற்குறிபிட்ட வசனத்தில் சில்வானு வெறும் கடிதத்தை கொண்டு சென்றவர்தான், பேதுருவின் உண்மையான எழுத்தர் மாற்க்தான் என்று வாதிக்கிறார்கள். அதற்கு இவர்கள் முன்வைக்கும் ஆதார வசனம்

உங்களுடனேகூடத் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிற பாபிலோனிலுள்ள சபையும், என் குமாரனாகிய மாற்கும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். (1 பேதுரு 5:13)

இங்கு மாற்க்-ஐ, பேதுரு குமாரன் என்று அழைப்பது அவருடனான நெருக்கத்தை காட்டுவதால் 1 பேதுருவை இயற்றியது மாற்குதான் என்று அனுமானிக்கிறார்கள். இப்படி 1 பேதுருவை இயற்றியது பேதுருவும் அவரது எழுத்தரும்தான் என்று வாதிக்கும் அறிஞர்கள் மற்றும் அவர்களது கருத்துக்களின் பட்டியலை காண்போம்.

 
வ.
 எண்
அறிஞர் கருத்து / வாதம் எழுதப்பட்டதாக கருதும் காலம் நூல்
1. F. F. Bruce  1 பேதுரு இயல்பாகவே பேதுருவின் வாழ்க்கை மற்றும் இறையியலுடன் பொருந்துகிறது; பேதுருவின் ஆக்கம் என்பதை மறுக்க எந்த வலுவான காரணத்தையும் காணவில்லை. பேதுருவின் உதவியாளர் சில்வானு நிருபத்தின் மொழிநடையின் காரணம். 63 - 64 AD1)The New Testament Documents: Are They Reliable?

2)The Canon of Scripture 

2. I. Howard Marshall பேதுரு எழுதியது நம்பத்தகுந்தது.  பேதுரு  சில்வானுவை எழுத்தராக பயன்படுத்தியிருக்கலாம்.  Early 60s AD 1)1 Peter  (IVP Commentary)

2)New Testament Theology 

3. Donald Guthrie  பாரம்பரியமாக கூறப்படும் பேதுருவே ஆசிரியர் ; எழுத்தர்  சில்வானு மற்றும் கிரேக்க சூழலைப் முன்வைப்பதன் மூலம் மொழியியல் வேறுபாடுகளை விளக்குகிறார். ஆனால் பண்டைய மரபுகள் மாற்கை பேதுருவின் விரிவுரையாளராக கூறுகிறது என்று கூறுகிறார். Early 60s AD New Testament Introduction (rev. ed., 1990) 
4. John R. W. Stott  பேதுருவை உண்மையான ஆசிரியராக எடுத்துக்கொள்கிறார்; கடிதத்தின் தனிப்பட்ட தொனியையும் அப்போஸ்தலிக்க அதிகாரத்தையும் ஏற்கிறார். பேதுருவின் அதிகாரம், கெடாமல் சில்வானு இந்த நிருபத்தை இயற்றி இருக்கலாம் Early 60s AD The Message of 1 Peter (BST Series) 
5. Thomas R. Schreiner  பேதுருவின் எழுத்துத்துவத்தை ஏற்கிறார்; சில்வானுவின் உதவி மற்றும் பேதுருவின் இருமொழிப் புலமை ஆகியவற்றால் மொழிநடையின் சிக்கல்கள் இருப்பதாக வாதிடுகிறார். Early 60s AD 1, 2 Peter, Jude (NAC, 2003) 
6. Karen H. Jobes  உள் மற்றும் வரலாற்று சான்றுகள் பேதுருவின் எழுத்தாக்கத்தை உறுதிபடுத்துகின்றன.; அதிநவீன கிரேக்கம் அதனை மறுக்க போதுமான வாதம் அல்ல.  அதிநவீன கிரேக்கத்திற்கு பேதுருவின் உதவியாளர் சில்வானுவே காரணம் Early 60s AD 1 Peter (Baker Exegetical Commentary, 2005)
7. Craig S. Keener சில்வானுவின் உதவியுடன் பேதுரு இதை எழுதியிருக்கலாம் என்பதை ஏற்றுக்கொள்கிறார்; சூழலுக்கு ஏற்ப கி.பி 60களின் ரோம் நகருக்குப் பொருந்துகிறது. Early 60s AD The IVP Bible Background Commentary: New Testament 
8.Ben Witherington III பேதுரு எழுத்தாக்க சார்புநிலையை நோக்கிய  மத்தியஸ்த நிலைப்பாட்டை முன்வைக்கிறார். பேதுருவின் செய்திகளை சில்வானு வடிவமைத்து வழங்கியவராக கருதுகிறார். Early 60s AD Letters and Homilies for Hellenized Christians, Vol. II 
9. D. A. Carson & Douglas J. Moo  அனைவராலும் ஏற்கப்படாத போதும், பேதுருவின் எழுத்தாக்கத்தை சரிகாண்கிறார்.  சில்வானுவை பலர் எழுத்தராக முன்வைப்பதை சரிகாண்கிறார்.  Early 60s AD An Introduction to the New Testament (2nd ed., 2005)
10. Leonhard Goppelt  பேதுருவின் மரணத்திற்கு முந்தைய ஆரம்பகால கிறிஸ்தவ சூழ்நிலையுடன் ஒத்திசைவைப் கருத்தில் கொண்டு பேதுருவின் எழுத்தாக்கத்தை சரிகாண்கிறார். எழுத்தர் சில்வானுவே பேதுருவின் எண்ணங்களுக்கு கிரேக்க வடிவம் தந்தவர் Early - Mid 60s ADA Commentary on 1 Peter (Eerdmans, 1993 [German orig.]) 
11. William Barclay  பேதுருவை ஆசிரியராகக் கருதுகிறார்; கிரேக்க பாணி பேதுருவின் உதவியாளரான சில்வானுவினால் ஏற்பட்டதாக கூறுகிறார். 63 or 64 AD The Letters of James and Peter 
12.J. N. D. Kelly  பேதுருவின் எழுத்துத்துவத்தை ஏற்கிறார். சில்வானு எழுத்தராக இருந்தமையே மெருகூட்டப்பட்ட கிரேக்கத்திற்கு காரண்மாக இருக்கலாம்  63 - 64 AD A Commentary on the Epistles of Peter and Jude (1969) 
13. A. T. Robertson  பேதுருவின் எழுத்துத்துவத்தை ஏற்கிறார். 63 or 64 AD Word Pictures in the New Testament (1933).
14. Myers, Elizabeth A. பேதுருவின் எழுத்துத்துவத்தை ஏற்கிறார். 1 பேதுருவில் இடம்பெறும் பேதுருவின் சுயசாட்சியே போதுமானது என்று கூறுகிறார். Early 60s AD Authorship of 1 Peter and Hebrews: New Evidence in Light of Probable Intertextual Borrowing. (2020)
15. Wayne Grudem பேதுருவின் எழுத்துத்துவத்தை ஏற்கிறார். பேதுரு மெருகூட்டப்பட்ட கிரேக்க அறிவு உடையவராக கருதுகிறார். 63 or 64 AD 1 Peter: An Introduction and Commentary (Volume 17) (TNTC) (2009)
16. Peter H. Davids சில்வானுவிற்கு 1 பேதுருவின் வடிவம் மற்றும் நடையில் பெரும்பங்குள்ளது என்று கருதுகிறார். Early 60s AD The First Epistle of Peter (NICNT, 1990)
17. C. E. B. Cranfield சில்வானுவின் எழுத்துருவாக்கத்தினால்தான் மொழியியல் மெருகு இருப்பதாக  கருதுகிறார் Early 60s AD The First Epistle of Peter (1960ன் கட்டுரைகள்)
18. E. Earle Ellis பவுலிய கடித நடைமுறைகளை போன்று, சில்வானு இந்த கடித்தத்தை வடிவமைத்தவர், மாற்கு தொகுத்தலுக்கும், திருத்தத்திற்கும் காரணமானவர் என்று கூறுகிறார். Early 60s AD The Making of the New Testament Documents (1999)
19. E. G. Selwyn கிரேக்க பாணி மற்றும் இறுதி அமைப்புக்கு மாற்கு காரணமாக இருக்கலாம் என்றும், அவர் ரோமில் பேதுருவின் மொழிபெயர்ப்பாளராகச் செயல்பட்டிருக்கலாம் என்றும் கூறுகிறார். 64 AD The First Epistle of St. Peter: The Greek Text with Introduction, Notes, and Essays (2nd ed., 1946)
20. William L. Lane 1 பேதுருவை இயற்ற பேதுருவிற்கு மாற்க் தனது இலக்கிய பங்களிப்பை செய்திருப்பதற்கு சாத்தியம் உள்ளது என்று கூறுகிறார் 63 or 64 AD The Gospel According to Mark (NICNT, 1974) 
21. C. F. D. Moule பேதுருவின் மரணத்திற்கு முன்பு / பிறகு 1 பேதுருவை இயற்ற மாற்க் விரிவுரையாளராகவோ, இலக்கிய துனைவராகவோ செயல்பட்டிருக்கலாம் Early 60s AD or

80s AD

The Birth of the New Testament (3rd ed., 1982)
22. Oscar Cullmann பேதுருவுடன் மாற்கிற்கு இருந்த தொடர்பு, பேதுருவின் மரணத்திற்கு பிறகு,  மெருகூட்டப்பட்ட கிரேக்கத்தில், இந்த நிருபம் இயற்றப்படுவதை சாத்தியமாக்கி இருக்கலாம் என்று வாதிக்கிறார். 63 - 64 AD Peter: Disciple, Apostle, Martyr (1952 [Eng. 1953])
23. Bo Reicke பேதுருவின் ரோம சமூகத்தில், 1 பேதுருவின் வடிவமைப்பு அல்லது திருத்தத்தில் மாற்க் உதவியிருக்கலாம் என்று அவர் கருதுகிறார். just prior to 64 CE  The Epistles of James, Peter, and Jude (AB 37, 1964)
24. Martin Hengel 1 பேதுரு மற்றும் மாற்குவின் நற்செய்தி பேதுருவின் ஒரே ரோமானிய சூழலில் இருந்து தோன்றியிருக்கலாம். இது மாற்குவின் இலக்கியப் பங்களிப்பை காட்டுவதாக இருக்கலாம். 70 – 80 AD Studies in the Gospel of Mark (1985)
25. R. Alan Cole பேதுருவின் மகனான மாற்கு பேதுருவின் உதவியாளராகவும், இந்த நிருபத்தின் ஆசிரியராகவும் இருப்பதை ஏற்கிறார்.  63 - 64 AD The First Epistle of Peter (Tyndale NT Commentary, 1989)

அனுமானங்கள் அடிப்படை ஆதரமல்ல: 

    உதவியாளர்கள் பேதுரு உயிருடன் இருக்கும் போதே இந்த நிருபத்தை இயற்றினார்களா? பேதுரு உள்ளிட்ட அப்போஸ்தலர்களின் மரண குறிப்புக்கள் மறைந்த வருடத்தை கூட அனுமானிக்க முடியாத படிக்கு சிக்கலாக இருக்கிறது. 
        These sources suggest dates as late as 67/69 CE, and as early as 55 CE.This cluster of accounts resists efforts to place them in a logical progression showing development of different dating schemes over time. Instead, we see here again that even basic questions about the deaths of Peter and Paul, in this case the date(s), have never had a single, clear answer. The sources are characterized by their variety every bit as much as their continuity. (P.No.102, The Many Deaths of Peter and Paul By DAVID L. EASTMAN) 
    இந்த ஆதாரங்கள் கி.பி 67/69 ஆம் ஆண்டு போல் பிந்தைய தேதிகளையும், கி.பி 55 ஆம் ஆண்டு போல் முந்தைய தேதிகளையும் பரிந்துரைக்கின்றன. இந்தக் தகவல்களின் தொகுப்பு, அவற்றை தர்க்கரீதியான முன்னெற்ற இடத்தில் வைப்பதற்கான  முயற்சிகளை தடுக்கிறது, காலப்போக்கில் வெவ்வேறு கால வரைவுகளின் வளர்ச்சியைக் காட்டுகிறது. மாறாக, பேதுரு மற்றும் பவுலின் மரணம் பற்றிய அடிப்படை கேள்விகளுக்கு கூட, இந்த விஷயத்தில், தேதி(கள்) ஒருபோதும் ஒரு தெளிவான பதிலைக் கொண்டிருக்கவில்லை என்பதை இங்கே மீண்டும் காண்கிறோம். மூலங்கள் அவற்றின் தொடர்ச்சியைப் போலவே அவற்றின் பன்முகத்தன்மையாலும் வகைப்படுத்தப்படுகின்றன. (P.No.102, The Many Deaths of Peter and Paul By DAVID L. EASTMAN)
அதாவது ஆதாரங்கள், ஒருகிணைந்து ஒற்றை திசையை காட்ட இயலாமல் இருப்பதால் அப்போஸ்தலர்களின் மரண வருடம் இதுவேன கணிப்பதிலேயே பெரும் சிக்கல் இருக்கும் போது,  புதிய ஏற்பாட்டு அறிஞர்களான C. F. D. Moule, Martin Hengel போன்றவர்கள் இந்த நிருபம் பேதுருவின் மரணத்திற்கு பிறகும் இயற்றப்பட்டிருக்கலாம் என்று  கருதுகிறார்கள். C. F. D. Moule, Martin Hengel போன்றவர்கள் பகிரங்கமாகவே 1 பேதுரு, பேதுருவின் மரணத்திற்கு பிறகு இயற்றப்பட்டிருக்கலாம் என்று கூறுவது, 1 பேதுரு, எழுத்தாளரை கொண்டு  பேதுருவால் எழுதப்பட்டது என்ற கருத்திற்கு எந்த அடிப்படையும் இல்லை என்பதை காட்டுகிறது. "1 பேதுரு , பேதுருவின் பெயரில் இட்டுக்கட்டி புனையப்பட்டது" , என்று வாதிக்கும் அணியினரின் வாதத்தை எதிர் கொள்ள இயலாத நிலை இருப்பதையும், அதனை சரிகெட்ட “எழுத்தாளர் உதவி” என்ற கற்பனை மட்டுமே உள்ளது. 
அந்த கற்பனையும் யார் அந்த எழுத்தாளர்? அந்த எழுத்தாளர் பேதுரு உயிருடன் இருக்கும் போது பேதுரு சொல்ல சொல்ல இயற்றினாரா? அல்லது பேதுரு மரணித்த பிறகு அந்த எழுதரால் எழுதப்பட்டதா? என்பதில் குழப்பத்தை தோற்றுவித்து கிறித்தவ அறிஞர்களை அலறவிட்டுள்ளது என்பதை நமது கட்டுரை தெளிவாக காட்டுகிறது.  கற்பனைகள் என்றும் அடிப்படை ஆதாரமாகாது என்பதற்கும் அது எத்தகைய அவலத்தை தோற்றுவிக்கும் என்பதற்கும் சரியான உதாரணமாக இது இருக்கிறது….அல்லாஹு அஃலம். 
__________________________________________________________________________________

மேற்கோள்கள்:
  • Matthew, Paul, and Others: Asian Perspectives on New Testament Themes, by William Loader, Boris Repschinski, Eric Wong (Eds.), © innsbruck university press, 2019
  • The Many Deaths of Peter and Paul By DAVID L. EASTMAN

Friday, September 12, 2025

யாக்கோபின் நிருபமும் சிக்கலை உருவாக்கும் அதன் கிரேக்கமும்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم


    ஒரு ஆக்கத்தின் மொழியியல் இரண்டு விஷயங்களை நமக்கு வெளிப்படுத்தும் ஒன்று எழுதுபவரின் மொழியாற்றல். அடுத்ததாக அதை வாசிப்பவரின் மொழியாற்றல். குறிப்பாக கடிதங்களில், அது தொலைத்தொடர்பு சாதனமாக இருப்பதால் இது மிகவும் அவசியமான ஒன்று. யாக்கோபு நிருபத்தின் கிரேக்க மொழியை புதிய ஏற்பாட்டு அறிஞர்கள் மிகவும் மெருகூட்டப்பட்டதாய் இருப்பதாக கூறுகின்றனர். "கலியேயாவில் இருந்த, அரமேயத்தை தாய்மொழியாக கொண்ட ஒரு மீனவரான யாக்கோபிற்கு இது எப்படி சாத்தியப்பட்டது ?" என்பதுதான் புதிய ஏற்பாட்டு அறிஞர்களை சந்தேகிக்க வைத்த கேள்வி. இப்படி சிக்கலை தோற்றுவித்த இந்த நிருபத்தின் கிரேக்க மொழியியல் குறித்து இந்த கட்டுரையில் காண்போம் இன் ஷா அல்லாஹ். 


    கி.பி. 1ம் நூற்றாண்டில் ரோமானியர்களின் ஆட்சியின் கீழ் இருந்த பாலஸ்தீனிய யூதர்கள் குறித்தும் குறிப்பாக சமூகத்தின் கடைநிலை மக்களின் கல்வித்தரம் குறித்து யூத கலிவியாளரும், லண்டன் பல்கலைகழக பேராசிரியரான Catherine Hezser  பின்வருமாறு கூறுகிறார்.
        The lack of evidence of private letters authored by members of the lower strata of society may be due to the phenomenon, already suggested above, that elementary education and the knowledge of writing were not widespread amongst ancient Jews, at least until the third century C.E., and that, in contrast to the rabbinic letter writers, ordinary people would not have scribes and letter carriers readily available. The relatively high fees charged by professional scribes and letter bearers, in addition to the cost of papyrus, and the general distrust of and suspicion against the correctness of the written message will have contributed to people's reliance on oral means of communication. (P.No.290, Part II: The Occurrence of Writing, Jewish Literacy in Roman Palestine by Catherine Hezser)

சமூகத்தின் கீழ்மட்ட உறுப்பினர்களால் எழுதப்பட்ட தனிப்பட்ட கடிதங்களுக்கான சான்றுகள் இல்லாததற்கு, ஏற்கனவே மேலே கூறப்பட்ட நிகழ்வு காரணமாக இருக்கலாம், தொடக்கக் கல்வியும் எழுத்து அறிவும் பண்டைய யூதர்களிடையே, குறைந்தபட்சம் கி.பி மூன்றாம் நூற்றாண்டு வரை பரவலாக இல்லை. மேலும், யூத மதபோதகர்களில் கடிதம் எழுதுபவர்களைப் போலன்றி, சாதாரண மக்களுக்கு எழுத்தாளர்கள் மற்றும் கடிதங்களை எடுத்துச் செல்பவர்கள் உடனடியாகக் கிடைப்பதில்லை. பாப்பிரஸின் விலைக்கு கூடுதலாக, தொழில்முறை எழுத்தாளர்கள் மற்றும் கடிதம் எழுதுபவர்களால் வசூலிக்கப்படும் ஒப்பீட்டளவில் அதிக கட்டணம், எழுதப்பட்ட செய்தியின் சரியான தன்மை குறித்த பொதுவான அவநம்பிக்கை மற்றும் சந்தேகம் ஆகியவை மக்கள் வாய்மொழி தொடர்பு வழிமுறைகளை நம்பியிருப்பதற்கு பங்களித்திருக்கும். (P.No.290, Part II: The Occurrence of Writing, Jewish Literacy in Roman Palestine by Catherine Hezser) 

மேலும் ஜோசபஸ் கிரேக்கத்தை கற்றுக்கொள்வதில் இருந்த சிரமத்தை அவர் பின்வருமாறு விவரிக்கிறார்.

I have also taken a great deal of pains to obtain the learning of the Greeks, and understand the elements of the Greek language, although I have so long accustomed myself to speak our own tongue, that I cannot pronounce Greek with sufficient exactness; for our nation does not encourage those that learn the languages of many nations, and so adorn their discourses with the smoothness of their periods;

கிரேக்கர்களின் கல்விகளைப் பெறுவதற்கும், கிரேக்க மொழியின் கூறுகளைப் புரிந்துகொள்வதற்கும் நான் மிகுந்த சிரத்தை எடுத்துக்கொண்டேன், ஆனால் நான் நீண்ட காலமாக எனது சொந்த மொழியைப் பேசப் பழகியிருந்தாலும், போதுமான துல்லியத்துடன் என்னால் கிரேக்கத்தை உச்சரிக்க முடியவில்லை;ஏனென்றால், பல தேசங்களின் மொழிகளைக் கற்று, அவர்களின் ஆக்கங்களை அவர்களின் காலகட்டங்களின் சமூகம் அலங்கரிக்கிறவர்களை நம் தேசம் ஊக்குவிப்பதில்லை;  ( Antiquities of Jews XX, chapter XI) 

     இப்படி யூதர்கள் கி.பி.3ம் நூற்றாண்டுவரை ஆரம்பகல்வியை கற்பதே கடினமான காரியமாக இருந்துள்ளது. மேலும் மத ரீதியிலான காரணங்களினாலும் கிரேக்கம் கற்பது ஜோசபஸ் போன்றவர்களுக்கே சவலான ஒன்றாக அமைந்துள்ளது. எனவே மீனவரான யாக்கோபு எப்படி ஏனைய புதிய ஏற்பாட்டில் இல்லாத சொல்லாடலையும், மொழியியல் நயத்தையும் கையாண்டிருக்க முடியும் என்பது மொழியியலை அடிப்படையாக கொண்டு சந்தேகிக்கும் புதிய ஏற்பாட்டு அறிஞர்களின் வாதம். இப்படி யாக்கோபின் நிருபத்திற்கே உரிய தனித்த சொல்லாடல்களை இங்கு பட்டியலாக தருகிறோம்.

அதிகாரம் 1:

வ.
எண்
Strong's Greek Number தனித்த வார்த்தைகள் பொருள்* வசன எண்
01. 182 ἀκατάστατος inconstant 1:8
02. 416 ἀνεμιζομένῳ driven with the wind 1:6
03. 551 ἀπείραστός not to be tempted 1:13
04. 574 ἁπλῶς liberally, sincerely 1:5
05. 616 ἀποκυεῖ beget, produce 1:15, 1:18
06. 644 ἀποσκίασμα shadow 1:17
07. 1374 δίψυχοι  double minded 1:8
08. 1503 ἔοικεν be like 1:6,1:23
09. 1721 ἔμφυτον engrafted, implanted 1:21
10. 1828 ἐξελκόμενος  draw away. 1:14
11. 1953 ἐπιλησμονῆς  forgetful 1:25
12. 2143 εὐπρέπεια grace, beauty 1:11
13. 2357 θρῆσκος religious 1:26
14. 3133 μαρανθήσεται fade away 1:11
15. 3883 παραλλαγὴ fickleness, variableness 1:17
16. 4162 ποιήσει deed 1:25
17. 4494 ῥιπιζομένῳ toss 1:6
18. 4507 ῥυπαρίαν dirtiness, turpitude 1:21
19. 5036 ταχὺς swift 1:19
20. 5157 τροπῆς turning 1:17
21. 5468 χαλιναγωγέω bridle 1:26

அதிகாரம் 2:

வ.
எண்
Strong's Greek Number தனித்த வார்த்தைகள் பொருள் வசன எண்
22. 448 ἀνέλεος without mercy 2:13
23. 2006 ἐπιτήδεια things which are needful 2:16
24. 2184 ἐφημέρου daily 2:15
25. 4380 προσωπολημπτεῖτε to show partiality 2:9
26. 5425 φρίσσουσιν  tremble 2:19
27. 5554 χρυσοδακτύλιος with a gold ring 2:2
28. 4382 προσωπολημψίαις respect of persons 2:1

அதிகாரம் 3

வ.
எண்
Strong's Greek Number தனித்த வார்த்தைகள் பொருள் வசன எண்
29. 87 ἀδιάκριτος  impartial 3:17
30. 182 ἀκατάστατος inconstant 3:8
31. 252 ἁλυκὸν salt  3:12
32. 3166 αὐχεῖ  boast  3:5
33. 1032 βρύει send forth 3:11
34. 1141 δαιμονιώδης devilish 3:15
35. 1724 ἐναλίων thing in the sea 3:7
36. 1990 ἐπιστήμων endued with knowledge 3:13
37. 2138 εὐπειθής compliant, obedient 3:17
38. 2287 θανατηφόρος deadly 3:8
39. 3329 μετάγεται  to guide, direct 3:3, 3:4
40. 4089 πικρόν bitter 3:11, 3:14
41. 5164 τροχός course 3:6
42. 5208 ὕλην a forest, wood, timber 3:5
43. 5394 φλογίζουσα set on fire 3:6
44. 5468 χαλιναγωγέω bridle 3:2
45. 5534 χρή ought 3:10
46. 3699 ὁμοίωσιν the similitude 3:9

அதிகாரம் 4

வ.
எண்
Strong's Greek Number தனித்த வார்த்தைகள் பொருள் வசன எண்
47. 1071 γέλως  laughter 4:9
48. 1374 δίψυχοι  double minded 4:8
49. 2726 κατήφειαν gloominess, dejection 4:9
50. 2761 κενός in vain 4:5
51. 3550 νομοθέτης lawgiver 4:12
52. 5003 ταλαιπωρήσατε endure 4:9
53. 5373 φιλία  friendship 4:4
54. 2730 κατῴκισεν dwelleth 4:5

அதிகாரம் 5

வ.
எண்
Strong's Greek Number தனித்த வார்த்தைகள் பொருள் வசன எண்
55. 270 ἀμησάντων reaped down 5:4
56. 650 ἀφυστερημένος kept back by fraud 5:4
57. 995 βοαὶ cry 5:4
58. 2252 κακοπάθεια suffering, affliction 5:10
59. 2728 κατιόω corrode, rust 5:3
60. 3649 ὀλολύζοντες  howl 5:1
61. 3797 ὄψιμον spring rain 5:7
62. 4184 πολύσπλαγχνός  compassionate, pitiful 5:11
63. 4406 πρόϊμον early rain, early crops 5:7
64. 4595 σέσηπεν be corrupted, perish 5:2
65. 4598 σητόβρωτα  moth-eaten 5:2
66. 5171 ἐτρυφήσατε revel, live in pleasure 5:5

    மேலே இருக்கும் பட்டியல் biblehub என்ற வலைதளத்தில் இடம்பெறும்  Concordance உதவியுடன் தயாரிக்கப்பட்டது. பட்டியலில் ἀκατάστατος, δίψυχοι மற்றும் χαλιναγωγέω  ஆகிய மூன்று வார்த்தைகள் தவிர்த்த 63 வார்த்தைகள் யாக்கோபு நிருபத்தின் ஒன்றுக்கு மேற்பட்ட அதிகாரங்களில் கூட இடம்பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது. 

It is clear that the writer of the epistle is an able master of literary Koine. This can be concluded from a host of observations: the use of subordination (with conjunctions) and participial constructions rather than coordination, the careful control of word order (e.g. the placing of the stressed object before the verb, the separation of correlated sentence elements for emphasis as in 1:2; 3:3, 8; 5:10), the relative lack of barbarisms and anacolutha, the use of the gnomic aorist (1:11, 24), and choice of vocabulary (e.g. ἔοικεν in 1:6, 23; χρή in 3:10; κάμνω in 5:15; the accusative with ὀμνύμαι in 5:12; the careful use of ὅστις in 2:10; 4:14; the use of τινα in ἀπαρχήν τινα in 1:18). All of these point to a developed literary ability.
Furthermore, a variety of elements belong to good rhetorical style and show that the author was a master not just of literary grammar, but of oral composition as well: paronomasia (χαίρειν-χαράν, 1:1–2), parechesis (ἀπελήλυθεν-ἐπελάθετο, 1:24), alliteration (πειρασμοῖς περιπέσητε ποικίλοις, 1:2), rhyme (ἀνεμιζομένῳ-ῥιπιζομένῳ, 1:6), and similarity in word sounds (note the grouping in 3:17). To this one can add rhythm; in many cases the shift of sentence elements (e.g. placing of the genitive in 1:13 and 4:4) and the choice of vocabulary appear to serve the flow and euphony of the sentence rather than its meaning.
In addition to the above there are a number of further indications of oral style: relatively short sentence structure, frequent use of the imperative (49 in 108 verses) and the forms of direct address (17 occurrences of the vocative, mostly ἀδελφοί), vivid examples, personification (1:15; 2:13), simile (1:6, 10–11; 5:7), rhetorical questions (2:6–7, 14, 17; 4:1, 5), and negative terms (2:20; 4:4, 8). All of these examples together show that despite its careful literary crafting, the letter partakes of the characteristics of oral rather than written discourse.
A further characteristic of James is his unusual vocabulary. Dibelius, 35, is certainly correct to say that much of this data is circumstantial—other NT writers simply do not pick the same figures of speech, but the words themselves must have been common in the language—yet the data are striking in both quantity and source. There are, according to Mayor, ccxlvi–ccxlviii, 63 NT hapax legomena in James. Of these 13 appear in James for the first time in Greek: ἀνέλεος (2:13), ἀνεμιζόμενος (1:6), ἀπείραστος (1:13), ἀποσκίασμα (1:17), δαιμονιώδης (3:15), δίψυχος (1:8; 4:8), θρησκός (1:26), πολύσπλαγχνος (5:11), προσωπολημπτέω (2:9), προσωπολημψία (2:1), ῥυπαρία (1:21), χαλιναγωγέω (1:26; 3:2), χρυσοδακτύλιος (2:2). Some of these may have been in the language previously, while one or two James may have coined himself (e.g. χρυσοδακτύλιος). Of the remaining terms 45 are found in the LXX; thus another characteristic of his language is the use of biblicisms and Semitisms. (P.No.109, The Epistle of James by Peter H.Davids, THE NEW INTERNATIONAL GREEK TESTAMENT COMMENTARY)

    இந்த நிருபத்தின் எழுத்தாளர் இலக்கிய கோயின் கிரக்கத்தில் திறமையான தேர்ச்சி பெற்றவர் என்பது தெளிவாகிறது. பல அவதானிப்புகளிலிருந்து இந்த முடிவுக்கு வரலாம்: இணைப்பு வாக்கியங்களுக்கு பதிலாக (இணைப்புச் சொற்கள் கொண்ட) கலவை வாக்கியங்கள் மற்றும் எச்ச வாக்கிய அமைப்புக்களை பயன்படுத்துதல், சொல் வரிசையை கவனமாக கையாளுதல்,  (எ.கா. வினைச்சொல்லுக்கு முன் முக்கியப்படுத்தப்படும் செயப்படுபொருளை வைப்பது, 1:2; 3:3, 8; 5:10 இல் உள்ளபடி, வலியுறுத்தலுக்காக தொடர்புடைய வாக்கிய கூறுகளைப் பிரித்தல்), முறையற்ற மற்றும் அறிமுகமற்ற வாக்கிய அமைப்புக்கள் இல்லாமல் இருப்பது, சுருக்கமான இறந்தகால வினைச்சொல்லை நிகழ்காலத்திற்கு பயன்படுத்துதல்(1:11,24) மற்றும் சொற்களஞ்சியத்தின் தேர்வு (எ.கா. 1:6, 23 இல் ἔοικεν; 3:10 இல் χρή; 5:15 இல் κάμνω; 5:12 இல் ὀμνύμαι இரண்டாம் வேற்றுமைச்சொல் பயன்பாடு; 2:10 இல் ὅστις கவனமாகப் பயன்படுத்துதல்; 4:14; 1:18 இல் ἀπαρχήν τινα இல் τινα இன் பயன்பாடு) இவை அனைத்தும் வளர்ந்த இலக்கியத் திறனைச் சுட்டிக்காட்டுகின்றன.

மேலும், பலவிதமான கூறுகள் நல்ல சொல்லாட்சி பாணியைச் சேர்ந்தவை என்பதையும் எழுத்தாளர் இலக்கிய இலக்கணத்தில் மட்டுமல்ல, வாய்மொழி அமைப்பிலும் தேர்ச்சி பெற்றவர் என்பதையும் காட்டுகின்றன:சிலேடை (χαίρειν-χαράν, 1:1–2), ஒத்த ஓசை சொற்களை நெருக்கமாக வரிசைப்படுத்துதல்(ἀπελήλυθεν-ἐπελάθετο, 1:24), மோனை (πειρασμοῖς περιπέσητε ποικίλοις, 1:2), எதுகை, இயைபு (ἀνεμιζομένῳ-ῥιπιζομένῳ, 1:6), ஒத்த ஓசையுடைய வார்த்தைகள் (3:17-ல் உள்ள சொல் குழுவாக்கத்தை கவனியுங்கள்) இதனுடன் ஒருவர் தாளத்தைச் சேர்க்கலாம்; பல சந்தர்ப்பங்களில் வாக்கிய கூறுகளின் மாற்றம் (எ.கா. 1:13 மற்றும் 4:4 இல் ஆறாம் வேற்றுமையை வைப்பது) மற்றும் சொற்களஞ்சியத்தின் தேர்வு ஆகியவை வாக்கியத்தின் அர்த்தத்தை விட அதன் ஓட்டம் மற்றும் சுவைக்கு துணை செய்வதாகத் தெரிகிறது.

மேற்கூறியவற்றுடன் கூடுதலாக, வாய்மொழி பாணியின் பல அறிகுறிகள் உள்ளன அவை: ஒப்பீட்டளவில் குறுகிய வாக்கிய அமைப்பு, கட்டளைகளின் அடிக்கடி பயன்பாடு (108 வசனங்களில் 49) மற்றும் நேரடி முகவரியின் வடிவங்கள். (பெரும்பாலும் ἀδελφοί என்ற அழைப்புச்(விளிப்புச்) சொல் 17 முறை இடம்பெறுகிறது), தெளிவான உதாரணங்கள், உருவகப்படுத்துதல் (1:15; 2:13), உவமை (1:6, 10–11; 5:7), சொல்லாட்சிக் கேள்விகள் (2:6–7, 14, 17; 4:1, 5), மற்றும் எதிர்மறை சொற்கள் (2:20; 4:4, 8). ஆகியவை. இந்த எடுத்துக்காட்டுகள் அனைத்தும், இந்த நிருபம் கவனமான இலக்கிய வடிவமைப்பை கொண்டிருந்தபோதிலும், , எழுதப்பட்ட சொற்பொழிவின் சிறப்பியல்புகளை  காட்டிலும் வாய்மொழியின் சிறப்பியல்புகளை எடுத்துக்கொண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது.

யாக்கோபின் மற்றொரு சிறப்பியல்பு அவரது அசாதாரண சொற்களஞ்சியம். 35 வயதான டிபெலியஸ், இந்தத் தரவுகளில் பெரும்பாலானவை சூழ்நிலை சார்ந்தவை என்று கூறுவது நிச்சயமாக சரியானது - மற்ற NT எழுத்தாளர்கள் ஒரே மாதிரியான பேச்சு வடிவங்களை வெறுமனே தேர்ந்தெடுப்பதில்லை, மாறாக அந்த சொற்கள் மொழியில் பொதுவானதாக இருந்திருக்க வேண்டும் - இருப்பினும் தரவுகள்,  அளவு மற்றும் மூலம் ஆகிய இரண்டிலும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. மேயரின் ccxlvi–ccxlviii கூற்றுப்படி, யாக்கோபில் 63 புதிய ஏற்பாட்டின் தனித்த வார்த்தைகள் உள்ளன. யாக்கோபில் இடம்பெறும் 13, முதன்முறையாக கிரேக்க மொழியில் தோன்றுகிறது. அவை: ἀνέλεος (2:13), ἀνεμιζόμενος (1:6), ἀπείραστος (1:13(σακαστος), (1:17), δαιμονιώδης (3:15), δίψυχος (1:8; 4:8), θρησκός (1:26), πογλύσ1σπλλλ6), προσωπολημπτέω (2:9), προσωπολημψία (2:1), ῥυπαρία (1:21), χααλιια (1:21), χαλγιια 3:2), χρυσοδακτύλιος (2:2). இவற்றில் சில முன்னர் அந்த மொழியில் இருந்திருக்கலாம், அதே நேரத்தில் ஒன்று அல்லது இரண்டு யாக்கோபு தானே உருவாக்கிக் கொண்டிருக்கலாம் (எ.கா. χρυσοδακτύλιος). மீதமுள்ள சொற்களில் 45 சொற்கள் LXX இல் காணப்படுகின்றன; எனவே அவரது மொழியின் மற்றொரு சிறப்பியல்பு விவிலியம் மற்றும் செமிட்டிஸங்களைப் பயன்படுத்துவதாகும். (P.No.109, The Epistle of James by Peter H.Davids, THE NEW INTERNATIONAL GREEK TESTAMENT COMMENTARY) 

    நாம் மேலே சுட்டிகாட்டிய Peter H.Davids அவர்களது விளக்கம் நாம் சுட்டி காட்டிய சொற்களஞ்சிய தனித்துவத்தை மட்டும் எடுத்துக்காட்டவில்லை, மாறாக அதில் இருக்கும் இலக்கிய நயம், அணி, ஓசைநயம் , இலக்கண செம்மை என்று பல கோணங்களை முன்னிறுத்துகிறது. அவரது இறுதி வார்த்தைகளான LXX உடனான ஒப்பீடு யாக்கோபை சாதரண மீனவனாக காட்டவில்லை, மாறாக யூத மத கல்வியை கற்றவராக காட்டுகிறது. எனவெ இந்த நிருபத்தை உருவாக்கியவர் ஒரு கிரேக்கத்தை தாய்மொழியாக கொண்ட  யூத கிறித்தவராக இருக்கவேண்டும். நிச்சயமாக பாலஸ்தீன யூதராக இருக்க மாட்டார். எனவே தான் Pierre-Antoine Bernheim என்ற புதிய ஏற்பாட்டு அறிஞர் பின்வருமாறு கூறுகிறார் 

    The Letter of James is indubitably a complex and ambiguous document. There is no feature in it which allows us to reject it as inauthentic. However, the language, style and structure of the letter make it more probable that it was composed by a Hellenized Jewish Christian in the 60s or 70s. (P.No.244, James, Brother of Jesus by Pierre-Antoine Bernheim)

யாக்கோபின் நிருபம் சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு சிக்கலான மற்றும் தெளிவற்ற ஆவணம். அதை நம்பகத்தன்மையற்றது என்று நிராகரிக்க அனுமதிக்கும் எந்த அம்சமும் அதில் இல்லை. இருப்பினும், கடிதத்தின் மொழி, பாணி மற்றும் அமைப்பு 60கள் அல்லது 70களில் ஒரு  ஹெலனிஸ்ட யூத கிறிஸ்தவரால் இது இயற்றப்பட்டிருக்கலாம் என்பதை அதிக சாத்தியமாக்குகிறது. (P.No.244, James, Brother of Jesus by Pierre-Antoine Bernheim) 

    ஒவ்வொரு நூற்றாண்டிலும் இந்த நிருபத்தின் மேலான சந்தேகம் புதிய ஏற்பாட்டு அறிஞர்கள் மத்தியில் அதிகரித்துவருவதையும், விடையில்லா கேள்விகள் இந்த நிருபத்தை சுற்றி அதிகரித்து வருவதையும், நாம் பதிவிட்ட தரவுகள் தெளிவாக காட்டுகிறது.  

கழுகுப்பார்வை:

சென்ற மூன்று கட்டுரைகளின் வழியாக பின்வரும் முடிவுகள் யாக்கோபின் நிருபம் குறித்து நம்மால் பெறமுடிகிறது:

1.நியதியாக அங்கிகரிக்கப்பட எடுத்துக்கொள்ளப்பட்ட காலம்:

இந்த நிருபத்தின் உண்மை எழுத்தராக கருதப்படும் யாக்கோபு கி.பி.62ல் மரணித்துவிடுகிறார். முதன் முதலில் யாக்கோபின் பெயரில் ஒரு நிருபம் இருக்கிறது என்ற தகவலே ஓரிகன்தான் பதிவிடுகிறார். அதாவது மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில். அதாவது யாக்கோபிற்கு கிட்டத்தட்ட 150 வருடங்களுக்கு பிறகு. அப்போது அது மிகப்பரவலாக ஆகவில்லை என்பதை ஓரிகன் வார்த்தை காட்டுகிறது. மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இன்னும் சர்ச்சைக்குரிய நூலாக கருதப்படுகிறது. கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு பிற்குதான் இந்த நிருபம் மக்கள் மத்தியில் பரவலாகிறது. அதாவது யாக்கோபின் தலைமுறையினர், யாக்கோபின் சீடர்கள் இவர்கள் எல்லாம் மறைந்த பிற்குதான் இந்த நிருபம் பரவலாகிறது. இந்த கால இடைவெளியும், எழுத்தர் குறித்த சர்ச்சையுமே இந்த நிருபத்தில் போதிய இடைச்செருகள்கள் நுழைவதற்கும், யாக்கோபின் பெயரில் இட்டுக்கட்டப்படுவதற்கும் போதிய காலாமாக இருக்கிறது. எனவே இந்த நிருபத்தை யாக்கோபு என்ற சீடனுடையது என்று அருதியிட்டு கூற இயலாது.

2.கொள்கை மாறுபாடு:

இந்த நிருபத்தின் கொள்கை பவுலிய கொள்கைக்கு மாற்றமாய் அல்லது எதிராக அமைந்திருப்பது, கிறிஸ்துவை பற்றி பேசிய யாக்கோபு ஒரு இடத்திலும் சிலுவை பாடுகள், அதன் மீதான நம்பிக்கை பற்றி வாய்திறக்காதது, நியாயப்பிரமானத்தை பின்பற்றுவதை உயர்த்தி பிடிப்பது, உள்ளிட்டவை இந்த நிருபத்தை மார்டின் லூதர் போன்றவர்கள் சந்தேகிக்க போதுமானதாய் இருக்கிறது. பவுலிய கொள்கை பரவல் என்பது பவுலிய கடித பரவலுடன் தொடர்புடையது. பவுலிய கடிதங்களின் வெளிரங்க மேற்கோல்கள் கி.பி.150 க்கு பிறகுதான். அதற்கு மாற்று கருத்தினை கொண்ட நிருபமாக இது இருப்பதனால் இந்த நிருபம் இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதாக சில அறிஞர்கள் கருதுவது கவனிக்கத்தக்கது.

3.நிருபத்தின் மெருகூட்டப்பட்ட கிரேக்கமும், LXXன் நிபுனத்துவமும்:

இந்த நிருபத்தின் மெருகூட்டப்பட்ட கிரேக்கமும், LXXன் நிபுனத்துவமும்  பல அறிஞர்களை இது கலியேயே மீனவரான யாக்கோபினால் எழுதப்பட்ட்து அல்ல. மாறாக இது யாரோ ஒரு ஹெல்லனிஸ்ட் யூத கிறித்தவரால் இயற்றப்பட்டது என்கிறார்கள். ஒருவேளை அவர் எழுத்தரை கொண்டு எழுதியிருப்பார் என்று அனுமானிக்கலாம். அந்த எழுத்தர் யார் என்ற கேள்வி அதை வால்பிடித்து வரும். இன்னும் ஒரு படி மேலே சென்ற F.Spitta, Massebieau  போன்ற புரோட்டஸ்டண்ட் அறிஞர்கள் இந்த நிருபம் அடிப்படையில் ஒரு யூத ஏடு. அதனை கிறித்தவர்கள் யாக்கோபின் பெயரில் இட்டுக்கட்டி இடைச்செருகல் செய்திருக்கிறார்கள் என்கிறார்கள். 

இப்படி புதிய ஏற்பாட்டின் ஒவ்வொரு நூலும் அதன் நம்பகத்தன்மையில் புதிய ஏற்பாட்டு அறிஞர்கள் மத்தியில் பெரும் குளறுபடிகளை  கொண்டிருப்பதை நம்மால் கண்கூடாக காண முடிகிறது. அதற்கு யாக்கோபின் நிருபமும் விதிவிலக்கல்ல. அல்லாஹு அஃலம்.

__________________________________________________________________________________

மேற்கோள்கள்:

  • The Occurrence of Writing, Jewish Literacy in Roman Palestine by Catherine Hezser
  • Antiquities of Jews by Josephus
  • The Epistle of James by Peter H.Davids, THE NEW INTERNATIONAL GREEK TESTAMENT COMMENTARY
  • James, Brother of Jesus by Pierre-Antoine Bernheim